• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 28

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
83
கதவை திறந்ததும் ரமணியம்மாவின் முகத்தைக் கூட பாராமல் வேகமாக உள்ளே நுழைந்தாள் பத்மினி..

"ஃபங்ஷனெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா..!! உதய் வேலையை முடிச்சிட்டு அப்படியே உன்னை பிக்கப் பண்ணிக்கிறதா சொன்னான்.. ஃபோன் அடிச்சு ஒரு வார்த்தை நீ வந்துட்டதா சொல்லிடு.." அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க எதையும் காதில் வாங்காமல் தனது அறைக்குள் நுழைந்து டமாரென்று கதவை சாத்தியிருந்தாள் பத்மினி..

அவள் நடந்து கொண்ட விதம் வினோதமாக தோன்றியது ரமணியம்மாவிற்கு.. கதவைத் திறந்தவுடன் அத்தனை பணிச் சோர்வுக்கு மத்தியிலும் புன்னகை முகமாக சிரித்துக்கொண்டே.. உள்ளே நுழையும் பத்மினி இன்று மிஸ்ஸிங்..

சிரிக்க வேண்டாம்.. ஆனால் அவள் முகத்தில் தெரியும் அந்த இருளடைந்த தோற்றம் ஏதோ தவறென்று உணர்த்தியது..

சரி எப்படியும் காபியோடு தன்னருகே வந்து அமர்ந்து அவளாக பேசுவாள் என்று எதிர்பார்த்தபடி தன்னறைக்கு சென்று விட்டார் ரமணியம்மா..

இரண்டு மணி நேரங்கள் ஆன பின்னும் பத்மினி அறையை விட்டு வெளியே வரவில்லை..

"என்னாச்சு இவளுக்கு? ஒருவேளை உடம்பு சரியில்லையோ..!! மறுபடி வயிறு ஏதாவது கெட்டுப் போயிடுச்சா.." வந்தவுடனே இப்படி உள்ளே போய் படுக்கிற ஆள் இல்லையே இவ.. எறும்பு மாதிரி சுறுசுறுப்பா இருப்பாளே!!" என்ற யோசனையோடு வந்து கதவை தட்டினார்..

"பத்மினி.. அம்மா பத்மினி.. தூங்கறியா..!!" அவர் குரல் கொடுக்கவும் அந்த பக்கமிருந்து பதில் இல்லை..

"பத்மினிஇஇஇ" மீண்டும் கதவை தட்டினார்..‌‌

"ஹான்..‌ அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க.." குரல் தேய்ந்து ஒலித்தது.. அவள் வார்த்தைகளில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார் ரமணி..

"சரிம்மா.. நீ ஓய்வெடு.." என்று கூடத்தில் வந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்..

பத்மினி எப்போது சமையலறைக்கு சென்றாள் என்று தெரியவில்லை.. பாத்திரங்கள் உருட்டும் சத்தத்தில் திரும்பி பார்த்தார் ரமணியம்மா..

பாத்திரத்தை எடுத்து வைத்தாள்.. எடுத்த பாத்திரத்தை மீண்டும் அலமாரியில் வைத்தாள்.. அடுப்பை எரிய விட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.. தலையை பிடித்துக் கொண்டாள்.. அங்குமிங்கும் அலைந்தாள்.. வெங்காயம் வெட்டுகிறேன் என்று கத்தியை எடுத்தவள் அந்த கத்தியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அர்த்தமில்லாமல் பத்மினி செய்து கொண்டிருக்கும் காரியங்களை கண்டு ரமணியம்மாவிற்கு பதட்டமாகி போனது..

"அம்மாடி.. அம்மா பத்மினி..‌ என்னடியம்மா செய்யற..‌" பத்மினி.." மீண்டும் மீண்டும் அழைத்தவர் மெல்ல அவளருகே வந்து தோள் பற்றி உலுக்கினார்..

"ஹான்.. என்னம்மா.." தெளிந்து நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் கொஞ்சமும் ஒளி இல்லை..

"என்னடாம்மா ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா..‌?" பத்மினியின் முகத்தை ஊன்றி கவனித்தார்..

"ஒ.. ஒன்னும் இல்ல.. நான்.. நான் எதையோ மறந்துட்டேன்.. என்று அங்குமிங்குமாக எதையோ தேடியவள் ஒரு நிலையில் இல்லை.. நிதானத்தில் இல்லை..

"பத்மினி என்ன ஆச்சு உனக்கு.. ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற.. வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீ கொஞ்சம் கூட சரியே இல்லை.." ரமணியம்மாள் தன் குரலை சற்று உயர்த்தினார்..

"ஏன்.. ஏன்.. இப்படி கத்தறீங்க.. மெதுவா பேசுங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.." மேல் மூச்சு வாங்கி நீர்த்த கண்களும் நடுங்கும் குரலுமாக பேசியவளை கலவரத்தோடு பார்த்தார் ரமணியம்மா..

"என்னம்மா ஆச்சு.. என்கிட்ட சொல்லுடா.. ஏதோ தப்பா தெரியுது.. உன்னை பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு.." என்று சொன்னதுதான் தாமதம்.. அவள் தேகம் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.. ஒரு மாதிரியான வித்தியாசமான அதிர்வு.. ரமணியம்மாவிற்கு இதயம் நின்று துடித்தது.. ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்தது..

"அச்சச்சோ பத்மினி என்னம்மா ஆச்சு உனக்கு..?" படபடப்போடு அலறினார்..

வேகமாக டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து அவள் கையில் கொடுக்க.. அதை வாங்க கூட முடியாத அளவில் நடுக்கம்.. டம்ளர் தரையில் விழுந்தது..

"ஐயோ இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியலையே.. நான் இப்ப என்ன செய்வேன்.." நெஞ்சை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் விழித்தார் ரமணியம்மா..!!

பத்மினியின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.. கால்கள் ரப்பர் குழல் போல் நிற்க முடியாமல் துவண்டு போக கீழே விழப் போனவளை ரமணியம்மா தாங்கிக்கொண்டார்..

"அம்மா.. என்னை பெட் ரூமுக்கு கூட்டிட்டு போங்க ப்ளீஸ்.." சின்ன குழந்தை போல் நடுக்கத்தோடு கெஞ்சியவளை பார்க்க முடியவில்லை அவரால்..

எப்படியோ சிரமப்பட்டு அவளை படுக்கையறை வரை அழைத்து வந்தார்.. பாவம் அவர் வயதான பெண்மணி.. பத்மினியை தாங்கிக்கொண்டு நடக்க முடியவில்லை.. ஆனாலும் சமாளித்து அவளை படுக்கையில் அமர வைத்தார்..

அடுத்த கணம் உதய் கிருஷ்ணாவிற்கு அழைத்திருந்தார்..

"டேய் உதய்..!!" அவர் குரலிலேயே பதட்டம் தெரிவதை உணர்ந்து கொண்ட உதய்கிருஷ்ணா.. "என்னமா ஆச்சு.. பத்மினி வந்துட்டாளா..?" என்று கேட்க..

"வந்துட்டா.. ஆனா வந்ததுல இருந்து அவ சரியில்லை.. உடம்பெல்லாம் ஒரு மாதிரி வெடவெடன்னு தூக்கி போடுது.. கண்ணுல இருந்து தண்ணியா கொட்டுது.. எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறா.. எனக்கு பயமா இருக்கு நீ கொஞ்சம் வாடா.."

" என்ன சொல்றீங்க.. சரி.. இ.. இதோ வந்துட்டேன்மா..!!"

போனை அணைத்துவிட்டு மருமகளை கவலையோடு பார்த்தார்.. "என்னம்மா ஆச்சு ஏன்மா இப்படி உடம்பெல்லாம் நடுங்குது எதையாவது பார்த்து பயந்துட்டியா..!!"

அடுத்த கணம் லேசாக ஆரம்பித்து விம்மி வெடித்தது அழுகை..

எதையோ சொல்லி புலம்பினாள்.. என்னவென்று புரியவில்லை..

"என்னம்மா சொல்ற எனக்கு எதுவுமே புரியலையே..!! இப்படி அழறியேம்மா.. ஐயோ என் நெஞ்செல்லாம் வெடிக்கிற மாதிரி இருக்கே.. பங்க்ஷன் போன பொண்ணு இந்த நிலைமையில திரும்பி வந்துருக்கியே.. என்னதான் நடந்துச்சு.. உதய் வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்..?" ரமணியம்மாவின் புலம்பலுக்கும் கேள்விக்கும் அவளிடம் தெளிவான பதில் இல்லை..

அழுது கொண்டே இருந்தாள் அழுகை நடுவே ஏதோ சொன்னாள்..

"என்ன சொல்ற..?" நொந்து போனவராய் ரமணியம்மா காதை கூர்மையாக்கினார்..

"உதய்.. உ..தய்... வே.. வேணும்.. உ..உ..த..ய்.. கி..ட்டே.. போ..க..னு..ம்.."

மூக்கிலும் கண்களிலும் தண்ணீர் வடிய நிறுத்தாமல் ஒரே அழுகை.. அந்த நிலையிலும் வாயில் கைவைத்து வைத்து அவளை ஆச்சரியமாக பார்த்தார் ரமணியம்மா..

மீண்டும் உதய் கிருஷ்ணாவிற்கு ஃபோன் அடித்தார்..

ரமணியம்மா பேசுவதற்கு முன் "இதோ வந்துட்டேன்ம்மா.. அப்பார்ட்மெண்ட்குள்ள நுழைஞ்சிட்டேன்" என்றான் அவன்..

"டேய் அவ உன்னதான் தேடுறா.. நீதான் வேணுமாம்.. நிறுத்தாம அழுதுகிட்டே இருக்கா.. சீக்கிரம் வாடா.." அடுத்த கணம் அழைப்பு துண்டிக்கப்பட்டது..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காலிங் பெல் அடிக்கும் ஓசையில்.. ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தார் ரமணியம்மா.. மருமகளின் கதறலில் அவர் கண்களும் கலங்கியிருந்தது.. முகம் வெளிறிப் போயிருந்தார்..

"என்னம்மா ஆச்சு..?" புருவத்தை ஒற்றை விரலால் நீவிக்கொண்டு பதட்டத்தோடு கேட்டான் உதய்..

"தெரியலைடா.. உன்னைத்தான் ரொம்ப தேடறா..‌ என்னன்னு நீயே கேளு..‌ உன்கிட்டதான் சொல்லுவா.. எதுவா இருந்தாலும் பொறுமையா கேளு உதய்.. அவசரப்பட்டு கத்திடாதே.. தப்பா எதுவும் பேசிடாதே.. ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்கா.. பொறுமையா பேசுடா..!!" அம்மா தழுதழுக்கும் குரலோடு பேசிக்கொண்டே பின்தொடர்ந்து ஓடி வந்தது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை..

காலணியை கூட கழற்றி வைக்காமல் அறையை நோக்கி வேகமாக நடந்தான்..

குத்துக் காலிட்டு அமர்ந்து உடல் குலுங்க அழுது கொண்டிருந்தாள் பத்மினி.. அவள் அழுகை உதய் கிருஷ்ணாவின் இதயத்தை உலுக்கியது..

"பத்மி..னி.." உதய் கிருஷ்ணாவின் குரல் கமறியது.. ஏன் இப்படி அழுகிறாள் என்று தெரியாமல் அவன் உள்ளம் கலங்கியது..

"என்னமா என்ன ஆச்சு.. இதுக்காக இப்படி அழற.." பதட்டத்தோடு அவளைத் தொட்ட அடுத்த கணம் தொலைந்து போன குழந்தை தாயை கண்டதை போல் தாவி அணைத்துக்கொண்டாள் பத்மினி..

ஏதோ பயந்து போன குழந்தையாக அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டாள்.. அவன் இதயத்திற்குள் ஊடுருவ முயன்றாள்..

"என்னடா ஆச்சு.. இவளை பார்க்கவே எனக்கு பயமா இருக்கு எதுக்காக இப்படி அழறா.." ரமணியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டார்..

பாவம் யாரை சமாளிப்பான் அவன்..
அழுது கொண்டிருக்கும் பத்மினியையா..? அல்லது பயந்து நிற்கும் அம்மாவையா..?

"அம்மா ஒன்னும் இல்ல.. நான் பாத்துக்கறேன் நீங்க போங்க.. என்னன்னு நான் கேட்கறேன்.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.." அவளை இறுக அணைத்துக் கொண்டு அம்மாவை சமாதானப்படுத்தினான்..

"என்னனு கேளுடா உதய் எனக்கு நெஞ்செல்லாம் கலங்குது.. நான் எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்.. வாயவே திறக்க மாட்டேங்கறா.." என்றார் எச்சில் விழுங்கி..

"நான் கேட்கிறேன்மா.. நீங்க உங்க ரூமுக்கு போங்க இவளை பார்த்து நீங்க டென்ஷன் ஆகறீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்ல பத்மினியை நான் பார்த்துக்கறேன்.. நீங்க உங்க ரூம்ல போய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.."

"உதய்.."

"ஆமா நான் தான் சொல்றேன் இல்ல தயவு செஞ்சு கொஞ்சம் போங்க.. ப்ளீஸ்.." உதய் கெஞ்சலும் அதட்டலுமாய் சொன்ன பிறகு பத்மினியை கலவரத்தோடு ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வெளியேறினார் ரமணியம்மா.. அவர் சென்ற அடுத்த கணம் பத்மினியை அணைத்து கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான் உதய் கிருஷ்ணா..

"பத்மினி என்ன நடந்துச்சு..!! எதுக்காக இப்படி அழுதுட்டே இருக்க.. பதில் சொல்லுமா.." அவள் கண்களை ஆராய்ந்தான்.. நீர் நிறைந்த அந்த கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை.. அவளிடமிருந்து விம்மல் நிற்கவில்லை..

"பத்மினி என்னை பார் முதல்ல.. உனக்காக நான் இருக்கேன்.. எந்த பிரச்சினையா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. நான் பாத்துக்கறேன்..!!"

ம்ஹும்.. அவன் எவ்வளவு கேட்டும் ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை அவள் வாயிலிருந்து..

மீண்டும் மீண்டும் அவன் நெஞ்சோடு முகத்தை புதைத்துக் கொண்டாள்..

"வாயை திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கற..‌ அப்புறம் எதுக்காகடி என்னை தேடுன.. அவ்வளவுதானா என் மேல நம்பிக்கை உனக்கு.. பத்மினி என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. நீ இப்படி அழறதை பார்த்துட்டே நான் உட்கார்ந்து இருக்கணுமா.. அப்புறம் என்னடி ஆம்பள நானு.. பதில் சொல்லப் போறியா இல்லையா..!!" அதட்டியும் பார்த்து விட்டான்..‌ அவள் உடலில் அத்தனை நடுக்கம்..

"சரி.. ச..ர்..ரிஇஇ.. அழாதே.. ஒன்னும் கேட்கல.. நான் இருக்கேன்.. ப்ச்.. அழா.. தடா.." அவள் முதுகை தடவி கொடுத்தான்.. இந்த நிலையில் அவளால் பேசக்கூட முடியாது என்று புரிகிறது.. ஆனாலும் இப்படி அழும் அளவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள பதட்டம்..

முடிந்தவரை அவளை சமாதானப்படுத்த முயன்றான்..

"எ..எ..எனக்கு.."

"சொல்லுமா என்னடா வேணும் உனக்கு.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா..?"

"எ.. எ.. னக்கு தூ.. தூங்கணும்.. தூ..ங்கி எழு..ந்தா எல்.. லாம் சரியா போயிடும்.." என்று அழுகையோடு சொன்னவளை பரிதாபமாக பார்த்தான் உதய்..

"சரி தூங்கு.. படுத்துக்கோ.." தலையணை சரி செய்து அவளை படுக்க வைத்தான்.. உதய் கிருஷ்ணா சட்டையை இறுகப் பிடித்திருந்தாள்.. அவளோடு சேர்ந்து அவனும் படுத்துக்கொண்டு பத்மினியை அணைத்துக் கொண்டான்..

கண்களை மூடியிருந்தாள்.. ஆனால் தூங்கவில்லை.. இமைகள் அசைந்தன..

"தூங்குமா.. நான் உன் கூடதான் இருக்கேன்.." அவள் தலையை வருடி கொடுத்தான்.. உடல் நடுங்காதவாறு இறுக அணைத்துக் கொண்டான்.. நடுங்கும் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்.. பயந்து கொண்டிருந்த தண்ணீரை சலிக்காமல் துடைத்துக் கொண்டே இருந்தான்..

நெடு நேரத்திற்கு பிறகு அவள் தேகமும் மனமும் அமைதிப்பட்டிருக்க வேண்டும்.. அவளை இந்த நிலைக்கு கொண்டுவர படாத பாடு பட்டிருந்தான் உதய்..

அழுத களைப்பு பயம் நடுக்கம் எல்லாம் சேர ஒரு வழியாக உறங்கிப் போயிருந்தாள் பத்மினி..

"அழுத்தக்காரிடி நீ.. ஒரு வார்த்தை வாயை திறந்து சொல்ல மாட்டேங்கறியே.. இன்னும் கூட என்னை நம்பல நீ.."

"போ..டி.." வேதனையோடு அவளை மீண்டும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. பத்மினி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..

அலுங்காமல் அவளை வசதியாக படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.. கூடத்தில் ரமணியம்மா பதட்டமாக அமர்ந்திருந்தார்..

அவனை கண்டதும் முழங்காலை பிடித்து எழுந்து நின்று "என்னடா ஏதாவது சொன்னாளா..? என்ன விஷயம் ஏன் இப்படி அழறா!!" என்றார் படபடப்போடு..

ஆழ்ந்த மூச்செடுத்தான் உதய்.. "எதுவும் சொல்லல.. என்னன்னு தெரியலைமா தூங்கறா..!! கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா மனசு அமைதியாகிடும்.. அதுக்கப்புறம் சொல்லுவான்னு நினைக்கிறேன்..‌" என்றான் அவன் குழப்பத்தோடு..

"என்னடா நடந்திருக்கும்.. வர்ற வழியில யாராவது அவகிட்ட தப்பா..?" ரமணியம்மாவிற்கு தொண்டை அடைத்தது..

"ஐயோ அம்மா.. அப்படியெல்லாம் எதுவும் ஆகியிருக்காது.. பத்மினி ரொம்ப தைரியமான பொண்ணு.. அவளால எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியும்.. நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க..‌ உங்களுக்கு காபி போட்டு தரட்டுமா..?" அம்மாவை அமைதிபடுத்த வேறு வழி தெரியவில்லை..‌

"இல்ல.. அவ இயல்பாகனும்.. அதுவரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது.. எனக்கு எதுவும் வேண்டாம்..‌ அவ எழுந்தான்னா என்னை கூப்பிடு..‌!!" ரமணியம்மா தளர்ச்சியுடன் நகர்ந்து தன்னறைக்கு சென்று விட்டார்..

உதய் சோபாவில் அயர்வோடு அமர்ந்தான்..

"நான் வீட்டுக்கு போக லேட்டாகும்.. திவ்யா வீட்ல அவ குழந்தைக்கு பர்த்டே பங்க்ஷன்.." மிக நெருங்கி நின்று அவன் சட்டை பட்டன்களை திருகிக் கொண்டே சொன்னது ஞாபகம் வந்தது..

"ப்ச்.. எதுக்காக அங்கேயெல்லாம் போகணும்..‌ அதெல்லாம் வேண்டாம்.. வீட்டுக்கு போகலாம்.. எனக்கு என் கூடவே வந்துடு.." சலித்தான் உதய்..

"சும்மா இருங்க சார்.. திவ்யா எனக்கு நெருக்கமான தோழி.. பல நேரங்கள்ல அவ எனக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்கா.. கண்டிப்பா வரணும்னு சொல்லி இருக்கா.. போகாம எப்படி இருக்க முடியும்.. ஹான்.."

"கண்டிப்பா போகணுமா..!!" ஏக்கமாக கேட்டான்..

"கண்டிப்பா போகணும்.. இந்த மாதிரி நாலு நல்ல காரியங்களுக்கு போயிட்டு வந்தாத்தான் நமக்கு குழந்.." என்றவள் நாக்கை கடித்து அப்படியே நிறுத்திவிட்டு.. "ஒன்னும் இல்ல.. நான் போயிட்டு வரேன்.." என்றாள் வெட்கத்தோடு..

"என்னமோ சொல்ல வந்தியே..!!" உதய் கண்களை சுருக்கினான்..

"ஒன்னும் சொல்ல வரல..!! போயிட்டு வரேன்னு சொல்ல வந்தேன்..‌ என்றவள் கால்கள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு கதவு வரை சென்றவள் மீண்டும் அவனைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்து விட்டுத்தான் சென்றாள்.. அந்த புன்னகையும் கண்சிமிட்டலும் படமாக உள்ளத்தில் பதிந்து நிற்கிறது.. அதற்குள் இப்படி ஒரு விரும்பத் தகாத நிகழ்வு..

தனது மேனேஜருக்கு அழைத்து திவ்யாவின் எண் வாங்கி அவளுக்கு அழைத்தான்..

இவனுக்குத்தான் அவள் எண் புதிது.. அவளிடம் முதலாளியின் எண் என அலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்..

"ஹலோ சார்.." என்றாள் எடுத்தவுடன்.. அவள் குரலில் ஏதோ பதட்டம்..

"திவ்யா.." அழுத்தமாக அழைத்தான்.. "பத்மினி உன் குழந்தையோட பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தாளா..?"

"ஆ.. ஆமா.. சார்.. வந்துட்டு திரும்பி போயிட்டாளே..!!"

"அங்க என்ன நடந்துச்சு..?"

"சார்.. ஏன் அப்படி கேட்கறீங்க.. ஃபங்சன்ல கலந்துக்கிட்டா.. அப்புறம் கிளம்பிட்டா.. வேற எதுவும்..‌எ..எ எனக்கு தெரியாதே.."

"திவ்யா.." என்று நிறுத்தியவன் "பத்மினி என்னோட மனைவி.. நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி.." என்றான் அழுத்தமாக..

"சார்.." திவ்யாவின் குரலில் பெரிதாக அதிர்ச்சி..

"பத்மினி வீட்டுக்கு அழுதுகிட்டே வந்தா.. உனக்கு என்னமோ தெரிஞ்சிருக்குன்னு உன் குரலில் தென்படற பதட்டம் சொல்லுது.. என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா என்கிட்ட சொல்லிடு.. நீ சொல்லலைனாலும் கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நேரமாகாது.. ஆனா அதன்பிறகு விளைவுகள் படு விபரீதமாக இருக்கும்.. உன்னையும் நான் சும்மா விட மாட்டேன்.. நினைவிருக்கட்டும்.." உதய் மிரட்டலில் விதிர்த்துப் போனாள் திவ்யா

"இல்ல சார்.. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுடாதீங்க.. சத்தியமா நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிடறேன்.." என்று படபடப்போடு சொல்ல துவங்கினாள் திவ்யா..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jan 21, 2024
Messages
64
சனாசீஸ் இப்படி உணர்ச்சி கரமாய் கதையை கொண்டு போக முடியும். பாவம் பத்மினி என்ன நடந்ததோ. அடுத்த யூடி வரவரைக்கும் படபடப்பாய் இருக்கு.
 
New member
Joined
Aug 14, 2024
Messages
7
next ud sikkiram thanga sis please
 
New member
Joined
Jul 19, 2024
Messages
28
கதவை திறந்ததும் ரமணியம்மாவின் முகத்தைக் கூட பாராமல் வேகமாக உள்ளே நுழைந்தாள் பத்மினி..

"ஃபங்ஷனெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா..!! உதய் வேலையை முடிச்சிட்டு அப்படியே உன்னை பிக்கப் பண்ணிக்கிறதா சொன்னான்.. ஃபோன் அடிச்சு ஒரு வார்த்தை நீ வந்துட்டதா சொல்லிடு.." அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க எதையும் காதில் வாங்காமல் தனது அறைக்குள் நுழைந்து டமாரென்று கதவை சாத்தியிருந்தாள் பத்மினி..

அவள் நடந்து கொண்ட விதம் வினோதமாக தோன்றியது ரமணியம்மாவிற்கு.. கதவைத் திறந்தவுடன் அத்தனை பணி சோர்வுக்கு மத்தியிலும் புன்னகை முகமாக சிரித்துக்கொண்டே.. உள்ளே நுழையும் பத்மினி இன்று மிஸ்ஸிங்..

சிரிக்க வேண்டாம்.. ஆனால் அவள் முகத்தில் தெரியும் அந்த இருளடைந்த தோற்றம் ஏதோ தவறென்று உணர்த்தியது..

சரி எப்படியும் காபியோடு தன்னருகே வந்து அமர்ந்து அவளாக பேசுவாள் என்று எதிர்பார்த்தபடி தன்னறைக்கு சென்று விட்டார் ரமணியம்மா..

இரண்டு மணி நேரங்கள் ஆன பின்னும் பத்மினி அறையை விட்டு வெளியே வரவில்லை..

"என்னாச்சு இவளுக்கு? ஒருவேளை உடம்பு சரியில்லையோ..!! மறுபடி வயிறு ஏதாவது கெட்டுப் போயிடுச்சா.." வந்தவுடனே இப்படி உள்ளே போய் படுக்கிற ஆள் இல்லையே இவ.. எறும்பு மாதிரி சுறுசுறுப்பா இருப்பாளே!!" என்று யோசனையோடு வந்து கதவை தட்டினார்..

"பத்மினி.. அம்மா பத்மினி.. தூங்கறியா..!!" அவர் குரல் கொடுக்கவும் அந்த பக்கமிருந்து பதில் இல்லை..

"பத்மினிஇஇஇ" மீண்டும் கதவை தட்டினார்..‌‌

"ஹான்..‌ அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க.." குரல் தேய்ந்து ஒலித்தது.. அவள் வார்த்தைகளில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார் ரமணி..

"சரிம்மா.. நீ ஓய்வெடு.." என்று கூடத்தில் வந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்..

பத்மினி எப்போது சமையலறைக்கு சென்றாள் என்று தெரியவில்லை.. பாத்திரங்கள் உருட்டும் சத்தத்தில் திரும்பி பார்த்தார் ரமணியம்மா..

பாத்திரத்தை எடுத்து வைத்தாள்.. எடுத்த பாத்திரத்தை மீண்டும் அலமாரியில் வைத்தாள்.. அடுப்பை எரிய விட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.. தலையை பிடித்துக் கொண்டாள்.. அங்குமிங்கும் அலைந்தாள்.. வெங்காயம் வெட்டுகிறேன் என்று கத்தியை எடுத்தவள் அந்த கத்தியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அர்த்தமில்லாமல் பத்மினி செய்து கொண்டிருக்கும் காரியங்களை கண்டு ரமணியம்மாவிற்கு பதட்டமாகி போனது..

"அம்மாடி.. அம்மா பத்மினி..‌ என்னடியம்மா செய்யற..‌" பத்மினி.. மீண்டும் மனம் அழைத்தவர் மெல்ல அவளருகே வந்து அவள் தோள் பற்றி உலுக்கினார்..

"ஹான்.. என்னம்மா.." தெளிந்து நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் கொஞ்சமும் ஒளி இல்லை..

"என்னடாம்மா ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா..‌?" பத்மினியின் முகத்தை ஊன்றி கவனித்தார்..

"ஒ.. ஒன்னும் இல்ல.. நான்.. நான் எதையோ மறந்துட்டேன்.. என்று அங்குமிங்குமாக எதையோ தேடியவள் ஒரு நிலையில் இல்லை.. நிதானத்தில் இல்லை..

"பத்மினி என்ன ஆச்சு உனக்கு.. ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற.. வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீ கொஞ்சம் கூட சரியே இல்லை.." ரமணியம்மாள் தன் குரலை சற்று உயர்த்தினார்..

"ஏன்.. ஏன்.. இப்படி கத்தறீங்க.. மெதுவா பேசுங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.." மேல் மூச்சு வாங்கி நீர்த்த கண்களும் நடுங்கும் குரலுமாக பேசியவளை கலவரத்தோடு பார்த்தார் ரமணியம்மா..

"என்னம்மா ஆச்சு.. என்கிட்ட சொல்லுடா.. ஏதோ தப்பா தெரியுது.. உன்னை பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு.." என்று சொன்னதுதான் தாமதம்.. அவள் தேகம் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.. ஒரு மாதிரியான வித்தியாசமான அதிர்வு.. ரமணியம்மாவிற்கு இதயம் நின்று துடித்தது.. ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்தது..

"அச்சச்சோ பத்மினி என்னம்மா ஆச்சு உனக்கு..?" படபடப்போடு அலறினார்..

வேகமாக டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து அவள் கையில் கொடுக்க.. அதை வாங்க கூட முடியாத அளவில் நடுக்கம்.. டம்ளர் தரையில் விழுந்தது..

"ஐயோ இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியலையே.. நான் இப்ப என்ன செய்வேன்.." நெஞ்சை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் விழித்தார் ரமணியம்மா..!!

பத்மினியின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.. கால்கள் ரப்பர் குழல் போல் நிற்க முடியாமல் துவண்டு போக கீழே விழப் போனவளை ரமணியம்மா தாங்கிக்கொண்டார்..

"அம்மா.. என்னை பெட் ரூமுக்கு கூட்டிட்டு போங்க ப்ளீஸ்.." இன்று சின்ன குழந்தை போல் நடுக்கத்தோடு கெஞ்சியவளை பார்க்க முடியவில்லை அவரால்..

எப்படியோ சிரமப்பட்டு அவளை படுக்கையறை வரை அழைத்து வந்தார்.. பாவம் அவர் வயதான பெண்மணி.. பத்மினியை தாங்கிக்கொண்டு நடக்க முடியவில்லை.. ஆனாலும் சமாளித்து அவளை படுக்கையில் அமர வைத்தார்..

அடுத்த கணம் உதய் கிருஷ்ணாவிற்கு அழைத்திருந்தார்..

"டேய் உதய்..!!" அவர் குரலிலேயே பதட்டம் தெரிவதை உணர்ந்து கொண்ட உதய்கிருஷ்ணா.. "என்னமா ஆச்சு.. பத்மினி வந்துட்டாளா..?" என்று கேட்க..

"அவ வந்துட்டா.. ஆனா வந்ததுல இருந்து அவ சரியில்லை.. உடம்பெல்லாம் ஒரு மாதிரி வெடவெடன்னு தூக்கி போடுது.. கண்ணுல இருந்து தண்ணியா கொட்டுது.. எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறா.. எனக்கு பயமா இருக்கு நீ கொஞ்சம் வாடா.."

" என்ன சொல்றீங்க.. சரி.. இ.. இதோ வந்துட்டேன் மா..!!"

போனை அணைத்துவிட்டு மருமகளை கவலையோடு பார்த்தார்.. "என்னம்மா ஆச்சு ஏன்மா இப்படி உடம்பெல்லாம் நடுங்குது எதையாவது பார்த்து பயந்துட்டியா..!!"

அடுத்த கணம் லேசாக ஆரம்பித்து விம்மி வெடித்தது அழுகை..

எதையோ சொல்லி புலம்பினாள்.. என்னவென்று புரியவில்லை..

"என்னம்மா சொல்ற எனக்கு எதுவுமே புரியலையே..!! இப்படி அழறியேம்மா.. ஐயோ என் நெஞ்செல்லாம் வெடிக்கிற மாதிரி இருக்கே.. பங்க்ஷன் போன பொண்ணு இந்த நிலைமையில திரும்பி வந்துருக்கியே என்னதான் நடந்துச்சு.. உதய் வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்..?" ரமணி அம்மாவின் புலம்பலுக்கும் கேள்விக்கும் அவளிடம் தெளிவான பதில் இல்லை..

அழுது கொண்டே இருந்தாள் அழுகை நடுவே ஏதோ சொன்னாள்..

"என்ன சொல்ற..?" நொந்து போனவராய் ரமணியம்மா காதை கூர்மையாக்கினார்..

"உதய்.. உ..தய்... வே.. வேணும்.. உ..உ..த..ய்.. கி..ட்டே.. போ..க..னு..ம்.."

மூக்கிலும் கண்களிலும் தண்ணீர் வடிய நிறுத்தாமல் ஒரே அழுகை.. அந்த நிலையிலும் வாயில் கைவைத்து வைத்து அவளை ஆச்சரியமாக பார்த்தார் ரமணியம்மா..

மீண்டும் உதய கிருஷ்ணாவிற்கு ஃபோன் அடித்தார்..

ரமணியம்மா பேசுவதற்கு முன் "இதோ வந்துட்டேன்ம்மா.. அப்பார்ட்மெண்ட்குள்ள நுழைஞ்சிட்டேன்" என்றான் அவன்..

"டேய் அவ உன்னதான் தேடுறா.. நீதான் வேணுமாம்.. நிறுத்தாம அழுதுகிட்டே இருக்கா.. சீக்கிரம் வாடா.." அடுத்த கணம் அழைப்பு துண்டிக்கப்பட்டது..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காலிங் பெல் அடிக்கும் ஓசையில்.. ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தார் ரமணியம்மா.. மருமகளின் கதறலில் அவர் கண்களும் கலங்கியிருந்தது.. முகம் வெளிறிப் போயிருந்தார்..

"என்னம்மா ஆச்சு..?" புருவத்தை ஒற்றை விரலால் நீவிக்கொண்டு பதட்டத்தோடு கேட்டான் உதய்..

"தெரியலைடா.. உன்னைத்தான் ரொம்ப தேடறா..‌ என்னன்னு நீயே கேளு..‌ உன்கிட்டதான் சொல்லுவா.. எதுவா இருந்தாலும் பொறுமையா கேளு உதய்.. அவசரப்பட்டு கத்திடாதே.. தப்பா எதுவும் பேசிடாதே.. ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்கா.. பொறுமையா பேசுடா..!!" அம்மா தழுதழுக்கும் குரலோடு பேசிக்கொண்டே பின்தொடர்ந்து ஓடி வந்தது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை..

காலணியை கூட கழற்றி வைக்காமல் அறையை நோக்கி வேகமாக நடந்தான்..

குத்துக் காலிட்டு அமர்ந்து உடல் குலுங்க அழுது கொண்டிருந்தாள் பத்மினி.. அவள் அழுகை உதய் கிருஷ்ணாவின் இதயத்தை உலுக்கியது..

"பத்மி..னி.." உதய் கிருஷ்ணாவின் குரல் கமறியது.. ஏன் இப்படி அழுகிறாள் என்று தெரியாமல் அவன் உள்ளம் கலங்கியது..

"என்னமா என்ன ஆச்சு.. இதுக்காக இப்படி அழற.." பதட்டத்தோடு அவளைத் தொட்ட அடுத்த கணம் தொலைந்து போன குழந்தை தாயை கண்டதை போல் தாவி அணைத்துக்கொண்டாள் பத்மினி..

ஏதோ பயந்து போன குழந்தையாக அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டாள்.. அவன் இதயத்திற்குள் ஊடுருவ முயன்றாள்..

"என்னடா ஆச்சு.. இவளை பார்க்கவே எனக்கு பயமா இருக்கு எதுக்காக இப்படி அழறா.." ரமணியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டார்..

பாவம் யாரை சமாளிப்பான் அவன்..
அழுது கொண்டிருக்கும் பத்மினியையா..? அல்லது பயந்து நிற்கும் அம்மாவையா..?

"ஆமா ஒன்னும் இல்ல.. நான் பாத்துக்கறேன் நீங்க போங்க.. என்னன்னு நான் கேட்கறேன்.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.." அவளை இறுக அணைத்துக் கொண்டு அம்மாவை சமாதானப்படுத்தினான்..

"என்னனு கேளுடா உதய் எனக்கு நெஞ்செல்லாம் கலங்குது.. நான் எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்.. வாயவே திறக்க மாட்டேங்குறா.." என்றார் எச்சில் விழுங்கி..

"நான் கேட்கிறேன் மா.. நீங்க உங்க ரூமுக்கு போங்க இவளை பார்த்து நீங்க டென்ஷன் ஆகறீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்ல பத்மினியை நான் பார்த்துக்கறேன்.. நீங்க உங்க ரூம்ல போய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.."

"உதய்.."

"ஆமா நான் தான் சொல்றேன் இல்ல தயவு செஞ்சு கொஞ்சம் போங்க ப்ளீஸ்.." உதய் கெஞ்சலும் அதட்டலுமாய் சொன்ன பிறகு பத்மினியை கலவரத்தோடு ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வெளியேறினார் ரமணியம்மா.. அவர் சென்ற அடுத்த கணம் பத்மினி அணைத்து கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான் உதய் கிருஷ்ணா..

"பத்மினி என்ன நடந்துச்சு..!! எதுக்காக இப்படி அழுதுட்டே இருக்க.. பதில் சொல்லுமா.." அவள் கண்களை ஆராய்ந்தான்.. நீர் நிறைந்த அந்த கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை.. அவளிடமிருந்து விம்மல் நிற்கவில்லை..

"பத்மினி என்னை பார் முதல்ல.. உனக்காக நான் இருக்கேன்.. எந்த பிரச்சினையா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. நான் பாத்துக்கறேன்..!!"

ம்ஹும்.. அவன் எவ்வளவு கேட்டும் ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை அவள் வாயிலிருந்து..

மீண்டும் மீண்டும் அவன் நெஞ்சோடு முகத்தை புதைத்துக் கொண்டாள்..

"வாயை திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கற..‌ அப்புறம் எதுக்காகடி என்னை தேடுன.. அவ்வளவுதானா என் மேல நம்பிக்கை உனக்கு.. பத்மினி என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. நீ இப்படி அழறதை பார்த்துட்டே நான் உட்கார்ந்து இருக்கணுமா.. அப்புறம் என்னடி ஆம்பள நானு.. பதில் சொல்லப் போறியா இல்லையா..!!" அதட்டியும் பார்த்து விட்டான்..‌ அவள் உடலில் அத்தனை நடுக்கம்..

"சரி சரி அழாதே.. ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன்.. அழாதடா.." அவள் முதுகை தடவி கொடுத்தான்.. இந்த நிலையில் அவளால் பேசக்கூட முடியாது என்று புரிகிறது.. ஆனாலும் இப்படி அழும் அளவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள பதட்டம்..

முடிந்தவரை அவளை சமாதானப்படுத்த முயன்றான்..

"எ..எ..எனக்கு.."

"சொல்லுமா என்னடா வேணும் உனக்கு.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா..?"

"எ.. எ.. னக்கு தூ.. தூங்கணும்.. தூ..ங்கி எழு..ந்தா எல்.. லாம் சரியா போயிடும்.." என்று அழுகையோடு சொன்னவளை பரிதாபமாக பார்த்தான் உதய்..

"சரி தூங்கு.. படுத்துக்கோ.." தலையணை சரி செய்து அவளை படுக்க வைத்தான்.. உதய் கிருஷ்ணா சட்டையை இறுகப் பிடித்திருந்தாள்.. அவளோடு சேர்ந்து அவனும் படுத்துக்கொண்டு பத்மினியை அணைத்துக் கொண்டான்..

கண்களை மூடியிருந்தாள்.. ஆனால் தூங்கவில்லை..

"தூங்குமா.. நான் உன் கூடதான் இருக்கேன்.." அவள் தலையை வருடி கொடுத்தான்.. உடல் நடுங்காதவாறு இறுக அணைத்துக் கொண்டான்.. நடுங்கும் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்.. பயந்து கொண்டிருந்த தண்ணீரை சலிக்காமல் துடைத்துக் கொண்டே இருந்தான்..

நெடு நேரத்திற்கு பிறகு அவள் வேகமும் மனமும் அமைதிப்பட்டிருக்க வேண்டும்.. அவளை இந்த நிலைக்கு கொண்டுவர படாத பாடு பட்டிருந்தான் உதய்..

அழுத களைப்பு பயம் நடுக்கம் எல்லாம் சேர ஒரு வழியாக உறங்கிப் போயிருந்தாள் பத்மினி..

"அழுத்தக்காரிடி நீ.. ஒரு வார்த்தை வாயை திறந்து சொல்ல மாட்டேங்கறியே.. இன்னும் கூட என்னை நம்பல நீ.."

"போ..டி.." வேதனையோடு அவளை மீண்டும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. பத்மினி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..

அலுங்காமல் அவளை வசதியாக படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.. கூடத்தில் ரமணியம்மா பதட்டமாக அமர்ந்திருந்தார்..

அவனை கண்டதும் எழுந்து நின்று என்னடா ஏதாவது சொன்னாளா..? என்ன விஷயம் ஏன் இப்படி அழறா!! என்றார் படபடப்போடு..

ஆழ்ந்த இந்த மூச்செடுத்தான் உதய்.. "எதுவும் சொல்லல.. என்னன்னு தெரியலைமா தூங்கறா..!! கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா மனசு அமைதியாகிடும்.. அதுக்கப்புறம் சொல்லுவான்னு நினைக்கிறேன்..‌" என்றான் அவன் குழப்பத்தோடு..

"என்னடா நடந்திருக்கும்.. வர்ற வழியில யாராவது அவள் கிட்ட தப்பா..?" ரமணியம்மாவிற்கு தொண்டை அடைத்தது..

"ஐயோ அம்மா.. அப்படியெல்லாம் ஒன்னும் ஆகியிருக்காது.. பத்மினி ரொம்ப தைரியமான பொண்ணு.. அவளால எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியும்.. நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க..‌ உங்களுக்கு காபி போட்டு தரட்டுமா..?" அம்மாவை அமைதிபடுத்த வேறு வழி தெரியவில்லை..‌

"இல்ல.. அவ இயல்பாகனும்.. அதுவரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது.. எனக்கு எதுவும் வேண்டாம்..‌ அவ எழுந்தான்னா என்னை கூப்பிடு..‌!!" ரமணியம்மா தளர்ச்சியுடன் நகர்ந்து தன்னறைக்கு சென்று விட்டார்..

உதய் சோபாவில் அயர்வோடு அமர்ந்தான்..

"நான் வீட்டுக்கு போக லேட்டாகும்.. திவ்யா வீட்ல அவ குழந்தைக்கு பர்த்டே பங்க்ஷன்.." அவன் சட்டை பட்டன்களை திருகிக் கொண்டே சொன்னது ஞாபகம் வந்தது..

"ப்ச்.. எதுக்காக அங்கேயெல்லாம் போகணும்..‌ அதெல்லாம் வேண்டாம்.. வீட்டுக்கு போகலாம்.. எனக்கு என் கூடவே வந்துடு.." சலித்தான் உதய்..

"சும்மா இருங்க சார்.. திவ்யா எனக்கு நெருக்கமான தோழி.. பல நேரங்கள்ல அவ எனக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்கா.. கண்டிப்பா வரணும்னு சொல்லி இருக்கா.. போகாம எப்படி இருக்க முடியும்.. ஹான்.."

"கண்டிப்பா போகணுமா..!!" ஏக்கமாக கேட்டான்..

"கண்டிப்பா போகணும்.. இந்த மாதிரி நாலு நல்ல காரியங்களுக்கு போயிட்டு வந்தாத்தான் நமக்கு குழந்.." என்றவள் நாக்கை கடித்து அப்படியே நிறுத்திவிட்டு.. "ஒன்னும் இல்ல.. நான் போயிட்டு வரேன்.." என்றாள் வெட்கத்தோடு..

"என்னமோ சொல்ல வந்தியே..!!" உதய் கண்களை சுருக்கினான்..

"ஒன்னும் சொல்ல வரல..!! போயிட்டு வரேன்னு சொல்ல வந்தேன்..‌ என்றவள் கால்கள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு கதவு வரை சென்றவள் மீண்டும் அவனைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்து விட்டுத்தான் சென்றாள்.. அந்த புன்னகையும் கண்சிமிட்டலும் படமாக உள்ளத்தில் பதிந்து நிற்கிறது.. அதற்குள் இப்படி ஒரு விரும்பத் தகாத நிகழ்வு..

தனது மேனேஜருக்கு அழைத்து திவ்யாவின் எண் வாங்கி அவளுக்கு அழைத்தான்..

இவனுக்குத்தான் அவள் எண் புதிது.. அவளிடம் முதலாளியின் அலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்..

"ஹலோ சார்.." என்றாள் எடுத்தவுடன்.. அவள் குரலில் ஏதோ பதட்டம்..

"திவ்யா.." அழுத்தமாக அழைத்தான்.. "பத்மினி உன் குழந்தையோட பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தாளா..?"

"ஆ..ஆமா.. சார்.. வந்துட்டு திரும்பி போயிட்டாளே..!!"

"அங்க என்ன நடந்துச்சு..?"

"சார்.. ஏன் அப்படி கேட்கறீங்க.. ஃபங்சன்ல கலந்துக்கிட்டா.. அப்புறம் கிளம்பிட்டா.. வேற எதுவும்..‌எ..எ எனக்கு தெரியாதே.."

"திவ்யா.." என்று நிறுத்தியவன் "பத்மினி என்னோட மனைவி.. நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி.." என்றான் அழுத்தமாக..

"சார்.." திவ்யாவின் குரலில் பெரிதாக அதிர்ச்சி..

"பத்மினி வீட்டுக்கு அழுதுகிட்டே வந்தா.. உனக்கு எதுவும் தெரிஞ்சிருக்குன்னு உன் குரலில் தென்படற பதட்டம் சொல்லுது.. என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா என்கிட்ட சொல்லிடு.. நீ சொல்லலைனாலும் கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நேரமாகாது.. ஆனா அதன்பிறகு விளைவுகள் படு விபரீதமாக இருக்கும்.. உன்னை நான் சும்மா விட மாட்டேன்.. நினைவிருக்கட்டும்.." உதய் மிரட்டலில் விதிர்த்துப் போனாள் திவ்யா

"இல்ல சார்.. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுடாதீங்க.. சத்தியமா நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிடறேன்.." என்று படபடப்போடு சொல்ல துவங்கினாள் திவ்யா..

தொடரும்..
Function pona edathula ah yenamo elarum senthu sambavam Paniruchunga pavam bathmini
 
New member
Joined
Jun 2, 2024
Messages
13
எதுவும் சொல்லாம எங்களையும் படபடப்பாக வைத்து விட்டீர்களே கீத்...
 
New member
Joined
Jan 30, 2023
Messages
1
next ud quick ah podunga please
 
Member
Joined
Sep 14, 2023
Messages
151
Padmini enna Achu😱😱😱......
En intha படபடப்பு.......🙄🙄🙄🙄🙄
கண்டிப்பா உதய் உன் கூட இருப்பான் எப்போதும்.........
சரி தானே உதய்.....😔😔😔😔😔
Sisy waiting for next ud..........
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Haha.. Super sister.. Episode end la oru expectation vachu close pannuveenga, indha episode full ah ve curiosity create pandra madhiri ezhudhirukinga.. Nallaa yosichirukinga, nallaa irundhuchu.. I liked it.. In fact, impressed..

Nice episode, sister.. Well written.. Thank you...
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
138
கதவை திறந்ததும் ரமணியம்மாவின் முகத்தைக் கூட பாராமல் வேகமாக உள்ளே நுழைந்தாள் பத்மினி..

"ஃபங்ஷனெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா..!! உதய் வேலையை முடிச்சிட்டு அப்படியே உன்னை பிக்கப் பண்ணிக்கிறதா சொன்னான்.. ஃபோன் அடிச்சு ஒரு வார்த்தை நீ வந்துட்டதா சொல்லிடு.." அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க எதையும் காதில் வாங்காமல் தனது அறைக்குள் நுழைந்து டமாரென்று கதவை சாத்தியிருந்தாள் பத்மினி..

அவள் நடந்து கொண்ட விதம் வினோதமாக தோன்றியது ரமணியம்மாவிற்கு.. கதவைத் திறந்தவுடன் அத்தனை பணிச் சோர்வுக்கு மத்தியிலும் புன்னகை முகமாக சிரித்துக்கொண்டே.. உள்ளே நுழையும் பத்மினி இன்று மிஸ்ஸிங்..

சிரிக்க வேண்டாம்.. ஆனால் அவள் முகத்தில் தெரியும் அந்த இருளடைந்த தோற்றம் ஏதோ தவறென்று உணர்த்தியது..

சரி எப்படியும் காபியோடு தன்னருகே வந்து அமர்ந்து அவளாக பேசுவாள் என்று எதிர்பார்த்தபடி தன்னறைக்கு சென்று விட்டார் ரமணியம்மா..

இரண்டு மணி நேரங்கள் ஆன பின்னும் பத்மினி அறையை விட்டு வெளியே வரவில்லை..

"என்னாச்சு இவளுக்கு? ஒருவேளை உடம்பு சரியில்லையோ..!! மறுபடி வயிறு ஏதாவது கெட்டுப் போயிடுச்சா.." வந்தவுடனே இப்படி உள்ளே போய் படுக்கிற ஆள் இல்லையே இவ.. எறும்பு மாதிரி சுறுசுறுப்பா இருப்பாளே!!" என்ற யோசனையோடு வந்து கதவை தட்டினார்..

"பத்மினி.. அம்மா பத்மினி.. தூங்கறியா..!!" அவர் குரல் கொடுக்கவும் அந்த பக்கமிருந்து பதில் இல்லை..

"பத்மினிஇஇஇ" மீண்டும் கதவை தட்டினார்..‌‌

"ஹான்..‌ அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க.." குரல் தேய்ந்து ஒலித்தது.. அவள் வார்த்தைகளில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார் ரமணி..

"சரிம்மா.. நீ ஓய்வெடு.." என்று கூடத்தில் வந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்..

பத்மினி எப்போது சமையலறைக்கு சென்றாள் என்று தெரியவில்லை.. பாத்திரங்கள் உருட்டும் சத்தத்தில் திரும்பி பார்த்தார் ரமணியம்மா..

பாத்திரத்தை எடுத்து வைத்தாள்.. எடுத்த பாத்திரத்தை மீண்டும் அலமாரியில் வைத்தாள்.. அடுப்பை எரிய விட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.. தலையை பிடித்துக் கொண்டாள்.. அங்குமிங்கும் அலைந்தாள்.. வெங்காயம் வெட்டுகிறேன் என்று கத்தியை எடுத்தவள் அந்த கத்தியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அர்த்தமில்லாமல் பத்மினி செய்து கொண்டிருக்கும் காரியங்களை கண்டு ரமணியம்மாவிற்கு பதட்டமாகி போனது..

"அம்மாடி.. அம்மா பத்மினி..‌ என்னடியம்மா செய்யற..‌" பத்மினி.." மீண்டும் மீண்டும் அழைத்தவர் மெல்ல அவளருகே வந்து தோள் பற்றி உலுக்கினார்..

"ஹான்.. என்னம்மா.." தெளிந்து நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் கொஞ்சமும் ஒளி இல்லை..

"என்னடாம்மா ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா..‌?" பத்மினியின் முகத்தை ஊன்றி கவனித்தார்..

"ஒ.. ஒன்னும் இல்ல.. நான்.. நான் எதையோ மறந்துட்டேன்.. என்று அங்குமிங்குமாக எதையோ தேடியவள் ஒரு நிலையில் இல்லை.. நிதானத்தில் இல்லை..

"பத்மினி என்ன ஆச்சு உனக்கு.. ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற.. வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீ கொஞ்சம் கூட சரியே இல்லை.." ரமணியம்மாள் தன் குரலை சற்று உயர்த்தினார்..

"ஏன்.. ஏன்.. இப்படி கத்தறீங்க.. மெதுவா பேசுங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.." மேல் மூச்சு வாங்கி நீர்த்த கண்களும் நடுங்கும் குரலுமாக பேசியவளை கலவரத்தோடு பார்த்தார் ரமணியம்மா..

"என்னம்மா ஆச்சு.. என்கிட்ட சொல்லுடா.. ஏதோ தப்பா தெரியுது.. உன்னை பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு.." என்று சொன்னதுதான் தாமதம்.. அவள் தேகம் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.. ஒரு மாதிரியான வித்தியாசமான அதிர்வு.. ரமணியம்மாவிற்கு இதயம் நின்று துடித்தது.. ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்தது..

"அச்சச்சோ பத்மினி என்னம்மா ஆச்சு உனக்கு..?" படபடப்போடு அலறினார்..

வேகமாக டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து அவள் கையில் கொடுக்க.. அதை வாங்க கூட முடியாத அளவில் நடுக்கம்.. டம்ளர் தரையில் விழுந்தது..

"ஐயோ இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியலையே.. நான் இப்ப என்ன செய்வேன்.." நெஞ்சை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் விழித்தார் ரமணியம்மா..!!

பத்மினியின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.. கால்கள் ரப்பர் குழல் போல் நிற்க முடியாமல் துவண்டு போக கீழே விழப் போனவளை ரமணியம்மா தாங்கிக்கொண்டார்..

"அம்மா.. என்னை பெட் ரூமுக்கு கூட்டிட்டு போங்க ப்ளீஸ்.." சின்ன குழந்தை போல் நடுக்கத்தோடு கெஞ்சியவளை பார்க்க முடியவில்லை அவரால்..

எப்படியோ சிரமப்பட்டு அவளை படுக்கையறை வரை அழைத்து வந்தார்.. பாவம் அவர் வயதான பெண்மணி.. பத்மினியை தாங்கிக்கொண்டு நடக்க முடியவில்லை.. ஆனாலும் சமாளித்து அவளை படுக்கையில் அமர வைத்தார்..

அடுத்த கணம் உதய் கிருஷ்ணாவிற்கு அழைத்திருந்தார்..

"டேய் உதய்..!!" அவர் குரலிலேயே பதட்டம் தெரிவதை உணர்ந்து கொண்ட உதய்கிருஷ்ணா.. "என்னமா ஆச்சு.. பத்மினி வந்துட்டாளா..?" என்று கேட்க..

"வந்துட்டா.. ஆனா வந்ததுல இருந்து அவ சரியில்லை.. உடம்பெல்லாம் ஒரு மாதிரி வெடவெடன்னு தூக்கி போடுது.. கண்ணுல இருந்து தண்ணியா கொட்டுது.. எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறா.. எனக்கு பயமா இருக்கு நீ கொஞ்சம் வாடா.."

" என்ன சொல்றீங்க.. சரி.. இ.. இதோ வந்துட்டேன்மா..!!"

போனை அணைத்துவிட்டு மருமகளை கவலையோடு பார்த்தார்.. "என்னம்மா ஆச்சு ஏன்மா இப்படி உடம்பெல்லாம் நடுங்குது எதையாவது பார்த்து பயந்துட்டியா..!!"

அடுத்த கணம் லேசாக ஆரம்பித்து விம்மி வெடித்தது அழுகை..

எதையோ சொல்லி புலம்பினாள்.. என்னவென்று புரியவில்லை..

"என்னம்மா சொல்ற எனக்கு எதுவுமே புரியலையே..!! இப்படி அழறியேம்மா.. ஐயோ என் நெஞ்செல்லாம் வெடிக்கிற மாதிரி இருக்கே.. பங்க்ஷன் போன பொண்ணு இந்த நிலைமையில திரும்பி வந்துருக்கியே.. என்னதான் நடந்துச்சு.. உதய் வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்..?" ரமணியம்மாவின் புலம்பலுக்கும் கேள்விக்கும் அவளிடம் தெளிவான பதில் இல்லை..

அழுது கொண்டே இருந்தாள் அழுகை நடுவே ஏதோ சொன்னாள்..

"என்ன சொல்ற..?" நொந்து போனவராய் ரமணியம்மா காதை கூர்மையாக்கினார்..

"உதய்.. உ..தய்... வே.. வேணும்.. உ..உ..த..ய்.. கி..ட்டே.. போ..க..னு..ம்.."

மூக்கிலும் கண்களிலும் தண்ணீர் வடிய நிறுத்தாமல் ஒரே அழுகை.. அந்த நிலையிலும் வாயில் கைவைத்து வைத்து அவளை ஆச்சரியமாக பார்த்தார் ரமணியம்மா..

மீண்டும் உதய் கிருஷ்ணாவிற்கு ஃபோன் அடித்தார்..

ரமணியம்மா பேசுவதற்கு முன் "இதோ வந்துட்டேன்ம்மா.. அப்பார்ட்மெண்ட்குள்ள நுழைஞ்சிட்டேன்" என்றான் அவன்..

"டேய் அவ உன்னதான் தேடுறா.. நீதான் வேணுமாம்.. நிறுத்தாம அழுதுகிட்டே இருக்கா.. சீக்கிரம் வாடா.." அடுத்த கணம் அழைப்பு துண்டிக்கப்பட்டது..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காலிங் பெல் அடிக்கும் ஓசையில்.. ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தார் ரமணியம்மா.. மருமகளின் கதறலில் அவர் கண்களும் கலங்கியிருந்தது.. முகம் வெளிறிப் போயிருந்தார்..

"என்னம்மா ஆச்சு..?" புருவத்தை ஒற்றை விரலால் நீவிக்கொண்டு பதட்டத்தோடு கேட்டான் உதய்..

"தெரியலைடா.. உன்னைத்தான் ரொம்ப தேடறா..‌ என்னன்னு நீயே கேளு..‌ உன்கிட்டதான் சொல்லுவா.. எதுவா இருந்தாலும் பொறுமையா கேளு உதய்.. அவசரப்பட்டு கத்திடாதே.. தப்பா எதுவும் பேசிடாதே.. ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்கா.. பொறுமையா பேசுடா..!!" அம்மா தழுதழுக்கும் குரலோடு பேசிக்கொண்டே பின்தொடர்ந்து ஓடி வந்தது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை..

காலணியை கூட கழற்றி வைக்காமல் அறையை நோக்கி வேகமாக நடந்தான்..

குத்துக் காலிட்டு அமர்ந்து உடல் குலுங்க அழுது கொண்டிருந்தாள் பத்மினி.. அவள் அழுகை உதய் கிருஷ்ணாவின் இதயத்தை உலுக்கியது..

"பத்மி..னி.." உதய் கிருஷ்ணாவின் குரல் கமறியது.. ஏன் இப்படி அழுகிறாள் என்று தெரியாமல் அவன் உள்ளம் கலங்கியது..

"என்னமா என்ன ஆச்சு.. இதுக்காக இப்படி அழற.." பதட்டத்தோடு அவளைத் தொட்ட அடுத்த கணம் தொலைந்து போன குழந்தை தாயை கண்டதை போல் தாவி அணைத்துக்கொண்டாள் பத்மினி..

ஏதோ பயந்து போன குழந்தையாக அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டாள்.. அவன் இதயத்திற்குள் ஊடுருவ முயன்றாள்..

"என்னடா ஆச்சு.. இவளை பார்க்கவே எனக்கு பயமா இருக்கு எதுக்காக இப்படி அழறா.." ரமணியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டார்..

பாவம் யாரை சமாளிப்பான் அவன்..
அழுது கொண்டிருக்கும் பத்மினியையா..? அல்லது பயந்து நிற்கும் அம்மாவையா..?

"அம்மா ஒன்னும் இல்ல.. நான் பாத்துக்கறேன் நீங்க போங்க.. என்னன்னு நான் கேட்கறேன்.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.." அவளை இறுக அணைத்துக் கொண்டு அம்மாவை சமாதானப்படுத்தினான்..

"என்னனு கேளுடா உதய் எனக்கு நெஞ்செல்லாம் கலங்குது.. நான் எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்.. வாயவே திறக்க மாட்டேங்கறா.." என்றார் எச்சில் விழுங்கி..

"நான் கேட்கிறேன்மா.. நீங்க உங்க ரூமுக்கு போங்க இவளை பார்த்து நீங்க டென்ஷன் ஆகறீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்ல பத்மினியை நான் பார்த்துக்கறேன்.. நீங்க உங்க ரூம்ல போய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.."

"உதய்.."

"ஆமா நான் தான் சொல்றேன் இல்ல தயவு செஞ்சு கொஞ்சம் போங்க.. ப்ளீஸ்.." உதய் கெஞ்சலும் அதட்டலுமாய் சொன்ன பிறகு பத்மினியை கலவரத்தோடு ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வெளியேறினார் ரமணியம்மா.. அவர் சென்ற அடுத்த கணம் பத்மினியை அணைத்து கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான் உதய் கிருஷ்ணா..

"பத்மினி என்ன நடந்துச்சு..!! எதுக்காக இப்படி அழுதுட்டே இருக்க.. பதில் சொல்லுமா.." அவள் கண்களை ஆராய்ந்தான்.. நீர் நிறைந்த அந்த கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை.. அவளிடமிருந்து விம்மல் நிற்கவில்லை..

"பத்மினி என்னை பார் முதல்ல.. உனக்காக நான் இருக்கேன்.. எந்த பிரச்சினையா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. நான் பாத்துக்கறேன்..!!"

ம்ஹும்.. அவன் எவ்வளவு கேட்டும் ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை அவள் வாயிலிருந்து..

மீண்டும் மீண்டும் அவன் நெஞ்சோடு முகத்தை புதைத்துக் கொண்டாள்..

"வாயை திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கற..‌ அப்புறம் எதுக்காகடி என்னை தேடுன.. அவ்வளவுதானா என் மேல நம்பிக்கை உனக்கு.. பத்மினி என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. நீ இப்படி அழறதை பார்த்துட்டே நான் உட்கார்ந்து இருக்கணுமா.. அப்புறம் என்னடி ஆம்பள நானு.. பதில் சொல்லப் போறியா இல்லையா..!!" அதட்டியும் பார்த்து விட்டான்..‌ அவள் உடலில் அத்தனை நடுக்கம்..

"சரி.. ச..ர்..ரிஇஇ.. அழாதே.. ஒன்னும் கேட்கல.. நான் இருக்கேன்.. ப்ச்.. அழா.. தடா.." அவள் முதுகை தடவி கொடுத்தான்.. இந்த நிலையில் அவளால் பேசக்கூட முடியாது என்று புரிகிறது.. ஆனாலும் இப்படி அழும் அளவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள பதட்டம்..

முடிந்தவரை அவளை சமாதானப்படுத்த முயன்றான்..

"எ..எ..எனக்கு.."

"சொல்லுமா என்னடா வேணும் உனக்கு.. சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா..?"

"எ.. எ.. னக்கு தூ.. தூங்கணும்.. தூ..ங்கி எழு..ந்தா எல்.. லாம் சரியா போயிடும்.." என்று அழுகையோடு சொன்னவளை பரிதாபமாக பார்த்தான் உதய்..

"சரி தூங்கு.. படுத்துக்கோ.." தலையணை சரி செய்து அவளை படுக்க வைத்தான்.. உதய் கிருஷ்ணா சட்டையை இறுகப் பிடித்திருந்தாள்.. அவளோடு சேர்ந்து அவனும் படுத்துக்கொண்டு பத்மினியை அணைத்துக் கொண்டான்..

கண்களை மூடியிருந்தாள்.. ஆனால் தூங்கவில்லை.. இமைகள் அசைந்தன..

"தூங்குமா.. நான் உன் கூடதான் இருக்கேன்.." அவள் தலையை வருடி கொடுத்தான்.. உடல் நடுங்காதவாறு இறுக அணைத்துக் கொண்டான்.. நடுங்கும் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்.. பயந்து கொண்டிருந்த தண்ணீரை சலிக்காமல் துடைத்துக் கொண்டே இருந்தான்..

நெடு நேரத்திற்கு பிறகு அவள் தேகமும் மனமும் அமைதிப்பட்டிருக்க வேண்டும்.. அவளை இந்த நிலைக்கு கொண்டுவர படாத பாடு பட்டிருந்தான் உதய்..

அழுத களைப்பு பயம் நடுக்கம் எல்லாம் சேர ஒரு வழியாக உறங்கிப் போயிருந்தாள் பத்மினி..

"அழுத்தக்காரிடி நீ.. ஒரு வார்த்தை வாயை திறந்து சொல்ல மாட்டேங்கறியே.. இன்னும் கூட என்னை நம்பல நீ.."

"போ..டி.." வேதனையோடு அவளை மீண்டும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. பத்மினி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..

அலுங்காமல் அவளை வசதியாக படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.. கூடத்தில் ரமணியம்மா பதட்டமாக அமர்ந்திருந்தார்..

அவனை கண்டதும் முழங்காலை பிடித்து எழுந்து நின்று "என்னடா ஏதாவது சொன்னாளா..? என்ன விஷயம் ஏன் இப்படி அழறா!!" என்றார் படபடப்போடு..

ஆழ்ந்த மூச்செடுத்தான் உதய்.. "எதுவும் சொல்லல.. என்னன்னு தெரியலைமா தூங்கறா..!! கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா மனசு அமைதியாகிடும்.. அதுக்கப்புறம் சொல்லுவான்னு நினைக்கிறேன்..‌" என்றான் அவன் குழப்பத்தோடு..

"என்னடா நடந்திருக்கும்.. வர்ற வழியில யாராவது அவகிட்ட தப்பா..?" ரமணியம்மாவிற்கு தொண்டை அடைத்தது..

"ஐயோ அம்மா.. அப்படியெல்லாம் எதுவும் ஆகியிருக்காது.. பத்மினி ரொம்ப தைரியமான பொண்ணு.. அவளால எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியும்.. நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க..‌ உங்களுக்கு காபி போட்டு தரட்டுமா..?" அம்மாவை அமைதிபடுத்த வேறு வழி தெரியவில்லை..‌

"இல்ல.. அவ இயல்பாகனும்.. அதுவரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது.. எனக்கு எதுவும் வேண்டாம்..‌ அவ எழுந்தான்னா என்னை கூப்பிடு..‌!!" ரமணியம்மா தளர்ச்சியுடன் நகர்ந்து தன்னறைக்கு சென்று விட்டார்..

உதய் சோபாவில் அயர்வோடு அமர்ந்தான்..

"நான் வீட்டுக்கு போக லேட்டாகும்.. திவ்யா வீட்ல அவ குழந்தைக்கு பர்த்டே பங்க்ஷன்.." மிக நெருங்கி நின்று அவன் சட்டை பட்டன்களை திருகிக் கொண்டே சொன்னது ஞாபகம் வந்தது..

"ப்ச்.. எதுக்காக அங்கேயெல்லாம் போகணும்..‌ அதெல்லாம் வேண்டாம்.. வீட்டுக்கு போகலாம்.. எனக்கு என் கூடவே வந்துடு.." சலித்தான் உதய்..

"சும்மா இருங்க சார்.. திவ்யா எனக்கு நெருக்கமான தோழி.. பல நேரங்கள்ல அவ எனக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்கா.. கண்டிப்பா வரணும்னு சொல்லி இருக்கா.. போகாம எப்படி இருக்க முடியும்.. ஹான்.."

"கண்டிப்பா போகணுமா..!!" ஏக்கமாக கேட்டான்..

"கண்டிப்பா போகணும்.. இந்த மாதிரி நாலு நல்ல காரியங்களுக்கு போயிட்டு வந்தாத்தான் நமக்கு குழந்.." என்றவள் நாக்கை கடித்து அப்படியே நிறுத்திவிட்டு.. "ஒன்னும் இல்ல.. நான் போயிட்டு வரேன்.." என்றாள் வெட்கத்தோடு..

"என்னமோ சொல்ல வந்தியே..!!" உதய் கண்களை சுருக்கினான்..

"ஒன்னும் சொல்ல வரல..!! போயிட்டு வரேன்னு சொல்ல வந்தேன்..‌ என்றவள் கால்கள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு கதவு வரை சென்றவள் மீண்டும் அவனைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்து விட்டுத்தான் சென்றாள்.. அந்த புன்னகையும் கண்சிமிட்டலும் படமாக உள்ளத்தில் பதிந்து நிற்கிறது.. அதற்குள் இப்படி ஒரு விரும்பத் தகாத நிகழ்வு..

தனது மேனேஜருக்கு அழைத்து திவ்யாவின் எண் வாங்கி அவளுக்கு அழைத்தான்..

இவனுக்குத்தான் அவள் எண் புதிது.. அவளிடம் முதலாளியின் எண் என அலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்..

"ஹலோ சார்.." என்றாள் எடுத்தவுடன்.. அவள் குரலில் ஏதோ பதட்டம்..

"திவ்யா.." அழுத்தமாக அழைத்தான்.. "பத்மினி உன் குழந்தையோட பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தாளா..?"

"ஆ.. ஆமா.. சார்.. வந்துட்டு திரும்பி போயிட்டாளே..!!"

"அங்க என்ன நடந்துச்சு..?"

"சார்.. ஏன் அப்படி கேட்கறீங்க.. ஃபங்சன்ல கலந்துக்கிட்டா.. அப்புறம் கிளம்பிட்டா.. வேற எதுவும்..‌எ..எ எனக்கு தெரியாதே.."

"திவ்யா.." என்று நிறுத்தியவன் "பத்மினி என்னோட மனைவி.. நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி.." என்றான் அழுத்தமாக..

"சார்.." திவ்யாவின் குரலில் பெரிதாக அதிர்ச்சி..

"பத்மினி வீட்டுக்கு அழுதுகிட்டே வந்தா.. உனக்கு என்னமோ தெரிஞ்சிருக்குன்னு உன் குரலில் தென்படற பதட்டம் சொல்லுது.. என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா என்கிட்ட சொல்லிடு.. நீ சொல்லலைனாலும் கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நேரமாகாது.. ஆனா அதன்பிறகு விளைவுகள் படு விபரீதமாக இருக்கும்.. உன்னையும் நான் சும்மா விட மாட்டேன்.. நினைவிருக்கட்டும்.." உதய் மிரட்டலில் விதிர்த்துப் போனாள் திவ்யா

"இல்ல சார்.. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுடாதீங்க.. சத்தியமா நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிடறேன்.." என்று படபடப்போடு சொல்ல துவங்கினாள் திவ்யா..

தொடரும்.
Vechan paru aappuu...
 
Top