- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
ஆளில்லாத அந்த தேசிய நெடுஞ்சாலையில் முகத்தில் வந்து மோதிய காற்றை சுகந்தமாக அனுபவித்தபடி உற்சாகமாக பயணித்துக் கொண்டிருந்தான் ஹரி.. இதுவரை இப்படி ஒரு சுகத்தை அனுபவித்திராதவன் போல் அவன் முக பாவனை..
ஊஊஊஊ.. என்ற இன்பக் குரலோடு பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தி.. ஆனந்தமாக பயணித்துக் கொண்டிருந்த நேரம் அவன் அலைபேசி சத்தமாக குரல் எழுப்பி தன் அவசரத்தை தெரியப்படுத்தியது..
பாக்கெட்டில் கை வைத்து பார்த்துக் கொண்டவன் பைக்கின் வேகத்தை மிதப்படுத்தி பின்பு மொத்தமாக வேகத்தை குறைத்து வண்டியை ஓரமாக நிறுத்தினான்..
அவசரமாக அலைபேசியை எடுத்து திரையில் பார்க்க.. வைஃப்..(Wife) ஆங்கிலத்தின் நான்கு எழுத்துக்கள்.. அவன் இதழில் புன்னகையை உருவாக்கி சந்தோஷத்தை மிகுதி படுத்துவதாய்..!!
சட்டென்று அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் சொல்லு மாது என்றான் பரபரப்போடு.. அவளுக்கு மட்டுமே சொந்தமான தனித்துவமான குரலில்..
"எங்க இருக்கீங்க..?" அழைக்கலாமா வேண்டாமா என்று பலமுறை யோசித்திருப்பாள் போலும்.. அந்த தயக்கம் அவள் குரலில் தெரிந்தது..
"முக்கியமான வேலை.. அடையாறு வரைக்கும் வந்தேன்.. ஆன் தி வே.. வீட்டுக்குத்த்தான் வந்துட்டு இருக்கேன் ஏதாவது வாங்கிட்டு வரணுமா..!! என்ன விஷயம் டா.." அவசரமாக பதில்களை அடுக்கினான்..
"ஒன்னும் இல்ல கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.."
"என்ன விஷயம் மாதும்மா.. ஏதாவது பிரச்சனையா? வீட்ல இருக்கிறவங்க ஏதாவது சொன்னாங்களா..?" அவன் குரலில் தெரிந்த தீவிரம் பதட்டமாக இருக்கிறான் என்பதை தெரியப்படுத்தியது.. அந்த பதட்டம் அவளுள் மலரவா வேண்டாமா என்று சோர்ந்திருந்த காதல் பூக்களை கிளர்ச்சியடைய செய்திருந்தது..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. இங்க எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா ஒரு முக்கியமான விஷயம்.. நீங்க சீக்கிரம் வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்..!!"
"வந்துட்டேன் வந்துட்டேன்.. ஒரு பத்து நிமிஷம்.." அவசரமாக அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு.. வண்டியை உயிர்பித்து ராக்கெட் போல் சீறி செலுத்தினான்.. தன் மனதுக்கு நெருக்கமானவள் அரிதாக ஒரு விஷயம் கேட்டு.. அதன்படி செய்யாமல் போனால் பிறகு தன் காதலுக்கு என்ன மதிப்பு..? என்ற ரீதியில் ஜெட்டாக பறந்து கொண்டிருந்தான் அவன்..
வண்டியை ஒழுங்காக நிறுத்தினானா தெரியவில்லை.. செருப்பை எங்கே கழட்டி போட்டான் ஞாபகம் இல்லை.. ஓடி வந்ததில் கால் கட்டைவிரல் வாசலோரம் இடித்துக் கொள்ள.. ஆஆஆ.. என்று வலியின் முனகலோடு.. நொண்டி நொண்டி நடந்தவன்.. பிறகு காலை ஊன்றி ஒரு வழியாக தனது அறையின் உள்ளே நுழைந்திருந்தான்..
எழுந்து நின்றாள் மாதவி.. அவள் பார்வையில் ஏதோ கேட்க முன்வந்து.. முடியாமல் முட்டிக் கொள்ளும் தயக்கம்..
"என்ன வேணும் மாதவி?" அவனுக்கு மூச்சு வாங்கியது..
"நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்.."
"என்னடி உதவி.. பதவின்னுட்டு.. பைத்தியம்.. என்ன வேணும்.." அவன் குரலில் சிறு கோபம்..
"எனக்கு புடவை கட்டி விடறீங்களா..?"
"என்ன.. என்ன சொன்ன..?"
"இல்ல என் பெஸ்ட் பிரண்டுக்கு கல்யாண ரிசப்ஷன்.. சாரி கட்டலாமுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.. இந்த கைய வச்சுக்கிட்டு பிளவுஸ் போட முடியல.. சாரி கட்ட முடியல.. நீங்க கொஞ்சம் உதவி பண்றீங்களா..!!" அவள் கேட்டு முடிக்க.. அழுத்தமான அவன் இதழ்களில் மெலிதான புன்னகை..
"ஏன் அப்படி பாக்கறீங்க.." மாதவி தடுமாறினாள்..
"பின்ன என்னடி..? உன்னை முழுசா குளிக்கவே வச்சிருக்கேன்.. புடவை கட்டி விடமாட்டேனா..!!" ஆழ்ந்த பார்வையும் உருகும் குரலும் அவளுக்குள் என்னென்னவோ செய்தன..
கண்கள் மூடி உஷ்ண மூச்சை இழுத்து விட்டவள்.. "சாரி.. பிளவுஸ்.." என்று கட்டிலில் அவள் எடுத்து வைத்திருந்த உடைகளை காண்பிக்க.. மாதவியை அழுத்தமாக ஒருமுறை பார்த்தவன் கதவை சாத்திவிட்டு திரும்பி வந்து ஆடைகளை கையிலெடுத்து நிறத்தையும் தரத்தையும் ஆராய்வதாய் மெல்ல வருடி பார்த்தான்..
"நைஸ் சாரி.. நைஸ் கலர்.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.. ஆனா ரொம்ப கிராண்டா இருக்கு.. சிம்பிளா எலிகண்டா.. உடம்பை உருத்தாத மாதிரி கனமில்லாமல்.. கம்பர்ட்டபிலா ஏதாவது புடவை இருந்தா உடுத்தலாமே..!! இந்த புடவை அழகாக இருக்கும்.. ஆனால் வேறு புடவை உடுத்தலாம்" என்று மனதை காயப்படுத்தாமல் அவன் சொன்ன விதம் அவளுக்கு பிடித்திருந்தது..
"இந்த புடவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?" கேட்டுவிட்டு அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்..
கூரிய விழிகளோடு புடவையை பார்த்தவன் சில நொடிகளுக்கு பின் முகம் மலர்ந்து.. "வெட்டிங் சாரி" என்றான் புன்னகைத்து..
மாதவிக்கு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.. தெரியாமல் விழிப்பான் என்று நினைத்தாள்.. திருமணத்தன்று தன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.. பக்கத்தில் ஒரு மனித பிறவி நிற்பதே தெரியாமல்.. தன் கழுத்தில் தாலி கட்டியவன் தனது கல்யாண புடவையை சரியாக நினைவில் வைத்திருப்பதில் அவள் முகத்தில் வியப்பின் சுவடுகள்..
"உங்களுக்கு ஞாபகம் இருக்கு..!! ஆனா அன்னைக்கு நீங்க என் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்கலையே..!!"
"சில விஷயங்கள் ஒருமுறை பார்த்தாலும் மனசுக்குள்ளே ஆழமா பதிஞ்சு போயிடும்.. உன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் எனக்கு அப்படித்தான்.." அவன் சொன்னதில் சிலர் வார்த்தைகள் புரியாமல் கண்கள் சுருக்கி கேள்வியாக அவனைப் பார்த்தாள் மாதவி..
அவள் அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்னே.. "இந்த புடவையைத்தான் அண்ணியோட தங்கச்சி கல்யாணத்துக்கும் கட்டிட்டு வந்ததா ஞாபகம்..!! திரும்பத் திரும்ப எதுக்காக ஒரே புடவை உடுத்துற.. வேற கட்டிக்க மாதும்மா" என்றான் குழைந்த குரலில்..
"வேற இருந்தா கட்டிக்க மாட்டேனா..!! என்கிட்ட நிறைய சுடிதார் இருக்கு.. ஆனா புடவை ரொம்ப குறைச்சலாதான் இருக்கு.. நெருங்கின தோழியோட ரிசப்ஷனுக்கு சாதாரண ஒரு புடவையை கட்டிட்டு போக முடியாது.." தன் உண்மை நிலையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஹரியுடன் சகஜமாக பழகுகிறேனா? அவள் மனதில் ஆராய்ச்சிகள்..
நெற்றியை நீவியபடி யோசித்துக் கொண்டிருந்தான் ஹரி..
"சரி கொஞ்சம் வெயிட் பண்ணு பக்கத்துல ஒரு சின்ன கடை இருக்கு.. அங்க போய் கொஞ்சம் காஸ்ட்லியா ஏதாவது புடவை கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்.." அவனின் உடனடி எதிர்விளைவையும் அவள் எதிர்பார்க்கவில்லை..
"அய்யோ அதெல்லாம் வேண்டாம்.. இருக்கிறதுலேயே நல்ல புடவையா பார்த்து கட்டிக்கலாம்.. பக்கத்துக் கடையில எல்லா புடவைகளும் யானை விலை குதிரை விலை சொல்லுவாங்க.. நமக்கு கட்டுபடியாகாது.." அவசரமாக மறுத்தாள் மாதவி..
"எந்த வேலையா இருந்தா என்ன.. நமக்கு ஏத்த மாதிரி ஒரு புடவை கிடைச்சா போதாதா..!! நான் போய் வாங்கிட்டு வரேன்.."
"அடடா உங்களை கூப்பிட்டதே தப்பா போச்சு.. எதுக்காக இப்படி இம்சை பண்றீங்க..!! நான்தான் வேண்டாம்னு சொல்றேன்ல.. இந்த புடவையை கட்டிக்கிறேன்.. உங்களால உதவி செய்ய முடியலன்னா சொல்லுங்க நான் பக்கத்து வீட்டு ரங்கநாயகி அக்காவை.."
"நான் வர்ற வரைக்கும் அமைதியா இப்படியே உக்காந்து இருக்கணும் சரியா.." என்று அவளை கட்டிலில் அமர்த்தி நெத்தியில் முத்தமிட்டு.. அங்கிருந்து சென்றிருந்தான் ஹரி..
அவன் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.. செய்யத் தோன்றவில்லை..
சரிதான் போடா என்று ரங்கநாயகியை அழைத்து புடவை கட்டிக்கொண்டு திருமண வைபவத்திற்கு சென்றிருக்க முடியும்.. ஆனால் அவன் வார்த்தையை மீறி காரியங்களைச் செய்ய ஏதோ தடுக்கிறதே..!!
பதினைந்து நிமிடங்களில்.. கையில் கவரோடு திரும்பி வந்திருந்தான் ஹரி..
"அதுக்குள்ள வாங்கிட்டீங்களா..!! அந்த கடையில் அவ்வளவு டிசைன்ஸ் கூட கிடையாதே..!!" ஆர்வமின்றி கவரை வாங்கி புடவை பிரித்து பார்த்தாள்..
மிக ஆடம்பரமாக கண்ணை பறிக்கும் அடர்ந்த வண்ணமாக இல்லாமல்.. வெளிர் பச்சையில் சிகப்பு ஜரிகையோடு பட்டில் நெய்த தாமரை.. ஆங்காங்கே சிதறியது போல் புடவையின் டிசைன்.. பார்க்க மிக அழகாக இருந்தது..
"ரொம்ப நல்லா இருக்கு.. !!" சேலையை மென்மையாக வருடினாள்..
"எவ்வளவு.."
"ஒரு ரூபாய்.." இயல்பாக சொல்ல மாதவி அவனை முறைத்தாள்.
"ஆனா எனக்கு பச்சை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்.. என்கிட்ட நீங்க கேட்டது கூட இல்லையே அம்மா சொன்னாங்களா..?" சட்டென மூளையில் உதித்த கேள்வியை அவனிடம் கேட்டாள்..
இல்லை என்ற தலையசைத்தான் ஹரி.. "நிறைய விஷயங்கள்ல நீ பச்சை கலரை தேர்வு செய்யறதை நான் பார்த்திருக்கேன்.. அன்னைக்கு கூட வளையல் கடையில் ஆசைப்பட்டு பச்சை வளையல்களைதான் எடுத்த.. நிறைய பச்சை கலர் சுடிதார் வச்சிருக்க.."
"உன் போனோட ஸ்கிரீன் சேவர்.. கவர் கூட பச்ச கலர்ல தான் இருக்கு.. அதை வச்சுதான் உனக்கு பச்சை கலர் பிடிக்கும் நினைச்சு.. இந்த புடவை எடுத்துட்டு வந்தேன்.. ஆனா வெளிர் பச்சை உன்கிட்ட இல்ல.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த பச்சை எடுத்தேன்.." என்றவனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. தலை சாய்த்து அவளை பார்த்தபடி ஹரி மூச்சு வாங்கி கொண்டிருக்க சட்டென சுதாரித்தவளாய்..
"ஆனா மேட்சிங் பிளவுஸ்..?" என்றாள்.
"இதோ இந்த பழைய புடவையோட ரெட் பிளவுஸ்.. இது கச்சிதமா பொருந்தும்.. இந்த ஜாக்கெட்டுக்கு பொருந்துற மாதிரியான புடவையை தான் தேர்ந்தெடுத்தேன்.. சோ நோ ப்ராப்ளம்.. இப்ப புடவை கட்ட ஆரம்பிக்கலாமா..!!" ஆழ்ந்த குரலோடு அவன் புருவங்களை உயர்த்த.. தன்னையும் அறியாமல் தலையசைத்தாள் மாதவி..
உள்ளாடையும் பாவாடையும் அணிவிக்கையில் கைகளை உதறி இயலாமையோடு எங்கோ பார்த்து விழிகள் மூடி திறந்தான்..
கருநிற கச்சைக்குள் திமிறிக் கொண்டிருந்த முயல்குட்டிகளை விடுவித்து விட மூளையும் கைகளும் பரபரத்தன..
என்னாச்சு ஹரி..? புரியாமல் உயிரை வைரம் போல் அறுக்கிறாள்.. உணர்ச்சிகளை விழுங்கிய மரக்கட்டை என்று முடிவே செய்துவிட்டாள் போலும்..
ரவிக்கை அணிந்து கொள்ள உதவி செய்து கொக்கிகளை மாட்டி விட்டான்.. இரண்டாம் கொக்கியை மூன்றாம் இணைப்பில் சேர்த்து.. எல்லாம் ஒரே சொதப்பல்.. தலையை கோதியபடி இதழ் குவித்து ஊதி அவளை பார்த்தான்..
"தப்பா கொக்கி மாட்டி இருக்கீங்க ஹரி.."
"ம்ம்.. தெரியுது.." மீண்டும் அவிழ்த்து சரியாக இணைத்தான்..
"ஜாக்கெட் ரொம்ப இறுக்கமா இருக்குடி.." சொல்லி முடிப்பதற்குள் அவன் மூச்சுக்காற்றில் அனல் அடிப்பதாய் உணர்ந்தாள் மாதவி..
எடுப்பாக நிமிர்ந்து நின்ற அழகில் அவன் விரல்கள் ஏறி இறங்கி வளைந்தன.. கொடியை தூக்கி நிறுத்தும் கொழுக் கொம்பாக அணிந்திருந்த கருநிற உள்ளாடை அவள் முன்னழகை கர்வமாக நிமிர வைத்திருந்ததோ என்னவோ.. அந்த உள்கவசம் இல்லை என்றாலும் அவள் செழுமைகளில் எந்தவித தோற்ற குறையவும் ஏற்பட போவதில்லை..
மனைவியை தண்ணீரில் நீராட்டும் போது கவனித்திருக்கிறானே..!! பெண் மீது பட்டு தெறித்து தன்மீது விழுந்த நீர்துளிகளால் உள்ளுக்குள் துகள்களாக உடைந்த தருணங்களை மறக்க இயலுமா.. பன்னீர் பட்டு மொட்டுகள் மலர்வதை போல் தண்ணீர் பட்டு.. அரும்புகள் கூர்மையாகும் அழகிய காட்சி.. எப்போதும் அவன் நெஞ்சினில் ஆழ பதிந்து போயிருக்கிறது..
"மாதவி.. மாது.." சீற்றமான பெருமூச்சுகளோடு அவன் விரல்கள் இன்னும் அங்கேயே நிலைக்கொண்டிருந்தன.. சின்ன குழந்தையிடம் கொடுத்த ரப்பர் பந்து போல் வெகு நேர விளையாட்டுகளில் தன்னையே மறைந்திருந்தான்..
மாதவி தடுக்கவில்லை.. மிக நெருங்கி நின்றிருந்தாள்.. கரங்கள் அந்த ரவிக்கையின் தையல்களைப் போல்.. எங்கெங்கோ ஊர்ந்து.. அவள் இடையில் வளைவுகளில் வந்து நின்றன.. மாதவி உணர்ச்சிகளின் பெருக்கில் தோள்களைக் குறுக்கி சிலிர்த்து.. விழிகளை மூடிக்கொண்டாள்.. இடையை பற்றினான்.. சட்டென சிலிர்த்து நெஞ்சை நிமிர்த்தினாள்.. அவனுக்கோ மூச்சு முட்டியது..
ஹரியின் கரங்களில் லேசான நடுக்கம்.. சேலையை விரித்து.. கடைப்பகுதி தேடி.. நிலைகொள்ளாமல் தவித்து.. அவள் இடுப்பில் சொருகி.. மடிப்புகளை எடுக்க ஆரம்பித்திருந்தான்..
"மடிப்பு இப்படி எடுக்கணும்.." அவள் சொல்லிக் கொடுத்தாள்.. தீட்டிய மூளை காரனுக்கு இப்போது மண்டையில் எதுவும் ஏறவில்லை போலிருக்கிறது.. தடுமாறிக்கொண்டே இருந்தான்..
தோளில் போட்ட புடவை நிற்க மாட்டேன் என்று வழிந்து கொண்டே இருந்தது..
ஒரு கட்டத்தில் முடியாது என்பதை போல் தலையசைத்து சரசரவென்று அவள் புடவையை உருவி கட்டிலில் வீசி எறிந்தான்..
தொடரும்..