• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 13

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
85
சப்பென்ற சத்தத்துடன்.. உருட்டு கட்டை போல் ஏதோ ஒன்று அவள் சேலை விலகிய வயிற்றின் மீது விழுந்தது.. திடுக்கிட்டு கண் விழித்தாள் பத்மினி.. அவள் அன்பு கணவன்.. ஆசைகளைத் துறந்த புத்தனின் சீடன் உதய் கிருஷ்ணாவின் கரம்தான் அது..

ஆறடி உடல்வாகும் நீளமான கை, கால்களையும் கொண்டவன் உடலைக் குறுக்கி உறங்குவதெல்லாம் நடக்காத காரியம்.. விசாலமான படுக்கை என்ற பழக்க தோஷத்தில் எப்போதும் போல் அவன் கரத்தை நீட்டியிருக்க அது விழுந்ததென்னவோ மெத்தையை விட மென்மையான அவன் மனையாள் வயிற்றில்.. சம்பந்தப்பட்டவன் எந்த உணர்வுகளும் இல்லாது அயர்ந்து உறங்கிக் கொண்டுதான் இருந்தான்.. இவளுக்குள்தான் பாவம் இல்லாத மாற்றங்கள்.. தன் வயிற்றின் மேல் விரிந்திருந்த அவன் கரத்தோடு தன் இடக்கரம் கோர்த்துக் கொண்டாள்.. ஏதோ அதற்காகவே காத்திருந்தது போல் உறக்கத்திலும் இறுக பிடித்துக் கொண்டான் அவன்.. தேகம் சிலிர்த்துப் போனாள்.. மெல்ல அவன் கரத்தை முகத்திற்கு நேரே கொண்டு வந்து இதழோடு அழுத்தி மென்மையாக முத்தமிட்டபடி அவன் முகத்தை பார்த்தாள்..

லேசாக திறந்த வாயுடன் சீரான மூச்சுக்களுடன் ஆழ்ந்த உறக்கம்..

"தூங்கும் போது ரசிக்க வச்சுடியேடா பாவி..!!" அவள் இதழ்கள் மட்டும் முணுமுணுத்து கொண்டன..

அவனிடம் லேசாக அசைவு தெரிய சட்டென அவன் கரத்தை விடுவித்தாள்.. அவள் பக்கம் புரண்டு ஒருக்களித்து படுத்தான் உதய்..
மிக நெருக்கத்தில் அவன் முகம்.. மூச்சுக்காற்று அவள் கழுத்து வளைவில் பட்டு எச்சில் விழுங்க செய்தது..

மலரத் துடிக்கும் மொட்டுகளை பூவிதழ்களோடு சேர்த்து பூட்டியதை போல் உணர்ச்சிகள் முட்டி மோதின..

"ப்ச்.. இங்க வராமலே இருந்திருக்கலாம்.. இது எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு.." பாவம் பத்மினி நொந்து போனாள்.. இப்படியே அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட சுகமாக இருந்தது.. மென்மையான புன்னகையுடன் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்..

மறுநாள் காலையில் வித்தியாசமான சோப்பு வாசனையிலும் மென்தாலின்(menthol) குளுமையிலும் மெல்ல கண் விழித்தான் உதய்..

விரிந்த கூந்தலுடன் கண்ணுக்கு நேரே புத்தம்புதிதாய் மலர்ந்து நிற்கும் பூவாக.. கட்டிலுக்கு நேரே முழங்காலிட்டு எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருந்தாள் பத்மினி..

தனியாக வசிக்கும் தன் அறையில் புதிதாக பெண்ணொருத்தி கண்ணெதிரே அமர்ந்திருப்பதில்.. நித்திரையின் மயக்கத்தில் யோசனையுடன் தலையை தூக்கிப் பார்த்தான் உதய் கிருஷ்ணா.. நேற்றைய இரவு நடந்த விஷயங்களை மீண்டும் நினைவூட்டி கொள்ள சில கணங்கள் பிடித்தன..

"குட் மார்னிங்.." புன்னகையோடு இதழ் விரித்தாள்..

ப்ச்.. முகச் சுழிப்புடன் திரும்பிப் படுத்துக் கொண்டான் அவன்.. பத்மினிக்கு முகம் கன்றி போனது..

அது சரி.. சிரித்தால்தானே அதிசயம்.. தன்னை சமன்படுத்திக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்..

"பத்மினி.. கொஞ்சம் காபி போட்டு கொடேன்.." கூடத்தில் அமர்ந்திருந்த ரமணியம்மாவின் குரல்..

"என்னம்மா.. என் தொந்தரவு இல்லாம சௌகரியமா தூங்குனீங்களா..?" பத்மினியின் குத்தலான பேச்சு அவருக்கு புரியாமல் இல்லை..

"கோவமா இருக்கே ன்னு தெரியுது.. பெரியவங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. நிதானமா யோசிச்சு பாத்தா நான் எதுக்காக அப்படி சொன்னேன்னு புரியும்.." மூக்கு கண்ணாடியோடு தலையணை உறையின் தையல் விட்ட பகுதியை தைத்துக்கொண்டே இப்படிச் சொல்ல..

நீண்ட பெரு மூச்சோடு.. "என்னவோ.. அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்னை நல்லா பந்தாடறீங்க.." என்று வாய்க்குள் முனகி கொண்டே அங்கிருந்து சென்றாள்..

"ஏம்மா பத்மினி.. நான் சொன்ன மாதிரி உன் ஆசைகளை நோட்புக்ல எழுதி வச்சியா..?"
அவர் கேள்விக்கு பத்மினியிடமிருந்து பதில் இல்லை..

"காதுல விழல போலிருக்கு.." தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார் ரமணி..

"காதில் விழாமல் இல்லை.. பதில் சொல்ல இஷ்டமில்லை.." ஆசையோடுதான் எழுதி வைத்தாள்.. ஆனால் எழுதியதை படித்து பார்த்த பிறகுதான் அது எத்தனை அபத்தம் என்று தோன்றியது.. இயந்திரம் காதலிக்கும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.. அதிலும் காலையில் அவன் வெறுப்பான பார்வையை பார்த்த பிறகு நம்பிக்கை சுத்தமாக அறுந்து போய்விட்டது..

"எழுதி வைக்கணுமாம்.. அது நடக்குமாம்.."

"எழுதி வச்சு காரியத்தை நிறைவேத்திக்கறதா இருந்தா யாரும் பள்ளிக்கூடம் போய் படிக்க வேண்டாம்.. வேலைக்கு போக வேண்டாம்.. சும்மா பேப்பர்ல எனக்கு ஒரு கோடி ரூபாய் வேணும்னு எழுதி வச்சா போதாதா..!! சொன்னதை நம்பி நான் வேற முட்டாள்தனமா..!!" கண்களை உருட்டி இதழ் குவித்து ஊதியவள் தனது ஒட்டுமொத்த கோபத்தையும் புடலங்காயை பொடி பொடியாய் நறுக்குவதில் காட்டினாள்..

"இடியாப்பமும் வடகறியும்.. என்ன கேவலமான காம்பினேஷன் இது..!!" பதார்த்தங்களை பார்த்தவன் எனக்கு வேண்டாம்.. காலித்தட்டை தள்ளிவிட்டு எழப்போனான் உதய்..

"சாப்பிட்டு பாக்காமலே சொன்னா எப்படி..? ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க.. பிடிச்சா சாப்பிடுங்க இல்லன்னா வச்சிடுங்க.." என்றவள் தட்டை அவனுக்கு நேரே வைத்து உணவை பரிமாறினாள்..

உணவை வீணாக்கும் பழக்கம் அவனுக்கு இல்லை என்பதால் அவளை முறைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்..

"பையன் வழிக்கு வந்துட்டான் போலிருக்கே..!!" ரமணி அம்மாவின் உதட்டுக்குள் சிரிப்பு..

"வயசு பொண்ணு வீட்ல இருந்தாலே வீட்டுக்கு ஒரு பொலிவு வந்துடுது..!!" ரமணி இப்படி சொல்லவும் வீட்டை சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் உதய்..

"எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே.. ஒட்டடை அதிகமாகி இருக்கு.. வேற என்ன புதுசா?" என்றவன் அவளை வேறு நிமிர்ந்து பார்த்தான்.. பத்மினி ஏதாவது சொல்லுவாள் என்று நினைத்தானோ என்னவோ..!!

பத்மினி எதுவும் பேசவில்லை.. வம்பிழுக்கிறான் என்று தெரிகிறது.. பேசிப் பேசி பிபிதான் ஏறுகிறது.. செல்ல சீண்டலாக இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம்.. இது எரிச்சல் மூட்டும் பேச்சு..

"பிடிக்காதுன்னு சொல்லிட்டு முழுசா காலி பண்ணிட்டியே.. வெரி குட்.." இது ரமணியம்மா..

"நான் எப்போதும் சாப்பாட்டை வீணாக்கறது இல்ல..!! உங்களுக்கு தெரியாதா..? நீங்க சொல்லிக்கொடுத்த பழக்கம்தானே.." என்று தனது பக்கத்திலிருந்த டம்ளரில் தண்ணீரை ஊற்றிக் கொண்டான்..

"தினமும் சாப்பிடுறியே நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னால் குறைஞ்சா போயிடுவே..!!"

"ஏன் நான் கூடதான் உங்களுக்கு தினமும் சமைச்சு போட்டேன்.. என்னைக்காவது நல்லா இருக்கு.. அருமையான சமையல்னு பாராட்டி இருக்கீங்களா..!!"

"நல்லா இருந்தா பாராட்டி இருக்க மாட்டேனா.. இந்த பையனுக்கு எத்தனை பொறாமை..?" வெளிப்படையாக சொல்ல முடியவில்லை ரமணியால்..

"கடமையா நெனச்சு நான் சமைச்சு போடலயா..? இவளை மட்டும் எதுக்காக பாராட்டணும்.. கடமையா நினைச்சா சமைச்சு போடட்டும்.. இல்லைனா பணம் வாங்கிகிட்டாலும் ஒகே.. முடியலைன்னா விலகிக்க சொல்லுங்க.. மறுபடி நானே சமைக்கறேன்.." என்றவன் அம்மா சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான்..

ரமணிக்கே அவன் வார்த்தைகளின் வீரியம் காயப்படுத்தியது..

"எதுக்காக வெயிட் பண்ற..?" என்றார் ரமணி எரிச்சலாக..

"நீங்க சாப்பிட்டு முடிக்க..!!"

"ஒன்னும் வேண்டாம் என் தட்டை நானே கழுவிக்கிறேன்.. இல்லைனா என் மருமக கழுவி வைப்பா.. உனக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆகுது.. நீ கிளம்பலாம்.." என்றார் சிடுசிடுப்பாக.. உதய் எதுவும் பேசாமல் எழுந்து சென்றிருந்தான்..

அவன் பேசறதையெல்லாம் மனசுல "வச்சுகாதேம்மா..‌ நல்லா இல்லாமலா தட்டை வழிச்சு தின்னுட்டு போறான்.."

"விடுங்கம்மா.. நான் எதையும் எதிர்பார்க்கல..!! என் குடும்பத்துக்காக நான் செய்யறேன்.. யாரும் பாராட்டணும்னு அவசியமில்லை.."

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பத்மினி.. நான்தான் தினம் உன்னை பாராட்டறேனே..!!"

"இதே மாதிரி அவரையும் சின்ன வயசுல இருந்து பாராட்டி இருந்தீங்கன்னா.. அந்த சந்தோஷம் அவருக்கு தெரிஞ்சிருக்கும்.. மத்தவங்களையும் பாராட்டணும்னு தோணியிருக்கும்.." பத்மினி இப்படிச் சொல்ல ரமணியின் முகம் வாடியது..

"நீயும் என்னை குத்தி காட்டற பாத்தியா..?" என்றார் பரிதாபமாக..

"குத்தி காட்டறதுக்காக சொல்லல.. ஏதோ ஆதங்கத்தில் வந்துடுச்சு.. மன்னிச்சிடுங்கம்மா.."

"மன்னிப்பு கேட்க என்ன இருக்கு.. உண்மையத்தானே சொன்னே..!!" என்று பெருமூச்சு விட்டார் ரமணி.. அதற்குள் ரமணி அம்மாவின் ஃபோன் குறுஞ்செய்தி வந்த ஒலியுடன் திரையில் ஒளிர..

"இதோ உங்க பார்ட்னர்ஸ் அரட்டைக் கச்சேரிக்கு வாட்சாப்ல அழைச்சாச்சு.." என்று பேச்சை மாற்றி அலைபேசியை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் பத்மினி..

உதய் கிருஷ்ணா வெளியே வரும் வேளையில்.. ரமணி மும்முரமாக அலைபேசியில் குறுஞ்செய்திகளை தட்டி விட்டுக் கொண்டிருந்தார்.. சத்தமாக சிரிப்பு.. அதைத்தொடர்ந்து ஏதோ டைப் செய்தார்..

"அம்மாவும் நேரத்தை வீணாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. புதுசா வந்த ஆளை சொல்லணும்.. கண்டதையும் சொல்லிக் கொடுத்து.." அவன் முடிப்பதற்குள்..

"அவங்க சந்தோஷமா இருக்காங்க.. மனுஷங்களோட பழகறது கெட்ட விஷயம் இல்லை.. உண்மையிலேயே அவங்க மேல அக்கறை இருந்திருந்தா அவங்களோட உற்சாகம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கணும்.. ஆனா நீங்க.. உங்க அம்மா சிரிக்கிறதை பார்த்து கவலைப்படுறீங்க.. ஹவ் சிக்.." அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..‌ மீண்டும் ஒருமுறை இதழில் உறைந்த புன்னகையோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ரமணி அம்மாவை கண்கள் சுருக்கி ஆராய்ச்சியாக பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்..

அன்று மாலை மூன்று மணி போல் அலுவலகத்தில்.. ஒரு பஞ்சாயத்தோடு அவன் முன்பு வந்து நின்றாள் பத்மினி.. அவளோடு இன்னொரு ஆடவனும் அவளோடு வந்து நின்றிருந்தான்.. இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்..

"சார் நீங்களே பாருங்க..!! மோசமான கமெண்ட் பாஸ் பண்றார்..‌ கண்டிப்பா நீங்க இவரை பனிஷ் பண்ணியே ஆகணும்.."

"சார் அப்படி ஒன்னும் நான் வல்கரா சொல்லல.. ஜாலியா பேசினேன்.. இவங்களுக்கு உறுத்தது.. நான் என்ன செய்யட்டும்..‌"

"பாத்தீங்களா சார்.. உங்க முன்னாடியே எவ்வளவு தைரியமா தப்பை ஒத்துக்கறார்ன்னு.." பத்மினி கண்களில் அத்தனை கோபம்..

"மேடம் நான் தப்பே செய்யலைன்னு சொல்றேன் நீங்க என்ன ஓவரா பேசறீங்க..!!"

"கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா.. இது என்ன மீன் மார்க்கெட் நினைச்சுட்டீங்களா..!! என்ன விஷயம்..? யாராவது ஒருத்தர் தெளிவா சொல்லுங்க.." உதய் கிருஷ்ணாவின் குரலுயர்த்திய கர்ஜனை இருவரையும் அமைதியாகியது..

"இவன்.." என்றவள் மறுபடி "இவர்.. என் மேல தேவையில்லாத கமெண்ட் பாஸ் பண்றாரு.."

"என்ன கமெண்ட்டுன்னு கேளுங்கள் சார்..?" கேலிக்குரலோடு அவன் நக்கலாக பத்மினியை பார்க்க அவளோ பல்லைக் கடித்து அமைதியாக நின்றிருந்தாள்.. அவள் அமைதியை சலுகையாக எடுத்துக்கொண்டு..

"இடுப்பு வழுவழுன்னு சறுக்கு மரம் மாதிரி இருக்கு.. எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோன்னு சொன்னேன்..‌!! நான் என்னோட ஃபோன்ல ஒரு மாடல் பிக்சரை பார்த்துட்டு அப்படி சொன்னேன்.. இவங்களுக்கு ஏன் உறுத்துது.." என்றவனை நிதானமாக பார்த்தான் உதய்..

"நீங்க கொஞ்சம் வெளியே இருங்க ஆனந்த்.."

"இடுப்பு தெரியற மாதிரி லோ ஹிப்ல புடவை கட்டினா எல்லோரும் பார்த்து கமெண்ட் அடிக்கத்தான் செய்வாங்க.." ஆனந்த் வாய்க்குள் முனங்கிக் கொண்டே சென்றான்.. அவன் கிசுகிசுப்பாக சொன்னது இருவரின் காதுகளிலும் அரைகுறையாக விழுந்தது..

"அவன் சொல்றதும் சரிதானே..!! இப்படி இடுப்பு தெரியற மாதிரி புடவை கட்டினா பார்க்கிறவன் கமெண்ட் பண்ணத்தான் செய்வான்.. ஒண்ணு அவன் சொல்றதை என்ஜாய் பண்ணுங்க.. இல்லை இடுப்பு தெரியாம புடவை கட்டுங்க..!!" உலக வரலாற்றிலேயே எந்த கணவனும் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருக்க மாட்டான்.. உரிமையான மனைவியாக நினைத்திருந்தால் இப்படி ஒரு வார்த்தை வந்திருக்காது.. கல்லுக்கு உணர்வுகள் ஏது?

பொசசிவ்னஸ்.. என்று அவள் எழுதி வைத்த வார்த்தை தனித்தனி எழுத்துக்களாக பிரிந்து கேலி செய்து சிரிப்பதை போல் தோன்றியது.. நெஞ்சம் கொதித்துப் போனாள்..

"ஏன்..? நீங்க அப்படி பாக்கலையே.. எங்கே விலகும்.. எதை பார்க்கலாம்ன்னு அலையற ஆம்பளைங்களுக்கு பெண்களோட உடல் எப்போதும் காமப் பொருள்தான்.."

"சேலை கட்டினா இடுப்பு தெரியத்தான் செய்யும்.. ஜாக்கெட் போட்டா முதுகு தெரியத்தான் செய்யும்.. முழுக்க இழுத்து போர்த்திகிட்டு வந்தாலும் இவனுங்க என்னை கிண்டல் பண்றதை நிறுத்த போறதே இல்ல.."

"கேவலமா விமர்சித்தவனை கண்டிக்காம.. எப்படி டிரஸ் பண்ணனும்னு எனக்கே பாடம் எடுக்கிற உங்க குறுகிய மனப்பான்மையை என்ன சொல்றதுன்னே தெரியல..‌ மத்தவங்க மேல புகார் சொல்லி ராஜினாமா கடிதம் கொடுக்க வந்தப்பவே என்னை குற்றம் சொன்ன ஆளாச்சே நீங்க.. மறுபடி அதே புகாரை தூக்கிக்கிட்டு உங்ககிட்ட வந்தது என்னோட மிகப்பெரிய தப்பு.." கோபத்தோடு கொந்தளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பத்மினி.. அமைதியாக எந்த உணர்ச்சிகளும் இல்லாதவனாய் சுழல் நாற்காலியில் அசைந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்.. பத்மினி வெளியேறிய பிறகு மீண்டும் ஆனந்தை அழைத்தான்..

"சார்..‌" என்றபடி வந்து நின்ற அவனிடம்.. "யூ ஆர் டிஸ்மிஸ்ட்.." என்றான் அமைதியான குரலில்..

"சார்.. சார்.." ஆனந்த் அலறினான்..

இங்க இருக்கிற அத்தனை பெண்களோட பாதுகாப்புக்கும் இந்த கம்பெனி நிர்வாகம்தான் பொறுப்பு.. எந்த பொண்ணையும் யாரும் தரக்குறைவா பேசறதை என்னால அனுமதிக்கவே முடியாது.. அலுவலக நேரத்துல ஒரு பெண்ணோட உடையை பத்தி தேவையில்லாம விமர்சித்த காரணத்துக்காக.. உங்களை வேலையிலிருந்து நீக்கறேன்.. இனி ஒரு நிமிஷம் இங்கே நின்னாலும் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ள வேண்டி வரும்.. செக்யூரிட்டியை கூப்பிடட்டுமா..!!" உதய கிருஷ்ணா தாடையை தேய்த்துக்கொண்டே கேட்க.. அமைதியாக அங்கிருந்து வெளியேறினான்‌ ஆனந்த்..

அவன் ஆனந்தை தண்டித்ததில் எந்தவிதமான உரிமை கோபமும் இல்லை.. இருந்திருந்தால் இத்தனை நாசுக்காக இந்த விஷயத்தை கையாண்டிருக்க மாட்டான்.. ஒரு முதலாளியாக அவன் கடமையை செய்தான் அவ்வளவே..

ஆனால் வெளியே வந்தவன்.. அங்கிருந்த விவகார குழுவிடம்.. "பத்மினி நம்ம முதலாளியை கெட்டியா புடிச்சுக்கிட்டா.. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளையறாரு..!!" என்று போகிற போக்கில் கொளுத்தி போட்டுவிட்டு போக.. ஹாட் நியூஸ் அலுவலகம் எங்கும் தீயாக பரவியது..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Dec 23, 2023
Messages
73
💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Oct 13, 2023
Messages
46
💝💝💝💝💝💝✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝✍️✍️✍️✍️✍️💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝✍️💝💝💝💝💝😍🙂🙂🙂🙂🙂🙂
 
Aug 8, 2024
Messages
26
Idiyappam-vadacurry is a good combination only.. But vadacurryla andha krambu vaasanai dhan kadupethum..

Nallaa samachaa kandipa paaratidhan aaganum.. Sapadu dhane life ku first priority.. Padmini soldra madhiri chinna vayasula irundhe idhellam solli kodukanum..

Thavaru seivadhai kaatilum thavaru adhai nyaayapaduthuvadhu.. It is a correct decision to dismiss him as it may be a warning for others.. Irundhalum Udhay's response and advice to Padmini is unexpected.. Anyways, quite interesting..

Nice episode, sister.. You have a magical pen which transcribes your brilliant thoughts into beautiful stories.. Thank you.. Happy weekend...
 
Last edited:
New member
Joined
May 11, 2023
Messages
2
Haha machine love ❤️ varuma? Ada Varum ga Namba Sankar g robot citi ku love vantha Mari UK ku varum Namba sana g parthu Kongom Seingo ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍
 
New member
Joined
Jun 2, 2024
Messages
13
அடப்பாவிகளா! நீங்கள் எல்லாம் மனித ஜென்மங்கள் தானா?
 
Member
Joined
Sep 14, 2023
Messages
153
Padmini possessive ness எதிர்பார்த்து மொக்கை வாங்கிட்டால்....... ஆனால் உதய் க்கு possessiveness irukumoo....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஆனந்த் கிளப்பிவிட்டு போன அந்த புரளி என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ தெரியலையே......
எல்லாம் நல்ல படியா முடிந்தால் 👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Member
Joined
Jan 29, 2023
Messages
58
💖💖💖💖💖💝💖💖💝💝💝💝💝
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
140
சப்பென்ற சத்தத்துடன்.. உருட்டு கட்டை போல் ஏதோ ஒன்று அவள் சேலை விலகிய வயிற்றின் மீது விழுந்தது.. திடுக்கிட்டு கண் விழித்தாள் பத்மினி.. அவள் அன்பு கணவன்.. ஆசைகளைத் துறந்த புத்தனின் சீடன் உதய் கிருஷ்ணாவின் கரம்தான் அது..

ஆறடி உடல்வாகும் நீளமான கை, கால்களையும் கொண்டவன் உடலைக் குறுக்கி உறங்குவதெல்லாம் நடக்காத காரியம்.. விசாலமான படுக்கை என்ற பழக்க தோஷத்தில் எப்போதும் போல் அவன் கரத்தை நீட்டியிருக்க அது விழுந்ததென்னவோ மெத்தையை விட மென்மையான அவன் மனையாள் வயிற்றில்.. சம்பந்தப்பட்டவன் எந்த உணர்வுகளும் இல்லாது அயர்ந்து உறங்கிக் கொண்டுதான் இருந்தான்.. இவளுக்குள்தான் பாவம் இல்லாத மாற்றங்கள்.. தன் வயிற்றின் மேல் விரிந்திருந்த அவன் கரத்தோடு தன் இடக்கரம் கோர்த்துக் கொண்டாள்.. ஏதோ அதற்காகவே காத்திருந்தது போல் உறக்கத்திலும் இறுக பிடித்துக் கொண்டான் அவன்.. தேகம் சிலிர்த்துப் போனாள்.. மெல்ல அவன் கரத்தை முகத்திற்கு நேரே கொண்டு வந்து இதழோடு அழுத்தி மென்மையாக முத்தமிட்டபடி அவன் முகத்தை பார்த்தாள்..

லேசாக திறந்த வாயுடன் சீரான மூச்சுக்களுடன் ஆழ்ந்த உறக்கம்..

"தூங்கும் போது ரசிக்க வச்சுடியேடா பாவி..!!" அவள் இதழ்கள் மட்டும் முணுமுணுத்து கொண்டன..

அவனிடம் லேசாக அசைவு தெரிய சட்டென அவன் கரத்தை விடுவித்தாள்.. அவள் பக்கம் புரண்டு ஒருக்களித்து படுத்தான் உதய்..
மிக நெருக்கத்தில் அவன் முகம்.. மூச்சுக்காற்று அவள் கழுத்து வளைவில் பட்டு எச்சில் விழுங்க செய்தது..

மலரத் துடிக்கும் மொட்டுகளை பூவிதழ்களோடு சேர்த்து பூட்டியதை போல் உணர்ச்சிகள் முட்டி மோதின..

"ப்ச்.. இங்க வராமலே இருந்திருக்கலாம்.. இது எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு.." பாவம் பத்மினி நொந்து போனாள்.. இப்படியே அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட சுகமாக இருந்தது.. மென்மையான புன்னகையுடன் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்..

மறுநாள் காலையில் வித்தியாசமான சோப்பு வாசனையிலும் மென்தாலின்(menthol) குளுமையிலும் மெல்ல கண் விழித்தான் உதய்..

விரிந்த கூந்தலுடன் கண்ணுக்கு நேரே புத்தம்புதிதாய் மலர்ந்து நிற்கும் பூவாக.. கட்டிலுக்கு நேரே முழங்காலிட்டு எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருந்தாள் பத்மினி..

தனியாக வசிக்கும் தன் அறையில் புதிதாக பெண்ணொருத்தி கண்ணெதிரே அமர்ந்திருப்பதில்.. நித்திரையின் மயக்கத்தில் யோசனையுடன் தலையை தூக்கிப் பார்த்தான் உதய் கிருஷ்ணா.. நேற்றைய இரவு நடந்த விஷயங்களை மீண்டும் நினைவூட்டி கொள்ள சில கணங்கள் பிடித்தன..

"குட் மார்னிங்.." புன்னகையோடு இதழ் விரித்தாள்..

ப்ச்.. முகச் சுழிப்புடன் திரும்பிப் படுத்துக் கொண்டான் அவன்.. பத்மினிக்கு முகம் கன்றி போனது..

அது சரி.. சிரித்தால்தானே அதிசயம்.. தன்னை சமன்படுத்திக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்..

"பத்மினி.. கொஞ்சம் காபி போட்டு கொடேன்.." கூடத்தில் அமர்ந்திருந்த ரமணியம்மாவின் குரல்..

"என்னம்மா.. என் தொந்தரவு இல்லாம சௌகரியமா தூங்குனீங்களா..?" பத்மினியின் குத்தலான பேச்சு அவருக்கு புரியாமல் இல்லை..

"கோவமா இருக்கே ன்னு தெரியுது.. பெரியவங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. நிதானமா யோசிச்சு பாத்தா நான் எதுக்காக அப்படி சொன்னேன்னு புரியும்.." மூக்கு கண்ணாடியோடு தலையணை உறையின் தையல் விட்ட பகுதியை தைத்துக்கொண்டே இப்படிச் சொல்ல..

நீண்ட பெரு மூச்சோடு.. "என்னவோ.. அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்னை நல்லா பந்தாடறீங்க.." என்று வாய்க்குள் முனகி கொண்டே அங்கிருந்து சென்றாள்..

"ஏம்மா பத்மினி.. நான் சொன்ன மாதிரி உன் ஆசைகளை நோட்புக்ல எழுதி வச்சியா..?"
அவர் கேள்விக்கு பத்மினியிடமிருந்து பதில் இல்லை..

"காதுல விழல போலிருக்கு.." தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார் ரமணி..

"காதில் விழாமல் இல்லை.. பதில் சொல்ல இஷ்டமில்லை.." ஆசையோடுதான் எழுதி வைத்தாள்.. ஆனால் எழுதியதை படித்து பார்த்த பிறகுதான் அது எத்தனை அபத்தம் என்று தோன்றியது.. இயந்திரம் காதலிக்கும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.. அதிலும் காலையில் அவன் வெறுப்பான பார்வையை பார்த்த பிறகு நம்பிக்கை சுத்தமாக அறுந்து போய்விட்டது..

"எழுதி வைக்கணுமாம்.. அது நடக்குமாம்.."

"எழுதி வச்சு காரியத்தை நிறைவேத்திக்கறதா இருந்தா யாரும் பள்ளிக்கூடம் போய் படிக்க வேண்டாம்.. வேலைக்கு போக வேண்டாம்.. சும்மா பேப்பர்ல எனக்கு ஒரு கோடி ரூபாய் வேணும்னு எழுதி வச்சா போதாதா..!! சொன்னதை நம்பி நான் வேற முட்டாள்தனமா..!!" கண்களை உருட்டி இதழ் குவித்து ஊதியவள் தனது ஒட்டுமொத்த கோபத்தையும் புடலங்காயை பொடி பொடியாய் நறுக்குவதில் காட்டினாள்..

"இடியாப்பமும் வடகறியும்.. என்ன கேவலமான காம்பினேஷன் இது..!!" பதார்த்தங்களை பார்த்தவன் எனக்கு வேண்டாம்.. காலித்தட்டை தள்ளிவிட்டு எழப்போனான் உதய்..

"சாப்பிட்டு பாக்காமலே சொன்னா எப்படி..? ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க.. பிடிச்சா சாப்பிடுங்க இல்லன்னா வச்சிடுங்க.." என்றவள் தட்டை அவனுக்கு நேரே வைத்து உணவை பரிமாறினாள்..

உணவை வீணாக்கும் பழக்கம் அவனுக்கு இல்லை என்பதால் அவளை முறைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்..

"பையன் வழிக்கு வந்துட்டான் போலிருக்கே..!!" ரமணி அம்மாவின் உதட்டுக்குள் சிரிப்பு..

"வயசு பொண்ணு வீட்ல இருந்தாலே வீட்டுக்கு ஒரு பொலிவு வந்துடுது..!!" ரமணி இப்படி சொல்லவும் வீட்டை சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் உதய்..

"எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே.. ஒட்டடை அதிகமாகி இருக்கு.. வேற என்ன புதுசா?" என்றவன் அவளை வேறு நிமிர்ந்து பார்த்தான்.. பத்மினி ஏதாவது சொல்லுவாள் என்று நினைத்தானோ என்னவோ..!!

பத்மினி எதுவும் பேசவில்லை.. வம்பிழுக்கிறான் என்று தெரிகிறது.. பேசிப் பேசி பிபிதான் ஏறுகிறது.. செல்ல சீண்டலாக இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம்.. இது எரிச்சல் மூட்டும் பேச்சு..

"பிடிக்காதுன்னு சொல்லிட்டு முழுசா காலி பண்ணிட்டியே.. வெரி குட்.." இது ரமணியம்மா..

"நான் எப்போதும் சாப்பாட்டை வீணாக்கறது இல்ல..!! உங்களுக்கு தெரியாதா..? நீங்க சொல்லிக்கொடுத்த பழக்கம்தானே.." என்று தனது பக்கத்திலிருந்த டம்ளரில் தண்ணீரை ஊற்றிக் கொண்டான்..

"தினமும் சாப்பிடுறியே நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னால் குறைஞ்சா போயிடுவே..!!"

"ஏன் நான் கூடதான் உங்களுக்கு தினமும் சமைச்சு போட்டேன்.. என்னைக்காவது நல்லா இருக்கு.. அருமையான சமையல்னு பாராட்டி இருக்கீங்களா..!!"

"நல்லா இருந்தா பாராட்டி இருக்க மாட்டேனா.. இந்த பையனுக்கு எத்தனை பொறாமை..?" வெளிப்படையாக சொல்ல முடியவில்லை ரமணியால்..

"கடமையா நெனச்சு நான் சமைச்சு போடலயா..? இவளை மட்டும் எதுக்காக பாராட்டணும்.. கடமையா நினைச்சா சமைச்சு போடட்டும்.. இல்லைனா பணம் வாங்கிகிட்டாலும் ஒகே.. முடியலைன்னா விலகிக்க சொல்லுங்க.. மறுபடி நானே சமைக்கறேன்.." என்றவன் அம்மா சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான்..

ரமணிக்கே அவன் வார்த்தைகளின் வீரியம் காயப்படுத்தியது..

"எதுக்காக வெயிட் பண்ற..?" என்றார் ரமணி எரிச்சலாக..

"நீங்க சாப்பிட்டு முடிக்க..!!"

"ஒன்னும் வேண்டாம் என் தட்டை நானே கழுவிக்கிறேன்.. இல்லைனா என் மருமக கழுவி வைப்பா.. உனக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆகுது.. நீ கிளம்பலாம்.." என்றார் சிடுசிடுப்பாக.. உதய் எதுவும் பேசாமல் எழுந்து சென்றிருந்தான்..

அவன் பேசறதையெல்லாம் மனசுல "வச்சுகாதேம்மா..‌ நல்லா இல்லாமலா தட்டை வழிச்சு தின்னுட்டு போறான்.."

"விடுங்கம்மா.. நான் எதையும் எதிர்பார்க்கல..!! என் குடும்பத்துக்காக நான் செய்யறேன்.. யாரும் பாராட்டணும்னு அவசியமில்லை.."

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பத்மினி.. நான்தான் தினம் உன்னை பாராட்டறேனே..!!"

"இதே மாதிரி அவரையும் சின்ன வயசுல இருந்து பாராட்டி இருந்தீங்கன்னா.. அந்த சந்தோஷம் அவருக்கு தெரிஞ்சிருக்கும்.. மத்தவங்களையும் பாராட்டணும்னு தோணியிருக்கும்.." பத்மினி இப்படிச் சொல்ல ரமணியின் முகம் வாடியது..

"நீயும் என்னை குத்தி காட்டற பாத்தியா..?" என்றார் பரிதாபமாக..

"குத்தி காட்டறதுக்காக சொல்லல.. ஏதோ ஆதங்கத்தில் வந்துடுச்சு.. மன்னிச்சிடுங்கம்மா.."

"மன்னிப்பு கேட்க என்ன இருக்கு.. உண்மையத்தானே சொன்னே..!!" என்று பெருமூச்சு விட்டார் ரமணி.. அதற்குள் ரமணி அம்மாவின் ஃபோன் குறுஞ்செய்தி வந்த ஒலியுடன் திரையில் ஒளிர..

"இதோ உங்க பார்ட்னர்ஸ் அரட்டைக் கச்சேரிக்கு வாட்சாப்ல அழைச்சாச்சு.." என்று பேச்சை மாற்றி அலைபேசியை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் பத்மினி..

உதய் கிருஷ்ணா வெளியே வரும் வேளையில்.. ரமணி மும்முரமாக அலைபேசியில் குறுஞ்செய்திகளை தட்டி விட்டுக் கொண்டிருந்தார்.. சத்தமாக சிரிப்பு.. அதைத்தொடர்ந்து ஏதோ டைப் செய்தார்..

"அம்மாவும் நேரத்தை வீணாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. புதுசா வந்த ஆளை சொல்லணும்.. கண்டதையும் சொல்லிக் கொடுத்து.." அவன் முடிப்பதற்குள்..

"அவங்க சந்தோஷமா இருக்காங்க.. மனுஷங்களோட பழகறது கெட்ட விஷயம் இல்லை.. உண்மையிலேயே அவங்க மேல அக்கறை இருந்திருந்தா அவங்களோட உற்சாகம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கணும்.. ஆனா நீங்க.. உங்க அம்மா சிரிக்கிறதை பார்த்து கவலைப்படுறீங்க.. ஹவ் சிக்.." அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..‌ மீண்டும் ஒருமுறை இதழில் உறைந்த புன்னகையோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ரமணி அம்மாவை கண்கள் சுருக்கி ஆராய்ச்சியாக பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்..

அன்று மாலை மூன்று மணி போல் அலுவலகத்தில்.. ஒரு பஞ்சாயத்தோடு அவன் முன்பு வந்து நின்றாள் பத்மினி.. அவளோடு இன்னொரு ஆடவனும் அவளோடு வந்து நின்றிருந்தான்.. இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்..

"சார் நீங்களே பாருங்க..!! மோசமான கமெண்ட் பாஸ் பண்றார்..‌ கண்டிப்பா நீங்க இவரை பனிஷ் பண்ணியே ஆகணும்.."

"சார் அப்படி ஒன்னும் நான் வல்கரா சொல்லல.. ஜாலியா பேசினேன்.. இவங்களுக்கு உறுத்தது.. நான் என்ன செய்யட்டும்..‌"

"பாத்தீங்களா சார்.. உங்க முன்னாடியே எவ்வளவு தைரியமா தப்பை ஒத்துக்கறார்ன்னு.." பத்மினி கண்களில் அத்தனை கோபம்..

"மேடம் நான் தப்பே செய்யலைன்னு சொல்றேன் நீங்க என்ன ஓவரா பேசறீங்க..!!"

"கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா.. இது என்ன மீன் மார்க்கெட் நினைச்சுட்டீங்களா..!! என்ன விஷயம்..? யாராவது ஒருத்தர் தெளிவா சொல்லுங்க.." உதய் கிருஷ்ணாவின் குரலுயர்த்திய கர்ஜனை இருவரையும் அமைதியாகியது..

"இவன்.." என்றவள் மறுபடி "இவர்.. என் மேல தேவையில்லாத கமெண்ட் பாஸ் பண்றாரு.."

"என்ன கமெண்ட்டுன்னு கேளுங்கள் சார்..?" கேலிக்குரலோடு அவன் நக்கலாக பத்மினியை பார்க்க அவளோ பல்லைக் கடித்து அமைதியாக நின்றிருந்தாள்.. அவள் அமைதியை சலுகையாக எடுத்துக்கொண்டு..

"இடுப்பு வழுவழுன்னு சறுக்கு மரம் மாதிரி இருக்கு.. எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோன்னு சொன்னேன்..‌!! நான் என்னோட ஃபோன்ல ஒரு மாடல் பிக்சரை பார்த்துட்டு அப்படி சொன்னேன்.. இவங்களுக்கு ஏன் உறுத்துது.." என்றவனை நிதானமாக பார்த்தான் உதய்..

"நீங்க கொஞ்சம் வெளியே இருங்க ஆனந்த்.."

"இடுப்பு தெரியற மாதிரி லோ ஹிப்ல புடவை கட்டினா எல்லோரும் பார்த்து கமெண்ட் அடிக்கத்தான் செய்வாங்க.." ஆனந்த் வாய்க்குள் முனங்கிக் கொண்டே சென்றான்.. அவன் கிசுகிசுப்பாக சொன்னது இருவரின் காதுகளிலும் அரைகுறையாக விழுந்தது..

"அவன் சொல்றதும் சரிதானே..!! இப்படி இடுப்பு தெரியற மாதிரி புடவை கட்டினா பார்க்கிறவன் கமெண்ட் பண்ணத்தான் செய்வான்.. ஒண்ணு அவன் சொல்றதை என்ஜாய் பண்ணுங்க.. இல்லை இடுப்பு தெரியாம புடவை கட்டுங்க..!!" உலக வரலாற்றிலேயே எந்த கணவனும் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருக்க மாட்டான்.. உரிமையான மனைவியாக நினைத்திருந்தால் இப்படி ஒரு வார்த்தை வந்திருக்காது.. கல்லுக்கு உணர்வுகள் ஏது?

பொசசிவ்னஸ்.. என்று அவள் எழுதி வைத்த வார்த்தை தனித்தனி எழுத்துக்களாக பிரிந்து கேலி செய்து சிரிப்பதை போல் தோன்றியது.. நெஞ்சம் கொதித்துப் போனாள்..

"ஏன்..? நீங்க அப்படி பாக்கலையே.. எங்கே விலகும்.. எதை பார்க்கலாம்ன்னு அலையற ஆம்பளைங்களுக்கு பெண்களோட உடல் எப்போதும் காமப் பொருள்தான்.."

"சேலை கட்டினா இடுப்பு தெரியத்தான் செய்யும்.. ஜாக்கெட் போட்டா முதுகு தெரியத்தான் செய்யும்.. முழுக்க இழுத்து போர்த்திகிட்டு வந்தாலும் இவனுங்க என்னை கிண்டல் பண்றதை நிறுத்த போறதே இல்ல.."

"கேவலமா விமர்சித்தவனை கண்டிக்காம.. எப்படி டிரஸ் பண்ணனும்னு எனக்கே பாடம் எடுக்கிற உங்க குறுகிய மனப்பான்மையை என்ன சொல்றதுன்னே தெரியல..‌ மத்தவங்க மேல புகார் சொல்லி ராஜினாமா கடிதம் கொடுக்க வந்தப்பவே என்னை குற்றம் சொன்ன ஆளாச்சே நீங்க.. மறுபடி அதே புகாரை தூக்கிக்கிட்டு உங்ககிட்ட வந்தது என்னோட மிகப்பெரிய தப்பு.." கோபத்தோடு கொந்தளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பத்மினி.. அமைதியாக எந்த உணர்ச்சிகளும் இல்லாதவனாய் சுழல் நாற்காலியில் அசைந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்.. பத்மினி வெளியேறிய பிறகு மீண்டும் ஆனந்தை அழைத்தான்..

"சார்..‌" என்றபடி வந்து நின்ற அவனிடம்.. "யூ ஆர் டிஸ்மிஸ்ட்.." என்றான் அமைதியான குரலில்..

"சார்.. சார்.." ஆனந்த் அலறினான்..

இங்க இருக்கிற அத்தனை பெண்களோட பாதுகாப்புக்கும் இந்த கம்பெனி நிர்வாகம்தான் பொறுப்பு.. எந்த பொண்ணையும் யாரும் தரக்குறைவா பேசறதை என்னால அனுமதிக்கவே முடியாது.. அலுவலக நேரத்துல ஒரு பெண்ணோட உடையை பத்தி தேவையில்லாம விமர்சித்த காரணத்துக்காக.. உங்களை வேலையிலிருந்து நீக்கறேன்.. இனி ஒரு நிமிஷம் இங்கே நின்னாலும் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ள வேண்டி வரும்.. செக்யூரிட்டியை கூப்பிடட்டுமா..!!" உதய கிருஷ்ணா தாடையை தேய்த்துக்கொண்டே கேட்க.. அமைதியாக அங்கிருந்து வெளியேறினான்‌ ஆனந்த்..

அவன் ஆனந்தை தண்டித்ததில் எந்தவிதமான உரிமை கோபமும் இல்லை.. இருந்திருந்தால் இத்தனை நாசுக்காக இந்த விஷயத்தை கையாண்டிருக்க மாட்டான்.. ஒரு முதலாளியாக அவன் கடமையை செய்தான் அவ்வளவே..

ஆனால் வெளியே வந்தவன்.. அங்கிருந்த விவகார குழுவிடம்.. "பத்மினி நம்ம முதலாளியை கெட்டியா புடிச்சுக்கிட்டா.. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளையறாரு..!!" என்று போகிற போக்கில் கொளுத்தி போட்டுவிட்டு போக.. ஹாட் நியூஸ் அலுவலகம் எங்கும் தீயாக பரவியது..

தொடரும்..
Thirunthamattinga da.. Neengalam..
 
Top