• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
இத்தனை நாட்களாக தன்னை தொடமாட்டானா என்று ஏங்கிய கணவன் இன்று கை நீட்டி அடித்ததில் உறைந்து போய் நின்றிருந்தாள் மாதவி.. மாமியார் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்க முடிந்தது. திமிறிக் கொண்டிருந்த எள்ளல் புன்னகையை மறைத்து சரிதா மாதவியை பரிதாபமாக பார்த்தாள்..

அங்கிருந்த ஒருவர் கூட.. கைநீட்டி அடிப்பது தவறு என்று ஹரிச்சந்திராவை கண்டிக்கவில்லை.. சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அவளை வெறுப்போடு ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

"பாத்தியா என் புள்ள.. என் கையில.. இனியாவது அடக்கி வாசி.." என்பதைப் போல் தெனாவட்டான பார்வையை வீசி முடித்து பாத்திரங்களை டம் டம்மென்று உடைப்பதை போல் அடுக்கிக் கொண்டிருந்தாள் ஜெயந்தி..

ஊமை பொம்மையாக நின்றிருந்த சபரி வாசனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள் சரிதா..‌

நிராதரவாக தனித்தீவில் நிற்பது போன்ற நிலை.. அவசரப்பட்டு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட முட்டாள்தனத்தை எண்ணி விழிகள் கண்ணீரை கூட்டி பெருக்கியது..

அம்மாவிடம் அனைத்தையும் சொல்லி ஓவென்று அழத் தோன்றியது..

மாதவியை அவமானப் படுத்தி ஒடுக்கிய பின்னும் மனம் அடங்காமல் ஜாடை மடையாக பேசியபடி பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்தாள் ஜெயந்தி..

மனதுக்குள் பொங்கியெழுந்த வேதனையுடன் இனி அங்கு நிற்பது சரிவராது என மெல்ல நகர்ந்து அறைக்கு வந்து சேர்ந்தாள் மாதவி..

கட்டிலில் படுத்து கால் மேல் கால் போட்ட படி ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான் ஹரிச்சந்திரா.. மனைவியை அடித்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் முகத்தில் இல்லை.. வழக்கம்போல் இறுகிய முகத்தோடு எதையோ துழாவிக் கொண்டிருந்தான்.. ஆர்வமாய் தேடிக் கொண்டிருந்தான்..‌ மனம் வறண்டு அவனை பார்த்தாள்.. இருதயம் மென்மேலும் உடைந்து துகள்களானது..

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு முடிவோடு அவன் முன்பு வந்து நின்றாள் மாதவி..‌

"எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்க..? என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கல.."

"பிடிக்காத கல்யாணத்துக்கு ஏன் சம்மதிச்சீங்க..!!"

"என்னதான் பிரச்சனை உங்களுக்கு.."

"ஏன் என்னை வெறுக்கறீங்க.."

"என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே என்னை அடிச்சிட்டீங்களே..!! அத்தனை பேர் முன்னாடி உங்க மனைவியை அடிச்சது சரியா..!!"

அவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல்.. அப்படி ஒருத்தி கண்ணீரோடு தன்னுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாதவன் போல் அலைபேசியில் மிக தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தான்..

"நானும் சரி என்னைக்காவது இந்த நிலைமை மாறும்.. நீங்க மனசு மாறுவீங்க.. உங்க பார்வை என் பக்கம் திரும்பும்னு நம்பிக்கையோடு காத்துட்டு இருந்தேன்.. இப்ப அந்த நம்பிக்கை சுத்தமா வத்தி போச்சு.. என்னதாங்க உங்க பிரச்சனை.. ஏன் என் முகம் பார்த்து கூட பேச மாட்டேங்கிறீங்க.. தயவுசெஞ்சு பதில் சொல்லுங்க.. இல்லைனா எனக்கு தலையே வெடிச்சிடும்.. பிரச்சனை உங்ககிட்ட.. ஆனா உங்க வீட்ல இருக்கிறவங்க என்னைத்தான் குறை சொல்றாங்க.. ஏதாவது பேசுங்க.. நீங்க வாய தொறக்காம உங்களை இன்னைக்கு விடப்போறதில்ல.." கோபத்தோடு கத்தினாள்.. கண்ணீரோடு அழுதாள்.. ஒரு வார்த்தை கூட அவன் காதுகளில் விழுந்ததை போல் தெரியவில்லையே..!!

அவன் பாராமுகத்திலும் அலட்சியத்திலும் பொறுமையிழந்து பூகம்பமாய் வெடிக்க தயாராக இருந்தாள் மாதவி..

"நான் பேசிட்டே இருக்கேன் அப்படி என்னதான் பாக்கறீங்க.." கோபத்தோடு அருகில் வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது அவன் முகநூலை மிக தீவிரமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என..

இதயம் வெடிக்க ஒருத்தி கத்திக் கொண்டிருக்கும் வேளையில் எப்படி நிதானமாக பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறது.. அந்த அளவிற்கு நான் ஆகாதவளாகி போனேனா..‌ அல்லது இவன் கண்களுக்கு நான் தெரியவில்லையா..? அடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டும்தான் மனைவியா..?

ஆத்திரத்துடன் வேகமாக வந்து அவன் அலைபேசியை பிடுங்கி கட்டில் மீது வீசினாள்.. சுள்ளென்ற பார்வையோடு நிமிர்ந்தான் ஹரி..

"ஏய்.." இன்று மிருகம் போல் கர்ஜித்துக் கொண்டு படுவவேகமாக நெருங்கி அடிப்பதற்காக கை ஓங்கியிருந்தான் அவளை.. ஆனால் அடிக்கவில்லை.. பார்வை மட்டும் அவளை கொன்று கூறு போட்டது..

"திரும்ப உன்னை தொட்டு அடிக்கிறதை கூட அருவருப்பான நினைக்கிறேன்.." என்று அவன் பேசிய பேச்சும் பார்த்த பார்வையும் மாதவியின் இதயத்தை ரெண்டு துண்டாய் வெட்டி போட்டது..

"அதான் ஏன்னு கேக்கறேன்..‌ அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்..? என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கல.. எல்லாருமா ஏன் என்னை சித்திரவதை பண்றீங்க..!! பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லி தொலைச்சிருக்கலாமே.. இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்லி இருப்பேனே..?" கட்டிலை பிடித்துக் கொண்டு முழங்காலிட்டு அமர்ந்தவள் நெஞ்சம் விம்மி அழுது கொண்டிருந்தாள்.. அவள் அழுகையோ கண்ணீரோ.. வலி கொண்ட வார்த்தைகளோ எதுவும் அவன் மனதை கரைக்கவில்லை..

"இங்கே யாரும் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்த கால்ல நின்னு தவம் கிடக்கல.. என் அம்மாவோட தொந்தரவு தாங்க முடியாமத்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அதுக்காக உன் கூட சேர்ந்து வாழ்வேன்னு கனவிலயும் நினைக்காதே..‌ அது நடக்காது.." அதிகபட்ச சத்தத்தோடு கத்தியவன் அவளை கடந்து செல்ல முற்பட்டான்..

"ஏன்.. ஏன் நடக்காது..?" வழிமறித்து அவன் முகம் பார்த்து நின்றாள் மாதவி.. தன்னை இந்த அளவு ஒதுக்கி வைப்பதற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொண்டே ஆக வேண்டுமென தவிப்பும் துடிப்பும் அவளிடம்..

கண்கள் மூடி திறந்தான் ஹரி.. "வழிய விடு..!!"

"நீங்க பதில் சொல்லாம வழிய விட மாட்டேன்.. எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இங்கிருந்து போங்க..!!"

நிமிர்ந்து அவளை தீர்க்கமாக பார்த்தான் அவன்.. "முடிவுதானே..!! என்னைக்குமே நீயும் நானும் சேர்ந்து வாழ முடியாது.. அதுதான் முடிவு.. போதுமா..?" அவள் முதுகை பற்றி தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.. ஆனால் அவன் வேகமாக தள்ளியதில் நிலை தடுமாறி கட்டிலோடு முன் நெற்றி மோதிக்கொண்டு.. அடிபட்டு.. ரத்தம் வழிய மயங்கி விழுந்திருந்தாள் மாதவி..

சில மணி நேரங்களுக்கு பிறகு.. அவளே மயக்கம் தெளிந்து எழுந்து தன் காயத்திற்கு மருந்து போட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டிருந்தாள்.. இப்படிப்பட்ட இரக்கமற்ற குடும்பத்தில் வாழத்தான் வேண்டுமா.. என்றுமே என் அன்பு உனக்கு கிடைக்காது என்று அவன் நிர்தாட்சண்யமாக மறுத்து சொன்ன பிறகு எதற்காக இந்த வீட்டில் இருக்க வேண்டும்.. எதற்காக இந்த திருமண பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. ரணத்தோடு யோசித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்..

"மகாராணி ரூம்மை விட்டு வெளியே வர மாட்டாங்க.. சாப்பாடு தண்ணி எல்லாத்தையும் உள்ளேயே கொடுத்து விடனும் போலிருக்கு.. கோடி ரூபாய் வரதட்சணை கொண்டு வந்த வசதியான வீட்டு பொண்ணுக்கு கூட இப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கை அமையறதில்ல.. கொடுத்து வச்ச மகராசி" மாமியாரின் ஜாடை மாடையான பேச்சு வெளி பக்கத்திலிருந்து சலசலத்து கற்களாக உள்ளே வீசியெறியப் பட்டன..‌

கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மாதவி.. வழக்கம்போல வேலைகளை இழுத்து போட்டு செய்தாள்..

"தலையில என்ன காயம்..?" பேருக்காக வேண்டா வெறுப்பாக.. அவள் நெற்றியின் காயம் பற்றி விசாரித்தாள் ஜெயந்தி..

"கால் தடுக்கி விழுந்துட்டேன் அத்தை.." என்றுதான் சொல்ல முடிகிறது.. உன் மகன் ஏற்படுத்திய காயம் என்று சொன்னால் மட்டும் பெரிதாக என்ன நிகழ்ந்து விடப்போகிறது.. மகனை தூண்டிவிட்டு இத்தனை பேர் முன்னிலையில் அடிக்க வைத்தவரே இவர்தானே..!! என்ன மாதிரியான குடும்பம் இது.. மிருக காட்சி சாலை போல்.. தன்னோடு ஒட்டாமல் தன்னை சுற்றி வளைய வந்தவர்களை காண காண தலைசுற்றியது..

வீட்டிலிருந்த அனைவருமே அவள் காயத்தை பற்றி விசாரித்தார்கள்.. ஆனால் யார் வார்த்தைகளிலும் அக்கறை இல்லை.. கழுத்து வரை துக்கம் அடைக்க பசிக்க வில்லை.. மிச்சமிருந்த ஒரு கைப்பிடி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு படுக்கையறைக்கு வந்து சேர்ந்தாள்..

அறைக்குள் வந்தவனும் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்த அவள் காயத்தை பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை.. அவ்வளவு ஏன்.. அவளை கண்டுகொள்ளவே இல்லை.. வாழ்க்கையே வெறுத்துப் போனாள் மாதவி..

கதைகளில் படித்த ஆன்ட்டி ஹீரோ கணவர்களை போல் இவனும் மனம் மாறி தன்னை கொஞ்சுவான்.. வெறுப்பு காதலாக மாறும்.. ஆசைப்பட்ட ரொமான்டிக் தருணங்கள் என்றாவது ஒரு நாள் நிகழும் என்ற கனவுகள் அத்தனையும் பொய்யாகி போயின..

கேவலோடு அழுது கொண்டிருந்தாள் மாதவி.. கண்டுகொள்வார் யாருமில்லை.. ம்ஹும்.. அழுவது வீண்..‌ மனதை இரும்பாக்கி கொள் மாதவி என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ஒருக்களித்து படுத்து கண்கள் மூடினாள்..

ஏதோ ஒரு அல்ப ஆசை.. அவன் தன்னை பார்க்கிறானா.. எப்பேர்பட்ட கல்நெஞ்ச காரனுக்கும் இப்படி ஒருத்தி அழுது கொண்டிருக்கையில் ஈரத்தில் மனம் இளகத்தானே செய்யும்..?

மஞ்சள் கயிறு மாயத்தில் மனைவியை அடித்து விட்டோமே.. அனைவரும் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில்.. எப்போதும் இறுகி தோற்றமளிக்கும் அவன் முகம் கனிந்திருக்க வாய்ப்புண்டா? என்று வெட்கம் விட்டு திரும்பி பார்க்க.. படு மும்முரமாக யாருக்கோ அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தான் ஹரி.. நெஞ்சம் குமுறி அழுகை பீறிட்டது..

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் பரவாயில்லை.. ஆயிரம் கனவுகளோடு இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு கணவனின் பாராமுகமும் அவன் புறகணிப்பும் இதயத்தை பிழிகிறது.. வாழவே பிடிக்கவில்லை.. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு திருமணம் செய்து வைத்த தன் தாயிடம் இதைப் பற்றி சொல்லி அழவும் வழி இல்லை..

வேலைக்குப் போகாமல் வீட்டில் இருப்பதால்தானே சுயமரியாதை அடி வாங்குகிறது.. இனி இந்த தவறை செய்யக்கூடாது.. அவர் மனம் எப்போது மாறுகிறதோ மாறட்டும்.. இல்லை மாறாமல் போகட்டும்..‌ ஒன்று கணவனின் உழைப்பில் வாழ வேண்டும் இல்லையேல் தன் சம்பாத்தியத்தில் சாப்பிட வேண்டும்.. சம்பந்தமே இல்லாத இன்னொருவரின் பணத்தில் வாழ்க்கையை ஓட்டினால் இப்படித்தான் அவமானப்பட்டு நிற்க வேண்டும்.. இருக்கட்டும்.. பரவாயில்லை.. கெட்டதிலும் ஒரு நல்லது.. வேலைக்கு போனால் இந்த நரகத்திலிருந்து மீளலாம்.. தன் சுயத்தை திரும்ப பெற்று நிம்மதியாக வாழலாம்..‌ ஏற்கனவே செய்துகொண்டிருந்த ரிசப்ஷனிஸ்ட் வேலையை இன்னும் ராஜினாமா செய்யவில்லை..‌ அதற்கான பணியிடம் இன்னும் நிரப்பப்படவில்லை என்று அலுவலகத்திற்கு அழைத்து ஒரு முறை பேசிய போது தெரியவந்தது.. மீண்டும் விண்ணப்பித்தால் என்ன என்று தோன்றியது..

வேலைக்கு போனாலே போதும் தானாகவே ஒரு தன்னம்பிக்கை பிறந்து விடும்..‌ குறைந்தபட்சம் சானிட்டரி நாப்கினுக்கு கூட இன்னொருவரின் கையை எதிர்பார்க்க வேண்டிய அவல நிலையிலிருந்தாவது ஒரு மாற்றம் கிடைக்கும்.. என்றுதான் நினைத்திருந்தாள். சூழ்ந்திருந்த சஞ்சலங்கள் மத்தியிலும் ஒரு தெளிவான முடிவு கிடைத்துவிட்ட திருப்தியில் அன்று இரவு நிம்மதியாக உறங்கினாள்..

அடுத்த நாள்.. வேலைக்கு செல்ல போகிறேன் என்று சொன்னாலாவது அத்தையின் குத்தல் பேச்சுகள் குறையும் என்ற எதிர்பார்ப்போடு.. தன் முடிவை ஜெயந்தியிடம் தெரிவித்தாள்..

"புருஷனை அனுசரிச்சு ஒழுங்கா வாழ துப்பில்லை.. வேலைக்கு போய் என்னத்த கிழிக்க போற.." உதட்டுச் சுழிப்போடு ஏளன வார்த்தைகள்..

"இப்படி தான் புருஷன் கூட ஒத்து வாழாமல் வேலைக்கு போறேன்னு சிங்காரிச்சிக்கிட்டு போன ஒருத்தி அப்படியே டிரைவர் கூட ஓடிப்போயிட்டாளாம்.. இளக்கார பேச்சில் மனம் உதிர்ந்தாள்..

என்ன வாய் இது.. சாக்கடை போல் எப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன.. ச்சீ.. வெறுத்துப் போனாள் மாதவி..

"காலம் கெட்டுப் போய் கிடக்கு.. எனக்கெதுவும் தெரியாதும்மா.. எதுவானாலும் நீ உன் புருஷன் கிட்ட அனுமதி கேட்டு செய்.." நெருப்பை வாரி இறைத்து.. மாதவியின் மனதை புழுங்க செய்தாள் ஜெயந்தி..

கண் கண்ட கணவனிடம்தானே.. சொல்லி பார்ப்போமே..!!

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் எண்ணத்தை ஹரி சந்திராவிடம் சொல்ல.. அவனிடமிருந்து வந்த பதிலோ அவளை நெருப்புக் குழியில் வீழச் செய்தன..

"ஏன்.. உன்னால என் வாழ்க்கையில் நிம்மதி இழந்தது போதாதா..!! பொண்டாட்டி உழைப்புல உக்காந்து சோறு திங்கறான் பொட்ட பையன்னு எல்லாரும் என்ன கேவலமா பேசணுமா..!!" சட்டையை மாட்டிக் கொண்டு கண்ணாடியை பார்த்து கடுகடுத்தான்.. வெளியே சில காதுகள் இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தன..

"இதுல மத்தவங்க கேவலமா பேச என்ன இருக்கு.. பொருளாதார ரீதியா உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறேன்.. இந்த குடும்பத்தோட வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கு.. படிச்சிட்டு வீட்டிலேயே சும்மா உக்காந்து இருக்க முடியல.."

"இங்கே இருக்கிற வரைக்கும் நான் சொல்றபடி கேட்டு இருக்கிறதுனா இரு.. இல்லன்னா தாராளமா நீ உன் வீட்டுக்கு மூட்ட முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்பற வழியை பாரு.." விட்டேத்தியாக பேசியதில் மாதவிக்குள் கோபம் எழுந்தது..

"என்ன சும்மா சும்மா இதையே சொல்லி மிரட்டுறீங்க..!! நான் ஒன்னும் இங்கே யாருக்கும் அடிமையோ கை பொம்மையோ இல்ல.. இந்த வீட்டோட மருமகள் உங்க மனைவி.. எனக்கும் உணர்வுகள் இருக்கு.. மனைவியா நினைக்க வேண்டாம்.. மனுஷியா பாருங்க.. காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் மாடு மாதிரி வேலை வாங்கறீங்க.. என்ன செஞ்சாலும் நல்ல பேர் இல்ல.. உங்க அம்மா பொழுதுக்கும் ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க.. அப்படியே எனக்கு தலை வெடிக்கிற மாதிரி இருக்கு.."

"என் அம்மாவை பத்தி பேசினா மரியாதை கெட்டுரும் ஜாக்கிரதை.. உன்னை யாரும் தலையெழுத்தேன்னு இங்கிருந்து கஷ்டப்பட சொல்லல.. பிடிக்கலைன்னா இங்கிருந்து போய்டு.."

"என்னை விரட்டறதுலேயே குறியா இருக்கீங்க.. இந்த அளவு என்னை வெறுக்க என்ன காரணம்.. உங்க மனசுல வேற யாராவது இருக்காங்களா.. என்ன விலக்கி வச்சிட்டு வேற யாரையாவது சேர்த்துக்கலாம்னு பாக்கறீங்களா..?"

"உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என் பொண்டாட்டிங்கிற பேர்ல இங்க இருக்கிற வரைக்கும் நீ வேலைக்கு போகக்கூடாது.. அவ்வளவுதான்"

"என்னங்க இது அநியாயமா இருக்கு..!! அப்ப தண்டசோறுன்னு நான் எல்லார்கிட்டயும் குத்தலா பேச்சு வாங்கினா பாரவாயில்லயா..?

"அது உன் பிரச்சினை.. எனக்கென்ன வந்துச்சு.. குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியலன்னா என் கையால தாலி வாங்கியிருக்கவே கூடாது.. இப்பவும் ஒண்ணும் கெட்டும் போகல.. கழட்டி என் கையில கொடுத்துட்டு போயிட்டே இரு.."

மாதவி இரண்டடி பின்னே நகர்ந்தாள்..

"ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு நீ வேற என் நிம்மதியை கெடுக்க எங்கிருந்து வந்து சேர்ந்தியோ.. உன்னை பார்த்தாலே எரிச்ச மயிரா வருது.. ச்சீ.. தள்ளிப்போ.." அருவருப்பான ஏதோ ஒன்றை பார்த்து விலகுவதை போல் போல் முகம் சுழித்து விட்டு சென்றான் ஹரிச்சந்திரா.. நிலைகுலைந்து கட்டிலோடு சாய்ந்து நின்றாள் அவள்..

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் "போதும் இந்த வீட்டில் வாழ்ந்தது" என்று கால்நடையாகவே அம்மா வீட்டிற்கு புறப்பட்டு சென்றிருந்தாள்..

காபி கொடுத்து அவளை அமர வைத்தாள் கீதா..

"சரி மாதவி கொஞ்ச நாள் அவங்க சொல்படி கேட்டு இரு.. உன்னைய அவங்க புரிஞ்சுகிட்டா எல்லாம் சரியாகிடும்.."

"அவங்க என்னை புரிஞ்சுக்கவே மாட்டாங்கம்மா..‌ ஏதோ என்னை வேற்று கிரகவாசி மாதிரி பாக்கறாங்க.. எப்பவுமே ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க.. காலையில எழுந்ததிலிருந்து நைட்டு தூங்கற வரைக்கும் ஏதாவது வேலை செஞ்சுகிட்டே இருக்கேன்.. அவங்களுக்கு பயந்து ஒரு நிமிஷம் கூட உட்காருவது கிடையாது.. இராத்திரி தூங்க முடியாம காலெல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா..!!" கண்ணீர் சிந்திய மகளை கண்டு இதயம் கசக்கி பிழிந்தது..

"புகுந்த வீடுன்னு வந்துட்டாலே அப்படி இப்படி தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் மாதவி.. எல்லாம் கொஞ்சநாள்தான்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்துட்டா.. உன் கை ஓங்கிடும் அப்புறம் நீ வைச்சதுதான் சட்டம்னு ஆகிடும்."

"அட போம்மா நீ வேற வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு.. "

"உண்மையைதானடி சொல்கிறேன்..‌ நீ நினைக்கிற அளவுக்கு இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்ல.. உன் புருஷன் கிட்ட உக்காந்து பேசு.. ஏன் உன்னை விட்டு விலகிப் போறாருன்னு கண்டுபிடி..‌"

"எல்லாத்தையும் பண்ணி பாத்துட்டேன் எந்த பலனும் இல்லைம்மா.. எனக்கு நம்பிக்கையே விட்டு போச்சு.." கண்களில் சோர்வுடன் சொன்னாள் மாதவி..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கு.. என் மாமியார் வீட்ல நான் அனுபவிக்காத கஷ்டங்களா..? எல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும்.. போக போக அடங்கிடுவாங்க.. உன் புருஷனை கெட்டியா பிடிச்சுக்கோ.. உன் மாமியார் வாயை மூட அதுதான் ஒரே வழி..!!"

வார்த்தைக்கு வார்த்தை சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் அன்னையிடம் இனி என்ன பேசி புரியவைப்பது.. கணவன் அத்தனை பேரின் முன்னிலையில் தன்னை கை நீட்டி அடித்ததும்.. கீழே தள்ளி மண்டையை உடைத்ததும் என் தாய்க்கு தெரிய வேண்டாம்.. பெற்ற மனம் அதிகமாக கலங்கும்.. தாயின் அழுத முகம் பார்க்க விருப்பமில்லாமல் மனச்சோர்வோடு அங்கிருந்து புறப்பட்டு சென்றிருந்தாள் மாதவி..

தொடரும்..
 
Member
Joined
Dec 23, 2023
Messages
25
💕💕💕💕💕💕💕💕
 
Joined
Jul 25, 2023
Messages
6
உங்கம்மா உனக்கு குலதெய்வமாவே இருக்கட்டும் நீ கோவில் கட்டி கூட கும்பிடு உன் தங்கச்சி அவளையும் கூடவே வச்சி பூஜை பண்ணு ஆனால் உன்னையே நம்பி கவனம் மிஸ்டர் ஹரி உங்களை மட்டுமே நம்பி உங்களுக்கு மனைவியா ஒருத்தி வந்துருக்காலே அவள ஒரு உயிருள்ள ஜீவனா கூட உங்களால் நினைக்க முடியலை பாருங்க அங்க நிக்குறீங்க நீங்க என்ன ஒரு உன்னதமான வளர்ப்பு.

அவளை பொண்டாட்டியா நடத்த முடியாது ஆனால் அவளோட தனிப்பட்ட முடிவுகளில் தலையிடும் உரிமையும் கை நீட்டி அடிக்கிற உரிமையும் மட்டும் உங்களுக்கு யாரு கொடுத்ததுங்க ஐயா? அவ கழுத்துல அந்த தாலி இருக்க வரைக்கும் தான் உங்களுக்கு மரியாதை அது எப்ப இறங்குதோ அன்னைக்கே நீங்க செத்த பிணத்துக்கு சமம் சார்.

அவளோட குடும்ப சூழ்நிலை மட்டுமே உங்களையும் உங்க குடும்பத்தையும் பொறுத்துக் கிட்டு போற தலையெழுத்த அவளுக்கு கொடுத்திருக்குனு நியாபகம் வைச்சிக்கோங்க
 
Joined
Jul 10, 2024
Messages
26
மத்த விஷயத்தில மனைவின்னு உரிமை இல்லை. ஆனா அவளோட தனிப்பட்ட முடிவுல மட்டும் எங்கிருந்தடா மனைவின்னு உரிமை வந்தது.

உங்களுக்கு ஒரு வேலைக்காரி வேணும் சம்பளமில்லாமல் வேலை பார்க்க அப்படித்தானே.

அவள ஒரு மனுஷியா கூட மதிக்க தெரியல. உன் அம்மா வளர்ப்பு ரொம்ப அருமை. அவள் தன் குடும்ப சூழ்நிலைக்காக அமைதியா போறா. என்னைக்கு எரிமலையா வெடிக்க போறாளோ.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
81
😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😡🥰🥰🥰🥰🥰🥰🥰😡😡😡🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Member
Joined
Jan 11, 2023
Messages
24

Madhavi job pogarudhudhaan sariyaana mudivu
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
மாதவி😔😔😔😔😔😔😔😔😔😔😇😇😇😇😇😇🥹🥹🥹🥹🥹
 
Top