• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 23

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
தியேட்டருக்குள் நுழைந்து படம் ஆரம்பிக்கப்பட்ட நிமிடத்திலிருந்து உதய் ஒரே புலம்பல்..

"என்ன படம் இது.."

"பாக்கவே முடியல.. தலை வலிக்குது.."

"ஹீரோ இன்ட்ரொடக்ஷன் படு கேவலமா இருக்கு.."

"அன்னைக்கு நீ செல்போன்ல ஒரு பாட்டு ப்ளே பண்ணியே.. அதுதானே இது..!!" அவன் தொடர் கேள்விகளில் பத்மினி சலிப்போடு புருவங்களை ஏற்றி இறக்கினாள்

"கொஞ்ச நேரம் படத்தை பார்க்க விடுறீங்களா..?"

"அந்த சீனோட கண்டினியூவேஷன் வரவே இல்ல.. எடிட்டிங் சரியில்ல நினைக்கிறேன்.."

முன்னே பின்னே படம் பார்த்திருந்தால் தானே.. இயல்பாக நிறை குறைகளோடு ஒரு திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு..!!

சொல்லப் போனால் இது நல்ல படம்தான்.. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய பொழுதுபோக்கான திரைப்படம்..

ஆனால் நமது மிஸ்டர் பர்ஃபெக்ட் குறைகளை தேடி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறாரே..!!

"சார் உங்களுக்கு படம் பிடிக்கலையா..? நாம வேணா எழுந்து போய் விடலாமா..!!" பத்மினி கடுப்பானாள்..

"ஏன் எழுந்து போகணும்.. பாக்கலாம்.."

"நீங்கதான் பிடிக்கல.. தலை வலிக்குதுன்னு சொன்னீங்க.."

"நான் படம் பார்க்க வரலையே..!!"

"பின்ன எதுக்காக என்னை கூட்டிட்டு வந்தீங்க.."

"சொன்னேனே உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்.."

"வீட்ல ரெண்டு நாளும் என் கூடதானே சார் இருந்தீங்க.."

"தெரியல ஒரு டிப்ரண்ட் என்விரான்மென்ட்ல உன்கூட இருக்கணும்னு தோணுச்சு..‌"

"அப்ப பார்க் பீச்ன்னு போயிருக்கலாமே..‌ மூவிதான் உங்களுக்கு கம்பர்டபிளா இல்லையே..!!"

"மற்ற இடங்கள்ல மக்கள் கூட்டம்.. கொஞ்சம் அலர்ஜியா இருக்கும்..!!"

"இங்கே அவ்வளவு கூட்டமில்லை நீயும் நானும் மட்டும் தானே..!! இது வேற மாதிரி ஃபீல் ஆகுது.."

"என்ன சார் லவ்வர்ஸ் பேசிக்கிற மாதிரி பேசறீங்க..?" பத்மினி சிரித்தாள்..

"லவ்வர்ஸ் இப்படித்தான் பேசிப்பாங்களா..?" உதய கிருஷ்ணா கண்களை விரித்து கேட்டான்.. ஆக மொத்தம் அவளை படம் பார்க்க விடவே இல்லை..

யாரேனும் பார்த்தால் அவன் பேசும் பேச்சு சிடுசிடுப்பான ஆசாமி தொண தொணப்பது போல்தான் தெரியும்..

அந்த பொண்ண கொஞ்சம் படம் பார்க்க விடுடா என்று எரிச்சல் பட தோன்றும்..

ஆனால் வளர்ந்த குழந்தை போல் அவளிடம் பேச்சு வளர்க்க நினைக்கிறானோ என்னவோ..!!

படத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை.. காமெடி சோகம்.. என ஒவ்வொரு காட்சி வரும்போதும் அவள் முகத்தை பார்த்தான்..

"ஏன் சிரிக்கிற..? அப்படி என்ன காமெடி.."

"படத்தை பார்த்தால்தானே சார் தெரியும்.." பத்மினி அவனை பாவமாக பார்த்தாள்..

"படத்தை பார்த்தால் தலை வலிக்குது.. அதனாலதான் உன்னை பார்க்கறேன்.."

"என்னை பாத்தா உங்களுக்கு கோபம்தானே வரும்.."

"இப்ப வரலையே..!!"

நொந்து போனாள் பத்மினி..

"சார் பேசாம எழுந்து போயிடுவோமா.. உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு இங்க உட்கார வேண்டாம்.."

"எனக்கு கஷ்டம்னு உனக்கு யார் சொன்னா.. மத்தவங்களுக்காக நான் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேன்.. எனக்கு என்னோட சௌகரியம் தான் முக்கியம்.."

"அது சரி இங்க வந்து உங்க சுயபுராணமா..? இதுக்கு படத்துக்கு வந்துருக்கவே வேண்டாம்.." கன்னத்தில் கைவைத்தாள் பத்மினி..

"சாரி நீ படத்தை பாரு..‌" என்று சரிந்து அமர்ந்தான் உதய்..

"நீங்க என்னை பார்க்கப் போறீங்களா..?"

"ம்ம்.." என்றான்.. திரையரங்கில் அந்த இருளில் மிக அமைதியாக.. அவன் கண்கள் மட்டும் நாவல் பழம் போல் மினுமினுப்பாக தெரிந்தன..

"அங்க பாரு.. கல்யாணமான கப்பிள்சா.. இல்லை லவ்வர்ஸ்சா தெரியல.. படத்தைக் கூட பாக்காம அந்த பொண்ணை தான் பாத்துட்டு இருக்கார்.. நீயும் இருக்கியே..!!" இன்று கார்னர் சீட்டில் எதையோ எதிர்பார்த்து வந்த ஒரு பெண் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த ஆணின் குமட்டில் குத்தினாள்..

ஆழ்ந்த பெருமூச்சோடு அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான் உதய் கிருஷ்ணா..

பத்மினிக்கு இந்த சிலிர் இன்பங்களை அனுபவிக்கலாமா வேண்டாமா என்று கூட தெரியவில்லை..!! தடம் தெரியாமல் சந்தோஷங்கள் மொத்தமாக அபகரிக்கப்பட்டு விட்டால் இழப்பை தாங்க இயலாது.. அவன் தொடுகையில் தடுமாறினாள்.. அவன் பார்வையில் திணறினாள்..

அவ்வப்போது படத்தின் திரையை பார்க்கத்தான் செய்தான்.. ஆனால் அவன் பார்வையும் கவனமும் முழுக்க முழுக்க பத்மினி மீதுதான்..

இன்டர்வல் டைம்..

"என்ன சாப்பிடற..?"

"ஐஸ்கிரீம்..?" என்ற வார்த்தைகள் தொண்டைகுழிக்குள் அமுங்கிப் போயின.. என்ன நினைத்துக் கொள்வானோ என்ற பயம்..

எழுந்து சென்றவன் ஒரு ஐஸ்கிரீமோடு திரும்பி வந்தான்..

"சரியான கஞ்சம்.." வாய்க்குள் முனகினாள் பத்மினி..

ஐஸ்கிரீமை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்துவிட்டு அமர்ந்தான் உதய்..

"உங்களுக்கு வாங்கலையா..?"

"எனக்கு வேண்டாம்.." அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே விளக்குகள் அணைக்கப்பட்டு திரையரங்கின் மெகா சைஸ் திரை உயிர்பிக்கப்பட்டது..

"உங்களை பார்க்க வைச்சுட்டு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்குமே.. !! ஏற்கனவே இப்பதான் உடம்பு சரியில்லாம மீண்டு வந்துருக்கேன்.." என்றவள் மீண்டும் ஒருமுறை அவனிடம் ஐஸ்கிரீமை நீட்டியிருக்க வேண்டும்.. அதுதானே முறை.. ஆனால் அவள் ஒரு வாய் சாப்பிடவும்.. சரி கொடு என்று அவன் கை நீட்டி கேட்கவும் சரியாக இருந்தது..

"ஐயோ.. முதல்லயே சொல்லி இருக்கலாமே..!! வாய் வச்சுட்டேனே எச்சில்.." என்றாள் அவள்..

அடுத்த கணம் ஐஸ்கிரீம் பூசியிருந்த உதடுகள் அவனால் விழுங்க பட்டன.. உறைந்து போனாள் பத்மினி.. கையிலிருந்த ஐஸ்கிரீம் உருகியது..

அடர்ந்த இருளில் அந்த கணம் மொத்தம் யாருக்கும் தெரியப்போவதில்லை.. நாவால் தன் இதழை வருடி கொண்டே விலகினான் உதய்.. "நானும் வாய் வச்சுட்டேன்.. இப்போ ஓகேதானே.. நீ சாப்பிடு.." என்றுவிட்டு திரையின் பக்கம் திரும்பிக்கொண்டான்..

இனி எங்கிருந்து சாப்பிடுவது..!! கைகள் நடுங்கியது பத்மினிக்கு.. முத்தம் புதிதல்ல.. ஆனால் இந்த ஐஸ்கிரீம் முத்தம் புதிது..

மீண்டும் அவள் பக்கம் திரும்பினான் "இன்னும் கொஞ்சம் கிடைக்குமா.. ரொம்ப டேஸ்டா இருக்கு.." இருளிலும் அவன் கண்கள் மோகத்தோடு பளபளத்தன..

"இதுக்குதான் சொன்னேன்.. பேசாம இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கி இருக்கலாம் இல்ல..!!

"நான் ஐஸ் கிரீமை கேட்கல.." கீழுதட்டை கடித்து ஆழ்ந்த கண்களோடு அவளை பார்த்தான்..

"வேண்டாம் சார்.. அப்பறம் நான் எழுந்து போய்டுவேன்.. இது தியேட்டர்.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க.." தலையை பின்னுக்கு இழுத்து கண்களை உருட்டி எச்சரித்த பிறகுதான் தன்னிலை உணர்ந்து.. இதழ் குவித்து ஊதியவன் நிதானத்திற்கு வந்தான்..

"உங்களுக்கு வேணும்னா போய் ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்க..! என்றாள் அவள்..

"வாங்கி..?" அவனிடம் சலிப்பு..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா .. என்பதைப் போல்

ஆயிரம் ஐஸ்கிரீம் சேர்ந்தாலும் அவள் இதழாகுமா.. என்ற நினைப்பு..

"அட்லீஸ்ட் கையையாவது கொடு.." உதய் கரம் நீட்ட ஒரு கரத்தில் ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டே மறுகரத்தை அவனிடம் கொடுத்தாள் பத்மினி..

"இவர் ஏன் சின்ன குழந்தை மாதிரி தொந்தரவு செய்யறாரு.. ஒண்ணுமே புரியலையே..!!" ஒரு பக்கம் அலுப்பாகவும், மறுபக்கம் இன்ப குறுகுறுப்பாகவும் இருந்தது..

படம் முடிந்து எழுந்து வெளியே வந்த வேளையில்.. அலுவலகத்திற்கு மட்டம் போட்டு குடும்பத்தோடு படம் பார்க்க வந்திருந்த திவாகரின் கண்களிலா இருவரும் விழ வேண்டும்..

"ஏங்க.. அவர் உங்க எம்டி தானே..?" மனைவி அடையாளம் காட்டிய பிறகுதான் பார்த்தான்..

"அட ஆமா..!!" உதட்டில் நக்கல்..

பத்மினியுடன் உதய் கிருஷ்ணாவையும் பார்த்ததில் பெரிதாக செய்தி கிடைத்த சுவாரஸ்யத்தில் திவாகரின் கண்கள் விரிந்து போயின..

"லீவு போட்டுட்டு இப்படித்தான் ரெண்டும் ஹோட்டல் லாட்ஜ்ன்னு சுத்திட்டு இருக்குதுங்களோ..!!"

பட்டுப் படாமலும் தெரிந்தும் தெரியாமலும் அவள் கரத்தை உரசுவது போல் பற்றிக்கொள்ள முயன்ற உதய் கிருஷ்ணாவை முறைத்தாள் பத்மினி..

"போதும்.. பப்ளிக் பிளேஸ் இது.. தியேட்டருக்கு வெளியே வந்தாச்சு.. அடக்கி வாசிக்கணும்.." அவள் சொன்னதை.. தவறான கோணத்தில் சரியாக புரிந்து கொண்டான் திவாகர்..

"திருட்டுத்தனமா எப்படி காதலிக்குதுங்க பார்..!!" தனது அலைபேசியில் இருவரையும் ஜோடியாக படம் எடுத்துக் கொண்டான் அடுத்த நாள் அரட்டையை சுவாரசியமாக்குவதற்காக..

உதய் கிருஷ்ணாவும் பத்மினியும் படம் முடிந்து வீட்டுக்கு வந்த சமயத்தில்..

அவர்கள் புறப்பட்ட நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஆரம்பித்த வாய்ஸ் நோட்டும் வீடியோ கால்களும் இன்னும் ஓயவில்லை..

"ஏய் கிருஷ்ணவேணி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. என் மகன் மருமகளை அழைச்சிட்டு சினிமாவுக்கு போயிருக்கான்..‌ என்னாலேயே நம்ப முடியல.."

"அவள் சினிமாவுக்கு போறதே அதிசயம்.."

"இதுல பொண்டாட்டிய கூட்டிட்டு போறதெல்லாம் உலக அதிசயம்.."

"என்ன செய்ய..? நான் அப்படி வளர்க்கலையே!! சினிமா பாக்கறதெல்லாம் முன்னேற்றத்தை தடுக்கும்னு சொல்லி கண்டிப்பா வளர்த்துட்டேன்.."

"சில விஷயங்களை அவனா தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருக்கணும்.. அவனும் விட்டுட்டான்.."

"இப்ப மருமக வந்து எல்லாத்தையும் அறிமுகப்படுத்த வேண்டியதா போச்சு.."

என்று பேசிக் கொண்டிருந்த வேளையில் பத்மினியும் உதய் கிருஷ்ணாவும் வீட்டிற்குள் நுழைந்தனர்..

"என் மகனும் மருமகளும் வந்துட்டாங்க.. நான் அப்புறம் பேசறேன்.." அவசரமாக அழைப்பை துண்டித்து விட்டு மகன் மருமகள் இருவரது முகத்தையும் ஆர்வமாக ஆராய்ந்தார் ரமணி..

வெளியே உல்லாசமாக சுற்றி விட்டு வந்த சந்தோஷ பூரிப்பை அவர்கள் முகத்தில் எதிர்பார்த்தாரோ என்னவோ.. வழக்கம்போல் உதய கிருஷ்ணா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.. பத்மினியும் அப்படியேதான் இருந்தாள்.. சப்பென போனது அவருக்கு..

இரவு உணவையும் அவன்தான் சமைத்தான்..

"ஏம்மா பத்மினி.. இன்னுமா உனக்கு உடம்பு சரியாகல.. கொஞ்சம் கருணை காட்டேன்மா.." ரமணியம்மா வாய் தவறி புலம்பி விட்டு மகனின் முகத்தைப் கண்டு பரிதாபமாக வாய்மூடி கொண்டார்..

"நாக்கை மட்டும் காது வரைக்கும் வளர்த்து வச்சிருக்கீங்கம்மா.. எல்லாம் இவளை சொல்லணும்.. எண்ணெயும் காரமுமா நல்லா சமைச்சு போட்டு கெடுத்து வச்சிருக்கான் உங்கள.."

"ஆனாலும் அவ சமைச்சு போட்டு ஆரோக்கியமாத்தானே இருக்கேன்.. மறுபடி நீ சமைக்க ஆரம்பிச்ச பிறகுதான்.." என்று சொல்லும்போதே உதய் திரும்பி அவரை முறைக்க..

"இன்னும் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்ல வந்தேன்ப்பா..!!" என்று குனிந்து தட்டை பார்த்தவரின் முகம் அஷ்ட கோணலாகிப் போனது..

"என்னடா உப்பு சப்பில்லாத ஒட்ஸ் உப்புமா.. அம்மா பாவம் இல்லையா.. கொஞ்சம் காய்கறியெல்லாம் போட்டு கிச்சடியாவது பண்ணி தரக் கூடாதா..?"

"ஒழுங்கா சாப்பிடுங்க..!!" அவன் அதட்டலுக்கு பின் வேறு என்ன செய்ய முடியும்.. பரிதாபமாக மருமகளை பார்த்தார்..

"ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. நாளைக்கு நான் பாத்துக்கறேன்.." என்பதைப் போல விழிகளை மூடி திறந்தாள் பத்மினி..

இரவு படுத்த பிறகு முந்தைய நாளைப் போல அவளை இழுத்து தன் மார்பு கூட்டுக்குள் பதுக்கி கொண்டான் உதய்..

பத்மினிக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.. ஏதோ தெய்வமே தன்னை வாரியணைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டதாக பரவசப்படுகிறாள்.. ஆனாலும்..

"வேண்டாம் சார் இதெல்லாம் பழகிட்டா.. ஒருநாள் இல்லைன்னு ஆகிட்டா எனக்குத்தான் கஷ்டம்.." என்றாள் சங்கடமாக..

"ஏன் நான் செத்து போய்டுவேன்னு சொல்ல வர்றியா..!!"

உயிர் வரை பதறிப் போனாள் பத்மினி.. "அச்சோ என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.. நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரல..!!"

"நான் ஏற்கனவே சொல்லிட்டேன் பத்மினி.. நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காதே.. இன்றைய நாள் இந்த நிமிஷம் இதுதான் உண்மை.. அதை மட்டும் சந்தோஷமா அனுபவிப்போம்.. ப்ளீஸ் வேற எதுவும் பேசாதே..!!"

பத்மினி அமைதியாக இருந்தாள்..

"சொல்லப்போனால் நீதான் என்னை கெடுத்து வச்சிருக்க.. என்றான் அவன்..

"நானா..?" பத்மினி கண்களை விரித்தாள்..

"ஹ்ம்ம்.. உன்னோட வாசனை.. உன்னோட உதடு.. உன்னுடைய இடுப்பு.. உன்னோட கழுத்து.. உன்னோட கன்னம்.. அப்புறம் இந்த கண்ணு.. எல்லாம் என்னை மெஸ்மரைஸ் பண்ணுது..‌"

பத்மினி தன்னை அறியாமலே வெட்கத்தை பூசி கொண்டாள்..‌

"போங்க சார் நான் ஒன்னும் அவ்வளவு அழகு இல்லை.."

"அதெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா நீ என்னை என்னமோ செய்யற..!!" அவள் முகத்தை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.. பத்மினிக்கு அவனை ஏறிட்டு பார்க்கவே கூச்சமாக இருந்தது.. துளைக்கும் பார்வை.. சமாளிக்க முடியவில்லை..

"நீ படம் ஃபுல்லா பாத்தியா..?" உதய் கிருஷ்ணா கேட்டான்..

"ம்ம்.. ஓரளவு பார்த்தேன்.."

"அது என்ன கதை கொஞ்சம் சொல்லு.."

"ஏன் சார் உங்களுக்குத்தான் பிடிக்காதே..!!"

"எனக்கு உன்கிட்ட வேற என்ன பேசுறது தெரியல.. நான் பேச்சு கொடுத்து கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கலைன்னா நீ அமைதியா இருந்துடற.. அந்த சைலன்ஸ் ஒருமாதிரி இருக்கு பத்மினி.."

"படத்தோட கதை சொல்ல சொன்னா எக்ஸ்ட்ராவா கொஞ்ச நேரம் பேசுவ இல்ல..?" என்று உதய கிருஷ்ணா அவள் கண்களுக்குள் பார்க்க.. பத்மினி அவனை விசித்திரமாக பார்த்தாள்..

இது என்ன மாதிரியான காதல்.. காதலா அல்லது தற்காலிகமாக தேடிக் கொள்ளும் சந்தோஷமா..!! வித்தியாசமாக தெரிகிறான் இந்த உதய் கிருஷ்ணா.. அம்மா கதை சொல்லுங்க என்று தொந்தரவு செய்யும் குழந்தை போல் தெரிகிறது இந்நேரம்..

அவன் கைவளைவுக்குள் அடங்கியபடி நிமிர்ந்து முகப்பார்த்து அந்த படத்தின் கதையை பாதி உளறலாக தூக்க கலக்கத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மினி..‌ அதைக் கேட்டபடியே மெல்ல உறங்கிப் போயிருந்தான் உதய் கிருஷ்ணா..

அடுத்த நாள் வீட்டு நிர்வாகமும் சமையல் கட்டும் கைமாறியது.. வேலைகளை முடித்துவிட்டு.. துணிமணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை செல்ல.. உதய கிருஷ்ணா அங்கே குளித்துக் கொண்டிருந்தான்..

ரமணியம்மா உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்.. தகவலோடு ரமணியம்மாவின் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்..

உதய் கிருஷ்ணா அறையின் குளியலறையில் புடவையை அங்கேயே கட்டிக் கொண்டு வெளியே வர வேண்டிய சிரமம் உண்டு.. இங்கே அந்த அவஸ்தையெல்லாம் இல்லை.. புடவையை மேலே போர்த்திக் கொண்டு நிதானமாக வெளியே வந்து கட்டலாம்..

தாழிட்ட கதவை திறந்து கொண்டு ரமணியம்மா சமையல் கட்டில் சேப்பங்கிழங்கு வறுவலை ருசி பார்க்க சென்று விட்டார்..

குளித்து முடித்து வெளியே வந்த பத்மினி நிதானமாக.. புடவையின் ஓரத்தை இடுப்பில் சொருகி.. மாராப்பு சேலைக்கு ப்ளீட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அம்மாவைத் தேடி உதய் கிருஷ்ணா உள்ளே நுழைந்தான்..

அவன் நின்று பார்த்துக் கொண்டிருந்த பாவனையை கண்டு அவளுக்கு தான் குளிர் காய்ச்சல் வந்து விடும் நிலை..‌ ஒருகணம் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் பத்மினி..

"என்ன அப்படி பாக்கறீங்க.."

"இத்தனை நாள் பாக்காம விட்டது தப்புதான்..!!" எச்சில் விழுங்கினான்..

ஆங்.. என்று விழித்தவள்.. அவன் பார்வையின் கூர்மை தன் முன்னழகை கொத்தித் தின்பதை உணர்ந்து.. அவசரமாக இழுத்து மாராப்பை மூடிக்கொண்டாள்..

முன் கோபுர அழகை..
உன் தாவணி மூடியதே.. அந்த பாடல்தான் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது..

கதவை தாழிட்டு கிறங்கடிக்கும் பார்வையோடு அவளை நெருங்கினான் உதய்..

"வேண்டாம் சார்.. ரமணியம்மா வெளிய இருக்காங்க.. இது தப்பு.." அவனிடமிருந்து தப்பித்து ஓட முயன்றவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் கன்றுக்குட்டியாய் மாறியிருந்தான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Oct 13, 2023
Messages
44
✍️💓💓💓💓💓
 
New member
Joined
Sep 5, 2024
Messages
13
சர்க்கஸ்ல சிங்கத்த train பண்ணி அதோட வாயில கூட தலைய விடுவாங்க அதோட இயல்பில் இருந்து மாறின சிங்கம் இவங்க சொல்றத கேட்கும் அப்படி தான் உதய் கிருஷ்ணாவும் இவ்வளவு நாள் இருந்தான். இப்ப தான் அவன் இயல்பாகிறான் உணர்வுகளை வெளி ‌கொண்டு வருகிறான். என்ன முத்தத்துக்கே மிரள வச்சவன் மத்ததுக்கெல்லாம் என்ன பண்ணுவானோ? அம்மா மகன் பேச்சு சிரிப்ப வர வைக்குது. பாட்டியோட லூட்டி ஓவராகிட்டே போகுது இளமைல இழந்ததில் சிலதாவது முதுமையில் அவங்களுக்கு கிடைக்குது எதோ ஒரு மாற்றம் அம்மா மகன் இருவருக்கும். பத்மினியின் பயமும் தவறில்லை ஆனால் இவர்களை பற்றி தெரிந்த பின்னும் பயந்தால் வாழ்க்கை இல்லை புரியுமா பத்மினிக்கு.
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
63
Udhay ah idhu yeppah 😍😍😍😍
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Haha.. Ivar padam paarka sonnaa padathuku quality assurance paarthirukaru.. Anyways, he now has some memorable moments in a new ambience..

Nijamave upma'va sister.. Apadina enaku dinner eh vendam..

Udhay is stepping into next level.. Nice writing, sister.. Theater scene is so nice as it did not deviate from his nature.. Well written.. Nice episode.. Thank you..
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
Wow. . uday 😍😍😍😍😍😍😍😍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

அந்த திவாகர் வேற என்ன பிரச்சனையை இழுத்து விடுவானோ........ இதில் இருந்து பத்மினி யைப் உதய் எவ்வாறு காப்பாற்றுவான்....
..😔😔
 
Last edited:
Joined
Jul 31, 2024
Messages
54
தியேட்டருக்குள் நுழைந்து படம் ஆரம்பிக்கப்பட்ட நிமிடத்திலிருந்து உதய் ஒரே புலம்பல்..

"என்ன படம் இது.."

"பாக்கவே முடியல.. தலை வலிக்குது.."

"ஹீரோ இன்ட்ரொடக்ஷன் படு கேவலமா இருக்கு.."

"அன்னைக்கு நீ செல்போன்ல ஒரு பாட்டு ப்ளே பண்ணியே.. அதுதானே இது..!!" அவன் தொடர் கேள்விகளில் பத்மினி சலிப்போடு புருவங்களை ஏற்றி இறக்கினாள்

"கொஞ்ச நேரம் படத்தை பார்க்க விடுறீங்களா..?"

"அந்த சீனோட கண்டினியூவேஷன் வரவே இல்ல.. எடிட்டிங் சரியில்ல நினைக்கிறேன்.."

முன்னே பின்னே படம் பார்த்திருந்தால் தானே.. இயல்பாக நிறை குறைகளோடு ஒரு திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு..!!

சொல்லப் போனால் இது நல்ல படம்தான்.. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய பொழுதுபோக்கான திரைப்படம்..

ஆனால் நமது மிஸ்டர் பர்ஃபெக்ட் குறைகளை தேடி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறாரே..!!

"சார் உங்களுக்கு படம் பிடிக்கலையா..? நாம வேணா எழுந்து போய் விடலாமா..!!" பத்மினி கடுப்பானாள்..

"ஏன் எழுந்து போகணும்.. பாக்கலாம்.."

"நீங்கதான் பிடிக்கல.. தலை வலிக்குதுன்னு சொன்னீங்க.."

"நான் படம் பார்க்க வரலையே..!!"

"பின்ன எதுக்காக என்னை கூட்டிட்டு வந்தீங்க.."

"சொன்னேனே உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்.."

"வீட்ல ரெண்டு நாளும் என் கூடதானே சார் இருந்தீங்க.."

"தெரியல ஒரு டிப்ரண்ட் என்விரான்மென்ட்ல உன்கூட இருக்கணும்னு தோணுச்சு..‌"

"அப்ப பார்க் பீச்ன்னு போயிருக்கலாமே..‌ மூவிதான் உங்களுக்கு கம்பர்டபிளா இல்லையே..!!"

"மற்ற இடங்கள்ல மக்கள் கூட்டம்.. கொஞ்சம் அலர்ஜியா இருக்கும்..!!"

"இங்கே அவ்வளவு கூட்டமில்லை நீயும் நானும் மட்டும் தானே..!! இது வேற மாதிரி ஃபீல் ஆகுது.."

"என்ன சார் லவ்வர்ஸ் பேசிக்கிற மாதிரி பேசறீங்க..?" பத்மினி சிரித்தாள்..

"லவ்வர்ஸ் இப்படித்தான் பேசிப்பாங்களா..?" உதய கிருஷ்ணா கண்களை விரித்து கேட்டான்.. ஆக மொத்தம் அவளை படம் பார்க்க விடவே இல்லை..

யாரேனும் பார்த்தால் அவன் பேசும் பேச்சு சிடுசிடுப்பான ஆசாமி தொண தொணப்பது போல்தான் தெரியும்..

அந்த பொண்ண கொஞ்சம் படம் பார்க்க விடுடா என்று எரிச்சல் பட தோன்றும்..

ஆனால் வளர்ந்த குழந்தை போல் அவளிடம் பேச்சு வளர்க்க நினைக்கிறானோ என்னவோ..!!

படத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை.. காமெடி சோகம்.. என ஒவ்வொரு காட்சி வரும்போதும் அவள் முகத்தை பார்த்தான்..

"ஏன் சிரிக்கிற..? அப்படி என்ன காமெடி.."

"படத்தை பார்த்தால்தானே சார் தெரியும்.." பத்மினி அவனை பாவமாக பார்த்தாள்..

"படத்தை பார்த்தால் தலை வலிக்குது.. அதனாலதான் உன்னை பார்க்கறேன்.."

"என்னை பாத்தா உங்களுக்கு கோபம்தானே வரும்.."

"இப்ப வரலையே..!!"

நொந்து போனாள் பத்மினி..

"சார் பேசாம எழுந்து போயிடுவோமா.. உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு இங்க உட்கார வேண்டாம்.."

"எனக்கு கஷ்டம்னு உனக்கு யார் சொன்னா.. மத்தவங்களுக்காக நான் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேன்.. எனக்கு என்னோட சௌகரியம் தான் முக்கியம்.."

"அது சரி இங்க வந்து உங்க சுயபுராணமா..? இதுக்கு படத்துக்கு வந்துருக்கவே வேண்டாம்.." கன்னத்தில் கைவைத்தாள் பத்மினி..

"சாரி நீ படத்தை பாரு..‌" என்று சரிந்து அமர்ந்தான் உதய்..

"நீங்க என்னை பார்க்கப் போறீங்களா..?"

"ம்ம்.." என்றான்.. திரையரங்கில் அந்த இருளில் மிக அமைதியாக.. அவன் கண்கள் மட்டும் நாவல் பழம் போல் மினுமினுப்பாக தெரிந்தன..

"அங்க பாரு.. கல்யாணமான கப்பிள்சா.. இல்லை லவ்வர்ஸ்சா தெரியல.. படத்தைக் கூட பாக்காம அந்த பொண்ணை தான் பாத்துட்டு இருக்கார்.. நீயும் இருக்கியே..!!" இன்று கார்னர் சீட்டில் எதையோ எதிர்பார்த்து வந்த ஒரு பெண் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த ஆணின் குமட்டில் குத்தினாள்..

ஆழ்ந்த பெருமூச்சோடு அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான் உதய் கிருஷ்ணா..

பத்மினிக்கு இந்த சிலிர் இன்பங்களை அனுபவிக்கலாமா வேண்டாமா என்று கூட தெரியவில்லை..!! தடம் தெரியாமல் சந்தோஷங்கள் மொத்தமாக அபகரிக்கப்பட்டு விட்டால் இழப்பை தாங்க இயலாது.. அவன் தொடுகையில் தடுமாறினாள்.. அவன் பார்வையில் திணறினாள்..

அவ்வப்போது படத்தின் திரையை பார்க்கத்தான் செய்தான்.. ஆனால் அவன் பார்வையும் கவனமும் முழுக்க முழுக்க பத்மினி மீதுதான்..

இன்டர்வல் டைம்..

"என்ன சாப்பிடற..?"

"ஐஸ்கிரீம்..?" என்ற வார்த்தைகள் தொண்டைகுழிக்குள் அமுங்கிப் போயின.. என்ன நினைத்துக் கொள்வானோ என்ற பயம்..

எழுந்து சென்றவன் ஒரு ஐஸ்கிரீமோடு திரும்பி வந்தான்..

"சரியான கஞ்சம்.." வாய்க்குள் முனகினாள் பத்மினி..

ஐஸ்கிரீமை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்துவிட்டு அமர்ந்தான் உதய்..

"உங்களுக்கு வாங்கலையா..?"

"எனக்கு வேண்டாம்.." அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே விளக்குகள் அணைக்கப்பட்டு திரையரங்கின் மெகா சைஸ் திரை உயிர்பிக்கப்பட்டது..

"உங்களை பார்க்க வைச்சுட்டு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்குமே.. !! ஏற்கனவே இப்பதான் உடம்பு சரியில்லாம மீண்டு வந்துருக்கேன்.." என்றவள் மீண்டும் ஒருமுறை அவனிடம் ஐஸ்கிரீமை நீட்டியிருக்க வேண்டும்.. அதுதானே முறை.. ஆனால் அவள் ஒரு வாய் சாப்பிடவும்.. சரி கொடு என்று அவன் கை நீட்டி கேட்கவும் சரியாக இருந்தது..

"ஐயோ.. முதல்லயே சொல்லி இருக்கலாமே..!! வாய் வச்சுட்டேனே எச்சில்.." என்றாள் அவள்..

அடுத்த கணம் ஐஸ்கிரீம் பூசியிருந்த உதடுகள் அவனால் விழுங்க பட்டன.. உறைந்து போனாள் பத்மினி.. கையிலிருந்த ஐஸ்கிரீம் உருகியது..

அடர்ந்த இருளில் அந்த கணம் மொத்தம் யாருக்கும் தெரியப்போவதில்லை.. நாவால் தன் இதழை வருடி கொண்டே விலகினான் உதய்.. "நானும் வாய் வச்சுட்டேன்.. இப்போ ஓகேதானே.. நீ சாப்பிடு.." என்றுவிட்டு திரையின் பக்கம் திரும்பிக்கொண்டான்..

இனி எங்கிருந்து சாப்பிடுவது..!! கைகள் நடுங்கியது பத்மினிக்கு.. முத்தம் புதிதல்ல.. ஆனால் இந்த ஐஸ்கிரீம் முத்தம் புதிது..

மீண்டும் அவள் பக்கம் திரும்பினான் "இன்னும் கொஞ்சம் கிடைக்குமா.. ரொம்ப டேஸ்டா இருக்கு.." இருளிலும் அவன் கண்கள் மோகத்தோடு பளபளத்தன..

"இதுக்குதான் சொன்னேன்.. பேசாம இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கி இருக்கலாம் இல்ல..!!

"நான் ஐஸ் கிரீமை கேட்கல.." கீழுதட்டை கடித்து ஆழ்ந்த கண்களோடு அவளை பார்த்தான்..

"வேண்டாம் சார்.. அப்பறம் நான் எழுந்து போய்டுவேன்.. இது தியேட்டர்.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க.." தலையை பின்னுக்கு இழுத்து கண்களை உருட்டி எச்சரித்த பிறகுதான் தன்னிலை உணர்ந்து.. இதழ் குவித்து ஊதியவன் நிதானத்திற்கு வந்தான்..

"உங்களுக்கு வேணும்னா போய் ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்க..! என்றாள் அவள்..

"வாங்கி..?" அவனிடம் சலிப்பு..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா .. என்பதைப் போல்

ஆயிரம் ஐஸ்கிரீம் சேர்ந்தாலும் அவள் இதழாகுமா.. என்ற நினைப்பு..

"அட்லீஸ்ட் கையையாவது கொடு.." உதய் கரம் நீட்ட ஒரு கரத்தில் ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டே மறுகரத்தை அவனிடம் கொடுத்தாள் பத்மினி..

"இவர் ஏன் சின்ன குழந்தை மாதிரி தொந்தரவு செய்யறாரு.. ஒண்ணுமே புரியலையே..!!" ஒரு பக்கம் அலுப்பாகவும், மறுபக்கம் இன்ப குறுகுறுப்பாகவும் இருந்தது..

படம் முடிந்து எழுந்து வெளியே வந்த வேளையில்.. அலுவலகத்திற்கு மட்டம் போட்டு குடும்பத்தோடு படம் பார்க்க வந்திருந்த திவாகரின் கண்களிலா இருவரும் விழ வேண்டும்..

"ஏங்க.. அவர் உங்க எம்டி தானே..?" மனைவி அடையாளம் காட்டிய பிறகுதான் பார்த்தான்..

"அட ஆமா..!!" உதட்டில் நக்கல்..

பத்மினியுடன் உதய் கிருஷ்ணாவையும் பார்த்ததில் பெரிதாக செய்தி கிடைத்த சுவாரஸ்யத்தில் திவாகரின் கண்கள் விரிந்து போயின..

"லீவு போட்டுட்டு இப்படித்தான் ரெண்டும் ஹோட்டல் லாட்ஜ்ன்னு சுத்திட்டு இருக்குதுங்களோ..!!"

பட்டுப் படாமலும் தெரிந்தும் தெரியாமலும் அவள் கரத்தை உரசுவது போல் பற்றிக்கொள்ள முயன்ற உதய் கிருஷ்ணாவை முறைத்தாள் பத்மினி..

"போதும்.. பப்ளிக் பிளேஸ் இது.. தியேட்டருக்கு வெளியே வந்தாச்சு.. அடக்கி வாசிக்கணும்.." அவள் சொன்னதை.. தவறான கோணத்தில் சரியாக புரிந்து கொண்டான் திவாகர்..

"திருட்டுத்தனமா எப்படி காதலிக்குதுங்க பார்..!!" தனது அலைபேசியில் இருவரையும் ஜோடியாக படம் எடுத்துக் கொண்டான் அடுத்த நாள் அரட்டையை சுவாரசியமாக்குவதற்காக..

உதய் கிருஷ்ணாவும் பத்மினியும் படம் முடிந்து வீட்டுக்கு வந்த சமயத்தில்..

அவர்கள் புறப்பட்ட நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஆரம்பித்த வாய்ஸ் நோட்டும் வீடியோ கால்களும் இன்னும் ஓயவில்லை..

"ஏய் கிருஷ்ணவேணி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. என் மகன் மருமகளை அழைச்சிட்டு சினிமாவுக்கு போயிருக்கான்..‌ என்னாலேயே நம்ப முடியல.."

"அவள் சினிமாவுக்கு போறதே அதிசயம்.."

"இதுல பொண்டாட்டிய கூட்டிட்டு போறதெல்லாம் உலக அதிசயம்.."

"என்ன செய்ய..? நான் அப்படி வளர்க்கலையே!! சினிமா பாக்கறதெல்லாம் முன்னேற்றத்தை தடுக்கும்னு சொல்லி கண்டிப்பா வளர்த்துட்டேன்.."

"சில விஷயங்களை அவனா தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருக்கணும்.. அவனும் விட்டுட்டான்.."

"இப்ப மருமக வந்து எல்லாத்தையும் அறிமுகப்படுத்த வேண்டியதா போச்சு.."

என்று பேசிக் கொண்டிருந்த வேளையில் பத்மினியும் உதய் கிருஷ்ணாவும் வீட்டிற்குள் நுழைந்தனர்..

"என் மகனும் மருமகளும் வந்துட்டாங்க.. நான் அப்புறம் பேசறேன்.." அவசரமாக அழைப்பை துண்டித்து விட்டு மகன் மருமகள் இருவரது முகத்தையும் ஆர்வமாக ஆராய்ந்தார் ரமணி..

வெளியே உல்லாசமாக சுற்றி விட்டு வந்த சந்தோஷ பூரிப்பை அவர்கள் முகத்தில் எதிர்பார்த்தாரோ என்னவோ.. வழக்கம்போல் உதய கிருஷ்ணா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.. பத்மினியும் அப்படியேதான் இருந்தாள்.. சப்பென போனது அவருக்கு..

இரவு உணவையும் அவன்தான் சமைத்தான்..

"ஏம்மா பத்மினி.. இன்னுமா உனக்கு உடம்பு சரியாகல.. கொஞ்சம் கருணை காட்டேன்மா.." ரமணியம்மா வாய் தவறி புலம்பி விட்டு மகனின் முகத்தைப் கண்டு பரிதாபமாக வாய்மூடி கொண்டார்..

"நாக்கை மட்டும் காது வரைக்கும் வளர்த்து வச்சிருக்கீங்கம்மா.. எல்லாம் இவளை சொல்லணும்.. எண்ணெயும் காரமுமா நல்லா சமைச்சு போட்டு கெடுத்து வச்சிருக்கான் உங்கள.."

"ஆனாலும் அவ சமைச்சு போட்டு ஆரோக்கியமாத்தானே இருக்கேன்.. மறுபடி நீ சமைக்க ஆரம்பிச்ச பிறகுதான்.." என்று சொல்லும்போதே உதய் திரும்பி அவரை முறைக்க..

"இன்னும் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்ல வந்தேன்ப்பா..!!" என்று குனிந்து தட்டை பார்த்தவரின் முகம் அஷ்ட கோணலாகிப் போனது..

"என்னடா உப்பு சப்பில்லாத ஒட்ஸ் உப்புமா.. அம்மா பாவம் இல்லையா.. கொஞ்சம் காய்கறியெல்லாம் போட்டு கிச்சடியாவது பண்ணி தரக் கூடாதா..?"

"ஒழுங்கா சாப்பிடுங்க..!!" அவன் அதட்டலுக்கு பின் வேறு என்ன செய்ய முடியும்.. பரிதாபமாக மருமகளை பார்த்தார்..

"ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. நாளைக்கு நான் பாத்துக்கறேன்.." என்பதைப் போல விழிகளை மூடி திறந்தாள் பத்மினி..

இரவு படுத்த பிறகு முந்தைய நாளைப் போல அவளை இழுத்து தன் மார்பு கூட்டுக்குள் பதுக்கி கொண்டான் உதய்..

பத்மினிக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.. ஏதோ தெய்வமே தன்னை வாரியணைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டதாக பரவசப்படுகிறாள்.. ஆனாலும்..

"வேண்டாம் சார் இதெல்லாம் பழகிட்டா.. ஒருநாள் இல்லைன்னு ஆகிட்டா எனக்குத்தான் கஷ்டம்.." என்றாள் சங்கடமாக..

"ஏன் நான் செத்து போய்டுவேன்னு சொல்ல வர்றியா..!!"

உயிர் வரை பதறிப் போனாள் பத்மினி.. "அச்சோ என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.. நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரல..!!"

"நான் ஏற்கனவே சொல்லிட்டேன் பத்மினி.. நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காதே.. இன்றைய நாள் இந்த நிமிஷம் இதுதான் உண்மை.. அதை மட்டும் சந்தோஷமா அனுபவிப்போம்.. ப்ளீஸ் வேற எதுவும் பேசாதே..!!"

பத்மினி அமைதியாக இருந்தாள்..

"சொல்லப்போனால் நீதான் என்னை கெடுத்து வச்சிருக்க.. என்றான் அவன்..

"நானா..?" பத்மினி கண்களை விரித்தாள்..

"ஹ்ம்ம்.. உன்னோட வாசனை.. உன்னோட உதடு.. உன்னுடைய இடுப்பு.. உன்னோட கழுத்து.. உன்னோட கன்னம்.. அப்புறம் இந்த கண்ணு.. எல்லாம் என்னை மெஸ்மரைஸ் பண்ணுது..‌"

பத்மினி தன்னை அறியாமலே வெட்கத்தை பூசி கொண்டாள்..‌

"போங்க சார் நான் ஒன்னும் அவ்வளவு அழகு இல்லை.."

"அதெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா நீ என்னை என்னமோ செய்யற..!!" அவள் முகத்தை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.. பத்மினிக்கு அவனை ஏறிட்டு பார்க்கவே கூச்சமாக இருந்தது.. துளைக்கும் பார்வை.. சமாளிக்க முடியவில்லை..

"நீ படம் ஃபுல்லா பாத்தியா..?" உதய் கிருஷ்ணா கேட்டான்..

"ம்ம்.. ஓரளவு பார்த்தேன்.."

"அது என்ன கதை கொஞ்சம் சொல்லு.."

"ஏன் சார் உங்களுக்குத்தான் பிடிக்காதே..!!"

"எனக்கு உன்கிட்ட வேற என்ன பேசுறது தெரியல.. நான் பேச்சு கொடுத்து கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கலைன்னா நீ அமைதியா இருந்துடற.. அந்த சைலன்ஸ் ஒருமாதிரி இருக்கு பத்மினி.."

"படத்தோட கதை சொல்ல சொன்னா எக்ஸ்ட்ராவா கொஞ்ச நேரம் பேசுவ இல்ல..?" என்று உதய கிருஷ்ணா அவள் கண்களுக்குள் பார்க்க.. பத்மினி அவனை விசித்திரமாக பார்த்தாள்..

இது என்ன மாதிரியான காதல்.. காதலா அல்லது தற்காலிகமாக தேடிக் கொள்ளும் சந்தோஷமா..!! வித்தியாசமாக தெரிகிறான் இந்த உதய் கிருஷ்ணா.. அம்மா கதை சொல்லுங்க என்று தொந்தரவு செய்யும் குழந்தை போல் தெரிகிறது இந்நேரம்..

அவன் கைவளைவுக்குள் அடங்கியபடி நிமிர்ந்து முகப்பார்த்து அந்த படத்தின் கதையை பாதி உளறலாக தூக்க கலக்கத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மினி..‌ அதைக் கேட்டபடியே மெல்ல உறங்கிப் போயிருந்தான் உதய் கிருஷ்ணா..

அடுத்த நாள் வீட்டு நிர்வாகமும் சமையல் கட்டும் கைமாறியது.. வேலைகளை முடித்துவிட்டு.. துணிமணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை செல்ல.. உதய கிருஷ்ணா அங்கே குளித்துக் கொண்டிருந்தான்..

ரமணியம்மா உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்.. தகவலோடு ரமணியம்மாவின் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்..

உதய் கிருஷ்ணா அறையின் குளியலறையில் புடவையை அங்கேயே கட்டிக் கொண்டு வெளியே வர வேண்டிய சிரமம் உண்டு.. இங்கே அந்த அவஸ்தையெல்லாம் இல்லை.. புடவையை மேலே போர்த்திக் கொண்டு நிதானமாக வெளியே வந்து கட்டலாம்..

தாழிட்ட கதவை திறந்து கொண்டு ரமணியம்மா சமையல் கட்டில் சேப்பங்கிழங்கு வறுவலை ருசி பார்க்க சென்று விட்டார்..

குளித்து முடித்து வெளியே வந்த பத்மினி நிதானமாக.. புடவையின் ஓரத்தை இடுப்பில் சொருகி.. மாராப்பு சேலைக்கு ப்ளீட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அம்மாவைத் தேடி உதய் கிருஷ்ணா உள்ளே நுழைந்தான்..

அவன் நின்று பார்த்துக் கொண்டிருந்த பாவனையை கண்டு அவளுக்கு தான் குளிர் காய்ச்சல் வந்து விடும் நிலை..‌ ஒருகணம் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் பத்மினி..

"என்ன அப்படி பாக்கறீங்க.."

"இத்தனை நாள் பாக்காம விட்டது தப்புதான்..!!" எச்சில் விழுங்கினான்..

ஆங்.. என்று விழித்தவள்.. அவன் பார்வையின் கூர்மை தன் முன்னழகை கொத்தித் தின்பதை உணர்ந்து.. அவசரமாக இழுத்து மாராப்பை மூடிக்கொண்டாள்..

முன் கோபுர அழகை..
உன் தாவணி மூடியதே.. அந்த பாடல்தான் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது..

கதவை தாழிட்டு கிறங்கடிக்கும் பார்வையோடு அவளை நெருங்கினான் உதய்..

"வேண்டாம் சார்.. ரமணியம்மா வெளிய இருக்காங்க.. இது தப்பு.." அவனிடமிருந்து தப்பித்து ஓட முயன்றவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் கன்றுக்குட்டியாய் மாறியிருந்தான்..

தொடரும்..
😂😂😂😂😂😂 ஆத்தாடி ஃபுல் ஃபார்ம் ல லவ் மூடுல ரோபோ ச்ச மைனர் ரெடி ட்டு ப்ளே 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭ஆத்தி அடுத்த எபி🙄🙄🙄🙄🙄🙄எப்ப வரும் டார்லு😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 கொஞ்சம் பெரிய மனசு வச்சு ரெண்டு யூடியா போட்ட எப்படி இருக்கும் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Member
Joined
Dec 23, 2023
Messages
71
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jan 21, 2024
Messages
64
உதய் செம்ம ய்யா ரொமான்ஸ் பண்றான் ஆனா வெளிபடுத்த தயங்குறான்.
 
Joined
Jul 10, 2024
Messages
44
பத்மினி இதுக்கே குளிர் காய்ச்சல் வர மாதிரி இருந்தா உதய் புல் ரொமான்ஸ் மூட்ல வந்தா என்ன ஆவாளோ.

உதய் பத்தி புரிஞ்சுகிட்ட நீ இப்படி பயந்தா உன்னால் இன்பமா வாழ முடியாது. உதய் சொல்லறமாதிரி தேவையில்லாத யோசனையை விட்டுட்டு இந்த நிமிஷத்த அனுபவி.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
138

☺☺☺☺☺
 
Top