• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 22

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
இரண்டு நாட்களாய் உதய் கிருஷ்ணனின் தீவிர உபசரிப்பில் உடல் நலம் தேறியிருந்தாள் பத்மினி.. இந்த இரண்டு நாட்களாக வீட்டு வேலையும் சமைப்பதும் உதய் கிருஷ்ணாவின் பொறுப்பாகிப்போனது.. காலையில் விழித்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்..

"பத்மினி.. மழை நின்னுடுச்சு வர்றியா? அப்படியே வாக்கிங் போயிட்டு வரலாம்..‌"

"நீங்க ஜாகிங்தானே போவீங்க.. உங்க வேகத்துக்கு என்னால ஈடு கொடுத்து ஓடவோ நடக்கவே முடியாது..!!" நீர் சத்து வெற்றி போனதில் பேசவே சிரமப்பட்டாள் பத்மினி..

"ஒரு நாள் ஜாகிங் செய்யலன்னா ஒன்னும் குடிமுழுகி போய்டாது.. உன்னோட சேர்ந்து மெதுவா நடக்கிறேன் வா..!!" என்று கை நீட்ட அவன் கரம் கோர்த்துக் கொண்டாள் பத்மினி..

"ரெண்டு பேரும் சேர்ந்து எங்க புறப்பட்டுட்டீங்க..?" கூடத்தில் அமர்ந்திருந்த ரமணியம்மாவின் கேள்விக்கு.. சும்மா அப்படியே காலரா நடந்துட்டு வர்றோம்.. என்றான் உதய் கிருஷ்ணா..

"நீயா அழைச்சிட்டு போற..?" அவர் முகத்தில் நம்ப இயலாத பாவனை..

"ஆமா..? வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு நாலு சுவத்தையே பாத்துட்டு இருக்கா..!! வெளிய அழைச்சிட்டு போனா ஒரு சேஞ்ச் கிடைக்குமே..!!"

"சரி போய்ட்டு வாங்க.. வெளிக்காத்தும் சூரிய வெப்பமும் உடம்புல பட்டா மனசுக்கும் உடம்புக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.. அப்படியே பார்க் பீச் சினிமான்னு சுத்திட்டு வந்தா மனசுக்கு சந்தோஷமும் கிடைக்குமே.." என்ற ரமணியம்மாவை திரும்பி பார்த்தான் உதய்.. அத்தோடு வாய் மூடி கொண்டார் அவர்..

பத்மினியை அழைத்துக்கொண்டு பார்க்கில் மெதுவாக நடந்தான் உதய் கிருஷ்ணா..

என்ன பேசுவதென்று தெரியவில்லை.. இருவரும் அமைதியாகத்தான் நடந்தனர்.. உதய கிருஷ்ணாதான் இருவருக்கிடையே நிலவிக் கொண்டிருந்த மௌனத்தை உடைத்தான்..

"தேங்க்ஸ் பத்மினி.."

எதற்காக என்பதைப் போல் அவள் பார்வை..

"எல்லா டாகுமெண்ட்டையும் பக்காவா முடிச்சு வச்சதுக்காக.. எனக்கு சிரமம் கொடுக்காமல் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி பென்டிரைவில் போட்டு வச்சதுக்காக.. நேத்து வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடுச்சு.. அதுக்காகத்தான் தேங்க்ஸ் சொன்னேன்.. சாரி உன் நிலைமை புரியாம ரொம்ப திட்டிட்டேன்..!!"

"வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டியது என்னோட கடமை.. அதுக்காக நீங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. சின்ன பாராட்டு. அது மட்டும் போதுமானது.. அன்னைக்கு உடம்பு சரியில்லாததால வேலைகளை சரிவர முடிக்க முடியாம போயிடுச்சு.. ஒரு முதலாளியா உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனா வார்த்தைகள்தான் அதிகப்படி.. அதனால நீங்க சாரி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.." என்று புன்னகைத்தவளை ஏறிட்டுப் பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"முடிஞ்ச அளவு இனிமே நான் கோபத்தை குறைச்சிக்கறேன்.. சிடுசிடுக்காம பேச முயற்சி பண்றேன்..‌"

"அது ரொம்ப கஷ்டம் சார்.. கோபமும் கடுகடுப்பும் உங்க கூட பிறந்த குணம்.. ஏதாவது ஒரு கட்டத்தில் உங்களையும் மீறி அது வெளிப்பட்டுடுது.. நீங்க என்ன செய்வீங்க பாவம்.."

"என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்க பத்மினி.. ஆனா உன்னைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல..?"

"புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் கஷ்டமான கணக்கு சூத்திரம் இல்லையே..?" இதழ் சிரிப்புடன் நெற்றிப் புருவத்தின் மத்தியில லேசான சுருக்கத்தோடு வினவினாள்.. இருவரின் தோள்களும் கரங்களும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருந்தன..

"எல்லார்கிட்டயும் அன்பு காட்டற.. சில நேரங்களில் அடங்கி போற.. சில நேரங்களில் சீறி எழுந்துக்கற.. ஒரு நேரம் யார் எது சொன்னாலும் கண்டுக்கவே மாட்டேங்கற.. இன்னொரு நேரம் மனசே வெடிச்சு போற மாதிரி தேம்பித் தேம்பி அழற.."

விரக்தியாக இதழ் வளைத்தாள் பத்மினி.. "இதுல புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு என்ன அதிசயம் இருக்கு.. மத்தவங்க சொன்னா எதையும் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு நெருக்கமானவங்க சொன்னா கோபம் வரும்.. வலிக்கும்.. கத்துவேன்.. அழுவேன்.. அவ்வளவுதான்.."

"ம்ம்.. எனக்கு தெரிஞ்சு என்கிட்டதான் நிறைய கோபப்படுற.. கத்தற அழற.." என்றவனை திரும்பிப் பார்த்தாள்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நடந்தனர்.. அந்தப் பார்வையில் நிறைய அர்த்தங்கள் பொதிந்திருந்தன..

ஒருவேளை மற்ற ஆண்களாக இருந்திருந்தால் சின்ன சிரிப்புடன் நான் உனக்கு அவ்வளவு நெருக்கமானவனா என்று ரொமான்டிக் பார்வையோடு புரிய வைத்திருப்பார்களோ என்னவோ..!! இவனுக்குத்தான் சிரிப்பும் வராது.. ரொமான்ஸ்சும் வராதே..!!

ஆனாலும் கூட அந்த பார்வையை பத்மினியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் என்ன ஆசை மனைவி.. உதடுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தாள் அவள்..

பாவம் அவனுக்கு அன்பாக பார்க்கவும் தெரியவில்லை.. பேசவும் தெரியவில்லை சிரிக்கவும் தெரியவில்லை..‌ கோபத்தோடு வார்த்தைகளை இரையாமல் அவளோடு நடப்பதே மிகப் பெரிய உபகாரம்தான்..

திடீரென சிரித்து தலை தாழ்ந்தாள் பத்மினி..

அது வெட்கச் சிரிப்பு.. அல்ல உதட்டுக்குள் ஒளித்துக்கொள்ளும் கேலி சிரிப்பு..

"என்னாச்சு பத்மினி.."

"ஒன்னும் இல்லை.."

"என்கிட்ட சொல்ல கூடாதா..!!"

"சொல்றதைப் பத்தி ஒன்னும் இல்லை.. சாதாரண விஷயம்தான்.. அதை எடுத்துக்கிற விதத்தில் உங்க மனப்பான்மை சரியா இருக்கணுமே..!! இதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விவகாரமா என்னை திட்டிட கூடாது இல்லையா..?"

"அப்படியெல்லாம் திட்ட மாட்டேன்.. விஷயத்தை சொல்லு.." அழுத்தம் கொடுத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற பொருள் படச் சொன்னான் உதய் கிருஷ்ணா..

"அதோ ஜாகிங் போறாரே..!! எல்லோ டி-ஷர்ட் ப்ளூ பேண்ட்.. சட்டுனு பாக்காதீங்க.." அவள் தலை தாழ்ந்து கொண்டு சொல்ல.. உதய கிருஷ்ணாவிற்கு அந்த சூட்சமமெல்லாம் தெரியவில்லை.. சட்டென்றுதான் திரும்பி பார்த்தான்..

"ஐயோ பாத்துட்டீங்களா..!! அந்த ஆளு ரொம்ப நாளா என்னை சைட் அடிக்கிறார்.." அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் பத்மினி..

"சைட் அடிக்கிறானா..?" உதய் முகத்தில் எந்தவித மாறுதல்களும் இல்லை..

"நான் இங்க வந்த நாள்ல இருந்து.. நான் எங்க போனாலும் அங்கே வந்து நிக்கிறான்.. காலையில ஆபீஸ் போகும்போது.. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது.. பால் வாங்கும் போது காய்கறி வாங்கும் போது.. பல நேரங்களில் ரொம்ப எரிச்சலா வரும்.. சில நேரங்களில் சிரிப்பு வரும்.."

"சிரிப்பு வருதா..?" இப்போது அவன் முகம் மாறியது..

"கோபம்தானே வரணும்..?"

"இவனெல்லாம் ஒரு ஆளா.. கண்டுக்காம விட்டுட்டா அவனே வேற வேலையை பார்க்க போயிடுவான்.. கோபப்பட்டு.. முகத்தில் எக்ஸ்பிரஷனை காட்டி நாமளே எதுக்கு அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.."

"அப்புறம் இப்ப மட்டும் எதுக்காக சிரிச்ச.."

"நீங்க கூட இருக்கறதை பாத்துட்டும் தைரியமா முன்னாடி வந்து சைட் அடிக்கிறானே.. அதை நினைச்சுதான் சிரிச்சேன்.."

"உனக்கு சிரிப்பு வருது.. எனக்கு கோபம் வருது.."

"உங்களுக்கு கோபம் வரலைனாதான் ஆச்சரியம்.. நான்தான் சொன்னேனே.. நீங்க என்னைதான் தப்பா நினைப்பீங்கன்னு.." பத்மினி அவனை கோபத்தோடு பார்த்தாள்..

"கோபம் உன் மேல இல்ல.. அவன் மேலதான்.. ஒருவேளை என்னை உன்னோட அப்பான்னு நினைச்சிருப்பானோ..?" வட்ட வடிவ நடை பாதையை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்த ப்ளூ ஷர்ட் ரோமியோவை முறைத்தபடி சொன்னான் உதய் கிருஷ்ணா..

பத்மினி விழிகளை விரித்தாள்.. உதய் என்றுமே தன் வயதை பற்றி கவலை பட்டதில்லை..இன்று ஏனோ இந்த வினோத மனோபாவம்..

"நீங்க பார்க்க அப்படி ஒன்னும் வயசா தெரியல.. கண்டதையும் கற்பனை பண்ண வேண்டாம்.. சரி வாங்க வீட்டுக்கு போகலாம்.. சூழ்நிலை சரியில்ல.."

"எதுக்காக போகணும்.. மத்தவங்களுக்காக நம்மளை மாத்திக்கணும்னு அவசியம் இல்ல.. வேணும்னா அவன் போகட்டும்.. நாம இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம்.. உனக்கு கால் வலிச்சா சொல்லு.. வீட்டுக்கு போகலாம்.. கால் வலிக்குதா?" என்று கேட்ட தோரணையே சரியில்லை.. பிறகு எப்படி ஆமாம் என்று சொல்ல முடியும்.. இல்லை என்று தலையசைத்தாள் பத்மினி..

அந்த ப்ளூ ஷர்ட் ரோமியோவிற்கு 25 அல்லது 26 வயது இருக்கலாம்.. உதய கிருஷ்ணாவைப் போல் ஓங்குதாங்கான உடற்கட்டோடு வசீகரமாக இல்லை என்றாலும் இளைஞனாக இருந்தான்.. திராவிட நிறம்.. அடர்ந்த கேசம்.. ஒல்லியான உடல்வாகு என்று வாட்டசாட்டமான வாலிபனுக்கு உரிய பொலிவு அவனிடம் இருந்தது..

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவனைத்தான் பார்த்தபடி நடந்தான் உதய் கிருஷ்ணா.. ஒவ்வொரு முறை அந்த வாலிபன் பத்மினியை காணும் போதும் இங்கே அடி பாதத்திலிருந்து உச்சிவரை ஜிவ்வென்று கோபம் ஏறியது..

அந்த ப்ளூ ஷர்ட் வாலிபன் பத்மினியை பார்க்கும் நேரத்தில் உதய் தன்னையும் அறியாமல் அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக் கொள்ள.. பத்மினி திரும்பி உதயகிருஷ்ணனை வினோதமாக பார்த்தாள்..

"என்னாச்சு..?"

"நடக்கும் போது தவறி விழுந்துட போற..!! பாத்து வா.." அவள் கரத்தை மென்மேலும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டான்..

"நான் சரியாத்தானே நடக்கறேன்.."

அனல் தெறிக்க அவளை பார்த்தான்.. "இப்ப என்ன..? நான் உன் கைய பிடிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு..?"

"இல்ல.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." பத்மினி திணறினாள்..

"உன் கைய பிடிக்க எல்லா உரிமையும் எனக்கு உண்டு.. அப்படித்தானே.."

"ஆ..ஆமாம்.." பத்மினி விழித்தாள்.. திடீரென ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை.. ஒருவேளை மனம் திறந்து பேசியதில் தன்னை தவறாக நினைத்துக் கொண்டாரோ.. என்ற கலவரம் நெஞ்சில் சூழ்ந்து கொண்டது..

சட்டென அவள் தோள் மீது கை போட்டு.. அந்த ப்ளூ ஷர்ட் இளைஞன் அவள் பக்கமாக கடக்கும் நேரம்.. இழுத்து மற்றொரு பக்கம் நிறுத்திக் கொண்டு இடையோடு அணைத்துக் கொண்டான்..‌ இதைவிட அழகாக கணவன் என்ற உரிமையை பறைசாற்றி கொள்ள இயலாது..‌

நேற்றைய தருணங்கள்தான் அவள் ஆசைப்பட்ட அக்கறை என்றால் இன்றைய தருணங்கள் ஒரு வேலை அவள் எதிர்பார்த்த பொசசிவ்னஸ் என்பதா..?

"நீங்க இடுப்புல கை வச்சிருக்கீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. இது பொது இடம் இல்லையா.."

"பொது இடம் இல்லையே.. எனக்கு எனக்கு சொந்தமான உன் இடுப்புலதானே கை வச்சிருக்கேன்..?"

என்னாச்சு இவருக்கு என்னென்னவோ பேசறாரு..!! இதை அனுபவிப்பதா.. ஆராய்வதா தெரியாமல் பத்மினி விழித்தாள்..

"நீ எனக்கு சொந்தமில்லைனு சொல்ல போறியா.."

"ஐயோ நான் எதுவும் சொல்லல.. என்னை ஆள விடுங்க நான் போறேன்.."

"என் கூடவே நடந்து வா..!! ரொம்ப பலவீனமா இருக்க.. வேகமா நடக்கிறேன்னு கீழே விழுந்துட்டா என்ன செய்யறது..!!"

உதய் கிருஷ்ணா பத்மினியின் கைகோர்த்து அவளை அணைத்துக் கொண்டு நடந்து சென்றதில் அந்த இளைஞனின் முகத்தில் ஏமாற்றம் பரவியது..

அடுத்த முறை அவர்களை கடந்து செல்லும் வேளையில்.. அவன் வழியில் காலை தற்செயலாக காலை நீட்டுவது போல்.. அவனை கீழே விழ வைத்திருந்தான் உதய் கிருஷ்ணா..

"என்ன சார் கீழே விழுந்துட்டீங்க.. கவனமா இருக்க வேண்டாமா..? நீ அப்படி உட்காரு.. நான் சாருக்கு ஹெல்ப் பண்றேன்.." என்று பத்மினியை முன்னே செல்ல விட்டு.. கீழே விழுந்து மல்லாக்க கிடந்தவனை தூக்கி நிறுத்தினான் உதய கிருஷ்ணா..

"அப்புறம் சார்.. உங்க பேரு.." அவன் டி-ஷர்டில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக் கொண்டே கேட்க..

"வி.. விஜய்.." என்றான் அவன்..

"ரொம்ப நல்ல பெயர்.. ஆனா செய்யற காரியம் அவ்வளவு நல்லதா தெரியலையே..?" நக்கல் பாவனையோடு கேட்ட போதிலும் அவன் செயல்கள் அந்த இளைஞனை அச்சுறுத்தி இருக்க வேண்டும்.. பயத்தில் முகம் வெளிறி நின்றான்..

"நா.. நான் ஒன்னும் செய்யலையே சார்.."

"அதோ போறாளே.. அவ என்னோட வைஃப்.. ரொம்ப நாளா அவளை பாலோ பண்றீங்களாமே..!! அது சரியில்ல சார்.."

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல சார்.." அவன் பதறினான்..

"இன்னொருமுறை இந்த மாதிரி குறுக்கும் நெடுக்குமா ஓடி அவளை தொந்தரவு செஞ்சீங்கன்னு வெச்சுக்கோங்க.. இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.." புன்னகையும் அல்லாத கடுகடுப்பும் இல்லாத லேசான குறுகுறுப்பு அவன் இதழ்களில்.. ஆனால் பாவம் அந்த இளைஞன்தான் வழியில் துடித்துக் கொண்டிருந்தான்..

உதய் பிரகாஷ் தன் மொத்த எடையையும் அவன் பாதங்களில் வைத்து அழுத்தி மிதித்துக் கொண்டிருக்கிறானே..!!

"சார்.. சார்.. சாரி சார் ஆஆஆ.." சத்தம் வராமல் கத்தியவன் வலியில் துடித்து மகுடிக்கு ஆடும் பாம்பு போல் நெளிந்தான்.. தூரத்தில் சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த பத்மினி இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"இனி உன்னை இந்த ஏரியா பக்கமே பார்க்க கூடாது போடா..!!" பற்களை கடித்தான் உதய்.. அந்த வாலிபன் தலை தெறிக்க அங்கிருந்து ஓடியிருந்தான்..

"போகலாமா..!!" பத்மினியிடம் வந்து நின்றான் உதய் கிருஷ்ணா..

"என்ன சொன்னீங்க அவன்கிட்ட.. இப்படி தெறிச்சு ஓடறான்..!!"

"நான் என்ன சொன்னேன்.. ஒன்னும் சொல்லலையே.. அவன் யாரு என்னனு விசாரிச்சேன்..!!"

"இல்ல.. அவனை ஏதோ மிரட்டி இருக்கீங்க.." பத்மினி உதய் கிருஷ்ணாவை குறுகுறுவென பார்த்தாள்..

பின் தலையை கோதியபடி.. கண்கள் சுருக்கி சாதாரணமாக அவளை பார்த்தவன்.. "நான் எதுக்காக அவனை மிரட்ட போறேன்.. சைட் அடிக்கிறது அவங்கவங்க உரிமை.. யாரையும் தொல்லை கொடுக்காத
வரை அது ஓகே தானே.. இதுல நான் தலையிட என்ன இருக்கு..‌!! ஒரு விஷயம் தெரிஞ்சுக்க.. உன்னை யார் சைட் அடிச்சாலும்.. உன் மேல யாரு ஆசைப்பட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. புரிஞ்சுதா..?"

"புரிஞ்சுது.. நானும் இனிமே என்னோட பர்சனல் விஷயங்களை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கவே மாட்டேன்.."

"பண்ணாத..!! போகலாமா.."

"சிடுசிடுக்காம பேசறேன்னு சொன்னீங்க.. சொல்லி பத்து நிமிஷம் கூட ஆகல.."

"நான் நார்மலாதான் பேசிட்டு இருக்கேன்.. நீ அப்படி நினைச்சா நான் என்ன செய்ய முடியும்.. நேரமாச்சு.. போகலாம்.."

"ப்ச்.. என்னால வேகமா நடக்க முடியாது.. வெளியில கூட்டிட்டு போறேன்னு சொல்லி அழைச்சிட்டு வந்து ஏன் என் உயிரை வாங்கறீங்க.."

"நான் வேணும்னா உன்னை தூக்கிட்டு போகட்டுமா..?"

"விளையாடறீங்களா..?"

அவன் குனிந்து அவளை தூக்க வரவும்..

"வேண்டாம்.. வேண்டாம்.. நான் நடந்தே வரேன்..‌ உங்ககிட்ட எது பேசினாலும் குத்தமா போகுது.." பத்மினி புலம்பிக்கொண்டே முன்னால் நடக்க அவளை பின் தொடர்ந்தான் உதய் கிருஷ்ணா..

சுமூகமாக போனவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே உள்ளே வர.. ரமணியம்மாள் ஒன்றும் புரியாமல் விழித்தார்..

அறைக்குள் சென்றவளை பின்தொடர்ந்து அவனும் அவசரமாக அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்தினான்..

"எதுக்காக இப்ப கதவை சாத்துறீங்க" என்று அவளை முடிக்கும் முன்பு.. ஆவேசமாக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டிருந்தான்..

"என்.."

"ஏன்.."

"போதுஊஊஊஊ.."

"ஐயோ மிச்சமிருக்கிற கொஞ்ச சத்தையும் இப்படியே உறிஞ்சியே எடுத்துடாதீங்க.. என்னால முடியல.. என்னை விட்டுடுங்க.."

அப்போதும் விடா கண்டனாக அவளை அணைத்து இதழில் முத்தமிட்டான்..

"என்னதான் ஆச்சு உங்களுக்கு..?" பத்மினிக்கு ஒன்றுமே புரியவில்லை..

உதய கிருஷ்ணா அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஏதோ பயம்..‌ தவிப்பு.. அவள் வாய்மொழியாக எதையோ கேட்க விரும்புகிறான்.. உனக்காகவே நான்.. உனக்காக மட்டுமே நான்.. போன்ற வாக்குறுதிகளா..!!

கொடுத்தால்தான் கிடைக்கும்.. அன்பும் உரிமையும் உறுதி மொழியும் கொடுக்கப்பட வேண்டும்.. பிறகு எதிர்பார்க்கப் பட வேண்டும்..

தன் பொருள் தனக்கானது என்ற பரிதவிப்பு.. உரிமை கோபம்..
உரிமையும் சரி கோபமும் சரி சற்று கூடுதல் தான் இவனிடம்..

நான் உனக்கானவள் என்று அவள் சொல்ல வேண்டும்.. அந்த நம்பிக்கையை அவள் தர வேண்டும்.. அதுவரை இந்த பயம் நீடித்திருக்கும்..

கன்னத்தில் முத்தமிட்டான்.. நெற்றியில் முத்தமிட்டான்..

"சார்..‌?"

அவன் கண்களில் அவளை இப்போதே விழுங்கி விட துடிக்கும் பரிதவிப்பு..

"சினிமாவுக்கு போகலாமா..?"

கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள்..

"அம்மா சொன்னாங்களே?" அவன் சொன்னதும் அவள் பார்வை முறைப்பாக மாறியது..

"அவங்க சொன்னாங்க.. ஆனா நானாகத்தான் கேக்கறேன்.. எனக்கு உன் கூட இருக்கனும்.." என்றவன் குரலை செருமிக் கொண்டு.. சற்று பின்னால் நகர்ந்து தன் தலையில் கைவைத்தவாறு "உன் கூட எங்கேயாவது போகனும்.." என்றான்..

"ம்ம்.. போகலாம்.." என்றாள் பத்மினி புரியாத பாவனையோடு..

"நீ எனக்கு மட்டும்தான்.." என்பதைப் போல் உணர்வு நெஞ்சை முட்டுகிறது.. அதை சொல்ல தெரியவில்லை..

சொல்லும் நாள் வரும்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jul 31, 2024
Messages
54

"எல்லா டாகுமெண்ட்டையும் பக்காவா முடிச்சு வச்சதுக்காக.. எனக்கு சிரமம் கொடுக்காமல் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி பென்டிரைவில் போட்டு வச்சதுக்காக.. நேத்து வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடுச்சு.. அதுக்காக தான் தேங்க்ஸ் சொன்னேன்.. சாரி உன் நிலைமை புரியாம ரொம்ப திட்டிட்டேன்..!!"

"வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டியது என்னோட கடமை.. அதுக்காக நீங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. சின்ன பாராட்டு. அது மட்டும் போதுமானது.. அன்னைக்கு உடம்பு சரியில்லாததால வேலைகளை சரிவர முடிக்க முடியாம போயிடுச்சு.. ஒரு முதலாளியா உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனா வார்த்தைகள்தான் அதிகப்படி.. அதனால நீங்க சாரி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.." என்று புன்னகைத்தவளை ஏறிட்டுப் பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"முடிஞ்ச அளவு இனிமே நான் கோபத்தை குறைச்சிக்கறேன்.. சிடுசிடுக்காம பேச முயற்சி பண்றேன்..‌"

"அது ரொம்ப கஷ்டம் சார்.. கோபமும் கடுகடுப்பும் உங்க கூட பிறந்த குணம்.. ஏதாவது ஒரு கட்டத்தில் உங்களையும் மீறி அது வெளிப்பட்டுடுது.. நீங்க என்ன செய்வீங்க பாவம்.."

"என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்க பத்மினி.. ஆனா உண்மைதான் என்னால புரிஞ்சுக்கவே முடியல..?"

"புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் கஷ்டமான கணக்கு சூத்திரம் இல்லையே..?" இதழ் சிரிப்புடன் நெற்றிப் புருவத்தின் மத்தியில லேசான சுருக்கத்தோடு வினவினாள்.. இருவரின் தோள்களும் கரங்களும் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டிருந்தன..

"எல்லார்கிட்டயும் அன்பு காட்டற.. சில நேரங்களில் அடங்கி போற.. சில நேரங்களில் சீறி எழுந்துக்கற.. ஒரு நேரம் யார் எது சொன்னாலும் கண்டுக்கவே மாட்டேங்கற.. இன்னொரு நேரம் மனசே வெடிச்சு போற மாதிரி தேம்பித் தேம்பி அழற.."

விரக்தியாக இதழ் வளைத்தாள் பத்மினி.. "இதுல புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு என்ன இருக்கு.. மத்தவங்க சொன்னா எதையும் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு நெருக்கமானவங்க சொன்னா கோபம் வரும்.. வலிக்கும்.. கத்துவேன்.. அழுவேன்.. அவ்வளவுதான்.."

"ம்ம்.. எனக்கு தெரிஞ்சு என்கிட்டதான் நிறைய கோபப்படுற.. கத்தற அழற.." என்றவனை திரும்பிப் பார்த்தாள்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நடந்தனர்.. அந்தப் பார்வையில் நிறைய அர்த்தங்கள் பொதிந்திருந்தன..

ஒருவேளை மற்ற ஆண்களாக இருந்திருந்தால் சின்ன சிரிப்புடன் நான் உனக்கு அவ்வளவு நெருக்கமானவனா என்று ரொமான்டிக் பார்வையோடு புரிய வைத்திருப்பார்களோ என்னவோ..!! இவனுக்குத்தான் சிரிப்பும் வராது ரொமான்ஸ்சும் வராதே..!!

ஆனாலும் கூட அவன் பார்வையை பத்மினியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் என்ன ஆசை மனைவி.. உதடுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தாள் அவள்..

பாவம் அவனுக்கு அன்பாக பார்க்கவும் தெரியவில்லை.. பேசவும் தெரியவில்லை சிரிக்கவும் தெரியவில்லை..‌ கோபத்தோடு வார்த்தைகளை இரையாமல் அவளோடு நடப்பதே மிகப் பெரிய உபகாரம்தான்..

திடீரென சிரித்து தலை தாழ்ந்தாள் பத்மினி..

அது வெட்கச் சிரிப்பு.. அல்ல உதட்டுக்குள் ஒளித்துக்கொள்ளும் கேலி சிரிப்பு..

"என்னாச்சு பத்மினி.."

"ஒன்னும் இல்லை.."

"என்கிட்ட சொல்ல கூடாதா..!!"

"சொல்றதைப் பத்தி ஒன்னும் இல்லை.. சாதாரண விஷயம்தான்.. அதை எடுத்துக்கிறேன் உங்க மனப்பான்மை சரியா இருக்கணுமே..!! இதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விவகாரமா என்னை திட்டிட கூடாது இல்லையா..?"

"அப்படியெல்லாம் திட்ட மாட்டேன்.. விஷயத்தை சொல்லு.." அழுத்தம் கொடுத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற பொருள் படச் சொன்னான் உதய் கிருஷ்ணா..

"அதோ ஜாகிங் போறாரே..!! எல்லோ டி-ஷர்ட் ப்ளூ பேண்ட்.. சட்டுனு பாக்காதீங்க.." அவள் தலை தாழ்ந்து கொண்டு சொல்ல.. உதய கிருஷ்ணாவிற்கு அந்த சூட்சமமெல்லாம் தெரியவில்லை.. சட்டென்றுதான் திரும்பி பார்த்தான்..

"ஐயோ பாத்துட்டீங்களா..!! அந்த ஆளு ரொம்ப நாளா என்னை சைட் அடிக்கிறார்.." அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் பத்மினி..

"சைட் அடிக்கிறானா..?" உதய் முகத்தில் எந்தவித மாறுதல்களும் இல்லை..

"நான் இங்க வந்த நாள்ல இருந்து.. நான் எங்க போனாலும் அங்கே வந்து நிக்கிறான்.. காலையில ஆபீஸ் போகும்போது.. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது.. பால் வாங்கும் போது காய்கறி வாங்கும் போது.. பல நேரங்களில் ரொம்ப எரிச்சலா வரும்.. சில நேரங்களில் சிரிப்பு வரும்.."

"சிரிப்பு வருதா..?" இப்போது அவன் முகம் மாறியது..

"கோபம்தானே வரணும்..?"

"இவனெல்லாம் ஒரு ஆளா.. கண்டுக்காம விட்டுட்டா அவனே வேற வேலையை பார்க்க போயிடுவான்.. கோபப்பட்டு.. முகத்தில் எக்ஸ்பிரஷனை காட்டி நாமளே எதுக்கு அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.."

"அப்புறம் இப்ப மட்டும் எதுக்காக சிரிச்ச.."

"நீங்க கூட இருக்கறதை பாத்துட்டும் தைரியமா முன்னாடி வந்து சைட் அடிக்கிறானே அதை நினைச்சுதான் சிரிச்சேன்.."

"உனக்கு சிரிப்பு வருது எனக்கு கோபம் வருது.."

"உங்களுக்கு கோபம் வரலைனா தான் ஆச்சரியம்.. நான்தான் சொன்னேனே.. நீங்க என்னதான் தப்பா நினைப்பீங்கன்னு.." பத்மினி அவனை கோபத்தோடு பார்த்தாள்..

"கோபம் உன் மேல இல்ல.. அவன் மேலதான்.. ஒருவேளை என்னை உன்னோட அப்பான்னு நினைச்சிருப்பானோ..?" வட்ட வடிவ நடை பாதையை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்த ப்ளூ ஷர்ட் ரோமியோவை முறைத்தபடி சொன்னான் உதய் கிருஷ்ணா..

பத்மினி விழிகளை விரித்தாள்.. உதய் என்றுமே தன் வயதை பற்றி கவலை பட்டதில்லை..

"நீங்க ஒன்னும் அப்படி வயசா தெரியல.. கண்டதையும் கற்பனை பண்றீங்க.. சரி வாங்க வீட்டுக்கு போகலாம்.. சூழ்நிலை சரியில்ல.."

"எதுக்காக போகணும்.. மத்தவங்களுக்காக நம்மளை மாத்திக்கணும்னு அவசியம் இல்ல.. வேணும்னா அவன் போகட்டும்.. நாம இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம்.. உனக்கு கால் வலிச்சா சொல்லு.. வீட்டுக்கு போகலாம்.. கால் வலிக்குதா?" என்று கேட்ட தோரணையே சரியில்லை.. பிறகு எப்படி ஆமாம் என்று சொல்ல முடியும்.. இல்லை என்று தலையசைத்தாள் பத்மினி..

அந்த ப்ளூ ஷர்ட் ரோமியோ விற்கு 25 அல்லது 26 வயது இருக்கலாம்.. உதய கிருஷ்ணாவைப் போல் ஓங்குதாங்கான உடற்கட்டோடு வசீகரமாக இல்லை என்றாலும் இளைஞனாக இருந்தான்.. திராவிட நிறம்.. அடர்ந்த கேசம்.. ஒல்லியான உடல்வாகு என்று வாட்டசாட்டமான வாலிபனுக்கு உரிய பொலிவு அவனிடம் இருந்தது..

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவனைத்தான் பார்த்தபடி நடந்தான் உதய் கிருஷ்ணா.. ஒவ்வொரு முறை அந்த வாலிபன் பத்மினியை காணும் போதும் இங்கே அடி பாதத்திலிருந்து உச்சிவரை ஜிவ்வென்று கோபம் ஏறியது..

அந்த ப்ளூ ஷர்ட் வாலிபன் பத்மினியை பார்க்கும் நேரத்தில் தன்னையும் அறியாமல் அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக் கொள்ள.. பத்மினி திரும்பி உதயகிருஷ்ணனை வினோதமாக பார்த்தாள்..

"என்னாச்சு..?"

"நடக்கும் போது தவறி விழுந்துட போற..!! பாத்து வா.." அவள் கரத்தை மென்மேலும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டான்..

"நான் சரியாத்தானே நடக்கறேன்.."

அனல் தெறிக்க அவளை பார்த்தான்.. "இப்ப என்ன..? நான் உன் கைய பிடிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு..?"

"இல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." பத்மினி திணறினாள்..

"உன் கைய பிடிக்க எல்லா உரிமையும் எனக்கு உண்டு அப்படித்தானே.."

"ஆ..ஆமாம்.." பத்மினி விழித்தாள்.. திடீரென ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை.. ஒருவேளை மனம் திறந்து பேசியதில் தன்னை தவறாக நினைத்துக் கொண்டாரோ.. என்ற கலவரம் நெஞ்சில் சூழ்ந்து கொண்டது..

சட்டென அவள் தோள் மீது கை போட்டு.. அந்த ப்ளூ ஷர்ட் இளைஞன் அவள் பக்கமாக கடக்கும் நேரம்.. இழுத்து மற்றொரு பக்கம் நிறுத்திக் கொண்டு இடையோடு அணைத்துக் கொண்டான்..‌ இதைவிட அழகாக கணவன் என்ற உரிமையை பறைசாற்றி கொள்ள இயலாது..‌

நேற்றைய தருணங்கள்தான் அவள் ஆசைப்பட்ட அக்கறை என்றால் இன்றைய தருணங்கள் ஒரு வேலை அவள் எதிர்பார்த்த பொசசிவ்னஸ் என்பதா..?

"நீங்க இடுப்புல கை வச்சிருக்கீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. இது பொது இடம் இல்லையா.."

"பொது இடம் இல்லையே.. எனக்கு எனக்கு சொந்தமான உன் இடுப்புலதானே கை வச்சிருக்கேன்..?"

என்னாச்சு இவருக்கு..!! பத்மினி விழித்தாள்..

"நீ எனக்கு சொந்தமில்லைனு சொல்ல போறியா.."

"ஐயோ நான் எதுவும் சொல்லல என்னை ஆள விடுங்க நான் போறேன்.."

"என் கூடவே நடந்து வா..!! ரொம்ப பலவீனமா இருக்க.. வேகமா நடக்கிறேன்னு கீழே விழுந்துட்டா என்ன செய்யறது..!!"

உதய் கிருஷ்ணா பத்மினியின் கைகோர்த்து அவளை அணைத்துக் கொண்டு நடந்து சென்றதில் அந்த இளைஞனின் முகத்தில் ஏமாற்றம் பரவியது..

அடுத்த முறை அவர்களை கடந்து செல்லும் வேளையில்.. அவன் வழியில் காலை தற்செயலாக காலை நீட்டுவது போல்.. அவனை கீழே விழ வைத்திருந்தான் உதய் கிருஷ்ணா..

"என்ன சார் கீழே விழுந்துட்டீங்க.. கவனமா இருக்க வேண்டாமா..? நீ அப்படி உட்காரு.. நான் சாருக்கு ஹெல்ப் பண்றேன்.." என்று பத்மினியை முன்னே செல்ல விட்டு.. கீழே விழுந்து மல்லாக்க கிடந்தவனை தூக்கி நிறுத்தினான் உதய கிருஷ்ணா..

"அப்புறம் சார்.. உங்க பேரு.." அவன் டி-ஷர்டில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக் கொண்டே கேட்க..

"வி.. விஜய்.." என்றான் அவன்..

"ரொம்ப நல்ல பெயர்.. ஆனா செய்ற காரியம் அவ்வளவு நல்லதா தெரியலையே..?" நக்கல் பாவனையோடு கேட்ட போதிலும் அவன் செயல்கள் அந்த இளைஞனை அச்சுறுத்தி இருக்க வேண்டும்.. பயத்தில் முகம் வெளிறி நின்றான்..

"நா.. நான் ஒன்னும் செய்யலையே சார்.."

"அதோ போறாளே.. அவ என்னோட வைஃப்.. ரொம்ப நாளா அவளை பாலோ பண்றீங்களாமே..!! அது சரியில்ல சார்.."

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல சார்.." அவன் பதறினான்..

"இன்னொருமுறை இந்த மாதிரி குறுக்கும் நெடுக்குமா ஓடி அவளை தொந்தரவு செஞ்சீங்கன்னு வெச்சுக்கோங்க.. இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.." புன்னகையும் அல்லாத கடுகடுப்பும் இல்லாத லேசான குறுகுறுப்பு அவன் இதழ்களில்.. ஆனால் பாவம் அந்த இளைஞன்தான் வழியில் துடித்துக் கொண்டிருந்தான்..

உதய் பிரகாஷ் தன் மொத்த எடையையும் அவன் பாதங்களில் வைத்து அழுத்தி மிதித்துக் கொண்டிருக்கிறானே..!!

"சார்.. சார்.. சாரி சார் ஆஆஆ.." சத்தம் வராமல் கத்தியவன் வலியில் துடித்து மகுடிக்கு ஆடும் பாம்பு போல் நெளிந்தான்.. தூரத்தில் சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த பத்மினி இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"இனி உன்னை இந்த ஏரியா பக்கமே பார்க்க கூடாது போடா..!!" பற்களை கடித்தான் உதய்.. அந்த வாலிபன் தலை தெறிக்க அங்கிருந்து ஓடியிருந்தான்..

"போகலாமா..!!" பத்மினியிடம் வந்து நின்றான் உதய் கிருஷ்ணா..

"என்ன சொன்னீங்க அவன்கிட்ட.. இப்படி தெறிச்சு ஓடறான்..!!"

"நான் என்ன சொன்னேன்.. ஒன்னும் சொல்லலையே.. அவன் யாரு என்னனு விசாரிச்சேன்..!!"

"இல்ல அவனை ஏதோ மிரட்டி இருக்கீங்க.." பத்மினி உதய் கிருஷ்ணாவை குறுகுறுவென பார்த்தாள்..

பின் தலையை கோதியபடி.. கண்கள் சுருக்கி சாதாரணமாக அவளை பார்த்தவன்.. "நான் எதுக்காக அவனை மிரட்ட போறேன்.. சைட் அடிக்கிறது அவங்கவங்க உரிமை.. யாரையும் தொல்லை கொடுக்காத
வரை அது ஓகே தானே.. இதுல நான் தலையிட என்ன இருக்கு..‌!! ஒரு விஷயம் தெரிஞ்சுக்க.. உன்னை யார் சைட் அடிச்சாலும்.. உன் மேல யாரு ஆசைப்பட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. புரிஞ்சுதா..?"

"புரிஞ்சுது.. நானும் இனிமே என்னோட பர்சனல் விஷயங்கள் உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கவே மாட்டேன்.."

"பண்ணாத..!! போகலாமா.."

"சிடுசிடுக்காம பேசுறேன்னு சொன்னீங்க.. சொல்லி பத்து நிமிஷம் கூட ஆகல.."

"நான் நார்மலாதான் பேசிட்டு இருக்கேன்.. நீ அப்படி நினைச்சா நான் என்ன செய்ய முடியும்.. சீக்கிரமா போகலாம்.."

"ப்ச்.. என்னால வேகமா நடக்க முடியாது.. வெளியில கூட்டிட்டு போறேன்னு சொல்லி அழைச்சிட்டு வந்து ஏன் என் உயிரை வாங்கறீங்க.."

"நான் வேணும்னா உன்னை தூக்கிட்டு போகட்டுமா..?"

"விளையாடறீங்களா..?"

அவன் குனிந்து அவளை தூக்க வரவும்..

"வேண்டாம்.. வேண்டாம்.. நான் நடந்தே வரேன்..‌ உங்ககிட்ட எது பேசினாலும் குத்தமா போகுது.." பத்மினி புலம்பிக்கொண்டே முன்னால் நடக்க அவளை பின் தொடர்ந்தான் உதய் கிருஷ்ணா..

சுமூகமாக போனவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே உள்ளே வர.. ரமணியம்மாள் ஒன்றும் புரியாமல் விழித்தார்..

அறைக்குள் சென்றவளை பின்தொடர்ந்து அவனும் அவசரமாக அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்தினான்..

"எதுக்காக இப்ப கதவை சாத்துறீங்க" என்று அவளை முடிக்கும் முன்பு.. ஆவேசமாக அனைத்து அவள் இதழில் முத்தமிட்டிருந்தான்..

"என்.."

"ஏன்.."

"போதுஊஊஊஊ.."

"ஐயோ மிச்சமிருக்கிற கொஞ்ச சத்தையும் இப்படியே உறிஞ்சி எடுத்துடாதீங்க.. என்னால முடியல என்னை விட்டுடுங்க.."

அப்போதும் விடா கண்டனாக அவளை அணைத்து இதழில் முத்தமிட்டான்..

"என்னதான் ஆச்சு உங்களுக்கு..?" பத்மினிக்கு ஒன்றுமே புரியவில்லை..

உதய கிருஷ்ணா அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஏதோ பயம்..‌ தவிப்பு.. அவள் வாய்மொழியாக எதையோ கேட்க விரும்புகிறான்.. உனக்காகவே நான்.. உனக்காக மட்டுமே நான்.. போன்ற வாக்குறுதிகளா..!!

கொடுத்தால் தான் கிடைக்கும்.. அன்பு உரிமையும் உறுதி மொழியும் கொடுக்கப்பட வேண்டும்..

தன் பொருள் தனக்கானது என்ற பரிதவிப்பு.. உரிமை கோபம்..
உரிமையும் சரி கோபமும் சரி சற்று கூடுதல் தான் இவனிடம்..

உன் பொருள் உனக்கு மட்டும்தான் என்று அவள் சொல்ல வேண்டும்.. அப்படி ஒரு நம்பிக்கையான நிலை வர வேண்டும்.. அதுவரை இந்த பயம் நீடித்திருக்கும்..

கன்னத்தில் முத்தமிட்டான்.. நெற்றியில் முத்தமிட்டான்..

"சார்..‌?"

அவன் கண்களில் அவளை இப்போதே விழுங்கி விட துடிக்கும் பரிதவிப்பு..

சினிமாவுக்கு போகலாமா..?

கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள்..

அம்மா சொன்னாங்களே? அவன் சொன்னதும் அவள் பார்வை முறைப்பாக மாறியது..

"அவங்க சொன்னாங்க.. ஆனா நானாத்தான் கேக்கறேன்.. எனக்கு உன் கூட இருக்கனும்.." என்றவன் குரலை செருமிக் கொண்டு.. தன் தலையில் கைவைத்தவாறு "உன் கூட எங்கேயாவது போகனும்.." என்றான்..

"ம்ம்.. போகலாம்.." என்றாள் பத்மினி புரியாத பாவனையோடு..

"நீ எனக்கு மட்டும்தான்.." என்பதைப் போல் உணர்வு நெஞ்சை முட்டுகிறது.. அதை சொல்ல தெரியவில்லை..

சொல்லும் நாள் வரும்..

தொடரும்..
🤣🤣🤣🤣🤣🤣🤣 அய்யோ ரோபோ மைனர் மாப்பிள்ளையா மாறிடுவாரு போலவே 🤭🤭🤭🤭🤭🤭 இதுக்கப்பறம் பார்க் பார்ட்டி மாதிரி எத்தன பேர் ஓட போறீங்களா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இன்னும் ஒன்னு சேர்த்து ரெண்டா போட கூடாத 😒😒😒😒😒😒😒😒😒😒
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Ipadi pesinaale podhum, pesaamale characters judge pannitu vilagi irukuradhu dhan kashtam..

Paavam andha paiyan sight adikuradha vera solli Udhay'ku possessiveness create senjaachu.. Anyways, possessiveness confirms the ownership..

Udhay is adapting to a normal life style.. Good.. Pidithavargal udanirundhaal thondraadha unarvugalum thondrum..

Nicely written sister.. Their walk and talk is realistic and enjoyable.. Nice episode.. Thank you...
 
Last edited:
Member
Joined
Dec 23, 2023
Messages
71
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
New member
Joined
Sep 5, 2024
Messages
13
உதய் கிருஷ்ணாவின் வளர்ப்பு அவன் மனிதர்களை நம்ப மறுக்கிறான் ஆனால் தவறென்று தெரிந்த உடனே மன்னிப்பு கேட்கிறானே இந்த குணம் இயல்பாக இருந்து சிரித்து பேசுபவர்களிடம் கூட இருப்பதில்லை . மனைவி என்று வாய் வார்த்தையாக உரிமையை சொல்லிட அவனுக்கு தெரியவில்லை அவன் இத்தனை வயது வரை டியூன் பண்ணபட்டது அப்படி திடீரென மாறிட முடியாது.பத்மினி நிறைய வேதனைகளை அவமானங்களை தாங்கி ஆறுதல் சொல்லவோ அரவணைக்கவோ ஆளில்லாமல் இருந்தாள் இப்போது அந்த அரவணைப்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது இனி உதய் கிருஷ்ணாவை இவள் தான் புரிந்து கொள்ள வேண்டும் மாற்றத்திற்கான ஆரம்பம் அவனிடம் தெரியும் போது உணர்வுகள் உள்ள பத்மினி அவனை புரிந்து புரிய வைக்கனும் என்ன பண்ணுவாளோ? ஆனா சிடுமூஞ்சி ரோபோவையும் பொண்டாட்டிக்கு பயப்பட வச்சிட்டீங்க.சீரியஸா பையன வளர்த்து வச்சிருக்கற ரமணியம்மா பேசறதெல்லாம் காமெடி தான் அதுவும் மகன் செய்யற சாப்பாட்ட கழுவி கழுவி ஊத்தறாங்க விட்டா படிக்கிற எங்களுக்கு பார்சல் அனுப்பி வைப்பாங்க போல.
 
Member
Joined
Apr 7, 2023
Messages
41
Awesome.......❤️

Sis innaikku fulla wait panna 1 ud kodukuringa........one more ud pls
 
Member
Joined
Jan 26, 2024
Messages
63
அருமையான பதிவு
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
138
இரண்டு நாட்களாய் உதய் கிருஷ்ணனின் தீவிர உபசரிப்பில் உடல் நலம் தேறியிருந்தாள் பத்மினி.. இந்த இரண்டு நாட்களாக வீட்டு வேலையும் சமைப்பதும் உதய் கிருஷ்ணாவின் பொறுப்பாகிப்போனது.. காலையில் விழித்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்..

"பத்மினி.. மழை நின்னுடுச்சு வர்றியா? அப்படியே வாக்கிங் போயிட்டு வரலாம்..‌"

"நீங்க ஜாகிங்தானே போவீங்க.. உங்க வேகத்துக்கு என்னால ஈடு கொடுத்து ஓடவோ நடக்கவே முடியாது..!!" நீர் சத்து வெற்றி போனதில் பேசவே சிரமப்பட்டாள் பத்மினி..

"ஒரு நாள் ஜாகிங் செய்யலன்னா ஒன்னும் குடிமுழுகி போய்டாது.. உன்னோட சேர்ந்து மெதுவா நடக்கிறேன் வா..!!" என்று கை நீட்ட அவன் கரம் கோர்த்துக் கொண்டாள் பத்மினி..

"ரெண்டு பேரும் சேர்ந்து எங்க புறப்பட்டுட்டீங்க..?" கூடத்தில் அமர்ந்திருந்த ரமணியம்மாவின் கேள்விக்கு.. சும்மா அப்படியே காலரா நடந்துட்டு வர்றோம்.. என்றான் உதய் கிருஷ்ணா..

"நீயா அழைச்சிட்டு போற..?" அவர் முகத்தில் நம்ப இயலாத பாவனை..

"ஆமா..? வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு நாலு சுவத்தையே பாத்துட்டு இருக்கா..!! வெளிய அழைச்சிட்டு போனா ஒரு சேஞ்ச் கிடைக்குமே..!!"

"சரி போய்ட்டு வாங்க.. வெளிக்காத்தும் சூரிய வெப்பமும் உடம்புல பட்டா மனசுக்கும் உடம்புக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.. அப்படியே பார்க் பீச் சினிமான்னு சுத்திட்டு வந்தா மனசுக்கு சந்தோஷமும் கிடைக்குமே.." என்ற ரமணியம்மாவை திரும்பி பார்த்தான் உதய்.. அத்தோடு வாய் மூடி கொண்டார் அவர்..

பத்மினியை அழைத்துக்கொண்டு பார்க்கில் மெதுவாக நடந்தான் உதய் கிருஷ்ணா..

என்ன பேசுவதென்று தெரியவில்லை.. இருவரும் அமைதியாகத்தான் நடந்தனர்.. உதய கிருஷ்ணாதான் இருவருக்கிடையே நிலவிக் கொண்டிருந்த மௌனத்தை உடைத்தான்..

"தேங்க்ஸ் பத்மினி.."

எதற்காக என்பதைப் போல் அவள் பார்வை..

"எல்லா டாகுமெண்ட்டையும் பக்காவா முடிச்சு வச்சதுக்காக.. எனக்கு சிரமம் கொடுக்காமல் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி பென்டிரைவில் போட்டு வச்சதுக்காக.. நேத்து வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடுச்சு.. அதுக்காகத்தான் தேங்க்ஸ் சொன்னேன்.. சாரி உன் நிலைமை புரியாம ரொம்ப திட்டிட்டேன்..!!"

"வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டியது என்னோட கடமை.. அதுக்காக நீங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. சின்ன பாராட்டு. அது மட்டும் போதுமானது.. அன்னைக்கு உடம்பு சரியில்லாததால வேலைகளை சரிவர முடிக்க முடியாம போயிடுச்சு.. ஒரு முதலாளியா உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனா வார்த்தைகள்தான் அதிகப்படி.. அதனால நீங்க சாரி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.." என்று புன்னகைத்தவளை ஏறிட்டுப் பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"முடிஞ்ச அளவு இனிமே நான் கோபத்தை குறைச்சிக்கறேன்.. சிடுசிடுக்காம பேச முயற்சி பண்றேன்..‌"

"அது ரொம்ப கஷ்டம் சார்.. கோபமும் கடுகடுப்பும் உங்க கூட பிறந்த குணம்.. ஏதாவது ஒரு கட்டத்தில் உங்களையும் மீறி அது வெளிப்பட்டுடுது.. நீங்க என்ன செய்வீங்க பாவம்.."

"என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்க பத்மினி.. ஆனா உன்னைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல..?"

"புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் கஷ்டமான கணக்கு சூத்திரம் இல்லையே..?" இதழ் சிரிப்புடன் நெற்றிப் புருவத்தின் மத்தியில லேசான சுருக்கத்தோடு வினவினாள்.. இருவரின் தோள்களும் கரங்களும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருந்தன..

"எல்லார்கிட்டயும் அன்பு காட்டற.. சில நேரங்களில் அடங்கி போற.. சில நேரங்களில் சீறி எழுந்துக்கற.. ஒரு நேரம் யார் எது சொன்னாலும் கண்டுக்கவே மாட்டேங்கற.. இன்னொரு நேரம் மனசே வெடிச்சு போற மாதிரி தேம்பித் தேம்பி அழற.."

விரக்தியாக இதழ் வளைத்தாள் பத்மினி.. "இதுல புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு என்ன அதிசயம் இருக்கு.. மத்தவங்க சொன்னா எதையும் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு நெருக்கமானவங்க சொன்னா கோபம் வரும்.. வலிக்கும்.. கத்துவேன்.. அழுவேன்.. அவ்வளவுதான்.."

"ம்ம்.. எனக்கு தெரிஞ்சு என்கிட்டதான் நிறைய கோபப்படுற.. கத்தற அழற.." என்றவனை திரும்பிப் பார்த்தாள்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நடந்தனர்.. அந்தப் பார்வையில் நிறைய அர்த்தங்கள் பொதிந்திருந்தன..

ஒருவேளை மற்ற ஆண்களாக இருந்திருந்தால் சின்ன சிரிப்புடன் நான் உனக்கு அவ்வளவு நெருக்கமானவனா என்று ரொமான்டிக் பார்வையோடு புரிய வைத்திருப்பார்களோ என்னவோ..!! இவனுக்குத்தான் சிரிப்பும் வராது.. ரொமான்ஸ்சும் வராதே..!!

ஆனாலும் கூட அந்த பார்வையை பத்மினியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் என்ன ஆசை மனைவி.. உதடுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தாள் அவள்..

பாவம் அவனுக்கு அன்பாக பார்க்கவும் தெரியவில்லை.. பேசவும் தெரியவில்லை சிரிக்கவும் தெரியவில்லை..‌ கோபத்தோடு வார்த்தைகளை இரையாமல் அவளோடு நடப்பதே மிகப் பெரிய உபகாரம்தான்..

திடீரென சிரித்து தலை தாழ்ந்தாள் பத்மினி..

அது வெட்கச் சிரிப்பு.. அல்ல உதட்டுக்குள் ஒளித்துக்கொள்ளும் கேலி சிரிப்பு..

"என்னாச்சு பத்மினி.."

"ஒன்னும் இல்லை.."

"என்கிட்ட சொல்ல கூடாதா..!!"

"சொல்றதைப் பத்தி ஒன்னும் இல்லை.. சாதாரண விஷயம்தான்.. அதை எடுத்துக்கிற விதத்தில் உங்க மனப்பான்மை சரியா இருக்கணுமே..!! இதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விவகாரமா என்னை திட்டிட கூடாது இல்லையா..?"

"அப்படியெல்லாம் திட்ட மாட்டேன்.. விஷயத்தை சொல்லு.." அழுத்தம் கொடுத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற பொருள் படச் சொன்னான் உதய் கிருஷ்ணா..

"அதோ ஜாகிங் போறாரே..!! எல்லோ டி-ஷர்ட் ப்ளூ பேண்ட்.. சட்டுனு பாக்காதீங்க.." அவள் தலை தாழ்ந்து கொண்டு சொல்ல.. உதய கிருஷ்ணாவிற்கு அந்த சூட்சமமெல்லாம் தெரியவில்லை.. சட்டென்றுதான் திரும்பி பார்த்தான்..

"ஐயோ பாத்துட்டீங்களா..!! அந்த ஆளு ரொம்ப நாளா என்னை சைட் அடிக்கிறார்.." அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் பத்மினி..

"சைட் அடிக்கிறானா..?" உதய் முகத்தில் எந்தவித மாறுதல்களும் இல்லை..

"நான் இங்க வந்த நாள்ல இருந்து.. நான் எங்க போனாலும் அங்கே வந்து நிக்கிறான்.. காலையில ஆபீஸ் போகும்போது.. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது.. பால் வாங்கும் போது காய்கறி வாங்கும் போது.. பல நேரங்களில் ரொம்ப எரிச்சலா வரும்.. சில நேரங்களில் சிரிப்பு வரும்.."

"சிரிப்பு வருதா..?" இப்போது அவன் முகம் மாறியது..

"கோபம்தானே வரணும்..?"

"இவனெல்லாம் ஒரு ஆளா.. கண்டுக்காம விட்டுட்டா அவனே வேற வேலையை பார்க்க போயிடுவான்.. கோபப்பட்டு.. முகத்தில் எக்ஸ்பிரஷனை காட்டி நாமளே எதுக்கு அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.."

"அப்புறம் இப்ப மட்டும் எதுக்காக சிரிச்ச.."

"நீங்க கூட இருக்கறதை பாத்துட்டும் தைரியமா முன்னாடி வந்து சைட் அடிக்கிறானே.. அதை நினைச்சுதான் சிரிச்சேன்.."

"உனக்கு சிரிப்பு வருது.. எனக்கு கோபம் வருது.."

"உங்களுக்கு கோபம் வரலைனாதான் ஆச்சரியம்.. நான்தான் சொன்னேனே.. நீங்க என்னைதான் தப்பா நினைப்பீங்கன்னு.." பத்மினி அவனை கோபத்தோடு பார்த்தாள்..

"கோபம் உன் மேல இல்ல.. அவன் மேலதான்.. ஒருவேளை என்னை உன்னோட அப்பான்னு நினைச்சிருப்பானோ..?" வட்ட வடிவ நடை பாதையை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்த ப்ளூ ஷர்ட் ரோமியோவை முறைத்தபடி சொன்னான் உதய் கிருஷ்ணா..

பத்மினி விழிகளை விரித்தாள்.. உதய் என்றுமே தன் வயதை பற்றி கவலை பட்டதில்லை..இன்று ஏனோ இந்த வினோத மனோபாவம்..

"நீங்க பார்க்க அப்படி ஒன்னும் வயசா தெரியல.. கண்டதையும் கற்பனை பண்ண வேண்டாம்.. சரி வாங்க வீட்டுக்கு போகலாம்.. சூழ்நிலை சரியில்ல.."

"எதுக்காக போகணும்.. மத்தவங்களுக்காக நம்மளை மாத்திக்கணும்னு அவசியம் இல்ல.. வேணும்னா அவன் போகட்டும்.. நாம இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம்.. உனக்கு கால் வலிச்சா சொல்லு.. வீட்டுக்கு போகலாம்.. கால் வலிக்குதா?" என்று கேட்ட தோரணையே சரியில்லை.. பிறகு எப்படி ஆமாம் என்று சொல்ல முடியும்.. இல்லை என்று தலையசைத்தாள் பத்மினி..

அந்த ப்ளூ ஷர்ட் ரோமியோவிற்கு 25 அல்லது 26 வயது இருக்கலாம்.. உதய கிருஷ்ணாவைப் போல் ஓங்குதாங்கான உடற்கட்டோடு வசீகரமாக இல்லை என்றாலும் இளைஞனாக இருந்தான்.. திராவிட நிறம்.. அடர்ந்த கேசம்.. ஒல்லியான உடல்வாகு என்று வாட்டசாட்டமான வாலிபனுக்கு உரிய பொலிவு அவனிடம் இருந்தது..

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவனைத்தான் பார்த்தபடி நடந்தான் உதய் கிருஷ்ணா.. ஒவ்வொரு முறை அந்த வாலிபன் பத்மினியை காணும் போதும் இங்கே அடி பாதத்திலிருந்து உச்சிவரை ஜிவ்வென்று கோபம் ஏறியது..

அந்த ப்ளூ ஷர்ட் வாலிபன் பத்மினியை பார்க்கும் நேரத்தில் உதய் தன்னையும் அறியாமல் அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக் கொள்ள.. பத்மினி திரும்பி உதயகிருஷ்ணனை வினோதமாக பார்த்தாள்..

"என்னாச்சு..?"

"நடக்கும் போது தவறி விழுந்துட போற..!! பாத்து வா.." அவள் கரத்தை மென்மேலும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டான்..

"நான் சரியாத்தானே நடக்கறேன்.."

அனல் தெறிக்க அவளை பார்த்தான்.. "இப்ப என்ன..? நான் உன் கைய பிடிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு..?"

"இல்ல.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." பத்மினி திணறினாள்..

"உன் கைய பிடிக்க எல்லா உரிமையும் எனக்கு உண்டு.. அப்படித்தானே.."

"ஆ..ஆமாம்.." பத்மினி விழித்தாள்.. திடீரென ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை.. ஒருவேளை மனம் திறந்து பேசியதில் தன்னை தவறாக நினைத்துக் கொண்டாரோ.. என்ற கலவரம் நெஞ்சில் சூழ்ந்து கொண்டது..

சட்டென அவள் தோள் மீது கை போட்டு.. அந்த ப்ளூ ஷர்ட் இளைஞன் அவள் பக்கமாக கடக்கும் நேரம்.. இழுத்து மற்றொரு பக்கம் நிறுத்திக் கொண்டு இடையோடு அணைத்துக் கொண்டான்..‌ இதைவிட அழகாக கணவன் என்ற உரிமையை பறைசாற்றி கொள்ள இயலாது..‌

நேற்றைய தருணங்கள்தான் அவள் ஆசைப்பட்ட அக்கறை என்றால் இன்றைய தருணங்கள் ஒரு வேலை அவள் எதிர்பார்த்த பொசசிவ்னஸ் என்பதா..?

"நீங்க இடுப்புல கை வச்சிருக்கீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. இது பொது இடம் இல்லையா.."

"பொது இடம் இல்லையே.. எனக்கு எனக்கு சொந்தமான உன் இடுப்புலதானே கை வச்சிருக்கேன்..?"

என்னாச்சு இவருக்கு என்னென்னவோ பேசறாரு..!! இதை அனுபவிப்பதா.. ஆராய்வதா தெரியாமல் பத்மினி விழித்தாள்..

"நீ எனக்கு சொந்தமில்லைனு சொல்ல போறியா.."

"ஐயோ நான் எதுவும் சொல்லல.. என்னை ஆள விடுங்க நான் போறேன்.."

"என் கூடவே நடந்து வா..!! ரொம்ப பலவீனமா இருக்க.. வேகமா நடக்கிறேன்னு கீழே விழுந்துட்டா என்ன செய்யறது..!!"

உதய் கிருஷ்ணா பத்மினியின் கைகோர்த்து அவளை அணைத்துக் கொண்டு நடந்து சென்றதில் அந்த இளைஞனின் முகத்தில் ஏமாற்றம் பரவியது..

அடுத்த முறை அவர்களை கடந்து செல்லும் வேளையில்.. அவன் வழியில் காலை தற்செயலாக காலை நீட்டுவது போல்.. அவனை கீழே விழ வைத்திருந்தான் உதய் கிருஷ்ணா..

"என்ன சார் கீழே விழுந்துட்டீங்க.. கவனமா இருக்க வேண்டாமா..? நீ அப்படி உட்காரு.. நான் சாருக்கு ஹெல்ப் பண்றேன்.." என்று பத்மினியை முன்னே செல்ல விட்டு.. கீழே விழுந்து மல்லாக்க கிடந்தவனை தூக்கி நிறுத்தினான் உதய கிருஷ்ணா..

"அப்புறம் சார்.. உங்க பேரு.." அவன் டி-ஷர்டில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக் கொண்டே கேட்க..

"வி.. விஜய்.." என்றான் அவன்..

"ரொம்ப நல்ல பெயர்.. ஆனா செய்யற காரியம் அவ்வளவு நல்லதா தெரியலையே..?" நக்கல் பாவனையோடு கேட்ட போதிலும் அவன் செயல்கள் அந்த இளைஞனை அச்சுறுத்தி இருக்க வேண்டும்.. பயத்தில் முகம் வெளிறி நின்றான்..

"நா.. நான் ஒன்னும் செய்யலையே சார்.."

"அதோ போறாளே.. அவ என்னோட வைஃப்.. ரொம்ப நாளா அவளை பாலோ பண்றீங்களாமே..!! அது சரியில்ல சார்.."

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல சார்.." அவன் பதறினான்..

"இன்னொருமுறை இந்த மாதிரி குறுக்கும் நெடுக்குமா ஓடி அவளை தொந்தரவு செஞ்சீங்கன்னு வெச்சுக்கோங்க.. இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.." புன்னகையும் அல்லாத கடுகடுப்பும் இல்லாத லேசான குறுகுறுப்பு அவன் இதழ்களில்.. ஆனால் பாவம் அந்த இளைஞன்தான் வழியில் துடித்துக் கொண்டிருந்தான்..

உதய் பிரகாஷ் தன் மொத்த எடையையும் அவன் பாதங்களில் வைத்து அழுத்தி மிதித்துக் கொண்டிருக்கிறானே..!!

"சார்.. சார்.. சாரி சார் ஆஆஆ.." சத்தம் வராமல் கத்தியவன் வலியில் துடித்து மகுடிக்கு ஆடும் பாம்பு போல் நெளிந்தான்.. தூரத்தில் சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த பத்மினி இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"இனி உன்னை இந்த ஏரியா பக்கமே பார்க்க கூடாது போடா..!!" பற்களை கடித்தான் உதய்.. அந்த வாலிபன் தலை தெறிக்க அங்கிருந்து ஓடியிருந்தான்..

"போகலாமா..!!" பத்மினியிடம் வந்து நின்றான் உதய் கிருஷ்ணா..

"என்ன சொன்னீங்க அவன்கிட்ட.. இப்படி தெறிச்சு ஓடறான்..!!"

"நான் என்ன சொன்னேன்.. ஒன்னும் சொல்லலையே.. அவன் யாரு என்னனு விசாரிச்சேன்..!!"

"இல்ல.. அவனை ஏதோ மிரட்டி இருக்கீங்க.." பத்மினி உதய் கிருஷ்ணாவை குறுகுறுவென பார்த்தாள்..

பின் தலையை கோதியபடி.. கண்கள் சுருக்கி சாதாரணமாக அவளை பார்த்தவன்.. "நான் எதுக்காக அவனை மிரட்ட போறேன்.. சைட் அடிக்கிறது அவங்கவங்க உரிமை.. யாரையும் தொல்லை கொடுக்காத
வரை அது ஓகே தானே.. இதுல நான் தலையிட என்ன இருக்கு..‌!! ஒரு விஷயம் தெரிஞ்சுக்க.. உன்னை யார் சைட் அடிச்சாலும்.. உன் மேல யாரு ஆசைப்பட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. புரிஞ்சுதா..?"

"புரிஞ்சுது.. நானும் இனிமே என்னோட பர்சனல் விஷயங்களை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கவே மாட்டேன்.."

"பண்ணாத..!! போகலாமா.."

"சிடுசிடுக்காம பேசறேன்னு சொன்னீங்க.. சொல்லி பத்து நிமிஷம் கூட ஆகல.."

"நான் நார்மலாதான் பேசிட்டு இருக்கேன்.. நீ அப்படி நினைச்சா நான் என்ன செய்ய முடியும்.. நேரமாச்சு.. போகலாம்.."

"ப்ச்.. என்னால வேகமா நடக்க முடியாது.. வெளியில கூட்டிட்டு போறேன்னு சொல்லி அழைச்சிட்டு வந்து ஏன் என் உயிரை வாங்கறீங்க.."

"நான் வேணும்னா உன்னை தூக்கிட்டு போகட்டுமா..?"

"விளையாடறீங்களா..?"

அவன் குனிந்து அவளை தூக்க வரவும்..

"வேண்டாம்.. வேண்டாம்.. நான் நடந்தே வரேன்..‌ உங்ககிட்ட எது பேசினாலும் குத்தமா போகுது.." பத்மினி புலம்பிக்கொண்டே முன்னால் நடக்க அவளை பின் தொடர்ந்தான் உதய் கிருஷ்ணா..

சுமூகமாக போனவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே உள்ளே வர.. ரமணியம்மாள் ஒன்றும் புரியாமல் விழித்தார்..

அறைக்குள் சென்றவளை பின்தொடர்ந்து அவனும் அவசரமாக அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்தினான்..

"எதுக்காக இப்ப கதவை சாத்துறீங்க" என்று அவளை முடிக்கும் முன்பு.. ஆவேசமாக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டிருந்தான்..

"என்.."

"ஏன்.."

"போதுஊஊஊஊ.."

"ஐயோ மிச்சமிருக்கிற கொஞ்ச சத்தையும் இப்படியே உறிஞ்சியே எடுத்துடாதீங்க.. என்னால முடியல.. என்னை விட்டுடுங்க.."

அப்போதும் விடா கண்டனாக அவளை அணைத்து இதழில் முத்தமிட்டான்..

"என்னதான் ஆச்சு உங்களுக்கு..?" பத்மினிக்கு ஒன்றுமே புரியவில்லை..

உதய கிருஷ்ணா அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஏதோ பயம்..‌ தவிப்பு.. அவள் வாய்மொழியாக எதையோ கேட்க விரும்புகிறான்.. உனக்காகவே நான்.. உனக்காக மட்டுமே நான்.. போன்ற வாக்குறுதிகளா..!!

கொடுத்தால்தான் கிடைக்கும்.. அன்பும் உரிமையும் உறுதி மொழியும் கொடுக்கப்பட வேண்டும்.. பிறகு எதிர்பார்க்கப் பட வேண்டும்..

தன் பொருள் தனக்கானது என்ற பரிதவிப்பு.. உரிமை கோபம்..
உரிமையும் சரி கோபமும் சரி சற்று கூடுதல் தான் இவனிடம்..

நான் உனக்கானவள் என்று அவள் சொல்ல வேண்டும்.. அந்த நம்பிக்கையை அவள் தர வேண்டும்.. அதுவரை இந்த பயம் நீடித்திருக்கும்..

கன்னத்தில் முத்தமிட்டான்.. நெற்றியில் முத்தமிட்டான்..

"சார்..‌?"

அவன் கண்களில் அவளை இப்போதே விழுங்கி விட துடிக்கும் பரிதவிப்பு..

"சினிமாவுக்கு போகலாமா..?"

கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தாள்..

"அம்மா சொன்னாங்களே?" அவன் சொன்னதும் அவள் பார்வை முறைப்பாக மாறியது..

"அவங்க சொன்னாங்க.. ஆனா நானாகத்தான் கேக்கறேன்.. எனக்கு உன் கூட இருக்கனும்.." என்றவன் குரலை செருமிக் கொண்டு.. சற்று பின்னால் நகர்ந்து தன் தலையில் கைவைத்தவாறு "உன் கூட எங்கேயாவது போகனும்.." என்றான்..

"ம்ம்.. போகலாம்.." என்றாள் பத்மினி புரியாத பாவனையோடு..

"நீ எனக்கு மட்டும்தான்.." என்பதைப் போல் உணர்வு நெஞ்சை முட்டுகிறது.. அதை சொல்ல தெரியவில்லை..

சொல்லும் நாள் வரும்..

தொடரும்..
☺☺☺☺☺
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
நம்ம ரோபாட் உதய் இவளோ தூரம் மாரிடனே.......♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍...
.நம்ம பத்மினிக்கி இது புரிஞ்சுதா இல்லையா?........,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Waiting for next ud sisy 👌👌👌👌👌👌
 
Member
Joined
Jan 21, 2024
Messages
64
என்ன உணர்ச்சி பூர்வமான கதை நகர்வு
 
Member
Joined
Jun 27, 2024
Messages
57
Nice. Waiting for next... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top