- Joined
- Jan 10, 2023
- Messages
- 47
- Thread Author
- #1
"உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணுமா.. என்னை பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கணுமா" என்று கேட்டபோது கூட தயக்கத்தின் காரணமாக அவனிடம் அதிகமாக பேசுவதை தவிர்த்திருந்தாள் அகலி..
ஆனாலும் நுனி நாக்கு ஆங்கிலம்.. அந்த வாசனை இவனிடம் தென்பட வில்லையே..!!
ஏதோ ஒரிருஇடங்களில் மிக சாதாரணமான ஆங்கில வார்த்தை.. மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை நடத்துபவர் அவ்வப்போது சரளமாக ஆங்கிலத்தில் பேச வேண்டாமா..? என்ற சந்தேகம் அவன் பேச ஆரம்பித்த கணத்திலிருந்து மூளையை அரித்துக் கொண்டிருந்தது..
அடுத்த நாள் முழுக்க வீட்டில் தான் இருந்தான் கௌதமன்..
சொந்த நிறுவனம் என்பதால் இஷ்டத்திற்கு விடுமுறை எடுப்பது வசதி தான் என்று நினைத்திருந்தாள்..
அடுத்த நாள் அவன் கோட் சூட் சகிதம் காரில் ஏறி அலுவலகம் செல்ல போகும் அழகை காண ஆவலாக காத்திருந்தாள்..
வீட்டு வாசலில் மாருதி ஸ்விப்ட் ஒன்று நிற்கிறது.. இதில்தான் அலுவலகம் செல்வாரா..? வேறெந்த உயர்ந்த ரக கார்களையும் வாங்கவில்லையா..? என்ற சந்தேகம் வேறு..
ஆனால் சாதாரண உடையில் நரேந்திரனோடு பட்டறைக்கு கிளம்பி.. அவள் அடிவயிற்றில் அமிலத்தைப் பாய்ச்சி இருந்தான் கௌதமன்..
சொந்த பட்டறை வைத்து மர சாமான்களை உருவாக்கி பர்னிச்சர் கடை நடத்துவது பெருமைக்குரிய விஷயம்.. ஆனால் அவளை பொறுத்த வரை அவன் உழைப்போ திறமையோ பெரிதாக தோன்றவில்லை.. கடமை தவறாத அவன் பொறுப்பு கண்ணுக்கு தெரியவில்லை..
உழைத்து பிழைக்கும் எந்த தொழிலும் கேவலம் அல்ல..
ஆனால் பெரிய பிசினஸ்மேன் மட்டுமே தன் கணவனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட அகலிகா.. கேவலம் ஒரு தச்சர் ஆசாரியையா திருமணம் செய்து கொண்டேன்.. என்ற சிறுமை எண்ணத்தில் மனம் வெறுத்துப் போனாள்..
அப்பாவிற்கு ஃபோன் செய்து அழுதாள்.. அண்ணனை அழைத்து சண்டை போட்டு திட்டி தீர்த்தாள்..
இருவரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை.. நிறைய அறிவுரைகளும் மிரட்டலும் கிடைத்தன..
"இதெல்லாம் ஒரு காரணம்ன்னு அங்கிருந்து புறப்பட்டு வந்துடாதே.. கௌதமன் ரொம்ப நல்லவர்.. அதிர்ந்து ஒரு வார்த்தை பேச தெரியல.. வாழ்ந்து பாரு அப்பதான் அவர் அருமை புரியும்.." என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டார்கள்..
அதிர்ந்து ஒரு வார்த்தை பேச தெரியல.. அதுதானே பிரச்சனை.. அவன் ஆண்மையில் ஒளிந்திருக்கும் மெல்லிய பெண்மையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..
வாழ்க்கையே வெறுத்துப் போனது.. அங்கிருக்கவே பிடிக்கவில்லை.. ஆனாலும் அகலிகா எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை..
இத்தனை வளர்ந்த படித்த பெண்ணுக்கு அவன் என்ன தொழில் செய்கிறான் என்பதை கண்டுபிடிக்க தெரியவில்லையா என்று கேட்டால்.. நிச்சயம் தெரியவில்லை என்பதை உண்மை..
அகல்யா வசதியான பணக்கார வீட்டு பெண் தான்.. ஆனால் செல்ல மகளாக கட்டுப்பெட்டியாக வீட்டுக்குள் வளர்ந்தவள்.. பள்ளிக்கூடம் போனாள்.. படித்தாள்.. கல்லூரிக்கு சென்றாள் படித்தாள்.. அவ்வளவுதான் அவள் ஞானம்.. வெளி உலக வாசனைக்கும் அனுபவத்திற்கும் இதுநாள்வரை தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை..
தொழிலதிபன் என்று நினைத்து ஒரு ஆசாரியை நம்பி மோசம் போனதாக உள்ளுக்குள் மறுகிப் போனாள்..
உத்தமனின் மனைவி சிவரஞ்சனி அகலிகாவை போல் வசதியான வீட்டிலிருந்து வந்தவள் இல்லை ஆனால் நிறைய படித்தவள் ஒரு பெரிய பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. உத்தமனுக்கும் சிவரஞ்சனிக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு.. பெரியவனுக்கு ஐந்து வயது.. தர்ஷன்.. சின்னவனுக்கு மூன்று வயது.. ரக்சன்..
ஆரம்பத்திலிருந்து சிவரஞ்சனிக்கு அகலிகாவை பிடிக்கவில்லை.. நிறைந்த அழகோடு வசதி படைத்த வீட்டிலிருந்து வந்திருந்த அகலிகாவை தன்னோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டாள் சிவரஞ்சனி.. அதிலும் புது மருமகள் என்று அனைவரும் அவளை தூக்கி வைத்துக் கொண்டாடியதில் தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் சிவரஞ்சனியின் நெஞ்சுக்குள் வேர்விட்டது..
கார்த்திகா தேவி மருமகள்களை தங்கமாக பார்த்துக் கொள்ளும் குணவதி.. ஒரு மாமியாராக பாரபட்சமின்றி இருவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறாள் ..
"தாயில்லாத பிள்ளை செல்லமா வளர்ந்தவ.. கொஞ்சம் பாத்துக்கோங்க சம்மந்தி.." என்று நாராயண சுவாமி கார்த்திகா தேவி நரேந்திரனிடம் வலியுறுத்தி சொன்னதில் அந்த தாயில்லாத பிள்ளை என்ற வார்த்தை இருவரையும் அசைத்துப் பார்க்க.. அகலிகாவின் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை.. அவ்வளவுதான்..
பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும் உள்ளுக்குள் ஆட்டிப்படைக்க மாமியாரின் அன்பை புரிந்து கொள்ளாமல் அகலிகாவின் மீதான வெளிப்படுத்த முடியாத கோபத்தையும்.. ஆதங்கத்தையும் தனக்குள் அழுத்திக் கொண்டாள் சிவரஞ்சனி..
பேசாமல் இந்த கௌதமன் இந்திரஜாவையே திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று அவளுக்கு தோன்றியது.. இந்திராஜாவும் சிவரஞ்சினியும் சில நேரங்களில் வீட்டு வேலை சம்பந்தமாக வாக்குவாதங்களில் முட்டிக்கொண்டாலும்.. பல நேரங்களில் ஒன்றாக அமர்ந்து கதை பேசியதுண்டு.. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலும் வீட்டின் மருமகள்கள் என்ற ரீதியில் இருவருக்கும் ஒத்துப் போய்விடுமே..
ஆனால் இந்தப் பெண் அகலிகா கேட்ட கேள்விக்கு கூட மதிப்பு தந்து பதில் சொல்ல மாட்டேன் என்கிறதே!!.. எவ்வளவு திமிர்.. எல்லாம் பணம் படுத்தும் பாடு.. என்று சின்னவளை பற்றியதான குற்றங்களும் குறைகளும் சிவரஞ்சனியின் மனதில் கருப்பு கோடுகளாக கூடிக்கொண்டே சென்றன..
விசாலமான பெரிய வீட்டில் ராஜாத்தி போல்.. தேவைப்பட்டதை அறைக்குள்ளே வரவழைத்து பழக்கப்பட்டவளுக்கு.. நசநசவென்ற இந்தக் கூட்டம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.. மனிதர்களோடு ஒன்ற முடியாமல் திணறினாள்..
கணவனோடு நேரம் செலவழிக்கலாம் என்றால் மாண்புமிகு கணவன் ஒத்துழைக்க வேண்டுமே..
இருட்டில் மட்டும்தான் கட்டித் தழுவுகிறான்.. பகலில் ஏதோ சிநேகிதியை பார்ப்பது போல் தூர நின்று கண்ணியமாக சிரிக்கிறானே..!!
பகல் நேரத்தில் மனைவியை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்ற கதவை சாத்திக் கொண்டால் வீட்டார் தவறாக நினைப்பார்களாம்.. அவன் சொல்லும்போது அகலிகாவிற்கு எரிச்சலாக வந்தது.. கூட்டுக் குடும்பத்தில் இப்படி ஒரு சங்கடம் உண்டு.. அகலிக்கு புரியவில்லை..
அதிலும் அவன் சொன்ன இன்னொரு காரணம்.. அதை கேட்க கூட இஷ்டமில்லை அவளுக்கு..
அந்த இந்திரஜாவை அவனுக்கு திருமணம் செய்து வைப்பதாய் முடிவு செய்திருந்தார்களாம்.. இவன்தான் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்..
இப்போது புது தம்பதிகளாய் நீயும் நானும் ஜோடியாக கூடி களிப்பதை அவள் தற்செயலாக பார்த்து விட்டால் கூட.. மனம் கஷ்டப்படுமாம்..!! முடிந்தவரை இந்த மாதிரியான தர்ம சங்கடங்களை தவிர்ப்பது நல்லதல்லவா.. எதுவாயினும் அறைக்குள் வைத்துக் கொள்ளலாம்.. என்று கூறியிருந்தான்.. எவள் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன.. என் சந்தோஷம் எனக்கு முக்கியம் இல்லையா..?
இத்தனை அழகான மனைவியை விட அந்த இந்திரஜாவின் மன வருத்தம் தான் முக்கியமாக போனதா..?
புது மனைவியின் பொலிவை கண்டதும் சகலமும் மறந்து போக வேண்டுமே..!!
இவனுக்கு மட்டும் எப்படி.. குடும்பமும் இந்திராஜாவும்.. அந்த வீணாய் போன அத்தையும் நடுவில் வந்து நிற்கிறார்கள்.. அகலிகாவிற்கு புரியவில்லை..
சமையலறையில் வேலை செய்கையில் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு காதோரம் மீசையால் உரசி கொஞ்சி கதை பேசுவது.. துணிதுவைக்க விடாமல் இம்சை செய்வது.. குளிக்கும் போது உள்ளே இழுத்துக் கொள்வது.. பகல் நேரங்களில் கைகோர்த்துக்கொண்டு டிவி பார்ப்பது.. நேரங்காலம் இல்லாமல் கட்டிலில் கூடி களிப்பது.. மனைவியின் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றுவது.. இப்படி எதுவுமே இல்லையே..!! மனம் வெம்பினாள் அகலி..
தன்னிகரில்லாத அழகி என்று நினைப்பும் கர்வமும் அகலிக்கு அதிகமாகவே உண்டு.. உண்மையில் அவள் அழகி தான்.. ஆனால் அதற்காக எந்நேரமும் கௌதம் தன்னை ஆராதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் சற்று அதிக படியான ஆசை..
அவள் அழகில் மயங்கி அடிமையாக இருக்க வேண்டுமென்று நினைத்தாள்.. எப்போதும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். தன்னை கொஞ்சித் தீர்க்க வேண்டும்.. தனக்கு அதிகமான முக்கியத்துவத்தை தர வேண்டும்.. என்று எதிர்பார்த்தாள்.. அவனோ அவள் ஆசைகளுக்கு எதிர்மாறாக ஒரு சாதாரண கணவனாகவே நடந்து கொண்டான்..
நீயில்லாமல் நானில்லை என்று வசனம் பேசி இருபத்தி நான்கு மணி நேரமும் கொஞ்சித் தீர்க்கும் நாடக காதல் கற்பனைகளில் மட்டுமே சாத்தியம் என்று அவளுக்கு புரியவில்லை..
கணவன் சம்பாதிக்கவும் வேண்டும்.. கூடவே இருந்து காதலிக்கவும் வேண்டும் என்றால் அப்படி ஒரு ஹஸ்பன்ட் மெட்டீரியலை ஆர்டர் தந்து செய்தால்தான் சாத்தியம்..
அன்பு காட்டினான்.. தாம்பத்தியத்தில் குறைவில்லாமல் அவளை திருப்திப்படுத்தினான்.. கேட்டதை வாங்கி தந்தான்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளோடு அமர்ந்து பேசினான்.. அவ்வளவுதான் கௌதமனுக்கு தெரிந்த காதல்..
இவள் எதிர்பார்க்கும் அதீத முரட்டுத்தனமான காட்டுமிராண்டி காதல் அவனுக்கு பழக்கப்படாதது..
அகலிக்கோ ஒரே மாதிரியான இந்த முத்த காதலும்.. அதிராத கூடலும் சலித்து போய்விட்டது..
நெற்றியில் முத்தம்.. கண்களில் முத்தம்.. இதழில் ஒரு ஆழமான முத்தம்.. மார்பு காம்புகளில் பட்டும் படாமல் முத்தம்.. நாபியில் முத்தம்.. அந்தரங்க பிரதேசங்களில் முத்தம்.. அத்தோடு அவளை முழுவதுமாக தன்வசப்படுத்தி ஆட்கொண்டு படுக்கையில் விழுவது..
இவ்வளவுதானா தாம்பத்தியம்..? உடற்பயிற்சி போல் தினமும் ஒரே மாதிரி.. இதற்கடுத்து.. இது.. இன்று மனப்பாடமாய்.. ச்சே.. சலித்து விட்டது..
அவனை பிடிக்கவில்லை.. அதனால் அவன் காமமும் காதலும் பிடிக்கவில்லை..
தனக்கு திருமணமானதை முன்னிட்டு வெகு நாட்களாய் தன் தோழிகள் வலியுறுத்திய காரணத்தால்.. அவர்களுக்கு பாட்டி கொடுப்பதற்காக கௌதமனை வற்புறுத்தி அழைத்துச் சென்றிருந்தாள் அகலிகா..
மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் லன்ச் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
தோழிகளின் முன்பு தன் கணவனை பெருமையாக காட்டிக்கொள்வதற்காக.. அவனுக்காக பிரத்தியேக ஆடைகளை வாங்கி வந்து .. அணியச் சொல்லி வற்புறுத்தினாள்..
எளிமை விரும்பியான கௌதம் அந்த ஆடம்பர ஆடைகளை அணிய மறுத்து விட்டான்..
"எதுக்குமா வீண் செலவு..!! என்கிட்ட இருக்கிற டிரஸ்ல நல்லதா ஒன்னு போட்டுக்கிட்டா போதாதா..!! ஆடம்பரத்தை இப்படி டிரஸ்லதான் காமிக்கணுமா..? இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது" என்று தன்னிடமிருந்த ஒரு நல்ல பேண்ட் சட்டையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ள அவளுக்கு கோபம்.. உண்மையில் அந்த உடை கூட அவனை அழகாகத்தான் காட்டியது.. ஆனால் அவளுக்குத்தான் திருப்தி இல்லை..
காரில் போக வேண்டுமென்று அடம்பிடிக்க.. பைக்கில் தான் அழைத்துச் சென்றான்..
இருவரும் ஐந்து நட்சத்திர ஓட்டலினுள் ஜோடியாக நுழைந்து நடந்து வர.. அகலிகா தோழிகளின் முகம் மாறியது..
அகலிகாவைவிட அவள் தோழிகள் ஒரு படி மேலே சென்று.. கலங்கிய குட்டையாய் குழம்பி கிடந்த அவள் மனதை மொத்தமாக கலைத்து விட்டிருந்தனர்..
கல்யாண பூரிப்பில் சதை போட்டு முன் தள்ளிய தொப்பையோடு அவளோடு நடந்து வந்த கௌதமன் அவர்கள் பாணியில் அங்கிள் என்று அழைக்கப்பட்டான்..
முகத்துக்கு முன் மரியாதையின் நிமித்தம் சிரித்து பேசினாலும்.. முதுகின் பின்னால் மிதமிஞ்சிய கிண்டலும் கேலியும்.. அகல்யாவிற்கு அவமானமாய் போனது..
"மோசம் போயிட்டியே அகலி.. மோசம் போயிட்டியே..!! வருங்கால கணவர் பற்றி எவ்வளவு கனவு கண்டிருப்ப.. அத்தனையும் கானல் நீரா போச்சுதே..!! உன் அழகுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத ஒருத்தரை கணவரா தேர்ந்தெடுப்பேன்னு நாங்க நெனச்சு கூட பாக்கல.. ஓஹோ இதனால தான் எங்களை கல்யாணத்துக்கு கூட அழைக்கலையா.. !!" என்று ஒவ்வொருத்தையும் தனித்தனியாய் ரகசியமாய் சீண்டி கேலி செய்ய.. கௌதமன் தனக்கு ஒரு சதவீதம் கூட பொருத்தம் இல்லாதவன் என்ற எண்ணம் அவள் நெஞ்சில் ஆழமாக பதிந்து போனது..
எந்த தகுதிகளும் இல்லாத இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு தன்னைப்போல் ஒரு தேவதை கிடைத்தது பெரும்பாக்கியம் என்று அவள் கருதினாள்.. அவன் தன் காலை சுற்றி வந்து அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தாள்..
சொந்த பந்தங்களை விட தனக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்..
"அம்மாவுக்கு மூட்டு வலி.. இன்னைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.." என்று அவன் சொன்னால்..
"அப்போ என் கூட இருக்க மாட்டீங்களா..!! வாரத்துல ஒரு நாள் லீவு எடுத்துக்கறீங்க.. அந்த ஒரு நாள் கூட என்னோட நேரம் செலவழிக்கலைன்னா நான் எப்படி..!!" என்று கத்துவாள்..
"நான் என்ன நாள் பூரா ஹாஸ்பிடல்லையா இருக்க போறேன்..!! அரை மணி நேரம்.. வந்துடுவேன்மா.."
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. எனக்கு நீங்க என்கூட தான் இருக்கணும்.." என்று அடம் பிடிப்பாள்..
இப்படி அவள் முரண்டு பிடிக்கும் வேலைகளில் சில நாட்கள் எடுத்துசொல்லி சமாதானம் செய்வான். பல நாட்களில் அவளை கண்டுகொள்ளாமல் தன் வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பான்..
முடிந்தவரை மென்மையாக புரிய வைக்க முயற்சி செய்வான்.. அவள் புரிந்து கொள்ளாத பட்சத்தில் வேறென்ன செய்ய முடியும்.. சிந்திக்க தனிமை தந்து விலகி நின்று அமைதி காப்பான் ..
அவன் அமைதி மென்மேலும் அவளை ஆத்திரப்படுத்தவே.. தன் கோபத்தை வேறு விதமாக காட்ட ஆரம்பித்திருந்தாள்.. தொடர்ந்து அவனை மட்டந்தட்டிக் கொண்டே இருந்தாள்..
அதிலும் இரவில் கௌதமன் அவளை நெருங்கும் போது தான் இந்த பேச்சுக்கள் வெடிக்கும்..
"வர வர ரொம்ப கருகருன்னு தெரியுறீங்களே.." என்று முகத்தை சுழிப்பாள்..
"கல்யாணம் ஆகும்போது கொஞ்சம் பிட்டா இருந்தீங்க.. இப்ப தொப்பை உங்களை அசிங்கமா காட்டுது.."
"பிரஷ் பண்ணாம முத்தம் கொடுக்காதீங்க எனக்கு பிடிக்கல.."
"வேர்வை நாத்தம் குமட்டுது.."
"ஒரு உண்மையை சொல்லட்டுமா.. நீங்க பெரிய பிசினஸ் மேன்னு நினைச்சு தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.. ஆனா நீங்க ஒரு சாதாரண ஆசாரின்னு எதிர்பார்க்கல.."
"தொப்பை இடிக்குது.. அதனால கஷ்டமா இருக்கோ..!!"
"சீக்கிரம் முடிங்க.. எனக்கு தூக்கம் வருது.."
என்று தினம் தினம் ஏதேனும் சொல்லி அவனை தாழ்த்தி பேசிக் கொண்டிருக்க.. ஆரம்பத்தில் தன் மனைவி கேலி செய்கிறாள் என்று விளையாட்டாக நினைத்தவன் பிறகு அந்த வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்து அவமானத்தில் நெஞ்சம் வற்றிப் போனான்..
ஒரு கட்டத்தில் அவளை நெருங்குவதை முற்றிலுமாக தவிர்த்திருந்தான் கௌதமன்..
அப்படியே அவள் வற்புறுத்தலின் பேரில் நெருங்கினாலும்.. பெரிதாக உணர்ச்சிகள் எழும்புவதில்லை..
கணவனின் இயலாமை அவளுக்கு இன்னும் வசதியாகி போனது..
அவன் ஆண்மையற்றவன் என்பதை சொல்லி சொல்லி காட்டி மனதை துன்புறுத்தினாள்..
ஆனால் ஏற்கனவே மோக விளையாட்டுகளில் தூவப்பட்ட விதையின் விளைவாக இரண்டு மாத கரு அவள் வயிற்றில் வளர துவங்கிய காலம் அது..
அவள் கர்ப்பவதி என்ற விஷயம் தெரிந்த பிறகு மனக் கசப்புகளை மறந்து மனைவியின் குத்தல் வார்த்தைகளை பொறுத்துக் கொண்டு அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் கௌதமன்..
குழந்தை வந்தால் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கை..
முதலில் கசப்பை தின்றுவிட்டு இனிப்பை ருசித்தால் சுவை எடுபடுவதில்லை..
ஆரம்பத்திலேயே அவன் மீது எந்தவித திருப்தியும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தவளுக்கு அவன் அன்பும் கனிவும் இனிக்கவில்லை..
அவள் எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறு.. அவன் பண்புகள் அதற்கு நேர்மாறு..
தன் அழகு ஆராதிக்கப்படவில்லை.. தன் வாழ்க்கை சிறக்கவில்லை.. என்னடா இது உப்பு சப்பில்லாத வாழ்க்கை என்ற அலுப்பு.. ஒரு சராசரி குடும்ப பாங்கினியாக.. எந்த சுவாரசியமும் இல்லாமல் தன் வாழ்க்கை இயல்பாக கழிவதில் சலிப்பு..
அப்பா ஏமாற்றி விட்டார் அண்ணன் ஏமாற்றி விட்டான்.. என் தன் கணவனும் கூட தன் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டான் என்று மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தவளுக்கு இறுதியில் பெற்றெடுத்த குழந்தையின் வாயிலாக இறைவனும் சதி செய்து விட்டதில் உள்ளார்ந்த கொதிப்பு..
ஸ்வேதா பிறந்து நான்கு மாதமான காலகட்டத்தில் தான் அவளால் வாய் பேச முடியாது. காது கேட்காது என்ற உண்மை தெரிய வந்தது..
என் வயிற்றிலா இப்படி ஒரு பிள்ளை வந்து பிறக்க வேண்டும்.. இந்த குழந்தை கூட என்னை ஏமாற்றி விட்டதே..!! அகலி வாழ்க்கையே வெறுத்துப் போனாள்..
அதிலும் தன் நிறத்தில் தங்க விக்ரகம் போல் பிள்ளை பிறக்க வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை..
ஆனால் குழந்தை தகப்பனை நிறத்திலும் ஜாடையிலும் தகப்பனை உரித்து வைத்து அவன் நகலாக பிறந்திருக்கிறதே..!! மார்பில் பால் குடிக்கும் போதெல்லாம் மொக் மொக்கென்று தன்முகத்தை பார்க்கும் குழந்தையின் ஜாடையில் கௌதமனை காணும் போது மனம் சுணங்குகிறது..
பிள்ளையின் குறைபாடு காரணமாக கௌதமன் எதிர்பாராத அதிர்ச்சியில் நிலை குலைந்து போனான்.. வீட்டிலிருந்த அனைவருக்குமே இருள் சூழ்ந்த மனநிலை..
"நம்பிக்கை துரோகம் செஞ்சு ஒருத்தரை துடிக்க வச்சிட்டு.. சுயநலமா யோசிச்சா இப்படித்தான்..!! என் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா.." உள்ளுற மகிழ்ந்தாள் பூங்கொடி..
அகலிகாவின் கல்யாண கனவுகள் பொய்த்துப் போன ஆதங்கமும் அனைவர் மீதான கோபமும் குழந்தையின் மீதும் பிரதிபலித்தது.. குழந்தையை அரவணைத்து அமுது படைத்தாலும்.. அது ஒரு கட்டாயத்தின் பேரில் நிகழ்ந்து கொண்டிருந்ததே அன்றி.. கோபம் வெறுப்பு சலிப்பு போன்ற சுழல்களில் சிக்கி அவளின் உண்மையான தாய் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருந்தது..
"கவலைப்படாதே அகலி.. மனசை தேத்திக்கோ.. இவ நம்ம குழந்தை.. மத்தவங்க குழந்தை கிட்ட குறை காணலாம்.. நமக்கு இவ தேவதை.. தங்கத்துல குறை காண முடியுமா..!! என் தங்கத்தை உயிருக்கும் மேலாய் வளர்ப்பேன்.." என்று அவன் சொன்ன போது நெகிழ்ச்சிக்கு பதிலாய் நெஞ்சில் வேப்பங்காயின் கசப்பு பரவியது..
என்னடா இது வாழ்க்கை என்று அவள் நொந்து போயிருந்த நேரத்தில் தான் அவன் வந்தான்..
சந்திர தாருகேஷ்..
தொடரும்..