- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
"மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு அக்கா.." இடுப்பளவு மதில் சுவரை தாண்டி அந்த பக்கம் நின்றிருந்த ரங்கநாயகியிடம் கண்ணீரோடு சொன்னாள் மாதவி..
"என்னடி சொல்ற..?" அரிசி கழுவிய தண்ணியை செடிகளில் வீசி ஊற்றிவிட்டு அதிர்ச்சியோடு நின்றாள் ரங்கநாயகி..
"ஆமா.. அந்த பொண்ணு கூட பைக்ல போறதை நானே பார்த்தேன்..!! நேத்து ராத்திரி வீட்டுக்கு கூட வரல.." பேச முடியாத அளவிற்கு குரல் தழுதழுத்தது..
"அடக்கடவுளே.. என்னால நம்பவே முடியலையேடி.. நகமும் சதையுமா பின்னி பிணைஞ்சு கிடந்தீங்களே.. என் கண்ணே பட்டுரும்னு திருஷ்டியெல்லாம் எடுத்தேனே.. என்னடி வந்துச்சு திடீர்னு.. நல்லாத்தான் இருந்தான் உன் புருஷன்.. வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு அழாதடி.. ஒருவேள நீ வேற யாரையாவது பார்த்துருக்கலாம்..!! அந்த மானங்கெட்டவதான் ஊரிலேயே இல்லையே.. ஏதோ அவ மாமியார் வீட்டுக்கு போய் தங்கியிருக்கிறதா கேள்விப்பட்டேன்.."
"இல்லக்கா.. அவங்கதான்.. ஜோடியா பைக்ல போனாங்க.. ரொம்ப நெருக்கமா அவளோட கை அவரோட தோள் மேல இருந்துச்சு.. இதுதான் அக்கா உண்மை.. நடுவுல அவர் மனசு மாறினது பாசம் காட்டினது எல்லாமே பொய்.. ஒண்ணு கனவா இருக்கணும்.. இல்லனா அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கணும்.. நிலைகுத்திய விழிகள் விரக்தியோடு எங்கேயோ வெறித்தது..
ரங்கநாயகி பேச்சற்று வேதனையோடு பார்த்தாள் அவளை..
"அக்கா.. ஆரம்பத்தில் அவர் என்னை மனுஷியாக கூட நடத்தல.. தன்மானத்தை இழந்து அவர் கூட வாழவே கூடாதுன்னு முடிவெடுத்து பிரிஞ்சு போன பிறகு.. திடீர்னு வந்தாரு.. திருந்திட்டேன்னு சொன்னாரு.. என்னை மகாராணி மாதிரி பார்த்துக்கிட்டார்.. நீதான் எனக்கு எல்லாம்.. உன் மேல வச்சிருக்கற காதல் மட்டும் தான் உண்மைன்னு என்னை உணர வைச்சார்.. அவர் கண்ணுல நான் வேற ஒரு வாழ்க்கையை பார்த்தேன்க்கா.. நம்பினேன்.."
"இ.. இப்ப மறுபடி என்னை விட்டுட்டு அவளோட போய்ட்டார் .. என்னால தாங்கிக்கவே முடியலைக்கா.." என்று வார்த்தைகள் தடைபட்டு அழுதவளை இயலாமையோடு பார்த்தாள் ரங்கநாயகி..
"மாதவி.. அழாதேம்மா.."
"அந்த அன்பு கிடைக்காம போயிருந்தா கூட நான் இவ்வளவு வருத்தப்பட்டு இருக்க மாட்டேன்.. அளவுக்கு அதிகமான பிரியம் கிடைச்சு அதை இழந்தா எவ்வளவு வலி தெரியுமா.. முடியலைக்கா.." தளர்ந்து போனவளாய் பேசினாள் அவள்..
"கலங்காதே மாதவி.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது.. உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா தான் நடக்கும்.. உன் புருஷன் உன்கிட்ட அவ்வளவு பிரியமா இருந்ததை நானே கண்கூடா பார்த்துருக்கேன்.. அவர் திரும்ப அப்படி நடந்துக்க வாய்ப்பே இல்லையே.. என் காதல் உண்மைன்னு அவரே சொன்னாரு இல்ல.. அப்புறம் ஏன் பயப்படுற..? வந்ததும் என்னென்ன விசாரி.." என்றாள் ரங்கநாயகி..
ரங்கநாயகியின் ஆறுதல் மாதவியை எந்த விதத்திலும் சமாதானப்படுத்தவில்லை.. இரண்டு பேரும் ஜோடியாக பைக்கில் வலம் வந்ததை நேரடியாக பார்த்து விட்டாளே..
"ஹலோ ஹரி.." அவளே அழைத்திருந்தாள்..
"சொல்லுமா.." குரலில் ஒன்றும் வித்தியாசம் தென்படவில்லை அதே அன்பு அதே குழைவு..
"எங்க இருக்கீங்க..?"
"ஒரு முக்கியமான வேலையாக வெளியே இருக்கேன்.. இன்னைக்கும் என்னால வீட்டுக்கு வர முடியாது..!! கவனமா இருந்துக்கோ.. முடிஞ்சா உங்க அம்மா வீட்டுக்கு போயிடு.."
"என்னங்க நான் சொல்றதை கொஞ்சம்.." முடிப்பதற்குள் அழைப்பை துண்டித்திருந்தான்..
"அத்தை.. ரோஷினி திரும்ப வந்துட்டாளாமே.. உங்க சின்ன மகனையும் அவளையும் ஒண்ணா பார்த்ததா என்கிட்ட ரெண்டு மூணு பேர் வந்து சொன்னாங்க.."
"போகட்டும் விடுடி.. இந்த வக்கத்த சிறுக்கியை விட அந்த வசதியான பொண்ணு கூட ஓடி போய் வாழ்ந்தாகூட சந்தோஷம்தான்.. என்ன ஆட்டம் போட்டா இவ.. என் பிள்ளையை மயக்கி எனக்கு எதிராவே திருப்பி விட்டுட்டா.. கடவுள்ன்னு ஒருத்தன் இருக்கான்.. இல்லைனா இவ தலையில இடி விழற மாதிரி ரோஷினி திரும்ப வந்திருப்பாளா.. என்ன இருந்தாலும் என் புள்ளையால அவளை மறக்கவே முடியாது.. அஞ்சு வருஷமா காதலிச்சாங்களே..!!"
"அப்போ இந்த மாதவிய கண்ணுக்கு கண்ணா பார்த்துக்கிட்டது.. நகை நட்டு துணிமணி வாங்கி கொடுத்து கொலு பொம்மை மாதிரி வைச்சிருந்தது.. நம்மகிட்ட விட்டுக் கொடுக்காம பேசினது? இதெல்லாம் பொய்யா அத்தை..?"
"அப்படித்தான் இருக்கணும்.. எல்லாம் இவளை விட்டுட்டு போறதுக்கான லஞ்சமா இருக்கும்.. அவனுக்கும் மனசாட்சி இருக்குமில்லடி.. இவளுக்கு துரோகம் பண்றோமேன்னு குற்ற உணர்ச்சியா இருந்திருக்கும்.. செய்ய வேண்டியதை செஞ்சு விட்டுட்டா பிரச்சனை இல்லல்ல.. அதனால கேட்டதெல்லாம் வாங்கி தந்து வாயை அடைச்சிருப்பான்.."
"என்ன அத்த பேசுறீங்க.. உங்க பையனோட குழந்தை மாதவி வயித்துல வளருது..!!"
"அடி போடி.. அது என் குழந்தை இல்லைன்னு அன்னைக்கு அவனே சொன்னானே..? சரிதாவிடம் அலட்சியம்..
"அது கோபத்துல சொன்னதுன்னு உங்க மகன் ஒத்துக்கிட்டாரே.."
"அதென்னவோ எனக்கு தெரியாது.. இவகிட்ட ஏதோ தப்பு இருக்கிறதுனாலதான் என் புள்ளையால இவ கூட பொருந்தி வாழ முடியல.. பழைய காதலியை ஒருத்தன் விடாம தேடுறான்னா என்ன அர்த்தம்.. அவனுக்கு பொண்டாட்டி கிட்ட இருந்து எந்த சந்தோஷமும் கிடைக்கலன்னு அர்த்தம்.."
"பாவம் அத்தை மாதவி.." இது பரிவு அல்ல.. சரிதாவின் போட்டு வாங்கும் திறமை..
"ஏன்டி கல்யாணத்துக்கு முன்னாடி எந்த ஆம்பளைதான் காதலிக்கல.. கல்யாணத்துக்கு பிறகு மனைவியோட சந்தோஷமா வாழறது இல்லையா.. ஆனா என் புள்ளையால இவ கூட சந்தோஷமா வாழவே முடியலையே.. ரோஷினியைத்தான் அவன் மனசு தேடுது.. அவனுக்கு எது சந்தோஷமோ அதை செஞ்சுட்டு போகட்டும்.. இடையில நான் தலையிட விரும்பல.."
"அத்தை.. புரியாம பேசாதிங்க.. அடுத்தவன் பொண்டாட்டி அந்த ரோஷினி.. அவ வீட்டாளுங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க புள்ளைய கிழிச்சு நார் நாரா போட்டவங்க.. இப்போ இன்னொருத்தன் பொண்டாட்டியை களவாட நினைச்சா விட்டுடுவாங்களா.. வீடு புகுந்து வெட்டுவாங்க.." சரிதா சொல்ல ஜெயந்தியின் முகம் வெளிறி போனது..
"என்னடி பேசற..? அவங்க ரெண்டு பேரும் எடுக்கற முடிவுக்கு நாம எப்படி பொறுப்பாக முடியும்..?"
"முடிவு அவங்க எடுத்தாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்.. ஒழுங்கா உங்க மகனுக்கு அறிவுரை சொல்லி திருத்தற வழிய பாருங்க.. வீடு கட்டி முடியற நிலையில் இருக்கு.. இந்நேரம் ஏதாவது பிரச்சனை வந்தா அது நம்ம குடும்பத்துக்கு நல்லதுக்கு இல்ல.."
"அவன் பண்ற வேலைக்கு நான் என்னடி செய்ய முடியும்.. என்னால அவன் கிட்ட போய் பேச முடியாது.. ஊசி குத்துற மாதிரி நறுக்கு நறுக்குன்னு பேச்சால தாக்கறான்.. அவன் முன்ன மாதிரியே இல்லை.. என்னவோ செய்யட்டும்.. அவன் சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.."
பெரிய மருமகளும் மாமியாரும் பேசிக் கொண்டிருப்பதை மாதவி கேட்க நேர்ந்தது.. மனதோரம் தாள முடியாத வலி.. கணவனைப் பற்றிய கவலை ஒரு புறம் என்றால் மாமியாரின் இந்த பேச்சில் மனம் கசந்து போனாள்.. மகன் சந்தோஷமாக வாழ்வது இரண்டாம் பட்சம்தான்.. ஆனால் ஹரி தன்னை சந்தோஷமாக வைத்திருப்பது ஜெயந்திக்கு பிடிக்கவில்லை.. வயிற்றெரிச்சல்.. இல்லாதப்பட்ட மருமகள் என்பதில் அத்தனை வெறுப்பு.. ஏதோ ஜென்ம பகையாளி போல்..
அவசரத்திற்கு கிடைத்த இன்ஸ்டன்ட் மருமகள் ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்பதாக கசந்து போய்விட்டாள்..
இதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை.. துணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள்..
ஜெயந்தியும் சரிதாவும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட போகாதே என்றும் சொல்லவில்லை.. எங்கே போகிறாய் என்றும் கேட்கவில்லை.. ஹரி விஷயம் அவளுக்கு தெரிந்திருக்க கூடும்.. அதனால் தான் வீட்டை விட்டு செல்கிறாள் என்று அவர்களாகவே தங்களுக்குள் பேசிய யூகித்துக் கொண்டார்கள்.. அதே விஷயத்தை அக்ஷயாவிற்கும் சுவாரசியம் குறையாமல் கடத்தினாள் ஜெயந்தி..
பெட்டி படுக்கையோடு மகள் வந்திருப்பதில் மீண்டும் அடி வயிறு கலங்கியது கீதாவிற்கு..
"மாப்பிள்ளை எங்கடி ரெண்டு நாளா ஃபோன கூட எடுக்கல.. புள்ளைங்க கிட்டயும் பேசலையாம்.. உன்கிட்ட ஏதாவது சொன்னாரா?" ஆரம்பத்திலேயே நெஞ்சை பிடித்துக் கொண்டு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்..
"அவருக்கு ஏதோ முக்கிய வேலை.. வீட்டுக்கு வர இன்னும் மூணு நாள் ஆகுமாம்.. அங்க இருந்தா தோதுபடாதுன்னு அம்மா வீட்டுக்கு போய் தங்கிடுனு அவர்தான் போன்ல சொன்னாரு.." கணவன் ஃபோனில் சொன்னதை அப்படியே சொன்னாள்..
"அப்படின்னா சரிதான்.. விசாரணை முடிந்து வீடு இயல்பானது..
விசாரணை என்று சொல்லிவிட முடியாது ஒரு மாதிரியான பதைபதைப்பு.. மகளின் நல்வாழ்க்கை குறித்த கலக்கம்.. அவள் தன் மருமகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தே ஆக வேண்டும்.. எப்பாடுபட்டாவது வாழ வைப்பேன்.. என்பதைப் போல் ஒரு துடிப்பும் தவிப்பும்.. குடும்ப சூழ்நிலை.. ஊர் பேச்சு.. சமுதாய பார்வை.. என பலவித சுழல்களில் சிக்கி தவிக்கும் சராசரி தாய்.. வெளியேற துடிக்கும் மாதவியின் தலையையும் இழுத்து உள்ளே அழுத்துவதுதான் கொடுமை..
முடிந்தவரை துயரத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.. இரண்டாம் முறையும் ஏமாற்றம்.. பழகிவிட்டது போலும்..
ஆனாலும் நம்ப வைத்து ஏமாற்றுவதா.. நல்லவனாக நடித்து கழுத்தறுப்பதா.. ஹரி அப்படிப்பட்டவனா..? ஹரி நம்பிக்கை துரோகியா.. ஆமாம்.. இல்லை என்று பவவிதங்களில் மனம் கதறி அழுகிறாள்..
முன்பான காலங்களில் ஹரி பச்சை துரோகி.. மனசாட்சி இல்லாத அரக்கன் என்று அடித்து சொல்லி குமுறிய உள்ளம் இப்போது அவன் குணம் புரியாமல் தடுமாறுகிறது..
இனி நிரந்தரமாக தாய் வீடு தானா..? ஹரி வந்து சொல்லட்டும்.. அதுவரை அவசரப்படாமல் இரு.. தனக்குள் தெளிவடைய முயற்சிக்கிறாள்..
முக்கிய வேலை மூன்று நாளில் வந்து விடுவேன் என்றாரே.. வரட்டும் பேசிக் கொள்ளலாம்.. என்ன ஏதென்று அவன் தானே சொல்ல வேண்டும்..!!
சில நேரங்களில் இருதலைக்கொல்லி எறும்பாக இரண்டு பக்கங்களிலும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறாள்..
மூன்று நாட்கள் எப்படி மின்னல் வேகத்தில் ஓடியதென்று தெரியவில்லை..
நான்காம் நாள் அவன் கணவன் வந்து சேர்ந்திருந்தான் புன்னகை முகத்தோடு.. அதே அன்பு.. அதே கருணை அதே பிரியம்..
பைக்கில் வந்து இறங்கியவன்.. "மாமாஆஆ" என்று ஓடிவந்த பிள்ளைகளையும் மாமியாரையும் பொருட் படுத்தும் நிலையில் இல்லை..
"மாதவி எங்கே அலைப்புறும் கண்களோடு தேடி.. ஓட்டமும் நடையுமாக உள்ளே நுழைந்து துணி மடித்துக் கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அணைத்துக் கொண்டான்.. அடுத்தென்ன.. முகமெங்கும் முத்த மழைதான்.. இச்.. இச்.. வாய் வலிக்க வலிக்க சத்தமும் முத்தமும்..
"மை கண்மணி.. மிஸ்டு யூ சோமச்.." கிறக்கினான் அவன்..
"என்ன பண்றீங்க.. விடுங்க குழந்தைங்க இருக்காங்க.."
"அவங்க வெளியே நிக்கிறாங்க.. கொஞ்ச நேரம் அப்படியே இருடி.." இறுக அணைத்து ஏழு நாள் தவிப்பை தீர்த்துக் கொண்டான் ..
இந்த நேசம் எப்படி பொய்யாகும்.. ஒருவேளை நானும் வேண்டும் அவளும் வேண்டுமோ.. இரட்டை குதிரை சவாரி செய்ய நினைக்கிறானா..?
"விலகி நில்லுங்க அம்மா வந்துருவாங்க.." அம்மா தங்கையை சாக்கிட்டு அவனிடமிருந்து தள்ளி நின்றாள்..
சுரத்தில்லாத அவள் முகம் பார்த்து மனம் குன்றினான் ஹரி..
"என்னடி.. எத்தன நாள் கழிச்சு வந்துருக்கேன்.. உன் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லையே..!!" ஏமாற்றத்தோடு கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்..
"உங்களுக்கு என்னைவிட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும்போது என்னால எப்படி சந்தோஷப்பட முடியும்.." அவள் ஊடுருவும் பார்வையில் ஹரி தடுமாறுவதாய் தோன்றியது.. இதயத்தில் ரத்தம் கசிவதாய் உணர்ந்தாள்..
"வேலைனா பார்த்து தானடி ஆகணும்.. நமக்காக.. நம்ம குழந்தைக்காக உழைக்கனுமே.."
"பொய்.. பொய்.. பொய்.." மனம் அவறியது..
"அப்புறம் எப்படி இருக்கு என் புஜ்ஜி குட்டி.." அவள் வயிற்றைத் தொட்டு நின்று அசந்த நேரத்தில் மாதவியின் இதழில் முத்தமிட்டிருந்தான்..
"ப்ச்.. என்ன பண்றீங்க..?" எரிந்து விழுந்தாள் மாதவி..
"என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கறேன்.. எத்தனை நாள் ஆச்சுடி உன்னை கிஸ் பண்ணி.. இங்க பாரு காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு.." அவள் கரம் பற்றி கழுத்தை தொட்டுப் பார் என ஏக்கத்தோடு மோகத்தோடு மனைவியோடு ஒட்டி உறவாடினான்.. நிதானம் தவறிய அவன் நெருக்கத்தில் சங்கடமாய் உணர்ந்தாள் மாதவி..
"கொஞ்சம் விலகி நில்லுங்க.. பவி.. ருத்ரா வந்துட போறாங்க.. சின்ன குழந்தைங்க மனசுல எதுவும் பதிஞ்சுட கூடாது.." இப்படி சொல்லி அவனை இரண்டடி தள்ளி நிறுத்த வேண்டியதாய் இருந்தது..
கட்டிலில் குவித்து போட்டிருந்த துணிமணிகளை மாதவி மடித்துக் கொண்டிருக்க அதே கட்டிலில் அமர்ந்து.. அவளிடம் ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் ஹரி.. எதற்குமே அவளிடமிருந்து சரியான பதில் இல்லை..
"ஏன் மாதும்மா என் மேல கோவமா..? கழுத்து வரைக்கும் வேலை கண்ணம்மா.. இல்லைனா உன்கிட்ட பேசாம இருப்பேனா.. வீட்டுக்கு வந்த பிறகு ஒரு வாரம் எங்கேயும் போகாம உன்னை கொஞ்சி தீத்துடனும்னு முடிவோடதான் வந்து இருக்கேன்.." என்றவனை பார்த்து அர்த்தமாக சிரித்தாள்..
"நான் இன்னும் ஒரு வாரம் இங்க இருந்துட்டு வரட்டுமா..?" அவள் கேள்வியில் ஹரியின் முகம் மாறியது..
"என்ன சொல்ற..? எவ்வளவு ஆசைகளோட உன்னை தேடி ஓடி வந்துருக்கேன்.. அதே ஆசையும் ஏக்கமும் உனக்கு இல்லையா.. ஒரு வாரம் இங்கே இருக்க போறேங்கிற..? என் வீட்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா..?"
"ப்ச்.. அவங்க சொல்றதையெல்லாம் நான் பொருட்படுத்தறதே இல்ல.. மரத்துப் போச்சு.." என்றாள் விரக்தியாக..
"வேற என்னடி..!! எதுவா இருந்தாலும் உடைச்சு பேசு.. நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன்.. உன் முகமே சரியில்ல.."
"ஒன்னும் இல்ல விட்டுடுங்க.."
"சரி விட்டுடறேன்.. ஆனா புறப்படு.. நம்ம வீட்டுக்கு போகலாம்.. எனக்கு உன் கூட தனியா இருக்கணும்..!! ஒரு வாரத்துல உடம்பு மனசும் உன்னை அதிகமாக தேடுது.. பைத்தியக்காரன் மாதிரி உன்னை தேடி ஓடி வந்துருக்கேன்.. நீ என்னடான்னா என்னை கொஞ்சம் கூட சட்டயே பண்ண மாட்டேங்குற.."
"நல்லா தேன் மாதிரி பேசுறீங்க..!!" அவள் உதடுகள் வளைந்தன..
"தேவாமிருதம் மாதிரி பொண்டாட்டி பக்கத்துல இருக்கும்போது பேச்சு தேனாத்தான் வரும்.."
"மாதுகுட்டி.. வா இப்படி வந்து என் பக்கத்துல உக்காரு.." அவள் கைப்பற்றி மென்மையாக இழுத்தான்..
"இருங்க.. அடுப்புல குழம்பு கொதிக்குது.. என்னன்னு பாத்துட்டு வரேன்.." மெதுவாக அவனிடமிருந்து நழுவி சமையலறையை நோக்கி சென்ற மனைவியை வெறித்தான் ஹரி..
இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை.. சமையலறையில் வந்து நின்று அவள் முகத்தை நிமர்த்தி உற்றுப் பார்த்தான்..
"உடம்பு சரியில்லையா தங்கம்.."
அவன் கரத்தை விலக்கி விட்டாள்.. "மனசு தான் சரியில்ல.."
"என்னடா? ஏதாவது சொன்னாதானே தெரியும்..!!" இப்படி உருகி உருகித்தான் என்னை கொன்றுவிட்டான்..
மாதவி அமைதியாக நின்றாள்.. சொல்லத்தான் வேண்டும்.. கேட்கத்தான் வேண்டும்.. ஆனால் இங்கே முடியாது.. பேச்செடுப்பதற்கு முன்பே கண்ணீர் பெருகுகிறது.. அம்மா பார்த்து விட்டால்?.. தங்கைகள் கேட்டுவிட்டால்..?
அவள் உதடுகள் துடிப்பதை பார்த்து விட்டான் ஹரி.. அவள் கன்னம் பற்றியிழுத்து இதழை அழுத்தமாக கவ்விக் கொண்டான்..
காதல் பசியும்.. தாகமும்.. பிரிவின் வலியும் அவன் முத்தத்தின் வேகத்தில் தெரிகிறது.. வறண்டு போயிருக்கிறானாம்.. எத்தனை அழுத்தமான.. முரட்டுத்தனமான முத்தம்.. மாதவி திமிறினாள்.. இயலாமையுடன் அவனுள் அடங்கினாள்..
"போதும் விடுங்க.." இருவரும் விலகிய நேரம் கீதா உள்ளே நுழைந்திருந்தாள்..
"நல்லவேளை மாப்பிள்ளை நீங்க வந்துட்டீங்க.. மாதவி நீங்க இல்லாம ரொம்பவே கவலைப்பட்டு போயிட்டா.. குழந்தைங்க வேற மாமா எங்க மாமா எங்கன்னு என்னை ஒரு வழியாக்கிட்டாங்க.."
என்றபடியே பொரியலுக்கு நறுக்க வேண்டிய காய்கறிகளை எடுத்து வைத்தாள்..
"வேலை அத்தை.. மூச்சு விட கூட நேரமில்லை.. இல்லைன்னா பேசி இருக்க மாட்டேனா?" அந்த அடுப்பு திண்டின் மீது சாய்ந்து நின்றான்..
"புரியுது மாப்பிள்ள.. வயித்து புள்ளத்தாச்சி இல்லையா.. உங்களத்தான் அதிகமா தேடுறா.. இனிமே எவ்வளவு வேலை இருந்தாலும் அடிக்கடி அவ கிட்ட போன் பண்ணி பேசிடுங்க.. என்னவோ நீங்க இல்லாம ரொம்ப வதங்கி போய்ட்டா.." கீதா சொல்ல ஹரி தலை சாய்த்து மாதவியை பார்த்தான்.. இதுதான் பிரச்சனையா என்பதைப் போல் அவன் பார்வை..
கீதா அனைவருக்கும் சேர்த்து சமைத்திருந்தாள்.. உணவருந்தி விட்டுச் செல்லலாம் என்று கீதா வற்புறுத்தி இருவரையும் நிற்க வைத்திருந்தாள்..
ஹரி வீட்டுக்கு போக துடித்துக் கொண்டிருந்தான்.. ஒரு கூடம் ஒரு சமையலறை உள்ள வீட்டில் தாராளமாக காதல் செய்ய முடியவில்லை.. தவித்துப் போகிறான்..
சாப்பிடும் போது மனைவியின் கரத்தை பற்றி கொண்டு அவளை அடிக்கடி ஆழ்ந்து பார்த்தான் ஹரி..
"அடடா இது என்ன ஓவர் லவ்ஸா இருக்கு.." பவித்ராவும் ருத்ராவும் ஒரே கேலி..
'ஏய் சும்மா இருங்கடி.. அமைதியா சாப்பிடுங்க.." கீதா அதட்டினாள்..
அடிக்கடி ஹரியின் பார்வை மாதவியை மோதி செல்வதில் அவன் எண்ணங்களை புரிந்து கொண்டிருந்தார் கீதா..
பவித்ரா ருத்ரா இருவரும் வளவளவென்று பேசிக்கொண்டு செல்ல நாய்க்குட்டிகள் போல் மாமனையே சுற்றிவர.. அவர்களை அடக்கி.. "மாமா இன்னொரு நாள் வருவார்.. அப்போ பேசுங்க.. இப்போ அவங்க வீட்டுக்கு போகட்டும்.." என்று சூழ்நிலைக்கேற்ப உதவி செய்தார்..
மாதவிக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது.. வெளிப்படையாக எதையும் இங்கே கேட்க முடியாது.. அழ முடியாது.. கதற முடியாது.. கத்த முடியாது.. அதற்காகவாவது புகுந்து வீட்டிற்கு சென்றுதான் ஆக வேண்டும்.. குறைந்தபட்சம் வழியில் தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று தன் மனக்குமுறல்களை கொட்டி தீர்க்க வேண்டும்.. என்ற எண்ணத்தோடு அவளோடு போக சம்மதித்து அமைதியாக இருந்தாள்..
இருவருமாக தயாராகி வெளியே வந்தனர்.. ஹரியின் பைக்கை பார்த்தாள் மாதவி..
அந்த பின் இருக்கையில் ரோஷினி உட்கார்ந்து ஏளனமாக சிரித்து கொண்டிருப்பதாக பிரமை..
முன்பு எப்படியோ..!! இப்போது அங்கே அமரப் பிடிக்கவில்லை.. ஆத்திரம் மூளுகிறது.. ஒரு பெரிய கடப்பாறையால் அந்த இருக்கையை குத்தி பஞ்சு பஞ்சாய் கிழித்து வீசி எறிய மனம் கொதிக்கிறது..
"நான் ஆட்டோல வரேன்" என்றாள் ஒரே வார்த்தையாக.. அனைவரின் பார்வையும் அவள்பக்கம் வினோதமாக திரும்பியது..
"ஏன் மாது.. என்ன ஆச்சு?" ஹரி கேட்டான்..
"இல்ல.. என்னால பைக்ல வர முடியாது.. இடுப்பெல்லாம் வலிக்குது.. ஒரே பொசிஷன்ல பைக்ல உட்கார முடியாது.. ப்ளீஸ் நான் ஆட்டோல வரேன்.." என்று ஒரேடியாக மறுத்து விட..
"சரி, இங்கே இரு.. நான் ஆட்டோ பிடிக்கிறேன்.." என்று ஐந்தே நிமிடங்களில் ஆட்டோவில் வந்தான்..
அவள் ஆட்டோவில் ஏறிக்கொள்ள.. பைக்கோடு ஆட்டோவை பின்தொடர்ந்தான் ஹரி..
ஆட்டோ சத்தத்தில் ஜெயந்தி வாசலை எட்டிப் பார்த்தார்.. மாதவி இறங்கினாள்.. பைக்கில் வந்த ஹரி ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு மாதவியோடு ஜோடியாக நடந்து உள்ளே வந்தான்..
திகைத்த பார்வையோடு "என்ன இவள கூட்டிட்டு வர்றான்.. அப்ப ரோஷினி? இந்த பையனுக்கு என்னதான் வேணும்.. ஒன்னும் புரியலையே.. மர்ம நாவல் மாதிரி புரியாத புதிரா இருக்கானே.." தலை சுற்றியது ஜெயந்திக்கு..
தொடரும்..