• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
நடு இரவில் ஒரு குறுஞ்செய்தி..

ஒரு கண்ணை மட்டும் திறந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தாள் பத்மினி.. வேறு யார்..!! அவன் தான் செய்தி அனுப்பி இருந்தான்.. இருவருக்கமான உரையாடல் தொடங்கியது..

"பத்மினி.."

"ம்ம்.."

"நீ என்னை ரொம்ப அவமானப் படுத்தற..?"

"ஏன் நான் என்ன செஞ்சேன்.."

"அம்மா கிட்ட போய் படுத்துக்கிட்டா என்ன அர்த்தம்..?"

"பதில் சொல்லு பத்மினி.."

"பத்மினி ஆன்லைன்ல தான் இருக்கியா..?"

"ஓகே குட் நைட்.." என்று சொன்ன அடுத்த கணம் பத்மினியிடம் இருந்து பதில் வந்தது..

"ஏன் உங்களுக்கு தெரியாதா..?"

"ஏன் நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா..?"

"ஒன்னு ரெண்டு ஓகே.. ராத்திரி முழுக்கன்னா எப்படி பொறுத்துக்க முடியும் சொல்லுங்க..?"

"எனக்கு உன்னை கிஸ் பண்ணிட்டே இருக்கணும்னு தோணுது பத்மினி.. ஒவ்வொரு முத்தம் கொடுக்கும் போதும் இன்னும் ஒன்னுன்னு மனசு கேக்குது.." பத்மினியால் டைப் செய்ய முடியவில்லை.. விரல்கள் நடுங்கின..

"பத்மினி ஆர் யூ தேர்.."

"தூங்கிட்டியா..!!"

"தூக்கம் வருதுன்னா சொல்லு.. இல்லைன்னா இப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்.."

"நீங்கதானா சார் இது..?"

"ஏன் அப்படி கேக்கற..?"

"என்னால நம்ப முடியல..!!"

"நீ இங்கே வர்றியா..?"

"ஏன்?"

"சும்மா உன்னை பாக்கத்தான்..!!"

"காலையிலிருந்து என்னை தானே பார்த்துட்டு இருந்தீங்க.. சொல்லப்போனா என்னை மட்டும்தான் பாத்துட்டு இருந்தீங்க.."

"சரி இப்ப வா..!!"

"வேண்டாம் சார்.." ரமணியம்மா எழுந்து தேடுவாங்க.."

"தேட மாட்டாங்க.. வா.."

"அப்படின்னா ஒரு கண்டிஷன்.. நீங்க என்ன கிஸ் பண்ண கூடாது.. டச் பண்ண கூடாது.."

சில வினாடிகள் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை..

"நீ தூங்கு குட் நைட்.."

"பாத்தா மட்டும் போதும்னு சொன்னீங்க..?"

"உன்னை பார்த்த உடனே எல்லாம் வேணும்னு தோணுமே..?"

பார்க்கவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் முத்தமிடவும் வேண்டாம்.. இது மாதிரியான ஆபாசமில்லாத அழகான கிளர்ச்சியூட்டும் உரையாடல்கள் மட்டும் போதும் என்று தோன்றியது..

"சரி அப்ப நான் தூங்கட்டுமா.."

"நீ வருவேன்னு நினைச்சேன்.. ஓகே குட் நைட்.." அவன் ஆஃப்லைன் சென்று விட்டான்..

ஆஃப்லைன் தான் சென்றிருந்தான்.. ஆனால் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்து மார்பின் குறுக்கே இரு கைகளை கட்டி அமர்ந்திருந்தான்..

கதவை திறக்கும் ஓசை..!! உள்ளே வந்தாள் பத்மினி..

அவள் லேசாக சிரித்தாள்.. அவன் சிரிக்கவில்லை.. ஆழ்ந்த விழிகளால் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

"நீங்க தூங்கலையா..?"

"நீ வருவேன்னு எனக்கு தோணுச்சு..!!"

கண்களை தாழ்த்திக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.. அவன் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதில் தேகத்திற்குள் ஏதோ குறுகுறுப்பு..

"தூங்கட்டுமா.." பத்மினி கேட்க.. இடையோடு கை போட்டு இழுத்து அணைத்து இதழோடு முத்தமிட்டவன்.. "தூங்கு.. குட் நைட்.." என்றுவிட்டு படுத்துக்கொண்டான்..

அவ்வளவுதானா..? ஒருவேளை அவளுக்குதான் ஏமாற்றமாக போனதோ..!!

"முத்தங்கள் சலிச்சிட்டது போல.." உதடு சுழித்தாள் பத்மினி..

முத்தங்களோடு மட்டும் முடிவதில்லை வாழ்க்கை.. நீ காணாத பொக்கிஷங்கள் என்னிடம் நிறைய உண்டு என்று தெரியப்படுத்த பத்மினி விரும்பவில்லை.. அவனும் அறிய முற்படவில்லை.. முத்தங்களை கடந்து எல்லை மீறவிடாமல் ஏதோ ஒன்று இருவரையும் தடுத்துக் கொண்டிருக்கிறது..‌

"தூங்கலையா நீ.. தூக்கம் வருதுன்னு சொன்னே..‌" தலையை மட்டும் தூக்கி பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"இதோ படுத்துட்டேன்.." கால்களை நீட்டி படுத்துக் கொண்டு விழிகளை மூடினாள்..

மூர்க்கத்தனமான முத்தங்கள் வேண்டாம்.. இதமான அணைப்பு வேண்டும்..

அன்னைக்கு மாதிரி அந்த மார்போடு இறுக்கி அணைச்சுக்கணும்..

அந்த வாசனை

அந்த கதகதப்பு.. அதெல்லாம் கிடைக்குமா..? உள்ளுக்குள் ஏக்கம்..

"என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கறீங்களா.." கேட்டுக்கொண்டே அவன் பக்கம் திரும்ப.. உதய் கிருஷ்ணன் உறங்கியிருந்தான்.. விழிகள் மூடியிருந்தவள் ஏதேனும் பேசுவாள் என்ற எதிர்பார்ப்போடு இத்தனை நேரம் முகம் பார்த்துக் கொண்டிருந்ததை பத்மினி அறியவில்லை..

இப்போது வைத்த கண் வாங்காமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. அவனும் அதை அறியவில்லை.. உறங்கியிருந்தான்..

"என்ன பாஸ்கர் எம்.டியோட ரூம் முழு அந்தப்புரமா மாறிட்டாப்ல தெரியுது..‌"

"என்னவோ நமக்கு எதுவுமே இப்படி சிக்க மாட்டேங்குதே.."

"அதுக்கு நீ ஒரு கம்பெனியோட எம்டியா இருக்கணும்.. கார்ல வந்துட்டு கார்ல போகணும்.. பெரிய வீடு பேங்க் பேலன்ஸ் இதெல்லாம் இருக்கணும்.. அப்பதான் பத்மினி மாதிரி பொண்ணுங்க தானா வந்து விழுவாங்க..!!"

"பத்மினி மாதிரி பொண்ணுங்க வேண்டாம்.. ஒரு சுந்தரி மாதிரி ராகினி மாதிரி இதோ.. இந்த மாதிரி சுமாரான பொண்ணுங்க கூட நம்மள கண்டுக்க மாட்டேங்குதுங்க.. நம்ம ஆபீஸ்ல ஒட்டுமொத்த பொண்ணுங்க கண்ணும் அங்கதானே இருக்குது.."

"அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. மனுஷன் வாழறார்.. பத்மினிக்கு அப்புறமா ஒவ்வொருத்தரயா கரெக்ட் பண்ணுவாரோ என்னவோ..!!"

"முன்னாடி இப்படி இல்லையேடா..!! மனுஷன் நல்லாத்தானே இருந்தாரு.. இப்ப என்ன ஆச்சுதோ.. இதுக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்ல.."

"கல்யாணம் செஞ்சுக்கிட்டா தொல்லைடா.. ஒருத்தி கூட மட்டும்தானே வாழ முடியும்..‌ இது ரொம்ப வசதி.. இப்படி நெனச்ச பொண்ணுங்களோட இஷ்டப்படி சந்தோஷமா இருக்கலாமே..!! எவன் கேட்பான்.. ஒரு கப் காபி சாப்பிட காபி தோட்டத்தையே எவனாவது விலைக்கு வாங்குவானா..?"

அந்நேரம் பார்த்துதானா பத்மினி அவ்வழியாக நடந்து செல்ல வேண்டும்..‌

மேஜையில் சாய்ந்து நின்றிருந்த திவாகர் பெருமூச்சு விட்டான்..

"நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்..!!"

"பொறுடா.. பங்களா நாய் தின்னுட்டு போட்ட எலும்பு துண்டு ஒருநாள் தெரு நாய்களுக்கும் கிடைக்கும்..‌"

"அடச்சீ எச்சில்..!!"

"எச்சிலா இருந்தா என்னடா ருசியா இருந்தா போதாதா..!!" ஆண்களுக்குள் இப்படி வக்கிரமான பேச்சு..

"அதெல்லாம் நமக்கு கிடைக்காதுடா.."

"எதுவும் தானா கிடைக்காது நாமதான் கிடைக்க வைக்கணும்.."

"அடேய் ஜாக்கிரதையா இருங்கடா.. அந்த பொண்ணுகிட்ட என்ன வம்பு செஞ்சான்னு தெரியல.. ஒருத்தன் வேலையை விட்டு போயிட்டான் தெரியும் இல்ல.. அம்மணி ரொம்ப பெரிய இடம்..‌ தொட்டா ஷாக் அடிக்கும்..!!"

"டே..ய்.. விருப்பம் இல்லாம தொட்டா தான்டா ஷாக் அடிக்கும்.. நோ சொல்ற பொண்ண எஸ் சொல்ல வைக்கிறதுதான்டா ஆம்பளத்தனம்.. நீ வேணும்னா பாரு.. கூடிய சீக்கிரம் அவளை என் வலையில விழ வைக்கிறேன்..‌ அப்புறம் அக்கா என்னைய பாத்து வெட்கப்பட்டுக்கிட்டே ஆஃபிஸ் வருவா.." ஹரிகுமார் சொல்ல அனைவரிடமும் கலீர் சிரிப்பு..

பெண்கள் பக்கம்.. மதிய உணவு இடைவேளையில்..

"நீ வேணா நல்ல நோட் பண்ணி பாருடி..‌ இப்போ சார் ரூம்ல கிளாஸ் ஓபன்லதான இருக்கு.. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லா கர்டைன்ஸும் குளோஸ் ஆகும்..‌ அப்புறம் பத்மினியை சார் கூப்பிடுவாரு.."

"உள்ளே போயிட்டு வெளியில வர்றவ எப்படி வர்றான்னு மட்டும் பாரேன்.."

"எப்படி வருவா..?"

"தலையெல்லாம் கலைஞ்சு.. சாரி இடுப்பை விட்டு விலகி.."

"சும்மா ஓவரா பேசாதடி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. போன மாதிரித்தான் திரும்பி வருவா.. ஆனா என்ன.. உதடு மட்டும் செக்கச் செவேல்னு சிவந்து போயிருக்கும்.."

"ஏன் சார் லிப்ஸ்டிக் போட்டு விடுவாரோ..!!" பெண்களிடம் களுக்கென சிரிப்பு..

"ஆமாமா.. வாயோட வாய் வச்சு லிப்ஸ்டிக் போட்டு விடுவாரு..‌"

"ஏன் தான் இந்த மனுஷனுக்கு புத்தி இப்படி போகுதோ.."

"உன்ன பாத்து பல்ல காட்டியிருந்தா நல்லவர்ன்னு சொல்லியிருப்பே..!!"

"சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.."

"ஆனாலும் பகிரங்கமா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு எப்படி இவளெல்லாம் வெட்கமே இல்லாம சுத்துறா..‌ உழைக்காத சோறு எப்படித்தான் தொண்டைக்குள்ளே இறங்குதோ.. !!"

சற்று தொலைவில் அமர்ந்து தனக்கான சிலரோடு உணவு உண்டு கொண்டிருந்த பத்மினியை பார்த்துதான் இந்த பேச்சு..

"பத்மினி இதுங்கெல்லாம் உன்ன பத்திதான் பேசுதுங்க நினைக்கிறேன்..‌" என்றாள் திவ்யா..

"பேசினா பேசிட்டு போகட்டும்.. நாம என்ன செய்ய முடியும்.." பத்மினி அலட்சியமாகத்தான் சொன்னாள்..

"நீ நல்லா நறுக்குனு நாலு கேள்வி கேட்டு விடு பத்மினி.. இல்லனா இதுங்கல்லாம் அடங்காதுங்க..‌ நீ எதுவுமே பேச மாட்டேங்கற.. அதனாலதான் தலை மேல ஏறி ஆடுதுங்க.."

"அவங்களுக்கு தேவை பதிலோ அல்லது விளக்கமோ இல்ல திவ்யா.. அவங்களுக்கு பேசணும்.. அதுல ஒரு கேவலமான சந்தோஷம்.. நீ என்னதான் எடுத்து சொன்னாலும் அதிலிருந்து ஒரு பாய்ண்ட்ட கண்டுபிடிச்சு கிண்டல் பண்ணி பேசத்தான் செய்வாங்க.. இவங்களை அப்படியே விட்டுட்டு நம்ம வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்.. இவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்தா நம்ம வாழ்க்கைதான் நரகமா போகும்..!!"

"ஆனாலும் பத்மினி அவங்க சொல்றதுல உண்மை இல்லைன்னு நீ கொஞ்சம் புரிய வைக்கலாம் இல்ல.."

"உண்மை இருக்கோ இல்லையோ அது என்னோட பர்சனல் விஷயம்.. அதுல தலையிட இங்கு யாருக்கும் உரிமை இல்லை.. யாருக்கும் நான் புரிய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.. சாரி திவ்யா நீ கேட்டதுக்கான பதிலை நான் சொன்னேன்.." என்று காலியான டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

பணிச்சுமை அழுத்திய மனநிலையிலும் பத்மினி வேறு மாதிரியான மனநிலையிலும் இருந்ததால்.. அன்று அலுவலகத்தில் இருவருக்கும் இடையில் எந்தவித முத்த பரிமாற்றங்களும் இல்லை..

"என்ன..? இன்னைக்கு கர்ட்டெயின் மூடல..!!

மூடு இல்ல அதனால மூடல.. என்னடா கேள்வி இது.. வேலைய பாருங்கடா..!!"

அன்று முடிக்க வேண்டிய வேலை ஒன்று நிலுவையில் இருந்த காரணத்தால் உதய் கிருஷ்ணா சற்று பரபரப்பாக தெரிந்தான்..

பத்மினிக்கு வேறு அன்று பார்த்து வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. வயிறு வலி.. நெஞ்செரிச்சல்.. என்ன உபாதை என்று சொல்லத் தெரியவில்லை.. ஒருவேளை மாதாந்திர தொந்தரவோ.. இல்லையே அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே..!!

"பத்மினி உன்னை சார் கூப்பிடுகிறார்..!!" நெஞ்சை தடவிக் கொண்டிருந்த வேளையில் ஒருத்தி சொல்லிவிட்டு சென்றாள்..

உள்ளே நுழைந்தவரிடம் அடுக்கடுக்காக வேலைகளை ஒப்படைத்தான் உதய்கிருஷ்ணா..

"பத்மினி ரொம்ப டைம் இல்ல.. லஞ்ச் பிரேக்குள்ள முடிச்சுருங்க..‌ மத்தவங்களை விட நீங்க கொஞ்சம் டெடிகேட்டடா வொர்க் பண்ணுவீங்க.. அதனாலதான் உங்ககிட்ட இந்த வேலைகளை ஒப்படைக்கிறேன்.. அன்ட் மோர் ஓவர் எனக்கு வேற ஆப்ஷனும் இல்ல.. எனக்கு ஈவினிங்குள்ள அத்தனை ரிப்போர்ட்சையும் கஸ்டமருக்கு சப்மிட் பண்ணியாகணும்.." வேலை மும்முரத்தில் அவளை மூன்றாம் மனுஷியாக பாவித்து நீங்க வாங்க என்று தான் அழைத்துக் கொண்டிருக்கிறான்..

இன்று அலுவலகமே அவனிடம் சிக்கிக் கொண்டு கதி கலங்கி கொண்டிருக்கிறது..‌ எல்லோரையும் ஏதாவதொரு வேலை சொல்லி ஆளுக்கொரு பக்கமாக விரட்டி கொண்டிருப்பவனிடம்..‌ தன் பிரச்சனைகளை எப்படி பொறுமையாக எடுத்துச் சொல்ல முடியும்.. அதிலும் தனக்கு என்ன பிரச்சனை என்று அவளுக்கே தெரியாத போது..

"என்ன இன்னும் நிக்கிறீங்க? போங்கம்மா..‌ சீக்கிரம்.." என்று அவசரமாக விரட்டியடிக்க ஓகே சார் என்றபடி வெளியே வந்தாள்..

தலை வேறு சுற்றுகிறது.. இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஓய்வெடுத்தால் தேவலாம் போல் தோன்றுகிறது..

பர்மிஷன் கேட்டால் கிடைக்குமா..? இல்லையானா லீவு..

கிடைக்கும்.. நிறைய திட்டு கிடைக்கும்.. எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று ஏச்சும் பேச்சும் கிடைக்கும்..

பல்லை கடித்துக் கொண்டு வேலையை முடித்துவிடு, பிறகு ஒரு நாள் கூட ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..‌ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு

அவசரமாக டாகுமென்ட்களை தயாரிக்க ஆரம்பித்தாள்.. மனம் வேலையில் லயித்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை..‌

ஏகப்பட்ட பிழைகள்..‌ கழுகு கண்களுடன் அத்தனையும் சரி பார்த்து அவள் முகத்திலேயே வீசியெறிந்தான் உதய் கிருஷ்ணா..

"முடியலன்னா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல.. வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சிருப்பேன்.. செய்றேன் செய்றேன்னு சொல்லி இவ்வளவு நேரத்தை வீணாக்கிட்டியே.. எட்டு மணிக்கு எல்லா டாகுமெண்ட்ஸையும் செக் பண்ணி மெயில் அனுப்பனும்.. இப்பவே மணி மூணு.." என்றவனுக்கு அவள் சாப்பிடாமல் வேலை செய்த விஷயம் கூட மறந்து போய்விட்டதோ என்னவோ..!!

"சே..‌ உன்னை நம்பினேன் பாரு என்னை சொல்லணும்.." என்றதும் அவள் கண்களில் வேதனையின் சாயலாக கண்ணீர் துளிர்த்தது..

"சார்.. நான்.."

"கெட் அவுட்.."

கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பத்மினி..

"ஹேய்.. சில்லி மிட்டாய் ரொம்ப காரசாரமா பத்மினியை கடிச்சு வச்சிருச்சு போலடி.. பாவம் அழுதுகிட்டே வெளிய வர்றா..‌"

"நல்லா வேணும்.. முதலாளியை கைக்குள்ள போட்டுக்கிட்டு என்ன ஆட்டம்.. எப்பவும் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது..!! வாங்கி கட்டட்டும்.. அப்பதான் புத்தி வரும்.. என்னமோ உலகத்திலேயே இவன் மட்டும்தான் வேலை செய்யற மாதிரி.. நாமெல்லாம் சும்மா இருக்கிற மாதிரி என்ன பந்தா.. இப்ப தெரிஞ்சுதா லட்சணம்.."

பத்மினி தனது இடத்தில் வந்து அமர்ந்து வேலைகளை மீண்டும் தொடர்ந்தாள்.. வயிறு உள்ளே இறுக்கிப்பிடித்து இழுத்து ஒரே வலி..

"அம்மாஆஆஆ.." வயிற்றைப் பிடித்துக் கொண்டு முனகியவள்.. வீராப்பாக செத்தாலும் பரவாயில்லை என்று.. கருமமே கண்ணாக வேலைகளை மீண்டும் துவங்கியிருந்தாள்..

கேண்டீன் சென்று ஒரு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் தேவலாம் போல் தோன்றியது.. அதற்கு வழி இல்லை.. பணிச்சுமை மூச்சு விட வழியின்றி அழுத்தியது அவளை..

ஒரு கட்டுமான பணியிடத்தில்.. உதய் கிருஷ்ணா கம்பெனியின் பொருட்களின் தரத்தில் கோளாறு என்று புகார் வந்திருக்க அது என்னவென்று பரிசோதிப்பதற்காக அவசரமாக புறப்பட்டு வெளியே வந்தவன்.. பத்மினியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பத்மினி இதை கவனிக்கவில்லை..

ஏழு முப்பது மணி வரைக்கும்.. அவன் கேட்ட விபரங்களை தயாரித்து பிழையில்லாமல் ஒன்றுக்கு மூன்று முறை அலசி ஆராய்ந்து.. அத்தனை காகிதங்களையும் சரிபார்த்து கோப்புகளாக அடுக்கி அவன் மேஜையில் வைத்து விட்டுதான் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருந்தாள்..

அவள் அங்கிருந்த புறப்பட்டு சென்ற பத்தாவது நிமிடத்தில் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் உதய் கிருஷ்ணா..

அனைவரும் அலுவலக நேரம் முடிந்து வெளியேறி சென்றிருக்க பத்மினியும் வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு போயிருப்பாள் என்று நினைத்தான்..‌

மேஜையில் அவன் முடிக்க வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்த ஆவணங்கள் செக் லிஸ்ட்டோடு பெயர் படி வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன..‌

வாய்க்கு வந்தபடி அவளை திட்டி பேசியது நினைவில் வந்து தொலைக்க.. ஆழ்ந்த பெருமூச்சோடு.. பார்வையில் இளக்கம் காட்டியவன் ஒவ்வொரு கோப்புகளாக எடுத்து சரி பார்த்தான். அனைத்து ஆவணங்களும் சிறு பிழையும் இல்லாமல் 100% நேர்த்தியாக இருந்ததில் பரம திருப்தி..

அதன் பக்கத்திலேயே ஒரு பென்டிரைவ்..‌

இது எதற்காக..? என்ற கேள்வியுடன் அதை கணினியில் பொருத்தினான்..

ஆவணங்கள் தெளிவாக ஸ்கேன் செய்யப்பட்டு ஃபோல்டரில் சேமிக்கப்பட்டு அவன் கூடுதல் வேலையை மிச்சப் படுத்தின..

நேரம் குறைவு.. அனுப்ப வேண்டிய டாக்குமென்ட்கள் அதிகம் என்பதால் அவசரமாக அனைத்தையும் கஸ்டமருக்கு மெயில் செய்து அனுப்பி வைத்தான்..

வேலைகளை முடித்துவிட்டு அப்பாடா என்று ஆயாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் ..

பத்மினிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்..

"சாரி பத்மினி.."

அவள் குறுஞ்செய்தியை பார்த்ததற்கான ப்ளூடிக் வரவில்லை..

"வேலையா இருப்பா.. கிளம்பலாம்.."

என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நேரம் லேசாக தூறிக் கொண்டிருந்த வானம் கார்கால மழையாக கனமாக பிடித்துக் கொண்டது..

மழையின் காரணமாக குண்டும் குழியுமான சாலையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து தான் வீடு வந்து சேர்ந்தான்..‌

கதவை திறந்த ரமணியம்மா.. முழுதாக உள்ளே காலடி எடுத்து வைக்காதவனிடம்..

"டேய் உதய்.. பத்மினி இன்னும் வீட்டுக்கு வரலடா.. ஃபோனையும் எடுக்கல.. என்னன்னு தெரியல..!! கொஞ்சம் என்னன்னு பாரேன்..!!" என்றார் பதைபதைப்புடன்..

"ப்ச்.. அவ அண்ணனோ.. தம்பியோ யாரோ இருக்காங்களே..
அங்கே போயிருப்பா.." என்றான் சர்வ சாதாரணமாக.. பதட்டம் பரிதவிப்பு அவன் குணத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"இல்லைடா கேசவனுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்.. அங்க வரலையாம்.. இந்த ஊர்ல அவளுக்கு வேற சொந்தக்காரங்க இல்லை.. எங்க போனாளோ மழையில எங்க மாட்டிட்டு இருக்காளோ.. !!"

"ஒரு முறை அவ எங்க இருக்கான்னு தேடி பாரேன்.."

"ப்ச்.. எங்கேன்னு போய் தேடுவேன்.."

"அதானே நான் காணாமல் போனாலே நீ தேட மாட்டியே..!! அவளையா தேட போற.. உணர்ச்சிகளே இல்லாத ஜடத்துக் கிட்ட போய் பேசிட்டு இருக்கேன் பாரு.." ரமணியம்மா படபடத்தார்..

"அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.. வந்துருவா.. இப்படி புலம்பாம போய் உட்காருங்க.. உடம்புக்கு எதாவது வந்துட போகுது..‌" என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான் உதய் கிருஷ்ணன்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
138

அவ்வளவுதானா..? ஒருவேளை அவளுக்கு தான் ஏமாற்றமாக போனதோ..!!

"முத்தங்கள் சலிச்சிட்டது போல.." உதடு சுழித்தாள் பத்மினி..

முத்தங்களோடு மட்டும் முடிவதில்லை வாழ்க்கை.. நீ காணாத பொக்கிஷங்கள் என்னிடம் நிறைய உண்டு என்று தெரியப்படுத்த பத்மினி விரும்பவில்லை.. அவனும் அறிய முற்படவில்லை.. முத்தங்களை கடந்து எல்லை மீறவிடாமல் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது..‌

"தூங்கலையா நீ தூக்கம் வருதுன்னு சொன்னே..‌" தலையை மட்டும் தூக்கி பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"இதோ படுத்துட்டேன்.." கால்களை நீட்டி படுத்துக் கொண்டு விழிகளை மூடினாள்..

மூர்க்கத்தனமான முத்தங்கள் வேண்டாம்.. இதமான அணைப்பு வேண்டும்..

அன்னைக்கு மாதிரி அந்த மார்போடு இறுக்கி அணைச்சுக்கணும்..

அந்த வாசனை

அந்த கதகதப்பு.. அது கிடைக்குமா..? உள்ளுக்குள் ஏக்கம்..

"என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கறீங்களா.." கேட்டுக்கொண்டே அவன் பக்கம் திரும்ப.. உதய் கிருஷ்ணன் உறங்கியிருந்தான்.. விழிகள் மூடியிருந்தவள் ஏதேனும் பேசுவாள் என்ற எதிர்பார்ப்போடு முகம் பார்த்துக் கொண்டிருந்ததை பத்மினி அறியவில்லை..

இப்போது வைத்த கண் வாங்காமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. அவனும் அதை அறியவில்லை.. உறங்கியிருந்தான்..

"என்ன பாஸ்கர் எம்டியோட ரூம் முழு அந்தப்புரமா மாறிட்டாப்ல தெரியுது..‌"

"என்னவோ நமக்கு எதுவுமே இப்படி சிக்க மாட்டேங்குதே.."

"அதுக்கு நீ ஒரு கம்பெனியோட எம்டியா இருக்கணும்.. கார்ல வந்துட்டு கார்ல போகணும்.. பெரிய வீடு பேங்க் பேலன்ஸ் இதெல்லாம் இருக்கணும்.. அப்பதான் பத்மினி மாதிரி பொண்ணுங்க தானா வந்து விடுவாங்க..!!"

"பத்மினி மாதிரி பொண்ணுங்க வேண்டாம்.. ஒரு சுந்தரி மாதிரி ராகினி மாதிரி இதோ.. இந்த மாதிரி சுமாரான பொண்ணுங்க கூட நம்மள கண்டுக்க மாட்டேங்குதுங்க.. நம்ம ஆபீஸ்ல ஒட்டுமொத்த பொண்ணுங்க கண்ணும் அங்கதானே இருக்குது.."

"அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. மனுஷன் வாழறார்.. பத்மினிக்கு பின்னாடி ஒவ்வொருத்திரயையா கரெக்ட் பண்ணுவாரோ என்னவோ..!!"

"முன்னாடி இப்படி இல்லையேடா..!! மனுஷன் நல்லாத்தானே இருந்தாரு இப்ப என்ன ஆச்சுதோ.. இதுக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்ல.."

"கல்யாணம் செஞ்சுக்கிட்டா தொல்லைடா.. ஒருத்தி கூட மட்டும் தானே வாழ முடியும்..‌ இது ரொம்ப வசதி.. இப்படி நெனச்ச பொண்ணுங்களோட சந்தோஷமா இருக்கலாமே..!! ஒரு கப் காபி சாப்பிட காபி தோட்டத்தையே எவனாவது விலைக்கு வாங்குவானா..?"

அந்நேரம் பார்த்துதானா பத்மினி அவ்வழியாக நடந்து செல்ல வேண்டும்..‌

மேஜையில் சாய்ந்து நின்றிருந்த திவாகர் பெருமூச்சு விட்டான்..

"நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்..!!"

"பொறுடா.. பங்களா நாய் தின்னுட்டு போட்ட எலும்பு துண்டு ஒரு நாய் தெரு நாய்களுக்கும் கிடைக்கும்..‌"

"அடச்சீ எச்சில்..!!"

"எச்சிலா இருந்தா என்னடா ருசியா இருந்தா போதாதா..!!" ஆண்களுக்குள் இப்படி வக்கிரமான பேச்சு..

"அதெல்லாம் நமக்கு கிடைக்காதுடா.."

"எதுவும் தானா கிடைக்காது நாமதான் கிடைக்க வைக்கணும்.."

"அடேய் ஜாக்கிரதையா இருங்கடா அந்த பொண்ணு கிட்ட என்ன வம்பு செஞ்சான்னு தெரியல.. ஒருத்தன் வேலையை விட்டு போயிட்டான் தெரியும் இல்ல.. அம்மணி ரொம்ப பெரிய இடம்..‌ தொட்டா ஷாக் அடிக்கும்..!!"

"டே..ய்.. விருப்பம் இல்லாம தொட்டா தான்டா ஷாக் அடிக்கும்.. நோ சொல்ற பொண்ண எஸ் சொல்ல வைக்கிறதுதான்டா ஆம்பளத்தனம்.. நீ வேணும்னா பாரு.. கூடிய சீக்கிரம் அவளை என் வலையில விழ வைக்கிறேன்..‌ அப்புறம் அக்கா என்னைய பாத்து வெட்கப்பட்டுக்கிட்டே ஆஃபிஸ் வருவா.." ஹரிகுமார் சொல்ல அனைவரிடமும் கலீர் சிரிப்பு..

பெண்கள் பக்கம்.. மதிய உணவு இடைவேளையில்..

"நீ வேணா நல்ல நோட் பண்ணி பாருடி..‌ இப்போ கிளாஸ் ஓபன்லதான இருக்கு.. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லா கர்டைன்ஸும் குளோஸ் ஆகும்..‌ அப்புறம் பத்மினியை சார் கூப்பிடுவாரு.."

"உள்ளே போயிட்டு வெளியில வர்றவ எப்படி வரான்னு மட்டும் பாரேன்.."

"எப்படி வருவா..?"

"தலையெல்லாம் கலைஞ்சு.. சாரி இடுப்பை விட்டு விலகி.."

"சும்மா ஓவரா பேசாதடி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. போன மாதிரித்தான் திரும்பி வருவா.. ஆனா என்ன உதடு மட்டும் செக்கச் செவேல்னு சிவந்து போயிருக்கும்.."

"ஏன் சார் லிப்ஸ்டிக் போட்டு விடுவாரோ..!!" பெண்களிடம் களுக்கென சிரிப்பு..

"ஆமாமா வாயோட வாய் வச்சு லிப்ஸ்டிக் போட்டு விடுவாரு..‌"

"ஏன் தான் இந்த மனுஷனுக்கு புத்தி இப்படி போகுதோ.."

"உன்ன பாத்து பல்ல காட்டி இருந்தா நல்லவர்ன்னு சொல்லியிருப்பே..!!"

"சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.."

"ஆனாலும் பகிரங்கமா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு எப்படி இவளெல்லாம் வெட்கமே இல்லாம எப்படி சுத்துறா..‌ சாப்பாடு எப்படிதான் தொண்டைக்குள்ளே இறங்குதோ.. !!"

சற்று தொலைவில் அமர்ந்து தனக்கான சிலரோடு உணவு உண்டு கொண்டிருந்த பத்மினியை பார்த்துதான் இந்த பேச்சு..

"பத்மினி இதுங்க எல்லாம் உன்ன பத்திதான் பேசுதுங்க நினைக்கிறேன்..‌" என்றாள் திவ்யா..

"பேசினா பேசிட்டு போகட்டும்.. நாம என்ன செய்ய முடியும்.."

அன்று முடிக்க வேண்டிய வேலை ஒன்று நிலுவையில் இருக்க உதய் கிருஷ்ணா சற்று பரபரப்பாக தெரிந்தான்..

தலை வேறு சுற்றுகிறது.. இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஓய்வெடுத்தால் தேவலாம் போல் தோன்றியது..

பர்மிஷன் கேட்டால் கிடைக்குமா..? இல்லையானா லீவு..

கிடைக்கும்.. நிறைய திட்டு கிடைக்கும்.. எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று ஏற்றும் பேச்சும் கிடைக்கும்..

பல்லை கடித்துக் கொண்டு வேலையை முடித்துவிடு, பிறகு ஒரு நாள் கூட ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..‌ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு

அவசரமாக டாகுமென்ட்களை தயாரிக்க ஆரம்பித்தாள்.. மனம் வேலையில் லயித்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை..‌

ஏகப்பட்ட பிழைகள்..‌ கழுகு கண்களுடன் அனைத்தையும் சரி பார்த்து அவள் முகத்திலேயே வீசியெறிந்தான் உதய் கிருஷ்ணா..

"முடியலன்னா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல.. வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சிருப்பேன்.. செய்றேன் செய்றேன்னு சொல்லி இவ்வளவு நேரத்தை வீணாக்கிட்டியே.. எட்டு மணிக்கு எல்லா டாகுமெண்ட்ஸையும் செக் பண்ணி மெயில் அனுப்பனும்.. இப்பவே மணி மூணு.." என்றவனுக்கு அவள் சாப்பிடாமல் வேலை செய்தது கூட மறந்து போய்விட்டதோ என்னவோ..!!

"சே..‌ உன்னை நம்பினேன் பாரு என்னை சொல்லணும்.." என்றதும் அவள் கண்களில் வேதனையின் சாயலாக கண்ணீர் துளிர்த்தது..

"சார்.. நான்.."

"கெட் அவுட்.."

கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பத்மினி..

"ஹேய்.. சில்லி மிட்டாய் ரொம்ப காரசாரமா பத்மினியை கடிச்சு வச்சிருச்சு போல.. பாவம் அழுதுகிட்டே வெளிய வர்றா..‌"

"நல்லா வேணும்.. முதலாளியை கைக்குள்ள போட்டுக்கிட்டு என்ன ஆட்டம்.. எப்பவும் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது..!! வாங்கி கட்டட்டும்.. அப்பதான் புத்தி வரும்.. என்னமோ உலகத்திலேயே இவன் மட்டும்தான் வேலை செய்யற மாதிரி.. நாமெல்லாம் சும்மா இருக்கிற மாதிரி என்ன பந்தா.. இப்ப தெரிஞ்சுதா லட்சணம்.."

பத்மினி தனது இடத்தில் வந்து அமர்ந்து வேலைகளை மீண்டும் தொடர்ந்தாள்.. வயிறு உள்ளே இறுக்கிப்பிடித்து இழுத்து ஒரே வலி..

"அம்மாஆஆஆ.." வயிற்றைப் பிடித்துக் கொண்டு முனகியவள்.. வீராப்பாக செத்தாலும் பரவாயில்லை என்று.. கருமமே கண்ணாக வேலை செய்து கொண்டிருந்தாள்..

கேண்டீன் சென்று ஒரு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் தேவலாம் போல் தோன்றியது.. அதற்கு வழி இல்லை.. பணிச்சுமை மூச்சு விட வழியின்றி அழுத்தியது அவளை..

இது ஒரு கட்டுமான பணி இடத்தில்.. உதய் கிருஷ்ணா பொருட்களின் தரத்தில் கோளாறு என்று புகார் வந்திருக்க அது என்னவென்று பரிசோதிப்பதற்காக புறப்பட்டு வெளியே வந்தவன்.. பத்மினியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பத்மினி இதை கவனிக்கவில்லை..

ஆவணங்கள் தெளிவாக ஸ்கேன் செய்யப்பட்டு ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருந்தன..

நேரம் குறைவு.. அனுப்ப வேண்டிய டாக்குமென்ட்கள் அதிகம் என்பதால் அவசரமாக அனைத்தையும் கஸ்டமருக்கு மேல் செய்து அனுப்பி வைத்தான்..

வேலைகளை முடித்துவிட்டு அப்பாடா என்று ஆயாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் ..

பத்மினிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்..

"சாரி பத்மினி.."

அவள் குறுஞ்செய்தியை பார்த்ததற்கான ப்ளூடிக் வரவில்லை..

"வேலையா இருப்பா.. கிளம்பலாம்.."

என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நேரம் கார்கால மழை கனமாக பிடித்துக் கொண்டது..

மழையின் காரணமாக குண்டும் குழியுமான சாலையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து தான் வீடு வந்து சேர்ந்தான்..‌

கதவை திறந்த ரமணியம்மா.. உள்ளே கூட காலடி எடுத்து வைக்காதவனிடம்..

"டேய் உதய்.. பத்மினி இன்னும் வீட்டுக்கு வரலடா.. ஃபோனையும் எடுக்கல.. என்னன்னு தெரியல..!! கொஞ்சம் என்னன்னு பாரேன்..!!" என்றார் பதைபதைப்புடன்..

"ப்ச்.. அவ அண்ணனோ.. தம்பியோ..
அங்கே போயிருப்பா.." என்றான் சாதாரணமாக.. பதட்டம் பரிதவிப்பு அவன் குணத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"இல்லைடா கேசவனுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்.. அங்க வரலையாம்.. இந்த ஊர்ல அவளுக்கு வேற சொந்தக்காரங்க இல்லை.. எங்க போனாளோ மழையில எங்க மாட்டிட்டு இருக்காளோ.. !!"

"ஒரு முறை அவ எங்க இருக்கான்னு தேடி பாரேன்.."

"ப்ச்.. எங்கேன்னு போய் தேடுவேன்.."

"அதானே நீ நான் காணாமல் போனாலே தேட மாட்ட.. அவளையா தேட போற.. உணர்ச்சிகளை இல்லாத ஜடத்துக் கிட்ட போய் பேசிட்டு இருக்கேன் பாரு.."

"அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.. வந்துருவா.. இப்படி புலம்பாம போய் உட்காருங்க.. உடம்புக்கு எதாவது வந்துட போகுது..‌" என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான் உதய் கிருஷ்ணன்..

தொடரும்..
☺☺☺😊😇😇😇
 
Member
Joined
Apr 7, 2023
Messages
61
👌👌👌👌👌👌👌👌
 
New member
Joined
Jun 2, 2024
Messages
13
அப்போ அவளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா? அன்புக்கு இங்கே தட்டுப்பாடு..
 
Member
Joined
Sep 9, 2023
Messages
39
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊
 
Member
Joined
Jan 11, 2023
Messages
36

Ivanku marriage panni vechi Padminiya waste pannitinga writer madam
 
Joined
Jul 25, 2023
Messages
23
எந்தவொரு பொருளும் கைக்கு கிட்ட இருக்கும்போது அதோட அருமை நிச்சயமாக தெரியாது சார் அது கையை விட்டு விலகிச்செல்லும் போது தான் அதோட அருமை புரியும் உங்களுக்கும் அவளோட பாசமும் அன்பும் ஒருநாள் புரியும் ஆனால் அது வரை அவ உங்க கூட இருப்பாளா அது தான் கேள்விக்குறி
 
Member
Joined
Jan 21, 2024
Messages
64
திருப்பியும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறிடுச்சா பாவம் பத்மினி என்னாச்சோ இன்னொரு யூடி சீஸ்
 
Joined
Jul 31, 2024
Messages
54
நடு இரவில் ஒரு குறுஞ்செய்தி..

ஒரு கண்ணை மட்டும் திறந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தாள் பத்மினி.. வேறு யார்..!! அவன் தான் செய்தி அனுப்பி இருந்தான்.. இருவருக்கமான உரையாடல் தொடங்கியது..

"பத்மினி.."

"ம்ம்.."

"நீ என்னை ரொம்ப அவமானப் படுத்தற..?"

"ஏன் நான் என்ன செஞ்சேன்.."

"அம்மா கிட்ட போய் படுத்துக்கிட்டா என்ன அர்த்தம்..?"

"பதில் சொல்லு பத்மினி.."

"பத்மினி ஆன்லைன்ல தான் இருக்கியா..?"

"ஓகே குட் நைட்.." என்று சொன்ன அடுத்த கணம் பத்மினியிடம் இருந்து பதில் வந்தது..

"ஏன் உங்களுக்கு தெரியாதா..?"

"ஏன் நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா..?"

"ஒன்னு ரெண்டு ஓகே.. ராத்திரி முழுக்கன்னா எப்படி பொறுத்துக்க முடியும் சொல்லுங்க..?"

"எனக்கு உன்னை கிஸ் பண்ணிட்டே இருக்கணும்னு தோணுது பத்மினி.. ஒவ்வொரு முத்தம் கொடுக்கும் போதும் இன்னும் ஒன்னுன்னு மனசு கேக்குது.." பத்மினியால் டைப் செய்ய முடியவில்லை.. விரல்கள் நடுங்கின..

"பத்மினி ஆர் யூ தேர்.."

"தூங்கிட்டியா..!!"

"தூக்கம் வருதுன்னா சொல்லு.. இல்லைன்னா இப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்.."

"நீங்கதானா சார் இது..?"

"ஏன் அப்படி கேக்கற..?"

"என்னால நம்ப முடியல..!!"

"நீ இங்கே வர்றியா..?"

"ஏன்?"

"சும்மா உன்னை பாக்கத்தான்..!!"

"காலையிலிருந்து என்னை தானே பார்த்துட்டு இருந்தீங்க.. சொல்லப்போனா என்னை மட்டும்தான் பாத்துட்டு இருந்தீங்க.."

"சரி இப்ப வா..!!"

"வேண்டாம் சார்.." ரமணியம்மா எழுந்து தேடுவாங்க.."

"தேட மாட்டாங்க.. வா.."

"அப்படின்னா ஒரு கண்டிஷன்.. நீங்க என்ன கிஸ் பண்ண கூடாது.. டச் பண்ண கூடாது.."

சில வினாடிகள் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை..

"நீ தூங்கு குட் நைட்.."

"பாத்தா மட்டும் போதும்னு சொன்னீங்க..?"

"உன்னை பார்த்த உடனே எல்லாம் வேணும்னு தோணுமே..?"

பார்க்கவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் முத்தமிடவும் வேண்டாம்.. இது மாதிரியான ஆபாசமில்லாத அழகான கிளர்ச்சியூட்டும் உரையாடல்கள் மட்டும் போதும் என்று தோன்றியது..

"சரி அப்ப நான் தூங்கட்டுமா.."

"நீ வருவேன்னு நினைச்சேன்.. ஓகே குட் நைட்.." அவன் ஆஃப்லைன் சென்று விட்டான்..

ஆஃப்லைன் தான் சென்றிருந்தான்.. ஆனால் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்து மார்பின் குறுக்கே இரு கைகளை கட்டி அமர்ந்திருந்தான்..

கதவை திறக்கும் ஓசை..!! உள்ளே வந்தாள் பத்மினி..

அவள் லேசாக சிரித்தாள்.. அவன் சிரிக்கவில்லை.. ஆழ்ந்த விழிகளால் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

"நீங்க தூங்கலையா..?"

"நீ வருவேன்னு எனக்கு தோணுச்சு..!!"

கண்களை தாழ்த்திக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.. அவன் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதில் தேகத்திற்குள் ஏதோ குறுகுறுப்பு..

"தூங்கட்டுமா.." பத்மினி கேட்க.. இடையோடு கை போட்டு இழுத்து அணைத்து இதழோடு முத்தமிட்டவன்.. "தூங்கு.. குட் நைட்.." என்றுவிட்டு படுத்துக்கொண்டான்..

அவ்வளவுதானா..? ஒருவேளை அவளுக்குதான் ஏமாற்றமாக போனதோ..!!

"முத்தங்கள் சலிச்சிட்டது போல.." உதடு சுழித்தாள் பத்மினி..

முத்தங்களோடு மட்டும் முடிவதில்லை வாழ்க்கை.. நீ காணாத பொக்கிஷங்கள் என்னிடம் நிறைய உண்டு என்று தெரியப்படுத்த பத்மினி விரும்பவில்லை.. அவனும் அறிய முற்படவில்லை.. முத்தங்களை கடந்து எல்லை மீறவிடாமல் ஏதோ ஒன்று இருவரையும் தடுத்துக் கொண்டிருக்கிறது..‌

"தூங்கலையா நீ.. தூக்கம் வருதுன்னு சொன்னே..‌" தலையை மட்டும் தூக்கி பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"இதோ படுத்துட்டேன்.." கால்களை நீட்டி படுத்துக் கொண்டு விழிகளை மூடினாள்..

மூர்க்கத்தனமான முத்தங்கள் வேண்டாம்.. இதமான அணைப்பு வேண்டும்..

அன்னைக்கு மாதிரி அந்த மார்போடு இறுக்கி அணைச்சுக்கணும்..

அந்த வாசனை

அந்த கதகதப்பு.. அதெல்லாம் கிடைக்குமா..? உள்ளுக்குள் ஏக்கம்..

"என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கறீங்களா.." கேட்டுக்கொண்டே அவன் பக்கம் திரும்ப.. உதய் கிருஷ்ணன் உறங்கியிருந்தான்.. விழிகள் மூடியிருந்தவள் ஏதேனும் பேசுவாள் என்ற எதிர்பார்ப்போடு இத்தனை நேரம் முகம் பார்த்துக் கொண்டிருந்ததை பத்மினி அறியவில்லை..

இப்போது வைத்த கண் வாங்காமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. அவனும் அதை அறியவில்லை.. உறங்கியிருந்தான்..

"என்ன பாஸ்கர் எம்.டியோட ரூம் முழு அந்தப்புரமா மாறிட்டாப்ல தெரியுது..‌"

"என்னவோ நமக்கு எதுவுமே இப்படி சிக்க மாட்டேங்குதே.."

"அதுக்கு நீ ஒரு கம்பெனியோட எம்டியா இருக்கணும்.. கார்ல வந்துட்டு கார்ல போகணும்.. பெரிய வீடு பேங்க் பேலன்ஸ் இதெல்லாம் இருக்கணும்.. அப்பதான் பத்மினி மாதிரி பொண்ணுங்க தானா வந்து விழுவாங்க..!!"

"பத்மினி மாதிரி பொண்ணுங்க வேண்டாம்.. ஒரு சுந்தரி மாதிரி ராகினி மாதிரி இதோ.. இந்த மாதிரி சுமாரான பொண்ணுங்க கூட நம்மள கண்டுக்க மாட்டேங்குதுங்க.. நம்ம ஆபீஸ்ல ஒட்டுமொத்த பொண்ணுங்க கண்ணும் அங்கதானே இருக்குது.."

"அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. மனுஷன் வாழறார்.. பத்மினிக்கு அப்புறமா ஒவ்வொருத்தரயா கரெக்ட் பண்ணுவாரோ என்னவோ..!!"

"முன்னாடி இப்படி இல்லையேடா..!! மனுஷன் நல்லாத்தானே இருந்தாரு.. இப்ப என்ன ஆச்சுதோ.. இதுக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்ல.."

"கல்யாணம் செஞ்சுக்கிட்டா தொல்லைடா.. ஒருத்தி கூட மட்டும்தானே வாழ முடியும்..‌ இது ரொம்ப வசதி.. இப்படி நெனச்ச பொண்ணுங்களோட இஷ்டப்படி சந்தோஷமா இருக்கலாமே..!! எவன் கேட்பான்.. ஒரு கப் காபி சாப்பிட காபி தோட்டத்தையே எவனாவது விலைக்கு வாங்குவானா..?"

அந்நேரம் பார்த்துதானா பத்மினி அவ்வழியாக நடந்து செல்ல வேண்டும்..‌

மேஜையில் சாய்ந்து நின்றிருந்த திவாகர் பெருமூச்சு விட்டான்..

"நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்..!!"

"பொறுடா.. பங்களா நாய் தின்னுட்டு போட்ட எலும்பு துண்டு ஒருநாள் தெரு நாய்களுக்கும் கிடைக்கும்..‌"

"அடச்சீ எச்சில்..!!"

"எச்சிலா இருந்தா என்னடா ருசியா இருந்தா போதாதா..!!" ஆண்களுக்குள் இப்படி வக்கிரமான பேச்சு..

"அதெல்லாம் நமக்கு கிடைக்காதுடா.."

"எதுவும் தானா கிடைக்காது நாமதான் கிடைக்க வைக்கணும்.."

"அடேய் ஜாக்கிரதையா இருங்கடா.. அந்த பொண்ணுகிட்ட என்ன வம்பு செஞ்சான்னு தெரியல.. ஒருத்தன் வேலையை விட்டு போயிட்டான் தெரியும் இல்ல.. அம்மணி ரொம்ப பெரிய இடம்..‌ தொட்டா ஷாக் அடிக்கும்..!!"

"டே..ய்.. விருப்பம் இல்லாம தொட்டா தான்டா ஷாக் அடிக்கும்.. நோ சொல்ற பொண்ண எஸ் சொல்ல வைக்கிறதுதான்டா ஆம்பளத்தனம்.. நீ வேணும்னா பாரு.. கூடிய சீக்கிரம் அவளை என் வலையில விழ வைக்கிறேன்..‌ அப்புறம் அக்கா என்னைய பாத்து வெட்கப்பட்டுக்கிட்டே ஆஃபிஸ் வருவா.." ஹரிகுமார் சொல்ல அனைவரிடமும் கலீர் சிரிப்பு..

பெண்கள் பக்கம்.. மதிய உணவு இடைவேளையில்..

"நீ வேணா நல்ல நோட் பண்ணி பாருடி..‌ இப்போ சார் ரூம்ல கிளாஸ் ஓபன்லதான இருக்கு.. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லா கர்டைன்ஸும் குளோஸ் ஆகும்..‌ அப்புறம் பத்மினியை சார் கூப்பிடுவாரு.."

"உள்ளே போயிட்டு வெளியில வர்றவ எப்படி வர்றான்னு மட்டும் பாரேன்.."

"எப்படி வருவா..?"

"தலையெல்லாம் கலைஞ்சு.. சாரி இடுப்பை விட்டு விலகி.."

"சும்மா ஓவரா பேசாதடி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. போன மாதிரித்தான் திரும்பி வருவா.. ஆனா என்ன.. உதடு மட்டும் செக்கச் செவேல்னு சிவந்து போயிருக்கும்.."

"ஏன் சார் லிப்ஸ்டிக் போட்டு விடுவாரோ..!!" பெண்களிடம் களுக்கென சிரிப்பு..

"ஆமாமா.. வாயோட வாய் வச்சு லிப்ஸ்டிக் போட்டு விடுவாரு..‌"

"ஏன் தான் இந்த மனுஷனுக்கு புத்தி இப்படி போகுதோ.."

"உன்ன பாத்து பல்ல காட்டியிருந்தா நல்லவர்ன்னு சொல்லியிருப்பே..!!"

"சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.."

"ஆனாலும் பகிரங்கமா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு எப்படி இவளெல்லாம் வெட்கமே இல்லாம சுத்துறா..‌ உழைக்காத சோறு எப்படித்தான் தொண்டைக்குள்ளே இறங்குதோ.. !!"

சற்று தொலைவில் அமர்ந்து தனக்கான சிலரோடு உணவு உண்டு கொண்டிருந்த பத்மினியை பார்த்துதான் இந்த பேச்சு..

"பத்மினி இதுங்கெல்லாம் உன்ன பத்திதான் பேசுதுங்க நினைக்கிறேன்..‌" என்றாள் திவ்யா..

"பேசினா பேசிட்டு போகட்டும்.. நாம என்ன செய்ய முடியும்.." பத்மினி அலட்சியமாகத்தான் சொன்னாள்..

"நீ நல்லா நறுக்குனு நாலு கேள்வி கேட்டு விடு பத்மினி.. இல்லனா இதுங்கல்லாம் அடங்காதுங்க..‌ நீ எதுவுமே பேச மாட்டேங்கற.. அதனாலதான் தலை மேல ஏறி ஆடுதுங்க.."

"அவங்களுக்கு தேவை பதிலோ அல்லது விளக்கமோ இல்ல திவ்யா.. அவங்களுக்கு பேசணும்.. அதுல ஒரு கேவலமான சந்தோஷம்.. நீ என்னதான் எடுத்து சொன்னாலும் அதிலிருந்து ஒரு பாய்ண்ட்ட கண்டுபிடிச்சு கிண்டல் பண்ணி பேசத்தான் செய்வாங்க.. இவங்களை அப்படியே விட்டுட்டு நம்ம வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்.. இவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்தா நம்ம வாழ்க்கைதான் நரகமா போகும்..!!"

"ஆனாலும் பத்மினி அவங்க சொல்றதுல உண்மை இல்லைன்னு நீ கொஞ்சம் புரிய வைக்கலாம் இல்ல.."

"உண்மை இருக்கோ இல்லையோ அது என்னோட பர்சனல் விஷயம்.. அதுல தலையிட இங்கு யாருக்கும் உரிமை இல்லை.. யாருக்கும் நான் புரிய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.. சாரி திவ்யா நீ கேட்டதுக்கான பதிலை நான் சொன்னேன்.." என்று காலியான டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள்..

பணிச்சுமை அழுத்திய மனநிலையிலும் பத்மினி வேறு மாதிரியான மனநிலையிலும் இருந்ததால்.. அன்று அலுவலகத்தில் இருவருக்கும் இடையில் எந்தவித முத்த பரிமாற்றங்களும் இல்லை..

"என்ன..? இன்னைக்கு கர்ட்டெயின் மூடல..!!

மூடு இல்ல அதனால மூடல.. என்னடா கேள்வி இது.. வேலைய பாருங்கடா..!!"

அன்று முடிக்க வேண்டிய வேலை ஒன்று நிலுவையில் இருந்த காரணத்தால் உதய் கிருஷ்ணா சற்று பரபரப்பாக தெரிந்தான்..

பத்மினிக்கு வேறு அன்று பார்த்து வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. வயிறு வலி.. நெஞ்செரிச்சல்.. என்ன உபாதை என்று சொல்லத் தெரியவில்லை.. ஒருவேளை மாதாந்திர தொந்தரவோ.. இல்லையே அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே..!!

"பத்மினி உன்னை சார் கூப்பிடுகிறார்..!!" நெஞ்சை தடவிக் கொண்டிருந்த வேளையில் ஒருத்தி சொல்லிவிட்டு சென்றாள்..

உள்ளே நுழைந்தவரிடம் அடுக்கடுக்காக வேலைகளை ஒப்படைத்தான் உதய்கிருஷ்ணா..

"பத்மினி ரொம்ப டைம் இல்ல.. லஞ்ச் பிரேக்குள்ள முடிச்சுருங்க..‌ மத்தவங்களை விட நீங்க கொஞ்சம் டெடிகேட்டடா வொர்க் பண்ணுவீங்க.. அதனாலதான் உங்ககிட்ட இந்த வேலைகளை ஒப்படைக்கிறேன்.. அன்ட் மோர் ஓவர் எனக்கு வேற ஆப்ஷனும் இல்ல.. எனக்கு ஈவினிங்குள்ள அத்தனை ரிப்போர்ட்சையும் கஸ்டமருக்கு சப்மிட் பண்ணியாகணும்.." வேலை மும்முரத்தில் அவளை மூன்றாம் மனுஷியாக பாவித்து நீங்க வாங்க என்று தான் அழைத்துக் கொண்டிருக்கிறான்..

இன்று அலுவலகமே அவனிடம் சிக்கிக் கொண்டு கதி கலங்கி கொண்டிருக்கிறது..‌ எல்லோரையும் ஏதாவதொரு வேலை சொல்லி ஆளுக்கொரு பக்கமாக விரட்டி கொண்டிருப்பவனிடம்..‌ தன் பிரச்சனைகளை எப்படி பொறுமையாக எடுத்துச் சொல்ல முடியும்.. அதிலும் தனக்கு என்ன பிரச்சனை என்று அவளுக்கே தெரியாத போது..

"என்ன இன்னும் நிக்கிறீங்க? போங்கம்மா..‌ சீக்கிரம்.." என்று அவசரமாக விரட்டியடிக்க ஓகே சார் என்றபடி வெளியே வந்தாள்..

தலை வேறு சுற்றுகிறது.. இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஓய்வெடுத்தால் தேவலாம் போல் தோன்றுகிறது..

பர்மிஷன் கேட்டால் கிடைக்குமா..? இல்லையானா லீவு..

கிடைக்கும்.. நிறைய திட்டு கிடைக்கும்.. எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று ஏச்சும் பேச்சும் கிடைக்கும்..

பல்லை கடித்துக் கொண்டு வேலையை முடித்துவிடு, பிறகு ஒரு நாள் கூட ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..‌ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு

அவசரமாக டாகுமென்ட்களை தயாரிக்க ஆரம்பித்தாள்.. மனம் வேலையில் லயித்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை..‌

ஏகப்பட்ட பிழைகள்..‌ கழுகு கண்களுடன் அத்தனையும் சரி பார்த்து அவள் முகத்திலேயே வீசியெறிந்தான் உதய் கிருஷ்ணா..

"முடியலன்னா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல.. வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சிருப்பேன்.. செய்றேன் செய்றேன்னு சொல்லி இவ்வளவு நேரத்தை வீணாக்கிட்டியே.. எட்டு மணிக்கு எல்லா டாகுமெண்ட்ஸையும் செக் பண்ணி மெயில் அனுப்பனும்.. இப்பவே மணி மூணு.." என்றவனுக்கு அவள் சாப்பிடாமல் வேலை செய்த விஷயம் கூட மறந்து போய்விட்டதோ என்னவோ..!!

"சே..‌ உன்னை நம்பினேன் பாரு என்னை சொல்லணும்.." என்றதும் அவள் கண்களில் வேதனையின் சாயலாக கண்ணீர் துளிர்த்தது..

"சார்.. நான்.."

"கெட் அவுட்.."

கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பத்மினி..

"ஹேய்.. சில்லி மிட்டாய் ரொம்ப காரசாரமா பத்மினியை கடிச்சு வச்சிருச்சு போலடி.. பாவம் அழுதுகிட்டே வெளிய வர்றா..‌"

"நல்லா வேணும்.. முதலாளியை கைக்குள்ள போட்டுக்கிட்டு என்ன ஆட்டம்.. எப்பவும் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது..!! வாங்கி கட்டட்டும்.. அப்பதான் புத்தி வரும்.. என்னமோ உலகத்திலேயே இவன் மட்டும்தான் வேலை செய்யற மாதிரி.. நாமெல்லாம் சும்மா இருக்கிற மாதிரி என்ன பந்தா.. இப்ப தெரிஞ்சுதா லட்சணம்.."

பத்மினி தனது இடத்தில் வந்து அமர்ந்து வேலைகளை மீண்டும் தொடர்ந்தாள்.. வயிறு உள்ளே இறுக்கிப்பிடித்து இழுத்து ஒரே வலி..

"அம்மாஆஆஆ.." வயிற்றைப் பிடித்துக் கொண்டு முனகியவள்.. வீராப்பாக செத்தாலும் பரவாயில்லை என்று.. கருமமே கண்ணாக வேலைகளை மீண்டும் துவங்கியிருந்தாள்..

கேண்டீன் சென்று ஒரு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் தேவலாம் போல் தோன்றியது.. அதற்கு வழி இல்லை.. பணிச்சுமை மூச்சு விட வழியின்றி அழுத்தியது அவளை..

ஒரு கட்டுமான பணியிடத்தில்.. உதய் கிருஷ்ணா கம்பெனியின் பொருட்களின் தரத்தில் கோளாறு என்று புகார் வந்திருக்க அது என்னவென்று பரிசோதிப்பதற்காக அவசரமாக புறப்பட்டு வெளியே வந்தவன்.. பத்மினியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பத்மினி இதை கவனிக்கவில்லை..

ஏழு முப்பது மணி வரைக்கும்.. அவன் கேட்ட விபரங்களை தயாரித்து பிழையில்லாமல் ஒன்றுக்கு மூன்று முறை அலசி ஆராய்ந்து.. அத்தனை காகிதங்களையும் சரிபார்த்து கோப்புகளாக அடுக்கி அவன் மேஜையில் வைத்து விட்டுதான் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருந்தாள்..

அவள் அங்கிருந்த புறப்பட்டு சென்ற பத்தாவது நிமிடத்தில் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் உதய் கிருஷ்ணா..

அனைவரும் அலுவலக நேரம் முடிந்து வெளியேறி சென்றிருக்க பத்மினியும் வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு போயிருப்பாள் என்று நினைத்தான்..‌

மேஜையில் அவன் முடிக்க வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்த ஆவணங்கள் செக் லிஸ்ட்டோடு பெயர் படி வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன..‌

வாய்க்கு வந்தபடி அவளை திட்டி பேசியது நினைவில் வந்து தொலைக்க.. ஆழ்ந்த பெருமூச்சோடு.. பார்வையில் இளக்கம் காட்டியவன் ஒவ்வொரு கோப்புகளாக எடுத்து சரி பார்த்தான். அனைத்து ஆவணங்களும் சிறு பிழையும் இல்லாமல் 100% நேர்த்தியாக இருந்ததில் பரம திருப்தி..

அதன் பக்கத்திலேயே ஒரு பென்டிரைவ்..‌

இது எதற்காக..? என்ற கேள்வியுடன் அதை கணினியில் பொருத்தினான்..

ஆவணங்கள் தெளிவாக ஸ்கேன் செய்யப்பட்டு ஃபோல்டரில் சேமிக்கப்பட்டு அவன் கூடுதல் வேலையை மிச்சப் படுத்தின..

நேரம் குறைவு.. அனுப்ப வேண்டிய டாக்குமென்ட்கள் அதிகம் என்பதால் அவசரமாக அனைத்தையும் கஸ்டமருக்கு மெயில் செய்து அனுப்பி வைத்தான்..

வேலைகளை முடித்துவிட்டு அப்பாடா என்று ஆயாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் ..

பத்மினிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்..

"சாரி பத்மினி.."

அவள் குறுஞ்செய்தியை பார்த்ததற்கான ப்ளூடிக் வரவில்லை..

"வேலையா இருப்பா.. கிளம்பலாம்.."

என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நேரம் லேசாக தூறிக் கொண்டிருந்த வானம் கார்கால மழையாக கனமாக பிடித்துக் கொண்டது..

மழையின் காரணமாக குண்டும் குழியுமான சாலையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து தான் வீடு வந்து சேர்ந்தான்..‌

கதவை திறந்த ரமணியம்மா.. முழுதாக உள்ளே காலடி எடுத்து வைக்காதவனிடம்..

"டேய் உதய்.. பத்மினி இன்னும் வீட்டுக்கு வரலடா.. ஃபோனையும் எடுக்கல.. என்னன்னு தெரியல..!! கொஞ்சம் என்னன்னு பாரேன்..!!" என்றார் பதைபதைப்புடன்..

"ப்ச்.. அவ அண்ணனோ.. தம்பியோ யாரோ இருக்காங்களே..
அங்கே போயிருப்பா.." என்றான் சர்வ சாதாரணமாக.. பதட்டம் பரிதவிப்பு அவன் குணத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"இல்லைடா கேசவனுக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்.. அங்க வரலையாம்.. இந்த ஊர்ல அவளுக்கு வேற சொந்தக்காரங்க இல்லை.. எங்க போனாளோ மழையில எங்க மாட்டிட்டு இருக்காளோ.. !!"

"ஒரு முறை அவ எங்க இருக்கான்னு தேடி பாரேன்.."

"ப்ச்.. எங்கேன்னு போய் தேடுவேன்.."

"அதானே நான் காணாமல் போனாலே நீ தேட மாட்டியே..!! அவளையா தேட போற.. உணர்ச்சிகளே இல்லாத ஜடத்துக் கிட்ட போய் பேசிட்டு இருக்கேன் பாரு.." ரமணியம்மா படபடத்தார்..

"அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.. வந்துருவா.. இப்படி புலம்பாம போய் உட்காருங்க.. உடம்புக்கு எதாவது வந்துட போகுது..‌" என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான் உதய் கிருஷ்ணன்..

தொடரும்..
அய்யோ பத்துக்கு என்னாச்சு ஒரு வேளை ஆபிசிலயே இருக்காளோ உடம்பு வேற முடியல 😲😲😲😲😲😲
டேய் ரோபோ மெசேஜ் பண்ணி முத்தம் மட்டும் கேக்க தெரிதுல்ல 😟😟😟😟😟😟😟😟😟😟😟😟
ஆனா டார்லு ஆண் பெண் உணர்வுகளை இவ்வளவு அழகா சொல்லமுடியுமா ரொம்பவே அழகு சொன்னவிதம் 😗😗😗😗😗😗😗😗😗
ப்ளீஸ் ப்ளீஸ் தினமும் அட்லீஸ்ட் ரெண்டு யூடியாவது போடுங்க பா 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
அடுத்த எபிக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் ஆவலோடு🧐🧐🧐🧐🧐🧐 சீக்கிரம் போடுங்க🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Top