• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
அகண்ட தோளும் முறுக்கேறிய புஜங்களும்..‌ தசைக் கோளம் விரிந்த வலது புஜத்தில் அவன் கட்டியிருந்த கருப்பு தாயத்தும். வலிமையான கரத்தின் ஐம்பொன் காப்பும் அதை உதறிக் கொண்டும் தலையை சிலுப்பிக்கொண்டும் அவன் ஸ்டைலாக நடந்த விதமும் குத்துச்சண்டை வீரன் போல் பிடரி வரை அவன் வளர்த்திருந்த கேசமும்..‌ சிவாங்கியின் கண்ணையும் கருத்தையும் வெகுவாக கவர்ந்தன..

கிராமத்தான் என்றதும் அழுக்கு உடையும் செம்பட்டை சிகையும்..‌ வெயிலில் கருத்த தோலும்.. பஞ்சத்தில் அடிபட்ட உடல்வாகும் என்று மிகவும் இளக்காரமாக நினைத்துக் கொண்டிருந்தவள் ஆழித் தேவனின் தோற்றத்தை கண்டு வியந்தாள்..‌ பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து பழகிக் கொண்டிருக்கும் அவள் தற்போதைய பாய்பிரண்ட் கூட இத்தனை அழகில்லை..

அழகில் என்ன இருக்கிறது.. அந்த ஆண்மையான தோற்றம்.. அவன் நடந்து வரும் தோரணை.. அடடா அந்த கண்கள்.. அத்தனை கூர்மையாக காந்தமாக கவர்ந்து இழுக்கின்றனவே.. வந்தவன் நின்று செக்யூரிட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்..‌ ஒரு காலை சாய்த்து அவன் நின்ற தோரணை கதைகளில் படித்த ராஜகுமாரனை நினைவு படுத்தியது.

படிப்பு பணம் பிறகு.. ஆழியின் ஆண்மையான கவர்ச்சியில் விழுந்து போனாள் சிவாங்கி. இனக்கவர்ச்சி இயற்கை தான்.. ஆனால் இவள் குணம் சரியில்லையே..

தை மாதம் காணும் பொங்கலன்று பெண்கள் இவன் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்ற பேயாய் அலைவது வழக்கம்.. தங்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாட மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் காளையர்கள் மத்தியில் அனைவரிடமிருந்தும் தப்பித்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தன் மீது படாமல் மீசையை முறுக்கி கெத்து காட்டுவான் ஆழித் தேவன்..

ஆழிதேவன் வாசலை கடந்து வீட்டுக்குள் நுழையும் முன் ஷீபா சிவாங்கியை கடுமையாக எச்சரித்திருந்தாள்..

"சிவாங்கி.. கொஞ்சமாவது அந்த பையன்கிட்ட நல்ல பேர் வாங்க முயற்சி செய்.. கிராமத்து பையன்.. நீ இப்படி மாடர்ன் டிரஸ் போட்டுக்கிட்டு ஒயிலா அலுக்கி குலுக்கி மினுக்கி நடந்தா அவனுக்கு பிடிக்குமா தெரியல..‌ தாவணி பாவாடையும் புடவையும் பார்த்து வளர்ந்தவன்.. முடிஞ்சவரை அவன்கிட்ட அடக்கஒடுக்கமா நடக்க கத்துக்கோ.. அவனை புருஷனா பார்க்கிறதை விட பணமா பாரு..‌ சொத்து வர்ற வழியா பாரு..‌" அறிவுரையை அழுத்தமாக கூறினாள்..

"இல்லம்மா.. நான் அவனை புருஷனாகவே பாக்கறேன்.." சிவாங்கியின் கண்கள் ஆசையில் மின்னியது.. மகளை வினோதமாக பார்த்தாள் ஷீபா..

"அடியே அப்புறமா பார்த்து ரசிக்கலாம் முதல்ல போய் டிரஸ் மாத்திட்டு வா.. மெய் மறந்து நின்றிருந்தவளை உலுக்கி அங்கிருந்து அனுப்பி வைத்தாள் அவள் தாய்.. சிவாங்கி அந்த பக்கம் சென்ற பிறகு ஆழித் தேவன் மெதுவாக படியேறி வீட்டுக்குள் நுழைந்தான்..

ஆயிரம் தூண்கள் கொண்ட செட்டிநாடு மண்டபம் போல் ஆழித் தேவனின் வீடு..

இந்த வீடு அது போன்ற பழங்கால அமைப்போடு இல்லை என்றாலும் பணத்தை வாரியிறைத்து பகட்டோடு ஆங்காங்கே சலவை கற்கள் வெள்ளை பற்களை காட்டி பளிச்சென மின்னியது.. ஆங்காங்கே தங்கம் பதித்ததை போல் சூரிய ஒளி பட்டு வீடு டாலடித்தது உட் புற அமைப்பு..‌

வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட வீட்டை ரசனையோடு பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன்.. எதிரே நின்ற ஷீபாவை கண்டு மரியாதையோடு நின்றான்.

"அத்தை எப்படி இருக்கீங்க..?" அவன் முகத்தில் பளீர் புன்னகை..

"பரவாயில்லையே என்னை ஞாபகம் வச்சிருக்கியே..‌!! வா ஆழி.. நல்லா இருக்கியா..‌" பாசமாக விசாரித்தாள் ஷீபா..

"என்ன அத்தை உங்கள மறக்க முடியுமா..‌ பேசி பழகாமல் போனாலும் சொந்தம் விட்டுப் போகாதே..!! அம்மை உயிரோடு இருந்தப்போ உங்களை பத்தியும் மாமாவை பத்தியும் அடிக்கடி பேசும்.. அப்பா கூட அடிக்கடி அந்த காலத்து பழைய சங்கதிகள் பத்தி பேசிட்டே இருப்பார்.."

"ரொம்ப பொறுப்பா பேசுறியே ஆழி.. சின்ன வயசுல இருந்த விளையாட்டுத்தனமும் வெடல புத்தியும் இப்ப இல்லையே.. ரொம்ப மாறிப் போயிட்டே..!!"

"மாறாம எப்படி அத்த.. . வயசு முப்பதை தொடப்போகுதே.. இன்னும் அதே விளையாட்டுதனத்தோட இருக்க முடியாதே..!!" ஆழித்தேவன் அழகாக சிரித்தான்..‌

"சரியா சொன்னே ஆழி.. உன் அப்பா உன்னை ரொம்ப நல்லா வளர்த்திருக்கார்.. சரி உன் அப்பாவுக்கு இப்ப எப்படி.. உடம்பு தேவலாமா.. அத்தையின் நலம் விசாரித்தலில் ஆழித்தேவனின் முகம் வாடிப்போனது..

அப்படியேதான் இருக்காரு.. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சுட்டு கிடக்கோம்.. நோய்ல தவிக்கிற மனுஷன அங்கன தனியா விட்டுட்டு வந்தது தான் மனசு தாங்கல.." உதட்டை பிதுக்கி கண்களில் தன் சோகத்தை வெளிப்படுத்தினான்..

"அவருக்கு சீக்கிரம் குணமாகிடும் ஆழி.. அப்பா மேல எவ்வளவு கரிசனம்.. உன்ன மாதிரி ஒரு நல்லவனை கட்டிக்க என் பொண்ணு ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும்.."

"அத்..தை ரொம்ப புகழாதீங்க.. நீங்கதான் சொல்றீங்க.. உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கணுமே.." நீண்ட பெருமூச்சோடு ஒரு மாதிரியாக வளைந்து நெளிந்து கீழ்க்கண்ணால் அத்தையின் முகம் பார்த்தான்.. சட்டென்று தன் இயல்பை மாற்றிக் கொண்டான்.. இதுதான் ஆழி..

"அட நீ வேற.. உன்னைய தான் கட்டிக்குவேன்னு எம்மக ஒத்த கால்ல நிக்கிறா.. வெளிநாடு போய் படிச்சு என்ன பிரயோஜனம்.. ஆயிரம் பேர் கல்யாணம் பண்ணிக்க கேட்டு வரிசையில நிக்கிறாங்க.. அத்தன பேரையும் வேண்டான்னுட்டு என் மாமனத்தான் கட்டிக்குவேன்னு உனக்காக காத்திருக்கா..

"நிஜமாவா சொல்றீங்க.. இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே அத்தை.. எனக்கு அவளை கண்ட மேனிக்கு பிடிக்கும்னு வைச்சிக்கிடுங்க.. ஆனா அவளுக்கு என்னைய பிடிச்சிருக்கான்னு ஒரு தயக்கம் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு.. இப்போ ஆழி ரொம்ப ஹேப்பி..‌" என்று தன் அகண்ட தோள்களை சிலுப்பினான்..

"ஆமா நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன். என் செல்லாக்குட்டியை காணோமே..!!" பையைத் தோளில் மாட்டிக் கொண்டு ஆர்வமாக சுற்றும் முற்றும் தன் அத்தை மகளை தேடினான் ஆழி..

"சிவாங்கியா.. வீட்லதான் இருக்கா.. படிப்பு முடிச்சாச்சு.. உன்னை கட்டிக்கிட்டு பொறுப்பான குடும்ப பெண்ணா வாழ எல்லா பயிற்சிகளையும் எடுத்துட்டு இருக்கா.."

"என்னது.. பயிற்சி எடுக்கிறாளா.. அதெல்லாம் ரத்தத்தில் ஊறி வரணும் அத்தை.. கோலம் போடறதும் கூடை பின்னுவதும் குடும்பம் நடத்துறது இல்ல.. அத்தனை பொறுப்புகளையும் சரியா நிர்வகிச்சு கட்டுச் சிட்டா குடும்பம் பண்ணனும்.. எம்பொஞ்சாதி ராணி மாதிரி அதிகாரம் பண்ணி வாழ்ந்தா போதும்.. சொடக்கு போட்டா சொன்ன வேலையை செய்ய வூட்ல ஆயிரம் பேர் உண்டு.. பண்ண வூட்டுக்காரிக்கு அத்தனை பேரையும் வேலை வாங்க தெரிஞ்சா போதாதா..? மீசையை முறுக்கினான் ஆழி.. ஷீபாவிற்கு தலை சுற்றியது..

"சரி அத விடுங்க.. முதல எம்மாமன் மகள காட்டுங்க.. முதல்ல அவள பாத்துட்டு தான் அடுத்த சங்கதி.." வீட்டை கண்களால் வலை போட்டுத் தேடி இடுப்பில் கைவைத்து நின்றான் ஆழி..

"உன் மாமா மகள பொறுமையா பாக்கலாம் முதல்ல போய் குளிச்சிட்டு தாத்தா பாட்டியை போய் பாரு.. காலையிலிருந்து ரெண்டு மூணு முறை உன்னை கேட்டுட்டாங்க.."

"அப்புறம் வந்து சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடு.. நிதானமா உன் மாமன் மகள பார்த்து நாள்பூரா பேசிட்டே இரு.. யாரு வேண்டான்னு சொன்னா.. சிவாங்கி எங்கேயும் ஓடிட மாட்டா அவ உனக்கானவ.. நீ இந்த வீட்டு மாப்பிள்ளை ஆழி.. உன்னை சரியா உபசரிக்க வேண்டியது எங்களோட கடமை..‌" குழைந்தஇனிப்பாக பேசியவள் "வேலாஆஆ" என்று சத்தம் போட்டு அழைத்தாள்.. சர்வன்ட் உடையில் ஒருவன் ஓடி வந்தான்..

"இவர் இந்த வீட்டு மாப்பிள்ள.. சிவாங்கியை கட்டிக்க போறவரு.. இவருக்கு அவர்கள் தங்கிக்க வேண்டிய ரூமை காட்டு.."

"சரி மா..‌"

ஆழித்தேவனின் பக்கம் திரும்பினாள்.. "இது உன்னோட வீடு ஆழி.. எந்தவித சங்கடமும் இல்லாம நீ சௌகரியமா இருக்கலாம்.."

"எனக்கென்ன சங்கடம் அத்த.. ஒரு பக்கம் பார்த்தா என் தாய் மாமன் வீடு.. இன்னொரு பக்கம் பார்த்தா என் தாத்தா பாட்டி வீடு.. ஆக மொத்தம் இது என்னோட வீடு.." அழுத்தமாக அதே நேரத்தில் சிரித்துக் கொண்டே சொல்ல ஷீபா எச்சில் விழுங்கினாள்.. காட்டான் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்று பார்த்தால் இவன் கொஞ்சம் விவரமாகவே இருக்கிறானே.. ஷீபாவின் நெஞ்சுக்குள் கலவரம்..

"அப்படியே இந்த பேக்கை கொண்டு போய் ரூம்ல வச்சுடு.." வேலையாளிடம் சொன்னாள்..

"பரவாயில்ல அத்த.. என் பையை நானே கொண்டு வரேன்.."

"அட அவன் கிட்ட குடு ஆழி.. பையில என்ன பொன்னும் வைரமுமாவா வெச்சிருக்க.. இத்துப்போன நாலு பேன்ட்டும் சட்டையும் தானே.." ஷீபாவிடம் இயல்பான இளக்காரம் எட்டிப் பார்த்தது..

"அட என்னத்த அப்படி சொல்லிப்புட்டீங்க.. பொன்னும் வைரமும்தான் வச்சிருக்கேன்.. இங்கன பாருங்க.." தன் பையை மேஜை மீது வைத்து சிப்பை திறந்தவன் உள்ளிருந்த ஒரு நகை பெட்டியை எடுத்து திறந்தான்.. உண்மையில் சொன்னது போல் பொன்னும் வைரமுமாக குட்டி குவியலாக நகைகள் கண்களை கூச வைத்தன.. வேலையாள் வேலன் இமைக்க மறந்து வாயைப் பிளந்தான்..

ஷீபா மூச்சுவிட மறந்தாள்..

"என்ன தம்பி இவ்வளவு நகை.. 100 பவுனை தாண்டி போகும் போலிருக்கே.." மேல் மூச்சு வாங்கியது..

"ஆமா அத்தை.. எல்லாம் அம்மையோட நக.. இது தவிர மிச்சம் 200 பவுன் வீட்ல கிடக்குது.. கல்யாணம் பேசும்போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் பொண்ணுக்கு சீர் செய்யணும் இல்ல.. அதனால தான் அப்பாரு சொன்னபடி பார்த்து கொஞ்சமா கொண்டு வந்தேன்.. இது தவிர நானும் என் பொண்டாட்டிக்காக கிலோவா நான் சேர்த்து வச்சிருக்கோம்ல..

"ஆத்தாடி.. கல்யாணம் கட்டிக்கற முன்னே உன் பொண்டாட்டி மேல எத்தனை ஆசை..‌" ஷீபாவின் பேச்சு பேச்சாக இருந்த போதிலும் கண்கள் அந்த நகையை ஆவலோடு மொய்த்தன..‌

"இந்த நகையை இப்படி குடு.. நானே உன் பொண்டாட்டி கிட்ட.. கொடுத்துடறேன்.." நகைகளை அள்ளியெடுக்க கைகளை நீட்டினாள் ஷீபா..

"ஆஆஹான்.. இதையெல்லாம் என் பொண்டாட்டி கிட்ட நான்தான் கொடுப்பேன்..‌ அதுவும் சரியா கல்யாணம் பண்ணிக்கற அன்னிக்கு நானே என் கையால அவளுக்கு ஒண்ணு ஒண்ணா போட்டு விடுவேன்.." என்று அவசரமாக பையை சிப்பை மூடி எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு அந்த வேலையாளோடு நடந்தான் ஆழி..

"அடேங்கப்பா அசால்ட்டா 100 பவுன் நகையை பையில போட்டு எடுத்துட்டு வந்துட்டானே.. ரொம்ப பெரிய இடம்தான்.. எப்படியாவது வளைச்சு போட்டுடனும்.. எல்லாம் அவ கையில தான் இருக்கு.. அடியே சிவாங்கி.. பாத்து பக்குவமா நடந்துக்கோ..‌" தனக்குள் புலம்பி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள் ஷீபா..

"ஏன் சார் நீங்க பஸ்லையா வந்தீங்க.." வேலன் மரியாதையோடு கேட்டான் ஆழியிடம்..

"ஆமா ஏன்..?"

"பஸ்ல இந்த பையை எங்க வச்சிருந்தீங்க..?"

"டாப்ல.."

"என்னது..?" கேட்ட வேலையாளுக்கு நெஞ்சுவலி வராத குறை..

"அது எப்படி சார்.. இவ்வளவு நகையை பொறுப்பில்லாமல் பஸ்ஸோட டாப்ல வச்சிருந்தேன்னு சொல்றீங்க யாராவது எடுத்துட்டு போயிருந்தா..?"

நின்று அவனை கூர்மையாக பார்த்தான் ஆழி..‌ "என் கண் பார்வையைத் தாண்டி எவன் என் பையை எடுத்துட்டு போய்ட முடியும்.. எடுக்கிற கையை வெட்டி விரால் மீன் கணக்கா வீசிட மாட்டேன்.." சீற்றத்தோடு அவன் குரல் உறுமியது..‌

"அடடா கிராமத்தான் பேச்சும் கரடு முரடாத்தான் இருக்கு..‌" வேலன் சுதாரித்துக் கொண்டு அவனுக்கான அறையில் பையை வைத்துவிட்டு.. "சார் இங்கே எல்லா வசதியும் இருக்கு.. ஏதாவது வேணும்னா என் பெயரை சொல்லி கூப்பிடுங்க வந்து உடனே நிப்பேன்.."

"ஆமா உம்மட பேரு என்ன..?"

"வேலன்.."

"சரிங்க ரொம்ப நன்றி.." இரு கைகளைக் கூப்பி வணக்கம் வைத்தான்..

"அட என்ன சார்.. வேலைக்காரனுக்கு போய் வணக்கம் வச்சிக்கிட்டு" வேலன் வெளியேறி சென்று சில வினாடிகளுக்கு பிறகு..

"வேலா.. ஆஆ.." சத்தமாக அழைத்தான் ஆழி..

"சார்ர்ர்" கீரிச்சிட்டு ஸ்கேட்டிங் செய்த கால்களோடு உடனடியாக வந்து நின்றான் வேலன்..

"இல்ல.. நீங்க வெளியே போன பொறவு நான் கூப்பிட்டா காது கேட்குதா..? நீங்க வருவீயளான்னு செக் பண்ணி பார்த்தேன்.. வேற ஒன்னும் இல்ல.." ஆழி இதழ் பிரிக்காமல் சிரிக்க..‌

"சரிதான் நீங்க ரொம்ப புத்திசாலியாத்தான் இருக்கீங்க.. என்னவோ ஜோடியில ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் அறிவாளியா இருந்தா சரிதான்" ஒரு மார்க்கமாக தலையசைத்து விட்டு வேலன் அங்கிருந்து சென்றிருந்தார்..

இடுப்பில் கைவைத்து அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான் ஆழி.. விசாலமான அறை.. கிங் சைஸ் கட்டில்.. வசதியான குளியலறை.. நவீன இன்டீரியர் டெக்கரேஷன்.. வண்ண விளக்குகள்.. தேக்கு மர கப்போர்ட்.. விசாலமான ஜன்னல்.. ஏர் கண்டிஷனர்.. குட்டியான பிரிட்ஜ்.. என அறை என்னவோ வசதியாக.. அழகாகத்தான் இருந்தது.. ஆனால் இங்கு ஏதோ அந்நியத்தன்மை..

ஜன்னலை திறந்து வைத்தால் சின்ன குழந்தைகள் போல் சிலுவென கொஞ்சி கொண்டே உள்ளே வரும் காற்றும்.. குளிருக்கு கத கதப்பையும் வெப்பத்திற்கு இதமான குளிரையும் அள்ளித்தரும் வசதியான மாயச் சூழ்நிலையும் கார்காலத்தில் தரையை முத்தமிடும் மழைத்துளிகளும்.. இரவில் வட்ட நிலா வந்து விழும் முற்றமும்.. கோயிலையும் மண்டபத்தையும் ஒருங்கிணைத்தது போன்ற தன் பாரம்பரிய பிரம்மாண்ட வீடு போல் இந்த உலகத்தில் வேறு எந்த சொர்க்க பூமியும் கிடையாது என்பது அவன் எண்ணம்.. தாலிகட்டி மனைவியை ஊருக்கு அழைத்து செல்ல மனதில் இப்போதிலிருந்து தவிப்பும் துடிப்பும்..

ஆழ்ந்த பெருமூச்சோடு கட்டிலில் அமர்ந்தான் ஆழி..‌ சிவாங்கியை காண அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது.. பதினாறு வயதில் மாமா மாமா என்று தன்னை சுற்றி வரும் போது பருவ சிலிர்ப்போடு கண்டிருக்கிறான்.. அந்த வயதிற்கே உரிய திமிரும் அலட்டலும் அவளிடம் உண்டு என்றாலும் இப்போது பக்குவப்பட்டு மாறியிருப்பாளா..? என்றொரு தவிப்பு.. அழகில் அவள் தேவதை.. பதினாறு வயதில் பார்த்த அந்த முகம் கலங்கலாக இப்போது கனவில் தோன்றி தொந்தரவு செய்கிறது..‌ உனக்கு அவள்தான் என்று அன்னை சொன்ன அடுத்த கணத்திலிருந்து அவளை நெஞ்சில் தாங்கி கனா காண ஆரம்பித்தாயிற்று..

அன்னை கைகாட்டிய பெண் என்றால் நிச்சயம் தனக்கு பொருத்தமானவளாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கை.. அதைக் காட்டிலும் அன்னை தன்னிடம் வாங்கிக் கொண்ட சத்தியம்.. தன் மீது உயிரையே வைத்திருந்த பெற்றவள் சாகும் தருவாயில் "உனக்கானவள் சிவாங்கிதான்.. உன் மாமனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை.. நீதான் நிறைவேற்றனும்.. இந்த அம்மா மேல உயிரையே வச்சிருந்தா எனக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சா.. எந்த நிர்பந்தமும் இல்லாமல் சிவாங்கியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. அப்போதான் இந்த அம்மா உனக்கே வந்து பொண்ணா பொறப்பேன்.." என்று அவன் கையை தலையில் சத்தியம் செய்து இறந்து போனாளே..

அந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காகவே சிவாங்கி மேல் பிரியத்தை வளர்த்துக் கொண்டான்.. ஒரு கட்டத்தில் அவள்தான் மனைவி என்று அவனையும் மீறிய உணர்வில் கனவுகளில் அவளோடு வாழ ஆரம்பித்து விட்டான்.. பதினாறு வயதில் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட பருவப் பெண்ணை இப்போது வரை எண்ணி ஏங்குகிறான்.. இருபத்தைந்து வயதான சிவாங்கியை பார்க்க மனம் துடித்துக் கொண்டிருக்கிறது..

இப்போது எப்படி இருப்பாள்.. அப்போதே அழகு தேவதை.. இப்போது மென்மேலும் மெருகேறி இருப்பாள்.. தேகத்தங்கங்களில் மாற்றம் கொண்டு உருண்டு திரண்டு.. விழிகளை மூடி சிரித்தான் ஆழி..

மனம் லயித்து கற்பனையில் மூழ்கியிருந்த வேளையில் படாரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தாள் ஒருத்தி.. தலைவிரி கோலமாய் "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க ப்ளீஸ்" என்று.. கீழே தடுக்கி விழுந்து அவனிடம் ஓடி வந்து நின்றவளை கண்டு பதட்டத்தோடு எழுந்து நின்றான் ஆழி..

விரிந்த கூந்தல் அவள் முகத்தை மறைத்திருக்க.. "கா..ப்பா.. கா..ப்பா..த்துங்க.. அவ..ங்க என்ன அடிக்..கிறாங்க.. எனக்கு வலிக்..குது.." விம்மிய அழுகையோடு தனது காயங்களை காண்பித்தபடி.. உடல் நடுங்க அவனோடு ஒட்டிக்கொண்டாள் அந்தப் பெண்..

"யாருமா உன்னை அடிக்க வர்றா.. யாரு நீ.." என்று பதட்டத்தோடு அவள் பின்னால் பார்த்தவன் ஒருவேளை இவள் தான் சிவாங்கியோ.. அடக்கடவுளே என்ன இது சோதனை.. என்ற பதட்டத்தோடு அவள் கூந்தலை ஒதுக்கி முகம் பார்த்தான்..

இல்லை இவள் சிவாங்கி இல்லை.. மாநிறத்தில் முகமெல்லாம் அம்மை தழும்போடு.. நறுங்கிய உருவத்தில்.. பதினைந்து வயது சிறுமி போல்..

நிச்சயம் இவள் என் சிவாங்கியே இல்லை.. 16 வயதிலேயே பூரித்து ரோஜா நிறத்துடன்.. செழிப்பாக எத்தனை அழகாக இருந்தாள் என் சிவாங்கி..‌

அப்படியானால் இவள் யார்..? அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்தான்.. நீளமான கூந்தல்.. உதடுகள் அழுகையில் நடுங்கிக் கொண்டிருந்தன.. கண்களில் பயம்.. ஆழித் தேவனுக்கு அந்தப் பெண்ணை பார்க்கவே பாவமாக இருந்தது..

பின்னால் ஜெயில் வார்டன் போல் ஒரு பெண் பற்களை கடித்துக் கொண்டு ஓடி வந்தார்..

வந்த வேகத்தில் அவள் வைத்திருந்த நீள்குச்சியினால் அந்தப் பெண்ணின் முதுகில் ஓங்கி பளாரென ஒரு அடி வைத்தாள்..

"அம்மா ஆஆஆஆ.. ஆஆஆ" பெருங்குரலெடுத்து அலறினாள் அந்தப் பெண்..

பார்த்துக் கொண்டிருந்த ஆழித்தேவனுக்கு நெஞ்சம் கலங்கி போனது..

"ஏய் சனியனே ஒரு இடத்தில் இருக்க மாட்டியா நீ.. என்ன எழவ இழுத்து வைக்க இங்க வந்த.. பைத்தியம் பைத்தியம்.." மீண்டும் அவளை அடிப்பதற்காக அந்த குச்சியை ஓங்கும் முன் அந்தப் பெண்ணை தன் பக்கம் தள்ளி நிறுத்திக் கொண்டு தன் வலிமை வாய்ந்த கரத்தால் மூங்கில் குச்சியை பதமாக பிடித்திருந்தான் ஆழித் தேவன்..

தொடரும்
 
Last edited:
Member
Joined
Jun 27, 2024
Messages
28
Grt.Good going. Waiting 4 next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 19, 2024
Messages
17
அகண்ட தோளும் முறுக்கேறிய புஜங்களும்..‌ தசைக் கோளங்களுடன் கூடிய வலது புஜத்தில் அவன் கட்டியிருந்த கருப்பு தாயத்தும். வலிமையான கரத்தின் ஐம்பொன் காப்பும் அதை உதறிக் கொண்டும் தலையை சிலுப்பிக்கொண்டும் அவன் ஸ்டைலாக நடந்த விதமும் குத்துச்சண்டை வீரன் போல் பிடரி வரை அவன் வளர்த்திருந்த கேசமும்..‌ சிவாங்கியின் கண்ணையும் கருத்தையும் வெகுவாக கவர்ந்தன..

கிராமத்தான் என்றதும் அழுக்கு உடையும் செம்பட்டை சிகையும்..‌ வெயிலில் கருத்த தோலும்.. பஞ்சத்தில் அடிபட்ட உடல்வாகும் என்று மிகவும் இளக்காரமாக நினைத்துக் கொண்டிருந்தவள் ஆழித் தேவனின் தோற்றத்தை கண்டு வியந்தாள்..‌ பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து பழகிக் கொண்டிருக்கும் அவள் தற்போதைய பாய்பிரண்ட் கூட இத்தனை அழகில்லை..

அழகில் என்ன இருக்கிறது.. அந்த ஆண்மையான தோற்றம்.. அவன் நடந்து வரும் தோரணை.. அடடா அந்த கண்கள்.. அத்தனை கூர்மையாக காந்தமாக கவர்ந்து இழுக்கின்றனவே.. வந்தவன் நின்று செக்யூரிட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்..‌ ஒரு காலை சாய்த்து அவன் என்ற தோரணை கதைகளில் படித்த ராஜகுமாரனை நினைவு படுத்தியது.

படிப்பு பணம் பிறகு.. ஆழியின் ஆண்மையான கவர்ச்சியில் விழுந்து போனாள் சிவாங்கி. இனக்கவர்ச்சி இயற்கை தான்.. ஆனால் குணம் சரியில்லையே..

தை மாதம் காணும் பொங்கலன்று பெண்கள் இவன் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்ற பேயாய் அலைவது வழக்கம்.. தங்கள் மீது மஞ்ச தண்ணீர் ஊற்ற மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் காளையர்கள் மத்தியில் அனைவரிடமிருந்தும் தப்பித்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தன் மீது படாமல் மீசையை முறுக்கி கெத்து காட்டுவான் ஆழித் தேவன்..

ஆழிதேவன் வாசலை கடந்து வீட்டுக்குள் நுழையும் முன் ஷீபா சிவாங்கியை கடுமையாக எச்சரித்திருந்தாள்..

"சிவாங்கி.. கொஞ்சமாவது அந்த பையன் கிட்ட நல்ல பேர் வாங்க முயற்சி செய்.. கிராமத்து பையன்.. நீ இப்படி மாடர்ன் டிரஸ் போட்டுக்கிட்டு ஒயிலா அலுக்கி குலுக்கி மினுக்கி நடந்தா அவனுக்கு பிடிக்குமா தெரியல..‌ தாவணி பாவாடையும் புடவையும் பார்த்து வளர்ந்தவன்.. முடிஞ்சவரை அவகிட்ட அடுத்த ஒடுக்கமா நடக்க கத்துக்கோ.. அவனை புருஷனா பார்க்கிறதை விட பணமா பாரு..‌ சொத்து வர்ற வழியா பாரு..‌" அறிவுரையை அழுத்தமாக கூறினாள்..

"இல்லம்மா.. நான் அவனை புருஷனாகவே பாக்கறேன்.." சிவாங்கியின் கண்கள் ஆசையில் மின்னியது.. மகளை வினோதமாக பார்த்தாள் ஷீபா..

"அடியே அப்புறமா பார்த்து ரசிக்கலாம் முதல்ல போய் டிரஸ் மாத்திட்டு வா.. மெய் மறந்து நின்றிருந்தவளை உலுக்கி அங்கிருந்து அனுப்பி வைத்தாள் அவள் தாய்.. சிவாங்கி அந்த பக்கம் சென்ற பிறகு ஆழித் தேவன் மெதுவாக படியேறி வீட்டுக்குள் நுழைந்தான்..

ஆயிரம் தூண்கள் கொண்ட செட்டிநாடு மண்டபம் போல் ஆழித் தேவனின் வீடு..

இந்த வீடு அது போன்ற பழங்கால அமைப்போடு இல்லை என்றாலும் பணத்தை வாரியிறைத்து பகட்டோடு ஆங்காங்கே சலவை கற்கள் ததனாது வெள்ளை பற்களை காட்டி பளிச்சென மின்னியது.. ஆங்காங்கே தங்கம் பதித்ததை போல் சூரிய ஒளி பட்டு வீடு டாலடித்தது உட் புற அமைப்பு..‌

வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட வீட்டை ரசனையோடு பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன்.. எதிரே நின்ற ஷீபாவை கண்டு மரியாதையோடு நின்றான்.

"அத்தை எப்படி இருக்கீங்க..?" அவன் முகத்தில் பளீர் புன்னகை..

"பரவாயில்லையே என்னை ஞாபகம் வச்சிருக்கியே..‌!! வா ஆழி.. நல்லா இருக்கியா..‌" பாசமாக விசாரித்தாள் ஷீபா..

"என்ன அத்தை உங்கள மறக்க முடியுமா..‌ பேசி பழகாமல் போனாலும் சொந்தம் விட்டுப் போகாதே..!! அம்மை உயிரோடு இருந்தப்போ உங்களை பத்தியும் மாமாவை பத்தியும் அடிக்கடி பேசும்.. அப்பா கூட அடிக்கடி அந்த காலத்து பழைய சங்கதிகள் பத்தி பேசிட்டே இருப்பார்.."

"ரொம்ப பொறுப்பா பேசுறியே ஆழி.. சின்ன வயசுல இருந்த விளையாட்டுத்தனமும் வெடல புத்தியும் இப்ப இல்லையே.. ரொம்ப மாறிப் போயிட்டே..!!"

"மாறாம எப்படி அத்த.. . வயசு முப்பதை தொடப்போகுதே.. இன்னும் அதே விளையாட்டுதனத்தோட இருக்க முடியாதே..!!" ஆழித்தேவன் அழகாக சிரித்தான்..‌

"சரியா சொன்னே ஆழி.. உன் அப்பா உன்னை ரொம்ப நல்லா வளர்த்திருக்கார்.. சரி உன் அப்பாவுக்கு இப்ப எப்படி.. உடம்பு தேவலாமா.. அத்தையின் நலம் விசாரித்தலில் ஆழித்தேவனின் முகம் வாடிப்போனது..

அப்படியேதான் இருக்காரு.. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சுட்டு கிடக்கோம்.. நோய்ல தவிக்கிற மனுஷன அங்கன தனியா விட்டுட்டு வந்தது தான் மனசு தாங்கல.." உதட்டை பிதுக்கி கண்களில் தன் சோகத்தை வெளிப்படுத்தினான்??

"அவருக்கு சீக்கிரம் குணமாகிடும் ஆழி.. அப்பா மேல எவ்வளவு கரிசனம்.. உன்ன மாதிரி ஒரு நல்லவனை கட்டிக்க என் பொண்ணு ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும்.."

"ஐயோ அத்தை ரொம்ப புகழாதீங்க.. நீங்கதான் சொல்றீங்க உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கணுமே.." ஒரு மாதிரியாக வளைந்து நெளிந்து கீழ்க்கண்ணால் அத்தையின் முகம் பார்த்தான்.. சட்டென்று தன் இயல்பை மாற்றிக் கொண்டான்.. இதுதான் ஆழி..

"அட நீ வேற.. உன்னைய தான் கட்டிக்குவேன்னு எம்மக ஒத்த கால்ல நிக்கிறா.. வெளிநாடு போய் படிச்சு என்ன பிரயோஜனம்.. ஆயிரம் பேர் கல்யாணம் பண்ணிக்க கேட்டு வரிசையில நிக்கிறாங்க.. அத்தன பேரையும் வேண்டினுட்டு என் மாமனத்தான் கட்டிக்குவேன்னு உனக்காக காத்திருக்கா..

"நிஜமாவா சொல்றீங்க.. இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே அத்தை.. எனக்கு அவளை கண்ட மேனிக்கு பிடிக்கும்னு வைச்சிக்கிடுங்க.. ஆனா அவளுக்கு என்னைய பிடிச்சிருக்கான்னு ஒரு தயக்கம் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு.. இப்போ ஆழி ரொம்ப ஹேப்பி..‌" என்று தன் அகண்ட தோள்களை சிலுப்பினான்..

"ஆமா நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன். என் செல்லக்குட்டியை காணோமே..!!" பையைத் தோளில் மாட்டிக் கொண்டு ஆர்வமாக சுற்றும் முற்றும் தன் அத்தை மகளை தேடினான் ஆழி..

"சிவாங்கியா.. வீட்லதான் இருக்கா.. படிப்பு முடிச்சாச்சு.. உன்னை கட்டிக்கிட்டு பொறுப்பான குடும்ப பெண்ணா வாழ எல்லா பயிற்சிகளையும் எடுத்துட்டு இருக்கா.."

"என்னது.. பயிற்சி எடுக்கிறாளா.. அதெல்லாம் ரத்தத்தில் ஊறி வரணும் அத்தை.. கோலம் போடறதும் கூடை பின்னுவதும் குடும்பம் நடத்துறது இல்ல.. அத்தனை பொறுப்புகளையும் சரியா நிர்வகிச்சு கட்டுச் சிட்டா குடும்பம் பண்ணனும்.. எம்பொஞ்சாதி ராணி மாதிரி அதிகாரம் பண்ணி வாழ்ந்தா போதும்.. சொடக்கு போட்டா சொன்ன வேலையை செய்ய வூட்ல ஆயிரம் பேர் உண்டு.. பண்ண வூட்டுக்காரிக்கு அத்தனை பேரையும் வேலை வாங்கினா போதாதா..? மீசையை முறுக்கினான் ஆழி.. ஷீபாவிற்கு தலை சுற்றியது..

"சரி அத விடுங்க.. முதல எம்மாமன் மகள காட்டுங்க.. முதல்ல அவள பாத்துட்டு தான் அடுத்த சங்கதி.." மீசைய முறுக்கு எப்படி இடுப்பில் கைவைத்து நின்றான் ஆழி..

"உன் மாமா மகள பொறுமையா பாக்கலாம் முதல்ல போய் குளிச்சிட்டு தாத்தா பாட்டியை போய் பாரு.. காலையிலிருந்து ரெண்டு மூணு முறை உன்னை கேட்டுட்டாங்க.."

"அப்புறம் வந்து சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடு.. நிதானமா உன் மாமன் மகள பார்த்து நாள்பூரா பேசிட்டே இரு.. யாரு வேண்டான்னு சொன்னா.. சிவாங்கி எங்கேயும் ஓடிட மாட்டா அவ உனக்கானவ.. நீ இந்த வீட்டு மாப்பிள்ளை ஆழி.. உன்னை சரியா உபசரிக்க வேண்டியது எங்களோட கடமை..‌" குழைந்தஇனிப்பாக பேசியவள் "வேலாஆஆ" என்று சத்தம் போட்டு அழைத்தாள்.. சர்வன்ட் உடையில் ஒருவன் ஓடி வந்தான்..

"இவர் இந்த வீட்டு மாப்பிள்ள.. சிவாங்கியை கட்டிக்க போறவரு.. இவருக்கு அவர்கள் தங்கிக்க வேண்டிய ரூமை காட்டு.."

"சரி மா..‌"

ஆடித்தேவனின் பக்கம் திரும்பினாள்.. "இது உன்னோட வீடு ஆழி.. எந்தவித சங்கடமும் இல்லாம நீ சௌகரியமா இருக்கலாம்.."

"எனக்கென்ன சங்கடம் அத்த.. ஒரு பக்கம் பார்த்தா என் தாய் மாமன் வீடு.. இன்னொரு பக்கம் பார்த்தா என் தாத்தா பாட்டி வீடு.. ஆக மட்டும் இது என்னோட வீடு.." அழுத்தமாக அதே நேரத்தில் சிரித்துக் கொண்டே சொல்ல ஷீபா எச்சில் விழுங்கினாள்.. காட்டான் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்று பார்த்தால் இவன் கொஞ்சம் விவரமாகவே இருக்கிறானே.. ஷீபாவின் நெஞ்சுக்குள் கலவரம்..

"அப்படியே இந்த பேக்கை கொண்டு போய் ரூம்ல வச்சுடு.." வேலையாளிடம் சொன்னாள்..

"பரவாயில்ல அத்தை என் பையை நானே கொண்டு வரேன்.."

"அட அவன் கிட்ட குடு ஆழி.. பையில என்ன பொன்னும் வைரமுமாவா வெச்சிருக்க.. இத்துப்போன நாலு பேன்ட்டும் சட்டையும் தானே.." ஷீபாவிடம் இயல்பான இளக்காரம் எட்டிப் பார்த்தது..

"அட என்னத்த அப்படி சொல்லிப்புட்டீங்க அத்த.. பொன்னும் வைரமும்தான் வச்சிருக்கேன்.. இங்கன பாருங்க.." தன் பையை மேஜை மீது வைத்து சிப்பை திறந்தவன் உள்ளிருந்த ஒரு நகை பெட்டியை எடுத்து திறந்தான்.. உண்மையில் சொன்னது போல் பொன்னும் வைரமுமாக குட்டி குவியலாக நகைகள் கண்களை கூச வைத்தன.. அந்த வேலையாறற் வேலன் இமைக்க மறந்து வாயைப் பிளந்தான்..

ஷீபா மூச்சுவிட மறந்தாள்..

"என்ன தம்பி இவ்வளவு நகை.. 100 பவுனை தாண்டி போகும் போலிருக்கே.." மேல் மூச்சு வாங்கியது..

"ஆமா அத்தை.. எல்லாம் அம்மையோட நக.. இது தவிர மிச்சம் 200 பவுன் வீட்ல கிடக்குது.. கல்யாணம் பேசும்போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் பொண்ணுக்கு சீர் செய்யணும் இல்ல.. அதனால தான் அப்பாரு சொன்னபடி பார்த்து கொஞ்சமா கொண்டு வந்தேன்.. இது தவிர நானும் என் பொண்டாட்டிக்காக கிலோவா நான் சேர்த்து வச்சிருக்கோம்ல..

"ஆத்தாடி.. கல்யாணம் கட்டிக்கற முன்னே உன் பொண்டாட்டி மேல எத்தனை ஆசை..‌" ஷீபாவின் பேச்சு பேச்சாக இருந்த போதிலும் கண்கள் அந்த நகையை ஆவலோடு மொய்த்தன..‌

"இந்த நகையை இப்படி குடு.. நானே உன் பொண்டாட்டி கிட்ட.. கொடுத்துடறேன்.." நகைகளை அள்ளியெடுக்க கைகளை நீட்டினாள் ஷீபா..

"ஆஆஹான்.. இதையெல்லாம் என் பொண்டாட்டி கிட்ட நான்தான் கொடுப்பேன்..‌ அதுவும் சரியா கல்யாணம் பண்ணிக்கற அன்னிக்கு நானே என் கையால அவளுக்கு ஒண்ணு ஒண்ணா போட்டு விடுவேன்.." என்று அவசரமாக பையை சிப்பை மூடி எடுத்த தோளில் மாட்டிக்கொண்டு அந்த வேலையாளோடு நடந்தான் ஆழி..

"அடேங்கப்பா அசால்ட்டா 100 பவுன் நகையை பையில போட்டு எடுத்துட்டு வந்துட்டானே.. ரொம்ப பெரிய இடம்தான்.. எப்படியாவது வளைச்சு போட்டுடனும்.. எல்லாம் அவ கையில தான் இருக்கு.. அடியே சிவாங்கி.. பாத்து பக்குவமா நடந்துக்கோ..‌" தனக்குள் புலம்பி கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள் ஷீபா..

"ஏன் சார் நீங்க பஸ்லையா வந்தீங்க.." வேலன் மரியாதையோடு கேட்டான் ஆழியிடம்..

"ஆமா ஏன்..?"

"பஸ்ல இந்த பையை எங்க வச்சிருந்தீங்க..?"

"டாப்ல.."

"என்னது..?" கேட்ட வேலையாளுக்கு நெஞ்சுவலி வராத குறை..

"அது எப்படி சார்.. இவ்வளவு நகையை பொறுப்பில்லாமல் பஸ் ஓட டாப்ல வச்சிருந்தேன்னு சொல்றீங்க யாராவது எடுத்துட்டு போயிருந்தா..?"

நின்று அவனை கூர்மையாக பார்த்தான் ஆழி..‌ "என் கண் பார்வையைத் தாண்டி எவன் என் பையை எடுத்துட்டு போய்ட முடியும்.. எடுக்கிற கையை வெட்டி விரால் மீன் கணக்கா வீசிட மாட்டேன்.." சீற்றத்தோடு அவன் குரல் உறுமியது..‌

"அடடா கிராமத்தான் பேச்சும் கரடு முரடாத்தான் இருக்கு..‌" வேலன் சுதாரித்துக் கொண்டு அவனுக்கான அறையில் பையை வைத்துவிட்டு.. "சார் இங்கே எல்லா வசதியும் இருக்கு.. ஏதாவது வேணும்னா என் பெயரை சொல்லி கூப்பிடுங்க வந்து உடனே நிப்பேன்.."

"ஆமா உம்மட பேரு என்ன..?"

"வேலன்.."

"சரிங்க ரொம்ப நன்றி.." இரு கைகளைக் கூப்பி வணக்கம் வைத்தான்..

"அட என்ன சார்.. வேலைக்காரனுக்கு போய் வணக்கம் வச்சிக்கிட்டு" வேலன் வெளியேறி சென்று சில வினாடிகளுக்கு பிறகு..

"வேலா.. ஆஆ.." சத்தமாக அழைத்தான் ஆழி..

"சார்ர்ர்" கீரிச்சிட்டு ஸ்கேட்டிங் செய்த கால்களோடு உடனடியாக வந்து நின்றான் வேலன்..

"இல்ல.. நீங்க வெளியே போன பிறகு நான் கூப்பிட்டா காது கேட்குதா..? நீங்க வருவீங்களான்னு செக் பண்ணி பார்த்தேன்.. வேற ஒன்னும் இல்ல.." ஆழி இதழ் பிரிக்காமல் சிரிக்க..‌

"சரிதான் நீங்க ரொம்ப புத்திசாலியாத்தான் இருக்கீங்க.. என்னவோ ஜோடியில ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் அறிவாளியா இருந்தா சரிதான்" ஒரு மார்க்கமாக தலையசைத்து விட்டு வேலன் அங்கிருந்து சென்றிருந்தார்..

இடுப்பில் கைவைத்து அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான் ஆழி.. விசாலமான அறை.. கிங் சைஸ் கட்டில்.. வசதியான குளியலறை.. நவீன இன்டீரியர் டெக்கரேஷன்.. வண்ண விளக்குகள்.. தேக்கு மர கப்போர்ட்.. விசாலமான ஜன்னல்.. ஏர் கண்டிஷனர்.. குட்டியான பிரிட்ஜ்.. என அறை என்னவோ வசதியாக.. அழகாகத்தான் இருந்தது.. ஆனால் இங்கு ஏதோ அந்நியத்தன்மை..

ஜன்னலை திறந்து வைத்தால் சின்ன குழந்தைகள் போல் சிலுவென கொஞ்சி கொண்டே உள்ளே வரும் காற்றும்.. குளிருக்கு கத கதப்பையும் வெப்பத்திற்கு இதமான குளிரையும் அள்ளித்தரும் வசதியான மாயச் சூழ்நிலையும் கார்காலத்தில் தரையை முத்தமிடும் மழைத்துளிகளும்.. இரவில் வட்ட நிலா வந்து விழும் முற்றமும்.. கோயிலையும் மண்டபத்தையும் ஒருங்கிணைத்தது போன்ற தன் பாரம்பரிய பிரம்மாண்ட வீடு போல் இந்த உலகத்தில் வேறு எந்த சொர்க்க பூமியும் கிடையாது என்பது அவன் எண்ணம்.. தாலிகட்டி மனைவியை ஊருக்கு அழைத்து செல்ல மனிதில் இப்போதிலிருந்து தவிப்பும் துடிப்பும்..

ஆழ்ந்த பெருமூச்சோடு கட்டிலில் அமர்ந்தான் ஆழி..‌ சிவாங்கியை காண அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது.. பதினாறு வயதில் மாமா மாமா என்று தன்னை சுற்றி வரும் போது பருவ சிலிர்ப்போடு கண்டிருக்கிறான்.. அந்த வயதிற்கே உரிய திமிரும் அலட்டலும் அவளிடம் உண்டு என்றாலும் இப்போது பக்குவப்பட்டு மாறியிருப்பாளா..? என்றொரு தவிப்பு.. அழகில் அவள் தேவதை.. பதினாறு வயதில் பார்த்த அந்த முகம் கலங்கலாக இப்போது கனவில் தோன்றி தொந்தரவு செய்கிறது..‌ உனக்கு அவள்தான் என்று அன்னை சொன்ன அடுத்த கணத்திலிருந்து அவளை நெஞ்சில் தாங்கி கனா காண ஆரம்பித்தாயிற்று..

அன்னை கைகாட்டிய பெண் என்றால் நிச்சயம் தனக்கு பொருத்தமானவளாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கை.. அதைக் காட்டிலும் அன்னை தன்னிடம் வாங்கிக் கொண்ட சத்தியம்.. தன் மீது உயிரையே வைத்திருந்த பெற்றவள் சாகும் தருவாயில் "உனக்கானவள் சிவாங்கிதான்.. உன் மாமனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை.. நீதான் நிறைவேற்றனும்.. இந்த அம்மா மேல உயிரையே வச்சிருந்தா எனக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சா.. எந்த நிர்பந்தமும் இல்லாமல் சிவாங்கியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. அப்போதான் இந்த அம்மா உனக்கே வந்து பொண்ணா பொறப்பேன்.." என்று அவன் கையை தலையில் சத்தியம் செய்து இறந்து போனாளே..

அந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காகவே சிவாங்கி மேல் பிரியத்தை வளர்த்துக் கொண்டான்.. ஒரு கட்டத்தில் அவள்தான் மனைவி என்று அவனையும் மீறிய உணர்வில் கனவுகளில் அவளோடு வாழ ஆரம்பித்து விட்டான்.. பதினாறு வயதில் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட பருவப் பெண்ணை இப்போது வரை எண்ணி ஏங்குகிறான்.. இருபத்தைந்து வயதான சிவாங்கியை பார்க்க மனம் துடித்துக் கொண்டிருக்கிறது..

இப்போது எப்படி இருப்பாள்.. அப்போதே அழகு தேவதை.. இப்போது மென்மேலும் மெருகேறி இருப்பாள்.. தேகத்தங்கங்களில் மாற்றம் கொண்டு உருண்டு திரண்டு.. விழிகளை மூடி சிரித்தான் ஆழி..

மனம் லயித்து கற்பனையில் மூழ்கியிருந்த வேளையில் படாரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தாள் ஒருத்தி.. தலைவிரி கோலமாய் "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க ப்ளீஸ்" என்று.. கீழே தடுக்கி விழுந்து அவனிடம் ஓடி வந்து நின்றவளை கண்டு பதட்டத்தோடு எழுந்து நின்றான் ஆழி..

விரிந்த கூந்தல் அவள் முகத்தை மறைத்திருக்க.. "கா..ப்பா.. கா..ப்பா..த்துங்க.. அவ..ங்க என்ன அடிக்..கிறாங்க.. எனக்கு வலிக்..குது.." விம்மிய அழுகையோடு தனது காயங்களை காண்பித்தபடி.. உடல் நடுங்க அவனோடு ஒட்டிக்கொண்டாள் அந்தப் பெண்..

"யாருமா உன்னை அடிக்க வர்றா.. யாரு நீ.." என்று பதட்டத்தோடு அவள் பின்னால் பார்த்தவன் ஒருவேளை இவள் தான் சிவாங்கியோ.. அடக்கடவுளே என்ன இது சோதனை.. என்ற பதட்டத்தோடு அவள் கூந்தலை ஒதுக்கி முகம் பார்த்தான்..

இல்லை இவள் சிவாங்கி இல்லை.. மாநிறத்தில் முகமெல்லாம் அம்மை தழும்போடு.. நறுங்கிய உருவத்தில்.. பதினைந்து வயது சிறுமி போல்..

நிச்சயம் இவள் என் சிவாங்கியே இல்லை.. 16 வயதிலேயே பூரித்து ரோஜா நிறத்துடன்.. செழிப்பாக எத்தனை அழகாக இருந்தாள் என் சிவாங்கி..‌

அப்படியானால் இவள் யார்..? அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்தான்.. நீளமான கூந்தல்.. உதடுகள் அழுகையில் நடுங்கிக் கொண்டிருந்தன.. கண்களில் பயம்.. ஆழித் தேவனுக்கு அந்தப் பெண்ணை பார்க்கவே பாவமாக இருந்தது..

பின்னால் ஜெயில் வார்டன் போல் ஒரு பெண் பற்களை கடித்துக் கொண்டு ஓடி வந்தார்..

வந்த வேகத்தில் அவள் வைத்திருந்த நீள்குச்சியினால் அந்தப் பெண்ணின் முதுகில் ஓங்கி பளாரென ஒரு அடி வைத்தாள்..

"அம்மா ஆஆஆஆ.. ஆஆஆ" பெருங்குரலெடுத்து அலறினாள் அந்தப் பெண்..

பார்த்துக் கொண்டிருந்த ஆழித்தேவனுக்கு நெஞ்சம் கலங்கி போனது..

"ஏய் சனியனே ஒரு இடத்தில் இருக்க மாட்டியா நீ.. என்ன எழவ இழுத்து வைக்க இங்க வந்த.. பைத்தியம் பைத்தியம்.." மீண்டும் அவளை அடிப்பதற்காக அந்த குச்சியை ஓங்கும் முன் அந்தப் பெண்ணை தன் பக்கம் தள்ளி நிறுத்திக் கொண்டு தன் வலிமை வாய்ந்த கரத்தால் மூங்கில் குச்சியை பதமாக பிடித்திருந்தான் ஆழித் தேவன்..

தொடரும்
Yaru antha kutty Papa
 
Top