• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 27

Member
Joined
Jul 19, 2024
Messages
69
"என்னது..? நீ உண்மையாவா சொல்ற.." கேஷவ் கண்கள் சுருக்கி அதிர்ச்சியுடன் கேட்க..

"ஆமா அங்கிள்..! உண்மையைத்தான் சொல்றேன்.. அந்த டாக்டர் நம்ம தேம்பாவணியை கொண்டு போய் அவனோட வீட்லதான் வச்சிருக்கான்.."

"ஆனா எதுக்காக இப்படி செய்யணும்.. ட்ரீட்மெண்ட் கொடுக்கறதா சொல்லித்தானே அழைச்சிட்டு போனான்.. ஒன்னு ஏதாவது ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல வைச்சு ட்ரீட்மென்ட் கொடுக்கணும் இல்லன்னா வெளிய எங்கயாவது கொண்டு போய் தங்க வெச்சிருக்கணும்.. எதுக்காக வீட்டில் கொண்டு போய் வச்சிருப்பான்..!"

"எனக்கும் தெரியலையே அங்கிள்.."

"உன் மட சாம்பிராணி மூளைக்கு என்னதான் தெரியும்.. உதவாத விஷயங்களை தவிர.. அன்னைக்கு நீ மட்டும் அவள கிளப்புக்கு கூட்டிட்டு போகாம இருந்திருந்தா தேவையில்லாம ஒருத்தன் நடுவுல வந்துருக்கவே மாட்டான்.. இப்ப இவனால நமக்கு வீண் தலைவலி.." கேஷவ் எரிச்சலாக பற்களை கடித்தான்..

"உங்க பொண்ணு அவனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லுவானு எனக்கென்ன ஜோசியமா தெரியும்.. இவ ஏற்கனவே அவனோட காண்டாக்ட்ல இருந்திருப்பா போலிருக்கு.." சத்யா கடைசி வார்த்தைகளை மட்டும் வாய்க்குள் முணுமுணுக்க.. அது தெளிவாக கேஷவ் காதுகளில் விழுந்தது..

"ஆமா உன்ன மாதிரி ஒருத்தன் புருஷனா கிடைச்சா அவ இன்னொருத்தனோடதான் காண்டாக்ட் வச்சுக்கணும்.." கேஷவ் இளக்காரத்தில் சத்யாவின் சுயமரியாதை அடி வாங்கியது.

"கொஞ்சமாவது மூளையை பயன்படுத்து.. தேம்பாவணி மறுபடி நம்மகிட்ட வந்தாகணும் அதுக்கு என்ன செய்யறதுன்னு யோசி.."

"நா வேணும்னா போய் அவளை கூட்டிட்டு வந்துடட்டுமா..?"

"நீ கூப்பிட்டதும் உன் கைய புடிச்சுகிட்டு அவ ஓடி வருவான்னு நினைப்போ..! இங்க பாரு நீ அவளை அடிச்சு கொடுமைப்படுத்தியிருக்க.. நானும் ஒரு நாளும் அவளுக்கு நல்ல தகப்பனா நடந்துக்கல.. சோ அவ வாயை திறந்தா நம்ம ரெண்டு பேருக்குமே டேஞ்சர்."

"அதுக்கு..?"

"இப்போதைக்கு அமைதியா இருக்கறதை தவிர வேறு வழியில்லை.. நிச்சயமா அவளா இங்க திரும்பி வரப்போறதில்லை.. முதல்ல டாக்டருக்கும் அவளுக்கும் இடையில என்ன ஓடுதுன்னு தெரிஞ்சுக்கணும்.. அப்புறம் சரியான நேரமா பார்த்து தேம்பாவணிகிட்ட மெல்ல பேசி நம்ம வழிக்கு கொண்டு வந்து இங்க அழைச்சிட்டு வரனும்.."

"அதுக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ..?"

"சீக்கிரமா எல்லாத்தையும் முடிக்கணும் சத்யா.. லீகலா எந்த பிராபர்ட்டி விற்கிறதானாலும் தேம்பாவணி நம்ம கூட இருக்க வேண்டியது அவசியம்..!"

"புரியுது அங்கிள்.."

கேஷவ் நிமிர்ந்து முறைத்தான்..

"புரிஞ்சா மட்டும் போதாது.. அவளை கண்காணிக்க ஆள் ஏற்பாடு பண்ணு..‌ அவ என்னென்ன செய்யறான்னு நமக்கு தெரியணும்.."

"ஓகே அங்கிள்..!" என்றவன் கேஷவ்வை குரூரமாக முறைத்தான்..

"இன்னைக்கு நெக்ஸ்ட் அவர் mental health awareness session.. அதாவது படிக்கற பசங்க நீங்க உங்க மனநலனை எப்படி ஆரோக்கியமா வச்சுக்கணும்னு அடுத்த ஒரு மணி நேரம் சைக்கியாட்ரிக் டாக்டர் வந்து விழிப்புணர்வு வகுப்பு எடுப்பார். எல்லாரும் அவர் சொல்றத கவனமா கேட்டுக்கோங்க புரிஞ்சுதா..?" பாடம் எடுத்து முடித்த பின் பேராசிரியர் இப்படி சொல்லிவிட்டு செல்ல..

"யார் வரப் போறாங்க..! சைக்கியாட்ரிக் டாக்டர்னா தலைமுடியெல்லாம் நரைச்சு தொண்டு கிழமா வருவாரோ.."

"கொஞ்சம் யங்கா ஸ்மார்ட்டா ஹேண்ட்சமா ஒரு டாக்டர் வந்தா சைட் அடிச்சுகிட்டே பாடத்தை கவனிக்கலாம்.."

"திடீர்னு என்ன மெண்டல் அவேர்னஸ் கிளாஸ்..!"

"இப்ப நிறைய காலேஜ்ல படிப்பு எக்ஸாம்ன்னு பிரஷர் தாங்காம மாணவர்கள் தற்கொலை பண்ணிக்கறாங்களே.. அதுக்காக நம்ம மனசை எப்படி சமநிலையில் வச்சுக்கணும்.. எப்படி தெளிவாக யோசிக்கணும்னு சொல்லி கொடுக்க போறாங்க போலிருக்கு.."

மாணவிகள் அவர்களுக்குள்ளாக பேசிக்கொள்ள சுற்றுமுற்றும் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் தேம்பா..

சிவந்த நிறமும் புன்னகைத்த முகமமாய்.. உயரமும் ஓங்குதாங்கான உடற்கட்டுமாய் உள்ளே நுழைந்தான் வருண்..

"ஆத்தாடி டாக்டர் செம ஸ்மார்ட்டா இருக்காருடி.."

"ஏய்.. இவரை தேம்பாவனியோட பார்த்திருக்கேன்.."

"அப்ப பரவாயில்ல போர் அடிக்காம கிளாஸ் போகும்.. பேசறது புரியலைன்னாலும் டாக்டரை சைட் அடிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருக்கலாம்.."

மாணவிகளுக்குள் சலசலப்பு..

மலங்க மலங்க விழித்தபடி வருணை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

காலையில கொண்டு வந்து விடும்போது கூட இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லலையே என்பதைப் போல் அவள் பார்வை..

வருணின் பார்வை அவளை இயல்பாக கடந்து சென்றது..

"ஹாய்‌ கேர்ள்ஸ்.. ஐம் டாக்டர் வரூண்.. சைக்யாட்ரிஸ்ட்.." என்று சுய அறிமுகத்தை ஆரம்பிக்க மாணவிகள் அவர்களுக்குள்ளாக பேசி சிரித்தனர்..

"நீங்க பேசி முடிச்சிட்டீங்கன்னா கொஞ்சம் என்னையும் கவனிக்கறீங்களா..?" வருண் புன்னகையோடு கேட்க மாணவிகள் பேச்சை நிறுத்திவிட்டு அவன் வார்த்தைகளுக்கு அட்டென்ஷன் கொடுத்து நிமிர்ந்து அமர்ந்தனர்..

"பட் நீங்க இப்படி சிரிச்சு பேசிக்கறது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.."

"உங்க சந்தோஷத்துக்கும் இந்த உற்சாகத்துக்கும் பெருசா என்ன காரணம்னு சொல்ல முடியுமா..?"

"எனி ஒன்..?"

"அழகான டாக்டரை பார்த்ததும் மனசுக்குள்ள ஆட்டோமெட்டிக்கா உற்சாகம் வருது சார்..!"

கூட்டத்துக்குள் ஒரு குரல் வர அனைவருமாக சிரித்தனர்..

"காம்ப்ளிமெண்ட்டுக்கு ரொம்ப நன்றி.. வேற ஏதாவது..?

"நல்ல காலேஜ்.. நல்ல படிப்பு.."

"வேற..?"

"நல்ல அப்பா அம்மா.. சந்தோஷமான சூழ்நிலை.."

"அப்புறம்.."

"பிரண்ட்ஸ்.."

"எக்ஸாக்ட்லி..! ஏன் யாருமே பணம் வசதி சாப்பாடு.. துணிமணிகள் இதையெல்லாம் சொல்லவே இல்ல.."

"இதெல்லாம் இல்லைனாலும் இருக்கிறதை வச்சு சந்தோஷமா வாழ முடியும் டாக்டர்.."

"கரெக்ட்.. அப்ப நீங்க சொன்னதை வச்சு பார்க்கும்போது.. அன்பு மட்டும் இருந்தா போதும்.. மனிதன் சந்தோஷமா வாழலாம்னு சொல்ல வர்றீங்க.."

"ஆமா டாக்டர்.."

"ஒருவேளை அந்த அன்பு ஒருத்தருக்கு மட்டும் மறுக்கப்பட்டால் அந்த மனுஷனோட மனநிலை என்னவா இருக்கும்.. இப்படி யோசிச்சு பாருங்க.. ஒரு பொண்ணுக்கு பயங்கரமான அழுத்தம்.. அவளுக்கு உங்கள மாதிரி நல்ல அப்பா அம்மா கிடைக்கல.. நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கல.. ஆறுதல் சொல்ல யாருமே இல்லைங்கும் போது அந்த பொண்ணோட மனநிலை என்னவா இருக்கும்.."

"ரொம்ப மோசமா இருக்கும் டாக்டர்.."

"ரொம்ப கடினமான சூழ்நிலைகள்ல பக்கத்துல ஆறுதல் சொல்ல கூட ஆளே இல்லைங்கும் போது அவ எவ்வளவு தவிச்சு போயிருப்பானு உங்களால புரிஞ்சுக்க முடியுதா..?"

"எஸ் டாக்டர்.. நிச்சயமா புரிஞ்சுக்க முடியுது.."

"கூட்டமா நண்பர்களா சந்தோஷமா இருக்கிறவங்க மத்தியில தனிமைப் படுத்தப்படக்கூடிய ஏதோ ஒருத்தர் இப்படித்தான் பாதிக்கப்படுறாங்க..! அப்படிப்பட்ட ஒருத்தரை அரவணைச்சு உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்னு சொல்ல வேண்டியது உங்களோட கடமை இல்லையா..?"

மாணவிகளுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேம்பாவணி கண்களின் நீர் நிறைந்து வருணை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"பொதுவா டிப்ரஷன் அதை சார்ந்த விளைவுகளும் இப்படித்தான் ஆரம்பிக்குது.. உலகத்திலேயே மிகக் கொடுமையான நோய் என்ன தெரியுமா.. தனிமை..! ஒருத்தர் தானா தேர்ந்தெடுத்துக்க சாய்ஸ் வேற.. ஆனா நாம ஒருத்தரை வெறுத்து ஒதுக்கி புறக்கணிக்கும் போது கட்டாயமாக்கப்படற தனிமை வேற.."

"அவங்க மனசால அனுபவிக்கற வேதனைக்கும் அந்த துன்பத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது யாரு..?"

"நாங்கதான் டாக்டர்.."

"உங்களுக்குள்ள யாராவது ஒருத்தர் உங்க அன்புக்காகவும் நட்புக்காகவும் ஏங்கி நிற்கலாம்.. அவங்களோட கரம் கோர்த்து சிநேகிதம் பாராட்ட வேண்டியது உங்க பொறுப்பு இல்லையா..! அதுல எவ்வளவு ரிஸ்க் இருந்தாலும் அவங்களுக்காக உதவி செய்ய வேண்டியது உங்க கடமை இல்லையா..?"

"கண்டிப்பா உதவி செய்யணும் டாக்டர்.."

"எத்தனையோ இடங்கள்ல மாணவர்கள் மன உளைச்சல்னால தவறான முடிவெடுப்பதை பார்த்திருக்கோம்.. அந்த நேரத்துல நமக்குள்ள வரக்கூடிய ஒரே உணர்வு.. ஒருவேளை நான் அவங்க பக்கத்துல இருந்திருந்தா நிச்சயம் ஆறுதல் சொல்லி அவங்களுக்கு தைரியம் தந்திருப்பேன்.. இப்படித்தானே யோசிக்கறோம்..ஆனா நம்ம பக்கத்துல எத்தனையோ பேர் நம்மளாலயே ஒதுக்கப்பட்டு அந்தக் கொடுமையை அனுபவிக்கிறாங்க.. அவங்கள நாம கண்டுக்கறதும் இல்லை.. பெருசா அவங்களோட பழகறதும் இல்லை.."

"பச்சாதாபமும் இரக்கமும் அவங்களுக்கு தேவையில்லை.. உங்க நட்பையும் அன்பையும்தான் அவங்களும் எதிர் பாக்கறாங்க.. அந்த மாதிரி ஜீவன்களுக்கு நிச்சயமா உங்களால உதவி செய்ய முடியும்.. உதவின்னு சொல்றத விட சக மனிதனுக்கு கொடுக்க வேண்டிய அட்டென்ஷன்னு சொல்லலாம்.."

"அப்படிப்பட்டவங்களை எப்படி டாக்டர் நாங்க தேடி கண்டுபிடிக்கறது.."

வருண் மென்மையாக சிரித்தான்..

"உங்க மனசு சொல்லும் அவங்களுக்கு நீங்க தேவைன்னு.. அந்த மாதிரி நேரத்துல அவங்க கூட இருங்க.. அவங்களை புரிஞ்சுக்கோங்க.. ஃப்ரெண்ட்லியா பழகுங்க.. அவங்களையும் உங்க குழுவுல சேர்த்துக்கோங்க.. ஜாலியா அரட்டை அடிங்க.. சிரிங்க சந்தோஷமா இருங்க.. இந்த கல்லூரி காலம் திரும்பி வராது.. உங்கள மாதிரியே தனிமைப்படுத்தப்பட்ட அந்த ஒருத்தருக்கும் இந்த மாதிரியான எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்க ரைட்ஸ் இருக்கு அப்படித்தானே..?"

"கண்டிப்பா டாக்டர்..!"

"அப்படி ஒருத்தரை பார்த்தா உங்களோடு சேர்த்துக்குவீங்களா..? அவங்களுக்கு சந்தோஷத்தை தருவீங்களா.."

"நிச்சயமா டாக்டர்.." கோரசாக பதில் வந்தது..

"எஸ் இதுதான் எனக்கு வேணும்..! மாத்திரைகளை விட பவர் ஃபுல்.. ஒரு மனுஷன் இன்னொரு மனிதனுக்கு தரக்கூடிய அந்த முக்கியத்துவம்.. காயம்பட்ட மனசுக்கு இதமான அன்பும் அக்கறையான நாலு வார்த்தைகளும் தான் மருந்து.."

"ஓகே.. த செஷன் இஸ் ஓவர்..! நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.. இவ்வளவு நேரம் நான் சொன்னதை அமைதியா கேட்டுட்டு இருந்த அனைத்து மாணவிகளுக்கும் என்னுடைய நன்றிகள்.." என்றவன் தலை சாய்த்து தேம்பாவணியை மட்டும் தனியாய் பார்த்தான்..

வருண் கண் சிமிட்டி சிரிக்க தேம்பாவணியோ அதிர்ந்து விழித்தாள்..

"தேங்க்யூ..!" ஒரு புன்னகையுடன் அங்கிருந்து விடைபெற்று சென்றுவிட..

மீண்டும் மாணவிகளிடையே வருண் டாக்டரின் அழகை பற்றிய ஆராதனைகள்..

கன்னத்தில் கை வைத்து புத்தகத்தின் பக்கங்களை திருப்பியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..

மதிய உணவு நேரம்..

ஆங்காங்கே குழுவாய் அமர்ந்து மாணவிகள் உண்டு கொண்டிருக்க.. சாரதா கொடுத்து அனுப்பியிருந்த உணவு டப்பாவை திறந்தாள் தேம்பாவணி..

பருப்பு உருண்டை குழம்பும் சாதமும்..

தும்பைப்பூ சாதமும் குழம்பின் மணமும் நாவில் எச்சில் ஊற செய்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுமை..

நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவளாய் சோற்றில் குழம்பை உற்றி பிசைந்து கொண்டிருக்க திடீரென ஏதோ ஒரு வித்தியாசம்..

நிமிர்ந்து அங்கிருந்தவர்களை பார்த்தாள்‌.

அவர்கள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போல் தோன்றியது.. தோன்றியதென்ன அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

"எல்லாரும் ஏன் இப்படி பாக்கறாங்க..?" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அனைவரும் தனது உணவு டப்பாவுடன் தேம்பாவணியை சுற்றி அமர்ந்தனர்..

அப்போதும் தேம்பாவணி அவர்களை பார்த்து மலங்க மலங்க விழிக்க..

"ஏய் தேம்பா.. என்ன குழம்பு வாசனை மூக்கை துளைக்குதே.. அங்க உட்காரவே முடியல.. நீ மட்டும் தனியா அமுக்கலாம்னு பாத்தியோ.." ஒருத்தி அவளாகவே குழம்பு டப்பாவை எடுத்து தன் சோற்றில் ஊற்றிக்கொள்ள..

"தேம்பா.. ஃபிரைட் ரைஸ் எங்க அம்மா செஞ்சது.. கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாரேன்.." என்று தேம்பாவணிக்கு ஊட்டி விட்டாள் இன்னொருத்தி..

"வாவ் செம டேஸ்ட்.. குழம்பு யாரு வச்சது தேம்பா.. ?"

"அ.. அ..அது..!" தேம்பாவணி திணறிக் கொண்டிருந்த நேரத்தில்..

"அவங்களை நான் ரொம்ப பாராட்டினதா சொல்லு.. எங்க அம்மாவும் பருப்பு உருண்டை குழம்பு வைப்பாங்க.. ஆனா இவ்வளவு டேஸ்டா இருந்ததே இல்ல.." என்றாள் அந்த ஒருத்தி சப்பு கொட்டியபடி..

"தேம்பா இனி நீ தனியா உக்காந்து சாப்பிட வேண்டாம்.. எல்லாம் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம்.. அப்புறம் எங்கள பார்த்து தனியா ஒதுங்கி போகாதே.. எங்க கூடவே இரு.. எதுவானாலும் சேர்ந்து ஃபேஸ் பண்ணிக்கலாம்.."

"நீ.. நீங்க எல்லாம் நெஜமாத்தான் சொல்றீங்களா.." நம்ப முடியாத பாவனையுடன் அவர்களை சுற்றி சுற்றி பார்த்தாள் தேம்பாவணி..

"உண்மையாத்தான் சொல்லுறோம்.. எங்களுக்கும் உன் கூட பழகணும்னு ரொம்ப ஆசை.. நீ எவ்ளோ ஸ்வீட் தெரியுமா.. அவ்ளோ க்யூட்டும் கூட.. ஆனா உங்க அப்பான்னா பயம்.. அதனாலதான் உன்னை நெருங்க தயங்கினோம்.. ஆனா இப்போ அந்த மாதிரி யோசிக்க முடியல..!"

"என் மேல இரக்கப்பட்டு பழகணும்னு நினைக்கிறீங்களா..?" முகம் சுருங்கி தலை குனிந்தாள் தேம்பாவணி..

"என்ன தேம்பா இப்படி பேசற.. இரக்கப்படற நிலையிலா நீ இருக்க.. நீ எவ்வளவு கெத்தான பொண்ணு தெரியுமா.. நாங்க யாருமே உன்கிட்ட பேசறது இல்ல.. ஆனா நீ சந்தோஷமாத்தான் இருக்க.. ஒருவேளை உன் நிலைமையில நாங்க இருந்திருந்தா இத்தனை நாள் தாக்கு பிடிச்சிருப்போமான்னு நினைச்சு கூட பாக்க முடியல.."

"நிஜமாவே என்னை உங்களுக்கெல்லாம் பிடிக்குமா" கண்களை விரித்தாள் தேம்பாவணி..

"உண்மையா உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உனக்கொரு விஷயம் தெரியாது.. நாங்க சொன்னா நம்புவியான்னு தெரியல.. நாங்க எல்லாரும் பொங்கல் ஃபெஸ்டிவல்க்கு கட்டிக்கிறதுக்காக குரூப் சாரி வாங்கினோம்.. உனக்கும் சேர்த்து தான் எடுத்திருந்தோம்.. ஆனா குடுக்க பயம்.. உன் அப்பா என்ன சொல்லுவாரோன்னு தயங்கி கடைசி வரைக்கும் அதை கொடுக்கவே இல்ல.. அன்னைக்கு நீ மட்டும் தனியா சுடிதார்ல நின்ன போது உன்னை விட அதிகமா நாங்க தான் வருத்தப்பட்டோம்.."

"விடுங்க.. பழசையெல்லாம் எதுக்கு பேசிகிட்டு..!"

"வருண் சார் வந்து சொன்னதுனாலதான் உன்னை தனிமைப்படுத்தி நாங்க எவ்வளவு நோகடிச்சிருக்கோம்னு எங்களுக்கு புரிஞ்சது.. இனிமே நாம எல்லாரும் ஒரே கேங்.. எங்க பிரண்ட்ஷிப்பை ஏத்துக்கோ தேம்பா..!"

தேம்பா உதடு கடித்து அழுகையை அடக்கியபடி சிரித்தாள்..

அந்தக் கண்ணீர் நண்பர்களுக்காக.. நட்புக்காக அவள் எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என்பதன் பிரதிபலிப்பு..

"எஸ்.. எஸ்..!" அனைவரையும் பார்த்து அவள் சிரிக்க..

ஹோஓஓஓஓ.. என்ற கூச்சல்..

அதன் பிறகென்ன.. கும்மாளமும் கொண்டாட்டமும்..

இதுவரை அவள் அனுபவித்திராத வேறு உலகம்..

நண்பர்கள் உலகம்..

அந்த உலகத்தை திருப்பி தந்தவன் வருண்..

நெஞ்சுக்கு மத்தியில் இரு கைகளையும் கோர்த்து கண்களை மூடினாள் தேம்பாவணி.. வருண் புருவங்களின் மத்தியில் நின்றான்..

மாலையில் தோழிகளோடு அரட்டை அடித்தபடி குதித்து குதித்து நடந்து கொண்டிருந்த தேம்பாவணியை மார்பின் குறுக்கே கைகட்டி காரில் சாய்ந்து ஸ்டைலாக நின்றபடி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..

"ஏய்.. உன்னோட ஹேண்ட்சம் டாக்டர் வந்தாச்சுடி.." தோழிகளின் கேலி..

"ஆமா அவரென்ன உன் லவ்வரா.. தினமும் பிக்கப் பண்ணி டிராப் பண்றாரு."

"ஒருவேளை புருஷனோ..!"

"பாய் ஃப்ரெண்ட்..?"

"அப்படி எதுவுமே இல்லைன்னா பேசாம அவரை எங்களுக்கு மாத்தி விட்டுடு.."

தோழிகளின் கிண்டல்களுக்கு பதில் சொல்லாமல்.. இருவரையும் இணைத்து பேசிய அந்த ஏகாந்த அனுபவத்தை அனுபவித்தபடி பார்வையை மட்டும் மையலாக வருண் மீது பதித்து நடந்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

தொடரும்..
Super
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
Surya va vida varuna romba pidichurum pola iruke......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Member
Joined
Jan 11, 2023
Messages
62

Super varu. Doctorey mudhala thiloku Full Stop vainga
 
Member
Joined
Jan 29, 2023
Messages
53
💖💗💖💗💖💗💖💖
 
Top