• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 17

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
"பத்மினி.. சார் காலிங் யூ.." வந்ததும் வராததுமாக சாத்விகா என்பவள் விஷம புன்னகையுடன் உதயகிருஷ்ணனின் அறையை காட்டினாள்..

"அச்சோ போன் பண்ணி லீவு சொல்ல மறந்து போச்சு..!! அலைபேசி எடுக்கும் போதுதானே அந்த அனுஷா வந்து தொலைத்தாள்.. அவள் பேசிய வார்த்தைகளில் நெஞ்சம் இன்னும் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கிறது..‌ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ அழவோ நேரமும் இல்லை.. இடமும் வாய்க்க வில்லை.. !!"

"இப்போ அவர் ஏவுகணையாக கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது.." அயர்வுடன் இதழ் குவித்து ஊதினாள் பத்மினி..

ஆங்காங்கே சிரிப்பும் கேலியுமாக பார்வைகள் பரிமாற்றம் செய்யப்பட்டதை அவள் அறியவில்லை..‌ இதயமே வெடித்து போகும் அளவிற்கு மன உளைச்சலில் துடிக்கிறாள்.. இதுதானா முக்கியம் அவளுக்கு..!!

இருளடைந்த முகத்துடன் "மே ஐ கமின் சார்?" என்று அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்..

மற்றவர்களை எப்படி பார்த்தானோ அதே பார்வைதான்.. மற்றவர்களிடம் விழிகளை நிமிர்த்தி பார்த்த பின் அது வேறொருவர் என அறிந்து அந்த பார்வையில் சலிப்பு தட்டும்.. ஆனால் இங்கே.. இனம் புரியாத உணர்ச்சிகளுடன் கூடிய அந்த பார்வை சற்று நேரம் நீடித்தது..

அவன் விழிகளையும் வா என்று பலமாக தலையை அசைத்து அவன் அழைத்த தோரணையையும் பத்மினி கவனிக்கும் நிலையிலா இருக்கிறாள்..

"சொல்லுங்க சார்..!!" என்று முன்பக்கம் இரு கைகளை கோர்த்துக்கொண்டு தலை தாழ்ந்து நின்றாள்.. எப்படியும் கடுமையான வார்த்தைகளால் சாட போகிறான் என்று தெரிந்துவிட்டது.. என்ன வேண்டுமோ பேசிக் கொள் என்று தயார் நிலையில் நிற்கிறாள்..!!

பத்மினி இல்லாத நேரத்தில் அவன் கண்களில் தெரிந்த தேடலும் பரபரப்பும் அவளை பார்த்த ஒரு சில கணங்கள் நீடித்ததோடு சரி.. இக்கணம் அவன் இயல்பான குணத்தோடு எரிச்சலாக பேச ஆரம்பித்திருந்தான்..

"இன்ஃபார்ம் பண்ணாம ஹாஃப் டே லீவ் எடுத்துருக்கீங்க பத்மினி.."

"சாரி சார்.. எதிர்பாராமல் நடந்துடுச்சு.. போன் பண்ணத்தான் நினைச்சேன் ஆனா.."

"ஓகே இனிமே இப்படி நடந்துக்காதீங்க..!!"

"சார் நான் போகட்டுமா..!!"

"ஒரு நிமிஷம்.." என்று ஒற்றை விரல் காட்டி அவளை நிறுத்தியவன்.. "ஒரு கமிட்மெண்டை ஒத்துக்கிட்டோம்னா அதுல ஸ்ட்ராங்கா இருக்கணும்.. முடியலன்னா விலகிக்கணும்..!! பாதியில விட்டுட்டு போறது எந்த விதத்தில் நியாயம்.." என்று அழுத்தமாகச் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் பத்மினி.. இப்போது எதைப் பற்றி பேசுகிறான் என்ற பாவனையுடன்

"என்ன சொல்றீங்க சார் எனக்கு ஒண்ணுமே புரியல.." அவளிடமிருந்து சோர்வாக வந்தது குரல்..

"சமைக்கிற பொறுப்பை வலிய வந்து கையில் எடுத்துக்கிட்டது நீதானே..!! ஒத்துக்கிட்ட வேலையில் சரியா இருக்க வேண்டாமா.. அம்மா நோய் வாய் பட்டவங்க..!! அவங்களுக்கு சரியான நேரத்தில் ஆகாரம் கொடுக்கனும்னு தெரியாதா..?"

"ஒருநாள்தானே..!! நீங்க சமைச்சு கொடுக்கலாமே சார்.."

"அதுக்கு முதல்ல நீங்க என்கிட்ட சொல்லிட்டு போகணும் மேடம்.. பேங்க் போறதோ போஸ்ட் ஆபீஸ் போறதோ அதிகாலை திடீர்னு பிளான் பண்ற விஷயம் கிடையாது.. கண்டிப்பா ராத்திரியே பிளான் பண்ணி வச்சிருப்பீங்க.. ரொமான்டிக் சாங் போட்டு தூங்க தெரிஞ்ச உங்களுக்கு.. என்கிட்ட தகவல் சொல்லிட்டு தூங்கணும்னு தெரியலையோ..!!"

ஓஹோ.. அதுவும் பெருங்குற்றமோ..!! அவ்வளவுதான் உள்ளே அழுத்தி கிடந்த வலிகள் பூகம்பங்களாக வெளிப்பட்டன..

"ஆமா.. ஆ..ம்மா.. சார் தப்புதான்.. ரொமான்டிக் சாங் கேட்டது தப்புதான்.. அந்த மாதிரி பாட்டு கேட்க எனக்கென்ன தகுதி இருக்கு.. வாழவே தகுதி இல்லாத நான் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு ஆசைப்படலாமா..!! எவ்வளவு பெரிய தப்பு.." எங்கேயோ கண்கள் வெறித்து விரக்தியான புன்னகையுடன் அவள் பேசிக் கொண்டிருப்பதையே
விழிகள் சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தவன்.. அவள் வினோதமான பேச்சில் ஏதோ துணுக்குற்று..

"பத்மினி" என்று அழைத்தான் அழுத்தமாக..

"பாட்டு கேக்க கூடாது.. டிவி பார்க்க கூடாது.. யார்கிட்டயும் சிரிச்சு பேசிட கூடாது.. மல்லிகை பூ வைக்கக்கூடாது. அலங்காரம் பண்ணக்கூடாது.. அழகா புடவை கட்டக்கூடாது.. அதிகமா பேசக்கூடாது.. எல்லாம் எல்லாமே தப்பு.. தப்புதான்.. உணர்ச்சிகளை அடக்கணும்.. எதுக்கும் ஆசைபட்டுட கூடாது" குறுக்கே ஏதோ பேச வந்தவன் வார்த்தைகளை நிறுத்திவிட்டு கூர்மையான விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

"நான்.. நான்.. உங்களை கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது..!! எனக்கென்ன தகுதி இருக்கு.. அவ அவ சரியாதான் சொன்னா..!!"

"பத்மினி என்ன ஆச்சு உனக்கு..?" எவ்வித சலனமும் இல்லாத குரல் அவனிடமிருந்து..

"எதுக்காக இந்த கல்யாணம்.. எதுக்காக இந்த வாழ்க்கை.. எந்த ஆசாபாசமும் இல்லாம உங்க அம்மா மாதிரி நானும் தனியா வாழ்ந்து இருக்கணும்....!!" ஒரு கணம் அவன் விழிகள் யோசனையாக வேறெங்கோ நிலைத்து மீண்டும் அவளிடம் சென்றது..

"உ.. உங்க அம்மாவுக்கு நீங்க இருந்தீங்க.. எ..எனக்குதான் யாருமே இல்லையே..!!" அந்த இடத்தில் வெடித்து சத்தம் வராமல் கதறினாள் பத்மினி.. அப்போதும் கூட அவனிடம் சிறிதும் பதட்டமில்லை.. எதற்காக இப்படி அழுகிறாள் என்று ஆராய்ச்சி மட்டுமே..

"பத்மினி இது ஆபீஸ்.." என்றான் பற்களை கடித்து அழுத்தமாக..

"எஸ் ஆஃபிஸ்.. ஆஃபீஸ்.. வேலைதான் முக்கியம்.. சாரி சார்.. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்..‌ இனி என் எமோஷன்சை கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்.." என்று கண்களை துடைத்துக் கொண்டவள்.. "சாரி சாரி இனிமே எமோஷன்ஸ் வராம பாத்துக்கிறேன்..!! என்றவள் சேலை தலைப்பால் அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.. சில நிமிடங்கள் யோசனையோடு அப்படியே அமர்ந்திருந்தான் உதய் கிருஷ்ணா..

வெளியே வந்தவள் ஏதேதோ வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.. என்ன செய்கிறாள் எதை எடுக்கிறாள் எதை வைக்கிறாள் அவளுக்கே புரியவில்லை.. அவ்வப்போது வெளியே வந்து தொழிற்சாலைக்குச் சென்ற உதய் கிருஷ்ணனின் பார்வை அவள் மீது படாமல் இல்லை..‌ ஒவ்வொரு முறை அவன் பார்வை அவளை தீண்டிச் செல்லும் போதும் அங்கே மற்றவர்களுக்குள் சத்தம் வராத பாஷை பரிமாற்றங்களும் மௌன சிரிப்புகளும்..

மாலை வீடு திரும்பியவள் ரமணியம்மாவிடம் கூட எதுவும் பேசவில்லை..

பார்ட்னர்களோடு பூங்காவில் அரட்டை அடித்து விட்டு வீடு திரும்பியவர்.. சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த பத்மினியை கண்டதும் சந்தோஷம் பொங்க சின்ன குழந்தை போல் ஓடி வந்தார்..

"வந்துட்டியா.. நீ இல்லாம வீடு வீடா இல்ல.. இந்த உதய் பையன் ஒரே ரகளை.. சமைக்கிறேன்னு என்னை கொன்னுட்டான்.. என்கிட்ட சொல்லாம அவ எப்படி போகலாம்ன்னு ஒரே புலம்பல் வேற.. ஒரு வார்த்தை அவன் கிட்டயும் சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்ல நீ.." என்றபடி பூங்காவில் பூக்கார அம்மாவிடம் அவர் வாங்கி வந்த பூவை பத்மினியின் தலையில் வைக்க போனார்..

வேகமாக தடுத்தாள் பத்மினி..

"வேண்டாம்மா இந்த பூவெல்லாம் இனி வேண்டாம்..!!" முகத்தில் அறைந்தார் போல் சொன்னவளை கண்கள் சுருக்கி கேள்வியாக பார்த்தார் அவர்..

"மல்லிகை பூ வெச்சுக்க எனக்கு என்ன தகுதி இருக்கு..!! இந்த மாதிரி ஆசை படவும் அனுபவிக்கவும் புண்ணியம் பண்ணி இருக்கணும் இல்லையா..? என்றாள் வறட்சியான குரலில்.. வீடு வந்து சேர்ந்த உதய் கிருஷ்ணா அவள் பேச்சில் அப்படியே நின்றான்..

"என்னம்மா பேசற..?"

"நாலு நாள் இந்த பூவை வச்சுக்கிட்டதுக்கு நடத்தை கெட்டவ ன்னு பேர் கெடச்சதுதான் மிச்சம்..!! இனி வேற என்ன பழியை ஏத்துக்கணும்மா..?"

"பத்மினி.." ரமணியம்மாவின் குரல் இள்கியது..

"போதும்.. இதெல்லாம் வேண்டாம்.. இதனால எந்த பிரயோஜனமும் இல்ல.. ஆரம்பத்துல உங்க புள்ள என் இஷ்டப்படி இருக்கலாம்னு சொன்னார்.. ஆனா உங்களை மாதிரியும் உங்க புள்ள மாதிரியும் துறவியா ஆசைகளை துறந்துட்டுதான் இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கணும்னு முன்னாடியே சொல்லி இருந்திங்கனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருப்பேன்.. இல்லை விதிமுறைகளுக்கு ஏத்த மாதிரி என்னை தயார்படுத்திக்கிட்டு இருந்திருப்பேன்.. !!" மனஉளைச்சலில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசினாள்..

"இப்ப என்னடா வந்துச்சு.. பூ வச்சிக்கிறதுல என்ன தப்பு.. யார் உன்னை என்ன சொன்னா..?" மீண்டும் அந்த பூவை ரமணியம்மா அவள் தலையில் வைக்க முயல..

"வேண்டா..ம்ம்ம்ம்.‌." அறை அதிர கத்தினாள் பத்மினி..

"வேண்டாம்னு சொல்றேன்ல விட்டுடுங்க..!!" அவள் கத்திய விதத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தார் ரமணியம்மா..

"இனி மல்லிப்பூ வச்சுக்கோ அலங்காரம் பண்ணிக்கோன்னு என்னை வற்புறுத்தாதீங்க..!! இப்பவே எனக்கு அவ்வையார் போல வயசாகிட்டா கூட பரவாயில்லைன்னு தோணுது..‌" கண்களை உருட்டி ஆவேசத்துடன் சொன்னவள் அந்த மல்லி பூவை எடுத்து குப்பை கூடையில் போட்டுவிட்டு அங்கிருந்து இருவரையும் கடந்து வேகமாக சென்றாள்..

ரமணியம்மா சில கணங்கள் என்ன நடந்து போனது.. அவள் ஏன் அப்படி பேசினாள் என புரியாமல் மலங்க மலங்க விழித்து பெருமூச்சோடு.. நொந்து போனவராய் திரும்பி பார்க்க அங்கே உதய் கிருஷ்ணா உணர்ச்சி துடைத்த முகத்துடன் அனைத்தையும் கேட்டபடி சிலையாக நின்று கொண்டிருந்தான்.. மெல்ல சிரித்து சமாளிக்க வேண்டிய நிலை..

"அது.. என்னவோ தெரியல.. இன்னைக்கு அவ மூடு சரி இல்லைன்னு நினைக்கிறேன்.. ஒரே அலைச்சல்.. அதனாலதான் இப்படி பேசறா.." இது தனக்குத்தானே சொன்ன சமாதானமா இல்லை அவனுக்கு சொன்ன சமாதானமா தெரியவில்லை..‌ ஆனால் பத்மினி பேசிய விதத்தில் அவரும் குழம்பித்தான் போயிருந்தார்..

ஆழ்ந்த பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான் உதய் கிருஷ்ணா..

பத்மினி இருவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. இரவு தாய்க்கும் மகனுக்கும் தோசை சுட்டு போட்டாள்.. போதும் என்று கை நீட்டியவனின் தட்டில் இன்னொரு தோசை விழுந்தது..

பத்மினி நீயும் உட்கார்ந்து சாப்பிடு.. ரமணியம்மாவின் குரலை அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை..‌

"பத்மினி இது என்ன பிடிவாதம்.. ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு.." மீண்டும் அழைத்தார் ரமணி..

"பசிக்கல.. பசியை உணரும் மனநிலையில் நான் இல்லை என்னை விட்டுடுங்க.. தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே நீங்க எனக்கு செய்யும் பேருதவி.. !!" சொல்லிவிட்டு நகர தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

சாப்பிட்டு முடித்து சமையலறையை சுத்தம் செய்துவிட்டு குளிப்பதற்காக அறைக்குள்ளே வந்தவள்.. அப்போதுதான் கட்டிலின் ஓரத்தில் கிடந்த அந்த ஸ்கிரிபிலிங் பேடை கவனித்தாள்..

திறந்த சாளரம் வழி வீசிய காற்று பேப்பர்களை திருப்பி ஆசைகளை எழுதி வைத்த அந்த பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது..

ஏற்கனவே மனதளவில் நொறுங்கி போயிருந்தவளுக்கு அதை பார்க்க பார்க்க ஆத்திரம் பொங்கியது.. அவள் எழுதி வைத்த ஆசைகளுக்கு எதிர்மறையான உதய் பிரகாஷின் சிடுசிடுப்பான குணமும் அவன் எரிச்சலான பேச்சும்.. இயந்திரத்தனமான நடவடிக்கைகளும் கண்முன் வந்து போயின.. கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்.. வேகமாக சென்று அந்த பேப்பரை துண்டு துண்டாக கிழித்து தூரமாக வீசி எறிந்தாள்.. பேப்பர் துண்டுகள் காற்றின் வேகத்தில் மூலைக்கொரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டன..

அலுப்பு குளித்துவிட்டு வந்தவள்.. அலைபேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருப்பதை கண்டு அதை எடுத்துக்கொண்டு வெளியே செல்லவும் அதே நேரத்தில் உதய் கிருஷ்ணா உள்ளே வரவும் சரியாக இருந்தது..

கேசவன் அழைத்திருந்தான்..

"ஹலோ.."

"அக்கா நீ என்ன வேலை பண்ணி வச்சிருக்க.. பப்ளிக் பிளேஸ் ல அவளை அடிச்சியா.." தம்பியின் குரலில் என்றும் அவளறியாத கோபம்..

"அவ என்ன பேசினா தெரியுமா உனக்கு..?"

"அவ ஆயிரம் பேசியிருக்கலாம் அதுக்காக பொது இடத்தில் அடிக்கிறது தப்பில்லையா.. படிச்சவதானே நீ.. வயசுல பெரியவ.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா.." உறைந்து நின்றாள் பத்மினி..

"கேசவா நீயா இப்படி பேசற.. எவ்வளவு நொந்து போயிருந்தா அவளை அடிச்சிருப்பேன் யோசிச்சு பாக்கலையா நீ.."

"உன் நிலைமை புரியாமல் இல்ல.. உன்னை விட சின்ன பொண்ணு அவ.. முதிர்ச்சி இல்லாம ஏதோ பேசி இருக்கலாம்.. ஆனா வயசுல பெரியவ நீ.. அத்தனை பேர் முன்னாடியும் பொது இடத்துல அவளை அடிச்சு அவமானப்படுத்தினது கொஞ்சமும் சரியே இல்லை.. உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல அக்கா.." வெறுப்பான பேச்சு..

"கேசவன் நான் உன்னோட அக்கா.."

"அவ என் பொண்டாட்டி.. அவளுக்காக நான் பேசலைனா வேற யார் பேசுவா..?"

"ஓஹோ.." இதழ்களில் சிரிப்பும் கண்களில் கண்ணீரும் தேங்கியது..

"அக்கா நான் உனக்காக அவகிட்ட எத்தனையோ முறை பேசி இருக்கேன்.. அவளை அடிச்சும் கூட இருக்கேன்.. ஆனா நீ இன்னைக்கு பண்ணின காரியம் கொஞ்சம் கூட சரியில்ல.. என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கணும்.. எந்த உரிமையில் என் பொண்டாட்டி அடிச்ச நீ.. !!" கேள்வி வினோதமாக தெரிந்தது..

"சாரி.. மன்னிச்சுக்கப்பா.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.." குரல் கமறியது.. வார்த்தைகள் வரவில்லை.. சிரிக்க முயன்றாள்..

"அக்கா..!!"

"இல்ல இல்ல.. தப்பில்ல.. குடும்பம்னு வந்த பிறகு கூடப் பிறந்தவங்களை தள்ளி வைக்கிறதுதான் நல்லது..!! நான் புரிஞ்சுகிட்டேன்.. இனி ஒதுங்கி இருப்பேன்.. மூக்கை உறிஞ்சிக் கொண்டு அழைப்பை துண்டித்தாள்..

சோபாவில் அமர்ந்தவள்.. அலைபேசியை சோபாவில் வைத்துவிட்டு கைகளை கோர்த்தபடி எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. இருதயம் முழுக்க ரணம்.. உடைந்து சிதற தயாராக இருந்தாள்.. ஆனால் அழ முடியாமல் ஏதோ இறுகி தடுக்கிறது..

முகம் கருத்து செல்போனை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள்..

"தூங்கினா.. தூ.. தூங்கினா எல்லாம் சரியாகிடும்..‌" தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.. உதய் கிருஷ்ணா அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. இன்று எந்த பாட்டையும் அவள் ஒலிக்க விடவில்லை.. உறங்க முயன்றாள் முடியவில்லை.. விசும்பல் சத்தம்தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.. அழுகிறாள் என்று தெரிகிறது..

"ப்ச்.. இப்ப எதுக்காக அழற.. எனக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆகுது.. அழறதுன்னா வெளிய போய் அழு.. இரக்கமில்லாமல் சொன்னானோ அல்லது அவள் அழுகையை நிறுத்துவதற்காக சொன்னானோ..!!" ஆசிரியர் மகனிடம் அனுசரனை இல்லை.. அதட்டல் தான் வெளிப்படுகிறது.. அவன் அழும் போது அவன் தாய் அவனுக்கு கொடுத்த டிரீட்மென்ட் இதுதானே..!!

"சாரி.. சாரி சாரி.." கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.. வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.. கண்கள் சுருக்கி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் உதய்..

வெகு நேரமாகியும் அவள் திரும்பவில்லை..

இந்த வீட்டிலிருக்கும் வரையில் ஹவுஸ் மேட்டாகவே இருந்தாலும் அவள் அவன் பொறுப்பு தானே.. எக்கேடும் கெட்டு போகட்டும் என்று விட்டு விட முடியாது.. எழுந்து வெளியே சென்றான்.. அங்கே..

வாய் மட்டும் முணுமுணுவென பேசிக்கொண்டிருக்க.. கையை அசைத்து வெற்றிடமான எதிர் பக்கம் யாரிடமோ புலம்புவதை போல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் பத்மினி..

மனம் விட்டு பேச ஆள் இல்லை.. எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை.. அதிகமான மன உளைச்சலின் விளைவு..‌

அழுகை பொங்கி வெடிக்கும் போதெல்லாம் சத்தம் வராமலிருக்க வாயை பொத்திக் கொண்டாள்..

என்ன பேசுகிறாள்.. எதைப்பற்றி புலம்புகிறாள் ஒன்றும் புரியவில்லை.. ஆனால் வாய் விட்டு தனது மன மனவலியை ஆதங்கத்தை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறாள்..

அந்த நேரத்திலும் சமையல் அறையில் சரியாக மூடப்படாத குழாயில் கீற்றாக வழிந்த தண்ணீரின் சத்தத்தை கண்டுகொண்டு.. கண்களை துடைத்துக் கொண்டு அவசரமாக ஓடியவள்.. குழாயை மூடிய பிறகும் கையை எடுக்காமல்.. தொடர்ந்து அதே வேலையை அழுகையும் ஆவேசமுமாக திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருந்தாள்.. அந்நேரத்தில்..

அவள் கரத்தின் மீது இன்னொரு கரம் அழுத்தமாக பதிந்தது..

வெட்டி வெட்டி தள்ளும் விம்மலுடன் திரும்பி யாரென்று பார்த்தாள்.. உதய் கிருஷ்ணா அவள் கண்களை பார்த்தபடி நின்றிருந்தான்..

மெதுவாக அவள் தோள் பற்றி தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்..‌

ஆதரவு தேடி அலைந்து கொண்டிருந்த மேகம் ஒன்று.. கரம் பட்டு குளிர்ந்து மழையாக மண்ணைச் சேர்ந்தது..

ஏன் எதற்கென்று கேட்கும் நிலையில் அவள் இல்லை.. ஆராய்ச்சிகளை தள்ளி வைத்து இடம் கொடுத்தவனின் தோளில் சாய்ந்து வலிகள் கரையும் அளவிற்கு கதறினாள்..

இன்னொரு கரத்தையும் அவள் தோள் மீது வைத்து வருடியவாறு இரு கரங்களை சேர்த்து அவளை இறுக அணைத்துக் கொண்டான் உதய்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jan 11, 2023
Messages
6
நான் கூட இந்த மாறிலாம் புலம்புவேன் 🙂🙂🙂... ஆனா என்ன தான் நண்பர்கள் பெற்றோர்கள் நம்மள சமாதானம் செய்தாலும் தன்னை யாரும் புரிந்துக் கொண்டோ அல்லது எந்த ஒரு எடை போடும் விதமோ இல்லாது தன்னை அரவணைத்து கொள்ள மாட்டார்களா என மனம் வெம்பி போகும் 🥲🥲🥲...

மினிக்கு கண்ணன் போல எனக்கு யார் வருவார்களோ 🫣❤️‍🩹🤧...

இன்றைய யூடி அடிப்போலி 🫀🎶🦋...
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
பத்மினி😭😭😭😭😭😭......
பாரடா நம்ம உதயக்கு ஆதரவா இருக்க கூட தெரியுது.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 இன்னும் நிறைய பேர் ஆதரவு தர தோல் கொடுக்க ஆள் இல்லாம இருக்காங்க..........😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 நம்ம ரோபாட் உதய் கூட மனிதன் என்று நிரூபித்து விட்டானே.......👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
New member
Joined
Apr 21, 2024
Messages
1
ஆதரவு இன்றி தனிமையில் வாடும் ஒரு பெண்ணின் மனநிலையை மிக அழகாக சொல்லி இருக்கின்றீர்கள். அருமையான பதிவு..👍👍🤝
 
Joined
Jul 25, 2023
Messages
23
சத்தியமா சனாமா உங்களோட இந்த உணர்வுகளின் புரிதல் எங்களை கட்டிபோடும் வரை உங்களோட வார்த்தைகளுக்கும் கதைகளுக்கும் நான் அடிமை.

பத்மினியோட இந்த நிலைமைல எத்தனை பொண்ணுங்க இருக்காங்களோ மனசவிட்டு அழுக கூட முடியாம அழுத்திகிட்டு இருக்க பாரத்தை இறக்கி வைக்க ஒரு வழி தெரியாம கிட்டத்தட்ட பைத்தியம் போல தனக்கு தானே பேசிக்குறவங்க கூட நிறைய பேர் இருக்காங்க ஆனால் அவங்களுக்கெல்லாம் இது போல தோள் கிடைக்குமான்னு நிஜமா தெரியவில்லை
 
Joined
Jul 31, 2024
Messages
54

😭😭😭😭😭😭😭😭😭 பத்து உன் நிலையை வார்த்தைகளால் கூறுவது சுலபம் வாழ்பவருக்கே வலி தெரியும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 கத்தியை கூர்மையானது கொடுமையானது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் 😲😲😲😲😲😲
கேசவா சூப்பர் கத்தியில்லாம குத்தி ரணமாக்கிட்ட 😭😭😭😭😭😭😭😭😭
இவன் கட்டி புடிச்சுது ஆறுதல் சொல்லவா இல்ல இதுக்கு தான் அலையறனு கேட்கவா 😲😲😲😲😲😲😲 அடுத்த எபிக்காக வலியோடு காத்திருக்கிறேன் சீக்கிரம் போடுங்க டார்லு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
128
apa entha buthiyavathu iruke....🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
 
Member
Joined
Jan 21, 2024
Messages
64
பத்மினி யோட உணர்வுகளை அழகா சொல்லி யிருக் கீங்க. உதய் கிருஷ்ணாவா அணைச்சு கிட்டான் நம்பவே முடியல
 
Joined
Jul 10, 2024
Messages
44
பத்மினியின் மனநிலையை அழகா அழுத்தமா எடுத்து சொல்லியிருக்கீங்க. இந்த மாதிரி மனநிலையில் நிறைய பேர் இருக்காங்க. ஆனால் தோள் கொடுக்க ஆள் இல்லை.

உதய் உனக்கு கூட உணர்வுகள் உண்டா. ஒன்னும் புரியல. இனி என்ன பேசுவான்னும் புரியல.🤔🤔🤔🤔🤔

But very very heart touching epi.❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top