- Joined
- Jan 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அந்த ஸ்டோர் மேனேஜரும் தங்க நகைகள் பிரிவின் இன்சார்ஜ் மற்றும் இரண்டு சூப்பரா வைசர்கள் என நான்கு ஆண்கள் அங்கே நின்றிருந்தனர்..!
நான்கு பேர் கண்களிலும் அத்தனை கேலி நக்கல் வஞ்சம்..! ஒருவனின் பார்வையிலும் நேர்மையில்லை..
விசாரணை நடக்கவில்லை..! இவள்தான் குற்றவாளி என பழி சுமத்தி தண்டனை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை போல் தெரிந்தது..
"முதலாளி வருவாரா..?"
"இந்த மாதிரி சில விஷயத்துக்கெல்லாம் அவரு ஏன் வரப்போறாரு.. இந்த திருட்டு கழுதையை போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ண சொல்லிட்டார்.. இன்ஸ்பெக்டர் வந்துட்டே இருக்கார்..!"
"அவளோட ஹேண்ட்பேக் எடுத்துட்டு வா..! நேத்து செக் பண்ணி தானே இவளை வெளியே அனுப்பினீங்க.."
"ஆமா ஹேண்ட் பேக் செக் பண்ணிதான் அனுப்பினாங்க ஆனால் லேடி செக்யூரிட்டி லீவு.. அதனால உடம்பு முழுக்க செக் பண்ண முடியல.. ஜாக்கெட்டுக்குள்ள ஒளிச்சு வச்சு எடுத்துட்டு போயிருப்பாளோ என்னவோ..!"
நகைக்கடை பொறுப்பாளர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே அந்தப் பையை திறந்தான் அந்த ஸ்டோர் மேனேஜர் திவாகர்..
நிறைமாத கர்ப்பிணி போல் உப்பிப் போயிருந்த அந்தப் பையை கையில் வாங்கும் போதே கனம் தாங்காமல் கண்கள் சுருக்கி அனுவை சந்தேகமாக பார்த்தான் அவன்..
திறந்து பார்க்க.. உள்ளே கட்டு கட்டாய் லட்சத்துக்கும் குறையாத பணம்..
கையிலிருந்த பணத்தை மூன்று பேரிடமும் சுற்றி காட்ட அனைவர் கண்களிலும் அதிர்ச்சி..!
"என்னடி இது.. அதுக்குள்ள நகையை வித்து பணமாக்கிட்டியா..! பலே கில்லாடியா இருப்ப போலிருக்கு..! பாருங்கடா.. எப்படி மாட்டிக்காம இருக்கணும்னு எல்லா வித்தையும் கத்து வைச்சிருக்கா..!"
"சார்.. சார்.. ப்ளீஸ் அந்த பணத்தை கொடுத்துடுங்க..! நான் எந்த நகையையும் விக்கல.. நான் எதையும் எடுக்கல.. இது என்னோட பணம்.. தயவுசெஞ்சு அந்த பணத்தை கொடுத்துடுங்க.." அனு எழ முயன்றாள்.. முடியவில்லை..
"பொம்பளைங்க கண்ணீர் விட்டு அழுதா ஆம்பளைங்க நம்பிடுவாங்கன்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்க.. ஆனா இந்த கதையெல்லாம் இங்க செல்லுபடியாகாது..! நேத்து நகையை காணோம்.. இன்னைக்கு உன் பையில கட்டு கட்டா பணம்.. ஒரே நாள்ல உழைச்சு சம்பாதிச்சியா..! இல்லன்னா வேற மாதிரி..? அப்ப கூட ஒரே ராத்திரியில இரண்டு லட்சம் சம்பாதிக்கிற அளவுக்கு நீ ஒன்னும் வொர்த் இல்லையே..!"
சொல்லி முடிக்கும் படாரென கண்ணாடி உடைந்தது.. அடுத்தடுத்த கண்ணாடிகள் படார் படாரென்று உடைய.. காதை பொத்திக் கொண்டு தலையை குனிந்தவாறு கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள் அனு..
வந்தவன் யாரேன்று தெரிந்துவிட்டது அடுத்து என்ன நடக்கப்போகிறதென்றும் புரிந்து விட்டது.. விபரீதம் நிகழ்வதற்கு முன் தடுக்க வேண்டும்..! எழக் கூட முடியாத அளவிற்கு கால் மரத்துப்போன உணர்வு..
"டேய் யாருடா நீ..! என்ன ரவுடிசம்மா பண்ற.. எவன்டா உன்னை அனுப்பினது..! அடப்பாவி கடைய ஒடச்சு நொறுக்கிட்டான்டா..!"
குரல்கள் மட்டும் கலவரமாக கேட்டுக் கொண்டிருந்தன.. நடுநடுவே யார் யாரோ அடி வாங்கும் சத்தம்..
எப்படியோ அங்கிருந்து எழுந்து நின்றவள்.. இங்கு நடந்திருந்த களேபரத்திற்கு காரணமானவனை பதட்டத்துடன் தேடினாள்..
அந்த நான்கு பேரையும் காட்டு தனமாக உருட்டி உருட்டி அடித்துக் கொண்டிருந்தான் அவன்..! அவனுக்கு பயந்து அந்த நால்வரும் அங்குமிங்குமாக தப்பித்து ஓடிக் கொண்டிருக்க.. துரத்தி துரத்தி கைக்கு கிடைத்தவர்களை அடித்து நொறுக்கிய அந்த அதிரடி காரனை அச்சம் மிகுந்த கண்களோடு தேடியவள்..
"கா.. காளி.. அவங்கள விட்டுடு.. வேண்டாம் ப்ளீஸ்.." ஓரடி எடுத்து வைக்க முயல.. கண்ணாடி சில்லுகள் பாதத்தை பதம் பார்த்ததில்..
"ஆஆஆஆ..!" வலியில் அலறி அங்கேயே நின்றாள் அனுபமா..
திவாகரனை துரத்திக் கொண்டு புயலாக சுவற்றுக்கு மறு புறம் மறைந்தவன் ரிவர்ஸில் நடந்து வந்து நடுவில் நின்று அவளைப் பார்த்தான்..
வலியின் பிரதிபலிப்பாய் கண்களில் நீரோடு அவனை ஏறிட்டாள் அனுபமா..
"அவங்கள விட்டுடு காளி..! நீ ஏதாவது பிரச்சனை பண்ணி வச்சா அது என்னை தான் பாதிக்கும்..! ப்ளீஸ் என்னை நிம்மதியா வாழ விடு.. தயவு செஞ்சு இங்கிருந்து போயிடு.." கதறியவளால் சிதறியிருந்த கண்ணாடி சில்லுகளை தாண்டி அவனிடம் செல்ல முடியவில்லை..
அவள் பேசி முடிக்கும் வரை வெறித்துக் பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நடந்து அவளிடம் வந்தான்.. கால்களில் செருப்பு அணிந்திருக்கவில்லை..!
கண்ணாடி சில்லுகள் அவன் பாதத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்தன..
நறுக்.. நறுக்.. என அவன் பாதங்கள் பட்டு அந்த கண்ணாடி துண்டுகள் உடையும் சத்தம்..
"ஐயோ காளி..! கண்ணாடி.. தயவுசெஞ்சு இங்க வராத தள்ளிப்போ.." அவள் பதறினாள்..
வலி என்ற உணர்வெல்லாம் இவனுக்கு அறிமுகம் உண்டா இல்லையா என்பதை போல் அந்த இறுக்கமான முகத்தை அவள் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்க..
அனுபமாவை பார்த்தபடியே நடந்து வந்தவன்.. அவளை எழுப்பி நிற்க வைத்தான்.. சுற்றியிருந்த கண்ணாடி துண்டுகளை கையால் ஒதுக்கி விட்டு.. முழங்காலிட்டு அமர்ந்தவன் அடிபட்ட அவள் காலை தூக்கி தன் தொடையில் வைக்க.. நிலைதடுமாறி அவள் இரு தோள்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள் அனு..
குத்தியிருந்த கண்ணாடித் துண்டை எடுத்துவிட்டு வழிந்திருந்த குருதியை தன் சட்டை நுனியால் துடைத்து விட்டவன் சற்று தொலைவிலிருந்த அவள் பாதங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஒரு ஜோடி டிசைனர் செருப்புகளை தன் நீளமான கையால் எடுத்து அவள் பாதங்களுக்கு கீழே அதை வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தான்..
அவசரமாக அந்த செருப்புகளை அணிந்து கொண்டாள் அனுபமா..
பை ஒரு பக்கம் பணம் ஒரு பக்கம் என்று கீழே சிதறிக் கிடந்த நோட்டுக்களை எடுத்து அந்த கைப்பைக்குள் திணித்து சிப்பை மூடி அவளிடம் நீட்ட..! மௌனமாக அவனை பார்த்தபடியே நடுங்கிய கரங்களால் அந்தப் பையை வாங்கிக் கொண்டாள் அவள்..
செருப்பை அணிந்து கொண்டாலும் கண்ணாடி சில்லுகளின் மீது அவள் கால் வைத்து நடப்பது கடினம்..!
சர்வ சாதாரணமாக அவளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு.. கண்ணாடி துண்டுகளை தாண்டி வெளியே வர அந்த நால்வரும் அவனுக்கு பயந்து மாயமாக மறைந்து போயிருந்தனர்..
அந்தக் கண்ணாடி அறையைத் தாண்டி வெளி பக்கம் கொண்டு வந்து அவளை இறக்கி விட்டான் காளி..!
போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்க இதயம் நின்று துடித்தது அவளுக்கு..
அத்தனை ஆத்திரமும் காளீஸ்வரனின் மீது திரும்பியது..
இருந்த கோபத்தில் அவன் நெஞ்சில் சரமாரியாக பட்டு பட்டென்று அடித்தாள்..
"ஏன்டா..! ஏன் இப்படியெல்லாம் பண்ற.. நான் உன்னை வர சொன்னேனா.. எனக்கு உதவி பண்ணுன்னு நான் உன்கிட்ட கேட்டனா..! இருக்கற பிரச்சினை பத்தாதுன்னு நீ வேற..! ஏன்டா என்ன சித்ரவதை பண்ற.."
அவள் பேச்சை காதில் வாங்காதவன் போல்.. நெருங்கி அணைக்க வந்தான் காளி..
"கிட்ட வந்தா கொன்னுடுவேன் மரியாதையா தள்ளிப் போயிடு..! உன் கீழ்த்தரமான ஆசைக்கெல்லாம் இணங்க வைக்க வேற ஆளை பாரு..!" அவள் கத்தி கூச்சலிட எதையும் சட்டை செய்யாமல்.. தனது வலுவான கரங்களால் அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..
திமிறி போராடி வேறு வழியின்றி துவண்டு அவனிடமே சரணடைந்தாள் அனு..!
போலீஸ் ஜீப் வந்துவிட்டது..
இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இறங்கி வேகமாக நடந்து வர..! இதுவரை ஒளிந்து நின்ற அந்த நான்கு பேரும் ரத்தமும் காயமுமாக காவலர்களிடம் ஓடி வந்தனர்..
"சார்.. சார்.. திருட்டு கும்பல் சார்..! கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க.. கேள்வி கேட்டதுக்கு எங்க எல்லாரையும் அடிச்சு துவைச்சுட்டான் சார்.."
"இப்படி சொல்ல வெக்கமா இல்ல..! நாலு பேர் இருக்கீங்க.. அந்த ஒருத்தன உங்களால அடக்க முடியலையா..?"
"எங்க அந்த பொண்ணு..?" என்றபடியே இன்ஸ்பெக்டர் அனுபமாவை நோக்கி முன்னேற அவளோ பயந்து நடுங்கி காளியை ஒட்டி நின்றாள்..
"இந்தாம்மா முன்னாடி வா.." லத்தியை அவளை நோக்கி நீட்டுமுன் அதை இறுக்கமாக பிடித்திருந்தான் காளி..
"நா.. நா.. நான்தான் ந.. நகை எடுத்தேன்.. அ.. அ.. அனுவுக்கும் இ.. இதுக்கும் எந்த ச.. ச.. ச.. சம்பந்தமும் கிடையாது.."
என்றவனை கண்கள் சுருக்கி கூர்மையாக பார்த்தார் இன்ஸ்பெக்டர்..
"ஓ.. திக்கு வாயா..!" என்றபடி பின்னால் நின்றிருந்த அந்த நான்கு பேரை திரும்பிப் பார்த்தவர்.. "என்னங்கப்பா நீங்க என்னமோ இந்த பொண்ணுதான் நகையை திருடுச்சின்னு சொல்றீங்க.. இவன் என்னவோ வலிய வந்து வாக்குமூலம் தர்றான்.. என்ன நடக்குது இங்கே?" என்றார் அவர்..
"எங்களுக்கு தெரியல சார் இவனும் அவ கூட்டாளியா இருப்பான்.. நகைய திருடினது அவதான்.. இவன்கிட்ட கொடுத்து வைச்சிருப்பாளோ என்னவோ..!" என்ற திவாகர் காளி நிமிர்ந்து பார்த்த பார்வையில் நடுங்கி பின்னால் நகர்ந்தான்..
"சார் முறைக்கறான்.."
"அடச்சே..! வாய மூடுங்க.. சின்ன புள்ளைங்க மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு..!"
"ஏய்.. நீ ஸ்டேஷன் வா.." இன்ஸ்பெக்டர் காளியை நோக்கி இலத்தியை நீட்டி அழைக்க..!
அனுபமாவின் கையை பிடித்துக் கொண்டு அவரை விட்டு விலகி நடந்தான் அவன்..
"சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு அவளோட ஜோடி போட்டுகிட்டு எங்கடா கிளம்பி போற..!" இன்ஸ்பெக்டர் பற்களை கடித்தப்படி லத்தியை ஓங்க..
அதை லாவகமாக ஒரு கையால் பிடித்தவன்..
"ஒ.. ஒ.. ஒரு நிமிஷம் சார்..ஓ.. ஓடிப்...போக மா.. மாட்டேன்..!" என்றபடி அனுபமாவை தோளோடு அணைத்துக் கொண்டு எங்கேயோ அழைத்துச் சென்றான்..
"என்ன காளி இது..? நீ எதுக்கு பழிய சுமக்கணும்.. இந்த நகையை நான் திருடல.. நீ எதுக்காக பழியை ஏத்துக்கற..! எனக்காக நீ ஜெயிலுக்கு போக வேண்டாம்.. இது என் சம்பந்தப்பட்ட பிரச்சனை.. நீ தேவையில்லாம இதுல தலையிடாதே.." என்பதற்குள் அந்தப் பக்கமாக வந்த ஆட்டோவை முன் கண்ணாடியை தட்டி நிறுத்தியிருந்தவன்.. அவளை உள்ளே அமர வைத்துவிட்டு திரும்பி நகர அவன் கையைப் பிடித்தாள் அனுபமா..
"இந்த ஒரு வாரமா எங்க போயிருந்த நீ..?"
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு கணம் ஆழ்ந்த பார்வையுடன் அவள் கன்னத்தில் கை வைத்திருந்தான் காளி..
எப்போதும் இது போல் அத்துமீறி தொடும் போது எரிமலையாய் தகித்து சீற்றத்தோடு அவனை தள்ளி விடுவாள் அல்லது தாக்குவாள்..! சில சமயங்களில் அவன் மூர்க்கத்தனத்திற்கு பயந்து அழுவாள்..
இப்போது அவன் கண்களை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்..
"சொல்லு ஒரு வாரம் எங்க போயிருந்த நீ.." மீண்டும் அதட்டலாக அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளிடம்
"வீ.. வீ.. வீட்டுக்கு போ..!" என்று விட்டு இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தான் காளி..
தொடரும்..

Last edited: