• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 18

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
ஒன்பது மாதங்களில் பிடிமானம் இல்லாமல் தத்தி தத்தி நடை பழகியிருந்த குழந்தையை காணக் கோடி கண்கள் வேண்டும்.. அத்தனை அழகு..

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்!!.. திருவள்ளுவர் கூற்று..

மழலைச் சொல்லுக்கு மயங்காத ஜீவன்களும் இவ்வுலகத்தில் உண்டோ!!.. உண்டு.. நம் தாண்டவன்.. திருவள்ளுவரின் கூற்றையே பொய்யாக்கியவன்..

டா.. டா.. டா.. என முளைத்தும் முளைக்காத முன்னிரண்டு பற்களுடன் சிரித்துக் கொண்டே தத்தி தத்தி நடந்து வரும் குழந்தையை அவனால் கண்டுகொள்ளாமல் செல்ல முடிகிறது என்றால் ஏதோ ஒரு சாபக்கேட்டினால் அவன் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் இரும்பினால் உருமாற்றப்பட்டிருக்க வேண்டும்..

ப்ரோக்ராம் செய்த ரோபோட் கூட குழந்தையோடு விளையாடும்.. இவனால் மட்டும் எப்படி கொஞ்சிக் கொண்டு ஓடிவரும் குழந்தையை அலட்சியம் செய்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள முடிகிறது.. பயங்கரவாதிகளுக்கும் கூட இது சாத்தியமில்லை.. அவர்கள் நெஞ்சிலும் கூட துளி ஈரம் இருக்கலாம்.. இவன் என்ன பிறவியோ.. யோசித்து யோசித்து உமாவிற்கு பைத்தியமே பிடிக்கும் நிலை.. ஒரு கட்டத்தில் இதைப் பற்றி யோசிப்பதையே விட்டு விட்டாள்.. ஆனபோதிலும் கண்முன் நடக்கும் அநியாயங்களை ஜீரணித்துக் கொள்ள முடிவதே இல்லை..

இதோ.. சிகப்பு நிற பூ போட்ட கவுனில் எத்தனை அழகு தன் குழந்தை.. மாலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி நெற்றியின் ஓரத்தில் திருஷ்டி பொட்டு வைத்து.. சுருள் முடிகளும் கொழுகொழுக் கன்னங்களும்.. தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து உணவின் உபயத்தில் புஷ்டியான உடல்வாகும் என செர்லாக் பேபியாக சிரித்துக் கொண்டிருந்த தேனமுதினியை கல்லூரி முடிந்து வந்த ஷ்ராவனி.. வாசலிலேயே கண்டு கவர்ந்து கொண்டு சென்று விட்டாள்..

இந்த வீட்டில் குட்டி ராஜகுமாரியோடு ஒரே கொண்டாட்டம்தான்.. நீ நான் என தூக்கி வைத்துக் கொள்ள ஒரே போட்டி..

ராஜேஸ்வரன் பிள்ளையை மடியில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்.. ஷ்ராவனி தன்னறைக்கு தூக்கிச் செல்ல நினைத்தாள்.. பகலவனோ குட்டியை சிரிக்க வைக்க முயன்று பப்பட் ஷோ காட்டிக் கொண்டிருந்தான்.. "பிள்ளையை ஏன் பாடா படுத்துறீங்க".. என்று பழக்கலவையை கூழாக்கி ஊட்டிக் கொண்டிருந்தாள் ரங்கநாயகி.. பிள்ளை அமுதின் சின்ன சின்ன செயல்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பூங்கவிதையாய்!!..

தன் பகுதியிலிருந்து இந்த ஆர்ப்பாட்டங்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த உமா தாயாக பூரித்துப் போனாள்.. அந்த வீட்டிற்கு மட்டுமல்ல பிறந்த வீட்டிற்கும் தன் மகள் தேட கிடைக்காத செல்வம் அல்லவா!!..

தாண்டவன் காரணமாக தன் மீதான வெறுப்பு பாசியாக படர்ந்திருந்த போதிலும் குழந்தை எப்போதும் செல்லம்தான் பிறந்த வீட்டில்..

தனஞ்செயன் அமுதாவால் பிள்ளையை பார்க்காமல் இருக்க முடிவதில்லை.. வாரத்திற்கு இரண்டு முறையோ மூன்று முறையோ வந்து குழந்தையை ஆசை தீர கொஞ்சி விட்டு செல்வது வழக்கம்.. இருவருக்கும் மகள் மீது வருத்தமே தவிர கோபம் அல்ல.. அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று ஆதங்கம் மட்டுமே.. அண்ணன்களின் பேச்சை மதிக்காது குழந்தையை தூக்கிக் கொண்டு வாசற்படி இறங்கிய அவள் மீது ஆரம்பத்தில் சின்ன மனஸ்தாபம் உண்டுதான் என்றாலும்.. எப்படி இருந்தாலும் அவள் கணவனோடு வாழ வேண்டியவள் தானே!!.. பொறுமையும் சகிப்புத்தன்மையும் நிச்சயம் ஒரு நாள் வெகுமதி கொடுக்கும்.. மகளின் ஆசைகள் நிறைவேறும் நாள் கூடிய விரைவில் வரும்.. நிச்சயம் தாண்டவன் மாறுவான் என்ற நம்பிக்கையோடு மனதை தேற்றி கொண்டனர்..

அண்ணிகளும் அடிக்கடி விஜயம் செய்வது உண்டு.. "பிள்ளையை நான் தூக்கிட்டு போறேன் ஒரு மூணு மணி நேரம் தாய்ப்பால் இல்லாம மேனேஜ் பண்ணிக்குவா இல்லையா!!".. என்று கார்த்திகா தேன் குட்டியை தங்கள் வீட்டுக்கு தூக்கி சென்று விட்டால் பிறகென்ன?.. அங்கு பட்டு கம்பள வரவேற்பு தான்..

மூன்று மணி நேரங்களில் விளையாடி சிரித்து களைத்துப் போன குழந்தை.. கார்த்திகாவின் தோளில் உறங்கியபடி தான் வீட்டுக்கு வரும்.. "பிள்ளைக்கு திருஷ்டி சுத்தி போட்டு எங்க கண்ணே பட்டுடுச்சு!!".. மறக்காமல் சொல்லிவிட்டு செல்வது வழக்கம்.. தமையன்மார்கள் தங்கையிடம் முறுக்கிக் கொண்டாலும் தாய்மாமன்களாக குட்டியிடம் அத்தனை பாசம்..

"ஒரு வயசு வரைக்கும் வெளியே எங்கேயும் அனுப்பாதம்மா.. அப்படியே அவங்க கூட்டிட்டு போக ஆசைப்பட்டாலும் நீயும் கூட போ!!".. ரங்கநாயகி அறிவுரைகளோடு பிள்ளைக்கு சுற்றி போடுவார்!!..

ஆக.. அனைவருக்கும் இவள் மண்ணிறங்கி வந்த தேவலோக இளவரசி.. அவன் ஒருவனைத் தவிர..

இதோ இன்று கூட.. குழந்தையை அழைத்துச் சென்று விளையாடி முடித்த கையோடு தாண்டவன் வருவதற்குள்.. "அண்ணா இன்னும் வரலையே!!.. நல்லவேளை".. என அவசர அவசரமாக.. கொண்டு வந்துவிட்டு ஓடியே விட்டாள் ஷ்ராவனி..

சாவி கொடுத்து ஓடிய வாத்து பொம்மையை எடுப்பதற்காக ஒரு காலை எடுத்து வைத்து ஊன்றி நிலைப்படுத்திக் கொண்டு பிறகு அடுத்த காலை எடுத்து வைத்து.. தடுமாறி தத்தித்தத்தி நடந்து வந்த குழந்தை.. வாசலை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த தாண்டவனை கண்டு டா.. டா.. டா.. டாடா.. என்று அழைத்துக் கொண்டு தந்தையை காணும் பரவசத்தில் வேகமாக நடந்து வர முயன்று இரண்டு முறை கீழே விழுந்து.. மீண்டும் எழுந்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அதைக் கூட தந்தையிடம் புகாராக கூற முயன்று.. இரண்டு கைகளை உயர்த்தியவாறு "நான் விழப் போகிறேன் சீக்கிரம் வந்து என்னை தூக்கிக் கொள்".. என்று அந்த குட்டி முகபாவணையில்.. பளிச்சென்ற கண்களும்.. குட்டி உதடுகளும் ஆயிரம் கதை சொல்லியதை உணர்ந்து கொள்ளாத தகப்பன் உலகில் இருப்பானா!!.. தந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் அருட்பெரும் பாக்கியம் அல்லவா.. வீட்டுக்கு போகணும்.. என் பிள்ளை வாசல்லயே நின்னு என்னை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கும் என்று எத்தனை தந்தைமார்கள் பெருமிதத்தோடு கூறுவதுண்டு..

இவன் மட்டும் ஏன் இப்படி!!.. உணர்ந்து கொண்டானோ என்னவோ.. கண்டுகொள்ளாதவன் போல்.. குழந்தையின் குட்டி விரல் நகம் கூட தன் மீது படாதவாறு.. மிக கவனமாக ஒதுங்கி சென்ற தாண்டவனை சமையலறையிலிருந்து நிலைத்த விழிகளும் வெறுப்பு படர்ந்த நெஞ்சமுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா..

எத்தனை முறை தன்னை திடப்படுத்திக் கொண்ட போதிலும்.. பெற்ற குழந்தையை ஒதுக்குவதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை அவளால்.. சட்டையை இழுத்து நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போல் துடிப்பு.. கேட்டு என்ன பலன்!!.. பதில் கிடைக்கும்.. அந்த பதில் நிச்சயம் இதயத்தை குத்திக் கிழிக்கும்..

"அப்பா என்னை தூக்கவில்லை என்று உதடு பிதுக்கி ஏமாற்றத்தோடு நிலைக்கதவை பிடித்து நின்று கொண்டிருந்த குழந்தையை ஓடி வந்து வாரியணைத்துக் கொண்ட உமா நெருப்பு விழிகளால் அவனை எரித்தாள்..

அவன் எங்கே கண்டு கொண்டான்.. பிரளயமே வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையோடு இருப்பவன் அல்லவா.. பூத்துண்டை தோளில் போட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்..

வழக்கம்போல உணவு.. அதிகாரம்.. ஏச்சுக்களும் பேச்சுக்களும்.. இன்று கொஞ்சம் அதிகம் தான்.. ஏனென்று புரியவில்லை.. நியாயமாக குழந்தையை ஒதுக்கி வைத்து அவன் இழைக்கும் அநீதிகளில் தான் தான் எரிந்துவிழ வேண்டும்.. புத்தியில் உரைக்கும்படி நாலு வார்த்தை நறுக்கென கேட்க வேண்டும்.. ஆனால் இவன் கோபப்படுகிறான்..

எங்கோ எதையோ வெளிப்படுத்த முடியாத ஆதங்கத்தை கோபத்தை தன் மீது காட்டுவது போல் தோன்றியது..

சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று அவள் நினைவில் வந்து போனது.. ராகவன் நீட் தேர்வுக்காக வெளியூர் செல்ல வேண்டிய தருணத்தில்.. தேவையில்லாமல் தன் மீதும் அம்மாவின் மீதும் எரிந்து விழுந்து கொண்டே இருந்தான்.. எதற்கெடுத்தாலும் திட்டினான் டென்ஷனாக இருந்தான்.. உமா பொறுமை இழந்து போனாள்.. எப்போதும் கலகலவென சிரித்து பேசி விளையாடும் அண்ணன் ஏன் இப்படி திட்டுகிறான் அவளுக்கே புரியவில்லை.. அம்மா இயல்பாக தான் இருந்தாள்.. சொல்லப்போனால் அவன் திட்டும் போதெல்லாம் தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்..

"ஏன் அம்மா.. அவன் அப்படி திட்டுறான்?.. உனக்கு கோபமே வரலையா!!.. அண்ணனை இழுத்து வச்சு நாலு அடி கொடுக்க வேண்டியது தானே!!".. ஆற்றாமையில் கேட்டு விட.. புன்னகை மாறாமல் அன்னை கூறிய பதில்..

"அவன் வெறுப்பில் பேசல டி பாசத்துல தான் அப்படி எரிஞ்சு விழறான்"..

"என்னமா உளர்றீங்க?"..

"பிறந்து வளர்ந்த இத்தனை நாள்ல ஒரு நாள் கூட குடும்பத்தை விட்டு பிரிஞ்சு தனியா எங்கேயும் போனதில்லை.. இப்ப புதுசா ஒரு இடத்துக்கு போய் தங்கணும்.. நம்மை விட்டு பிரிஞ்சு இருக்கணும்.. அம்மா இல்லாம தங்கச்சி இல்லாம அவனால இருக்கவே முடியாது.. அதை வெளிப்படையா ஒத்துக்கிட்டு அழுது ஆறுதல் தேட அவன் விரும்பல.. ஆம்பள பிள்ளைங்களுக்கே உரிய ஈகோ.. அந்தக் கவலை தான் கோபமா வெளியே வருது"..

"பாசத்தை வெளிப்படுத்த முடியலைன்னா கோபம் வருமா!!.. என்ன டிசைனோ!!.. இருந்தாலும் அண்ணனுக்கு நீங்க ரொம்பதான் இடம் கொடுக்குறீங்க!!".. சலித்துக் கொண்டு உதட்டை சுழித்து விட்டுசென்றது இன்றைக்கு ஏன் நினைவடுக்குகளில் வந்து நிற்கிறது என புரியவில்லை!!.. எதையோ யோசிக்க என்னவோ வந்து தொலைகிறது தலையில் அடித்துக் கொண்டாள்.. தாண்டவனின் எந்த அபவாத செயல்களுக்கும் தேடி தேடி நியாயம் கற்பிக்க அவள் விரும்பவில்லை..

"இருந்தாலும் நீ இவ்வளவு கோழையாக இருக்க கூடாது உமா.. இத்தனை பேர் சொல்றோமே?.. ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்..
உன்னை தாங்க குடும்பம் நாங்க இருக்கோம்.. அவன் வேண்டாமடி.. எந்த விதத்திலும் உனக்கு சரியானவன் இல்லை.. உன் அருமை அவனுக்கு தெரியல.. வந்துடு".. தனித்தனியாக மூளைச்சலவை செய்த போதிலும்.. நரகத்தின் எல்லைக்கே சென்று நின்றால் கூட அவன் தன்னை விட மாட்டான் என்பது ஒரு காரணமாக இருப்பினும் அதையும் தாண்டி கணவனை விட்டு விலகி வர முட்டுக்கட்டை போட்டு நிற்கும் ஏதோ ஒன்று..

அவனை விட்டு விலகி வர ஆயிரம் காரணங்கள் அவனுக்கு எதிராக உண்டு.. ஆனால் அவனை நீங்கி வர வழியில்லாமல் நிறுத்தி வைக்கும் ஒரே காரணம் இன்னதென்று தெரியவில்லை.. இனம் புரியாத மாய வலை.. கூண்டுக்குள் விரும்பியே அடைப்பட்ட பறவை.. "படிச்ச பொண்ணு நீ!!.. உன் சுயமரியாதையும் தன்மானமும் எங்க போச்சு உமா.. வீட்ல ஒரு சொல் தாங்குவியா!!.. எப்படி வளர்த்தோம் உன்னை!!".. அண்ணி கார்த்திகாவின் ஆதங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை..

"தயவு செஞ்சு இது தான் காதல்னு சொல்லி எங்களை வெறுப்பேத்தாத!!.. அப்புறம் கெட்ட கோபம் வரும்".. அன்று நந்தினி திட்டினாள்.. ஒருவேளை அப்படிதானோ?.. இத்தனை அநீதிகளுக்கு பிறகுமா அது இன்னும் அழியாமல் உயிரோடு இருக்கிறது.. என் குழந்தையை வெறுக்கும் ஒருவனை என்னால் காதலிக்க இயலுமா!!.. கிறுக்குத்தனமான கற்பனை!!.. பிறகு ஏன் அவனை நீங்கி வர மறுக்கிறாய்!!..

என்னை அவன் விட மாட்டானே!!.. கையோடு தூக்கிச் செல்லும் அலைபேசி போல் எங்கு போனாலும் என்னை இழுத்து வந்து விடுகிறான் நான் என்ன செய்வது?..

"ஹாஹா.. இது நோண்டி சாக்கு".. அனைவரும் சேர்த்து அடிக்கடி அவளை குழப்பி விட வேலை நேரத்தில் கேட்கும் FM போல் இப்படித்தான் விவாதங்கள் அடிமனதினில் நடந்து கொண்டிருக்கிறது..

எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வறட்சியாக சென்று கொண்டிருக்கும் அவள் நாட்களை தேன் துளிகள் போல் அவ்வப்போது சுவாரசியமாக்கி கொண்டிருக்கும் குட்டி ஜீவன் தேனமுதினி.. குழந்தையின் ஸ்ருங்கார சேஷ்டைகளில் மனம் லயித்துப் போகிறது.. சகலமும் மறந்து போகிறது.. பெரும்பாலான குடும்ப பெண்களின் நிலை இதுதானே.. மனதுக்குள் மறைந்து கிடக்கும் சஞ்சலங்களையும் தன்னை சுற்றி இழைக்கப்படும் அநீதிகளையும் குழந்தையின் முகம் பார்த்து மறக்க வேண்டியதாய் இருக்கிறது.. அவர்களுக்காக வாழ வேண்டி இருக்கிறது..

அன்று உமா சமையலறையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள்.. டயட் ஆரம்பமாகிவிட்டதால்.. முருங்கைக் கீரை ராகி அடையும்.. பூண்டு வாசனையோடு தேங்காய் சட்னியும் வேண்டுமாம்.. பத்து அடை தட்டி போடுவதற்குள் இடுப்பு உடைந்து போகிறது..

டயட் என்றால் உணவை குறைப்பது தானே!!.. இங்கே எல்லாமே எதிர்மாறு..

உமா இந்த வீட்டில் காலெடுத்து வைத்த நாளிலிருந்து அன்பு என்ற ஒன்றைத் தவிர அவன் உடலில் அனைத்து சுரப்பிகளும் அமோகமாக தூண்டப்பட்டிருக்கிறது.. உணவிலும் சரி படுக்கையிலும் சரி வெரைட்டி தேவைப்படுகிறது அவனுக்கு.. மற்றபடி அவன் ஒரு மரத்துப்போன ஜென்மம்..

குட்டி பாப்பா உறங்கிக் கொண்டிருந்தாள்.. காலையில் அவள் நேரம் கழித்து எழுவது கொஞ்சம் வசதி தான்.. அதற்குள் வேலைகளை முடித்து விடலாம்.. இல்லையேல் அம்மா அம்மா என்று இடுப்பில் ஏறிக்கொண்டு நை நை என்று இனிய தொந்தரவுகள்தான் .. காலையிலேயே புடவையை பிடித்து இழுப்பாள்.. பசியாற்ற எங்கு சென்று அமர்ந்தாலும் பூனை ஒன்று பால் வாசனைக்கு அவளையே சுற்றி சுற்றி வரும்.. அதனோடு.. அவனோடு ஒரு அரைமணி நேரம் மல்லுகட்ட வேண்டும்.. ஆரம்பித்து வைத்த மகராசி அவள் பாட்டுக்கு பொம்மையோடு விளையாட சென்றுவிட அதன்பின்னான தருணங்களில் இவள் அவன் கைபொம்மையாகிப் போவாள்..

"ம்மாஆஆ.. ம்மாஆஆ".. என்று கண்ணை கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்த பிள்ளையை சத்தம் கேட்ட ஒரு நொடியில் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் கண்ணாடி பார்த்து தன் சிகையை கோதி சரி செய்தான்..

"ஏய் உமா.. நேரமாச்சு.. என்னடி செய்ற?.. டிபன் ஆச்சா இல்லையா!!". அவன் கத்திக் கொண்டிருக்க.. உறக்க கலக்கத்தில் கட்டிலிலிருந்து கீழே இறங்க முயன்ற குழந்தை தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.. கற்சிலை போல் நின்று பார்த்து கொண்டிருந்தானே ஒழிய அசையவில்லை அவன்..

"ம்மா.. ம்மா".. என்று அழைத்துக் கொண்டிருந்த குழந்தை கரிகாலன் கால் போல் மரமாக நின்ற கால்களை கண்டவுடன் "டாடா.. டாடா".. என்றபடி வழுக்கி கொண்டு செல்ல அதிவேகமாக குழந்தையின் தலை தரையோடு மோதும் நேரம்.. ஒரே எட்டில் பாய்ந்து பிள்ளையை தாங்கிப் பிடித்திருந்தான் தாண்டவன்..

தொடரும்..
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
107

Idhukkum avala thittama irundha seri....
 
Member
Joined
Apr 7, 2023
Messages
31
👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Sep 14, 2023
Messages
117
Thandavana🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 unamiyaa than irukum.......👍
 
New member
Joined
Jan 21, 2024
Messages
4

Superb
 
Top