• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 24

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
"எவ்வளவு நேரம்தான் கதவை தட்டறது.." உங்க ரெண்டு பேருக்கும் விவஸ்தையே கிடையாதா..?" ரமணியம்மா கோபமாக கத்தவும்.. உதய் கிருஷ்ணாவும் பத்மினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

ரமணியம்மாவின் விழிகள் பத்மினியை ஊன்றி துளைக்க கணவனின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள் பத்மினி..

"சண்டை போடுறதுனா உங்க ரூமுக்கு போய் சண்டை போடுங்க.. என் ரூம்ல நின்னு என்ன சண்ட வேண்டி கிடக்கு..? ரமணியம்மாள் கேட்க உதய் பெரிதாக விழித்தான்..

"அவ வேண்டாம்.. இத்தோட நிறுத்திக்கங்கன்னு கத்தறதும் நீ அமைதியா இரு.. இல்லைன்னா நடக்கறதே வேறன்னு மிரட்டறதும்.. ஷ்ஷப்பா எதுவும் சரியில்லை உதய்.. உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. உடம்பு சரியில்லாத பொண்ணு.. அவகிட்ட அமைதியா பேசு.." ரமணியம்மா மூச்சு வாங்க இரைந்தார்..

"சரிம்மா.." தாடையை நீவி கொண்டே திரும்பி குறுகுறுப்பான விழிகளோடு பத்மினியை பார்த்தான் அவன்..

"இங்கிருந்து போங்க ரெண்டு பேரும்" என்று வழிவிட்டு நின்றார் ரமணியம்மா..

பத்மினி வேகமாக கிச்சனை நோக்கி நடக்க அவளை பின்தொடர்ந்து சென்றான் உதய்..

அங்கேயும் பயங்கர வாக்குவாதம் நடப்பது போல் சத்தம்..

அவனுக்கு எதையும் அடித்து பறித்துதான் பழக்கம் போலிருக்கிறது..‌ ஜல்லிக்கட்டு காளை போல் அவளோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தான்.

"ஐயோ இதுங்க பிரச்சனை ஓயவே ஓயாது போலிருக்கே..!!" தலையிலடித்துக் கொண்டு வெளியே வந்தார் ரமணியம்மா..

உதய் முதுகு காட்டி நின்று கொண்டிருக்க.. "வேண்டாம்.. அப்புறம் நான் கத்துவேன்.. இதெல்லாம் சரியே இல்ல அமைதியா இருந்திடுங்க.." என்று அவனை எச்சரித்துக் கொண்டிருந்தாள் பத்மினி..

"என்னடா பண்ற..?" ரமணியம்மா அங்கேயும் வந்து விட்டார்..

"அம்மா.. !!" சட்டென திரும்பியவன் சங்கடத்தோடு பிடரியை வருடியபடி விழித்து நின்றான்..‌

"அடிக்கப் போறியா அந்த பொண்ண.. இதுக்குதான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சனா..?" ரமணியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டு கண்களை உருட்டினார்..

"ஐயோ அம்மா அடிக்கல.. கடிக்க.. இல்ல குடிக்க..!!" தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து போனவனாய் உதடுகளை மடக்கி விழிகளை அழுத்தமாக மூடி திறந்தான் உதய்..

"டமஸ்டிக் வயலன்ஸ் தப்பு உதய்.. !!" ஒரு விரலை நீட்டி எச்சரித்தார் ரமணியம்மா..

"என்னது..?" உதய் பெரிதாக அதிர்ந்தான்.. இதெல்லாம் டமஸ்டிக் வையலன்சா.. இப்போதுதான் தெரிகிறது அவனுக்கு..

பத்மினி வாயை மூடி சிரித்தாள்..

"பத்மினி இவன் ஏதாவது அடாவடித்தனம் செஞ்சா என்கிட்ட சொல்லு.. நான் பாத்துக்கறேன்..!!"

"சரிம்மா.." அப்பாவியாக தலையசைத்தாள் பத்மினி..

"அம்மாஆஆ.." கடுப்போடு கத்தினான் அவன்..
"
வாயை மூடுடா.. பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியல.. அவளை கஷ்டப்படுத்தினா அப்புறம் தொலைச்சிடுவேன் படவா.." எனும்போதே அலைபேசி அழைத்திருக்க எடுத்து காதில் வைத்தார்..

"ஆமா வேணி.. என் புள்ள என் மருமக மேல பாயறான்.."

"அய்யோ.. அடிக்கப் பாயறான்.. எங்கிருந்துதான் இவ்வளவு கோபம் வருதோ..!!"

"கண்டிச்சு சொல்லிட்டேன் என் மருமகளை தொடக்கூடாதுன்னு.."

"அம்மாஆஆ இதையெல்லாமா போன்ல சொல்லுவீங்க" தலையில் அடித்துக் கொண்டான் உதய்..

அவனை அலட்சியமாக பார்த்து உதட்டை சுழித்து விட்டு அலைபேசியில் மேலும் தொடர்ந்து பேசினார்..

எதிர்முனையில் இருப்பவர் விவரம் தெரிந்த அனுபவ மனுஷி போலிருக்கிறது.

"என்னது இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..!!"

"இப்ப எதுக்கு என்னை தேவையில்லாம திட்டுற.." கோபப்பட்டு ரமணியம்மா கத்த அங்கே என்ன சொல்லப்பட்டதோ.." திடுக்கிடும் பார்வையுடன் இருவரையும் பார்த்தார்..

பிறகு லேசான அசடு வழியும் புன்னகையோடு அங்கிருந்து தன்னறைக்கு சென்று விட்டார்..

"அவங்களுக்கு விவஸ்தை இல்லைன்னு சொன்னேன்.. கடைசில பாத்தா எனக்குதான் விவஸ்தையை இல்ல போலிருக்கு.." அலைபேசியில் புலம்பிக் கொண்டே செல்வது ஒன்றும் பாதியுமாக அவர்கள் காதுகளில் விழுந்தது..

உதவி செய்ய வந்த ரமணியம்மாள் விலகி சென்றுவிட.. புலியிடம் வசமாக சிக்கிக்கொண்ட மான் குட்டி போல் விழித்தாள் பத்மினி..

அவள் சேலையை இழுத்தபடி சமையல் கட்டு கதவை சாத்தி தாழிட்டிருந்தான் உதய்..
பாத்திரங்கள் உருளும் சத்தம்.. உள்ளாடை உத்திரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.. உயரமான மனிதன் அவன்தான் எடுத்து கொடுக்க வேண்டும்..

சமையலறையில் ஒரு விருந்து.. கனிகள் மட்டுமே உண்ணும் காட்டு மனிதன்..

பதினைந்து நிமிடங்களுக்கு பின் ஒரு கையால் அவன் கதவை திறந்த நேரத்தில்.. சமையல் மேடையில் அமர்ந்து உதய கிருஷ்ணாவை முறைத்த படி தன் புடவை முந்தானையை சரி செய்து கொண்டிருந்தாள் பத்மினி..

அங்கிருந்து அவள் இறங்க முற்பட தாழ்ப்பாளின் கைப்பிடியை பிடித்த மேனிக்கே அவள் பின்னந்தலையை தன்னோடு இழுத்து.. இதழோடு இதழ் இணைத்து முத்தமிட்டு கிறக்கத்தோடு அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் உதய்..

பத்மினிக்கு களைப்பாக இருந்தது.. மார்பு காம்புகளில் இதுவரை அனுபவித்திராத ஏதோ இனம் புரியாத வலி..

"இதுக்கு மேல என்கிட்ட ஒண்ணுமே இல்ல.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க..!!" மார்போடு சேலையை இழுத்துப் பிடித்துக் கொண்டு புருவங்களை அயர்வாக ஏற்றி இறக்கினாள்..

"யார் சொன்னா இல்லைன்னு..!! எல்லாம் உன்கிட்டதான் இருக்கு..!! என்னென்னவோ வச்சிருக்கியேடி.. எல்லாத்தையும் கண்டுபிடிக்க டீப்பா ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தணும் போலிருக்கே..!!" இதுவரை காணாத குறுகுறுப்போடு அவன் கண்கள் பத்மினியை கிறங்கடித்தன..‌

உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.. சொல்லத்தான் நினைத்தாள்.. சொல்ல முடியவில்லை.. தன் தேகம் இவனை அந்த அளவு மயக்குகிறதா..? நம்பவே முடியவில்லை அவளால்..

அப்படி என்ன இருக்கிறது என்னுள்.. தலை தாழ்ந்து தன்னை பார்த்தாள்.. கிண்ணங்களாய் எடுப்பாய் கூர்மையாய் நிற்கும் அழகு.. அவளுக்கு பெரிய விஷயமாய் தெரியவில்லை.. அவன்தான் அலை பாய்கிறான்..

இது புது போதை.. திணறிப் போகிறாள் பத்மினி.. பெண்மைக்கான உணர்ச்சித் தூண்டல் புள்ளிகளை அங்கே தான் நாணயங்களாக முத்திரைகளாக பதிக்கப் பட்டிருக்கிறதோ.. சொர்க்கமும் நரகமும் சேர்ந்த கலவை.. வலியும் இன்பமுமாக உணர்ச்சிகளின் சங்கமம்.. அவளை ஒரு வழியாக்கி விட்டான் உதய்..

இதழ்கள் கழுத்து இடுப்பு என ஒவ்வொன்றாய் துவங்கி இப்பொழுதுதான் மார்பு.. இதுவரை அவனிடம் காணாத வேகமும் மோகமும் கண்டுகொண்டாள் இன்று..

முத்தத்தின் ருசி தெரிந்த நாளிலிருந்து கணக்கில்லாமல் ஏகப்பட்ட முத்தங்களால் அவளை மூழ்கடித்தவன்.. புதிதாக வேறொரு சுவையை கண்டுகொண்டு இன்று தேன் குடித்த நரியாகிப் போனான்.. தேன் குடித்த நரி கள் குடித்த மந்தி எப்படி சொன்னாலும் தகும்.. போதையோ மயக்கமோ தீர்ந்த பாடில்லையே..

சின்னஞ்சிறிய முத்தம் தேகத்தை கிளர்ச்சியுறச் செய்து மோகத்தில் மூழ்கடித்து முடிவுவரை இழுத்துச் செல்லக் கூடிய வல்லமை கொண்டது..

ஆனால் இங்கே.. ஒவ்வொன்றையும் ஒரு யுகம் வரை அனுபவிக்க தோன்றுகிறதாம்..

ரசித்து ரசித்து ஒரு பெண் சிலையை ஒவ்வொரு பாகமாய் செதுக்குவதை போல்.. அனுபவித்து ஒரு ஓவியத்தை வரைவது போல்..

"இங்கிருந்து போங்க.. இல்லனா ரமணி..அம்மாவை கூப்பிடுவேன்.. ப்ச்.. சார்‌.. பிளீஸ்.." மிரட்டி உருட்டி தான் அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தாள்..

உணவருந்திக் கொண்டிருந்த பத்மினியை வினோதமாக பார்த்தார் ரமணியம்மாள்..

"ஆமா நீ ஏன் இன்னைக்கு அதிசயமா சுடிதார் போட்டுருக்க.." என்ற கேள்வியில் சட்டென புரையேறியதில் அவள் பார்வை முறைப்போடு உதய் கிருஷ்ணாவை தழுவியது.‌.

அவள் எதற்காக தன்னை பார்க்கிறாள் என்ற காரணத்தைப் புரிந்து கொண்டவன் குரலை செருமியபடி தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் உணவில் கண் பதித்தான்..

"என்ன பொண்ணே.. எதுக்காக அவனை பார்க்கற.. சுடிதார் போட சொல்லி இவன்தான் சொன்னானா..!!" ரமணியம்மா கேள்வியாக உதய் கிருஷ்ணனை பார்க்க..

"அம்மாஆஆ.. இப்போ அவ புடவை கட்டினாலும் சுடிதார் போட்டாலும் என்ன பிரச்சனை உங்களுக்கு..!!" என்று முறைத்தான் அவன்..

"இல்லடா புடவையில் அழகா இருந்தா..!!"

"ஏன் சுடிதார்ல அவ லட்சணமா இருக்காளா..?"

"அப்படி சொல்ல வரலை.. புடவை அவளுக்கு கச்சிதமா இருந்தது.. சுடிதாரும் அதே மாதிரி உடம்புக்கு ஏத்த மாதிரி நேர்த்தியா போட்டுகிட்டா பரவாயில்லை.. இது என்ன தொள தொளன்னு ரெண்டு பேர் நுழையற மாதிரி.. என்னவோ எனக்கு பிடிக்கல..!! நான் கூட இதை விட மார்டனா சுடிதார் போடுவேன் போலிருக்கு.." ரமணியம்மாள் அதிருப்தியாக உதட்டை சுழிக்க..

"என்கிட்டயும் சரியான அளவுல சுடிதார் இருக்கும்மா.. ஆனாலும் இப்ப போட முடியல.." என்று விட்டு மீண்டும் உதய் கிருஷ்ணாவை பார்த்தாள்..

"ஏன் போட முடியலை.."

"அம்மா.. துருவி துருவி கேள்வி கேட்டுகிட்டே இருப்பீங்களா.. முதல்ல சாப்பிடுங்க..!!" உதய்யின் அதட்டலுக்கு பிறகு "அவளை கேட்டா இவனுக்கு ஏன் கோபம் வருதாம்" என்று முணுமுணுத்துக் கொண்டே மூன்றாவது இட்லியை துண்டாக்கினார் ரமணியம்மாள்..

சமையல் அறையின் பாத்திரங்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் பத்மினி..

"ஆமா பத்மினி இந்த சுடிதார் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல.. ரொம்ப லூசா இருக்கு.. என்கிட்டே கொடு.. பக்கத்து வீட்ல ஒரு டெய்லர் இருக்காங்க.. அவங்க கிட்ட கொடுத்து ரெண்டு தையல் போட்டு டைட் பிடிச்சுக்கலாம்.."

"அடடா.. அம்மா நான்தான் சொன்னேனே.. என்கிட்ட ஃபிட்டா சுடிதார் இருக்கு.." பத்மினி நெளிந்தாள்..

"அப்புறம் எதுக்காக சோளக் கொள பொம்மைக்கு போடுற மாதிரி இந்த சுடிதார் போட்டுருக்க..?"

"அது.." என்று சற்று தயங்கியவள்.. "டைட்டா இன்னர் போட முடியல.. கொஞ்சம் லூசா போட்டுருக்கேன்.. அதுக்கேத்த மாதிரி டாப்ஸ் கொஞ்சம் லூசா போட்டுக்கிட்டா அப் நார்மலா தெரியாதுல.." என்றாள் புருவங்களை ஏற்றி சங்கடத்துடன்..

"என்னடியம்மா என்னென்னமோ சொல்ற..?" என்றார் புரியாதவராக..

"ஏன் லூசா போடணும்.. நல்லா ஃபிட்டா போட வேண்டியதுதானே.. கச்சிதமா எடுப்பா இந்த வயசுல போடாம வேற எந்த வயசுல போடறது.."

"அப்படி இல்லைம்மா.. ஸ்டமக் அப்செட் ஆகிடுச்சுன்னு மாத்திரை சாப்பிட்டேன் இல்லையா.. அது அலர்ஜி ஆயிடுச்சு.." என்றாள் சமாளிக்கத் தெரியாமல்..

பத்மினிக்கு சலிப்பாக இருந்தது.. கொஞ்சம் தளர்வாக ஒரு சுடிதார் போட எத்தனை விளக்கங்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது.. எல்லாம் இந்த மனுஷனால் வந்த வினை.. ஏதோ காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல் என்ற பழமொழியின் அர்த்தம் என்றுதான் விளங்கியது..

என்னவோ அடிக்கடி உனக்கு அலர்ஜி ஆகுது.. டாக்டர பாத்து தரவ்வா செக் பண்ணனும்.." ரமணியம்மாள் அலுத்து கொண்டார்..

"உங்க பையன் ஒழுங்கா இருந்தா எனக்கு அந்த அலர்ஜியும் வராது.." வாய் தவறி சொல்லிவிட்டு திருதிருவென விழித்தாள் பத்மினி..

"ஆமா.. அவன் உன்னை சரியா கவனிக்கிறதே இல்லை.. நல்லா பாத்துக்கிறேன் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு என்னத்த பார்த்துக்கிறானோ.. நான் அவனுக்கு அறிவுரை சொல்றேன்.. நீ கவலைப்படாதே..!!" ரமணியம்மாள் சொல்ல சரி என்று வேகமாக தலையசைத்தாள் பத்மினி..

ஒவ்வொரு விஷயத்திற்கும் ரமணியம்மாவிற்கு வாக்கிங் தோழிகள் பாடம் எடுக்க வேண்டும் போலிருக்கிறது..‌ இளம் வயதிலேயே கணவனை பிரிந்து உறவுகளை பிரிந்து வாழ்ந்தவருக்கு.. வாழ்க்கையின் சில நுணுக்கங்கள் தெரியவில்லை..

ஏதோ மன்மதனின் முதல் வாரிசு போல் தன்னிடம் முட்டி மோதியவன் இவன்தானா என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு கம்பீரமாக புறப்பட்டு தயாராகி வந்திருந்தான் உதய்.. கண்கள் இமைக்க மறந்தாள் பத்மினி..

"பத்மினி என் கூடவே ஆஃபீஸ் வந்துடு.." அவன் அழைத்த பிறகுதான் தெளிந்தாள்..

"இல்ல வேண்டாம் நானே போய்க்கறேன்..!!" அவசரமாக மறுத்து டிபன் பாக்ஸை எடுத்து தனது பையில் வைத்துக் கொண்டாள் அவள்..

"ஏன் பத்மினி அவன் கூடவே போ.. ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல தானே வேலை பாக்கறீங்க..!! எதுக்காக தனித்தனியா போகணும்.. சேர்ந்தே போங்க.. உனக்கு தான் உடம்பு சரியில்லையே.. எதுக்கு தேவையில்லாம அலையுற..?" ரமணியம்மா சொல்ல மறுக்க காரணம் தெரியாமல் ஏதோ உளறினாள் அவள்..

"இல்லம்மா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனா தேவையில்லாத பேச்சு வரும்.."

"என்ன பேச்சு வரும்.. நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டிதானே..!! என்ன உதய்.. பத்மினியோடு உனக்கு கல்யாணம் ஆனதை ஆபீஸ்ல சொல்லலயா.." ரமணியம்மாள் கேள்வியாக அவனைப் பார்த்தார்..

உதய கிருஷ்ணா யோசனையோடு புருவத்தை நீவினான்.. பத்மினி அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

"இப்ப வரைக்கும் எனக்கு சொல்லனும்னு தோணலம்மா.. ஒரு வேளை இவதான் என் பொண்டாட்டின்னு சொல்லணும்னு தோணுச்சுன்னா அப்ப சொல்லுவேன்.." அவன் வார்த்தைகளில் ரமணி அம்மாவிற்கு ரத்தக்கொதிப்பு ஏறியது..

பத்மினிக்கு இந்த பதிலில் வருத்தம்தான்.. ஆனாலும் எதிர்பார்த்த பதில்தானே..!! அவன் மனதிற்குள் தான் யார் என்ன உறவு முறை என்பதிலேயே குழப்பம் நீடிக்கும் போது.. மற்றவர்களிடம் அவளை என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்த முடியும்..

"என்னடா இது.. ஒரே ஆபீஸ்ல வேலை செய்றீங்க.. புருஷன் பொண்டாட்டின்னு யாருக்குமே தெரியாதுன்னு சொன்னா நல்லாவா இருக்கு..!!" ரமணி தன் குரலை உயர்த்த பத்மினி அவரை அமைதிப் படுத்தினாள்..

"ரமணியம்மா கொஞ்சம் அமைதியா இருங்க.. எல்லாத்தையும் சட்டுன்னு உடனடியா சொல்லிட முடியாது.. கொஞ்ச நாள் போகட்டும்.. எங்களுக்குள் ஒரு புரிதல் வரட்டும்.. அப்புறம் சந்தோஷமா நாங்க எல்லார் முன்னாடியும் எங்களை அறிமுகப்படுத்திக்குவோம்.. இப்ப இதை பத்தி எந்த பேச்சும் வேண்டாம்.. நான் கிளம்பறேன்.." அவனுக்கு முன்பாக அவள் புறப்பட்டு சென்று விட்டாள்..

ரமணி அம்மா முறைத்துக் கொண்டிருக்க அதை பொருட்படுத்தாமல் தனக்கான உணவுப் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் உதய்.. அவள் ஆட்டோவில் ஏறும்வரை நின்று பார்த்தவன் ஆட்டோ சென்றபிறகுதான் தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினான்..

பத்மினி அலுவலகத்தில் காலடி கூட எடுத்து வைக்கவில்லை.. இகழ்ச்சி சிரிப்பும்.. சகிக்க முடியித கிசுகிசு பேச்சுக்களும் களைகட்ட துவங்கி விட்டன.. அனைவரது அலைபேசியிலும் அந்த போட்டோ.. அதை பார்த்து பார்த்து சிரித்தனர்..‌ ஆச்சரியப்பட்டனர்.. ஏசினர்.. முகம் சுளித்தனர்.. பொறாமை கண்களோடு பார்த்தனர்.. ஆபாசமாக பேசினர்..

"என்ன.. எப்பவும் முதுகு.. இடுப்பு தெரியற மாதிரிதானே புடவைதானே கட்டுவா.. இப்ப என்ன எதுவுமே தெரியாம தொளதொளன்னு சுடிதார் போட்டுட்டு வந்துருக்கா.."

"வெளிக்காயம் அதிகமாக இருக்குமோ..?"

"எப்படித்தான் கூச்சமே இல்லாம இவளால ஆஃபீஸ் வர முடியுதோ.. ச்சீ.." முகச்சுளிப்பும் ஜாடைமாடையான விமர்சனங்களும் அவளுக்கே தெரியாமல் அவளை பின்தொடர்ந்தன.. திவ்யா கூட முகம் கொடுத்து பேசவில்லை.. அவள் மட்டுமல்ல.. அவளோடு நெருக்கமாக இருந்த ஒரு சிலரும் ஒதுக்கத்தை கடைபிடிப்பதை உணர முடிந்தது அவளால்..

"யார் என்ன பேசினாலும் தனிமனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம் பத்மினி.. அது இல்லைனா நாம வாழறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.." திவ்யா மட்டும் மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றாள்.. பத்மினிக்கு ஒன்றும் புரியவில்லை.. ஒருவேளை நடராஜன் வந்திருப்பானோ என்ற ஐயம்..

இங்கே உதய் கிருஷ்ணா கேண்டின் உரிமையாளரை அழைத்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்..

"சாதாரண டீயில் இவ்வளவு குவாலிட்டி இஷ்யூ.. இதுல சாப்பாடு மட்டும் எப்படி தரமா இருக்கும்ன்னு நம்ப முடியும்.. காலையில ரெஃப்ரெஷ் ஆக டீ குடிச்ச ஆபீஸ் ஸ்டாஃப்க்கு ஃபுட் பாய்சன் ஆகியிருக்கு.. அந்த லட்சணத்துல இருக்கு உங்க கேண்டின் தயாரிப்பு.. இனிமே உங்களுக்கு இங்க காண்ட்ராக்ட் கிடையாது.." என்றான் கடுமையான குரலில்..

"சார் சார் ப்ளீஸ்.. தெரியாம நடந்து போச்சு.. இனிமே இப்படி நடக்காது.." அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்..

"இதுதான் லாஸ்ட் வார்னிங்.. குவாலிட்டி விஷயத்துல என்னிக்கும் நான் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன்.. நீங்க போகலாம்.." என்றபிறகு அவன் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு வெளியே வந்தார் அவர்..

"என்ன ஆச்சு.. ஏன் சார் கூப்பிட்டாரு.." திவாகர் நிறுத்தி காரணம் கேட்க விஷயத்தை சொன்னார் கேண்டின் உரிமையாளர்..

"பத்மினி மேடம்தான் டீ குடிச்சாங்க.. ஏதோ கம்பளைண்ட் செஞ்சிருப்பாங்க போலிருக்கு.. சார் கூப்ட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார்.. குவாலிட்டி விஷயத்தில் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்னு ஒரே திட்டு.."
கேண்டின் உரிமையாளர் நொந்து கொண்டார்..

"குவாலிட்டி விஷயத்திலா இல்ல பத்மினி விஷயத்திலா..?" திவாகரிடம் நக்கலான சிரிப்பு..

"என்னவோ..!! இந்த மாதிரி பொம்பளைங்க முதலாளியை கைக்குள்ள போட்டுக்கிட்டு நம்மள மாதிரி ஆளுங்க உசுர வாங்குதுங்க..‌" தூரத்தில் நின்றவர் வன்மத்தோடு பத்மினியை கண்களால் எரித்தபடி அங்கிருந்து சென்றிருந்தார்..

திவாகர் தாடையை தேய்த்தபடி வக்கிரம் தோய்த்த கண்களோடு பத்மினியை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் எழுந்து தனியாக வாஷ்ரூம் செல்ல அவனும் அவளை பின்தொடர்ந்து சென்றான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Oct 13, 2023
Messages
44
✍️😘💓💕❤️💝
 
New member
Joined
Jul 19, 2024
Messages
28
"எவ்வளவு நேரம்தான் கதவை தட்டறது.." உங்க ரெண்டு பேருக்கும் விவஸ்தையே கிடையாதா..?" ரமணியம்மா கோபமாக கத்தவும்.. உதய கிருஷ்ணாவும் பத்மினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

ரமணியம்மாவின் விழிகள் பத்மினியை ஊன்றி துளைக்க கணவனின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள் பத்மினி..

"சண்டை போடுறதுனா உங்க ரூமுக்கு போய் சண்டை போடுங்க.. என் ரூம்ல நின்னு என்ன சண்ட வேண்டி கிடக்கு..? ரமணியம்மாள் கேட்க உதய் விழித்தான்..

"அவ வேண்டாம்.. இத்தோட நிறுத்திக்கங்கன்னு கத்தறதும் நீ அமைதியா இரு.. இல்லைன்னா நடக்கறதே வேறன்னு நீ மிரட்டறதும்.. எதுவும் சரியில்லை உதய்.. உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. உடம்பு சரியில்லாத பொண்ணு.. அவகிட்ட அமைதியா பேசு.." ரமணியம்மா மூச்சு வாங்க இறைந்தார்..

"சரிம்மா.." தாடையை நீவி கொண்டே திரும்பி குறுகுறுப்பான விழிகளோடு பத்மினியை பார்த்தான் அவன்..

"இங்கிருந்து போங்க ரெண்டு பேரும்" என்று வழிவிட்டு நின்றார் ரமணியம்மா..

பத்மினி வேகமாக கிச்சனுக்குள் நடக்க அவளை பின்தொடர்ந்து சென்றான் உதய்..

அங்கேயும் பயங்கர வாக்குவாதம் நடப்பது போல் சத்தம்..

அவனுக்கு எதையும் அடித்து பறித்துதான் உதய்க்கு பழக்கம் போலிருக்கிறது..‌ ஜல்லிக்கட்டு காளை போல் அவளோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தான்.

"ஐயோ இதுங்க பிரச்சனை ஓயவே ஓயாது போலிருக்கே..!!" தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்தார் ரமணியம்மா..

உதய் முதுகு காட்டி நின்று கொண்டிருக்க.. "வேண்டாம்.. அப்புறம் நான் கத்துவேன்.. இதெல்லாம் சரியே இல்ல அமைதியா இருந்திடுங்க.." என்று அவனை எச்சரித்துக் கொண்டிருந்தாள் பத்மினி..

"என்னடா பண்ற..?" ரமணியம்மா அங்கேயும் வந்து விட்டார்..

"அம்மா.. !!" சட்டென திரும்பியவன் சங்கடத்தோடு பிடரியை வருடியபடி விழித்து நின்றான்..‌

"அடிக்கப் போறியா அந்த பொண்ண.. இதுக்குதான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சனா..?" ரமணியம்மா நெஞ்சி பிடித்துக் கொண்டு கண்களை உருட்டினார்..

"ஐயோ அம்மா அடிக்கல.. கடிக்க.. இல்ல குடிக்க..!!" தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து போனவனாய் உதடுகளை மடக்கி விழிகளை அழுத்தமாக மூடி திறந்தான் உதய்..

"டமஸ்டிக் வயலன்ஸ் தப்பு உதய்.. !!" ஒரு விரலை நீட்டி எச்சரித்தார் ரமணியம்மா..

"என்னது..?" உதய் பெரிதாக அதிர்ந்தான்.. இதெல்லாம் டமஸ்டிக் வையலன்சா.. இப்போதுதான் தெரிகிறது அவனுக்கு..

பத்மினி வாயை மூடி சிரித்தாள்..

"பத்மினி இவன் ஏதாவது அடாவடித்தனம் செஞ்சா என்கிட்ட சொல்லு.. நான் பாத்துக்கறேன்..!!"

"சரிம்மா.." அப்பாவியாக தலையசைத்தாள் பத்மினி..

"அம்மாஆஆ.." கடுப்போடு கத்தினான் அவன்..
"
வாயை மூடுடா.. பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியல.. அவளை கஷ்டப்படுத்தினா அப்புறம் தொலைச்சிடுவேன் படவா.." எனும்போதே அலைபேசி அழைத்திருக்க எடுத்து காதில் வைத்தார்..

"ஆமா வேணி.. என் புள்ள என் மருமக மேல பாயறான்.."

"அய்யோ.. அடிக்கப் பாயறான்.. எங்கிருந்துதான் இவ்வளவு கோபம் வருதோ..!!"

"கண்டிச்சு சொல்லிட்டேன் என் மருமகளை தொடக்கூடாதுன்னு.."

"ஐயோ அம்மா இதையெல்லாமா போன்ல சொல்லுவீங்க" தலையில் அடித்துக் கொண்டான் உதய்..

அவனை அலட்சியமாக பார்த்து உதட்டை சுழித்து விட்டு அலைபேசியில் மேலும் தொடர்ந்து பேசினார்.. எதிர்முனை தாக்குதலில்

"என்னது இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..!!"

"இப்ப எதுக்கு என்னை தேவையில்லாம திட்டுற.." கோபப்பட்டு ரமணியம்மா கத்த அங்கே என்ன சொல்லப்பட்டதோ.." திடுக்கிடும் பார்வையுடன் இருவரையும் பார்த்தார்..

பிறகு லேசான அசடு வழியும் புன்னகையோடு அங்கிருந்து தன்னறைக்கு சென்று விட்டார்..

"அவங்களுக்கு விவஸ்தை இல்லைன்னு சொன்னேன்.. கடைசில பாத்தா எனக்குதான் விவஸ்தையை இல்ல போலிருக்கு.." அலைபேசியில் புலம்பிக் கொண்டே செல்வது ஒன்றும் பாதியுமாக அவர்கள் காதுகளில் விழுந்தது..

உதவி செய்ய வந்த ரமணியம்மாள் விலகி சென்றுவிட.. புலியிடம் வசமாக சிக்கிக்கொண்ட மான் குட்டி போல் விழித்தாள் பத்மினி..

அவள் சேலையை இழுத்தபடி சமையல் கட்டு கதவை சாத்தி தாழிட்டிருந்தான் உதய்..
பாத்திரங்கள் உருளும் சத்தம்.. உள்ளாடை உத்திரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.. உயரமான அவன்தான் எடுத்து கொடுக்க வேண்டும்..

சமையலறையில் ஒரு விருந்து.. கனிகள் மட்டுமே உண்ணும் காட்டு மனிதன்..

பதினைந்து நிமிடங்களுக்கு பின் ஒரு கையால் அவன் கதவை திறந்த நேரத்தில்.. சமையல் மேடையில் அமர்ந்து உதய கிருஷ்ணாவை முறைத்த படி தன் புடவை முந்தானையை சரி செய்து கொண்டிருந்தாள் பத்மினி..

அங்கிருந்து அவள் இறங்க முற்பட தாழ்ப்பாளின் கைப்பிடியை பிடித்த மேனிக்கே அவள் பின்னந்தலையை தன்னோடு இழுத்து.. இதழோடு இதழ் இணைத்து முத்தமிட்டு கிறக்கத்தோடு அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் உதய்..

பத்மினிக்கு களைப்பாக இருந்தது.. மார்பு காம்புகளில் இதுவரை அனுபவித்திராத ஏதோ இனம் புரியாத வலி..

"இதுக்கு மேல என்கிட்ட ஒண்ணுமே இல்ல.. தயவு செஞ்சு என்னை விடுங்க..!!" மார்போடு சேலையை இழுத்துப் பிடித்துக் கொண்டு புருவங்களை அயர்வாக ஏற்றி இறக்கினாள்..

"யார் சொன்னா இல்லைன்னு..!! எல்லாம் உன்கிட்டதான் இருக்கு..!! என்னென்னவோ வச்சிருக்கியேடி.. எல்லாத்தையும் கண்டுபிடிக்க டீப்பா ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தணும் போலிருக்கே..!!" இதுவரை காணாத குறுகுறுப்போடு அவன் கண்கள் பத்மினியை கிறங்கடித்தன..‌

உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.. சொல்லத்தான் நினைத்தாள்.. சொல்ல முடியவில்லை.. தன் தேகம் இவனை அந்த அளவு மயக்குகிறதா..? நம்பவே முடியவில்லை அவளால்..

அப்படி என்ன இருக்கிறது இதில்.. தலை தாழ்ந்து தன்னை பார்த்தாள்.. கிண்ணங்களாய் எடுப்பாய் கூர்மையாய் நிற்கும் அழகு.. அவளுக்கு பெரிய விஷயமாய் தெரியவில்லை.. அவன்தான் அலை பாய்கிறான்..

இது புது போதை.. திணறிப் போகிறாள் பத்மினி.. பெண்மைக்கான உணர்ச்சித் தூண்டல் புள்ளிகளை அங்கே தான் நாணயங்களாக முத்திரைகளாக பதிக்கப் பட்டிருக்கிறதோ.. சொர்க்கமும் நரகமும் சேர்ந்த கலவை.. வலியும் இன்பமுமாக உணர்ச்சிகளின் சங்கமம்.. அவளை ஒரு வழியாகி விட்டான் உதய்..

இதழ்கள் கழுத்து இடுப்பு என ஒவ்வொன்றாய் துவங்கி இப்பொழுதுதான் மார்பு.. இதுவரை அவனிடம் காணாத வேகமும் மோகமும் கண்டுகொண்டாள் இன்று..

முத்தத்தின் ருசி தெரிந்த நாளிலிருந்து கணக்கில்லாமல் ஏகப்பட்ட முத்தங்களால் அவளை மூழ்கடித்தவன்.. புதிதாக வேறொரு சுவையை கண்டுகொண்டு இன்று தேன் குடித்த நரியாகிப் போனான்.. தேன் குடித்த நரி கள் குடித்த மந்தி எப்படி சொன்னாலும் தகும்.. போதையோ மயக்கமோ தீர்ந்த பாடில்லையே..

சின்னஞ்சிறிய முத்தம் தேகத்தை கிளர்ச்சியுறச் செய்து மோகத்தில் மூழ்கடித்து முடிவுவரை இழுத்துச் செல்லக் கூடிய வல்லமை கொண்டது..

ஆனால் இங்கே.. ஒவ்வொன்றையும் ஒரு யுகம் வரை அனுபவிக்க தோன்றுகிறதாம்..

ரசித்து ரசித்து ஒரு பெண் சிலையை ஒவ்வொரு பாகமாய் செதுக்குவதை போல்.. அனுபவித்து ஒரு ஓவியத்தை வரைவது போல்..

"இங்கிருந்து போங்க.. இல்லனா ரமணி..அம்மாவை கூப்பிடுவேன்.. ப்ச்.. சார்‌.. பிளீஸ்.." மிரட்டி உருட்டி தான் அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தாள்..

உணவருந்திக் கொண்டிருந்த பத்மினியை வினோதமாக பார்த்தார் ரமணியம்மாள்..

"ஆமா நீ ஏன் இன்னைக்கு அதிசயமா சுடிதார் போட்டுருக்க.." என்ற கேள்வியில் சட்டென புரையேறியதில் அவள் பார்வை முறைப்போடு உதய் கிருஷ்ணாவை தழுவியது.‌.

அவள் எதற்காக தன்னை பார்க்கிறாள் என்ற காரணத்தைப் புரிந்து கொண்டவன் குரலை செருமியபடி தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் உணவில் கண் பதித்தான்..

"என்ன பொண்ணே.. எதுக்காக அவனை பார்க்கற.. சுடிதார் போட சொல்லி இவன்தான் சொன்னானா..!!" ரமணியம்மா கேள்வியாக உதய் கிருஷ்ணனை பார்க்க..

"அம்மாஆஆ.. இப்போ அவ புடவை கட்டினாலும் சுடிதார் போட்டாலும் என்ன பிரச்சனை உங்களுக்கு..!!" என்று முறைத்தான் அவன்..

"இல்லடா புடவையில் அழகா இருந்தா..!!"

"என் சுடிதார்ல அவ லட்சணமா இருக்காளா..?"

"அப்படி சொல்ல வரலை.. புடவை அவளுக்கு கச்சிதமா இருந்தது.. சுடிதாரும் அதே மாதிரி உடம்புக்கு ஏத்த மாதிரி நேர்த்தியா போட்டுகிட்டா பரவாயில்லை.. இது என்ன தொள தொளன்னு ரெண்டு பேர் நுழையற மாதிரி.. என்னவோ எனக்கு பிடிக்கல..!! நான் கூட இதை விட மார்டனா சுடிதார் போடுவேன் போலிருக்கு.." ரமணியம்மாள் அதிருப்தியாக உதட்டை சுழிக்க..

"என்கிட்டயும் சரியான அளவுல சுடிதார் இருக்கும்மா.. ஆனாலும் இப்ப போட முடியல.." என்று விட்டு மீண்டும் உதய் கிருஷ்ணாவை பார்த்தாள்..

"ஏன் போட முடியலை.."

"அம்மா.. துருவி துருவி கேள்வி கேட்டுகிட்டே இருப்பீங்களா.. முதல்ல சாப்பிடுங்க..!!" உதய்யின் அதட்டலுக்கு பிறகு "அவளை கேட்டா இவனுக்கு ஏன் கோபம் வருதாம்" என்று முணுமுணுத்துக் கொண்டே மூன்றாவது இட்லியை துண்டாக்கினார் ரமணியம்மாள்..

சமையல் அறையின் பாத்திரங்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் பத்மினி..

"ஆமா பத்மினி இந்த சுடிதார் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல.. ரொம்ப லூசா இருக்கு.. இப்படி கொடு.. பக்கத்து வீட்ல ஒரு டெய்லர் இருக்காங்க.. அவங்க கிட்ட கொடுத்து ரெண்டு தையல் போட்டு டைட் பிடிச்சுக்கலாம்.."

"ஐயோ அம்மா நான்தான் சொன்னேனே.. என்கிட்ட ஃபிட்டா சுடிதார் இருக்கு.." பத்மினி நெளிந்தாள்..

"அப்புறம் எதுக்காக சோலக் கொள பொம்மைக்கு போடுற மாதிரி இந்த சுடிதார் போட்டுருக்க..?"

"அது.." என்று சற்று தயங்கியவள்.. "டைட்டா இன்னர் போட முடியல.. கொஞ்சம் லூசா போட்டுருக்கேன்.. அதுக்கேத்த மாதிரி டாப்ஸ் கொஞ்சம் லூசா போட்டதால உங்களுங்கு அப் நார்மலா தெரியாது.." என்றாள் புருவங்களை ஏற்றி சங்கடத்துடன்..

"என்னடியம்மா என்னென்னமோ சொல்ற..?" என்றார் புரியாதவராக..

"ஏன் லூசா போடணும்.. நல்லா ஃபிட்டா போட வேண்டியதுதானே.. கச்சிதமா எடுப்பா இந்த வயசுல போடாம வேற எந்த வயசுல போடறது.."

"அப்படி இல்லைம்மா.. ஸ்டமக் அப்செட் ஆகிடுச்சுன்னு மாத்திரை சாப்பிட்டேன் இல்லையா.. அது அலர்ஜி ஆயிடுச்சு.." என்றாள் சமாளிக்கத் தெரியாமல்..

பத்மினிக்கு சலிப்பாக இருந்தது.. கொஞ்சம் தளர்வாக ஒரு சுடிதார் போட எத்தனை விளக்கங்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது.. எல்லாம் இந்த மனுஷனால் வந்த வினை.. ஏதோ காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல் என்ற பழமொழியின் அர்த்தம் என்றுதான் விளங்கியது..

என்னவோ அடிக்கடி உனக்கு அலர்ஜி ஆகுது.. டாக்டர பாத்து தரவ்வா செக் பண்ணனும்.." ரமணியம்மாள் அலுத்து கொண்டார்..

"உங்க பையன் ஒழுங்கா இருந்தா எனக்கு அந்த அலர்ஜியும் வராது.." வாய் தவறி சொல்லிவிட்டு திருதிருவென விழித்தாள் பத்மினி..

"ஆமா.. அவன் உன்னை சரியா கவனிக்கிறதே இல்லை.. நல்லா பாத்துக்கிறேன் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு என்னத்த பார்த்துக்கிறானோ.. நான் அவனுக்கு அறிவுரை சொல்றேன்.. நீ கவலைப்படாதே..!!" ரமணியம்மாள் சொல்ல சரி என்று வேகமாக தலையசைத்தாள் பத்மினி..

ஒவ்வொரு விஷயத்திற்கும் ரமணியம்மாவிற்கு வாக்கிங் தோழிகள் பாடம் எடுக்க வேண்டும் போலிருக்கிறது..‌ இளம் வயதிலேயே கணவனை பிரிந்து உறவுகளை பிரிந்து வாழ்ந்தவருக்கு.. வாழ்க்கையின் சில நுணுக்கங்கள் தெரியவில்லை..

"பத்மினி வா.. உன்னை ஆபீஸ்ல டிராப் பண்றேன்.." புறப்பட்டு தயாராகி வந்த உதய் அவளை அழைத்தான்..

"பத்மினி என் கூடவே ஆஃபீஸ் வந்துடு.."

"இல்ல வேண்டாம் நானே போய்க்கறேன்..!!" அவசரமாக மறுத்து டிபன் பாக்ஸை எடுத்து தனது பையில் வைத்துக் கொண்டாள் அவள்..

"ஏன் பத்மினி அவன் கூடவே போ.. ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல தானே வேலை பாக்கறீங்க..!! எதுக்காக தனித்தனியா போகணும்.. சேர்ந்தே போங்க.. உனக்கு தான் உடம்பு சரியில்லையே.. எதுக்கு தேவையில்லாம அலையுற..?" ரமணியம்மா சொல்ல மறுக்க காரணம் தெரியாமல் ஏதோ உளறினாள் அவள்..

"இல்லம்மி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனா தேவையில்லாத பேச்சு வரும்.."

"என்ன பேச்சு வரும்.. நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டிதானே..!! என் உதய்.. பத்மினியோடு உனக்கு கல்யாணம் ஆனதை ஆபீஸ்ல சொல்லலயா.." ரமணியம்மாள் கேள்வியாக அவனைப் பார்த்தார்..

உதய கிருஷ்ணா யோசனையோடு புருவத்தை நீவினான்.. பத்மினி அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்..

"இப்ப வரைக்கும் எனக்கு சொல்லனும்னு தோணலம்மா.. ஒரு வேளை இவன்தான் என் பொண்டாட்டின்னு சொல்லணும்னு தோணுச்சுன்னா அப்ப சொல்லுவேன்.." அவன் வார்த்தைகளில் ரமணி அம்மாவிற்கு ரத்தக்கொதிப்பு ஏறியது..

பத்மினிக்கு இந்த பதிலில் வருத்தம்தான்.. ஆனாலும் எதிர்பார்த்த பதில்தானே..!! அவன் மனதிற்குள் அவள் யார் என்ன உறவு முறை என்பதிலேயே குழப்பம் நீடிக்கும் போது.. மற்றவர்களிடம் அவளை என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்த முடியும்..

"என்னடா இது.. ஒரே ஆபீஸ்ல வேலை செய்றீங்க.. புருஷன் பொண்டாட்டின்னு யாருக்குமே தெரியாதுன்னு சொன்னா நல்லாவா இருக்கு..!!" அவர் தன் குரலை உயர்த்த பத்மினி அவரை அமைதிப் படுத்தினாள்..

"ரமணியம்மா கொஞ்சம் அமைதியா இருங்க.. எல்லாத்தையும் சட்டுன்னு உடனடியா சொல்லிட முடியாது.. கொஞ்ச நாள் போகட்டும்.. எங்களுக்குள் ஒரு புரிதல் வரட்டும்.. அப்புறம் சந்தோஷமா நாங்க எல்லார் முன்னாடியும் எங்களை அறிமுகப்படுத்திக்குவோம்.. இப்ப இதை பத்தி எந்த பேச்சும் வேண்டாம்.. நான் கிளம்பறேன்.." அவனுக்கு முன்பாக அவள் புறப்பட்டு சென்று விட்டாள்..

ரமணி அம்மா முறைத்துக் கொண்டிருக்க அதை பொருட்படுத்தாமல் தனக்கான உணவுப் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் உதய்.. அவள் ஆட்டோவில் ஏறும்வரை நின்று பார்த்தவன் ஆட்டோ சென்றபிறகுதான் தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினான்..

பத்மினி அலுவலகத்தில் காலடி கூட எடுத்து வைக்கவில்லை.. சிரிப்பும் கிசுகிசுகளும் ஆரம்பம் ஆகிவிட்டன.. அனைவரது அலைபேசியிலும் அந்த போட்டோ.. அதை பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்..‌ ஆச்சரியப்பட்டனர்.. சிரித்தனர்.. ஏசினர்.. முகம் சுளித்தனர்.. பொறாமை கண்களோடு பார்த்தனர்.. ஆபாசமாக பேசினர்..

"என்ன.. எப்பவும் முதுகு.. இடுப்பு தெரியற மாதிரிதானே புடவைதானே கட்டுவா.. இப்ப என்ன எதுவுமே தெரியாம தொளதொளன்னு சுடிதார் போட்டுட்டு வந்துருக்கா.."

"வெளிக்காயம் அதிகமாக இருக்குமோ..?"

"எப்படித்தான் கூச்சமே இல்லாம இவளால ஆஃபீஸ் வர முடியுதோ.. ச்சீ.." முகச்சுளிப்பும் ஜாடைமாடையான விமர்சனங்களும் அவளுக்கே தெரியாமல் அவளை பின்தொடர்ந்தன.. திவ்யா கூட முகம் கொடுத்து பேசவில்லை.. அவள் மட்டுமல்ல.. அவளோடு நெருக்கமாக இருந்த ஒரு சிலரும் ஒதுக்கத்தை கடைபிடிப்பதை உணர முடிந்தது அவளால்..

"யார் என்ன பேசினாலும் தனிமனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம் பத்மினி.. அது இல்லைனா நாம வாழறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.." திவ்யா மட்டும் மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றாள்.. பத்மினிக்கு ஒன்றும் புரியவில்லை.. ஒருவேளை நடரான் வந்திருப்பானோ என்ற ஐயம்..

இங்கே உதய் கிருஷ்ணா கேண்டின் உரிமையாளரை அழைத்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்..

"சாதாரண டீயில் இவ்வளவு குவாலிட்டி இஷ்யூ.. இதுல சாப்பாடு மட்டும் எப்படி தரமாக இருக்கும்ன்னு நம்ப முடியும்.. காலையில ரெஃப்ரெஷ் ஆக டீ குடிச்ச ஆபீஸ் ஸ்டாஃப்க்கு ஃபுட் பாய்சன் ஆகியிருக்கு.. அந்த லட்சணத்துல இருக்கு உங்க கேண்டின் தயாரிப்பு.. இனிமே உங்களுக்கு இங்க காண்ட்ராக்ட் கிடையாது.." என்றான் கடுமையான குரலில்..

"சார் சார் ப்ளீஸ்.. தெரியாம நடந்து போச்சு.. இனிமே இப்படி நடக்காது.." அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்..

"இதுதான் லாஸ்ட் வார்னிங்.. குவாலிட்டி விஷயத்துல என்னிக்கும் நான் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன்.. நீங்க போகலாம்.." என்றபிறகு அவன் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு வெளியே வந்தார் அவர்..

"என்ன ஆச்சு.. ஏன் சார் கூப்பிட்டாரு.." திவாகர் அவரிடம் காரணம் கேட்க விஷயத்தை சொன்னார் கேண்டின் உரிமையாளர்..

"பத்மினி மேடம்தான் டீ குடிச்சாங்க.. ஏதோ கம்பளைண்ட் செஞ்சிருப்பாங்க போலிருக்கு.. சார் கூப்ட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார்.. குவாலிட்டி விஷயத்தில் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்னு ஒரே திட்டு.."
கேண்டின் உரிமையாளர் நொந்து கொண்டார்..

"குவாலிட்டி விஷயத்திலா இல்ல பத்மினி விஷயத்திலா..?" திவாகரிடம் நக்கலான சிரிப்பு..

"என்னவோ..!! இந்த மாதிரி பொம்பளைங்க முதலாளியை கைக்குள்ள போட்டுக்கிட்டு நம்மள மாதிரி ஆளுங்க உசுர வாங்குதுங்க..‌" தூரத்தில் நின்றவர் வன்மத்தோடு பத்மினியை கண்களால் எரித்தபடி அங்கிருந்து சென்றிருந்தார்..

திவாகர் தாடையை தேய்த்தபடி வக்கிரம் தோய்த்த கண்களோடு பத்மினியை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் எழுந்து தனியாக வாஷ்ரூம் செல்ல அவனும் அவளை பின்தொடர்ந்து சென்றான்..

தொடரும்..
Superb
 
New member
Joined
Mar 19, 2024
Messages
10
Inemela Avaneesh vaya tharanthu wife nu solliduvan
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
140
Thivagar unaku iruku periya aapu uthai kitta next ud ill
 
Member
Joined
Jan 26, 2024
Messages
63
அருமையான பதிவு
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
பண்ணுறதெல்லம் பண்ணிட்டு பொண்டாட்டி nnu மட்டும் சொல்ல முடியலயாம்.....😡😡😡
திவாகர் நாள பிரச்சனை வரும்னு நினைச்சேன் ஆனால் இப்படி பின்தொடர்ந்து செல்லும் கீழ்த்தரமான புத்தியோட இருப்பான் என்று நினைக்கவில்லை......😡😡😡😡😡😡😡😡
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Sister.. Ramani amma ennai polave innocent ah irukanga..

Yes sister.. Food quality is very important.. Well said.. Especially tea and coffee.. Because these are the only things we are expecting from the office, and up to me, tea time is the only dedicated time we spend for ourselves..

Pinna marriage aanadha solla vendiyadhu dhane.. Okay.. So these people's unnecessary gossips and unparliamentary words will give him a situation to reveal their relationship..

Word choices are super, sister.. Several sentences can be quoted.. Well written.. Nice episode, sister.. Thank you...
 
Member
Joined
Jun 27, 2024
Messages
57
Nice epi. Waiting for next... ❤️💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕❤️❤️❤️❤️❤️
 
New member
Joined
Sep 5, 2024
Messages
13
பத்மினி இப்படி எல்லாத்துக்கும் பயந்தா எப்படிமா திருப்பி காயத்த கொடுத்தா வலி தானா தெரிய போகுது. எதே டொமஸ்டிக் வயலன்ஸா உதய் உங்கம்மாவ வாக்கிங் பிரண்ட்ஸ் கூட நாலு நாளைக்கு எங்கயாவது அனுப்பிடு இல்ல உன்னால ஒரு நல்லதும் பார்க்க முடியாது. பத்மினிய அகழ்வாராய்ச்சி பண்றதுக்கு முன்னாடி இரண்டு பேரும் உங்க மனத ஆராய்ச்சி பண்ணுங்க பேச்சு உரிமையா மாறினது கூட தெரியாம சுத்ததுங்க லூசுங்க.

பத்து வயதில் கல்யாணம் பண்ணி கணவன இழந்தாலும் திரும்ப கல்யாணம் பண்ணி வைக்காம கைம்பெண்ணா அபசகுணமா மூலையில் உட்கார வச்ச சமூகம் தான விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம்ம மனம் மாறலல்ல. கணவனை இழந்தவள் இத தவிர வேற என்ன பண்ணினா பத்மினி எவனோ ஒருவன் வந்து சொல்வான் அவளோட ஆடையில் ஆரம்பித்து உடல் வரை கூறு போட்டு பேசுதுங்க ஆண்கள் பண்ணினா கூட வக்கிர புத்தி சொல்லி ஒதுங்கி போலாம் பெண்களும் தான பண்றாங்க நாளைக் அவங்களுக்கு அந்த நிலை வந்தா ச்சீ என்ன மனுஷங்களோ இவங்க ? இதுங்கலுக்கெல்லாம் தண்டனை கொடுக்கறது யாரு. இந்த திவாகருக்கு பொண்டாட்டி புள்ளை வேற பத்மினி உதய் சினிமாக்கு வந்தா தவறான உறவு இவன் பொண்டாட்டிய அப்படி ஒருத்தன் நினைத்து கை வைத்தா சும்மா இருப்பானா? டீ விக்கறவன்ல இருந்து அத்தனை பேருக்கும் பெண் அப்படின்னா இளக்காரம் தான். இந்தா அடுத்த அசிங்கத்த பண்ண பொறுக்கி திவாகர் பின்னாடியே போகுதில்ல.

இங்க பத்மினிக்கு மட்டுமில்ல உதய் அவனோட குணமும் தான் பேசும் பொருளா இருக்கு காரணம் அவன் வயது அவனோட உடலும் மத்தவங்கள ஏங்க வைக்குது ஆண் பெண் பேதம் இல்லை பேசறவங்களுக்கு. பத்மினி மனதில் உதய் இல்லாவிட்டால் அவனை தொட அனுமதித்திருக்க மாட்டாள் ஏன்னா அவள நெருங்கின மத்த ஆண்கள என்ன பண்ணினா? அதேபோல உதய் மனதில் பத்மினி இல்லைன்னா அவள தொட்டிருக்க மாட்டான் அரவணைப்பு முத்தம்னு தான் ஆரம்பமே தவிர உடனே காமத்தில் ஆண்மைய நிலை நாட்டிடல பத்மினிய போல பல பெண்கள கடந்து வந்தவனால இவள கடந்து போக முடியல காரணம் மனதில் அவள் வந்ததால் இது புரியணும்.. எல்லாத்துக்கும் நேரம் வரணும் வரும் அந்த நேரம் வரும் போது இன்னைக்கு பேசின வாய் அப்ப என்ன பேசுது பார்க்கலாம்.
 
Top