- Joined
- Jan 10, 2023
- Messages
- 61
- Thread Author
- #1
"யூ ஃபூல்.. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு.. எதுக்காக அவளை க்ளப்புக்கு கூட்டிட்டு போன.. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ..!" கேஷவ் சீற்றமாய் கத்திக் கொண்டிருக்க அவன் முன்பு தலைகுனிந்து இரு கைகளை கோர்த்தபடி நின்றிருந்தான் சத்யா..
"இல்ல அங்கிள் பிரெண்ட்ஸ்தான் அவள பார்ட்டிக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க..!"
"அந்த பார்ட்டி எழவையெல்லாம் வீட்டுக்குள்ள வச்சு முடிச்சிக்க வேண்டியது தானே..! நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்குதுன்னு யாராவது கேக்க போறாங்களா என்ன..! எதுக்காக ஊரே பார்க்கற மாதிரி அவளை வெளியே கூட்டிட்டு போன.. அதனாலதானே அந்த கழுதை ரொம்ப சாமர்த்தியமா இன்னொருத்தனுக்கு போன் போட்டு வர சொல்லி அவங்கூட ஊர்வலமா போயிருக்கா.. வெளிய தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்.. நான் சொல்லல இவ ஆத்தாள மாதிரியே இந்த கழிசடையும் ஒரு.." என்று நிறுத்திவிட்டு சிகரெட்டை இழுத்து புகையை வெளியிட்டான் கேஷவ்..
"என்னை பத்தின எல்லா விஷயமும் அவனுக்கு தெரிஞ்சிருக்கு அங்கிள்.." என்றவனை நிமிர்ந்து ஏளனமாக ஏறிட்டான் கேஷவ்..!
"எல்லாம் அவதான் சொல்லியிருப்பா.. எத்தனை நாளா பழக்கம் அவங்க ரெண்டு பேருக்குள்ள..?"
"தெரியல அங்கிள்.. அவன் ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. தேம்பாவணி அவன்கிட்ட டிரீட்மென்ட் போனதா ஒருமுறை அவனே எனக்கு போன் பண்ணி சொன்னான்.."
வாட்..! அதிர்ச்சியாக கண்களை சுருக்கினான் கேஷவ்..
"ஆமா.. ஃபர்தரா புரோசீட் பண்ண என் பர்மிஷன் வேணும்னு கேட்டுக்கிட்டான்.."
"இந்த விஷயத்தை பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்லையே..?"
"இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. தேம்பாவணி கிட்ட இனி இந்த மாதிரி செய்ய கூடாதுன்னு வார்ன் பண்ணி விட்டுட்டேன்.."
"இடியட் கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு.. இது எவ்ளோ பெரிய ப்ராப்ளம் தெரியுமா..! சைக்கியாட்ரிக் டாக்டர்கிட்ட எதுக்காக போவாங்க.. மனசுல இருக்கிறதையெல்லாம் கொட்டி தீர்க்கத்தானே.. அப்படின்னா தேம்பாவணி நம்மள பத்தின எல்லா விஷயத்தையும் அவன் கிட்ட சொல்லியிருப்பா.. ஓ ஷிட்..!" சிவந்த கண்களோடு நெற்றியை நீவியபடி அமர்ந்திருந்தான் கேஷவ்..
"சொல்லட்டுமே அங்கிள்.. அவனால நம்மள என்ன செஞ்சிட முடியும்.."
என்றவனை சினத்தோடு பார்த்தான் கேஷவ்..
"நேத்து உன் கண் முன்னாடியே பொண்ண தூக்கிட்டு போன மாதிரி என்ன வேணாலும் செய்ய முடியும்..!
தேம்பாவணி நம்ம கையை விட்டு போயிட்டா இங்க அஸ்திவாரமே ஆட்டங்கண்டு போயிடும்.. இந்த அதிகாரம் பணம் புகழ் இதெல்லாம் இல்லாம என்னால வாழவே முடியாது..! வெளியில போய் அவ ஒரு வார்த்தை வாய் திறந்து பேசினா போதும்.. நாம் நடுத்தெருவிலதான் நிக்கணும்.."
"என்ன அங்கிள் பயமுறுத்தறீங்க..!"
"இப்ப கேளு.. இதையெல்லாம் அவளை வெளியே கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.. காலேஜ் போகும்போது கூட அவ்ளோ ப்ரோடக்ஷனோட அனுப்பி வச்சேன்.. நீ என்னடான்னா முட்டாள்தனமாக அவளை கோட்டை விட்டுட்டு வந்து நிக்கற.."
"இப்ப அடுத்து என்ன செய்யறது அங்கிள்.."
"அவ பேசாம இருக்கற வரைக்கும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. அவ வாய் திறந்து பேச ஆரம்பிச்சிட்டா நாம சிக்கல்ல மாட்டிக்குவோம் சத்யா..!"
"சார் உங்கள பாக்க வருண் பிரசாத்ன்னு ஒருத்தர் வந்திருக்காரு.." செக்யூரிட்டி இன்டர்காம் வழியாக சொல்ல..
"வருண் பிரசாத்..?" கண்களை சுருக்கினான் கேசவ்..
"அங்கிள் அந்த டாக்டர்..!" சத்யா அவசரமாக இடைநுழைய.. "வர சொல்லு.." ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு இணைப்பை துண்டித்தான் கேஷவ்..
"ஹலோ மிஸ்டர் கேஷவ் குமார்.. நீங்க..? ஹான்.. சத்யா.. காயம் எப்படி இருக்கு சத்யா? மருந்து போட்டுக்கிட்டீங்களா..!" நக்கல் பார்வையுடன் அவன் கரத்தை பார்க்க உள்ளங்கை காயத்தை பின் பக்கமாய் மறைத்துக் கொண்டு வருணை தீயாக முறைத்தான் சத்யா.
கேஷவ் வருண் பிரசாத்தை ஆராய்ச்சியாக பார்வையால் ஊடுருவினான்..
"உக்காருங்க மிஸ்டர் வருண் பிரசாத்.."
"தேங்க்யூ" என்று வருண் எதிர் இருக்கையில் அமர்ந்து கொள்ள..
"எங்க பொண்ண கடத்திட்டு போயிருக்கீங்க..! என் மாப்பிள்ளையை அடிச்சிருக்கீங்க.. இதுக்காகவே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உங்களை உள்ள தள்ள முடியும்.. ஆனா நீங்க சமூகத்துல உயர்ந்த அந்தஸ்த்துல இருக்கற டாக்டர்.. அந்த லெவலுக்கு நான் கீழே இறங்க விரும்பல.. ஒழுங்கா என் பொண்ண என்கிட்ட ஒப்படைச்சிட்டு உங்க வேலைய பாத்துட்டு போயிட்டே இருங்க..! உங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கும்போது தேவையில்லாம எதுக்கு எங்க விஷயத்துல தலையிடறீங்க.." நக்கலான கேள்வியுடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் கேஷவ்..
"ஓ.. தாராளமா கம்ப்ளைன்ட் கொடுங்களேன்..! கோர்ட்டுக்கு போலாம் கேஸ் நடக்கட்டும்.. நானும் என் தரப்பு குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வைக்கறேன்.. ஐ மீன் நீங்களும் உங்க மாப்பிள்ளையும் தேம்பாவணியை மன ரீதியா துன்புறுத்தறீங்க.. அடிச்சு கொடுமை படுத்தறீங்கன்னு நானும் உங்க ரெண்டு பேர் மேலயும் கேஸ் போடுவேன்.."
"வாட்..! நான் தேம்பாவணியை அடிச்சு கொடுமை படுத்தறேனா.. என் மகளை நான் துன்புறுத்தறேனா..! திஸ் இஸ் சச் எ ஸ்டுப்பிட் ஸ்டேட்மென்ட்.. நான் பெத்த மகளை எதுக்காக அப்படி செய்யணும்.. என் குழந்தை மேல நான் எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்னு இந்த உலகத்துக்கே தெரியும்.. நீங்க பொய்யா ஒரு குற்றச்சாட்டைச் சோடனை செஞ்சா எல்லாரும் நம்பிடுவாங்களா..! வைக்கிற அலிகேஷன்ஸ்ல லாஜிக் இருக்கணும் மிஸ்டர் வருண்.."
வருண் சிரித்தான்.. "நான் சொன்னா உங்களுக்கு அபத்தமாதான் தோணும்.. இதையே தேம்பாவணி அவ வாயால சொன்னா..?"
கேஷவ்குமாரின் முகம் மாறியது..
"தேம்பாவணி எனக்கு எதிரா வாய் திறக்கவே மாட்டா.."
"ஏன் பேச மாட்டா..! அவளையும் மிரட்டி வச்சிருக்கீங்களா..?"
"என்னது மிரட்டி வச்சிருக்கோமா..! அவளுக்கு என் மேல அவ்வளவு அன்பு.. அப்பாங்கற பாசம்.. கேஷவ் தடுமாறினான்.."
"அப்படியா..? அவ அம்மா மேல இருக்கற கோபத்தை அவ மேல காட்டறதாகவும் அடிச்சு கொடுமை படுத்துறததாகவும்.. வெளியே எங்கேயும் விடாம வீட்டுக்குள்ளே சிறை வச்சிருக்கிறதாகவும்.. எங்க அவ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்தெல்லாம் இன்னொருத்தருக்கு போயிடும்னு இதோ இந்த எருமை மாட்ட அவ தலையில கட்டி வச்சதாகவும்"
"அவ சொன்னாளா..! இங்க பாருங்க என் பொண்டாட்டி மேல உள்ள கோவத்துல என் மகள் மேல கொஞ்சம் வெறுப்பை காட்டினது உண்மைதான் அதுக்காக அடிச்சு கொடுமையெல்லாம் படுத்தல.. அவ உங்ககிட்ட ஏதோ தப்பா சொல்லி இருக்கணும்.. எங்க அவளும் அவ அம்மா மாதிரியே கெட்டு சீரழிஞ்சு போய்ட கூடாதுன்னுதான் வீட்டுக்குள்ள அடைச்சு வச்சோம்.. இதோ நல்ல பையனா பார்த்து அவளுக்கு கல்யாணமும் பண்ணி வச்சிருக்கேன் இதைவிட என்ன வேணுங்கிறீங்க.. மரியாதையா என் பொண்ண என்கிட்ட ஒப்படைச்சிடுங்க இல்லனா நடக்கிறதே வேற..! அவளுக்கு லேசா புத்தி பேதலிச்சு போச்சு அதனாலதான் உங்ககிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இருக்கா.."
"அவ இதையெல்லாம் சொன்னதா நான் சொல்லவே இல்லையே..!" வருணின் பார்வையும் பேச்சும் கூர்மையாய் இருந்தது..
கேஷவ் ஆடிப்போனான்..
"ஊருக்குள்ள பேசிக்கிறாங்கன்னு சொல்ல வந்தேன்.. நீங்க ஏன் அவசர படுறீங்க..! ஆனா ஒரு சைக்கியாட்ரிக் டாக்டரா உங்க பொண்ணு வாயிலிருந்து எல்லா உண்மைகளையும் என்னால வரவழைக்க முடியும்..! அதுக்கு முன்னாடி அவளுக்கு ட்ரீட்மென்ட் வேணும்.. அதுக்காகத்தான் நான் இங்க பேச வந்தேன்.."
"என்ன பேசணும் உங்களுக்கு..!" கேஷவ் குரலில் உஷ்ணம் கூடியிருந்தது..
"இன்னும் கொஞ்ச நாளைக்கு தேம்பாவணி எங்க வீட்ல தான் இருப்பா.. அவளை ஃபெசிலிட்டிக்கு கூட்டிட்டு போயிட்டு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்.. மனச பாதிக்கற மாதிரி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவளுக்கு நிறைய கொடுமைகள் பண்ணியிருக்கீங்க.. அவ பேச ஆரம்பிச்சா நீங்க எல்லாரும் ஜெயிலுக்கு போய் களி திங்கணும்..!"
"அவ என்னோட மகள் மட்டுமல்ல.. சத்யாவோட வைஃப்.. இன்னொருத்தர் மனைவியை கூட்டிட்டு போய் வீட்ல வச்சுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு.."
சத்யாவை நிமிர்ந்து பார்த்தான் வருண்..
"என்ன மிஸ்டர் சத்யா நீங்க உங்க மாமனார் கிட்ட முழுசா எதையும் சொல்லலையா.. ஐ மீன் தேம்பாவணியை பாருக்கு கூட்டிட்டு போனது.. அவளை போதை மருந்து கலந்த ஜுஸை குடிக்க வச்சது.. உங்க நெருங்கிய தோழர் கையில அவளை பிடிச்சு கொடுத்தது.."
"ஏய் என்ன மிரட்டறியா..?"
"உங்க பிரண்ட் அப்ரூவரா மாறிட்டான்.. எங்க வேணாலும் வந்து சாட்சி சொல்ல தயாராக இருக்கான்.. அண்ட் அவனைத் தேட முயற்சி பண்ணாதீங்க.. இப்ப அவன் தலை மறைவு.. போதை மருந்து கையில் வைச்சிருந்த குற்றத்துக்காக எப்ப வேணாலும் உங்களை தேடி போலீஸ் வரலாம்..! அப்புறம் உங்க மனைவியை அடிச்சு கொடுமைப்படுத்தினது.. அவ விருப்பமில்லாம இன்னொருத்தங்கிட்ட.."
"இங்க பாரு.. நீ தேம்பாவணியை எங்க வேணாலும் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் குடுத்துக்க.. எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை..!" சத்யா அவசரமாக படபடவென உரைக்க கேஷவ் கோப கண்களோடு அவனை ஏறிட்டு பற்களை கடித்தான்..
"வாயில சொன்னா பத்தாது கையெழுத்து போட்டு தரணும்..!"
"எங்க வேணாலும் கையெழுத்து போட்டு தரேன்.. தேவையில்லாம என்னை இதுல மாட்டி விடாதே.."
"மிஸ்டர் கேஷவ் குமார் நீங்க எப்படி..?" வருணின் பார்வை அவனை நக்கலும் கேலியுமாக அவனை துளைத்தது..!
"ட்ரீட்மென்ட்க்காகத்தானே கூட்டிட்டு போறீங்க..! எப்படி கூட்டிட்டு போனீங்களோ அப்படியே அவளைக் கொண்டு வந்து விடணும் இல்லனா நான் சட்டப்படி உங்க மேல ஆக்ஷன் எடுப்பேன்.."
"நோ நோ.. கூட்டிட்டு போறது மட்டும்தான் நானு.. மத்தபடி இங்க வர்றதா வேண்டாமான்னு டிசைட் பண்ண வேண்டியது தேம்பாவணிதான்..! மனசு தெளிவடைஞ்சு தைரியமா அவளா ஒரு முடிவெடுக்கிற வரைக்கும் நீங்க காத்திருக்கத்தான் வேணும்.." அப்புறம் குறுக்கு வழியில வேற எதுவும் பிளான் பண்ண ட்ரை பண்ணாதீங்க..! தேம்பாவணி வாய் திறக்காத வரைக்கும்தான் நீங்க சேஃபா இந்த சொசைட்டி இமேஜ்க்குள்ள இருக்க முடியும்..! ஞாபகம் இருக்கட்டும்.. உங்களால் அவளுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது..! ஒருவேளை வேற மாதிரி நீங்க பிளான் செஞ்சா.. தேம்பாவணியை நீங்க என்னென்ன செஞ்சீங்கங்கற எவிடன்ஸ் எங்கிட்ட இருக்கு.. அத்தனையும் போலீஸ்க்கு போயிடும்.." கனமாக உரைத்து விட்டு அங்கிருந்து வரும் எழுந்து சென்றுவிட விதிர்த்து போய் அமர்ந்திருந்தான் கேசவ்..
"அங்கிள் என்ன இப்படி ஆயிடுச்சு.. எனக்கு தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க.. ஒரு வார்த்தை சொல்லுங்க முடிச்சு விட்டுரலாம்.." முடிக்கும் முன் பளாரென்று ஒரு அறை விழுந்தது..!
"அவ முன்னாடி மண்டைய மண்டைய ஆட்டி பம்மிகிட்டு இப்ப வந்து பெரிய இவனாட்டம் வீர வசனம் பேசற ராஸ்கல்.. இப்ப அவனை ஒரு மயிரும் புடுங்க முடியாது..! கொஞ்சம் வெயிட் பண்ணனும்.. டிரீட்மென்ட்னு சொல்லி தானே தேம்பாவணியை கூட்டிட்டு போயிருக்கான்.. அவளுக்கு ட்ரீட்மென்ட் முடியட்டும்.. ஒரு வகையில இது கூட நமக்கு வசதிதான்.. தேம்பாவணி ஏதாவது வாய் திறந்தா கூட அவ மெண்டலி ஸ்டேபிள் இல்லை.. அவளுக்கு தோணறதையெல்லாம் கற்பனை பண்ணிக்கறான்னு பிளேட்டை திருப்பி விட்டுடலாம்.. இந்த டாக்டர் அவனுக்கே தெரியாம சாட்சியா இருப்பான்.. போற வரைக்கும் போகட்டும்.. நீ அமைதியா வேடிக்கை மட்டும் பாரு..!" என்றபடி இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் கேஷவ்..
இங்கே வெண்மதி தந்தையிடம் அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருந்த காரணத்தால் இராஜேந்திரனுக்கு பெரிதாக அறிமுக விளக்கமெல்லாம் தேவைப்படவில்லை..
தேம்பாவணியை சாரதா டைனிங் டேபிளில் அழைத்து வந்து அமர வைக்க.. "வாம்மா.. உட்காரு.. அன்னைக்கு எங்களோட அவ்ளோ நல்லா பேசினியே.. என் பையன தெரியும்னு ஒரு வார்த்தை கூட சொல்லலையே நீ..!" அவளிடம் பேச்சை ஆரம்பித்தார் ராஜேந்திரன்..
"எனக்கு உங்க பையனாத்தான் தெரியும்.. உங்கள தெரியாதே..!"
"அதுவும் வாஸ்தவம்தான்..! அப்புறம் எப்படி இருக்காரு உன் அப்பா.. ஏதோ ஃபாரின் போயிருக்காராமே.. வெண்மதி சொன்னா.." ராஜேந்திரன் சொல்ல தேம்பாவணியின் கண்கள் வெண்மதியின் பக்கம் சென்று வந்தன..
"ஆ.. ஆமா.. ஃபாரின் போயிருக்காரு.. மகளை பிரிஞ்சு எப்படி நல்லா இருப்பார்.. என்னை ரொம்பவே நினைச்சுப்பாரு.. நிறைய மிஸ் பண்ணுவார்.. வரும்போது எனக்கு பிடிச்சதையெல்லாம் வாங்கிட்டு வருவார்.. அப்பா இல்லாமல் நான் எப்படி தனியா இருக்க போறேன்னு தெரியல.. இதுவரைக்கும் என் டாடிய பிரிஞ்சு நான் இருந்ததே இல்ல..!" உச் கொட்டி வருத்தப்பட.. வருண் அங்கு வந்து சேர்ந்திருந்தான்..
தேம்பாவணியின் பக்கத்தில் அமர்ந்துகொள்ள.. அவள் கண்கள் வெளிச்சத்தோடு விரிந்தன..
"எங்க போயிருந்தீங்க டாக்டர் சார்..?"
"ஒரு முக்கியமான வேலையா வெளியே போயிருந்தேன் சாப்ட்டியா..?" அத்தனை பேரின் மத்தியில் உரிமையாக அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான் வருண்..
"இதோ சாப்பிட்டுட்டே இருக்கேனே..!" இத்தனை நேரம் அவளிடம் இல்லாத புத்துணர்ச்சி இப்போது திடீரென வந்து ஒட்டிக்கொண்டதை வெண்மதி குறித்துக் கொண்டாள்..
"ம்ம்.. இன்னைக்கு காலேஜ் போக வேண்டாம்.. லீவ் எடுத்துக்க.. ஷாப்பிங் போகலாம் உனக்கு தேவையான பொருளெல்லாம் வாங்கிக்கோ.." என்றான் தட்டை எடுத்து வைத்து தனக்கு பரிமாறிக் கொண்டே..
"ஏன் தேம்பு.. நீ இங்க வந்த விஷயம் உன் அப்பாவுக்கு தெரியுமா.." ஒரு துண்டு இட்லியை வாயில் அடக்கி கொண்டே கேட்டாள் வெண்மதி..
தேம்பாவணி விடை தெரியாமல் விழிக்க.. "நான் பேசிட்டேன்..! இவ நம்ம வீட்ல இருக்கறதுல அவங்கப்பாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு சொல்லிட்டார்.." என்றான் வருண்..
"இவ புருஷன்..?"
"புருஷனா.." வருண் திரும்பி தேம்பாவணியை பார்க்க.. அவளோ.. "ஆமா எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு உண்மைய சொல்லிட்டேன்..!" என்றாள் அவன் காதோரமாக..
"ஆமா பெரிய மண்ணாங்கட்டி உண்மை.." உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டவன்..
'என்ன புருஷன்.. இவளுக்கு கல்யாணமே ஆகல.. இப்பதான் காலேஜ் படிக்கறா.. எதையும் யோசிக்க மாட்டியா வெண்மதி.." என்றான் காரமாக..
"எப்பா.. நானா கேட்கல அவதான் சொன்னா.. அன்னைக்கு ஓட்டல்ல பார்க்கும்போது உனக்கு கல்யாணம் ஆகிட்டதா நீதான சொன்ன.. இவன்கிட்ட சொல்லு தேம்பு.." என அவளையும் இழுக்க..
"ப்ச்..! அது ஏதாவது விளையாட்டுக்கு சொல்லி இருப்பா..! ஏய் எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா உனக்கு..! பாரு நீ சும்மா பொய் சொன்னதை அவங்க உண்மைன்னு எடுத்துக்கிட்டாங்க..!" வருண் அவள் தலையில் தட்ட தேம்பாவணி என்ன சொல்வதென்று தெரியாமல் திரு திருவென விழித்தாள்..
நல்ல வேளையாக முந்தைய இரவில் அவள் அணிந்திருந்த ஆடைக்கு சற்றும் பொருந்தாமல் தங்கத்தில் தகதகத்து கொண்டிருந்த அந்த தாலி செயினை.. "இது ஒன்னு தான் குறைச்சல்.. மாடர்ன் டிரஸ்ல இது மட்டும் என்ன பட்டிக்காடாட்டம்.. கழட்டி வீசு" என்ற சத்யா எரிச்சல் பட.. தாலியை கழட்டி ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்து விட்டு வந்தது நல்லதாய் போயிற்று..
"ஷாப்பிங் யார் யார் போறீங்க..!" வெண்மதி கேட்க..
"வேற யாரு நானும் தேம்பாவணியும்.." சட்டென அவன் சொல்லி விட்டதும் வெண்மதியின் புருவங்கள் உயர்ந்ததில்..
"என்ன கேள்வி இது..? நானும் திலோத்தமாவும் தேம்பாவணியும் போயிட்டு வருவோம்..!" என்று மாற்றினான் பிறகு..
"அப்ப நாங்க என்ன தக்காளி தொக்கா..! எங்களையும் கூட்டிட்டு போ.. இங்க வந்ததுலருந்து எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போனியா நீ.." வெண்மதியோடு ஜோடி சேர்ந்து பிள்ளைகளும் ஆமாம் நாங்களும் வருவோம் என்று குதித்தன..
"அட.. நீங்க எல்லாரும் இன்னொரு நாள் போய்ட்டு வாங்க.. ஏதோ முக்கியமான பொருளெல்லாம் வாங்கணும்னு சொல்றாங்களே.. அவங்க மூணு பேர் மட்டும் இன்னைக்கு போகட்டும்..!" சாரதா மற்றவர்களை அடக்கினாள்..
"திலோத்தமா வருவாளா தெரியலையே ஏற்கனவே தலைவலின்னு சொல்லிட்டு இருந்தா..!" வருண் திரும்பி திலோத்தம்மாவை கூர்ந்து பார்க்க.. நீ வர வேண்டாம் என்ற பார்வையின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டாளோ என்னவோ..
"தலைவலி இருக்கத்தான் செய்யுது.. ஆனா இந்த மாதிரி வெளியே வரும்போது கொஞ்சம் ரிலீஃபா ஃபீல் பண்ணுவேன்.. அதுவுமில்லாம ப்ரோக்ராம் எனக்காகத்தான்னு ரூம்ல சொன்னீங்களே..! போகும்போது அப்படியே இந்த பொண்ணையும் கூட்டிட்டு போகலாம்னு சொல்லிட்டு இப்ப ஏன் மாத்தி பேசறீங்க.. இவங்க எல்லாரும் நம்மள தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா..!" கேட்டுவிட்டு திலோத்தமா நாக்கை உள் பக்கம் சுழட்ட வருண் முகம் மாறினான்..
"ஓகே சீக்கிரம் கிளம்புங்க..! உங்க வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு நான் கிளினிக் போகணும்.." அவன் அவசரப்படுத்த திலோத்தமா தயாராவதற்காக அறைக்குள் சென்றாள்..
"நீ என்கூட வா.. உன் கிட்ட பேசணும்..!" உண்டு முடித்த தேம்பாவணியை கைப்பற்றி தனியாக இழுத்துச் சென்றான் வருண்..
அவர்கள் சென்ற பக்கம் தலை சாய்த்தபடியே கண்களை நகர்த்திக் கொண்டு சென்ற வெண்மதியிடம்.. "அப்புறம் நீ எப்ப ஊருக்கு கிளம்பறதா ஐடியா.. பசங்க ஸ்கூல் போகணும் இல்ல.." உளுந்த வடையை சாம்பாரில் குளிக்க வைத்து வாயில் திணித்துக் கொண்டே கேட்டார் ராஜேந்திரன்..
"இல்லப்பா இப்ப நான் ஊருக்கு போறதா இல்ல..!"
"என்ன..?"
"இந்த பொண்ணு இங்கிருந்து எப்ப கிளம்புதோ அப்பதான் நானும் போவேன்.. அம்மா இன்னும் ரெண்டு தோசை வை நிறைய விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டியிருக்கு.. எனக்கு எனர்ஜி வேணும்..!" என்றவளை பெற்றவர்கள் இருவரும் கலக்கமாக பார்த்தனர்..
கலக்கமோ கலகமோ.. கிட்டத்தட்ட நாரதரும் வெண்மதியும் ஒன்றுதான்..!
நாரதர் கலகம் தீமையில் முடிவதில்லை..
தொடரும்..

Last edited: