- Joined
- Jan 10, 2023
- Messages
- 47
- Thread Author
- #1
சின்னதாக துணிக்கடையை ஆரம்பித்து அதை ஜவுளிக்கடலாக விஸ்தரித்து.. பெருமளவு சொத்து சேர்த்து வைத்திருந்த நாராயண சுவாமியின் இளைய மகள்தான் அகலிகா.. அவர் மூத்த மகன் பிரேம் நாராயண சுவாமிக்கு ஒத்தாசையாக தொழிலை கவனித்துக் கொள்கிறான்.. திருமணம் ஆகிவிட்டது.. அவன் மனைவி நந்தினியும் பணக்கார வாரிசு.. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் பிள்ளையும் உண்டு..
நந்தினிக்கு அகலிகாவிற்கும் பெரிதாக எந்த விஷயத்திலும் ஒத்துப் போவதில்லை.. பாசமோ உறவென்ற ஒட்டுதலோ.. குறைந்த பட்ச நட்போ இல்லாத அளவிற்கு ஆணவமும் திமிருமாக தடுப்பு சுவர் எழுப்பி இருவரையும் பிரித்து வைத்திருக்கிறது.. பெரிய வீடு என்பதால் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் தர்ம சங்கடங்கள் அவ்வப் போது நிகழ்வதில்லை.. நந்தினிக்கு அகலிகாவிடம் பேச பெரிதாக விஷயமும் ஒன்றுமில்லை.. அப்படியே அவசியம் ஏற்பட்டாலும் கணவனை தகவல் தொடர்பாக பயன்படுத்திக் கொள்வாள்..
அகலிகாவிற்கும் நந்தினியிடம் பெருத்த அலட்சியம் உண்டு.. அண்ணன் மகன் தீபனை மட்டும் அவ்வப்போது அழைத்து வந்து விளையாடுவாள்.. அதுவும் அவளுக்கு போரடிக்கும் சமயங்களில் மட்டும்..
மித மிஞ்சிய பணம்.. ஒரே மகள் என்ற அப்பாவின் அதிகப்படியான செல்லம்.. எது கேட்டாலும் கிடைத்து விடும் மமதை.. மனித மனங்களின் அருமை தெரியாத அவளின் குணம்.. அத்தனையும் சேர்ந்து அவளுக்குள் வேறு விதமான நிஜத்திற்கு பொருந்தாத கலர் கனவுகளை உருவாக்கியிருந்தது..
தனது வாழ்க்கைத் துணை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னுள் பலவிதமான கற்பனைகளை வளர்த்து வைத்திருந்தாள்.. தோழிகளோடு பேசும்போது படங்களை பார்க்கும் போது.. கதைகளை படிக்கும் போது.. ஆறடியில் ஒரு ஆணழகன்.. கட்டுக்கோப்பான வயிற்றுப் படிக்கட்டுகளை கொண்ட உடல்வாகு.. நிச்சயமாய் பிசினஸ்மேனாக இருக்க வேண்டும்.. கோடிகளில் சம்பாதிக்க வேண்டும்.. கண்களில் திமிர் உதட்டோர அலட்சியம்.. பெண்ணை மயங்க செய்யும் வன்மை.. என இஷ்டத்திற்கு தன் கணவனாக போகிறவனை பற்றி கற்பனைகளை வடித்து கனவுகளில் மிதந்து கொண்டிருந்தாள்..
மாப்பிள்ளை பார்க்கப் போகிறேன் என்று அப்பா சொன்ன போது கூட தன் எட்டு பக்க கண்டிஷன்களை அவரிடம் வரையறுத்து தெளிவாக கூறியிருந்தாள்..
ஒருவேளை நாராயணன் மாப்பிள்ளை பார்த்திருந்தால் மகளின் நிபந்தனைகளுக்குட்பட்ட ஆல்ஃபா மேல் மணமகனை தேடியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்..
ஆனால் அவர்தான் வரன் பார்க்கும் பொறுப்பை அகலியின் அண்ணன் ப்ரேமிடம் ஒப்படைத்துவிட்டு தனது தொழிலில் பிஸியாகிவிட்டாரே..
அவள் சொன்ன மாப்பிள்ளைக்கான குணநலன்கள் தோற்றப்பொலிவு அத்தனையும் காற்றில் பறக்கவிட்டு அவள் முக்கிய நிபந்தனையாக சொன்ன 6.2" உயரத்தை மட்டுமே நினைவில் வைத்திருந்தவன்.. ஆறடிக்கும் சற்று அதிகமான கௌதமனை அவளுக்காக தேர்வு செய்திருந்தான்..
பிரேம்மை பொறுத்தவரை நல்ல குடும்பம்.. தங்கள் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் மாப்பிள்ளை நல்ல குணம்.. சொந்தமாக பட்டறை வைத்து பர்னிச்சர் கடை வைத்திருக்கிறார்கள்.. உழைக்கும் வர்க்கம்.. நிச்சயமாக ஒரு நாளில் முன்னேற கூடும்.. படிப்பு..? ஒரு டிகிரி முடித்திருக்கிறான்.. அது போதும்.. பின்னாளில் ஏதேனும் பணப் பற்றாக்குறை.. தொழில் தொடங்க முதலீடு தேவை என்றாலும் அப்பா பார்த்துக்கொள்வார்.. என்று தன் மூளைக்கு எட்டிய வரை சகல விதங்களிலும் அகலிகாவிற்கு பொருத்தமான மாப்பிள்ளையாக கௌதமனை தேர்ந்தெடுத்திருந்தான் அவள் சகோதரன்..
சாதாரணமாக ஒருபெண்ணிற்கு வரன் பார்க்கும் போது முன் வைக்கப்படும் அடிப்படை தகுதிகள்தானே இவை.. இந்த தகுதிகளை ஆதாரமாக வைத்து பத்துக்கு பத்து மதிப்பெண்களை பெற்றிருந்த கௌதமனை.. பிரேம் தன் தங்கைக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்ததை தவறு என்று சொல்லிவிட முடியாதே..!!
கௌதமன் அகலிகாவிற்கு பொருத்தமானவன் என்று தன் தந்தை நாராயண சுவாமியிடம் எடுத்துசொல்லி சம்மதம் வாங்கியிருந்தான் அண்ணனாகப் பட்டவன்..
"எல்லாம் சரிதான் பா.. உன் தங்கச்சி என்னென்னவோ கண்டிஷன் போட்டாளே..!! அதுக்கெல்லாம் இந்த பையன் சரி வருவானா..?" சந்தேகமாக கேட்டார் அவர்..
"அவ சின்ன பொண்ணு.. வாழ்க்கையை பற்றி சரியா புரிஞ்சுக்காம.. சினிமா ஹீரோ மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்கலாம்.. நிதர்சனத்தை நாமதான் புரிய வைக்கனும்.. நல்ல பையன்.. நல்ல குடும்பம்.. இப்ப அப்பா கூட சேர்ந்து தொழில் பண்றான்.. ஆனா போக போக நல்ல வளமான எதிர்காலம் உண்டு.. பேச்சும் செயலும் ரொம்ப திருப்திகரமா இருக்கு.. முகத்தில் சாந்தம் தவழுது.. தங்கச்சியை நல்லபடியா பார்த்துக்குவான்.. இதுக்கு மேல என்னப்பா வேணும்..!!" மகனின் பேச்சில் திருப்தி அடைந்தார் நாராயணசாமி..
"அப்புறம் அப்பா அகலிகிட்ட நான் பேசிக்கறேன்.. அவ கேட்கிற கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது..!! ஏதாவது உளறுவீங்க.. அவ பிரச்சனை பண்ணுவா..!!" என்று தந்தையை ஆட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு.. தங்கையை அவனே சமாளித்தான்..
பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ தான் அவளுக்கு காண்பிக்கப்பட்டது.. அதில் பெரிதாக அவன் உடல் தோற்றம் தெரியவில்லை.. கருத்த நிறம் ஆனால் களையாகத்தான் இருக்கிறான் இந்த விஷயத்தில் அவளுக்கு திருப்தி தான்..
"அண்ணா உயரம்..?"
"ஆறடிக்கு மேல.. அண்ணாந்து பார்த்து தான் பேச வேண்டி இருக்கு!!"
"அப்புறம்.. பிசிக் எப்படி இருக்கு..? சிக்ஸ் பேக் இல்லனா எய்ட் பாக் வச்சிருக்காரா..?" கண்களில் ஆசை மின்ன கேட்டாள்..
"என்ன அகலிமா சட்டையை கழட்டியா பாக்க முடியும்.. ஆனா அவர் போட்டிருந்த சட்டை இறுக்கமாக இருந்ததில் ஜிம் பாடின்னு மட்டும் தெரிஞ்சது..".அளந்து விட்டான்..
"அப்புறம்..?"
"நுனி நாக்குல இங்கிலீஷ் பேசறார்.. பெரிய தொழிலதிபர்.. லட்ச லட்சமா சம்பாதிக்கிறார்.. ரொம்ப திமிர் பிடிச்சவர் போலிருக்கு.. !! இப்படி தான் சமாளிக்க போறியோ..!!" என்று பெருமூச்சுவிட்டான். அத்தனையும் பொய்தான்.. ஆனாலும் அவன் மனசாட்சி உறுத்தவில்லை..
வாவ் ஆல்ஃபா மேல்.. அகலிக்கு திருப்தி..
"அதையெல்லாம் நான் பாத்துக்குவேன்.." அகலி வெட்கப்பட்டாள்..
திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டது.. பெண் பார்க்கும்போது கௌதமன் வந்திருந்தான்..
வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்த பெண்ணின் நிழற்படத்தை பார்த்த மாத்திரத்தில் அகலிகா அவன் நெஞ்சில் நீக்கமற நிறைந்து போயிருந்தாள்..
இப்போது நேரில் பார்த்த கணம் மொத்தமாக அவளிடம் விழுந்துவிட்டான்.. அகல்யா பேரழகி.. சினிமா நட்சத்திரத்தை போல் சிவந்த தேகம்.. நளினமான வளைவு நெளிவுகளோடு கூடிய சீரோ சைஸ் உடற்கட்டு.. பெரிய விழிகள்.. வில்லாக வளைந்த புருவம்.. கூர் நாசி.. பார்க்க பார்க்க திகட்டாத அழகான உதடுகள்.. வெண்ணெய் கட்டி போல் வழுவழுப்பான தோல்.. என பிரம்மன் செதுக்கிய தேர்ந்தெடுத்த சிற்பமாய் கண்முன் நிற்கும் பெண்ணவளின் அழகில் மயங்கி தன் மனதை பறி கொடுத்திருந்தான் கௌதமன்..
அவன் கொஞ்சம் தளர்வாக சட்டை அணிந்திருந்த காரணத்தால் அவன் சிக்ஸ் பேக் மோசடி விஷயம் அவளுக்கு தெரியவில்லை.. நல்ல நெடுநெடு உயரம்.. ஆழ்ந்த பார்வை.. வேறு எதையும் பெரிதாக தெரிந்து கொள்ள முடியாது போனதில் சந்தேகம் வரவில்லை.. அண்ணன் என்ன பொய்யா சொல்லப் போகிறான் என்ற சகோதரன் மீதான அதீத நம்பிக்கையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள்..
திருமணம் நிச்சயிக்கப்பட்டு தட்டு மாற்றப்பட்டது.. மாப்பிள்ளை வீட்டார் அகலிகாவிற்கு பூ முடித்து நிறைந்த மனதோடு விடை பெற்று சென்றனர்.. அகலிகாவும் கௌதமனும் பார்வையால் பேசிக்கொண்டனர்..
கௌதமனும் தன் தங்கையும் ஃபோனிலோ அல்லது நேரிலோ கலந்து பேசிக் கொள்ளாதவாறு படு கவனமாக பார்த்துக் கொண்டான் பிரேம்..
திருமணம் வரையில் இந்த கட்டுப்பாடு.. மணமான பிறகு உண்மை தெரிந்தால் பரவாயில்லை.. கணவன் மனைவி நெருக்கத்தில் இது போன்ற அல்பமான குறைகள் காதலிலும் காமத்திலும் கரைந்து மறைந்து போகும்.. என்பது அவன் கணக்கு..
அப்படி நிகழ்ந்திருந்தால் பரவாயில்லை..!!
அகலிகா தன் எதிர்ப்பார்ப்புகளில் எந்த விதத்திலும் சமாதானம் செய்து கொள்ளவில்லை..
ஒரு நல்ல முகூர்த்த நாளின் இருவருக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்திருந்தது...
புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் நேரம் வீட்டை அண்ணாந்து பார்த்தாள் அகலி..
அவள் வீடளவு பெரியதாக இல்லை..!! ஓரளவு வசதியான வீடு என்று சொல்லிக் கொள்ளலாம்..
ஆனால் அவள் ஆசை பிறந்த வீட்டை போல புகுந்த வீட்டிலும் மாளிகையில் வாழ வேண்டும் என்பது.. முதல் எதிர்பார்ப்பிலேயே மண்..அடியெடுத்து வைத்து வீட்டுக்குள் நுழையும்போதே அவள் முகம் மாறி போயிருந்தது..
மணப்பெண் மாப்பிள்ளைக்கு பால் பழம் கொடுக்கப்பட்டு சொந்த பந்தங்களோடு இணைந்து கலகலப்பாக சிரித்துக் பேச வேண்டிய கட்டாயத்தில் கற்பனைகளின் கண்டிஷன்களை விருப்பப்பட்டு ஒதுக்கி வைத்திருந்தாள் அகலி..
அடுத்த அடியாய்..
அவள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கௌதமன் இல்லை என்பதை முதலிரவில் தெரிந்து கொண்டு மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தாள் அகலிகா..
மிக மென்மையாக சிரிக்கிறான்.. பேச்சில் கூட சத்தமில்லாமல் முத்து உதிர்வதைப் போல் அத்தனை மென்மை..
சின்ன சின்ன விஷயத்திற்கு அனுமதி கேட்பதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை..
முரட்டுத்தனமாக அணைத்துக் கொள்வதும்.. அனுமதி பெறாமல் தாம்பத்தியத்தில் எல்லை மீறுவதும் ஆண்மை என்று நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு.. கௌதமனின் செயல்கள் மனதில் எந்த இனிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. பத்தோடு பதினொன்றாக சர்வ சாதாரணமாக தெரிந்தான் அவன்.. அவள் கனவு நாயகன் இவன் இல்லை..
"கல்யாணம் பிக்சான தேதியிலிருந்து உன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினதில்லை.. ஏதோ ஜாதக தோஷமாம்.. பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க..!! அதனால ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சிக்க முடியாமலே போயிடுச்சு.. ஆனா இப்போ நிறைய பேசலாம்.. விடிய விடிய பேசலாம்.. யாரும் நம்மள தடுக்க முடியாது.." அவன் சிரித்தான்..
"என்னது.. விடிய விடிய பேசணுமா..? இதெல்லாம் ஆண்மைக்கு அழகா..!! பக்கத்தில் அப்சரஸ் போல் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு எந்த மட சாம்பிராணியாவது இப்படி பழைய பஞ்சாங்கமாய் பேசிக் கொண்டிருப்பானா..!!" முகம் சுழித்தாள் அகலிகா..
"உன்னை பத்தி சொல்லேன் அகலி.. தெரிஞ்சுக்கறேன்.." அன்பான குரலில் கேட்டான்..
"நீ என்ன படிச்சிருக்க..?"
"உனக்கு என்னெல்லாம் பிடிக்கும்.."
"எதெல்லாம் பிடிக்காது.."
"ரொம்ப கோபம் வருமோ?"
என்று அவன் கேட்டதற்கெல்லாம் பதில் சொன்னாள்..
"நீ புடவையில் ரொம்ப அழகா இருக்க.. உன்னை புடவையில் இப்படி பார்க்க ரொம்ப பிடிச்சிருக்கு..?" குழைந்தான்.. கருகருநிறத்தில் அவன் பற்களை காட்டி சிரிப்பது பிடிக்கவில்லை.. ஆண் என்றால் கெத்தாக இருக்க வேண்டாமா..?.. இதென்ன வழிசல்..
"தேங்க்ஸ்" என்றாள் லேசாக புன்னகைத்து..
காதலை யாசிக்கும் ஆரம்ப கட்ட காதலன் போல் அவன் அசட்டுத் தனமாக போராடிக் கொண்டிருப்பதாக தோன்றியது அகலிகாவிற்கு..
கணவன் என்ற உரிமையோடு அதிகாரத்தோடு அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படவில்லை.. அழுத்தம் கொடுக்காத மிக மென்மையான உரையாடல்..
வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது.. அவன் விரல் நகம் கூட அவள் மீது படவில்லை.. பார்வை கூட விரசமாக உரசவில்லை.. இப்படியும் ஒருவன் இருப்பானா என்று சலித்து போனாள் அகலிகா..
இவன்தான் அக்மார்க் தங்கம் என்று புரியாமல் போனது..
அவள் எதிர்பார்ப்புகள் வேறு.. அளவு கடந்த ரொமான்ஸ்.. கட்டி இழுக்கும் கொஞ்சல் பேச்சுக்கள்.. திணற வைக்கும் பார்வை..!! இங்கு அதற்கு நேர் மாறாக.. பள்ளி குழந்தைகளிடம் சாக்லேட் கொடுத்து பேச்சு வளர்ப்பதைப் போல்.. ஒரு சுவாரசியம் இல்லாத பேச்சு..
"உன் கைய பிடிச்சுக்கட்டுமா..!!" அவன் தயங்கி தயங்கி கேட்க உச்சகட்ட கடுப்பில் ஆழ்ந்தாள் அகலிகா..
"ம்ம்.." என்று அகலி அனுமதி கொடுத்த பிறகு.. பார்வையால் வருடி.. அவள் கைகளை தொட்டு தழுவி.. நெருங்கி அவளை அணைத்து.. பின் விளக்கை அணைத்து.. மெல்ல மெல்ல முத்தங்களோடு ஆரம்பித்த தாம்பத்தியம் எங்கே தொடங்கி எங்கே முடிவுற்றது ஒன்றும் புரியவில்லை..
"இவ்வளவுதானா கணவன் மனைவிக்கு இடையேயான உறவு..!! இதுதான் தாம்பத்தியமா.. இதற்கு தான் இந்த பாடா..? கடவுளே..!!" அலுத்து போனாள்..
மனைவியை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்று பார்த்து பார்த்து அவளோடு உறவாடியது.. பெரிய வித்தையாக தெரியவில்லையாம்..
சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப்போக மாட்டேன்..
சாகசத்தைக் காட்டு செத்துப் போக மாட்டேன்..
என்று சினிமாக்களில் கதைகளில் முரட்டுத்தனமான ஹீரோக்களின் தழுவுதல்களை பார்த்து பழக்கப்பட்டவளுக்கு.. அவன் அதீத மென்மை காதலாக இனிக்கவில்லை..
கல்லூரிகளில் கூட சில திருமணமான மாணவிகள் தங்கள் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வது உண்டு..
தன் கணவனை ஆண்மையின் நாயகனாக சித்தரித்து அவர்கள் கூறிய கதைகள் இவளுக்குள் ஏகப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன..
அந்த எதிர்பார்ப்பு நிராசையாகி போக உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கியது..
இன்பம் இல்லை என்று சொல்லிவிட முடியாது ஆனால் அவள் எதிர்பார்த்த இன்பம் கிடைக்கவில்லையாம்.. மதிப்பெண் போடச் சொன்னால் அவன் ஆண்மைக்கு நூற்றுக்கு பத்து மதிப்பெண்களை கூட தந்திருக்க மாட்டாள்..
என்னென்னவோ எதிர்பார்த்து கற்பனை கோட்டை கட்டிய கல்யாண வாழ்வு முதலிரவில் பூஜ்ஜியத்தில் முடிந்துவிட்ட உணர்வு..
கூடல் முடிந்த பிறகு மனைவியை இழுத்து மார்பின் மீது போட்டுக்கொண்டு உறங்குவதோ அல்லது அவளை நெருக்கடித்து நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டு கண்கள் மூடுவதோ இல்லாமல் அவள் மீது கரத்தை மட்டும் போட்டுக் கொண்டு உறங்கி இருந்தான்..
ஒருவேளை அவளாக நெருங்கி வந்து மார்பின் மீது படுத்துக்கொண்டாலும் அவன் எதுவும் சொல்லப்போவதில்லை.. சொல்லப்போனால் அவள் அரவணைப்பில் மிகுந்த சந்தோஷப்பட்டிருப்பான்..
எதிலும் முதற்புள்ளி அவனிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். அதுதான் ஆண்மையின் அடையாளம் என்று அவள் மூளையில் பதிய வைக்கப்பட்டிருந்தது..
இது எப்படியோ..? தன் கணவன் கோட் சூட் அணிந்து கொண்டு மிடுக்காக அலுவலகத்திற்கு செல்லும் மிகப்பெரிய தொழிலதிபன்.. லட்சங்களில் லாபம் பார்ப்பவன்.. அந்த வகையில் தான் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.. தன் கணவன் ஒரு பிசினஸ் மேன்.. என்று தன் தோழிகளிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. என்று நிம்மதியுடன் கண்மூடி உறங்க ஆரம்பித்திருந்தாள்..
அந்த வகையிலும் மறுநாள் மிகப்பெரிய ஏமாற்றத்தை உணரப்போவதை அறியாமல்..
தொடரும்..

Last edited: