- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
அழகி அங்கிருந்து புறப்படும் நேரத்தில்.. "என்ன அங்க பிரச்சனை.. யாரது..?" கனத்த குரலோடு பின்கை கட்டிய படி அங்கு வந்து நின்றான் கண்ணபிரான்..
வஞ்சிக்கு தொண்டைக் குழியில் நீர் வற்றி போனது..
"அது ஒன்னும் இல்லண்ணா..!
யாரோ ஒரு வயசானவங்க..! நந்தம்பாளையம் பக்கம் போறதுக்காக வழி கெட்டு வந்தாங்க..!" என்னும்போதே குரல் கேட்டு அவனிடம் வந்து நின்றார் அழகி..
வந்திருப்பது கிருஷ்ண தேவராயனின் நெருங்கிய உறவு என்றதும் பொய் சொன்ன வஞ்சியை முறைத்தான் கண்ணபிரான்..
வஞ்சி சங்கடத்துடன் தலை தாழ்ந்து கொண்டாள்..
"ஏன்டா உனக்கெல்லாம் அறிவே இல்லையா.. வயித்துக்கு சோறுதானே உங்கற.. நீ மட்டும் உன் பொண்டாட்டியோட ஜோடி போட்டு ஊரெல்லாம் சுத்தி வரணும்.. என் பேரனும் பேத்தியும் மட்டும் தன்னந்தனியா பிரிஞ்சு அல்லாடனுமோ..!" அப்பத்தாவின் கொதி நிலையை அலட்சியமாக பார்த்தபடி அமைதியாக நின்றான் கண்ணபிரான்..
"அப்பத்தா நீ மொதல்ல இங்கிருந்து கிளம்பு.." வஞ்சி அழகியை அடக்க முயன்று மெல்லிய குரலோடு பற்களை கடித்தாள்..
"நீ சும்மா இருங்கறேன்.. உன் அண்ணன் இருக்கிற தைரியத்துல தானே நீயும் ஜங்புங்குன்னு ஆடிட்டு இருக்க..! வீட்டுக்கு வந்த புள்ளைக்கு அறிவுரை சொல்லி புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க உன் அம்மைக்கும் துப்பில்ல இவனுக்கும் கூறு இல்ல.."
"ஏய்..! வார்த்தைய அளந்து பேசு.. இல்லன்னா வயசானவன்னு கூட பாக்க மாட்டேன்.." கண்ணபிரானின் குரல் உறுமியது..
"ஓஹோ என்னடா செய்வே..! உனக்கு தேவராவ கண்டாலே ஆகாது.. அதனால உந்தங்கச்சியை வீட்ல வைச்சு அடை காக்குற.. நீ மட்டும் நல்ல அண்ணனா இருந்திருந்தா உன் தங்கச்சியா அவ புருஷனோட சேர்ந்து வைக்க ஏதாவது செஞ்சிருக்கனும் இல்ல..! நீ தான் அவ காலம்பூரா வாழாவெட்டியா உன் வீட்டிலேயே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டியே..! வீட்ல இருக்கற பொம்பளையோட வாழ்க்கையை சீரமைக்க துப்பில்லை.. இதுல ஊர் பொம்பளைங்க வாழ்க்கையில சுடரேத்தி சகசோதியா மாத்துவாராம்.. புடலங்கா!" அப்பத்தா ஆக்ஷனோடு சொன்ன தோரணையில் கோபத்தில் சிவந்து அவர் கன்னத்தில் அறைந்திருந்தான் கண்ணபிரான்..
அடித்த வேகத்தில் தடுமாறி தள்ளிப் போய் விழுந்திருந்தார் அப்பத்தா..!
"ஐயோ அப்பத்தா" என்று பதறிக்கொண்டு வஞ்சியும்.. வீட்டு வாசலை தாண்டி வந்து கண்ணகியும் அவரை தூக்கி நிறுத்தினர்..
அப்பத்தா கொஞ்சம் அதிகமாக பேசக்கூடியவர் தான்.. ஆனால் அவர் பேச்சில்
ஒரு நியாயம் இருக்கும்.. ஊரிலிருக்கும் அனைவரையும் மிரட்டும் தொனியிலேயே பேசி பழக்கப்பட்டவர்.. யாருக்கும் அடங்கிப் போனதில்லை.. கம்பீரமாகவே வாழ்ந்தவர்.. ஆனால் இப்போது தன் பேரன் வயதுள்ள ஒருவனிடம் அறை வாங்கிய அதிர்ச்சியில் நிலைகுலைந்து கூனி குறுகிப் போனார்..
இத்தனை நேரம் அவர் குரலில் தொற்றியிருந்த அதிகார சாயல் காணாமல் போயிருக்க.. அடி வாங்கிய குழந்தையாக பரிதாபமாக நின்றிருந்தவரை நெருப்பாக பார்த்தான் கண்ணபிரான்..
அவன் பார்வை அப்படியே கண்ணகியின் பக்கம் திரும்பியது..
"ஏய்.. இங்க வாடி.." என்றான் தடித்த குரலில்..
நிற்கக்கூட பலமில்லாதவரை கை தாங்கலாக பிடித்திருந்த கண்ணகி தயக்கத்தோடு அவனைப் பார்த்தாள்..
"உன்னைய இங்க வர சொன்னேன்..!" என்ற அடுத்த கணம் அப்பத்தாவை விட்டு அவன் பக்கத்தில் வந்து நின்றாள் அவள்..
பளாரென்று ஒரு அறை.. "உள்ள போ..!" கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்ணகி..
"உள்ள போடி..!" கீழுதட்டைக் கடித்து மீண்டும் அதட்டினான்.. கண்ணகி அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்..
வஞ்சி என்ன செய்வதென்றே புரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருந்தாள்..! இப்போது நான் யார் சார்பாக என்று பேச வேண்டும்.. அப்பத்தாவுக்காகவா அல்லது என் அண்ணிக்காகவா..! கூடப் பிறந்த பாசக்கார அண்ணனாய் இருந்தாலும் அவனை அடக்குவதெல்லாம் கடினமான காரியம் ஆயிற்றே..!
இதற்காக தானே அப்போதிலிருந்து இங்கிருந்து போ என்றும் அழகியை விரட்டிக் கொண்டிருந்தாள்.. சொல்வதை மதிக்காமல் கோபத்தில் இஷ்டத்திற்கு பேசி பிரச்சனையை விலை கொடுத்து வாங்கியிருக்கிறதே இந்த அப்பத்தா..! இதற்குப் பின் வரப்போகும் விளைவுகளை எண்ணிப் பார்க்கையில் கண்கள் இருட்டி அவள் அடிவயிற்றில் புளியை கரைத்தது..
மீசையை இருவிரல்களால் நீவியபடி திமிரான பார்வையுடன் அப்பத்தாவின் பக்கத்தில் வந்து நின்றான் கண்ணபிரான்..
"உன் வாய் கொழுப்பையெல்லாம் வேற யார் கிட்டயாவது வச்சுக்கோ.. என்கிட்ட உன் திமிரை காட்டினா இப்படித்தான் அடி வாங்கி அவமானப்பட்டு நிக்கணும்.. அப்புறம் நீயும் உன் பேரனும் என்னதான் குட்டி கரணம் அடிச்சாலும் என் தங்கச்சி உங்க வீட்ல வந்து வாழ மாட்டா..! இத உன் பேரன் கிட்ட போய் சொல்லு.." அவன் அழுத்தமான குரலில் தளர்ந்து பொம்மை போல் திரும்பி நடந்த அப்பத்தா ஓரமாக வைத்திருந்த இரண்டு புடவைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
கடந்த கலவரத்தில் அந்த புடவைகளையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை வஞ்சி..
அப்பத்தாவின் முதுகை வெறித்தவள் கோபத்தோடு அண்ணனின் பக்கம் திரும்பினாள்..
"ஏன் அண்ணா இப்படி பண்ற..! உனக்கு மனசாட்சியே இல்லையா.. வயசானவங்கள போட்டு அடிக்கிற..! அவங்க பாவம் உடைஞ்சு போயிட்டாங்க.. இதெல்லாம் தப்புன்னு உனக்கு தோணவே இல்லையா..! என்ன மனுஷன் நீ.." வஞ்சியின் கண்களில் அத்தனை கோபம்..
"என்ன பாவம்.. என்ன பேச்சு பேசுது அந்த கிழவி..! யாராவது இப்படி நல்லா கொடுத்தாதான் திரும்ப யார்கிட்டயும் இப்படி எக்குதப்பா வாய குடுக்க கூடாதுன்னு மனசுக்குள்ள பயம் வரும்.." அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் கண்ணபிரான்..
"அவங்க பெரியவங்க மனசுல பட்டதை வெளிப்படையா அப்படிதான் பேசுவாங்க.. வயசுல சின்னவங்க நாமதான் பொறுத்து போகணும்..!"
"நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீ எனக்கு அறிவுரை சொல்லாத.. ஏன் உன் புருஷன் வீட்டுக்காரங்கன்னு பாசம் பொங்குதோ..?"
"வேற யாராயிருந்தாலும் நான் இப்படித்தான் கேட்டிருப்பேன்..! இந்த ஊரோட சேர்மன் நீயே பண்பில்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்கிட்டா மக்களுக்கு உன் மேல எப்படி மதிப்பும் மரியாதையும் வரும்.."
"அண்ணனுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நீ வளரல கண்ணு.. அந்த கிழவிய நான் மரியாதை இல்லாம பேசிப்புட்டேன் அடிச்சுப்புட்டேன்னு துடிக்கிற உன் மனசு.. அதே கிழவி என்னைய தரக்குறைவா பேசின போது பாத்துகிட்டு சும்மா தானே நின்னுச்சு..! இந்த அண்ணன் மேல உனக்கு அம்புட்டுதான் பாசம் இல்ல..!
அலுப்பாக அவனை பார்த்தாள் வஞ்சி.. "அண்ணா சம்பந்தமே இல்லாம அதையும் இதையும் சேர்த்து ஏன் முடிச்சு போடுற நீ..?"
"நான் சரியாத்தான்மா பேசுறேன்.. உனக்கு இன்னும் புகுந்த வீட்டு பாசம் விட்டு போகல.. அதனாலதான் அந்தக் கிழவிக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்து என்கிட்ட இப்படி கோவப்படுறவ.. சரி என் தங்கச்சி தானே.. உன்கிட்ட பேச்சு வாங்காம வேற யார்கிட்ட வாங்க போறேன்..!" என்று அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்தவன்.. "இதையே நினைச்சு வேதனை படாம உள்ள போய் சாப்பிட்டு தூங்கு.." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்..
நடந்த விஷயத்தை அச்சு பேசாமல் அப்படியே சொல்லவில்லை அழகி..!
கோபப்பட்டு அவன் கை தன் மேல் தவறி பட்டு விட்டதாகவும் தான் கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி சொல்லி இருந்தாள்.. ஆனால் கண்ணபிரானிடம் அடிவாங்கியதில் உள்ளுக்குள் அவமானப்பட்டு உடைந்து போயிருந்தார் அப்பத்தா..!
"என் வயசென்ன.. நான் வாழ்ந்த வாழ்க்கை என்ன..! பெரிய மனுஷின்னு கூட பார்க்காம இப்படி அடிச்சுப்புட்டானே பாவி.." என்று வழியெல்லாம் அழுது கொண்டேதான் தேவராவின் கம்பெனிக்கு வந்து சேர்ந்திருந்தார்.. இப்போது எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சித்த போதும் முடியாமல் போகவே நடந்ததை ஒன்றும் பாதியுமாக அவனிடம் உளறி கொட்டி இருந்தார் அழகி..
நடந்ததை மாற்றி சொல்லியதற்கே அருவாளை தூக்கிக்கொண்டு ஐயனார் போல் கண்ணபிரானை வெட்ட கிளம்பி விட்டான் தேவரா..!
களத்து மேட்டை தாண்டி வெறுங்காலுடன் ஆவேசமாக அவன் நடந்து சென்று கொண்டிருந்த வேகத்தில் கண்ணபிரான் தலை துண்டாகிப் போயிருக்கும்.. வஞ்சி மட்டும் குறுக்கே வராமல் போயிருந்தால்..!
வேகமாக அவனெதிரில் வந்து மார்பின் மீது சாய்ந்து தடுத்திருந்தாள் வஞ்சி..
"மாமா நில்லுங்க.. பிரச்சனையை பெருசாக்க வேண்டாம் இப்படியே விட்டுருங்க..!" அவள் குரல் நடுங்கியது..
"என்னை தூக்கி வளர்த்த அப்பத்தா கிட்ட மரியாதை இல்லாம நடந்திருக்கான் உன் நொண்ணன்.. அப்படியே விட சொல்றியா.. மரியாதையா விலகி போய்டு..! இல்லன்னா உன்னையும் வெட்டுவேன்..!" அப்பப்பா காதுசவ்வு கிழிந்து போகுமளவிற்கு அத்தனை சத்தம்.. அவ்வளவு கோபம்..
"வெட்டுங்க எல்லாரையும் வெட்டி போட்டுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருங்க.. உங்க கோபத்தால ஒரு உயிரை இழந்தது பத்தாதா.. இன்னும் எத்தனை பேர பலி வாங்கி உங்க வெறிய தீத்துக்க போறீங்க..!"
அந்த வார்த்தைகளில் உயிரில் அடி வாங்கினான் தேவரா..
நா. கொலைகாரனா..? இதயம் எப்போதும் இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை..
"வஞ்சி என்னை வெறியாக்காத..! மரியாதையா வழிய விடு..!" தாடைகள் இறுக பற்களை கடித்தான் தேவரா..
"இங்க பாருங்க.. ரெண்டு குடும்பமும் அடிச்சுக்கிட்டு மேல மேல விரோதத்தை வளர்த்துக்கறத நானும் விரும்பல.. அப்பத்தாவும் விரும்ப மாட்டாங்க..! என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கறதா இருந்தா தயவு செஞ்சு இந்த அருவாளை போட்டுட்டு அப்படியே திரும்பி போய்டுங்க.. இல்லைனா உங்க இஷ்டப்படி என் அண்ணனை என்ன வேணா செஞ்சுக்கோங்க நான் தடுக்கல.." என்றாள் கமறிய குரலில்..
"என் அப்பத்தாவுக்கு முன்னாடி யாருமே முக்கியமில்ல.. தள்ளி போடி..!"
"தெரியும்..! உங்களுக்கு என் அண்ணனையும் என் அப்பாவையும் ஜெயிக்கணும் அதுக்காகத்தானே என்னை காதலிச்சு கல்யாணங் கட்டிக்கிட்டீங்க..! உங்க வாழ்க்கையில எந்த விதத்திலும் நம் முக்கியமில்ல அப்படித்தானே..!"
"வஞ்சிஇஇஇ.. தேவை இல்லாம பேசாதே.. உன் மேல வெச்சிருக்கிற அன்பையும் பாசத்தையும் இப்படித்தான் நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை..! அப்பத்தா மேல கை வச்ச உன் அண்ணன உயிரோட விடமாட்டேன்.. விலகி போடி.." நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முரட்டு காளையாக சீறிக் கொண்டிருந்தவனை அடக்கவே முடியவில்லை அவளால்..
பட்டென அவன் காலில் விழுந்து விட்டாள் வஞ்சி..
"தயவு செஞ்சு கோபப்படாம நான் சொல்றத பொறுமையா கேளுங்க மாமா..! அவசரப்பட்டு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சு உங்க எதிர்காலத்தை பாழாக்கிக்க வேண்டாம் மாமா..!"
"அத பத்தி நீ கவலைப்படாதடி.. என்னய வேண்டாம்னு விட்டுட்டு போனவதானே நீயி.."
"ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு.. இந்த கோபம்தான நம்ம வாழ்க்கையை நாசமாக்கி வைச்சிருக்கு.. உங்களால இன்னொரு குடும்பமும் சிதைஞ்சு போக நான் அனுமதிக்கவே மாட்டேன்..! அவள் அடிக்குரலில் கத்தினாள்..
ஒவ்வொரு முறையும் தன்மீது பழி சுமத்துவதில் துவண்டு போனான் தேவரா..
கையில் வைத்திருந்த அரிவாள் நழுவி கீழே விழுந்தது..
இழுத்து மூச்சு விட்டபடி அவளை அழுத்தமாக பார்த்தவன்..
"போகல.. என் அப்பத்தா கிட்ட மரியாதை குறைவா கேவலமா நடந்துக்கிட்ட உன் அண்ணனை நான் எதுவும் செய்யல..! ஏன்னா நான் ஒரு பொட்ட.. நீ சொன்னதைக் கேட்டு அமைதியா வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்கறேன் போதுமா..?" அவன் முன்னேறினான்.. அவள் பயந்து பின்னால் நகர்ந்தாள்..
"மாமா.. நிதானமா இருங்க.."
"அதான் நீ சொல்றத கேக்கறேன்னு சொல்லிட்டேனே..! பொம்பள மயிறு..!" கண்ணபிரானை எதுவும் செய்ய இயலாத இயலாமையில் வஞ்சியின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை வைத்திருந்தான்.. வஞ்சி நிலை தடுமாறி பின்னால் நகர..!
"எல்லாம் நீ சொல்றபடிதான் நடக்கனும் இல்ல.. உங்க இஷ்டப்படி தானே என்னைய மாதிரி ஆம்பளைங்கள ஆட்டி வைக்கறீங்க.. காலம் முழுக்க உங்கள மாதிரி பொம்பளைங்களுக்கு அடிமையாதான வாழ்ந்துட்டு இருக்கோம்.. போடி போ.. நல்லாரு"
"மா..மா.."
மீண்டும் கன்னத்தில் பளிரென ஒரு அறை..
"பேசாத.. ஒரு வார்த்தை பேசாத.. இங்கிருந்து போய்டு.." அவன் கண்களை உருட்டியபடி நெருங்கி வந்த விதத்தில் வஞ்சிக்கு தலை சுற்றியது..
"எதுவும் செய்யலடி.. உன் அண்ணனை எது...வ்வும் செய்யல..! அவன் என்ன அக்கிரமம் வேணாலும் பண்ணட்டும்.. நான் வாயே திறக்கல.. ஏன்னா நான்தான் உன்னை விரும்பி தொலைச்சிட்டேனே..!" அவள் கை பிடித்து தள்ளிவிட்டவன்..
"போ போய் உன் குடும்பத்தோட சந்தோஷமா இரு..! நாங்க அவமானப்பட்டாலும் அடிபட்டாலும் உனக்கென்னடி கவல..! நீதான் என் உறவ அத்துக்கிட்டு போய்ட்டியே..! ஏய்.. இதுக்கப்புறம் என் மூஞ்சில முழிச்சிடாத.. உன்னைய நான் பார்க்கவே கூடாது.." என்று சிவந்து போயிருந்த கண்களோடு கோபம் கொப்பளிக்க சொன்னவன் திரும்பி அவ்விடம் விட்டு வேகமாக சென்றிருந்தான்..
தொடரும்..

Last edited: