- Joined
- Jan 10, 2023
- Messages
- 78
- Thread Author
- #1
"வணக்கம் டாக்டர்.. எப்படி இருக்கீங்க.. நான் ஆச்சார்யா.. ஞாபகம் இருக்கா..?"
"ஓஹ்.. ஆச்சார்யா.. எப்படி இருக்கீங்க.. உங்களை மறக்க முடியுமா..!! உங்க மகன் எப்படி இருக்கார்.. கொஞ்சமாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா..? இல்லைனா கிளினிக் கூட்டிட்டு.. வாங்க முழுசா ஒரு பரிசோதனை பண்ணிடலாம்..!!"
"இல்ல டாக்டர்.. என் மகன் இப்ப நிறைய மாறிட்டான்.. அவனுக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு.."
"கிரேட்.."
"மாறினதால கல்யாணம் பண்ணி வச்சீங்களா..!!"
"இல்ல டாக்டர்.. கல்யாணம் செஞ்சு வச்ச பிறகுதான்.. என் மருமகள் வந்த யோகம்.. முழுசா மனுஷனா மாறி நிக்கிறான் என் பையன்.."
"அப்படியா..?" அவர் குரலில் ஆச்சரியம்..
"ஆமா டாக்டர்.. நீங்க சொன்ன யோசனைப்படி அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன்.. அவனுக்குள்ள இப்போ நிறைய மாற்றங்கள்.. கோபதாபங்களோடு.. அன்பு பாசம் கருணைன்னு நீங்க சொன்ன மென்மையான உணர்வுகள் உள்ள இயல்பான மனுசனா மாறிட்டே வரான்.. என்கிட்ட தினமும் ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேசறான்.. போன வாரம் கூட புதுத் துணியெல்லாம் வாங்கி கொடுத்தான்.." ஆச்சார்யா மகனை எண்ணி சிலாகித்தார்.
"நம்பவே முடியல.. இயல்பிலேயே தனித்துவமான முரட்டு குணத்தோடு ஊறிப்போன ஒரு மனுஷனை முழுசா மாத்தறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம்.. எங்க மருத்துவத்துறையில் இதை மெடிக்கல் மிராக்கிள்ன்னு சொல்லுவாங்க.."
"என்னவோ சொல்றீங்க இதுக்கெல்லாம் காரணம் மகாலட்சுமி மாதிரி மருமக எங்க வீட்டுக்கு வந்த நேரம் தான்.. கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நீங்க கொடுத்த யோசனை தான் வெற்றி அடைஞ்சிருக்கு.. அதுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல தான் கூப்பிட்டேன்.."
"அட நீங்க வேற.. இந்த யோசனையை சொன்னதுல விமலா டாக்டர் போன் பண்ணி என்னை காய்ச்சி எடுத்துட்டாங்க.. அவங்க சொல்றதும் நியாயம் தானே.. கல்யாணம் செஞ்சு வச்சா எல்லாரும் மாறிடுவாங்க திருந்திடுவாங்கன்னு சொல்ல முடியாதே..!! ஒருவேளை அதற்கு எதிர்ப்பதமா விளைவுகள் வேறமாதிரி போய் அந்த பொண்ணோட வாழ்க்கை இன்னும் மோசமாகி கேள்விக்குறியாக நின்னுட கூடாது இல்லையா.. அதனால இனி கல்யாணம் செஞ்சுக்க சொல்லி யாருக்கும் பரிந்துரைக்க போறது இல்ல.."
"நீங்க சொல்றதும் சரிதான் டாக்டர்.. ஆனால் நல்லவேளை எங்க குரு விஷயத்துல அப்படி எதுவும் நடக்கல.. என் மருமக அவனை தங்கமா மாத்திட்டா.. எல்லாம் கடவுளின் அனுகிரகம் தான்.." என்றார் ஆச்சார்யா..
"ஆனா இன்னொரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்.."
"சொல்லுங்க டாக்டர்" ஆச்சார்யாவின் கண்கள் இடுங்கின..
"இது வெறும் எச்சரிக்கைதான்.." தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம்..
"என்ன டாக்டர் பீடிகையெல்லாம் பலமா இருக்கு.. பயமா இருக்கே..!!" ஆச்சார்யாவிற்கு படபடப்பு கூடியது..
"பயப்படாதீங்க.. நான் சொல்றதையும் கவனமா கேளுங்க.. உங்க மகனோட மூளையில் இருக்கும் மென்மையான பக்கங்கள் தூண்டப்பட்டு அவர் இப்ப நார்மலான மனுஷனா நடந்துக்கறதுக்கு காரணம் உங்க மருமகதான்.. சரியா..?"
"ஆமா டாக்டர்.."
"அப்போ.. அடிதடி மேல இருந்த அடிக்ஷன் ஃபுல்லா உங்க மருமக மேல திரும்பி இருக்கு அப்படித்தானே..?"
"புரியலையே டாக்டர்.."
"அதாவது அவர் மனைவிக்காக தன்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையை டோட்டலா சேஞ்ச் பண்ணி இருக்காருன்னா.. அவரோட ஒரே உலகம் அந்த பொண்ணுதான்.. அந்த பொண்ணோட கையில சின்ன குண்டூசி பட்டா கூட மனுஷன் தாங்க மாட்டார்.. அவர் மனைவியை யாராவது காயப்படுத்த நினைச்சா கூட அவங்களை துண்டு துண்டா வெட்டி போட்டுடுவார்.. அந்த பொண்ணு மேல அப்படி ஒரு முரட்டுத்தனமான காதல் இருக்கும்.."
"இது நல்லதா கெட்டதா டாக்டர்.." ஆச்சார்யா கலவரத்தோடு கேட்டார்..
பெருமூச்சு விட்டார் மருத்துவர்.. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காத வரைக்கும் அந்த பொண்ணு மேல அவர் வைச்சிருக்கிற அபரிமிதமான காதல் நல்லதுக்குதான்.. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.. அவர் மனைவியோட ஒட்டுமொத்த அன்பும் தனக்கே சொந்தமா இருக்கணும்னு நினைப்பாரு.. பிறக்கிற குழந்தைகள் கிட்ட கூட அவர் மனைவியோட அன்பை பங்கு போட்டுக்க விரும்ப மாட்டார்.."
"என்ன டாக்டர்.. இப்படி சொல்றீங்க..?"
"கவலைப்படாதீங்க இதெல்லாம் என் அனுமானத்தில் நான் கொடுக்கிற மேலோட்டமான வார்னிங்தான்.. உங்க மகன் இதிலிருந்து மாறுபட்டும் இருக்கலாம்.. அபரிமிதமான மாற்றங்கள் வரும்போது அதை தொடர்ந்து சின்னச் சின்ன பின் விளைவுகளும் இருக்கத்தானே செய்யும்.. எனக்கென்னவோ குருக்ஷேத்ராவை முழுசா மாத்தின அவருடைய புத்திசாலி மனைவி எதையும் சமாளிப்பாங்கன்னு தோணுது.."
ஆச்சார்யா நெஞ்சுக்குள் ஏதோ குழப்பம்.. "நல்லது நடந்தா சரி தான் டாக்டர்.. நான் வைக்கிறேன்.." அழைப்பை துண்டித்தவருக்கு இதயத்தினுள் இனம் புரியாத கிலி பரவியது..
அப்படி ஒன்றும் டாக்டர் இல்லாததை சொல்லிவிடவில்லை.. அன்பரசி மீது தன்மகன் வைத்திருக்கும் வெறித்தனமான அன்பை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார் இவர்..
அவளுக்கு லேசாக காய்ச்சல் என்றாலும் இவனுக்கு தான் பைத்தியம் பிடிக்கிறது.. குறுக்கும் நெடுக்கமாக நடந்து வீட்டையே ஒரு வழி செய்து.. அப்பப்பா.. அந்த மாதாந்திர தொந்தரவு வரும் நாட்களில் அவளையும் மீறி அவன் செய்த ரகளைகள்..
"கிழவி.. அவளுக்கு வயிறு வலிக்குதாம்..!! ஏதோ கசாயம் வைத்து கொடுப்பியே.. ஒவ்வொரு வாட்டியும் அதை நான் சொல்லனுமா.. அப்படி என்னத்த கிழிக்கிற.." அவன் கண்கள் தேவையில்லாமல் நீர்த்து போயிருக்கும்..
அந்த நாட்களில் அவளை விட்டு நகரவே மாட்டான்..
முதல் நாள் சில மணி நேரங்கள் ஓய்வில் இருப்பாள்.. அவள் ஓய்வெடுப்பது பிரச்சனை இல்லை.. அவளுக்கு வலிக்கிறதாம்.. அதுதான் பிரச்சினை..
"இந்த எழவெடுத்த வயிறு வலி வராமல் உனக்கு பீரியட்ஸ் வரவே வராதா..!! அந்த வீணா போன டாக்டரம்மா.. இதெல்லாம் இயற்கை.. வலிக்கெல்லாம் மருந்து தர முடியாதுன்னு சொல்லுது.. அந்தம்மா.. MBBS படிச்சதா எல்லாம் எம்பி எம்பி படிச்சுதா.."
"அவங்கள ஏன் திட்டுறீங்க.. அவங்க சொன்னது மாதிரி இதெல்லாம் இயற்கைதான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் சரியா போயிடும்.. இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை சாப்பிட்டால் பின்னாடி பெரிய பிரச்சனையாகிடும் அப்படி ஒன்னும் வலியும் இல்லையே.."
"அப்புறம் ஏன் உதட்டை கடிக்கிற.." நெஞ்சை நீவிக் கொண்டே அவள் முக பாவனைகளை அவதானிப்பான்..
"இப்போ எதுக்கு கண்ணு கலங்குது.. ஏன்டி நெளியற.. காலை எதுக்காக மடக்கி வச்சிருக்க.. ரொம்ப வலிக்குதா.. வாய் திறந்து ஏதாவது சொல்லேன்.. ஏன்டி பேசவே மாட்டேங்கற.. அம்பு.." என அவளை உலுக்குவான்..
"என்னடா.. பிரச்சினை உனக்கு.. ஏண்டா என்னை சித்திரவதை பண்ற..?" இயலாமையோடு கேட்டால் சிறிது நேரம் அமைதியாக இருப்பான்.. அவள் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தால் இப்படித்தான் மரியாதை இல்லாமல் வார்த்தைகள் வரும்..
"அம்பு.. வயித்துல வாட்டர் பேக் ஒத்தடம் வச்சு விடவா.." கட்டில் அதிர தவழ்ந்து வந்து அவள் மேலே விழுவது போல் மண்டியிட்டு நிற்கும் போது உயிர் போய் உயிர் வரும்..
"யோவ் மரியாதையா போயிடு.. கடுப்பேத்தாத..!!"
"கைப்பேசி வீடியோக்களில் இந்த குட்டி யானைகள் பாகனிடம் அன்போடு முட்டி மோதி விளையாடுவதை பார்த்திருக்கிறாள்.." குழந்தை என்றாலும் அது உருவத்தில் ஓரளவு பெரியது தானே.. அன்போடு மேலே விழுந்தாலும் ஒல்லியான பாகனுக்கு மூச்சடைத்து வலிக்கத் தானே செய்யும்.. அப்படித்தான் இவன் அன்போடு செய்யும் காரியங்கள் கூட மூச்சடைக்க வைக்கிறது இந்த நேரத்தில்..
"என்னடி இந்த வாட்டி ரத்தப்போக்கு அதிகமா..? ரொம்ப டென்ஷனா தெரியுற.." மீண்டும் காதில் வந்து முணுமுணுத்து.. அவள் முறைப்போடு தலயணையை தூக்கி அவன் மீது அடித்த பிறகு தான் வெளியே வருவான்..
"வேலைக்கு போகலையா தம்பி.." ஆச்சார்யா கேட்டால் "அவளுக்கு உடம்பு சரியில்லைப்பா..!!" என்பான்.. அவர் சரிதான் என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்வார்..
மூன்று நாட்கள் அவள் களைப்பான முகம் நீங்கி புன்னகையோடு சிரிக்கும் வரை அங்கே இங்கே நகர்வதில்லை..
மருத்துவர் சொன்ன பிறகு அன்பரசி மீதான அவன் அதீத பிரியம் பயப்படுத்தத்தான் செய்கிறது.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற ரீதியில் தன்னை தேற்றி கொள்கிறார் ஆச்சார்யா..
ஆனால் அன்று மாலையே ஆளுக்கொரு திசையில் வெளியிலிருந்து நவகிரகங்கள் போல முகத்தை திருப்பிக் கொண்டு வந்தனர் கணவனும் மனைவியும்..
வடிவாம்பாள் தான் விஷயம் கேட்டு சொன்னாள்..
"ரெண்டு பேரும் கைகோர்த்து ரோட்டுல நடந்து போயிட்டே இருந்தாங்களாம்.. ஒரு கார்க்காரன் குறுக்க வந்து அன்பு பயந்து கத்தி.. அவ பயந்த முகத்தை பார்த்த உடனே குரு கொதிச்சு போய் கார் கண்ணாடியை உடைச்சு அந்த டிரைவரை வெளியே இழுத்து போட்டு அடிச்சு ஒரே அமர்க்களமாம்.."
"மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா ஐயோ கடவுளே..!!" ஆச்சார்யா நொந்து போனார்..
"அப்படி சொல்ல முடியாது ஐயா.. போனவாரம் குரு தம்பி வண்டியிலிருந்து இறங்கி ஃபோன் பேசிட்டு இருந்தப்போ.. ஏதோ பைக்காரன் வந்து இடிச்சிட்டதா சொல்லுச்சு.. கைவிரலில் கூட அடிபட்டு இருந்துச்சே.. அப்போ இவ்வளவு பெரிய பிரச்சனை பண்ணலையே.. சொல்லப்போனா பிரச்சனையே பண்ணல.. அன்னைக்கு அதுவும் தெரியாம நடந்த விபத்துதான்.. இன்னிக்கும் இதுவும் தெரியாமல் நடந்த விபத்து தான்.. ஆனா அடிபட்டது பொண்டாட்டிக்கு ஒன்னுன்னவுடனே ரொம்ப உக்கிரமாகிட்டார் ராசா.." வடிவு சொல்ல ஆச்சார்யா முகத்தில் யோசனை ரேகைகள்.. அன்புக்கு ஆபத்து என்றால் அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. என்று புரிகிறது.. அன்பு இல்லாமல் குருக்ஷேத்ராவால் ஒரு நொடி கூட வாழ இயலாது அதுவும் புரிகிறது..
ஜோடியாக வெளியே சென்றவர்கள் சண்டை போட்டுக் கொண்டுதான் வீடு வந்து சேர்ந்தனர்.. அறைக்குள் சென்ற கணவன் மனைவிக்குள் ஒரே வாக்குவாதம்.. தடால் புடால் சத்தம்.. பிறகு சத்தமே இல்லை.. அடுத்த நாள் காலையில்தான் கதவை திறந்து கொண்டு அன்பரசி வெளியே வந்தாள்..
"என்னம்மா.. ஒன்னும் பிரச்சினை இல்லையே.. நேத்து உன்னை பார்க்கவே முடியலையே.." வடிவு கவலையோடு கேட்டாள்..
"எங்கே.. என்னை விட்டாதானே..!!" அன்பு.. கடுப்போடு தலையை உலுக்கிக் கொண்டு சென்றாள்.. இரண்டு நாட்கள் பேசாமல் தான் இருந்தாள்.. அவன் தொண தொணப்பும் சீண்டி வம்பிழுக்கும் ரகளையும் வழக்கம் போல் வெளிப்படையாகவே நடந்தன.. மூன்றாம் நாள் இருவரும் ராசியாகிவிட்டனர்.. இப்படித்தான் சண்டையும் சமரசமுமாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.. ஆனால் ஆச்சார்யாவிற்கு தான் நெஞ்சோரம் சிறு பயம் குத்திக் கொண்டே இருக்கிறது..
அன்று ரைஸ் மில்லில்..
மேஜை மீது அமர்ந்து நோட்டுப் புத்தகத்தை பிரித்து வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவன்.. சட்டென கண்களை உருட்டி ஏதோ யோசித்தவனாக எதிரே அரிசி மூட்டையை சரி பார்த்து வேலையாட்களின் மூலம் அடுக்கிக் கொண்டிருந்த சதாசிவத்தை அழைத்தான்..
"யோவ்.."
"சதா.." என்று அழைக்க வந்தவன்.. சங்கோஜத்தோடு தலையை கோதியபடி..
"சார்.." என்று அழைத்துவிட்டு.. தலையசைத்து "இது சரிவராது" என்று பக்கத்தில் இருந்தவனை அழைத்தான்..
"டேய்.. இங்க வாடா.."
"அண்ணே..!!"
"பொண்டாட்டியோட அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க.."
"மாமா.."
"ஹ்ம்ம்.. யோவ்.." என்று விட்டு நாக்கை கடித்து.. "மாமா.. மாமா.." முதல் முறை என்பதால் சங்கடத்தோடு அழைத்தான் அவன்..
"மாப்பிள்ளை.." அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தார்..
"அது.. ஒன்னும்.. இல்ல.." என்று தாடையை தேய்த்தவாறு தயக்கத்தோடு மேஜையிலிருந்து இறங்கியவன் வேறெங்கோ பார்த்தவாறு சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு "ஆமா உங்க பொண்ணுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்.." என்று கேட்டிருந்தான்..
கண்களில் வியப்புடன் "சாப்பிடற பொருளை பத்தியா கேக்கறீங்க" மாப்பிள்ளை என்றார் அவர்..
"ஆமா.. உங்க பொண்ணு என்னைத்தானே விரும்பி சாப்பிடுவா.." முணுமுணுத்தவன் அவள் விரும்பி சுவைக்கும் பாகத்தை எண்ணி இரத்தம் சூடேறி மனைவி மீதான ஆசை குமிழியிட்டது.. உடனே அவளை பார்க்கத் துடிப்பு..
"அப்படி இல்ல மாமா.. பொதுவா என்னை பிடிக்கும்ன்னு" கேட்டேன்.." வார்த்தைகளில் அவன் கொடுக்கும் மரியாதைக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை..
"அது.. பபில்ஸ்.."
கண்கள் இடுங்கினான் அவன்.. "அப்படின்னா.."
"இந்த சோப்பு நுரையில.. உப்ப்.. உப்ப்.. ன்னு ஊதி முட்டை விடுவாங்ககளே.."
"ஹான்.. இந்த சின்ன குழந்தைங்க எல்லாம் ரோட்ல காத்துல முட்டை விட்டு விளையாடுவாங்களே அதுவா..?" அவரைப் போன்ற அதே மாடுலேஷனில் கேட்டான்..
"அதே.. அதேதான்.. அடிக்கடி வாங்கிட்டு சின்ன பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவா.. வயசுக்கேத்த மாதிரி நடந்துக்கோனு எவ்வளவு திட்டினாலும் கேட்கிறதே இல்லை.. ஆனா வளர்ந்தாலும் என் பொண்ணோட குழந்தைத்தனம் இன்னும் மாறவே இல்லை மாப்பிள்ளை.." அவர் மகளை நினைத்து சிலாகிக்க
"சரிதான்.." பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு எங்கோ பார்த்தபடி சொன்னான் குரு.. சதாசிவம் போய்விட்டார்..
"ஆமா.. சின்ன குழந்தை.. இவளுக்கு பபுள்ஸ் வேற வாங்கி கொடுக்கணுமாக்கும்.. ஏதோ மல்லிகைப்பூ.. அல்வா.. புடவை கிளிப் நகை.. இந்த மாதிரி ஏதாவது பிடிக்கும்னு பார்த்தா.. இந்தாளு என்ன கிறுக்குத் தனமா உளறிட்டு போறாரு.. கோவமா இருக்காளே.. எதையாவது வாங்கி கொடுத்து தாஜா பண்ணலாம்னு பார்த்தேன்.. ம்ஹூம்.. இதையெல்லாம் வாங்கி கொடுத்தா நான்தான் கிறுக்கன் ஆகிடுவேன்.. பொண்ணு தான் லூசுன்னு பார்த்தா அப்பனும் லூசா இருக்காப்ல.." இதழ் குவித்து ஊதியப்படி சாவியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டான்..
வீட்டுக்கு வந்த அடுத்த கணம் செருப்பை மூலைக்கொன்றாக கழட்டி வீசி "அம்பு.. அம்பு.. அம்பு.. ஏய்.. அம்பே.." வழக்கம்போல் என்றும் அன்பு புராணம்.. ஆர்வமும் எதிர்பார்ப்புமாக அவன் குரல்..
"உன்னோட அன்பு.. அவ சினேகிதி வீட்டுல ஏதோ விசேஷமாம்.. உன் அப்பா கிட்ட சொல்லிட்டு போயிருக்கா.. வர்றநேரம் தான்.. காப்பி கலந்து எடுத்துட்டு வரவா.." வடிவு கேட்டாள்..
அன்பு வீட்டில் இல்லையா.. முகம் சுருங்கி விட்டது.. "என்கிட்ட சொல்லலையே..!!" கைபேசியை எடுத்து பரிசோதித்தான்..
"இன்னைக்கு காலையிலதான் அந்த பொண்ணு வந்து அழைச்சிட்டு போச்சு.. அன்பு உனக்கு போன் அடிச்சா.. நீ தான் எடுக்கல..!!" வடிவு விளக்கினாள்..
இடம் வலமாக நிலை கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தவனை கண்டு "என்ன தம்பி அஞ்சு நிமிஷம் அவ இல்லாம இருக்க முடியலையா உன்னால..? வடிவு கிண்டல் செய்ய
"ப்ச்.. இருக்க முடியாது.. இப்ப என்னங்கற.. என் கண் முன்னாடி நிக்காத.. எங்காச்சும் போய் தொலை.." அன்பு வீட்டில் இல்லாத கோபத்தை வடிவிடம் காட்டிவிட்டு ஏமாற்றத்துடன் வேகநடையோடு வீட்டின் பின்பக்கம் வந்து அமர்ந்தான்..
"அன்பு ஃபோன் எடு.." பற்களை கடித்து போனில் அழைத்துப் பார்த்தான்.. ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது..
ஃபோனை பாக்கெட்டில் வைத்துவிட்டு வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவன் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தான்.. சோப்பு நுரை ததும்பிய பிளாஸ்டிக் குழாய் வட்ட வட்டமாய் குமிழிகள் விடும் மூடியுடன் இணைக்கப்பட்டிருந்தது..
அன்பு எப்படி பபிள்ஸ் ஊதுவா.. அந்த குழாயை திறந்து சின்ன சின்ன துளைகளில் படிந்திருந்த சோப்பு நுரைகளை குமிழிகளாக ஊதி தள்ளினான்.. வட்ட வட்டமாக சோப்பு குமிழிகள் காற்றில் பறந்தன.. அன்பு இதையெல்லாம் பார்த்தால் அவள் கண்கள் எப்படி பளிச்சிடும்.. இதழ்கள் எப்படி புன்னகைக்கும்.. எப்படி கைகொட்டி மகிழ்ச்சியோடு ரசிப்பாள்.. பறக்கும் குமிழிகளை ஒவ்வொன்றாக உடைத்து எப்படி சிரிப்பாள்.. என கற்பனை செய்து.. நினைவுகளில் தோன்றிய அவள் முக பாவங்களை ரசித்துக் கொண்டிருந்தான் ..
ஆனால் அவன் அன்பு.. இந்நேரம் அந்தக் காசியின் கைப்பிடியில் அல்லவா சிக்கியிருந்தாள்..
நீண்ட மேடையில் மயக்க மருந்து உபயத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் அன்பு.. கை காலை அசைக்க முடியவில்லை.. ஆனால் சுற்றி ஒலித்துக் கொண்டிருந்த பேச்சு சத்தம் அவள் காதுகளில் தெளிவாக விழுந்தது..
"அண்ணே இந்த பொண்ணை என்ன செய்யப் போறீங்க கொல்லப் போறீங்களா..?"
"ச்சே.. ச்சே.. இவ்வளவு அழகான சிலையை எவனாவது உபயோகமில்லாம உடைச்சுப் போட நினைப்பானா.."
"அப்புறம்..?"
"அன்னைக்கு மார்க்கெட்ல அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்திட்டான்ல அவன்.. அந்த அசிங்கத்தை துடைக்க என் அவமானத்துக்கு பழி தீர்க்க..அவனோட பொண்டாட்டிய வச்சு நல்ல பாடம் கத்துக் கொடுக்கிறேன்.."
"இதனால அவன் என்னை கொன்னாலும் பரவாயில்லை.. இவளை முழுசா அனுபவிச்சு.. அலங்கோலமாக இவ புருஷன் கிட்ட ஒப்படைச்சு நான் பிச்சுத் தின்னு தூக்கிப் போட்ட மிச்சம்தான் உன் பொண்டாட்டின்னு அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து சொல்லி ஆங்காரமா சிரிக்கனும்.. அவமானத்தில அந்த குரு அவமானத்தில் கருகி போகணும்.."
"சும்மா சொல்லக்கூடாது வெண்ணையில செஞ்ச சிலை மாதிரி உருண்டு திரண்டு நல்லா வழுவழுன்னுதான் இருக்கா.. ஆனா மயக்கத்தில இருக்கிறது தான் கொஞ்சம் ஏமாற்றம்.. ப்ச் பரவாயில்ல.. அட்ஜஸ் பண்ணிக்கிறேன்.. நேரம் போய்ட்டே இருக்கு.."
"அண்ணே..!!" நின்றிருந்த இன்னொருவனின் கண்கள் ஆசையில் மின்னியது..
"முதல்ல நான்.. அப்புறம் நீ.." கோணல் சிரிப்போடு சொல்லிவிட்டு அன்பரசியை நெருங்கினான் காசி..
செவிப்பறையை தொட்ட இந்த குரல்கள் சிந்தனையில் ஊடுருவியது..
அன்பரசியின் இதயம் நடுங்கியது.. வாய்விட்டு கத்த தோன்றியது.. ஆனால் முடியவில்லை..
"கூடாது.. கூடவே கூடாது.. என் புருஷனுக்கு சொந்தமான என் தேகத்தை இன்னொருத்தன் தொட்டு என் பெண்மையை இழிவு படுத்தறதா.. ஒருக்காலும் இதை அனுமதிக்க மாட்டேன்.. என் புருஷனை அவமானப்பட விட மாட்டேன்.. என்னால என்ன செய்ய முடியும்.. கைய கால கூட அசைக்க முடியலையே..!! கைய காலத்தானே அசைக்க முடியல.. உயிரை விட முடியுமே.. என் மூச்சை நிறுத்திக்க முடியுமே.. இந்த மிருகம் என்னோட செத்த உடலை தான் தொட முடியும்.. அது இவனுக்கு வெற்றி இல்ல.. பெரும் தோல்வி.. இந்த கேவலமான பிறவி அசிங்கமா என் புருஷன் கிட்ட தோத்து போகட்டும்.." அவள் எண்ண ஓட்டங்கள் இப்படி..
"என்னடா.. இந்த பொண்ணு மூச்சு விடற மாதிரியே தெரியல.." நாசியில் கைவைத்து பரிசோதித்தான் காசி..
"ஐயோ செத்துட்டா போலிருக்கு.." இன்னொருவன் பயந்து சொன்னான்..
காசிக்கு பெரிதாக பதட்டமெல்லாம் ஒன்றும் இல்லை.. "அடச்சே.. இன்னும் கொஞ்ச நேரம் உயிரோடு இருந்திருக்க கூடாது..? என் வேலையை பக்குவமா முடிச்சிருப்பேனே.. இனி இந்த செத்த பொணத்தை எவன்டா தொடுவான்.. மானத்தோட போய் சேர்ந்து அவனை ஜெயிக்க வச்சுட்டா.. என் திட்டமெல்லாம் நாசமா போச்சு.." காசி ஏமாற்றத்தில் குமுறினான்..
அன்பரசி மூச்சு விடுவதை முற்றிலுமாக நிறுத்தி இருந்தாள்.. அவள் நினைவுகளும் தப்பிப் போயிருந்தது.. சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த குரல்கள் ஒடுங்கி நிசப்தத்தை உணர ஆரம்பித்து அவள் ஐம்புலன்களும் செயலற்று உணர்ச்சிகளை தொலைத்து அடங்கிப் போயிருந்தன..
தொடரும்..

Last edited: