- Joined
- Jan 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
இந்த வீட்லயும் நான் தனியாத்தான் இருக்கணுமா..! தேம்பாவணி தன் தனியறையை பார்த்து பெருமூச்சு விட்டபடி வருணிடம் கேட்டாள்..
"இங்கதான் இத்தனை பேர் இருக்கோமே..! எங்களை மீறி என்ன வந்துட போகுது..?"
"என்னால தனியா இருக்க முடியாது டாக்டர் சார்..!" அவள் உதடு சுழித்து சலித்தாள்..
"கவலப்படாதே, நீ தூங்கற வரைக்கும் நான் உன் கூடவே இருப்பேன்.."
"எப்படி..? வீடியோ கால்லயா..?"
"இவ்வளவு பக்கத்துல இருந்துகிட்டு எதுக்காக வீடியோ கால்.. உன் பக்கத்துல உன் கூட இருப்பேன்னு சொல்றேனே.. புரியலையா..?"
"நெஜமாவா உங்க வைஃப் திட்ட மாட்டாங்களா..!"
"நான் என்ன உன் கூட தூங்க போறேன்னா சொன்னேன்.. நீ தூங்கற வரைக்கும் உன் கூட இருக்க போறேன்னுதானே சொல்றேன்..!" என்றதும் தேம்பாவணியின் கண்கள் விரிய.. ஒருவேளை ஏதாவது தவறாக சொல்லி விட்டோமோ என்ற ரீதியில் விழித்தான் வருண்..
"என்ன ஏதாவது தப்பா சொல்லிட்டேனா..?"
"இல்ல சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.."
"அப்புறம் டாக்டர் சார் இன்னொரு விஷயம் கேக்கணும்.."
"சொல்லு.."
"உங்க வீட்ல எல்லாருக்கும் என்னை பிடிச்சிருக்கா..! நான் இங்க தங்கறதுல அவங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே..?"
"ஒரு முறை நான் முடிவெடுத்துட்டா எனக்கெதிரா யாரும் இங்க பேச மாட்டாங்க.. ரவுடிங்க கிட்டருந்து உன்னை காப்பாத்தினதா சொல்லியிருக்கேன்.. அதை கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கோ..! வேற ஏதாவது கேள்வி இருக்கா.. நான் போகலாமா..!"
"போங்க டாக்டர் சார்.. உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. நடுவுல நான் வேற எதுக்கு தொந்தரவா..!" அவள் முகத்தை சுருக்கியதும் போனவன் நின்று இடுப்பில் கை வைத்து தலை சாய்த்து நிதானமாக அவளை பார்த்தான் வருண்..
"உன்னை கவனிக்கறது மட்டுந்தான் என்னோட முதல் வேலை. ஏன்னா நீதான் என்னோட ஃபிரண்ட்டாச்சே..!" அவன் கண்சிமிட்டி சொல்லவும் சொல்லவும் பளிச்சென சிரித்தாள் தேம்பாவணி..
"என்ன டாக்டர் அப்படியே பாத்துக்கிட்டே இருக்கீங்க..!" தேம்பாவணி புருவங்களை உயர்த்தினாள்..
"ஹான்.. ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. இந்தா மெடிசன்ஸ்.."
"என்ன மெடிசன்ஸ்..?"
"உன் மன நிம்மதிக்காக..! மைண்ட் ரிலாக்சேஷனுக்காக..! ஆன்சைட்டி அன்ட் ஆன்ட்டி டிப்ரஷன் பில்ஸ்.."
"ஆனா நீங்க என்னை செக் பண்ணவே இல்லையே..! அப்சர்வ் பண்ணாமலேயே டேப்லட்ஸ் கொடுக்கறீங்க.."
"தினமும் நான் உன்னை அப்சர்வ் பண்ணிக்கிட்டுதானே இருக்கேன்..! என்னைவிட உன்னை அணு அணுவா புரிஞ்சவங்க இந்த உலகத்துல வேற யாராவது இருக்காங்களா என்ன..!" அவன் வாத்தைகளில் சடக்கென தேம்பாவணியின் விழிகள் நிமிர்ந்தன.. உயிருக்குள் ஜில்லிப்பு..
"என்ன அப்படி பாக்கற..?"
சின்ன சின்ன அன்பான வார்த்தைகளும் அவளை பலமாய் தாக்கும் என புரியாமலிருந்தானோ..!
மென்மையான சிரிப்போடு ஒன்றுமில்லை என தலையசைத்தாள்..
"ஏன்.. நான் உன்னை முழுசா புரிஞ்சுக்கலைன்னு சொன்னேன் நினைக்கறியா..?"
"என்னை முழுசா புரிஞ்சுகிட்டாதான் தலைவலியே..! தெறிச்சு ஓடிப்போய்டுவீங்க.."
"அப்படியா..! அதையும் பார்க்கலாம்..!" எனும்போதே
"என்ன ரெண்டு பேரும் ரொம்ப நேரமா என்னமோ தனியா ரகசியமா பேசிட்டு இருக்கீங்க..!" அசடு வழிந்தபடி அங்கே வந்து நின்றாள் வெண்மதி..
"அ..து.. அவ தங்க வேண்டிய ரூமை காட்டினேன்..!"
"கையில என்ன மாத்திரை..!" கண்கள் சுருக்கி தேம்பாவின் உள்ளங்கைக்குள் பார்வையை செலுத்தினாள் வெண்மதி..
"அ.. அது.. விட்டமின் டேப்ளெட்ஸ்.." என்று குரலை செருமிக் கொண்டு தேம்பாவணியை பார்த்தான் வருண்..
"எதுக்கு சத்து மாத்திரை..! பாக்க கொழு கொழுன்னு புஷ்டியாத்தானே இருக்குது இந்த பொண்ணு.."
"நீ கூட தான் கொஞ்சம் குண்டடிச்சு உப்பலா தெரியற.. மாசா மாசம் இடுப்பு வலி.. முதுகு நோவுன்னு ஹாஸ்பிடல் போயிட்டு வர்றதில்லையா என்ன..!"
"இதெல்லாம் ஊளை சதைடா.. ரெண்டு பிள்ளை பெத்து என் உடம்பே போயிடுச்சு.. இவ வயசு புள்ள.. புது ரத்தம்..! இயற்கையாவே உடம்புல சத்து ஊறுமே.. அதைத்தான் சொன்னேன்.."
"அதெல்லாம் அந்த காலம்.. இப்பதான் அயன் விட்டமின் டெஃபிஷியன்சி சின்ன குழந்தைகளுக்கு கூட வந்திடுதே..! உடம்பு ரொம்ப வீக்கா இருக்குதாம்.. அடிக்கடி மயக்கம் வருதாம்.. அதான் மாத்திரை எழுதி கொடுத்திருக்கேன்.. சும்மா தொண தொணன்னு கேள்வி கேட்காம உன் பசங்க எங்கன்னு போய் பாரு..!" அவ்விடத்திலிருந்து நழுவிக் கொண்டான் வருண்..
தேம்பாவணி வசமாக வெண்மதியிடம் மாட்டிக் கொண்டாள்..
"ஏன் தேம்பா.. உன் வீடு இங்கன பக்கத்துலதான இருக்குது..! உன் அப்பா வெளிநாட்டுக்கு போயிருந்தா என்ன..? வீட்டுக்கு போய் உனக்கு தேவையான துணிமணிகளை எடுத்துட்டு வந்துருக்கலாமே..! ஷாப்பிங் போய் என்னத்துக்கு புதுசா வாங்கிட்டு வந்தீங்க..? அனாவசிய செலவுதான" என்று இளித்தாள்..
"அ.. அது.. வீட்டுக்கு போனா அப்பா நியாபகம் ரொம்ப வரும்.. அப்புறம் அங்கிருந்து கிளம்ப மனசே வராது.. செக்யூரிட்டி வேற ஒரு வாரம் லீவு.. ராத்திரி தனியா இருக்க முடியாதே..! அதனாலதான் டைரக்டா இங்க வந்துட்டேன்.." சமாளிக்க திணறினாள் தேம்பா..
"உன் அப்பாவ ரொம்ப பிடிக்குமோ.."
"பின்ன..! என்னோட அப்பா ஒன்னும் மத்தவங்க மாதிரி சாதாரணமானவர் இல்ல.. அவர் எனக்காக என்னென்ன செஞ்சிருக்காருன்னு கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க..!"
"இல்லை.. வேண்டாம்.. நான் பொறுமையாவே கேட்டு தெரிஞ்சுக்கறேன்.. நீ ரெஸ்ட் எடு.. நான் அப்புறம் வரேன்..!" அகலமாய் சிரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வெண்மதி..
"இங்க பாருங்கப்பா.. நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க..! அந்தப் பொண்ணு என்னவோ எங்க அப்பாதான் உசத்தி.. மத்தவங்க எல்லாரும் மட்டங்கற மாதிரி பெருமை பேசுது.. அவ முன்னாடி எங்க அப்பாவும் கெத்து.. அவர் எங்க மேல எவ்வளவு பாசம் வச்சுருக்காருன்னு காட்டனுமில்ல.." வெண்மதி சொல்ல..
"அதுக்கு என்ன செய்யணுங்கற..!" ராஜேந்திரன் மூக்கு கண்ணாடியை சரி செய்தார்..
"அப்பா நாமளும் அவங்கள விட பாசமா இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டாம்..?"
"நாம பாசமாதான இருக்கோம்..!" தினமும் குடுமிபுடி சண்ட போட்டுக்கலையே..?
"ஆனா நாம வெளிப்படையா அன்புல உருகலையே..! கண்ணே மகளேன்னு நீங்க என்னை கொஞ்சி சாதம் ஊட்டி விடலையே..! இதெல்லாம் நாம செய்யணும்.. அந்த பொண்ணு கடுப்பாகணும்.."
"அதுவும் சரிதான்.. இன்னொருத்தரை மட்டந்தட்டி தன்னோட அப்பாவை உயர்த்திக்கிறது என்ன பழக்கம்.. எப்ப பாத்தாலும் அப்பா புராணம்..! ஏன் நான் உங்களை சரியா வளக்கலையா.. இல்ல பாசம் காட்டலையா.. இன்னைக்கு அந்த பொண்ண ஒரு வழி பண்றோம்.. டீல்..!"
"டீல்..!"
அப்பாவும் மகளும் நான்கு விரல்களை மடக்கி கட்டைவிரலை உயர்த்தி கரங்களை மோதிக்கொண்டனர்..
அன்று விடுமுறை எடுத்திருந்ததால் வெண்மதியின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
அன்றைய நாளை போல் வெண்மதி தன் குழந்தைகளுடன் தேம்பாவணி பேசக்கூடாது பழகக் கூடாது என மிரட்டவில்லை அதட்டவில்லை தடுக்கவில்லை.. மாறாக பொங்கிய சிரிப்புடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தவளை ஆராய்ச்சியாக பார்த்தாள்..
"என்னமோ பூட்டி வச்ச கிளியை திறந்து விட்ட மாதிரி இந்த பொண்ணு ஏன் இப்படி விளையாடுது..! ஒருவேளை இவ இயல்பை இப்படித்தானா..?" யோசனையோடு தேம்பாவணி ஓடும் திசையிலெல்லாம் வட்டமடித்தன அவள் கண்கள்...
ஓடும் வேகத்திலும் உற்சாகத்திலும்.. தோட்டத்தின் நீரூற்று பக்கம் சிமெண்ட் வளைவில் அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த திலோத்தமாவின் மீது மோதி விட்டாள் தேம்பா.. லேசாகத்தான் மோதினாள் அதற்கே திலோத்தமா பொங்கி விட்டாள்..
"ஏய்..! அறிவில்ல உனக்கு.. கண்ணு என்ன பொடனியிலயா வச்சிருக்க..! வந்த இடத்துல போட்டத தின்னுட்டு அமைதியா இருக்கணும்னு தெரியாதா.. இப்படி அடங்காப்பிடாரி மாதிரி ஆடி ஓடி அமர்க்களம் பண்றதெல்லாம் என்ன மாதிரி பிஹேவியர் தெரியல.. ஏற்கனவே இருக்கற குட்டிச்சாத்தான்களை சமாளிக்க முடியல.. இதுல நீ வேற உயிரை வாங்க வந்துட்டியாக்கும்.. அந்த மனுசன சொல்லணும்.. இது வீடா சத்திரமா தெரியல கண்டவங்களையும் கூட்டிட்டு வந்து தங்க வச்சு இருக்கிறவங்களை கடுப்பேத்தறார்..!" பாதி வெளிப்படையாகவும் மீதி வாய்க்குள் முணுமுணுத்தபடியும் திலோத்தமா அங்கிருந்து நகர்ந்து செல்ல..
முகம் சுருங்கி.. உற்சாகம் மறைந்து சோம்பலாக நடந்து வந்தாள் தேம்பா..
"என்ன புள்ள.. ஏன் சோகமா வர்ற.. இப்படி வந்து உட்காரு.." வெண்மதி அவளை அழைத்து பக்கத்தில் அமர வைத்துக் கொண்டாள்..
"என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்லையே..!"
"திலோத்தமா திட்டிட்டாளாக்கும்."
"ச்சே.. ச்சே.. என் மேல தான் தப்பு.. கண்ணு மண்ணு தெரியாம நான் அப்படி போய் மோதியிருக்க கூடாது இல்ல..!"
"சரி விடு.. அவ அப்படித்தான்.. மனுஷங்களோட பெருசா கலந்து பேசிக்க மாட்டா.. ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடப்பா..! அவ சொன்னதையெல்லாம் பெருசா எடுத்துக்காத.."
"அவங்க ஒன்னும் பெருசா சொல்லல.. பார்த்து வர வேண்டியதுதானேன்னு கேட்டாங்க.. வேற ஒன்னும் தப்பா சொல்லல..!" என்ற பெண்ணை புன்னகையோடு பார்த்தாள் வெண்மதி..
"பரவாயில்ல நல்ல பொண்ணாத்தான் இருக்க..!"
"இல்லையா பின்ன.. யார் யார்கிட்ட எப்படி பேசணும் பழகணும்னு அப்பா சொல்லிக் கொடுத்திருக்காரே..!"
"ஐயோ போதும்மா உன் அப்பா புராணம்.. நான் போறேன் எனக்கு ஏகப்பட்ட வேலை கெடக்குது.." வெண்மதி அங்கிருந்து எழுந்து ஓடிவிட தேம்பாவணி வாய் பொத்திக்கொண்டு சிரித்தாள்..
அன்று இரவு அனைவருமாக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்..
திலோத்தமா தனக்காக விதிக்கப்பட்டிருந்த நடிப்பு கலையை தொடர்ந்து கொண்டிருந்தாள்.. உணவு பாத்திரங்களை எடுத்து வந்து வைப்பது.. உணவை பரிமாறுவது.. வருணிடம் கொஞ்சம் ஸ்பெஷல் அக்கறை காட்டுவதை போல் நடிப்பது என ஏகப்பட்ட ஸ்கிரிப்ட்..
"திலோத்தமா அந்த சாம்பார் கிண்ணத்தை இப்படி தள்ளிவை.." வெண்மதி சொன்னதை காது கேட்காதவள் போல் வருணுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் அவள்..
"அக்கா இந்தாங்க..!" சாம்பார் கிண்ணத்தை அவள் பக்கமாக தள்ளி வைத்தாள் தேம்பாவணி..
வருண் தேம்பாவணியின் அருகே அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தான்..
உணவை அலைந்தபடியே வருணையும் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்த திலோத்தமாவையும் ஊடுருவி பார்த்த வெண்மதி.. இது பொருந்தலையே..! என்று விட்டு கொஞ்சமாக கண்களை நகர்த்தி வருணையும் தேம்பாவணியை அந்த ஃபிரேமுக்குள் கொண்டு வந்தாள்..
திலோத்தமாவிடம் பேசும்போது முகம் கனியாத வருண் தேம்பாவணியின் பக்கம் திரும்பும் போது மலர்ந்து சிரித்து ஏதோ உரையாடிக் கொண்டிருக்க..
"இது நல்லாவே பொருந்துதே..!" அவளையும் அறியாமல் வார்த்தைகளோடு வந்து விழுந்தன எண்ணங்கள்.
"டாக்டர் சார் வெங்காய சட்னி செம சூப்பரா இருக்கு..! டேஸ்ட் பண்ணி பாருங்களேன்.." ஒரு கரண்டி எடுத்து அவன் தட்டில் பரிமாற போக.. திலோத்தமா தடுத்தாள்..
"அவருக்கு என்ன பரிமாறனும் எதை பரிமாறக்கூடாதுன்னு எனக்கு தெரியாதா..! வெங்காய சட்னி வாயிலிருந்து ஸ்மெல் வரும்.. எனக்கு பிடிக்காது..!" அவள் முகத்திலடித்தார் போல் சொன்னதில் தேம்பாவணிக்கு எதுவும் புரியாத நிலை..
"அவர் சாப்பிடுறது உங்களுக்கு எதுக்கு பி.. டி..க்.." என இழுத்தவளுக்கு விஷயம் ஓரளவு புலப்பட.. "ஓஹோ புரிஞ்சது.." என தலையசைத்து உணவை உண்ணத் தொடங்கினாள்..
வருண் சங்கடமான நிலையில் சிரித்தான்..
வெண்மதி ராஜேந்திரனின் தோளை இடித்தாள்..
"அப்பா ஸ்டார்ட்.."
"செல்லம்.. என்ன நீ.. ஒன்னும் பாதியுமா கொறிக்கற.. உன் பசங்கள நீ கவனிச்சுக்குவ.. உன்ன யாரு பாக்கறது.. உன் அம்மாவுக்கு அடுப்படியை சுத்தி வரவே நேரம் சரியா இருக்குது.. அப்பா உனக்கு ஊட்டி எவ்வளவு நாளாச்சு.. இரு நான் ஊட்டி விடறேன்.." இராஜேந்திரன் தன் நாடகத்தை தொடங்க..
"பரவால்ல இருக்கட்டும்பா நீங்க சாப்பிடுங்க.." என்று கொஞ்சினாள் மகள்..
"இருடா இனிமே இந்த சந்தர்ப்பம் எப்ப கிடைக்குமோ தெரியல.. நீயும் கொஞ்ச நாள்ல உன் புருஷன் வீட்டுக்கு போயிடுவ.. அங்க யாரு உன்னை இப்படி பாத்துக்குவாங்க..!"
"உண்மைதான்ப்பா உங்கள மாதிரி யாராலயும் என்ன பாத்துக்க முடியாது..! பொண்டாட்டி இன்னொரு அம்மா மாதிரியின்னு சொல்றாங்க.. எந்த புருஷனாவது தன் பொண்டாட்டிய அப்பா மாதிரி பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கானா..! பாத்துக்க முடியாது.. ஏன்னா அப்பா அப்பாதான்.."
அம்மா என சாரதாவை பக்கத்தில் அழைத்தான் வருண்..
"என்னடா..?"
"திடீர்னு ஏன் இதுங்க ரெண்டும் இப்படி கொஞ்சிக்குதுங்க..! ஏதோ சரியில்லையே..!"
"அதான் தெரியல.. வழக்கமா இவ உங்கப்பா கூட வம்புக்குத்தான நிப்பா.. இன்னைக்கு என்னமோ பாசம் பொங்குதே..!"
"அப்பா எனக்கு நீங்க மொத மொதல்ல சைக்கிள் ஓட்ட கத்து தந்தீங்களே.. ஞாபகம் இருக்கா.."
"நீ எங்க சைக்கிள் ஓட்டுன.. கொண்டு போய் அப்பாவோட சேர்த்து மலை உச்சியிலருந்து உருட்டியில்ல விட்டே.." வருண் இடையில் நுழைய..
"நீ வாய மூடுடா..!"
"எனக்கு கல்யாணம் ஆன நாளன்னைக்கு நீங்க எப்படி அழுதீங்க..! என்னை பிரிய முடியாம தானேப்பா."
"அப்பா சிரிச்சிட்டுதான் இருந்தாரு.. நீ கால் மேல ஏறி நிக்கவும் வலி தாங்க முடியாம கதறிட்டார்.."
"இங்க பாரு வருண்.. தேவையில்லாம நடுவுல வராத..! இது எனக்கும் என் அப்பாவுக்கு இடைபட்ட விஷயம்.."
"அது சரி பேசுங்க.."
"தினமும் ஸ்கூலுக்கு போகும்போது சாக்லேட் வாங்கி கொடுத்து அனுப்புவீங்களே ஞாபகம் இருக்கா டாடி.."
"இல்லனா ஸ்கூலுக்கு போக மாட்டேன்ன்னு அடம் பிடிச்சு அவர் வேட்டிய புடிச்சுகிட்டு தொங்குவியாமே..! மானம் போயிடும்னு பயந்துருப்பார்.. இந்த கதையெல்லாம் அம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க.."
"வருண் உனக்கு அவ்வளவு தான் மரியாதை.."
"அவன் கிடக்கிறான் நீ சாப்பிடுமா..!" ராஜேந்திரன் மகளுக்கு தட்டிலிருந்த உணவை எடுத்து ஊட்ட..
அம்மாவும் மகனும் ஒருவரை ஒருவர் கடுப்பாக பார்த்துக் கொண்டனர்..
"வேர்ல்ட் பெஸ்ட் ஃபாதர் டாட்டர் கோம்போ நாமதானேப்பா.."
"அதிலென்னம்மா சந்தேகம்"
தற்செயலாக அவன் பார்வை தேம்பாவணியின் பக்கம் போக கன்னத்தில் கைகளை வைத்து தந்தை மகளை சுவாரசியமாக ரசிப்பு தன்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் கண்களோரம் நீர் அரும்பியதை வருண் கவனிக்க தவறவில்லை..
தேம்பாவை பார்த்தபடி வருண் தாயின் கையை சுரண்ட.. சாரதாவும் திரும்பி பார்த்தார்..
பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய சாரதாவின் தாய் மனது தேம்பாவணியின் கண்களில் துளிர்த்த ஏக்கத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும்..
"என்ன வேடிக்கை.. ஒரு வாய் கூட உள்ளே இறங்கல.. ஏன் உனக்கும் ஊட்டனுமா.." என்றபடியே தட்டிலிருந்த உணவை கொஞ்சங் கொஞ்சமாய் அவளுக்கு ஊட்டத் துவங்கினாள் சாரதா.. தாயாக மாறி..
தொடரும்..

Last edited: