• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 29

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
132
"இங்க கொஞ்சம் வாங்க..!" திலோத்தமா வெண்மதியின் கைபிடித்து அழைத்துச் செல்ல.. நிவேதாவிற்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது..

தான் வந்ததிலிருந்து தன்னையோ தன் அக்காவையோ மதித்து ஒரு வார்த்தை பேசியதில்லை திலோத்தமா.. பார்க்கும்போது மட்டும் ஒரு செயற்கையான சிரிப்போடு நிறுத்திக் கொள்வாள்.. அதிலும் ஏதாவது பேச விழைந்து ஒரு நொடிக்கும் அதிகமாக அவள் முகத்தை பார்த்து விட்டால் போதும்..

"ஏன் இப்படி பாக்கறீங்க.. என் முகத்துல ஏதாவது எக்ஸ்ட்ராவா ரெண்டு கண்ணு நாலு மூக்கு முளைச்சிருக்கா என்ன.. நீங்க பாக்கறதை பாத்தா அப்படித்தான் இருக்கு..! என்னவோ யாரும் இப்படி வித்தியாசமா குறுகுறுன்னு பார்த்தாலே எனக்கு பிடிக்கறது இல்ல.." என்று சலிப்பாக பேசுவாள்..

"அப்படி இல்ல அண்ணி.. நீ எப்பவும் ரூமுக்குள்ள போய் அடைஞ்சிக்கறீங்களே.. அதான் கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசலாம்னு ஆசைப்பட்டேன் மத்தபடி ஒன்னும் இல்ல.." நிவேதா விளக்கம் தர முன் வந்தால்..

"என்னத்த பெருசா பேசிட போறோம்.. தேவையில்லாத புரணி.. இல்லன்னா உதவாத குடும்ப கதை.. எனக்கு இதெல்லாம் பிடிக்கறதே இல்ல நிவேதா.. ரெண்டு பொம்பளைங்க ஒன்னா உக்காந்தா ஊர்வம்பு தான் பேச தோணும்.. நீயும் அக்காவும் உட்கார்ந்து பேசுறதைதான் நான் கேட்டிருக்கேனே.. முக்கால்வாசி என்ன பத்தி குறை சொல்லி பேசுவீங்க அப்படித்தானே..!" என்று விகற்பமாக புன்னகைப்பாள்..

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்களை பத்தி நாங்க ஏன் பேச போறோம்.."

"எனக்கு எல்லாம் தெரியும்..! பத்து நிமிஷம் போச்சுன்னா குழந்தையை பத்தி கேட்க ஆரம்பிப்பீங்க.. அந்த கோவிலுக்கு போங்க.. இந்த பரிகாரம் பண்ணுங்க.. எங்க ட்ரீட்மென்ட் எடுக்கறீங்கன்னு ஆரம்பிப்பீங்க.. ரொம்ப டிப்ரஷன் ஆகுது நிவேதா.. உன் அக்கா குறுகுறுன்னு என்னை வாட்ச் பண்றதே எனக்கு பிடிக்கல.. இதுல வேற நீயும் அப்படித்தான் பாக்கற.. இந்த மாதிரியான சூழ்நிலையில உங்கிட்ட நான் என்ன பேச முடியும் சொல்லு.. இதுக்குத்தான் எதுலயும் சம்பந்தப்படாமல் போய் ரூம்ல உட்கார்ந்துக்கறது.." அவள் முகத்தை சுழித்து விட்டு சென்ற பிறகு நிவேதா நொந்து போவாள்‌..

இதே த்வனியில் வெண்மதியிடம் பேசியிருந்தால் அவள் ஊரைக் கூட்டி ஒரு பஞ்சாயத்து வைத்திருப்பாள்‌.

நிவேதா என்பதால் மனம் வருத்தப்பட்டு திலோத்தமா பேசியதை அப்படியே கிடப்பில் போட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவாள்..

அப்படிப்பட்டவள் இன்று வெண்மதியை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறாள் என்றால் ஏதோ பெரிய விவகாரம் போலிருக்கிறது.. என ஆர்வமாக எட்டிப் பார்த்தாளேயன்றி ஒட்டு கேட்க முயலவில்லை நிவேதா..

"என்னங்க இதெல்லாம்..!" திலோத்தமா வெண்மதியிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"என்னாச்சு திலோத்தமா..?"

"அந்த பொண்ணுதான் லூசு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்குன்னா அத்தையும் அதுக்கேத்தாப்புல தாளம் போடறாங்க.. வயசுக்கேத்த மாதிரி நடந்துக்க வேண்டாமா..? சின்ன பொண்ணு ஏதாவது கிறுக்குத்தனமா பேசினா பெரியவங்கதான் கண்டிக்கணும்.. இங்க உங்க அம்மா என்னன்னா நானும் கூட சேர்ந்து விளையாடுறேன்னு அந்த பொண்ணையும் சேர்த்து உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கறாங்க.. இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா..?"

"முதல்ல அம்மாவை குறை சொல்றத விட்டுட்டு என்ன சங்கதின்னு சொல்லு.." வெண்மதியின் பேச்சில் ஒரு கடுமை தெரிய திலோத்தமா சுதாரித்துக் கொண்டாள்‌.

"ஏதோ ஒரு நாள்ல அம்மாவா இருக்கணுமாம்.. புருஷனுக்கு வேலை செய்யக்கூடாதாம் பிள்ளைகளை கவனிக்கக்கூடாதாம் பேரப் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டக்கூடாதாம்.. ஒரு நாள் முழுக்க இந்த பொண்ணோட பாதார விந்தமே சொர்க்கம்னு உக்காந்து இருக்கனுமாம்.. என்னங்க இதெல்லாம்.. இருந்தாலும் அந்த பொண்ணுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்கறீங்க.. இப்படியெல்லாம் பண்ணக்கூடாது.. வந்த இடத்தில அடக்க ஒடுக்கமா ஒழுங்கா இருக்கணும்னு நான் போய் அந்த பொண்ணை கண்டிச்சேன்.. ஆனா உங்கம்மா போய் அவள பேசி சரிகட்டி நீ சொல்றதைல்லாம் நான் செய்வேன்னு தலையாட்டிட்டு வந்தா அப்புறம் எனக்கென்ன மரியாதை..?" மேல் மூச்சு வாங்கினாள் திலோத்தமா..

வெண்மதியின் கண்கள் தீவிர பாவனையுடன் நிலை குத்தி நின்றது..

"அப்படியா நடந்துச்சு.. எங்க அம்மா அப்படியா சொன்னாங்க..? என்னால நம்பவே முடியலையே.." வெண்மதி கொதிக்க திலோத்தமாவிற்குள் கொண்டாட்டம்..

"நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்..? ஒத்துக்கறேன் உங்கம்மாவுக்கு கருணை சுபாவம் ஜாஸ்தி.. அதுக்காக வீட்டுக்கு வந்து போறவங்களுக்கெல்லாம் சேவை செய்யணும்னு என்ன அவசியம்.. நீங்க போய் என்னன்னு கேளுங்க..!" என்றதும்..

"விடுங்க இந்த விஷயத்தை நான் பாத்துக்கறேன்.. அதெப்படி எங்கம்மா எங்க எல்லாரையும் மறந்துட்டு அவளுக்கு மட்டும் அம்மாவா வாழ்ந்திட முடியுமா.. ஒரு நாளோ‌‌.. நூறு நாளோ.. நூறு வருஷமா.. எங்க அம்மாவுக்கு அவங்க பெத்த குழந்தைகளான நாங்க மட்டும்தான் பிள்ளைங்க.. நாளைக்கு என்னை மீறி எப்படி அவகிட்ட போறாங்கன்னு நானும் பாக்கறேன்.."

"என்ன சொல்றீங்க எனக்கு புரியலையே..?"

"எப்பேர்ப்பட்ட கருணை உள்ளம் கொண்டவங்களா இருந்தாலும் அம்மாவுக்கு அவங்க பெத்த குழந்தைகள் தான் முதன்மையானவங்க..! நாளைக்கு நான் பண்ற ரகளையில ஐயோ அம்மா என் பொண்ணுதான் முக்கியம்னு என் பக்கம் ஓடி வந்துடுவாங்க..! அந்த தேம்பாவணி ஏமாந்து போக போறா.. இதுக்கப்புறமா இந்த மாதிரி கிறுக்குத்தனமான விளையாட்டு விளையாடுவாளா என்ன?"

"சரியா சொன்னீங்க..! இந்த வீட்ல அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு எல்லாத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கற அந்த தேம்பாவணிக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கனும்.."

"நீ கவலையே படாத திலோத்தமா.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.. நீ வழக்கம் போல ரூம்ல போய் ரெஸ்ட் எடு.." என்றதும் திலோத்தமா அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்..

மறுநாள் காலையில்..

முதல் ஆளாக வருண் வந்து அவளை எழுப்பி குட் மார்னிங் சொல்லிவிட்டு சென்ற பிறகு... தேம்பாவணியின் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க அனுப்புவது வரை அனைத்துமே அவளுக்காக சாரதா வழக்கமாக செய்யும் செயல்கள் தான்.. அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை..

பொருத்தமான உடையை எடுத்து வைத்து நெற்றியில் முத்தமிட்டு.. சாப்பிட அழைத்து வந்து உணவை பரிமாறி.. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது..

வெண்மதி இங்கே ராஜேந்திரன் நிவேதா குழந்தைகள் மூவரும் என அனைவரையும் சேர்த்துக்கொண்டு மொத்தமாக வட்டமேஜை மாநாடு போட்டிருந்தாள்..

"இங்க பாருங்க..! நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. இன்னைக்கு யாரும் அம்மாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அப்பா உங்களுக்கும் சேர்த்து தான்.."

"ஏன்மா அப்படி..?"

"இன்னிக்கு முழு நாளும் அம்மா தேம்பாவணி கூட இருக்க போறாங்க.. அவளுக்கு மட்டுமே அம்மாவா..!"

"இது என்ன கூத்தா இருக்கு.. அப்ப அம்மா நம்மள கவனிக்கவே மாட்டாங்களா.. நம்ம கூட பேச மாட்டாங்களா.." நிவேதா கேட்க..

"ஆமா அப்படித்தான்..! ஒரு நாள் அம்மா உன்கிட்ட பேசலைன்னா எதுவும் குடி முழுகி போய்டாது.. இத்தனை நாள் அம்மாவோட முந்தானையை புடிச்சிட்டுதானே தொங்கிட்டு இருந்தோம்.. இன்னைக்கு ஒரு நாள் அவங்க தேம்பாவணியை கவனிச்சுக்கட்டும்.. நிவேதா சும்மா போய் அம்மா அம்மான்னு நிக்காதே.. ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. நான் செஞ்சி தரேன்.. அம்மா மேல நமக்குள்ள உரிமையை நிலைநாட்டிக்க இது நேரமில்லை புரியுதா.."

"ம்ம்..!" என அரை மனதாக தலையசைத்தாள் நிவேதா..

"உங்களுக்கும் அதே ரூல்ஸ் தான் பசங்களா..! சும்மா சும்மா பாட்டிய போய் டிஸ்டர்ப் பண்ண கூடாது.. சும்மா சும்மா என்ன..? சுத்தமா அந்த பக்கமே போகக்கூடாது..! சமைச்சு சாப்பாடு போடறதுலருந்து.. இன்னைக்கு முழுக்க எல்லா வேலையும் நான்தான் உங்களுக்கு செய்வேன்.. ஏதாவது வேணும்னா என்னைதான் கேக்கணும்.. பாட்டி கிட்ட போகவே கூடாது புரிஞ்சுதா.."

பிள்ளைகளும் தலையசைத்தனர்..

"அம்மா நேத்து செஸ் ஆடும் போது தேம்பாவணி அக்கா ஒரு பந்தயம் கட்டுனாங்களே அதுதானே இது..!" சாருமதி கேட்க..

"அதேதான்..!" என்றாள் வெண்மதி..

"ஆனா அவங்க உங்களை தானே அம்மாவா இருக்க சொன்னாங்க..!"

பெருமூச்சு வீட்டு மகளை பார்த்தாள் வெண்மதி..

"ஒரு பர்ஃபெக்ட்டான அம்மாவா என்னால இருக்க முடியும்ன்னு தோணல.. எனக்கு தெரியாமலே ஏதாவது தப்பு பண்ணிட்டா அவ மனசு வாடிடும்.. அதனாலதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஆனா உங்க பாட்டி அப்படி இல்ல.. எங்களையும் உங்களையும் வளர்த்தவங்க.. அவங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி.. தேம்பாவணி மாதிரி மனசளவுல குழந்தையா இருக்கற ஒரு பொண்ண எப்படி ஹாண்டில் பண்ணனும்னு அவங்களுக்கு தெரியும்.. இந்த பந்தயத்தில் ஜெயிக்க போறது அம்மா மட்டும் இல்ல தேம்பாவணியும் தான்.." என்ற மகளை பெருமையாக பார்த்தார் ராஜேந்திரன்..

அதனால் உணவு மேஜையில் கூட மற்றவர்களை நிவேதாவும் வெண்மதியும் கவனித்துக் கொள்ள.. அம்மா.. பாட்டி.. என பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எந்த விதத்திலும் சாரதாவை தொந்தரவு செய்யவில்லை..

வருணுக்கு இந்த பந்தய விஷயமெல்லாம் தெரியாது.. வழக்கமாகவே தன் தாய் தேம்பாவணி மீது பிரத்யேக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பதால் அவன் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை..

"அம்மா" என்று அழைக்க வரும்போது மட்டும்.. என்னடா வேணும் உனக்கு என்று பாய்ந்து கொண்டு வந்தாள் வெண்மதி.

"பீர்க்கங்காய் தோலை சீவி சட்னிங்கற பேர்ல ஒன்னு பண்ணி இருக்கியே.. அதை இந்த பக்கம் தள்ளு..!" என்றதும் கிண்ணத்தை எடுத்து வந்து சட்னியை பரிமாறுவது போல்..

"நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. இன்னைக்கு முழுக்க நீ அம்மாவை தொந்தரவு பண்ணாத..! ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.." அவன் காதுக்குள் ரகசியமாகச் சொன்னாள் வெண்மதி..

"ஏன்.. என்னாச்சு..?" கண்கள் சுருக்கினான் வருண்..

"நம்ம மம்மிக்கும் தேம்பாவணிக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தயமாம்..! இன்னைக்கு முழுக்க அம்மா அவளுக்கு மட்டும் தான் சொந்தமாம்.."

"அம்மா வேணும்னா கேட்டா..?" நம்பாதவன் போல் கேட்டான் வருண்..

"ஆமாம்.."

"நிஜமாவே அம்மா தான் வேணும்னு கேட்டாளா..?"

"பின்ன என்னடா நீ வேணும்னா கேப்பா..?" வெண்மதி பொறுமையிழந்து கடுப்பாக அழுத்திச் சொல்ல..

ஏதோ சொல்ல வந்தவன் வாயை மூடிக்கொண்டு சரிதான் என தலையசைத்தான்.

"இப்ப நான் என்ன பண்ணனும்.. தேம்பா கிட்ட பேசவே கூடாதா.." சற்று கோபமாகவே கேட்டான் வருண்..

அது நடக்கும் காரியமல்லவே..!

சரியாக உண்ணுகிறாளா என்ற சாக்கில் நிமிடத்திற்கொருமுறை அவளை பார்வையால் சீண்டுவதும்.. இரண்டு வாய் உண்ணும் இடைவெளிகளில் நான்கைந்து வார்த்தைகள் பேசி விடுவதும் அவன் வழக்கமல்லவா..

"நீ அம்மாகிட்ட பேசாம இரு.. அது போதும்..!" என்றதும் வெகு சாதாரணமாக சரி என தலையசைத்தான்..

"என்ன ரொம்ப சாதாரணமா சரின்னு சொல்லிட்டான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"சரி டெஸ்ட் பண்ணி பாப்போம்.." என்ற ரீதியில்..

"அப்படியே திலோத்தமா கிட்டயும் பேசாம இரு.." என ஒரு ஃப்ளோவில் சொல்ல.. அதற்கும் சரி என்று தலையசைத்தான் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்..

"நான் சொன்னது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..! புரிஞ்சுதான் தலையாட்டறானா..?" வெண்மதி தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருக்க..

"எல்லாம் புரிஞ்சுதான் தலையாட்டறேன்.. நீ போய் உன் புள்ளைங்கள கவனி.." பற்களுக்குள் அழுத்திச் சொன்னான் வருண்..

"இன்னும் கொஞ்சம் சட்னி போட்டுக்கோ.." என்று கிண்ணத்தை அவன் தட்டில் கவிழ்த்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் வெண்மதி..

அவள் ஏதாவது குட்டையை குழப்புவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்த திலோத்தமா.. வெண்மதி சூழ்நிலையை தேம்பாவணிக்கு சாதகமாக்க முயல்வதை கண்டுகொண்டு அடிவயிற்றுக்குள் புகைந்தாள்..

"இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம் வீட்ல என் கூடவே இரு..!" சாரதா சொல்ல ஊருக்கு முன்னால் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தான் வரூண்..

"ஏன்.. எதுக்காக அவளை காலேஜ் லீவு போட சொல்றீங்க.. படிப்பு பாழாகாதா..?"

"ஒரு நாள்ல படிப்பொன்னும் கெட்டுப் போய்டாது.. நாளைக்கு போய் ஃபிரண்ட்ஸ் கிட்ட நோட்ஸ் வாங்கி எழுதிக்கட்டும்.. இன்னிக்கு முழுக்க அவ என் கூடதான் இருப்பா.. நீ புறப்படு.." சாரதா சொன்ன பிறகு தேம்பாவணியை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

பல வருடங்களாய் தவமாய் தவமிருந்து ஒற்றைப் பிள்ளையை பெற்ற ஒரு தாய்.. அந்த குழந்தை மீது எத்தனை பேரன்பை கொட்டித் தீர்ப்பாளோ அந்த அளவிற்கு தனது அன்பை வெளிப்படுத்தினாள் சாரதா..

அந்த அன்பு பிரவாகத்தை தேம்பாவணியால் தாங்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

நடிக்கவில்லை.. முழுமையாக தேம்பாவணிக்கு அன்னையாக உருமாறிப் போயிருந்தாள் சாரதா..

ஒரு கைக்குழந்தையை பக்கத்திலேயே இருத்திக் கொள்வது போல்.. சாரதாவின் தாயன்பு அபரிமிதமாக பொங்கி வழிந்தது..

கண்கலங்கி போனாள் தேம்பாவணி..

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே…
சொர்ணமே என் சொர்ணமே…
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே…
சர்வமே என் சர்வமே…

உன் உச்சிதனை முகர்ந்து…
உனக்கெனவே இருப்பேன்…
என் உயிர் அது போனாலும்…
உன் அருகினில் நான் கிடப்பேன்…

தன் மூன்று பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகளின் வழிவந்த பேரப்பிள்ளைகளுக்கும் கூட இப்படி உருக்கமாக தாலாட்டு பாடினாளா தெரியாது..

இவளை மடியில் கிடத்திக் கொண்டு தலையை கோதியபடி பாடினாள்..

தாகத்தில் தவித்து வாய் பிளக்கும் குருவி குஞ்சை போல்.. அந்த சின்னஞ்சிறு மனதின் ஏக்கத்தை சாரதாவால் புரிந்து கொள்ள முடிந்தது..

தலைவாரி பூச்சூட்டி தாவணி உடுத்த சொல்லி தன் நகைகளை அணிவித்து திருஷ்டி எடுத்து..

"என் குழந்தையை பாத்தியா.. இவ்ளோ அழகா இருக்கா..?" என்று தான் பெற்ற பிள்ளைகளிடமே தேம்பாவணியை முன்னிறுத்தி பெருமையாக சொல்லி..

அம்மம்மா.. தேம்பாவணிக்கு அடி நெஞ்சிலிருந்து ஏதோ உணர்வுகளாக பொங்கி பெருகி மூச்சடைத்தது..

ஜாஜ்வல்யமாய் கடவுளை நேரில் கண்டது போல் ஓவென்று அழவேண்டும் போல் தோன்றியது..

"ப்ளீஸ் போதும் இதோட நிறுத்திக்கலாம்..!" அவள் சொன்னபோது கூட..

"ஏன்.. பயப்படுறியா தேம்பாவணி என்னோட அன்பை உன்னால ஏத்துக்கவே முடியலையா..?" தெய்வீக புன்னகையுடன் சாரதா கேட்க..

"அப்படித்தான் நினைக்கறேன்..! ரொம்ப நாள் பசியோடு இருந்தவனுக்கு திடீர்னு விருந்து சாப்பாட்டை கண் முன்னாடி வச்சா கூட சாப்பிட முடியாது.. வயிறெல்லாம் வலிக்கும்.. வாந்தி வர்ற மாதிரி இருக்கும்..! அந்த உணவை அவன் உடம்பு ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுக்கும்.. இப்ப அந்த மாதிரி தான் நானும்."

"உங்க அன்பு.. இந்த கவனிப்பு.. இதெல்லாம் என்னால தாங்க முடியல.. பயமா பரவசமா சந்தோஷமா என்னன்னு தெரியல.. இப்படி ஒரு பந்தயத்தை நான் ஆரம்பிச்சிருக்கவே கூடாது.."

நெஞ்சை பிடித்துக் கொண்டவளுக்கு தொண்டை குழிக்குள் இனிமையாய் ஏதோ அடைத்தது.. ஆனாலும் இதை தொடர விரும்பவில்லை அவள்..

காலாகாலத்துக்கும் கிடைக்காத இந்தப் பேரன்பை இன்று மட்டும் அனுபவித்து என்ன பயன்..!

இதைவிட தோல்வி எவ்வளவோ மேல் என்று தோன்றியது..

சாரதாவின் அத்தனை அன்பையும் வறண்ட மண் போல உள்வாங்கிக் கொண்டாள்.. அகல குழி நீரை விழுங்குவது போல் உள்ளிழுத்துக் கொண்டாள்..

நடு நடுவே சாரதாவை சோதனை செய்து கடுப்பேற்ற..

"கை அமுக்கி விடுங்க.. காலை பிடித்து விடுங்களேன்.. என் கூட வந்து கார்ட்டூன் பாருங்க.. சாப்பாடு ஊட்டி விடுங்க.." தேம்பாவணியின் சின்ன சின்ன தொல்லைகளை கூட என்னை ஜெயிக்க முடியுமா நீ என்ற ரீதியில் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அவள் தேவையை பூர்த்தி செய்தாள் சாரதா..

அவள் பிஞ்சு பாத விரல்களை சொடக்கெடுத்து பாசத்தோடு தன் கையில் அணைத்து முத்தமிட.. அதிர்ந்து போனாள் தேம்பா..

ஒரு தாயால் மட்டுமே தன் குழந்தையின் பாதங்களை கௌரவமில்லாமல் தொட்டு முத்தமிட முடியும்.. அந்த ஒரு நொடியில் சாரதா ஜெயித்திருந்தாள்..

தேம்பாவணி தோற்றுப் போனாள்..

கண்ணீர் கரகரவென வழிந்தது..

எனக்கு யாரும் அம்மாவா இருக்க முடியாது.. எப்பவும் நான்தான் ஜெயிப்பேன்.. இத்தனை வருடங்களாய் சோகம் கலந்த அழுகையோடு அவள் கத்தி தீர்த்த கர்வமெல்லாம் தவிடுபொடியானது..

இரவு நேரம்..!

பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவளை இழுத்து வந்து தோட்டத்தில் அமர வைத்து தட்டில் உணவை பரிமாறி உண்ண செய்தாள் சாரதா..

பாட்டி எனக்கு? என பிள்ளைகள் அருகில் வரவில்லை..

அம்மா.. என்று அழைத்துக் கொண்டு மகள்களும் கிட்ட வரவில்லை..

"உங்க பொண்ணுங்களும் பேரப்பிள்ளைகளும் உங்களை கண்டுக்கவே இல்லையே என்ன ஆச்சு..!" தேம்பாவணி கேட்டபோது கூட..

"இன்னைக்கு நான் உனக்கு மட்டும்தானே அம்மா.. அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..?" புன்னகையோடு சொல்லியிருந்தாள் சாரதா..

"உன்ன பத்தி வாய திறக்க மாட்டேங்கறியே பாப்பா..?"

இரவில் இருவரும் தனியாக அமர்ந்திருந்த போது சாரதா கேட்டாள்..

"சொல்ல பெருசா என்ன இருக்கு..? நான் சின்ன குழந்தையா இருந்தபோது என் அம்மா அப்பாவை விட்டுட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்க.. எனக்கு அப்பா மட்டும்தான்.. அவர் தான் எல்லாமே..!" கண்களை துடைத்துக் கொள்ள..

"ஏன் பொய் சொல்ற..? அப்பாவும் உன்னை சரியா பாத்துக்கல அப்படித்தானே.." என்றவளை திகைப்புடன் ஏறிட்டு பார்த்தாள் தேம்பா..

"எ.. எப்படி சொல்றீங்க..?"

"அம்மாவோ அப்பாவோ அவங்க காட்டற அன்புல வித்தியாசம் ஏது..? உன்னை பெற்றவர் உன்னை சரியாக கவனிச்சிருந்தா தாயன்புக்காக நீ இவ்வளவு ஏங்கி போயிருக்க மாட்ட.. இதை இந்த ஒரே நாள்ல நான் புரிஞ்சுகிட்டேன் பாப்பா..!" அமைதியான குரலில் சாரதா சொல்ல.. பெருகிவரும் கண்ணீரை மறைக்க அவள் மடியில் படுத்துக்கொண்டாள் தேம்பாவணி..

"உங்களுக்கு தூக்கம் வருதா..?"

"இல்ல.. அப்படியே தூக்கம் வந்தாலும் நான் உன் கூடவே படுத்துக்கறேன்.. நீ தூங்கலையா பாப்பா..!"

"வருண் சார் வரலையே..! அவர் முகத்தை பார்க்காம எனக்கு தூக்கம் வராது.." தேம்பாவணி சொன்னதில் சாரதாவின் புருவங்கள் உயர்ந்தாலும்.. அதை விகற்பமாக எடுத்துக் கொள்ளாமல் அவள் தலையை கோதிய வண்ணம் அமர்ந்திருந்தார்..

"பாப்பா நான் ஒன்னு சொல்லுவேன் கேட்டுக்கறியா..?"

மடியில் படுத்த வண்ணம் தலையசைத்தாள் தேம்பாவணி..

"பந்தயம் முடிஞ்சதனால நாளையிலிருந்து நான் உனக்கு அம்மா இல்லைன்னு ஆகிடாது.. நமக்குள்ளே இருக்கிற இந்த உறவு ஒரு நாளைக்குள்ள முடிஞ்சு போறதில்லை.. இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே நீ என்னோட குழந்தைதான்.. எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒரு தாய்க்கு தன்னுடைய ஒவ்வொரு குழந்தையும் ரொம்ப ஸ்பெஷல் .. நீயும் எனக்கு அப்படித்தான்.. என் அன்பு எப்பவுமே மாறாது.. இதை நீ மனசுல வச்சுக்கணும்.."

தேம்பாவணி சாரதாவின் மடியில் அழுத்தமாக முகம் புதைத்தாள்..

அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ…
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ…
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ…
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ…

அந்த வானம் இருக்கும் வரையிலே…
உன் வேலியா நான் இருப்பேன்…
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே…
கருமாரியா மாறி நிப்பேன்…

விழிகள் தானாகவே மூடிக்கொண்டது இன்பமான உறக்கத்தில்..

எப்போதும் அவளறைக்கு பத்து மணிக்கு வரும் வருண் இன்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருந்தான்.. அதுவும் உடை கூட மாற்றவில்லை..

கதவை திறந்து கொண்டு அவன் அவசரமாக உள்ளே நுழைய சாரதா கட்டிலிலிருந்து எழுந்து நின்றார்..

"என்னடா வருண்.. இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? டிரஸ் கூட மாத்தல..!"

"இல்லம்மா.. இவ உங்களை என்ன பாடு படுத்துறாளோன்னுதான் சீக்கிரம் வந்துட்டேன்.."

"அவ என்னடா படுத்திடப் போறா.. நல்ல பொண்ணு.. பாவம்.. வாழ்க்கையில அவளுக்கு என்ன கஷ்டமோ.. அன்புக்காக ஏங்கற குழந்தைடா அது..!"

வருண் புன்னகைத்தான்..

"சரி நீங்க போங்க.. நான் அவளை பாத்துக்கறேன்.."

"நீ என்ன பாத்துக்க போற.. அவ தூங்கிட்டா.." என்ற பிறகுதான் தேம்பாவணியை எட்டிப் பார்த்தான் வருண்..

இத்தனை நேரம் சாரதா மறைத்திருந்ததால் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.. தேம்பாவணி அயர்ந்து உறங்கி இருப்பதை கண்டதும் அவன் முகம் சுருங்கி போனது..

"ஓ.. நான் வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டாளா..!" ஏதோ ஒரு ஏமாற்றத்துடன் கேட்க..

"ஆமா..!" அவளை தொந்தரவு பண்ணாம வெளிய வா.. நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன்.." என்று விட்டு சாரதா கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட.. அங்கிருந்து நகர மனமில்லாமல் அப்படியே நின்று உறங்கிக் கொண்டிருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான் வருண்..

பக்கத்தில் வந்து அவள் முகம் நோக்கி குனிந்து காது மடல் முடியை மெல்ல நீவி விட்டவன் "இனிமே உனக்கு நான் தேவையில்லை போலிருக்கே..! என்னை மறந்துட்டியா தேம்ஸ்.. எனிவேஸ் குட் நைட்.." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு.. நீண்ட மூச்சுடன் நிமிர்ந்தவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து கதவை திறக்க போக..

சகசரவென்ற சத்தத்துடன் அவன் திரும்பி சுதாரிக்கும் முன் முதுகின் பின்னால் சாய்ந்தது சுகமான கனமொன்று..

ஒரு கணம் திடுக்கிட்டு பின் சுதாரித்தவன் கதவை சாத்திவிட்டு அவள் பக்கமாக திரும்பினான்..

"ஏய்.. தேம்ஸ்.. நீ இன்னும் தூங்கலையா..?" அதிர்ச்சியோ ஆனந்தமோ.. ஏதோ ஒரு உணர்வு ஒன்று அவன் முகத்தில் படர கண்கள் விகசித்து அவன் கேட்ட நேரத்தில்..

மார்பில் சாய்ந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் தேம்பாவணி.. அவள் தேகம் குலுங்கியது..

"ஏய்.. தே..ம்ஸ்..! அழறியா என்னை பாரு.." தன்னோடு சேர்ந்திருந்தவளை பிரித்து அவள் முகத்தை ஆராய்ந்தான்..

வேகமாக கண்ணீரை துடைக்க வந்த அவன் கரத்தை தடுத்துவிட்டு தீர்க்கமாக அவன் முகத்தை பார்த்தாள் தேம்பாவணி..

"எனக்கு உதவி செய்யறதா சொல்லி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒரு நல்ல குடும்பத்தை தந்தீங்க.."

"என் ஃப்ரெண்ட்ஸ்ஸை எல்லாம் திரும்ப தந்து ஒரு நல்ல நட்பை அறிமுகப்படுத்தினீங்க.."

"சந்தோஷம்னா எப்படி இருக்கும்னு அடையாளம் காட்டுனீங்க.."

"இப்போ எனக்காக ஒரு அம்மாவை தந்திருக்கீங்க.."

"ஒரு நல்ல நண்பனா எப்பவும் என் கூடவே இருக்கீங்க.."

"ஒரு அப்பாவோட அரவணைப்பு எப்படி இருக்கும்னு எனக்கு உணர்த்தி இருக்கீங்க.."

"எனக்காக இவ்வளவு செஞ்ச உங்களுக்காக நான் என்ன செய்வேன்.. இதுக்கெல்லாம் பதிலா என்னால என்ன தர முடியும்..!" அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்து நின்றது..

அந்த விழிகளையும் அவள் வார்த்தைகளையும் உள்வாங்கி உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கபோனவன் சட்டென சுதாரித்து

"ஏய்.. லுசு.. என்னாச்சு உனக்கு?" என்று.. வார்த்தைகளை முடிக்கும் பாய்ந்து அவன் சட்டையை இழுத்து.. கழுத்தோடு கரம் கோர்த்து நெஞ்சோடு மோதி அவன் இதழ்களை சிறை பிடித்திருந்தாள் தேம்பாவணி..

கண்கள் விரித்து திகைத்துப் போனான் வருண்..

அவனுக்கும் இதுதான் முதல் முத்தம்.. அவளுக்காவது கன்னத்திலோ நெற்றியிலோ முத்தம் தந்திருக்கிறான் அவள் திருப்பித் தந்த முத்தம் நேரடியாக இதழில்..

அவன் பலத்திற்கு அவளை விலக்கி தள்ளியிருக்கலாம்.. ஆனால் அவன் அதை செய்யவில்லை..

அனுபவமில்லாத அதிக அன்பு கொண்ட மழலை மனம் படைத்த ஒரு பெண்ணின் இதழ் கடிப்பில் முழு முற்றாக தன்னை இழந்து கொண்டிருந்தான் வருண்..

விலகு விலகு என்று மனம் துடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல்.. உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் அவள் இடை வளைத்து இதழ்களுக்குள் ஆழமாக புதைந்து போனான் அந்த மனநல மருத்துவன்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
116

"என்னத்த பெருசா பேசிட போறோம்.. தேவையில்லாத புரணி.. இல்லன்னா உதவாத குடும்ப கதை.. எனக்கு இதெல்லாம் பிடிக்கறதே இல்ல நிவேதா.. ரெண்டு பொம்பளைங்க ஒன்னா உக்காந்தா ஊர்வம்பு தான் பேச தோணும்.. நீயும் அக்காவும் உட்கார்ந்து பேசுறதைதான் நான் கேட்டிருக்கேனே.. முக்கால்வாசி என்ன பத்தி குறை சொல்லி பேசுவீங்க அப்படித்தானே..!" இன்று விகற்பமாக புன்னகைப்பாள்..

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்களை பத்தி நாங்க ஏன் பேச போறோம்.."

"எனக்கு எல்லாம் தெரியும்..! பத்து நிமிஷம் போச்சுன்னா குழந்தையை பத்தி கேட்க ஆரம்பிப்பீங்க.. அந்த கோவிலுக்கு போங்க.. இந்த பரிகாரம் பண்ணுங்க எங்க ட்ரீட்மென்ட் எடுங்க.. ரொம்ப டிப்ரஷன் ஆகுது.. உன் அக்கா குறுகுறுன்னு என்னை வாட்ச் பண்றதே எனக்கு பிடிக்கல.. இதுல வேற நீயும் அப்படித்தான் பாக்கற.. இந்த மாதிரியான சூழ்நிலையில உன்கிட்ட நான் என்ன பேச முடியும் சொல்லு.. இதுக்குத்தான் எதுலயும் சம்பந்தப்படாமல் போய் ரூம்ல உட்கார்ந்துக்கறது.." அவள் முகத்தை சுழித்து விட்டு சென்ற பிறகு நிவேதா நொந்து போனாள்‌..

இதே த்வனியில் வெண்மதியிடம் பேசியிருந்தால் அவள் ஊரைக் கூட்டி ஒரு பஞ்சாயத்து வைத்திருப்பாள்‌.

நிவேதா என்பதால் மனம் வருத்தப்பட்டு அதை அப்படியே கிடப்பில் போட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டாள்..

அப்படிப்பட்டவள் இன்று வெண்மதியை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறாள் என்றால் ஏதோ பெரிய விவகாரம் போலிருக்கிறது.. என ஆர்வமாக எட்டிப் பார்த்தாளேயன்றி ஒட்டு கேட்க முயலவில்லை நிவேதா..

"என்னங்க இதெல்லாம்..!" திலோத்தமா வெண்மதியிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"என்னாச்சு திலோத்தமா..?"

"அந்த பொண்ணு தான் லூசு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்குன்னா அத்தையும் அதுக்கேத்தாப்புல தாளம் போடறாங்க.. வயசுக்கேத்த மாதிரி நடந்துக்க வேண்டாமா..? சின்ன பொண்ணு ஏதாவது கிறுக்குத்தனமா பேசினா பெரியவங்கதான் கண்டிக்கணும்.. இங்க உங்க அம்மா என்னன்னா நானும் கூட சேர்ந்து விளையாடுறேன்னு அந்த பொண்ணையும் சேர்த்து உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கறாங்க.. இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா..?"

"முதல்ல அம்மாவை குறை சொல்றத விட்டுட்டு என்ன சங்கதின்னு சொல்லு.." வெண்மதியின் பேச்சில் ஒரு கடுமை தெரிய திலோத்தமா சுதாரித்துக் கொண்டாள்‌.

"ஏதோ ஒரு நாள்ல அம்மாவா இருக்கணுமாம்.. புருஷனுக்கு வேலை செய்யக்கூடாதாம் பிள்ளைகளை கவனிக்கக்கூடாதாம் பேரப் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டக்கூடாதாம்.. ஒரு நாள் முழுக்க இந்த பொண்ணோட பாதார விந்தமே சொர்க்கம்னு உக்காந்து இருக்கனுமாம்.. என்னங்க இதெல்லாம்.. இருந்தாலும் அந்த பொண்ணுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்கறீங்க.. இப்படியெல்லாம் பண்ணக்கூடாது.. வந்த இடத்தில அடக்க ஒடுக்கமா ஒழுங்கா இருக்கணும்னு நான் போய் அந்த பொண்ணை கண்டிச்சேன்.. ஆனா உங்கம்மா போய் அவள பேசி சரிகட்டி நீ சொல்றதைல்லாம் நான் செய்வேன்னு தலையாட்டிட்டு வந்தா அப்புறம் எனக்கென்ன மரியாதை..?" மேல் மூச்சு வாங்கினாள் திலோத்தமா..

வெண்மதியின் கண்கள் தீவிரபாவனையுடன் நிலை குத்தி நின்றது..

"அப்படியா நடந்துச்சு.. எங்க அம்மா அப்படியா சொன்னாங்க..? என்னால நம்பவே முடியலையே.." வெண்மதி கொதிக்க திலோத்தமாவிற்குள் கொண்டாட்டம்..

"நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்..? ஒத்துக்கறேன் உங்கம்மாவுக்கு கருணை சுபாவம் ஜாஸ்தி.. அதுக்காக வீட்டுக்கு வந்து போறவங்களுக்கெல்லாம் சேவை செய்யணும்னு என்ன அவசியம்.. நீங்க போய் என்னன்னு கேளுங்க..!" என்றதும்..

"விடுங்க இந்த விஷயத்தை நான் பாத்துக்கறேன்.. அதெப்படி எங்கம்மா எங்க எல்லாரையும் மறந்துட்டு அவளுக்கு மட்டும் அம்மாவா வாழ்ந்திட முடியுமா.. ஒரு நாளோ‌‌.. நூறு நாளோ.. அம்மாவுக்கே அவங்க பெத்த குழந்தைகளானா நாங்க மட்டும்தான் பிள்ளைங்க.. நாளைக்கு என்னை மீறி எப்படி அவகிட்ட போறாங்கன்னு நானும் பாக்கறேன்.."

"என்ன சொல்றீங்க எனக்கு புரியலையே..?"

"எப்பேர்ப்பட்ட கருணை உள்ளம் கொண்டவங்களா இருந்தாலும் அம்மாவுக்கு அவங்க பெத்த குழந்தைகள் தான் முதன்மையானவங்க..! நாளைக்கு நான் பண்ற ரகளையில ஐயோ அம்மா என் பொண்ணுதான் முக்கியம்னு என் பக்கம் ஓடி வந்துடுவாங்க..! அந்த தேம்பாவணி ஏமாந்து போக போறா.. இதுக்கப்புறமா இந்த மாதிரி கிறுக்குத்தனமான விளையாட்டு விளையாடுவாளா என்ன?"

"சரியா சொன்னீங்க..! இந்த வீட்ல அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு எல்லாத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிற அந்த தேம்பாவணிக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கனும்.."

"நீ கவலையே படாத திலோத்தமா.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.. நீ வழக்கம் போல ரூம்ல போய் ரெஸ்ட் எடு.." என்றதுன் திலோத்தமா அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்..

மறுநாள் காலையில்..

காலையில் முதல் நாளாக வருண் வந்து அவளை எழுப்பி குட் மார்னிங் சொல்லிவிட்டு சென்ற பிறகு... தேம்பாவணியின் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க அனுப்புவது வரை அனைத்துமே தேம்பாவணிக்காக சாரதா வழக்கமாக செய்யும் செயல்கள் தான்.. அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை..

அவளுக்கு பொருத்தமான உடையை எடுத்து வைத்து நெற்றியில் முத்தமிட்டு.. சாப்பிட அழைத்து வந்து உணவை பரிமாறி.. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது..

வெண்மதி இங்கே ராஜேந்திரன் நிவேதா குழந்தைகள் மூவரும் என அனைவரையும் சேர்த்துக்கொண்டு மொத்தமாக வட்டமேஜை மாநாடு போட்டிருந்தாள்..

"இங்க பாருங்க..! நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. இன்னைக்கு யாரும் அம்மாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அப்பா உங்களுக்கும் சேர்த்து தான்.."

"ஏன்மா அப்படி..?"

"இன்னிக்கு முழு நாளும் அம்மா தேம்பாவணி கூட இருக்க போறாங்க.. அவளுக்கு மட்டுமே அம்மாவா..!"

"இது என்ன கூத்தா இருக்கு.. அப்ப அம்மா நம்மள கவனிக்கவே மாட்டாங்களா.. நம்ம கூட பேச மாட்டாங்களா.." நிவேதா கேட்க..

"ஆமா அப்படித்தான்..! ஒரு நாள் அம்மா உன்கிட்ட பேசலைன்னா எதுவும் குடி முழுகி போய்டாது.. இத்தனை நாள் அம்மாவோட முந்தானையை புடிச்சிட்டுதானே தொங்கிட்டு இருந்தோம்.. இன்னைக்கு ஒரு நாள் அவங்க தேம்பாவணியை கவனிச்சுக்கட்டும்.. நிவேதா சும்மா போய் அம்மா அம்மான்னு நிக்காதே.. ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. நான் செஞ்சி தரேன்.. அம்மா மேல நமக்குள்ள உரிமையை நிலைநாட்டிக்க இது நேரமில்லை புரியுதா.."

"ம்ம்..!" என அரை மனதாக தலையசைத்தாள் நிவேதா..

"உங்களுக்கும் அதே ரூல்ஸ் தான் பசங்களா..! சும்மா சும்மா பாட்டிய போய் டிஸ்டர்ப் பண்ண கூடாது.. சும்மா சும்மா என்ன..? சுத்தமா அந்த பக்கமே போகக்கூடாது..! சமைச்சு சாப்பாடு போடறதுலருந்து.. இன்னைக்கு முழுக்க எல்லா வேலையும் நான்தான் உங்களுக்கு செய்வேன்.. ஏதாவது வேணும்னா என்னைதான் கேக்கணும்.. பாட்டி கிட்ட போகவே கூடாது புரிஞ்சுதா.."

பிள்ளைகளும் தலையசைத்தனர்..

"அம்மா நேத்து செஸ் ஆடும் போது தேம்பாவணி அக்கா ஒரு பந்தயம் கட்டுனாங்களே அதுதானே இது..!" சாருமதி கேட்க..

"அதேதான்..!" என்றாள் வெண்மதி..

"ஆனா அவங்க உங்களை தானே அம்மாவா இருக்க சொன்னாங்க..!"

பெருமொச்சி வீட்டு மகளை பார்த்தாள் வெண்மதி..

"ஒரு பர்ஃபெக்ட்டான அம்மாவா என்னால இருக்க முடியும்ன்னு தோணல.. எனக்கு தெரியாமலே ஏதாவது தப்பு பண்ணிட்டா அவ மனசு வாடிடும்.. அதனாலதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஆனா உங்க பாட்டி அப்படி இல்ல.. எங்களையும் உங்களையும் வளர்த்தவங்க.. அவங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி.. தேம்பாவணி மாதிரி மனசளவுல குழந்தையா இருக்கற ஒரு பொண்ண எப்படி ஹாண்டில் பண்ணனும்னு அவங்களுக்கு தெரியும்.. இந்த பந்தயத்தில் ஜெயிக்க போறது அம்மா மட்டும் இல்ல தேம்பாவணியும் தான்.." என்ற மகளை பெருமையாக பார்த்தார் ராஜேந்திரன்..

அதனால் உணவு மேஜையில் கூட மற்றவர்களை நிவேதாவும் வெண்மதியும் கவனித்துக் கொள்ள.. அம்மா.. பாட்டி.. என பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எந்த விதத்திலும் சாரதாவை தொந்தரவு செய்யவில்லை..

வருணுக்கு இந்த பந்தய விஷயம் எல்லாம் தெரியாது.. வழக்கமாகவே தன் தாய் தேம்பாவணி மீது பிரத்யேக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பதால் அவன் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை..

"அம்மா" என்று அழைக்க வரும்போது மட்டும்.. என்னடா வேணும் உனக்கு என்று பாய்ந்து கொண்டு வந்தாள் வெண்மதி.

"பீர்க்கங்காய் தோலை சீவி சட்னிங்கற பேர்ல ஒன்னு பண்ணி இருக்கியே.. அதை இந்த பக்கம் தள்ளு..!" என்றதும் கிண்ணத்தை எடுத்து வந்து சட்னியை பரிமாறுவது போல்..

"நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. இன்னைக்கு முழுக்க நீ அம்மாவை தொந்தரவு பண்ணாத..! ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.." அவன் காதுக்குள் ரகசியமாகச் சொன்னாள் வெண்மதி..

"ஏன்.. என்னாச்சு..?" கண்கள் சுருக்கினான் வருண்..

"நம்ம மம்மிக்கும் தேம்பாவணிக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தயமாம்..! இன்னைக்கு முழுக்க அம்மா அவளுக்கு மட்டும் தான் சொந்தமாம்.."

"அம்மா வேணும்னா கேட்டா..?" நம்பாதவன் போல் கேட்டான் வருண்..

"ஆமாம்.."

"நிஜமாவே அம்மா தான் வேணும்னு கேட்டாளா..?"

"பின்ன என்னடா நீ வேணும்னா கேப்பா..?" வெண்மதி பொறுமையிழந்து கடுப்பாக அழுத்திச் சொல்ல..

ஏதோ சொல்ல வந்தவன் வாயை மூடிக்கொண்டு சரிதான் என தலையசைத்தான்.

"இப்ப நான் என்ன பண்ணனும் தேம்பா கிட்ட பேசவே கூடாதா.." சற்று கோபமாகவே கேட்டான் வருண்..

அது நடக்கும் காரியமல்லவே..!

சரியாக உண்ணுகிறாளா என்ற சாக்கில் நிமிடத்திற்கொருமுறை அவளை பார்வையால் சீண்டுவதும்.. இரண்டு வாய் உண்ணும் இடைவெளிகளில் நான்கைந்து வார்த்தைகள் பேசி விடுவதும் அவன் வழக்கமல்லவா..

"நீ அம்மாகிட்ட பேசாம இரு.. அது போதும்..!" என்றதும் வெகு சாதாரணமாக சரி என தலையசைத்தான்..

"என்ன ரொம்ப சாதாரணமா சரின்னு சொல்லிட்டான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"சரி டெஸ்ட் பண்ணி பாப்போம்.." என்ற ரீதியில்..

"அப்படியே திலோத்தமா கிட்டயும் பேசாம இரு.." என ஒரு ஃப்ளோவில் சொல்ல.. அதற்கு சரி என்று தலையசைத்தான் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்..

"நான் சொன்னது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..! புரிஞ்சுதா தலையாட்டறானா..?" வெண்மதி தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருக்க..

"எல்லாம் புரிஞ்சுதான் தலையாட்டுறேன்.. நீ போய் உன் புள்ளைங்கள கவனி.." பற்களுக்குள் அழுத்திச் சொன்னான் வருண்..

"இன்னும் கொஞ்சம் சட்னி போட்டுக்கோ.." என்று கிண்ணத்தை அவன் தட்டில் கவிழ்த்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் வெண்மதி..

அவள் ஏதாவது குட்டையை குழப்புவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்த திலோத்தமா.. வெண்மதி சூழ்நிலையை தேம்பாவணிக்கு சாதகமாக்க முயல்வதை கண்டுகொண்டு அடிவயிற்றுக்குள் புகைந்தாள்..

"இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம் வீட்ல என் கூடவே இரு..!" சாரதா சொல்ல ஊருக்கு முன்னால் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தான் வரூண்..

"ஏன்.. எதுக்காக அவளை காலேஜ் லீவு போட சொல்றீங்க.. படிப்பு பாழாகாதா..?"

"ஒரு நாள்ல படிப்பொன்னும் கெட்டுப் போய்டாது.. நாளைக்கு போய் ஃபிரண்ட்ஸ் கிட்ட நோட்ஸ் வாங்கி எழுதிக்கட்டும்.. இன்னிக்கு முழுக்க அவ என் கூடதான் இருப்பா.. நீ புறப்படு.." சாரதா சொன்ன பிறகு தேம்பாவணி முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

பல வருடங்களாய் தவமாய் தவமிருந்து ஒற்றைப் பிள்ளையை பெற்ற ஒரு தாய்.. அந்த குழந்தை மீது எத்தனை பேரன்பை கொட்டித் தீர்ப்பாளோ அந்த அளவிற்கு தனது அன்பை வெளிப்படுத்தினாள் சாரதா..

அந்த அன்பு பிரவாகத்தை தேம்பாவணியால் தாங்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

நடிக்கவில்லை.. முழுமையாக தேம்பாவணிக்கு அன்னையாக உருமாறிப் போயிருந்தாள் சாரதா..

ஒரு கைக்குழந்தையை பக்கத்திலேயே இருத்திக் கொள்வது போல்.. சாரதாவின் தாயன்பு அபரிமிதமாக பொங்கி வழிந்தது..

கண்கலங்கி போனாள் தேம்பாவணி..

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே…
சொர்ணமே என் சொர்ணமே…
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே…
சர்வமே என் சர்வமே…

உன் உச்சிதனை முகர்ந்து…
உனக்கெனவே இருப்பேன்…
என் உயிர் அது போனாலும்…
உன் அருகினில் நான் கிடப்பேன்…

தன் மூன்று பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகளின் வழிவந்த பேரப்பிள்ளைகளுக்கும் கூட இப்படி உருக்கமாக தாலாட்டு பாடினாளா தெரியாது..

இவளை மடியில் கிடத்திக் கொண்டு தலையை கோதியபடி பாடினாள்..

தாகத்தில் தவித்து வாய் பிளக்கும் குருவி குஞ்சை போல்.. அந்த சின்னஞ்சிறு மனதின் ஏக்கத்தை சாரதாவால் புரிந்து கொள்ள முடிந்தது..

தலைவாரி பூச்சூட்டி தாவணி உடுத்த சொல்லி தன் நகைகளை அணிவித்து திருஷ்டி எடுத்து..

"என் குழந்தையை பாத்தியா.. இவ்ளோ அழகா இருக்கா..?" என்று தான் பெற்ற பிள்ளைகளிடமே தேம்பாவணியை முன்னிறுத்தி பெருமையாக சொல்லி..

அம்மம்மா.. தேம்பாவணிக்கு அடி நெஞ்சிலிருந்து ஏதோ உணர்வுகளாக பொங்கி பெருகி மூச்சடைத்தது..

ஜாஜ்வல்யமாய் கடவுளை நேரில் கண்டது போல் ஓவென்று அழவேண்டும் போல் தோன்றியது..

"ப்ளீஸ் போதும் இதோட நிறுத்திக்கலாம்..!" அவள் சொன்னபோது கூட..

"ஏன்.. பயப்படுறியா தேம்பாவணி என்னோட அன்பை உன்னால ஏத்துக்கவே முடியலையா..?" தெய்வீக புன்னகையுடன் சாரதா கேட்க..

"அப்படித்தான் நினைக்கறேன்..! ரொம்ப நாள் பசியோடு இருந்தவனுக்கு திடீர்னு விருந்து சாப்பாட்டை கண் முன்னாடி வச்சா கூட சாப்பிட முடியாது.. வயிறெல்லாம் வலிக்கும்.. வாந்தி வர்ற மாதிரி இருக்கும்..! அந்த உணவை அவன் உடம்பு ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுக்கும்.. இப்ப அந்த மாதிரி தான் நானும்."

"உங்க அன்பு.. இந்த கவனிப்பு.. இதெல்லாம் என்னால தாங்க முடியல.. பயமா பரவசமா சந்தோஷமா என்னன்னு தெரியல.. இப்படி ஒரு பந்தயத்தை நான் ஆரம்பிச்சிருக்கவே கூடாது.."

நெஞ்சை பிடித்துக் கொண்டவளுக்கு தொண்டை குழிக்குள் இனிமையாய் ஏதோ அடைத்தது.. ஆனாலும் இதை தொடர விரும்பவில்லை அவள்..

காலாகாலத்துக்கும் கிடைக்காத இந்தப் பேரன்பை இன்று மட்டும் அனுபவித்து என்ன பயன்..!

இதைவிட தோல்வி எவ்வளவோ மேல் என்று தோன்றியது..

சாரதாவின் அத்தனை அன்பையும் வறண்ட மண் போல உள்வாங்கிக் கொண்டாள்.. அகல குழி நீரை விழுங்குவது போல் உள்ளிழுத்துக் கொண்டாள்..

நடு நடுவே சாரதாவை சோதனை செய்து கடுப்பேற்ற..

"கை அமுக்கி விடுங்க.. காலை பிடித்து விடுங்களேன்.. என் கூட வந்து கார்ட்டூன் பாருங்க.. சாப்பாடு ஊட்டி விடுங்க.." தேம்பாவணியின் சின்ன சின்ன தொல்லைகளை கூட என்னை ஜெயிக்க முடியுமா நீ என்ற ரீதியில் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அவள் தேவையை பூர்த்தி செய்தாள் சாரதா..

அவள் பிஞ்சு பாத விரல்களை சொடக்கெடுத்து பாசத்தோடு தன் கையில் அணைத்து முத்தமிட.. அதிர்ந்து போனாள் தேம்பா..

ஒரு தாயால் மட்டுமே தன் குழந்தையின் பாதங்களை கௌரவமில்லாமல் தொட்டு முத்தமிட முடியும்.. அந்த ஒரு நொடியில் சாரதா ஜெயித்திருந்தாள்..

தேம்பாவணி தோற்றுப் போனாள்..

கண்ணீர் கரகரவென வழிந்தது..

எனக்கு யாரும் அம்மாவா இருக்க முடியாது.. எப்போ நான்தான் ஜெயிப்பேன்.. இத்தனை வருடங்களாய் சோகம் கலந்த அழுகையோடு அவள் கத்தி தீர்த்த கர்வமெல்லாம் தவிடுபொடியானது..

இரவு நேரம்..!

பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவளை இழுத்து வந்து தோட்டத்தில் அமர வைத்து தட்டில் உணவை பரிமாறி உண்ண செய்தாள் சாரதா..

பாட்டி எனக்கு? என பிள்ளைகள் அருகில் வரவில்லை..

அம்மா.. என்று அழைத்துக் கொண்டு மகள்களும் கிட்ட வரவில்லை..

"உங்க பொண்ணுங்களும் பேரப்பிள்ளைகளும் உங்களை கண்டுக்கவே இல்லையே என்ன ஆச்சு..!" தேம்பாவணி கேட்டபோது கூட..

"இன்னைக்கு நான் உனக்கு மட்டும்தானே அம்மா.. அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..?" புன்னகையோடு சொல்லியிருந்தாள் சாரதா..

"உன்ன பத்தி வாய திறக்க மாட்டேங்கறியே பாப்பா..?"

இரவில் இருவரும் தனியாக அமர்ந்திருந்த போது சாரதா கேட்டாள்..

"சொல்ல பெருசா என்ன இருக்கு..? நான் சின்ன குழந்தையா இருந்தபோது என் அம்மா அப்பாவை விட்டுட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்க.. எனக்கு அப்பா மட்டும்தான்.. அவர் தான் எல்லாமே..!" கண்களை துடைத்துக் கொள்ள..

"ஏன் பொய் சொல்ற..? அப்பாவும் உன்னை சரியா பாத்துக்கல அப்படித்தானே.." என்றவளை திகைப்புடன் ஏறிட்டு பார்த்தாள் தேம்பா..

"எ.. எப்படி சொல்றீங்க..?"

"அம்மாவோ அப்பாவோ அவங்க காட்டற அன்புல வித்தியாசம் ஏது..? உன்னை பெற்றவர் உன்னை சரியாக கவனிச்சிருந்தா தாயன்புக்காக நீ இவ்வளவு ஏங்கி போயிருக்க மாட்ட.. இதை இந்த ஒரே நாள்ல நான் புரிஞ்சுகிட்டேன் பாப்பா..!" அமைதியான குரலில் சாரதா சொல்ல.. பெருகிவரும் கண்ணீரை மறைக்க அவள் மடியில் படுத்துக்கொண்டாள் தேம்பாவணி..

"உங்களுக்கு தூக்கம் வருதா..?"

"இல்ல.. அப்படியே தூக்கம் வந்தாலும் நான் உன் கூடவே படுத்துகறேன்.. நீ தூங்கலையா பாப்பா..!"

"வருண் சார் வரலையே..! அவர் முகத்தை பார்க்காம எனக்கு தூக்கம் வராது.." தேம்பாவணி சொன்னதில் சாரதாவின் புருவங்கள் உயர்ந்தாலும்.. அதை விகற்பமாக எடுத்துக் கொள்ளாமல் அவள் தலையை கோதிய வண்ணம் அமர்ந்திருந்தார்..

"பாப்பா நான் ஒன்னு சொல்லுவேன் கேட்டுக்கறியா..?"

மடியில் படுத்த வண்ணம் தலையசைத்தாள் தேம்பாவணி..

"பந்தயம் முடிஞ்சதனால நாளையிலிருந்து நான் உனக்கு அம்மா இல்லைன்னு ஆகிடாது.. நமக்குள்ளே இருக்கிற இந்த உறவு ஒரு நாளைக்குள்ள முடிஞ்சு போறதில்லை.. இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே நீ என்னோட குழந்தைதான்.. எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒரு தாய்க்கு தன்னுடைய ஒவ்வொரு குழந்தையும் ரொம்ப ஸ்பெஷல் .. நீயும் எனக்கு அப்படித்தான்.. என் அன்பு எப்பவுமே மாறாது.. இதை நீ மனசுல வச்சுக்கணும்.."

தேம்பாவணி சாரதாவின் மடியில் அழுத்தமாக முகம் புதைத்தாள்..

அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ…
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ…
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ…
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ…

அந்த வானம் இருக்கும் வரையிலே…
உன் வேலியா நான் இருப்பேன்…
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே…
கருமாரியா மாறி நிப்பேன்…

எப்போதும் அவளறைக்கு பத்து மணிக்கு வரும் வருண் இன்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருந்தான்.. அதுவும் உடை கூட மாற்றவில்லை..

கதவை திறந்து கொண்டு அவன் அவசரமாக உள்ளே நுழைய சாரதா கட்டிலிலிருந்து எழுந்து நின்றார்..

"என்னடா வருண்.. இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? டிரஸ் கூட மாத்தல..!"

"இல்லம்மா.. இவ உங்களை என்ன பாடு படுத்துறாளோன்னுதான் சீக்கிரம் வந்துட்டேன்.."

"அவ என்னடா படுத்திடப் போறா.. நல்ல பொண்ணு.. பாவம்.. வாழ்க்கையில அவளுக்கு என்ன கஷ்டமோ.. அன்புக்காக ஏங்கற குழந்தைடா அது..!"

வருண் புன்னகைத்தான்..

"சரி நீங்க போங்க.. நான் அவளை பாத்துக்கறேன்.."

"நீ என்ன பாத்துக்க போற.. அவ தூங்கிட்டா.." என்ற பிறகுதான் தேம்பாவணியை எட்டிப் பார்த்தான் வருண்..

இத்தனை நேரம் சாரதா மறைத்திருந்ததால் அவள் முகத்தை கவனிக்க முடியவில்லை.. தேம்பாவணி அயர்ந்து உறங்கி இருப்பதை கண்டதும் அவன் முகம் சுருங்கி போனது..

"ஓ.. நான் வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டாளா..!" ஏதோ ஒரு ஏமாற்றத்துடன் கேட்க..

"ஆமா..!" அவளை தொந்தரவு பண்ணாம வெளிய வா.. நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன்.." என்று விட்டு சாரதா கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட.. அங்கிருந்து நகர மனமில்லாமல் அப்படியே நின்று உறங்கிக் கொண்டிருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான் வருண்..

பக்கத்தில் வந்து அவள் முகம் நோக்கி குனிந்து காது மடல் முடியை மெல்ல நீவி விட்டவன் "இனிமே உனக்கு நான் தேவையில்லை போலிருக்கே..! என்னை மறந்துட்டியா தேம்ஸ்.. எனிவேஸ் குட் நைட்.." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு.. நீண்ட மூச்சுடன் நிமிர்ந்தவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து கதவை திறக்க போக..

சகசரவென்ற சத்தத்துடன் அவன் திரும்பி சுதாரிக்கும் முன் முதுகின் பின்னால் சாய்ந்தது சுகமான கனமொன்று..

ஒரு கணம் பிடிக்கிட்டு பின் சுதாரித்தவன் கதவை சாத்திவிட்டு அவள் பக்கமாக திரும்பினான்..

"ஏய்.. தேம்ஸ்.. நீ இன்னும் தூங்கலையா..?" அதிர்ச்சியோ ஆனந்தமோ.. ஏதோ ஒரு உணர்வு ஒன்று அவன் முகத்தில் படர கண்கள் விகசித்து அவன் கேட்ட நேரத்தில்..

மார்பில் சாய்ந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் தேம்பாவணி.. அவள் தேகம் குலுங்கியது..

"ஏய்.. தே..ம்ஸ்..! அழறியா என்னை பாரு.." தன்னோடு சேர்ந்திருந்தவளை பிரித்து அவள் முகத்தை ஆராய்ந்தான்..

வேகமாக கண்ணீரை துடைக்க வந்த அவன் கரத்தை தடுத்துவிட்டு தீர்க்கமாக அவன் முகத்தை பார்த்தாள் தேம்பாவணி..

"எனக்கு உதவி செய்யறதா சொல்லி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒரு நல்ல குடும்பத்தை தந்தீங்க.."

"என் ஃப்ரெண்ட்ஸ்ஸை எல்லாம் திரும்ப தந்து ஒரு நல்ல நட்பை அறிமுகப்படுத்தினீங்க.."

"சந்தோஷம்னா எப்படி இருக்கும்னு அடையாளம் காட்டுனீங்க.."

"இப்போ எனக்காக ஒரு அம்மாவை தந்திருக்கீங்க.."

"ஒரு நல்ல நண்பனா எப்பவும் என் கூடவே இருக்கீங்க.."

"ஒரு அப்பாவோட அரவணைப்பு எப்படி இருக்கும்னு எனக்கு உணர்த்தி இருக்கீங்க.."

"எனக்காக இவ்வளவு செஞ்ச உங்களுக்காக நான் என்ன செய்வேன்.. இதுக்கெல்லாம் பதிலா என்னால என்ன தர முடியும்..!" அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்து நின்றது..

அந்த விழிகளையும் அவள் வார்த்தைகளையும் உள்வாங்கி உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கபோனவன் சட்டென சுதாரித்து

"ஏய்.. லுசு.. என்னாச்சு உனக்கு?" என்று.. வார்த்தைகளை முடிக்கும் பாய்ந்து அவன் சட்டையை இழுத்து.. கழுத்தோடு கரம் கோர்த்து நெஞ்சோடு மோதி அவன் இதழ்களை சிறை பிடித்திருந்தாள் தேம்பாவணி..

கண்கள் விரித்து திகைத்துப் போனான் வருண்..

அவனுக்கும் இதுதான் முதல் முத்தம்.. அவளுக்காவது கன்னத்திலோ நெற்றிலோ முத்தம் தந்திருக்கிறான் அவள் திருப்பித் தந்த முத்தம் நேரடியாக இதழில்..

அவன் பலத்திற்கு அவளை விலக்கி தள்ளியிருக்கலாம்.. ஆனால் அவன் அதை செய்யவில்லை..

அனுபவமில்லாத அதிக அன்பு கொண்ட மழலை மனம் படைத்த ஒரு பெண்ணின் இதழ் கடிப்பில் முழு முற்றாக தன்னை இழந்து கொண்டிருந்தான் வருண்..

விலகு விலகு என்று மனம் துடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல்.. உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் அவள் இடை வளைத்து இதழ்களுக்குள் ஆழமாக புதைந்து போனான் அந்த மனநல மருத்துவன்..

தொடரும்..
அய்யோ கடவுளே இத தானே இத்தனை நாள் எதிர்பார்த்து காத்து கிடந்தோம் கடைசில இங்கேயும் ஒரு மருத்துவன் முத்தமா 🫣🫣🫣❤️❤️
தேம்ஸ் happy அண்ணாச்சி 😍😍😍
சாரதா அம்மா 😘😘😘
White moon என் செல்லக்குட்டி செம்ம பல்பு கொடுத்த போ அந்த கிலோ க்கு 😆😆😆
 
Joined
Jun 26, 2025
Messages
34
😳😳ஆத்தி தேம்ஸ்சு... ஸ்ட்ரையிட்டா லிப்ஸ்சு...அதானே நம்ம டாக்டர் சார் மாதிரி நெத்தி, கண்ணம்னு ஸ்டெப் ஸ்டெப்பா என்னக்கி போறது😂
சாரதாமா லவ் யூ❤️❤️❤️❤️
மதி அக்கா அஷுஸ்வல் கலக்கிட்டே போ. மதியக்கா rocked திலோத்தமா shocked 🤣🤣🤣🤣🤣
டாக்டர் ஏதோ சொல்ல வந்துட்டு
வாயை மூடிகிட்டாரே என்னா... வா.. இருக்கும் 🧐😜🤣
 
Member
Joined
Jun 27, 2025
Messages
26
"இங்க கொஞ்சம் வாங்க..!" திலோத்தமா வெண்மதியின் கைபிடித்து அழைத்துச் செல்ல.. நிவேதாவிற்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது..

தான் வந்ததிலிருந்து தன்னையோ தன் அக்காவையோ மதித்து ஒரு வார்த்தை பேசியதில்லை திலோத்தமா.. பார்க்கும்போது மட்டும் ஒரு செயற்கையான சிரிப்போடு நிறுத்திக் கொள்வாள்.. அதிலும் ஏதாவது பேச விழைந்து ஒரு நொடிக்கும் அதிகமாக அவள் முகத்தை பார்த்து விட்டால் போதும்..

"ஏன் இப்படி பாக்கறீங்க.. என் முகத்துல ஏதாவது எக்ஸ்ட்ராவா ரெண்டு கண்ணு நாலு மூக்கு முளைச்சிருக்கா என்ன.. நீங்க பாக்கறதை பாத்தா அப்படித்தான் இருக்கு..! என்னவோ யாரும் இப்படி வித்தியாசமா குறுகுறுன்னு பார்த்தாலே எனக்கு பிடிக்கறது இல்ல.." என்று சலிப்பாக பேசுவாள்..

"அப்படி இல்ல அண்ணி.. நீ எப்பவும் ரூமுக்குள்ள போய் அடைஞ்சிக்கறீங்களே.. அதான் கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசலாம்னு ஆசைப்பட்டேன் மத்தபடி ஒன்னும் இல்ல.." நிவேதா விளக்கம் தர முன் வந்தால்..

"என்னத்த பெருசா பேசிட போறோம்.. தேவையில்லாத புரணி.. இல்லன்னா உதவாத குடும்ப கதை.. எனக்கு இதெல்லாம் பிடிக்கறதே இல்ல நிவேதா.. ரெண்டு பொம்பளைங்க ஒன்னா உக்காந்தா ஊர்வம்பு தான் பேச தோணும்.. நீயும் அக்காவும் உட்கார்ந்து பேசுறதைதான் நான் கேட்டிருக்கேனே.. முக்கால்வாசி என்ன பத்தி குறை சொல்லி பேசுவீங்க அப்படித்தானே..!" என்று விகற்பமாக புன்னகைப்பாள்..

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்களை பத்தி நாங்க ஏன் பேச போறோம்.."

"எனக்கு எல்லாம் தெரியும்..! பத்து நிமிஷம் போச்சுன்னா குழந்தையை பத்தி கேட்க ஆரம்பிப்பீங்க.. அந்த கோவிலுக்கு போங்க.. இந்த பரிகாரம் பண்ணுங்க.. எங்க ட்ரீட்மென்ட் எடுக்கறீங்கன்னு ஆரம்பிப்பீங்க.. ரொம்ப டிப்ரஷன் ஆகுது நிவேதா.. உன் அக்கா குறுகுறுன்னு என்னை வாட்ச் பண்றதே எனக்கு பிடிக்கல.. இதுல வேற நீயும் அப்படித்தான் பாக்கற.. இந்த மாதிரியான சூழ்நிலையில உங்கிட்ட நான் என்ன பேச முடியும் சொல்லு.. இதுக்குத்தான் எதுலயும் சம்பந்தப்படாமல் போய் ரூம்ல உட்கார்ந்துக்கறது.." அவள் முகத்தை சுழித்து விட்டு சென்ற பிறகு நிவேதா நொந்து போவாள்‌..

இதே த்வனியில் வெண்மதியிடம் பேசியிருந்தால் அவள் ஊரைக் கூட்டி ஒரு பஞ்சாயத்து வைத்திருப்பாள்‌.

நிவேதா என்பதால் மனம் வருத்தப்பட்டு திலோத்தமா பேசியதை அப்படியே கிடப்பில் போட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவாள்..

அப்படிப்பட்டவள் இன்று வெண்மதியை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறாள் என்றால் ஏதோ பெரிய விவகாரம் போலிருக்கிறது.. என ஆர்வமாக எட்டிப் பார்த்தாளேயன்றி ஒட்டு கேட்க முயலவில்லை நிவேதா..

"என்னங்க இதெல்லாம்..!" திலோத்தமா வெண்மதியிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"என்னாச்சு திலோத்தமா..?"

"அந்த பொண்ணுதான் லூசு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்குன்னா அத்தையும் அதுக்கேத்தாப்புல தாளம் போடறாங்க.. வயசுக்கேத்த மாதிரி நடந்துக்க வேண்டாமா..? சின்ன பொண்ணு ஏதாவது கிறுக்குத்தனமா பேசினா பெரியவங்கதான் கண்டிக்கணும்.. இங்க உங்க அம்மா என்னன்னா நானும் கூட சேர்ந்து விளையாடுறேன்னு அந்த பொண்ணையும் சேர்த்து உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கறாங்க.. இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா..?"

"முதல்ல அம்மாவை குறை சொல்றத விட்டுட்டு என்ன சங்கதின்னு சொல்லு.." வெண்மதியின் பேச்சில் ஒரு கடுமை தெரிய திலோத்தமா சுதாரித்துக் கொண்டாள்‌.

"ஏதோ ஒரு நாள்ல அம்மாவா இருக்கணுமாம்.. புருஷனுக்கு வேலை செய்யக்கூடாதாம் பிள்ளைகளை கவனிக்கக்கூடாதாம் பேரப் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டக்கூடாதாம்.. ஒரு நாள் முழுக்க இந்த பொண்ணோட பாதார விந்தமே சொர்க்கம்னு உக்காந்து இருக்கனுமாம்.. என்னங்க இதெல்லாம்.. இருந்தாலும் அந்த பொண்ணுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்கறீங்க.. இப்படியெல்லாம் பண்ணக்கூடாது.. வந்த இடத்தில அடக்க ஒடுக்கமா ஒழுங்கா இருக்கணும்னு நான் போய் அந்த பொண்ணை கண்டிச்சேன்.. ஆனா உங்கம்மா போய் அவள பேசி சரிகட்டி நீ சொல்றதைல்லாம் நான் செய்வேன்னு தலையாட்டிட்டு வந்தா அப்புறம் எனக்கென்ன மரியாதை..?" மேல் மூச்சு வாங்கினாள் திலோத்தமா..

வெண்மதியின் கண்கள் தீவிர பாவனையுடன் நிலை குத்தி நின்றது..

"அப்படியா நடந்துச்சு.. எங்க அம்மா அப்படியா சொன்னாங்க..? என்னால நம்பவே முடியலையே.." வெண்மதி கொதிக்க திலோத்தமாவிற்குள் கொண்டாட்டம்..

"நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்..? ஒத்துக்கறேன் உங்கம்மாவுக்கு கருணை சுபாவம் ஜாஸ்தி.. அதுக்காக வீட்டுக்கு வந்து போறவங்களுக்கெல்லாம் சேவை செய்யணும்னு என்ன அவசியம்.. நீங்க போய் என்னன்னு கேளுங்க..!" என்றதும்..

"விடுங்க இந்த விஷயத்தை நான் பாத்துக்கறேன்.. அதெப்படி எங்கம்மா எங்க எல்லாரையும் மறந்துட்டு அவளுக்கு மட்டும் அம்மாவா வாழ்ந்திட முடியுமா.. ஒரு நாளோ‌‌.. நூறு நாளோ.. நூறு வருஷமா.. எங்க அம்மாவுக்கு அவங்க பெத்த குழந்தைகளான நாங்க மட்டும்தான் பிள்ளைங்க.. நாளைக்கு என்னை மீறி எப்படி அவகிட்ட போறாங்கன்னு நானும் பாக்கறேன்.."

"என்ன சொல்றீங்க எனக்கு புரியலையே..?"

"எப்பேர்ப்பட்ட கருணை உள்ளம் கொண்டவங்களா இருந்தாலும் அம்மாவுக்கு அவங்க பெத்த குழந்தைகள் தான் முதன்மையானவங்க..! நாளைக்கு நான் பண்ற ரகளையில ஐயோ அம்மா என் பொண்ணுதான் முக்கியம்னு என் பக்கம் ஓடி வந்துடுவாங்க..! அந்த தேம்பாவணி ஏமாந்து போக போறா.. இதுக்கப்புறமா இந்த மாதிரி கிறுக்குத்தனமான விளையாட்டு விளையாடுவாளா என்ன?"

"சரியா சொன்னீங்க..! இந்த வீட்ல அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு எல்லாத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கற அந்த தேம்பாவணிக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கனும்.."

"நீ கவலையே படாத திலோத்தமா.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.. நீ வழக்கம் போல ரூம்ல போய் ரெஸ்ட் எடு.." என்றதும் திலோத்தமா அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்..

மறுநாள் காலையில்..

முதல் ஆளாக வருண் வந்து அவளை எழுப்பி குட் மார்னிங் சொல்லிவிட்டு சென்ற பிறகு... தேம்பாவணியின் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க அனுப்புவது வரை அனைத்துமே அவளுக்காக சாரதா வழக்கமாக செய்யும் செயல்கள் தான்.. அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை..

பொருத்தமான உடையை எடுத்து வைத்து நெற்றியில் முத்தமிட்டு.. சாப்பிட அழைத்து வந்து உணவை பரிமாறி.. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது..

வெண்மதி இங்கே ராஜேந்திரன் நிவேதா குழந்தைகள் மூவரும் என அனைவரையும் சேர்த்துக்கொண்டு மொத்தமாக வட்டமேஜை மாநாடு போட்டிருந்தாள்..

"இங்க பாருங்க..! நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. இன்னைக்கு யாரும் அம்மாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அப்பா உங்களுக்கும் சேர்த்து தான்.."

"ஏன்மா அப்படி..?"

"இன்னிக்கு முழு நாளும் அம்மா தேம்பாவணி கூட இருக்க போறாங்க.. அவளுக்கு மட்டுமே அம்மாவா..!"

"இது என்ன கூத்தா இருக்கு.. அப்ப அம்மா நம்மள கவனிக்கவே மாட்டாங்களா.. நம்ம கூட பேச மாட்டாங்களா.." நிவேதா கேட்க..

"ஆமா அப்படித்தான்..! ஒரு நாள் அம்மா உன்கிட்ட பேசலைன்னா எதுவும் குடி முழுகி போய்டாது.. இத்தனை நாள் அம்மாவோட முந்தானையை புடிச்சிட்டுதானே தொங்கிட்டு இருந்தோம்.. இன்னைக்கு ஒரு நாள் அவங்க தேம்பாவணியை கவனிச்சுக்கட்டும்.. நிவேதா சும்மா போய் அம்மா அம்மான்னு நிக்காதே.. ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. நான் செஞ்சி தரேன்.. அம்மா மேல நமக்குள்ள உரிமையை நிலைநாட்டிக்க இது நேரமில்லை புரியுதா.."

"ம்ம்..!" என அரை மனதாக தலையசைத்தாள் நிவேதா..

"உங்களுக்கும் அதே ரூல்ஸ் தான் பசங்களா..! சும்மா சும்மா பாட்டிய போய் டிஸ்டர்ப் பண்ண கூடாது.. சும்மா சும்மா என்ன..? சுத்தமா அந்த பக்கமே போகக்கூடாது..! சமைச்சு சாப்பாடு போடறதுலருந்து.. இன்னைக்கு முழுக்க எல்லா வேலையும் நான்தான் உங்களுக்கு செய்வேன்.. ஏதாவது வேணும்னா என்னைதான் கேக்கணும்.. பாட்டி கிட்ட போகவே கூடாது புரிஞ்சுதா.."

பிள்ளைகளும் தலையசைத்தனர்..

"அம்மா நேத்து செஸ் ஆடும் போது தேம்பாவணி அக்கா ஒரு பந்தயம் கட்டுனாங்களே அதுதானே இது..!" சாருமதி கேட்க..

"அதேதான்..!" என்றாள் வெண்மதி..

"ஆனா அவங்க உங்களை தானே அம்மாவா இருக்க சொன்னாங்க..!"

பெருமூச்சு வீட்டு மகளை பார்த்தாள் வெண்மதி..

"ஒரு பர்ஃபெக்ட்டான அம்மாவா என்னால இருக்க முடியும்ன்னு தோணல.. எனக்கு தெரியாமலே ஏதாவது தப்பு பண்ணிட்டா அவ மனசு வாடிடும்.. அதனாலதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஆனா உங்க பாட்டி அப்படி இல்ல.. எங்களையும் உங்களையும் வளர்த்தவங்க.. அவங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி.. தேம்பாவணி மாதிரி மனசளவுல குழந்தையா இருக்கற ஒரு பொண்ண எப்படி ஹாண்டில் பண்ணனும்னு அவங்களுக்கு தெரியும்.. இந்த பந்தயத்தில் ஜெயிக்க போறது அம்மா மட்டும் இல்ல தேம்பாவணியும் தான்.." என்ற மகளை பெருமையாக பார்த்தார் ராஜேந்திரன்..

அதனால் உணவு மேஜையில் கூட மற்றவர்களை நிவேதாவும் வெண்மதியும் கவனித்துக் கொள்ள.. அம்மா.. பாட்டி.. என பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எந்த விதத்திலும் சாரதாவை தொந்தரவு செய்யவில்லை..

வருணுக்கு இந்த பந்தய விஷயமெல்லாம் தெரியாது.. வழக்கமாகவே தன் தாய் தேம்பாவணி மீது பிரத்யேக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பதால் அவன் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை..

"அம்மா" என்று அழைக்க வரும்போது மட்டும்.. என்னடா வேணும் உனக்கு என்று பாய்ந்து கொண்டு வந்தாள் வெண்மதி.

"பீர்க்கங்காய் தோலை சீவி சட்னிங்கற பேர்ல ஒன்னு பண்ணி இருக்கியே.. அதை இந்த பக்கம் தள்ளு..!" என்றதும் கிண்ணத்தை எடுத்து வந்து சட்னியை பரிமாறுவது போல்..

"நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. இன்னைக்கு முழுக்க நீ அம்மாவை தொந்தரவு பண்ணாத..! ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.." அவன் காதுக்குள் ரகசியமாகச் சொன்னாள் வெண்மதி..

"ஏன்.. என்னாச்சு..?" கண்கள் சுருக்கினான் வருண்..

"நம்ம மம்மிக்கும் தேம்பாவணிக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தயமாம்..! இன்னைக்கு முழுக்க அம்மா அவளுக்கு மட்டும் தான் சொந்தமாம்.."

"அம்மா வேணும்னா கேட்டா..?" நம்பாதவன் போல் கேட்டான் வருண்..

"ஆமாம்.."

"நிஜமாவே அம்மா தான் வேணும்னு கேட்டாளா..?"

"பின்ன என்னடா நீ வேணும்னா கேப்பா..?" வெண்மதி பொறுமையிழந்து கடுப்பாக அழுத்திச் சொல்ல..

ஏதோ சொல்ல வந்தவன் வாயை மூடிக்கொண்டு சரிதான் என தலையசைத்தான்.

"இப்ப நான் என்ன பண்ணனும்.. தேம்பா கிட்ட பேசவே கூடாதா.." சற்று கோபமாகவே கேட்டான் வருண்..

அது நடக்கும் காரியமல்லவே..!

சரியாக உண்ணுகிறாளா என்ற சாக்கில் நிமிடத்திற்கொருமுறை அவளை பார்வையால் சீண்டுவதும்.. இரண்டு வாய் உண்ணும் இடைவெளிகளில் நான்கைந்து வார்த்தைகள் பேசி விடுவதும் அவன் வழக்கமல்லவா..

"நீ அம்மாகிட்ட பேசாம இரு.. அது போதும்..!" என்றதும் வெகு சாதாரணமாக சரி என தலையசைத்தான்..

"என்ன ரொம்ப சாதாரணமா சரின்னு சொல்லிட்டான்.." வெண்மதி தலையை சொரிந்தாள்..

"சரி டெஸ்ட் பண்ணி பாப்போம்.." என்ற ரீதியில்..

"அப்படியே திலோத்தமா கிட்டயும் பேசாம இரு.." என ஒரு ஃப்ளோவில் சொல்ல.. அதற்கும் சரி என்று தலையசைத்தான் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்..

"நான் சொன்னது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா..! புரிஞ்சுதான் தலையாட்டறானா..?" வெண்மதி தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருக்க..

"எல்லாம் புரிஞ்சுதான் தலையாட்டறேன்.. நீ போய் உன் புள்ளைங்கள கவனி.." பற்களுக்குள் அழுத்திச் சொன்னான் வருண்..

"இன்னும் கொஞ்சம் சட்னி போட்டுக்கோ.." என்று கிண்ணத்தை அவன் தட்டில் கவிழ்த்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் வெண்மதி..

அவள் ஏதாவது குட்டையை குழப்புவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்த திலோத்தமா.. வெண்மதி சூழ்நிலையை தேம்பாவணிக்கு சாதகமாக்க முயல்வதை கண்டுகொண்டு அடிவயிற்றுக்குள் புகைந்தாள்..

"இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம் வீட்ல என் கூடவே இரு..!" சாரதா சொல்ல ஊருக்கு முன்னால் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தான் வரூண்..

"ஏன்.. எதுக்காக அவளை காலேஜ் லீவு போட சொல்றீங்க.. படிப்பு பாழாகாதா..?"

"ஒரு நாள்ல படிப்பொன்னும் கெட்டுப் போய்டாது.. நாளைக்கு போய் ஃபிரண்ட்ஸ் கிட்ட நோட்ஸ் வாங்கி எழுதிக்கட்டும்.. இன்னிக்கு முழுக்க அவ என் கூடதான் இருப்பா.. நீ புறப்படு.." சாரதா சொன்ன பிறகு தேம்பாவணியை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் வருண்..

பல வருடங்களாய் தவமாய் தவமிருந்து ஒற்றைப் பிள்ளையை பெற்ற ஒரு தாய்.. அந்த குழந்தை மீது எத்தனை பேரன்பை கொட்டித் தீர்ப்பாளோ அந்த அளவிற்கு தனது அன்பை வெளிப்படுத்தினாள் சாரதா..

அந்த அன்பு பிரவாகத்தை தேம்பாவணியால் தாங்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

நடிக்கவில்லை.. முழுமையாக தேம்பாவணிக்கு அன்னையாக உருமாறிப் போயிருந்தாள் சாரதா..

ஒரு கைக்குழந்தையை பக்கத்திலேயே இருத்திக் கொள்வது போல்.. சாரதாவின் தாயன்பு அபரிமிதமாக பொங்கி வழிந்தது..

கண்கலங்கி போனாள் தேம்பாவணி..

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே…
சொர்ணமே என் சொர்ணமே…
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே…
சர்வமே என் சர்வமே…

உன் உச்சிதனை முகர்ந்து…
உனக்கெனவே இருப்பேன்…
என் உயிர் அது போனாலும்…
உன் அருகினில் நான் கிடப்பேன்…

தன் மூன்று பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகளின் வழிவந்த பேரப்பிள்ளைகளுக்கும் கூட இப்படி உருக்கமாக தாலாட்டு பாடினாளா தெரியாது..

இவளை மடியில் கிடத்திக் கொண்டு தலையை கோதியபடி பாடினாள்..

தாகத்தில் தவித்து வாய் பிளக்கும் குருவி குஞ்சை போல்.. அந்த சின்னஞ்சிறு மனதின் ஏக்கத்தை சாரதாவால் புரிந்து கொள்ள முடிந்தது..

தலைவாரி பூச்சூட்டி தாவணி உடுத்த சொல்லி தன் நகைகளை அணிவித்து திருஷ்டி எடுத்து..

"என் குழந்தையை பாத்தியா.. இவ்ளோ அழகா இருக்கா..?" என்று தான் பெற்ற பிள்ளைகளிடமே தேம்பாவணியை முன்னிறுத்தி பெருமையாக சொல்லி..

அம்மம்மா.. தேம்பாவணிக்கு அடி நெஞ்சிலிருந்து ஏதோ உணர்வுகளாக பொங்கி பெருகி மூச்சடைத்தது..

ஜாஜ்வல்யமாய் கடவுளை நேரில் கண்டது போல் ஓவென்று அழவேண்டும் போல் தோன்றியது..

"ப்ளீஸ் போதும் இதோட நிறுத்திக்கலாம்..!" அவள் சொன்னபோது கூட..

"ஏன்.. பயப்படுறியா தேம்பாவணி என்னோட அன்பை உன்னால ஏத்துக்கவே முடியலையா..?" தெய்வீக புன்னகையுடன் சாரதா கேட்க..

"அப்படித்தான் நினைக்கறேன்..! ரொம்ப நாள் பசியோடு இருந்தவனுக்கு திடீர்னு விருந்து சாப்பாட்டை கண் முன்னாடி வச்சா கூட சாப்பிட முடியாது.. வயிறெல்லாம் வலிக்கும்.. வாந்தி வர்ற மாதிரி இருக்கும்..! அந்த உணவை அவன் உடம்பு ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுக்கும்.. இப்ப அந்த மாதிரி தான் நானும்."

"உங்க அன்பு.. இந்த கவனிப்பு.. இதெல்லாம் என்னால தாங்க முடியல.. பயமா பரவசமா சந்தோஷமா என்னன்னு தெரியல.. இப்படி ஒரு பந்தயத்தை நான் ஆரம்பிச்சிருக்கவே கூடாது.."

நெஞ்சை பிடித்துக் கொண்டவளுக்கு தொண்டை குழிக்குள் இனிமையாய் ஏதோ அடைத்தது.. ஆனாலும் இதை தொடர விரும்பவில்லை அவள்..

காலாகாலத்துக்கும் கிடைக்காத இந்தப் பேரன்பை இன்று மட்டும் அனுபவித்து என்ன பயன்..!

இதைவிட தோல்வி எவ்வளவோ மேல் என்று தோன்றியது..

சாரதாவின் அத்தனை அன்பையும் வறண்ட மண் போல உள்வாங்கிக் கொண்டாள்.. அகல குழி நீரை விழுங்குவது போல் உள்ளிழுத்துக் கொண்டாள்..

நடு நடுவே சாரதாவை சோதனை செய்து கடுப்பேற்ற..

"கை அமுக்கி விடுங்க.. காலை பிடித்து விடுங்களேன்.. என் கூட வந்து கார்ட்டூன் பாருங்க.. சாப்பாடு ஊட்டி விடுங்க.." தேம்பாவணியின் சின்ன சின்ன தொல்லைகளை கூட என்னை ஜெயிக்க முடியுமா நீ என்ற ரீதியில் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அவள் தேவையை பூர்த்தி செய்தாள் சாரதா..

அவள் பிஞ்சு பாத விரல்களை சொடக்கெடுத்து பாசத்தோடு தன் கையில் அணைத்து முத்தமிட.. அதிர்ந்து போனாள் தேம்பா..

ஒரு தாயால் மட்டுமே தன் குழந்தையின் பாதங்களை கௌரவமில்லாமல் தொட்டு முத்தமிட முடியும்.. அந்த ஒரு நொடியில் சாரதா ஜெயித்திருந்தாள்..

தேம்பாவணி தோற்றுப் போனாள்..

கண்ணீர் கரகரவென வழிந்தது..

எனக்கு யாரும் அம்மாவா இருக்க முடியாது.. எப்பவும் நான்தான் ஜெயிப்பேன்.. இத்தனை வருடங்களாய் சோகம் கலந்த அழுகையோடு அவள் கத்தி தீர்த்த கர்வமெல்லாம் தவிடுபொடியானது..

இரவு நேரம்..!

பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவளை இழுத்து வந்து தோட்டத்தில் அமர வைத்து தட்டில் உணவை பரிமாறி உண்ண செய்தாள் சாரதா..

பாட்டி எனக்கு? என பிள்ளைகள் அருகில் வரவில்லை..

அம்மா.. என்று அழைத்துக் கொண்டு மகள்களும் கிட்ட வரவில்லை..

"உங்க பொண்ணுங்களும் பேரப்பிள்ளைகளும் உங்களை கண்டுக்கவே இல்லையே என்ன ஆச்சு..!" தேம்பாவணி கேட்டபோது கூட..

"இன்னைக்கு நான் உனக்கு மட்டும்தானே அம்மா.. அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..?" புன்னகையோடு சொல்லியிருந்தாள் சாரதா..

"உன்ன பத்தி வாய திறக்க மாட்டேங்கறியே பாப்பா..?"

இரவில் இருவரும் தனியாக அமர்ந்திருந்த போது சாரதா கேட்டாள்..

"சொல்ல பெருசா என்ன இருக்கு..? நான் சின்ன குழந்தையா இருந்தபோது என் அம்மா அப்பாவை விட்டுட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்க.. எனக்கு அப்பா மட்டும்தான்.. அவர் தான் எல்லாமே..!" கண்களை துடைத்துக் கொள்ள..

"ஏன் பொய் சொல்ற..? அப்பாவும் உன்னை சரியா பாத்துக்கல அப்படித்தானே.." என்றவளை திகைப்புடன் ஏறிட்டு பார்த்தாள் தேம்பா..

"எ.. எப்படி சொல்றீங்க..?"

"அம்மாவோ அப்பாவோ அவங்க காட்டற அன்புல வித்தியாசம் ஏது..? உன்னை பெற்றவர் உன்னை சரியாக கவனிச்சிருந்தா தாயன்புக்காக நீ இவ்வளவு ஏங்கி போயிருக்க மாட்ட.. இதை இந்த ஒரே நாள்ல நான் புரிஞ்சுகிட்டேன் பாப்பா..!" அமைதியான குரலில் சாரதா சொல்ல.. பெருகிவரும் கண்ணீரை மறைக்க அவள் மடியில் படுத்துக்கொண்டாள் தேம்பாவணி..

"உங்களுக்கு தூக்கம் வருதா..?"

"இல்ல.. அப்படியே தூக்கம் வந்தாலும் நான் உன் கூடவே படுத்துக்கறேன்.. நீ தூங்கலையா பாப்பா..!"

"வருண் சார் வரலையே..! அவர் முகத்தை பார்க்காம எனக்கு தூக்கம் வராது.." தேம்பாவணி சொன்னதில் சாரதாவின் புருவங்கள் உயர்ந்தாலும்.. அதை விகற்பமாக எடுத்துக் கொள்ளாமல் அவள் தலையை கோதிய வண்ணம் அமர்ந்திருந்தார்..

"பாப்பா நான் ஒன்னு சொல்லுவேன் கேட்டுக்கறியா..?"

மடியில் படுத்த வண்ணம் தலையசைத்தாள் தேம்பாவணி..

"பந்தயம் முடிஞ்சதனால நாளையிலிருந்து நான் உனக்கு அம்மா இல்லைன்னு ஆகிடாது.. நமக்குள்ளே இருக்கிற இந்த உறவு ஒரு நாளைக்குள்ள முடிஞ்சு போறதில்லை.. இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே நீ என்னோட குழந்தைதான்.. எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒரு தாய்க்கு தன்னுடைய ஒவ்வொரு குழந்தையும் ரொம்ப ஸ்பெஷல் .. நீயும் எனக்கு அப்படித்தான்.. என் அன்பு எப்பவுமே மாறாது.. இதை நீ மனசுல வச்சுக்கணும்.."

தேம்பாவணி சாரதாவின் மடியில் அழுத்தமாக முகம் புதைத்தாள்..

அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ…
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ…
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ…
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ…

அந்த வானம் இருக்கும் வரையிலே…
உன் வேலியா நான் இருப்பேன்…
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே…
கருமாரியா மாறி நிப்பேன்…

விழிகள் தானாகவே மூடிக்கொண்டது இன்பமான உறக்கத்தில்..

எப்போதும் அவளறைக்கு பத்து மணிக்கு வரும் வருண் இன்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருந்தான்.. அதுவும் உடை கூட மாற்றவில்லை..

கதவை திறந்து கொண்டு அவன் அவசரமாக உள்ளே நுழைய சாரதா கட்டிலிலிருந்து எழுந்து நின்றார்..

"என்னடா வருண்.. இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? டிரஸ் கூட மாத்தல..!"

"இல்லம்மா.. இவ உங்களை என்ன பாடு படுத்துறாளோன்னுதான் சீக்கிரம் வந்துட்டேன்.."

"அவ என்னடா படுத்திடப் போறா.. நல்ல பொண்ணு.. பாவம்.. வாழ்க்கையில அவளுக்கு என்ன கஷ்டமோ.. அன்புக்காக ஏங்கற குழந்தைடா அது..!"

வருண் புன்னகைத்தான்..

"சரி நீங்க போங்க.. நான் அவளை பாத்துக்கறேன்.."

"நீ என்ன பாத்துக்க போற.. அவ தூங்கிட்டா.." என்ற பிறகுதான் தேம்பாவணியை எட்டிப் பார்த்தான் வருண்..

இத்தனை நேரம் சாரதா மறைத்திருந்ததால் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.. தேம்பாவணி அயர்ந்து உறங்கி இருப்பதை கண்டதும் அவன் முகம் சுருங்கி போனது..

"ஓ.. நான் வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டாளா..!" ஏதோ ஒரு ஏமாற்றத்துடன் கேட்க..

"ஆமா..!" அவளை தொந்தரவு பண்ணாம வெளிய வா.. நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன்.." என்று விட்டு சாரதா கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட.. அங்கிருந்து நகர மனமில்லாமல் அப்படியே நின்று உறங்கிக் கொண்டிருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான் வருண்..

பக்கத்தில் வந்து அவள் முகம் நோக்கி குனிந்து காது மடல் முடியை மெல்ல நீவி விட்டவன் "இனிமே உனக்கு நான் தேவையில்லை போலிருக்கே..! என்னை மறந்துட்டியா தேம்ஸ்.. எனிவேஸ் குட் நைட்.." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு.. நீண்ட மூச்சுடன் நிமிர்ந்தவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து கதவை திறக்க போக..

சகசரவென்ற சத்தத்துடன் அவன் திரும்பி சுதாரிக்கும் முன் முதுகின் பின்னால் சாய்ந்தது சுகமான கனமொன்று..

ஒரு கணம் பிடிக்கிட்டு பின் சுதாரித்தவன் கதவை சாத்திவிட்டு அவள் பக்கமாக திரும்பினான்..

"ஏய்.. தேம்ஸ்.. நீ இன்னும் தூங்கலையா..?" அதிர்ச்சியோ ஆனந்தமோ.. ஏதோ ஒரு உணர்வு ஒன்று அவன் முகத்தில் படர கண்கள் விகசித்து அவன் கேட்ட நேரத்தில்..

மார்பில் சாய்ந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் தேம்பாவணி.. அவள் தேகம் குலுங்கியது..

"ஏய்.. தே..ம்ஸ்..! அழறியா என்னை பாரு.." தன்னோடு சேர்ந்திருந்தவளை பிரித்து அவள் முகத்தை ஆராய்ந்தான்..

வேகமாக கண்ணீரை துடைக்க வந்த அவன் கரத்தை தடுத்துவிட்டு தீர்க்கமாக அவன் முகத்தை பார்த்தாள் தேம்பாவணி..

"எனக்கு உதவி செய்யறதா சொல்லி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒரு நல்ல குடும்பத்தை தந்தீங்க.."

"என் ஃப்ரெண்ட்ஸ்ஸை எல்லாம் திரும்ப தந்து ஒரு நல்ல நட்பை அறிமுகப்படுத்தினீங்க.."

"சந்தோஷம்னா எப்படி இருக்கும்னு அடையாளம் காட்டுனீங்க.."

"இப்போ எனக்காக ஒரு அம்மாவை தந்திருக்கீங்க.."

"ஒரு நல்ல நண்பனா எப்பவும் என் கூடவே இருக்கீங்க.."

"ஒரு அப்பாவோட அரவணைப்பு எப்படி இருக்கும்னு எனக்கு உணர்த்தி இருக்கீங்க.."

"எனக்காக இவ்வளவு செஞ்ச உங்களுக்காக நான் என்ன செய்வேன்.. இதுக்கெல்லாம் பதிலா என்னால என்ன தர முடியும்..!" அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்து நின்றது..

அந்த விழிகளையும் அவள் வார்த்தைகளையும் உள்வாங்கி உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கபோனவன் சட்டென சுதாரித்து

"ஏய்.. லுசு.. என்னாச்சு உனக்கு?" என்று.. வார்த்தைகளை முடிக்கும் பாய்ந்து அவன் சட்டையை இழுத்து.. கழுத்தோடு கரம் கோர்த்து நெஞ்சோடு மோதி அவன் இதழ்களை சிறை பிடித்திருந்தாள் தேம்பாவணி..

கண்கள் விரித்து திகைத்துப் போனான் வருண்..

அவனுக்கும் இதுதான் முதல் முத்தம்.. அவளுக்காவது கன்னத்திலோ நெற்றியிலோ முத்தம் தந்திருக்கிறான் அவள் திருப்பித் தந்த முத்தம் நேரடியாக இதழில்..

அவன் பலத்திற்கு அவளை விலக்கி தள்ளியிருக்கலாம்.. ஆனால் அவன் அதை செய்யவில்லை..

அனுபவமில்லாத அதிக அன்பு கொண்ட மழலை மனம் படைத்த ஒரு பெண்ணின் இதழ் கடிப்பில் முழு முற்றாக தன்னை இழந்து கொண்டிருந்தான் வருண்..

விலகு விலகு என்று மனம் துடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல்.. உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் அவள் இடை வளைத்து இதழ்களுக்குள் ஆழமாக புதைந்து போனான் அந்த மனநல மருத்துவன்..

தொடரும்..
சொல்ல வார்த்தையே இல்ல சனா மா.... தாய் பாசத்துக்கு இடு எதுமே இல்ல 😭😭பாவம் தேம்பா

தாய் பாசத்துக்கு முன்னாடி எதுமே இல்ல 😭பாவம் தேம்பா பாசத்துக்கு எவ்ளோ ஏங்கி போயிருப்ப....எவ்ளோ maturity ஆஹ் நடந்துக்குற வென்மதி அழகுபுள்ள.... இன்னைக்கு ud ரொம்ப எமோஷனல் 😭✨🫂
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
175
சாரதா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌💘💘💘💘💘💘💘💘
தேம்ஸ் வரூனை மறக்க வில்லை என்று காட்டி விட்டாலோ.....🫣🫣🫣🫣🫣🙈🙈🙈🙈🙈🙈🙈
 
Member
Joined
Jul 19, 2025
Messages
48
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 16, 2025
Messages
29
ஏழு கழுதை வயசு ஆனாலும் அம்மா மடி தேடுது மனசு.🥹.. பாவம் இந்த தேம்பா🥺... அப்பப்பா மனசு குளிர்ந்து போச்சு... 😚டாக்டர்கே மருத்துவ முத்தம்மா? ச்சே அன்புக்கு ஏங்குறது எவ்ளோ பெரிய கொடுமை🙂‍↕️... இனி உனக்கு அதற்கு பஞ்சம் இருக்காது தேம்பா🥹... சாரதாமா நீங்க கலக்கிடிங்க😍🤩
 
New member
Joined
May 19, 2025
Messages
22

தொடரும்..ஜஜ
 
New member
Joined
Feb 20, 2025
Messages
16

Super super sis♥️♥️♥️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
172
Dei enna da ...ava mutham kudukkara...nee accept pannita.....ennamo poda ....super super....maruthuva muthathula kuda eppidi oru emotional mutham illaiye Sana ji...... super super super super
 
Active member
Joined
May 3, 2025
Messages
106
Wow 😍💞 ... தேம்பா darling வேற மாறி performance... ரொம்ப உணர்ச்சி வச பட்டுட போல...எதிர்ப்பக்கவே இல்ல....
என்ன வருண் டாக்டரே go with the flow va....,😂😂

வெண்மதி luv u so much.... வருண் Ku எவ்ளோ டெஸ்ட் வெப்பீங்க... சீக்கிரம் மாட்டுவான்....
எவ்ளோ அழகா அந்த திலோ வா handle பண்ணிட்டீங்க....
எப்பவும் போல ரூம் போல ரூம்ல போய் rest எடு திலோ....🤭🤭🤭🤭🤭.. பாவம் அது புரியல இந்த மகாராணிக்கு ....
திலோ எவ்ளோ bulb வாங்கினாலும் திரும்ப வரையே....

திலோ next PM எப்படி ஆகிறது பத்தி மட்டும் தா பேசுவா.... நீ விடு நிவி ... அவ time ah waste பண்ணாத....

சாரு மா always Lovable and special.... நிஜமாவே உங்க அன்பா பார்த்து பூரிப்பா இருக்கு.... அப்படியே வருண் மனசு கூட கொஞ்சம் புரிஞ்சுகோங்க லைக் our வெண்மதி....
 
Member
Joined
Apr 7, 2023
Messages
79
👌👌👌👌👌👌👌👌👌👌
 
Top