- Joined
- Jan 10, 2023
- Messages
- 93
- Thread Author
- #1
"கமலினி.. உன்னோட சேர்த்து அஞ்சு பேருக்கு நைட் ஷிப்ட் அலாட் பண்ணி இருக்காங்க.." ஷீலா வந்து தகவல் சொல்ல அவள் முகம் அஷ்ட கோணலாக மாறிப்போனது..
"நைட் ஷிப்ட்டா..?"
"ஏன் இப்படி வாய திறக்கற..? ஓ புரியுது கல்யாணமான புது பொண்ணுக்கு நைட் ஷிப்ட் கஷ்டம்தான்.." ஷீலா வேடிக்கையான பேச்சில் மற்ற நர்சுகளும் அவளோடு சேர்ந்து சிரித்தனர்..
"ப்ச்.. விளையாடாதீங்க சிஸ்டர்.."
"நைட் ஷிப்ட்ல என்னடி கஷ்டம் உனக்கு..?"
"பகல் பரவாயில்ல.. ராத்திரியில வீட்லருந்து புறப்பட்டு வரணுமே..!!"
பழைய ஹாஸ்பிடலில் கூட நைட் ஷிப்ட் அவளுக்கு பழக்கமில்லை.. பாதுகாப்பில்லாத இந்த நாட்டில் தினமும் கேள்விப்படும் கொடுமையான செய்திகளால்.. பணிக்காக இரவு நேரத்தில் பிரயாணம் செய்து வேலைக்கு வர வேண்டுமென்பதே அவளுக்குள் கலக்கத்தை தந்திருந்தது..
"என்ன இப்படி சொல்லிட்ட.. சீஃப் டாக்டர்தான் காலையில பொம்மை மாதிரி உன்னை தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல விட்டுட்டு சாயங்காலம் கையோடு அழைச்சிட்டு போயிடறாரே.. அந்த மாதிரி இப்பவும்.. நைட்ல பிக்கப் பண்ணி டிராப் பண்ணிக்க சொல்லு.. இல்லைனா அவரையும் ஷிப்ட் மாத்திக்க சொல்லு.. உன் காதல் கணவர் உனக்காக இது கூட செய்ய மாட்டாரா என்ன..?"
காதல் கணவர் என்ற வார்த்தையே அவளுக்கு எரிச்சலை தர.. பெருமூச்செறிந்தவள்.. "வீட்லதான் கணவர் ஹாஸ்பிடல்ல இல்ல.." என்றாள் வெடுக்கென..
"ஆமா அதுவும் சரிதான்.. டாக்டர் தன்னோட விதிமுறைகளை யாருக்காகவும் தளர்த்திக்க மாட்டார்.. வேணும்னா நீ ஒரு முறை பேசி பாரு.. மனைவிக்காக தன்னோட விதிமுறைகளை விட்டுக் கொடுத்து டே ஷிப்ட் மாத்தி குடுக்க நிறைய வாய்ப்புண்டு.." கண்சிமிட்டி விஷம பார்வையோடு சொன்னார் ஷீலா..
"சிஸ்டர்..?"
"உனக்காக எவ்வளவோ மாறி இருக்கார் டாக்டர்.. இதை செய்ய மாட்டாரா என்ன..?"
"அதெல்லாம் செய்ய மாட்டார்.. கணவன் மனைவி இந்த உறவெல்லாம் ஹாஸ்பிடலுக்கு வெளியே தூக்கி போட்டுட்டு வந்துடனும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கார்.."
புருவங்களை உயர்த்தினாள் ஷீலா..
"அதானே பார்த்தேன்.. அப்படி மாறிட்டா அது டாக்டர் சூர்ய தேவ் இல்லையே..!!"
"சரி விடு.. அப்ப தினமும் ஹாஸ்பிடல் வாசல் வரை வந்து ட்ராப் பண்ணிட்டு காலையில வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லு.."
கமலிக்கு இந்த யோசனையும் பிடிக்கவில்லை..
ஒரு மனைவியாக கமலி அவனிடம் எந்த உரிமையும் எடுத்துக் கொண்டதில்லை.. எந்த உதவியும் கேட்டதுமில்லை..
தினமும் என்னை மருத்துவமனையில் ட்ராப் செய்துவிட்டு காலையில் பிக்கப் செய்து கொள்ளுங்கள் என்று உத்தரவு போடுமளவிற்கு அவனோடு நெருங்கி பழகவும் இல்லை..
இதையெல்லாம் தாண்டி.. இந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டரை தன் சொந்த காரியத்திற்காக தொந்தரவு செய்ய முடியாதே..!!
வீட்டிலிருந்து தனியாக புறப்பட்டு மருத்துவமனை வருமளவிற்கு தைரியமும் இல்லை..
பேசாமல் ஷிப்ட் மாத்த சொல்லி டாக்டரிடமே கேட்டு விடலாம்.. என்ற எண்ணத்தோடு அவனறைக்குள் நுழைந்தாள் கமலி..
"சொல்லு கமலி.." அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..
"டாக்டர் எனக்கு நைட் ஷிப்ட் அலாட் பண்ணி இருக்காங்க.."
"ம்ம்.."
"எனக்கு டே ஷிப்ட் மாத்தி கொடுக்க முடியுமா..?"
முக்கியமான கோப்புகளை சரி பார்த்து கையெழுத்திட்டு கொண்டிருந்தவன் பேனாவை சட்டை பாக்கெட்டில் வைத்த படி பார்வையை அவள் பக்கம் திருப்பினான்..
"ஏன்..?"
"இல்ல எனக்கு நைட் ஷிப்ட் கொஞ்சம் கஷ்டம்.."
"என்ன கஷ்டம்..?"
"வீட்ல இருந்து தனியா புறப்பட்டு வரணுமே..!!"
"அது உன்னோட பிரச்சனை.."
"ஆனா டாக்டர்.. இந்த ஊர் எனக்கு புதுசு.."
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. நைட் ஷிப்ட்ல ஒர்க் பண்ண வேண்டி இருக்கும்னு வேலையில சேரும்போது சொல்லி இருப்பாங்களே..?"
"சொன்னாங்க டாக்டர்.." அவள் குரல் இறங்கியது..
"அப்புறம் என்ன..? உங்க இஷ்டத்துக்கு ஷிப்ட் சேஞ்ச் பண்ண முடியாது.. அப்புறம் அத்தனை பேரும் வரிசையா வந்து நிப்பாங்க.. நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. கணவன் மனைவி உறவெல்லாம் ஹாஸ்பிடலுக்கு அந்த பக்கம்.. இங்க நீ ஒரு ஸ்டாஃப்.. அவ்வளவுதான்.. தேவையில்லாம என்கிட்ட சலுகை எடுத்துக்க கூடாது புரியுதா..?" ஆரம்பத்திலிருந்து இறுதிவரை குறையாத கடுமை அவன் குரலில் தொக்கி நின்றது..
இவர் குணம் தெரிந்தும் ஷிப்ட் மாற்ற சொல்லி பேச வந்தது என் தவறுதான்.. தன்னை தானே நொந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் கமலி..
வீட்டுக்குள் மட்டும் தான் கடிகாரத்தில் சின்ன முள்ளை துரத்தும் பெரிய முள் போல்.. கமலி கமலி என்று அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பதெல்லாம்..
மருத்துவமனையில் முழுநேர மருத்துவர் மட்டுமே.. வேறு எந்த எண்ணங்களுக்கும் இடமிருந்ததில்லை..
அப்படிப்பட்டவன் தனது பணி நேரம் குறித்து மாற்றுவதை பற்றி யோசிப்பான் என நினைத்தது பெருந்தவறுதான்.. இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் யோசிப்பான் என்று எண்ணியிருந்தாள்..
"நீ மட்டுமா இங்க வேலை செய்யற.. உன்னை மாதிரி எத்தனையோ பெண்கள் நைட் டூட்டி பாக்கலையா என்ன.. அவங்களும் ராத்திரி நேரத்துல பயணம் பண்ணி தான் இங்க வந்து வேலை செய்யறாங்க மனசுல தைரியம் இல்லாத பொண்ணுங்க வேலைக்கு வரவே கூடாது.."
சரியாகத்தான் சொல்கிறான் ஆனாலும் அந்த கடுமையான கண்கள்தான் அவள் மனதை சுட்டெரிக்கிறது..
வழக்கம்போல்.. அன்று மாலை அவனே கமலியை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றான்..
அப்படி திட்டிட்டு எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இவரால இயல்பா பேச முடியுது..!! அவளுக்குத்தான் சில சமயங்களில் கோபம் முட்டிக் கொண்டு வரும்..
ஆனால் வேலை நேரத்தில் ஒரு தலைமை மருத்துவர் பாரபட்சம் பாராமல் அப்படி நடந்து கொள்வதில் தவறொன்றும் இல்லையே..!! உள் மனம் இந்த நியாயத்தை புரிய வைக்கும் போது கோபத்தை ஓரங்கட்டி வைத்து இயல்பாகி விடுவாள்..
அன்று இரவு அவள் சமைக்கும் போது.. அலைபேசியை பார்த்தவாறு சமையல் மேடையில் சாய்ந்த படி நின்றிருந்தான் அவன்..
"புழுக்கமா இல்லையா..? போய் ஹால்ல உட்காருங்களேன்.."
"பரவாயில்ல இருக்கட்டும்" அவன் மொபைலிலிருந்து பார்வையை திருப்பவில்லை..
"போய் டிவி பாருங்களேன்.."
"வேண்டாம்.. நீ வேணும்னா உன் போன்ல ஏதாவது பாட்டு போட்டு விடு.."
இதழைக் குவித்து நீண்ட மூச்சு விட்டவள்.. செல்போனில் பாடலை ப்ளே செய்தாள்..
வருஷம் 16 படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது..
ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா..
"இது என்ன மூவி..?" கண்கள் இடுங்கியபடி அவன் கேட்க..
"வருஷம் 16.." என்றவள்.. காய்கறி குருமா கொதித்துக் கொண்டிருந்த அடுப்பை அணைத்துவிட்டு.. மறுபக்கம் கல்லை வைத்தாள்..
"நாளைக்கு நான் நைட் ஷிப் போயிடுவேன்.."
"ஐயோ எனக்கு தெரியாதே..?"
நிமிர்ந்து அவனை முறைத்தாள் கமலி..
"சமைச்சு வச்சுட்டு போறேன் நீங்களே போட்டு சாப்பிட்டுக்கோங்க.."
"சரி.."
"காலையில நான் வந்து கதவு தட்டும் போது எப்படி திறப்பீங்க.. உங்க தூக்கம் கெடாதா..?"
"டூப்ளிகேட் கீ ஒன்னு இருக்கு.. தேடி எடுத்து தரேன்..!!" பதில் சொன்னவன் இப்போது கூட ஃபோனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
"அப்போ.. நீங்க எந்த உதவியும் செய்ய மாட்டிங்க.. அப்படித்தானே..?" கமலிக்கு கடுப்பாக இருந்தது..
நீ எந்த உரிமையில் அவரிடம் உதவியை எதிர்பார்க்கிறாய் கமலி என்ற கேள்வியை அவள் தன்னுள் கேட்டுக் கொள்ளவே இல்லை..
வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி
நேத்து ராப்போது
சந்திரன் வந்த நேரம்
நீயும் இல்லாது மனதினில் பாரம்
மாலை வந்தாலே
மயங்குகிறேன் நானும்
மானே மைனாவே மஞ்சமிட வேணும்..
அவன் நிலையை சொல்வது போல் இந்த பாடல் அமைந்து போக.. கமலியை திரும்பி பார்த்தான் சூர்யதேவ்..
கல்லில் வெந்து கொண்டிருந்த சப்பாத்தியை திருப்பி போட்டபடி அவனைத்தான் பார்த்தாள் அவளும்..
இருவரும் அதன் பிறகு எதுவும் பேசிக்கொள்ளவில்லை..
ஒன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்குவதற்காக படுக்கையறைக்குள் நுழைந்தனர்..
"நாளைக்காவது கோலம் போடு.. வாசல் ரொம்ப வெறுமையா இருக்கு.." படுக்கையை சரி செய்தான் சூர்ய தேவ்..
"நைட் ஷிஃப் போய்ட்டா என்னால உங்க கூட ஜாகிங் வர முடியாது.."
"ஏன்.?". புருவங்கள் உயர்த்தியபடி அவன் நிமிர்ந்தான்..
"என்ன விளையாடறீங்களா..? நைட் ஷிப்ட் போயிட்டு வந்து.. எப்படி ஜாகிங் வர முடியும்.. தூங்க வேண்டாமா..? ராத்திரி பூரா முழிச்சிருந்தாலும் பகல்ல வேலை செய்ய உங்களால முடியும்.. என்னால் முடியாது.."
சூர்யதேவ் எதுவும் பேசாமல் கட்டிலில் அமர்ந்து கொண்டான்..
"நேத்து உன் கையை பிடிச்சுகிட்டதுனாலதான் என்னால கொஞ்ச நேரமாவது நிம்மதியா தூங்க முடிஞ்சுது.."
கமலி கட்டிலில் அமர்ந்தாள்..
"என் கையை நல்லா இறுக்கி பிடிச்சிட்டிங்க.. ரத்தம் கட்டி போச்சு.."
"அப்போ உன்னை கட்டி பிடிச்சிக்கவா..!! இன்னும் நல்லா தூக்கம் வரும்.."
கமலி அவனை அடிபட்ட பார்த்தாள்.. "டாக்டர் ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க..!!"
"வேற எப்படி பேசணும்..!! மனசுல என்ன தோணுதோ அதை எக்ஸ்பிரஸ் பண்ணிடனும்னு ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.."
"கண்டவன் சொல்றதைல்லாம் நீங்க கேட்காதீங்க.. நீங்க நீங்களா இருங்க" என்றாள் கமலி எரிச்சலோடு..
"பாவம்டா வருண் நீ.." என்று மனதுக்குள் சிரித்தவன்
"நான் நானாத்தான் இருக்கேன்.. சரி நீ உன் கையை கொடு.." என்றான் மீண்டும்..
"மாட்டேன்.. ரொம்ப முரட்டுத்தனமா பிடிக்கிறீங்க எனக்கு வலிக்குது.." அவள் முகத்தை சுருக்கினாள்..
"நீ ரொம்ப சாஃப்ட்டா இருக்க கமலி.. அதனாலதான் நான் தொட்டா கூட உன்னால தாங்க முடியல.." தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கினான்.. கட்டியணைத்த போது தொட்ட இடங்களின் மென்மை நெஞ்சுக்குள் குறுகுறுத்தது..
"பெண்கள் பொதுவா சாஃப்ட்டாதான் இருப்பாங்க.. பல தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த கைனகாலஜிஸ்ட்க்கு இது தெரியாதா என்ன.." கமலி கிண்டலாக கேட்க..
"நான் அப்படி ஒரு கோணத்தில் யாரையும் உணர்ந்தது இல்லை கமலி.. உன்கிட்ட மட்டும்தான் அந்த மென்மையை ஃபீல் பண்றேன்..!!" என்றான் அவன்..
கமலி அவனை ஏறிட்டு பார்த்தாள்..
சூர்ய தேவ்.. மெத்தையில் படுத்துக்கொண்டு இரு கைகளை தலைக்கு கொடுத்தபடி அவளைப் பார்த்தான்..
"சரி உன் கையை பிடிச்சுக்க வேண்டாம்.. கொஞ்ச நெருங்கி வந்து படு.. ஐ கேன் பீல் யூ.. அப்படியே தூங்கிடுவேன்..!!"
"நான் உங்க வாழ்க்கையில் வர்றதுக்கு முன்னாடி எப்படி தூங்கினீங்க டாக்டர்.."
"சிம்பிள்.. நீ என் வாழ்க்கையில் வர்றத்துக்கு முன்னாடி எனக்குள்ள எந்த மாற்றங்களும் இல்ல.. இந்த அவஸ்தையும் இல்ல.. இப்பதான் என் நிலைமை ரொம்ப மோசமா போயிட்டுது.. இந்த மாதிரியான பீலிங் எனக்குள்ள வராமலேயே இருந்திருக்கலாம்.." அவன் பேச்சில் விரக்தி..
"சாரி டாக்டர்..!! என்னால உங்க நிம்மதி போயிடுச்சு அப்படித்தானே.."
அவள் பக்கம் திரும்பி படுத்தான் சூர்ய தேவ்..
"உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது.. மூணு வேளையும் பசிக்கிறது ரொம்ப நல்ல விஷயம்.. செரிமான மண்டலம் பெருங்குடல் சிறுங்குடல் எல்லாம் நல்லா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.. ஆனா பசிச்சா மட்டும் போதாது.. பசியைத் தீர்க்கறதுக்கான சாப்பாடும் வேணும் இல்லையா..?"
மனம் கசந்தாள் கமலி..
"புரியுது டாக்டர்.. நீங்க உங்களுக்கு பொருத்தமான வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கலாம்.."
"வேற எந்த பொண்ணு கிட்டயும் இந்த மாதிரி உணர்வுகள் தோணலயே..!! எனக்கு நீ மட்டும் தான் வேணும் கமலி.. கொஞ்சம் நெருங்கி வாயேன்.."
மூச்சு விடும் தூரத்தில் சற்று நெருங்கி வந்து படுத்துக்கொண்டாள் கமலி.. வெகு நேரம் அவளை பார்த்தபடியே விழித்திருந்தான் சூர்யதேவ்..
டாக்டரின் ஸ்கேன் பார்வை அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் மிக நெருக்கத்தில் இந்த பார்வை அவள் கன்னங்களை சூடேற்றியது..
இருவரும் எப்போது உறங்கினார்கள் தெரியவில்லை..
காலையில் கமலி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.. சூர்ய தேவ் காபியை பருகியபடி கீழ் படிக்கட்டில் அமர்ந்திருந்தான்..
சின்ன சின்ன அடர் ரோஜா பூக்களை கொண்ட பிங்க் நிற புடவையில்.. தலையில் ஈரத் துண்டை சுற்றிக்கொண்டு.. சுருளான ஒற்றை முடிக் கற்றை மட்டும் கன்னத்தைத் தொட்டு முத்தமிட.. துடைத்து வைத்த வெள்ளி நிலா போல் பளிச்சென்று இருந்தாள் கமலி..
டாக்டர் கோலத்தை பார்க்கவில்லை.. அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
உதடுகள் அதிகமாக சிவப்பேறி இருப்பதாக தோன்றியது..
கை வளையல்.. காதில் சின்ன தோடு.. நெற்றியில் குட்டி ஸ்டிக்கர் பொட்டு.. என ஒவ்வொன்றையும் ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
கண்கள் கீழிறங்கி இடுப்பு மடிப்பில் படியும்போது.. உணர்ச்சிகள் கொப்பளித்து புரையேறி ஒரே இருமல்.
"என்ன ஆச்சு..?" கமலின் நிமிர்ந்தாள்..
"ஒன்னும் இல்ல.. உன் இடுப்பை பார்த்தேனா.. டெம்ட் ஆகிட்டேன்.." ஒளிவு மறைவில்லாமல் அப்படியே சொல்லித் தொலைத்தான் அவன்..
பதறி சேலையை இழுத்து விட்டுக் கொண்டாள் கமலி..
"வேணும்னு பாக்கல.. தற்செயலா கண்ணு அங்க போயிடுச்சு..!!" அவன் சொன்னதை கவனிக்காதவள் போல் எழுந்து உள்ளே சென்று விட்டாள்..
முதல் படிக்கட்டில் முழங்கையை ஊன்றி சாய்ந்து அமர்ந்திருந்தவன் நிதானமாக காபியை பருகி முடித்தான்..
கமலிக்கு நைட் ஷிப்ட் என்பதால் சூர்யதேவ் மட்டும் பகலில் மருத்துவமனைக்கு சென்று வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வீடு திரும்பி விட்டான்..
ஒன்பது மணிக்கு டியூட்டி.. எட்டு மணிக்கு எல்லாம் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும்..
"டாக்டர் டின்னர் சமைச்சு வச்சுட்டேன் போட்டு சாப்பிட்டுக்கோங்க.."
"ஏன் நீ சர்வ் பண்ண மாட்டியா.. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டு தானே பழக்கம்.."
"நான் நைட் ஷிப்ட் போகனும்.. மறந்துட்டீங்களா..?"
"ஓஹ்.. ரியலி ஐ ஃபர் காட்.. அப்ப கொஞ்சம் இயர்லியாவே டின்னர் சாப்பிடலாம்.."
"எனக்கு பசிக்கலையே..!!"
"அதான் மணி 7:45 ஆகிடுச்சே..!! நைட் டூயுட்டின்னா இதெல்லாம் பழகிக்கணும்.. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடக்கூடாது கமான்.." அவளை இழுத்துக் கொண்டு போய் சாப்பிட வைத்தான்..
"நேரமாச்சு.. டாக்டர் நான் வரேன்.." அவசர அவசரமாக தனது கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.. "கதவை பூட்டிக்கோங்க.." என்றவள்.. கேட்டை திறந்து கொண்டு வெளியே இறங்கி ஓடினாள்..
எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகளை கலவரமாக பார்த்துக் கொண்டே நடந்தாள்..
அவள் முன்பு கார் வந்து நின்றது..
ஆச்சரியத்தோடு அவள் குனிந்து பார்க்க.. கண்ணாடியை இறக்கியவன் ஏறு என்றான்..
"டாக்டர்..?"
"ஏறுடி..!!" அவன் அழுத்தமாகச் சொன்ன அடுத்த கணம் கதவை திறந்து கொண்டு உள்ளே ஏறி இருந்தாள்..
"உங்களுக்கேன் சிரமம்..? நானே போயிருப்பேன் இல்ல.."
"எனக்கென்ன சிரமம்.. தனியா வீட்ல இருந்து நான் என்ன செய்யப் போறேன்..!!" ஸ்டியரிங்கை திருப்பிக் கொண்டே சொன்னான் அவன்..
"என்ன சொல்றீங்க.. அப்ப நீங்களும் நைட் ஃபுல்லா ஆஸ்பிட்டல்ல இருக்க போறீங்களா..?"
"ம்ம்.. அப்படித்தான்.."
"ஏன் அப்படி..?" அவள் கவலையாக கேட்டாள்..
"எப்படியும் வீட்ல தூங்க போறதில்ல.. ஹாஸ்பிடல் வந்தா வேலையாவது பார்க்கலாமே.."
"இப்படி தூங்காம இருந்தீங்கன்னா உடம்பு கெட்டுப் போயிடும் டாக்டர்.."
"அது என்னோட ப்ராப்ளம் நீ உன் வேலையை மட்டும் பாரு.."
"ஏன் இப்படி சொல்றீங்க.. நீங்க மட்டும் என் மேல கேர் எடுத்துக்கறீங்க.. நான் உங்க மேல அக்கறை எடுத்துக்க கூடாதா.."
சூர்யதேவ் உதட்டை வளைத்தான்..
"தான் என்னோட அக்கறையை செயல்ல காட்டறேன்.. ஆனா நீ.. வார்த்தைகள்ல மட்டும் தான் காட்டற..?" அவன் பதில் சுருக்கென தைத்தது.
அதன் பின்பு கமலி பேசவில்லை..
இருவருமாக மருத்துவமனையை அடைந்திருந்தனர்..
அவள் வேலை பார்க்கும் வரை மருத்துவமனையில் தங்கி மறுநாள் காலையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான் சூர்யதேவ்..
தினமும் இந்த பழக்கம் தொடர்ந்தது..
இதற்கிடையில் பகலில் எமர்ஜென்சி கேஸ் என்றாலும் அவன் மருத்துவமனை வர வேண்டி இருந்தது.. இதனால் அவனுக்கு ஓய்வில்லாமல் போனதோடு உறக்கத் தட்டுப்பாடும் ஏற்படவே கமலி சூர்யாவின் உடல் நிலையை எண்ணி கவலைப்பட்டாள்..
"டாக்டர்.. என்னை டிராப் பண்ணிட்டு நீங்க வீட்டுக்கு போய் தூங்கலாமே.. எதுக்காக இப்படி கஷ்டப்படணும்.. என்னை ரொம்ப குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கறீங்க.."
"தனிமை ரொம்ப பொல்லாதது கமலி.. அந்த தண்டனையை மறுபடியும் அனுபவிக்க நான் தயாரா இல்லை.."
"ஐயோ நான் அப்படி சொல்ல வரல.. உங்களுக்கு ஓய்வு தேவை.."
"எனக்கு தேவை ஓய்வு இல்ல நீதான்..!!"
"டாக்டர்..?"
"உனக்கு புரியாது கமலி.. நீ போய் வேலையை பாரு..!!" என்றான்..
அவன் வார்த்தைகள் கமலியை சுட்டன.. யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தவள் அன்று வீட்டில் அவன் முன்பு வந்து நின்றாள்..
"எனக்கு புரியுது டாக்டர்..என்னை பத்தின உணர்வுகள் உங்க மனசை ஆட்டி படைச்சு தூக்கத்தை கெடுக்குதுன்னா உங்க பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குது.. ஏன்னா நீங்க என்னோட கணவர் மட்டுமில்ல ஒரு டாக்டர்.. உங்களோட சேவைக்காக எத்தனையோ தாய்மார்கள் காத்திருக்காங்க.. இந்த மருத்துவத் துறைக்கு நீங்க கண்டிப்பா வேணும்.. உங்களுக்கு நான் வேணும்..!! கமலி இழுத்து மூச்சு விட்டாள்..
"என்னால உங்க உடல்நிலை பாழாகறதை நான் பொறுத்துக்க முடியாது.."
"அதனால..?"
"நாம கணவன் மனைவியா வாழலாம் டாக்டர்.."
எழுந்து நின்று அவளை கூர்ந்து பார்த்தான் சூர்ய தேவ்
"நிஜமாத்தான் சொல்றியா..?"
"யெஸ்.. ஜஸ்ட் கோ வித் ஃப்ளோ.." தன் தயக்கங்களை மறைத்துக் கொண்டு அவள் சொன்ன அடுத்த கணம்.. கமலியின் உதடுகளை விழுங்கி இருந்தான் சூர்ய தேவ்..
தொடரும்..

Last edited: