• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
70
ஜன்னலோர பேருந்து பயணம் எப்பேர்பட்ட சோகங்களையும் மறக்கடித்து விடுகிறது.. தற்காலிகமாக சஞ்சலங்களை ஓரந்தள்ளிவிட்டு இதமான மனநிலையுடன்.. வயல்வெளிகளையும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த தென்னை மரங்களையும் வேடிக்கை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் கமலி..

சோலைப் பூவில் மாலை தென்றல் ஆடும் நேரம்..
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் பாடும் காலம்..

ஹெட் போனில் மிதமான சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க..!! பாடலுக்கு ஏற்றபடி ஜன்னலோர காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன..!!

காட்சியையும் பாடலையும் கெடுக்கும் வண்ணம் அலைபேசியின் வித்தியாசமான ரிங்டோன் அழைப்பு வந்திருப்பதை உணர்த்த.. கண்கள் சுருக்கி திரையில் பார்த்தாள்..

மாயா..!!

பேரை பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன.. உள்ளுக்குள்ளே லேசான அயர்ச்சியும் கூட..

"இந்த ஒரு வாரம் நீ சிரிச்சுக்கிட்டே இருந்தா தான் உன்னை வெளியூர் அனுப்பி வைப்பேன்" என்று சொன்னவள்.. அவளோடிருந்த அந்த ஏழு நாட்களிலும் அழுது தீர்த்துவிட்டாள்..

"இனி நீ இல்லாத தனிமையை பழகிக்கணும்.."

"தனியா எப்படி சாப்பிடுவேன்.."

"நீயில்லாம எப்படி தூங்குவேன்.."

"யார் கூட சேர்ந்து படம் பார்ப்பேன்..!!"

"யார் எனக்காக பிஸிபேளாபாத் பண்ணி தருவாங்க.."

"நீ உன் முடிவை கொஞ்சம் மாத்திக்க கூடாதா..!! இங்கேயே ஏதாவது வேலை தேடிக்கோயேன்.."

"பேசாம நான் அந்த அசோக்கை கொன்னுடவா.. அவனாலதானே இவ்வளவும்.. அந்த வீணா போனவனாலதான நீ என்னை விட்டுப் போற.."

"சரி சரி அவனை பத்தின பேச்சை எடுக்கல..!!"

சந்தோஷமாக இருக்கலாம்.. மிச்சமுள்ள பொழுதுகளை ஆனந்தமாக கழிக்கலாம் என்று கூறிவிட்டு இந்த ஒரு வாரமும் பிரிவை பற்றி புலம்பித் தீர்த்து கமலியை படாதபாடு படுத்திவிட்டாள் மாயா..

அவள் கணவன் வெளிநாடு சென்ற போது கூட இந்த அளவில் துக்க பட்டிருப்பாளா துயரப்பட்டிருப்பாளா தெரியவில்லை..!!

"இனி நாலு சுவத்துக்குள்ள நான் மட்டும் தனியா பேய் மாதிரி சுத்தணும்..!! ஒரு வாரம் கஷ்டமா இருக்கும் அப்புறமா அதுவும் பழகிடும்..!!" மாயா வாடிய முகத்தோடு சொல்லும்போது கமலிக்கு நெஞ்சம் பிசையும்..

தான் இக்கட்டில் தவித்த போது தாங்கி பிடித்த தோழியை வேதனைப்படுத்திவிட்டு அப்படியாவது வெளியூர் சென்று பிழைக்க வேண்டுமா என்று கூட சில சமயங்களில் தோன்றும்..!!

அடுத்த சில மணி நேரங்களில் இந்த ஊரிலிருந்தால் தன்னால் வாழவே முடியாது.. என்பதை மனம் ஊசியாய் உணர்த்தி.. அவள் முடிவை மாற்ற செய்து விடும்..

பிரிவு என்பது மாயாவிற்கு மட்டுமல்ல கமலிக்கும்தான் வேதனையை தருகிறது.. ஆனால் எந்த உறவையும் நிலைக்க விடாத தன் தலையெழுத்தை எண்ணி வருந்தி கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்ற விரக்தியோடு மனதை திடப்படுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தாள்‌‌..

தனிமை என்பது கொடிய நோய்.. இரக்கம் பாராமல் மனிதர்களைப் பிச்சு தின்று விடுகிறது.. கணவனும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில்.. ஒரு வருட காலமாக உடன் வசித்த தோழியும் விட்டுப் பிரிகிறாள் என்றால் அது உடல் அங்கத்தின் ஒரு பகுதியை இழப்பது போல் எத்தனை வலியை தருமென கமலியால் புரிந்து கொள்ள முடிகிறது..

சில நேரங்களில் இந்த வலியை பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.. வாழாவெட்டியான இந்த தோழி எத்தனை நாட்களுக்கு சாஸ்வதம்.. அடுத்த ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ விஷ்ணு இந்தியா திரும்பி விட்டால்.. கணவனும் மனைவியுமாக அவர்கள் வாழ போகிற சந்தோஷமான வாழ்க்கைக்கு தான் குறுக்கீடாக நிற்கக்கூடாது..

என் தோழி இப்படி ஒரு நிலையில் இருக்கையில்.. நான் மட்டும் கணவனோடு கொஞ்சி குழைந்து சந்தோஷமாக வாழ்வதா..? என்ற தர்ம சங்கடமும்.. வேதனையும் மாயாவின் மனதிற்குள் வந்து விடக்கூடாது..!! இது போன்ற சின்னஞ்சிறு நெருடல்கள் விரிசல்களாக விரிந்து அவள் வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும்..

அவள் கணவன் வந்த பிறகு வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றால் மாயா நிச்சயம் சம்மதிக்க மாட்டாள்.. சரி முன்னேற்பாடாக இப்போதே வெளியேறி வேறு இடத்தில் தங்கிக் கொள்கிறேன் என்றால் அதற்கும் அவள் ஒத்து வர மாட்டாள்.. அதற்கான ஒரே வழி வெளியூரில் ஏதேனும் வேலை தேடிக்கொள்வது.. முன்பே ஒருமுறை இதைப்பற்றி யோசித்துதான் வைத்திருந்தாள்..

கமலி வெளியூர் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான்.. ஆனால் முழு காரணமும் மாயா அல்ல.. கண் காணாத இடத்தை தேடி ஓடி ஒளிவதற்கான முக்கிய காரணம் அஷோக் தான்..!!

காதலித்த காலங்களிலும்.. மணம்முடித்த பின்னும் அந்த நகரம் முழுக்க இருவரும் ஜோடியாக சுற்றி திரியாத இடம் எதுவும் பாக்கி இல்லை.. வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வேலைக்கு போனாலும்.. ஒவ்வொரு இடமும் அவனோடு செலவிட்ட ஒவ்வொரு விதமான நினைவுகளை பயாஸ்கோப் காட்சிகளை போல் மனதில் பிரதிபலிக்க வைத்து வேதனையை கூட்டும்..

சந்தோஷமான தருணங்களோடு வஞ்சிக்கப்பட்ட காலங்களும் அவள் மனதை அறுக்கும்.. அப்படி ஒரு சூழ்நிலையை அனுசரித்து கடந்து போக நினைப்பது நகங்களோடு சேர்த்து வலிக்க வலிக்க விரல் நகங்களையும் நறுக்கிக் கொள்வதற்கு சமம்.. வீட்டை விட்டு வெளியே வராமல் எத்தனை நாளைக்கு காலம் தள்ள முடியும்..

புது இடம் புது சூழ்நிலை.. நிச்சயம் தன் மனதை மாற்றும்.. தற்காலிக தனிமையை மாயா பழகி கொள்வாள்.. கூடிய விரைவில் அவள் கணவன் வந்து சேர்ந்தபின் தனிமை தூரம் தொலைந்து அழகான காதல் வாழ்க்கை அவளுக்கு சொந்தமாகி விடும்.. அதன்பிறகு என்னை நினைத்துப் பார்க்க நேரமெங்கே இருக்க போகிறது.. என்ற எண்ணத்தோடு தான் தோழியை தவிக்க விட்டு அவள் பளபளத்த கண்களை பார்த்தபடி.. பேருந்து ஜன்னல் வழியே விடை தந்து கிளம்பினாள்..

இப்போது மீண்டும் மாயாவின் அழைப்பு.. எடுத்துப் பேச ஆரம்பித்தால் மீண்டும் பிரிவு புலம்பல்களோடு தன்னையும் மீறி மாயா உணர்ச்சிவசப்பட்டு அழுவாள்.. அதனால் தனக்கும் மன கஷ்டம்.. குறைந்தபட்சம் இந்த பிரயாணமாவது இனிமையாக இருக்கட்டுமே..!! என்று அழைப்பை துண்டித்து.. "ஐ அம் ஸ்லீப்பிங்.. வில் கால் யு லேட்டர்.." என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு.. மீண்டும் விட்ட இடத்திலிருந்து பாடலை ஒலிக்க விட்டாள் கமலி..

"ஓகே.. ரீச் ஆன பிறகு எனக்கு கால் பண்ணு..!!" மாயா ரிப்ளை செய்திருக்க அதையும் பார்த்துவிட்டு ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினாள்..

பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி.. பேச்சுத் துணைக்கு சிறிது நேரம் கமலியை துருவி துருவி ஏதேதோ கேள்வி கேட்டார்..

கமலி புன்னகையோடு அளவாக பதில் சொல்லி.‌. உரையாடலை கத்தரித்துக் கொள்ள.. வேறு வழியில்லாமல் தூங்கி தூங்கி கமலியின் தோள்களில் விழுந்து பின் அவரே திடுக்கிட்டு எழுந்து மறுபுறம் பேருந்து கம்பியில் தலையை சாய்த்து உறங்க ஆரம்பித்திருந்தார்..

விடியற்காலை 4:30 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேர்ந்திருந்தது அந்த சொகுசு பேருந்து..‌

பெரிய பெட்டியை தூக்கிக் கொண்டு இறங்கியவுடன் ஆட்டோ காரர்களும்.. டாக்ஸி டிரைவர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்..

"மேடம் எங்க போகணும் ஆட்டோல உட்காருங்க மேடம்..‌"

"கார்ல ஏறுங்க மேடம்.. பெட்டியை எடுத்து வைக்கவா..!!" என்று இன்னும் சில பேர் சவாரிக்கு அழைக்க..

அனைவரையும் கடந்து நடந்து சென்று கொண்டே இருந்தாள் கமலி..

மொத்தமாக இருள் விலகவில்லை.. பேருந்து நிலையத்தில் விளக்குகளின் வெளிச்சம் அவளுக்கு துணையாக பின்தொடர.. மெல்லிய கீற்றாக விடியலின் ஒளி பரவியிருந்த இந்த நேரத்தில்.. தெரியாத ஊரில் யாரை நம்பி.. எப்படி செல்வது ஒன்றும் புரியவில்லை..!!

எவ்வளவு தூரம் நடக்க முடியும்.. எப்படியோ ஒரு வழியாக அத்தனை பேரில் ஒரு ஆட்டோ டிரைவரை பிடித்து முகவரி சொல்லி ஏறி அமர்ந்து விட்டாள்..

டாக்டர் சூர்யதேவ்.. என்ற சில்வர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த மரப்பலகை.. அந்த பிரம்மாண்ட சுவற்றில் எறும்பு போல் தெரிய.. இரும்பு கேட்டின் முன்பு நின்றது ஆட்டோ..

பணத்தை கொடுத்துவிட்டு.. பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி.. நுழைவாயிலின் முன்பு சென்று நின்றாள்..

"யாரம்மா பாக்கணும்..!!" நுழைவாயிலின் உட்புறமிருந்து வயதான செக்யூரிட்டி ஒருவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தார்..

"டாக்டர் சூர்யதேவ்..!!"

"சார் வீட்ல இல்லைங்களே..!!"

"ஓஹ்.. எப்ப வருவார்..?"

"டாக்டர் கான்பிரன்ஸ் விஷயமா டெல்லி போறதா பேசிக்கிட்டாங்க.. எனக்கு தெரியலமா.. வர ரெண்டு நாளாகும் போலிருக்கு.." என்றார் அவர்..

"அய்யோ.." என்று தலையில் கை வைத்துக் கொண்டாள் கமலினி..

"நீங்க யாரு.. என்ன விஷயமா சாரை பார்க்க வந்திருக்கீங்க..?" என்றவரின் பார்வை அவள் கொண்டு வந்திருந்த பயண பைகளின் மீது விழுந்தது..

"நான் கமலினி.. டாக்டரை மீட் பண்ணனும்..!! அவருக்கு என்னை தெரியும்.." அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

"நீங்க வேணும்னா போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன்.." என்றார் செக்யூரிட்டி அவள் நிலை புரியாது..

"வெளியூரிலிருந்து வரேன் போயிட்டு திரும்பி வர்றது கஷ்டம்..!! உங்க சாருக்கு போன் பண்ணி பேசி பாருங்களேன்.." என்றாள் அவள் சங்கடத்தோடு..

"அது முடியாதம்மா.. கண்ட நேரத்தில் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண கூடாதுங்கறது சாரோட கடுமையான உத்தரவு.. மீறினால் என் வேலை போயிடும்.. உங்களுக்கு தெரிஞ்சவர்னு சொல்றீங்க நீங்களே போன் பண்ணி பாருங்களேன்..!!" என்றார் செக்யூரிட்டி பொறுமையான குரலில்..

சூர்ய தேவ் நம்பர் அவளிடம் இருக்கிறது.. போன் பண்ணலாம் தான்.. ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் அவளை தடுத்தது..

ஐந்து வருடங்களாக கணவனையும் வீட்டையும் மட்டுமே சுற்றி சுற்றி வந்ததில்.. பணி புரிவதற்கான முக்கிய திறமையான கம்யூனிகேஷன் ஸ்கில்.. என்ற விஷயம் தன்னிடமிருந்து தொலைந்து விட்டதாக உணர்ந்தாள்.. அடடா மங்கின மழு மட்டையாகி போனேனா..!! அவளுக்கே அவள் மீது கோபம்..

எத்தனை தடுமாற்றம்.. எத்தனை தயக்கம்.. நோயாளிகளிடம் தெளிவான குரலில் பேசி அவர்களை வழிநடத்திய பழைய கமலி எங்கே போனாள்.. சூரிய தேவ் நம்பருக்கு அழைத்து.. நான் வந்திருக்கிறேன்.. அடுத்து என்ன செய்வது என்று கேட்பதில் ஏன் இத்தனை தயக்கம்..

அறிமுகமில்லாத ஒருவரை போனில் அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறேன் என்று எப்படி சொல்வதாம்..!!

அதற்காக பேசாமலேயே இருந்து விடப் போகிறாயா..? ஏதாவது ஒரு கட்டத்தில் அவரை சந்தித்து உன்னை அறிமுகம் செய்து கொண்டு.. உன்னை பற்றிய விவரங்களை சொல்லித்தானே ஆக வேண்டும்.. நீ அவரிடம் வேலை பார்க்கப் போகிறாய் கமலினி.. தயக்கத்தை உடைத்து போனை எடுத்து சூர்யதேவை அழை..!! உள் மனம் கட்டளையிட.. வேறு வழி இல்லாமல் அலைபேசியை எடுத்து டாக்டர் சூர்யதேவ் என்று சேமித்து வைத்திருந்த எண்ணை அழுத்தினாள்‌‌..

"ஹலோ.." எதிர்பக்கம் கரகரப்பான ஆண் குரல்.. விடியல் நேரம் என்பதால் உறக்கத்திலிருந்து விழித்ததைப் போல் சற்று சோம்பலாக தெரிந்தது அந்த குரல்..

"ஹ.. ஹலோ சார்.. குட் மார்னிங்.. நான் கமலினி.."

"எந்த கமலினி..!!" எதிர்பக்கம் சலிப்பு..

பதிலுக்கு குட் மார்னிங் சொல்லும் பழக்கம் இல்லையா..? என்று முகிழ்த்த எண்ணத்தை ஓரந்தள்ளிவிட்டு

"மாயா ஃப்ரெண்ட் கமலினி.." என்றாள் கமலி..

சில கணங்கள் எதிர்முனை மவுனமாக இருந்தது.. யோசித்துக் கொண்டிருப்பார் போலும் என்று அவளே யூகித்துக் கொண்டாள்..

"சொல்லுங்க.." மீண்டும் அந்த குரல் இயந்திரத்தனமாக..

மாயா பெரிதாக கொடுத்த பில்டப்பில்.. அவள் பெயரைச் சொன்னதும்.. அடுத்த கணம்.. ஓ.. ஒகே.. ஒகே.. மாயா ஃபிரெண்டா நீங்க.. என்று அந்த குரலில் ஒரு மலர்ச்சி தெரியும்.. மரியாதை துளிர்விடும்.. என்று எதிர்பார்த்தவளுக்கு சப்பென்று ஆனது.. ஒரு மண்ணும் இல்லை.. அதே அதிகார அலட்சிய குரல்..

"சரி நான் கோயம்புத்தூர் வந்திருக்கேன்.. உங்க வீட்டு வாசல்ல நிக்கறேன்.. அடுத்து என்ன பண்ணனும்..?" ஒரு வழியாக கோர்வையாக பேசி முடித்திருந்தாள்..

"இன்பார்ம் பண்ணிட்டு வர்றது இல்லையா..?" எதிர்முனை குரல் எரிச்சலாகியது..

"என்ன இப்படி கேக்கறார்.. மாயா சொல்லலையா இவர்கிட்ட..? ஹவ் ரூட்" என்ற குழப்பத்தோடு பதில் சொல்ல தெரியாமல் அவள் அமைதியாக காத்திருக்க..

"சரி செக்யூரிட்டி கிட்ட போன் குடுங்க..!!" என்றான் அவன்..

"டாக்டர் உங்க கிட்ட பேசணுமாம்.." போனை செக்யூரிட்டியிடம் கொடுத்தாள்..

அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ சரி சரி என்ற தலையசைத்த செக்யூரிட்டி.. அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு வாங்க மேடம் என்றவாறு வாயில் கதவை திறந்தார்..

"ஹலோ சார்.."

"ஹான்.. மிசஸ் கமலினி.."

"ஒன்லி கமலினி.." அவள் திருத்தினாள்..

"ப்ச் வாட்டவெர்.. வீட்ல சிங்காரம்ன்னு மெயிட் இருப்பார்.. அவர்கிட்ட வீட்டு சாவி வாங்கிக்கோங்க.. மாடியில தங்கிக்கோங்க..!! நாளைக்கு டியூட்டில ஜாயின் பண்ணிடுங்க..
நான் டாக்டர் காவியா கிட்ட இன்பார்ம் பண்ணிடறேன்..!! சீனியர் ஸ்டாஃப் நர்ஸ் ஷீலா உங்களை டிரெயின் பண்ணுவாங்க..!! எனிதிங் எல்ஸ்..?" வேகமாக பேசி முடித்திருக்க இவளுக்கு மூச்சு வாங்கியது..

"நோ சார்.. ஐம் க்ளியர்..!!" என்றாள் லேசான திணறலோடு

"குட்.." சூர்யதேவ் அழைப்பை துண்டித்து விட்டான்..

"அவ்வளவுதானா?" என்று அவள் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றிருந்தார் செக்யூரிட்டி..

அவரை பின்தொடர்ந்து நடந்து சென்றவள் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தில் பார்வையை மேய விட்டாள்..

செல்வந்தர்கள் பணத்தை வாரி இறைத்து நவீன டெக்னாலஜியோடு புதுப்புது கட்டமைப்போடு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கும் இந்த மாடர்ன் காலகட்டத்தில்.. 80.. 90 காலங்களை பிரதிபலிக்கும் ஒரு பழைய கால ஆன்டிக் டைப் வீடு..

பெரிய பங்களா தான்.. ஆனால் கட்டிடத்தின் வடிவமைப்பில் பழமை நிறைந்திருந்தது.. பாசி படர்ந்து பாழடைந்து போனால் நிச்சயம் இது பூத் பங்களாதான்..

அந்த ஏரியாவின் ஆடம்பர வில்லா டைப் வீடுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு பங்களாவா..? கமலிக்கு ஆச்சரியமாக இருந்தது..

ஒன்று டாக்டர் பழமை விரும்பியாக இருக்க வேண்டும்.. இல்லையேல் அவள் தாத்தா பாட்டி காலத்து உணர்வு பூர்வமான ஞாபகங்களை தன்னோடு வைத்திருக்க.. வீட்டை இடித்து கட்டாமல்.. இயல்பு மாறாமல் புதுபித்திருக்க வேண்டும்.. என்ற யூகத்தோடு செக்யூரிட்டியை பின் தொடர்ந்தாள்..

கொல்லென்று பூத்திருந்த பூக்களோடு அடர்ந்திருந்த கொடிகள்.. சரியாக சீரமைக்கப்படாத பூந்தோட்டம்..

ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் ஓடியாடும் பிள்ளைகளைப் போல்.. ஆங்காங்கே தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடிகள்..!! எனத் தோட்டம் தோட்டமாக இல்லை..

தோட்டத்தை தாண்டி மற்ற இடம்.. சுத்த சுகாதாரத்தோடு பளிச்சென்று இருந்தது..

பரந்து விரிந்த ஒரு மினி பங்களா.. !! தேக்கு மர கதவுகளும் ஜன்னல் கம்பிகளும்.. வெளியிலிருந்து பார்க்கும்போதே உட்புறத்தில் தெரிந்த பளிச்சென்ற மார்பில் தரையும்.. வீடு அந்த காலத்து தரமான கட்டுமானம் என்பதை சொல்லாமல் சொல்லியது..

பழைய கால கிளாசிக் வீடு என்றாலும்.. கமலிக்கு இந்த வீடும்.. சுற்றுப்புற சூழலும் மிகவும் பிடித்தது..!! இது போன்ற வீடுகளை இந்த காலத்தில் பார்ப்பதெல்லாம் மிகவும் அரிது..

ஆடம்பர பங்களாக்களிலும் லக்சரி அப்பார்ட்மெண்டுக்களிலும் வாழும் உயர்தர மக்களுக்கு மத்தியில்.. இப்படி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பழைய பங்களாவாசியான அந்த டாக்டர்.. கமலியின் மன கண்களுக்கு சற்று வித்தியாசமானவராய் தோன்றினார்..

வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் ஓடி வந்தான்..

"வணக்கம் மேடம்.. சாவி.." என்று அவர் கையில் கொடுத்தவன்.. "மாடியில உங்க ரூம் இருக்கு.. ஏற்கனவே சுத்தம் பண்ணி வச்சாச்சு.." என்ற கீழ் வீட்டுக்குள் நுழைய விடாமல் அப்படியே மேலே துரத்தினான்..

செக்யூரிட்டி அவளிடம் சாவி கொடுக்கப்பட்டதை கவனித்து விட்டு பெட்டிகளோடு மேலே ஏறினார்..

அவளிடமிருந்து சாவியை வாங்கி கதவை திறந்து பெட்டிகளை உள்ளே வைத்தார்..

கீழ் வீடு அளவிற்கு பெரியதாக இல்லை என்றாலும்.. ஒரு கூடம் படுக்கையறை கிச்சன்.. போர்டிகோ பால்கனி என்று விஸ்தாரமான வீடாகத்தான் இருந்தது..

சோபா.. டிவி.. கட்டில்.. சமையலறையில் கேஸ் ஸ்டவ்.. தேவையான பாத்திரங்கள் என அனைத்துமே அங்கிருந்தன..

"இதுக்கு முன்னாடி இங்க யாராவது குடியிருந்தாங்களா..? சாமானெல்லாம் அப்படியே இருக்கே.." கமலி ஆச்சரியமாக கேட்க..

"இல்லைமா.. சில சமயம் சார் இங்க வந்து தூங்குவார்.. யாரையும் தொந்தரவு பண்ணாம அவரே சமைச்சு சாப்பிட்டுக்குவார்.." என்றார் செக்யூரிட்டி

"கீழே அவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது எதுக்காக மாடியில் வந்து தங்கணும்.." கமலி புரியாமல் கேட்க..

"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா.. இரண்டுமே அவரோட வீடு தானே.. ஹாஸ்பிடல்லருந்து வந்து நேரடியா மாடியில வந்து தங்கறதை பார்த்திருக்கேன்.. அதை வச்சு சொன்னேன்.. சரி நான் வர்றேன் மா.. ஏதாவது வேணும்னா சிங்காரத்து கிட்ட கேட்டுக்கோங்க..!!" செக்யூரிட்டி சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டார்..

வீட்டை ஒரு முறை நிதானமாக சுற்றி வந்தாள் கமலி.. பிறகு சோபாவில் அமர்ந்து.. மாயாவிற்கு அழைத்து தான் வந்து சேர்ந்து விட்டதாக தகவல் தெரிவித்தாள்..

"சூர்ய தேவ் கான்ஃபரன்ஸ் போயிருக்காரா..? உன்னை அனுப்பி வைக்கிறதா சொன்னபோது அவர் இதை பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே..?" மாயா புரியாமல் கேட்க..

"எனக்கும் எதுவும் தெரியலடி.. ஆனா இன்பார்ம் பண்ணிட்டு வர்றது இல்லையான்னு ரூடா கடுகடுன்னு பேசினார்.. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.." என்று உதட்டை சுழித்தாள் கமலி..

"அவர் குணமே அப்படிதான்டி..!! மனச போட்டு குழப்பிக்காதே.. நல்லா ரெஸ்ட் எடு.. ஏதாவதுன்னா எனக்கு கால் பண்ணு.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. ஃப்ரீ ஆகிட்டு போன் பண்ணு.." இறுதியில் ஒரு சோக வாக்கியத்தோடு முடித்து அழைப்பை துண்டித்தாள் மாயா..

மாற்றுடை எடுத்துக் கொண்டு.. குளித்து முடித்து வெளியே வந்தாள் கமலி.. நன்றாக விடிந்து விட்டிருந்தது..

பால்கனியிலிருந்து பார்க்கும்போது.. சுற்று வட்டாரம் கண்ணுக்கு குளிர்ச்சியாக மிக அழகாக தெரிந்தது.. கீழ்புற தோட்டம்தான் சரியாக சிகை திருத்தப்படாத குழந்தையாக தாறுமாறாக உருத்தியது.. மற்றபடி இங்கு நின்று ஒரு காபியை அருந்தியபடி.. காலை நேர காட்சிகளை ரசித்தபடி அருமையாக வேடிக்கை பார்க்கலாம்.. ஒருவேளை டாக்டர் அதற்காகத்தான் அடிக்கடி இங்கு வந்து தங்கிக் கொள்கிறாரோ..!! அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் சிங்காரம் அவளுக்காக காபி கலந்து எடுத்து வந்திருந்தார்..

பரவாயில்லை.. டாக்டர் பேச்சுதான் சரியில்லை.. விருந்தாளியை ஓரளவு உபசரிக்க தெரிந்திருக்கிறது.. என்ற மனநிலையோடு சிங்காரத்திற்கு நன்றி சொல்லி காபியை வாங்கி பருகினாள்..

சூடான ஃபில்டர் காபி.. தேவாமிர்தமாக தொண்டையை நனைத்தது..

காலை பலகாரம்.. மதிய உணவு.. இரவு சாப்பாடு.. என அனைத்தையும் அவள் அறைக்கே கொண்டு வந்து தந்திருந்தார் சிங்காரம்.. வேளா வேளைக்கு உபசரிக்கும் சிங்காரத்தின்மேலும்.. அவரிடம் சொல்லி தன்னை கவனித்துக் கொள்ள உத்தரவிட்ட டாக்டர் மீது மதிப்பு பெருகியது..

ஆனால் கடைசியில் சிங்காரம் சொன்னாரே ஒரு வார்த்தை..!! அதள பாதாளத்தில் விழுந்தவள் போல் அவள் முகம் கருத்து போனது..

"அம்மா புது இடம் புது சூழ்நிலை.. உங்களுக்கு எதுவும் பொருந்தியிருக்காது.. அதனாலதான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தேன்.."

"டாக்டர் வர்றதுக்குள்ள.. முடிஞ்ச அளவு மளிகை சாமான்களை வாங்கி போட்டு நீங்களே சமைக்க பழகிடுங்க..!!"

"வந்தவங்களுக்கு வீட்டு சாவி மட்டும் தந்தா போதும்.. வேற எந்த சலுகைகளும் உபச்சாரமும் செய்ய செய்ய கூடாதுன்னு டாக்டர் போன்ல சொல்லியிருந்தார்.. எனக்குதான் மனசு கேட்கல..!!" சிங்காரம் சொன்னதில் டாக்டர் மீது அவள் வைத்திருந்த மதிப்பு சரிவு பாலத்தில் உருட்டிவிட்ட பந்து போல் சர்ரென்று இறங்கியது..

ஜீரணித்த உணவு மீண்டும் நெஞ்சு பகுதியின் மேலேறி தொண்டை குழியில் உறுத்தும் உணர்வு

"நாளைக்கு கடைத்தெரு மார்க்கெட் எல்லாத்தையும் காட்டிவிடுறேன்.. நீங்க இங்கேயே தங்கறதுன்னு முடிவு பண்ணியிருந்தா.. சமைக்கிறதுக்கும்.. புழங்கறதுக்கும்.. தேவையானதை வாங்கி வச்சுக்கோங்க..!! டாக்டர் சுபாவம் ஒரு மாதிரி.. அவர் வந்த பிறகு என்னால உங்க கிட்ட பேச முடியுமான்னு கூட தெரியல..!! ரொம்ப கறார்.. பார்த்து நடந்துக்கோங்க.." என்று சொல்லிவிட்டு சென்றான்..

குடி வந்திருக்கும் பெண்ணை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று டாக்டர் தெளிவாக சிங்காரத்திடம் விளக்கி சொல்லிருக்கிறார்.. அதற்கான பிரதிபலிப்புதான் இந்த அறிவுரைகள்..!!

வேலை பார்க்க வந்த நர்ஸ்தான்.. தன்னை விருந்தாளி போல் கவனிக்க வேண்டாம்.. ஆனால் வந்தவளுக்கு எந்த உபசரிப்பும் தேவையில்லை.. அவள் தேவையை அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று டாக்டர் குறிப்பிட்டு சிங்காரத்திடம் உத்தரவிட்டிருந்ததில் ச்சே.. என்ன ஒரு சின்ன புத்தி.. மனிதர்களை மதிக்க தெரியலையே இந்த ஆளுக்கு..!! என்று வெறுப்பாக மனம் கசந்தாள்‌ கமலினி..

தொடரும்
 
Last edited:
Joined
Nov 20, 2024
Messages
48
ஜன்னலோர பேருந்து பயணம் எப்பேர்பட்ட துன்பங்களையும் மறக்கடித்து விடுகிறது.. அப்போதைக்கு சஞ்சலங்களை ஓரந்ள்ளிவிட்டு இதமான மனநிலையுடன்.. வயல்வெளிகளையும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த தென்னை மரங்களையும் வேடிக்கை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் கமலி..

"நீ உன் முடிவை கொஞ்சம் மாத்திக்க கூடாதா..!! இங்கே ஏதாவது வேலை தேடிக்கோயேன்.."

"பேசாம நான் அந்த அசோக்கை கொன்னுடவா.. அவனாலதானே இவ்வளவும்.. அந்த வீணா போனவனால தான் நீ என்னை விட்டுப் போற.."

தான் இக்கட்டில் தவித்த போது தாங்கி பிடித்த தோழியை வேதனைப்படுத்திவிட்டு அப்படியாவது வெளியூர் சென்று வாழ வேண்டுமா என்று கூட சில சமயங்களில் தோன்றும்..!!

இதோ இப்போது மறுபடியும் மாயா அழைக்கிறாள்.. தனிமை என்பது கொடிய நோய்.. இரக்கம் பாராமல் மனிதர்களைப் பிச்சு தின்று விடுகிறது.. கணவனும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில்.. ஒரு வருட காலமாக உடன் வசித்த தோழியும் விட்டுப் பிரிகிறாள் என்றால் அது உடல் அங்கத்தின் ஒரு பகுதியை இழப்பது போல் எத்தனை வலியை தருமென கமலியால் புரிந்து கொள்ள முடிகிறது..

கமலி வெளியூர் செல்வதற்கு இது ஒரு காரணம் அவ்வளவுதான்.. ஆனால் முழு காரணமும் மாயா அல்ல.. கண் காணாத இடத்திற்கு சென்று ஓடி ஒளிவதற்கான முக்கிய காரணம் அஷோக் தான்..!!

காதலித்த காலங்களிலும்.. மணம்முடித்த பின்னும் அந்த நகரம் முழுக்க அவர்கள் சுற்றி திரியாத இடம் எதுவும் பாக்கி இல்லை.. வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வேலைக்கு போனாலும்.. ஒவ்வொரு இடமும் அவனோடு செலவிட்ட ஒவ்வொரு விதமான நினைவுகளை பயாஸ்கோப் காட்சிகளை போல் மனதில் பிரதிபலிக்க வைத்து வேதனையை கூட்டும்..

இப்போது மீண்டும் மாயாவின் அழைப்பு.. எடுத்துப் பேச ஆரம்பித்தால் மீண்டும் பிரிவு புலம்பல்களோடு தன்னையும் மீறி மாயா உணர்ச்சிவசப்பட்டு அழுவாள்.. அதனால் தனக்கும் மன கஷ்டம்.. குறைந்தபட்சம் இந்த பிரயாணமாவது இனிமையாக இருக்கட்டுமே..!! என்று அழைப்பை துண்டித்து.. "ஐ அம் ஸ்லீப்பிங் வில் கால் யு லேட்டர்.." என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு.. மீண்டும் விட்ட இடத்திலிருந்து பாடலை ஒலிக்க விட்டாள் கமலி..

பெரிய பெட்டியை தூக்கிக் கொண்டு இறங்கிய உடனே ஆட்டோ காரர்களும்.. கார்ல டாக்ஸி டிரைவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர்..

"மேடம் எங்க போகணும் ஆட்டோல உட்காருங்கள் மேடம்..‌"

"கார்ல ஏறுங்க மேடம்.. பெட்டியை எடுத்து வைக்கவா..!!" என்று இன்னும் சில பேர் சவாரிக்கு அழைக்க..

அனைவரையும் கடந்து நடந்து சென்று கொண்டே இருந்தாள்..

"டாக்டர் கான்பிரன்ஸ் விஷயமா டெல்லி போறதா பேசிக்கிட்டாங்க.. எனக்கு தெரியலமா.. வர ரெண்டு நாள் ஆகும் போலிருக்கு.." என்றார் அவர்..

ஐந்து வருடங்களாக கணவனையும் வீட்டையும் மட்டுமே சுற்றி சுற்றி வந்ததில்.. பணி புரிவதற்கான முக்கிய திறமையான கம்யூனிகேஷன் ஸ்கில்.. என்ற விஷயம் தன்னிடமிருந்து தொலைந்து விட்டதாக தோன்றியது.. அடடா மங்கின மழு மட்டையாகி போனேனா..!! அவளுக்கே அவள் மீது கோபம்..

அதற்காக பேசாமலேயே இருந்து விடப் போகிறாயா..? ஏதாவது ஒரு கட்டத்தில் அவரை சந்தித்து உன்னை அறிமுகம் செய்து கொண்டு.. உன்னை பற்றிய விவரங்களை சொல்லித்தானே ஆக வேண்டும்.. நீ அவரிடம் வேலை பார்க்கப் போகிறாய் கமலினி.. தயக்கத்தை உடைத்து போனை எடுத்து சூர்யதேவை அழை..!! உள் மனம் கட்டளையிட.. வேறு வழி இல்லாமல் அலைபேசியை எடுத்து டாக்டர் சூரியதேவ் என்று சேமித்து வைத்திருந்த எண்ணை அழுத்தினாள்‌‌..

சில கணங்கள் எதிர்முனை மவுனமாக இருந்தது.. யோசித்துக் கொண்டிருப்பார் போலும் என்று அவளை யூகித்துக் கொண்டாள்..

"ஹலோ.."

செல்வந்தர்கள் பணத்தை வாரி இறைத்து நவீன டெக்னாலஜியோடு புதுப்புது கட்டமைப்போடு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கும் இந்த மாடர்ன் காலகட்டத்தில்.. 80.. 90 காலத்தை பிரதிபலிக்கும் ஒரு பழைய கால ஆன்டிக் டைப் வீடு..

கீழே பரந்து விரிந்த ஒரு மினி பங்களா.. !! தேக்கு மர கதவுகளும் ஜன்னல் கம்பிகளும்.. வெளியிலிருந்து பார்க்கும்போதே உட்புறத்தில் தெரிந்த பளிச்சென்ற மார்பில் தரையும்.. வீடு அந்த காலத்து தரமான கட்டுமானம் என்பதை சொல்லாமல் சொல்லியது..

"இல்லைமா.. சில சமயம் சார் தான் இங்க வந்து தூங்குவார்.. யாரையும் தொந்தரவு பண்ணாம அவரே சமைச்சு சாப்பிட்டுக்குவார்.." என்றார் செக்யூரிட்டி

"கீழே அவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது எதுக்காக மாடியில் வந்து தங்கணும்.." கமலி புரியாமல் கேட்க..

"அதெல்லாம் எனக்கு தெரியாது மா.. இரண்டுமே அவரோட வீடு தானே.. ஹாஸ்பிடல்லருந்து வந்து நேரடியா மாடியில அந்த தங்கறதை பார்த்திருக்கேன்.. அதை வச்சு சொன்னேன்.. சரி நான்
வர்றேன் மா.. ஏதாவது வேணும்னா சிங்காரத்து கிட்ட கேட்டுக்கோங்க..!!" செக்யூரிட்டி சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டார்..

"எனக்கும் எதுவும் தெரியலடி.. ஆனா இன்பார்ம் பண்ணிட்டு வர்றது இல்லையான்னு ஒரு மாதிரி கடுகடு என்று பேசினார்.. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.." என்று உதட்டை சுழித்தாள் கமலி..

பரவாயில்லை.. டாக்டர் பேச்சு தான் சரியில்லை.. வந்தவரை ஓரளவு உபசரிக்க தெரிந்திருக்கிறது.. என்ற மனநிலையோடு வந்தவருக்கு நன்றி சொல்லி காபியை வாங்கி பருகினாள்..

சூடான ஃபில்டர் காபி.. தேவாமிருதமாக தொண்டையை நனைத்தது..

"அம்மா புது இடம் புது சூழ்நிலை.. உங்களுக்கு எதுவும் பொருந்தி இருக்காது.. அதனால உங்களுக்கு தேவையானதை நானே சமைச்சுக் கொண்டு வந்தேன்.."

"டாக்டர் வர்றதுக்குள்ள.. முடிஞ்ச அளவு மளிகை சாமான்களை வாங்கி போட்டு நீங்களே சமைக்க பழகிடுங்க..!!"

"புதுசா வர்றவங்களுக்கு வீட்டு சாவி மட்டும் தந்தா போதும்.. வேற எந்த சலுகைகளும் உபச்சாரமும் செய்ய செய்ய கூடாதுன்னு டாக்டர் போன்ல சொல்லியிருந்தார்.. எனக்குதான் மனசு கேட்கல..!!" சிங்காரம் சொன்னதில் டாக்டர் மீது அவள் வைத்திருந்த மதிப்பு சரிவு பாலத்தில் உருட்டிவிட்ட பந்து போல் சர்ரென்று இறங்கி இருந்தது ‌..

வேலை பார்க்க வந்த நர்ஸ்தான்.. தன்னை விருந்தாளி போல் கவனிக்க வேண்டாம்.. ஆனால் வந்தவளுக்கு எந்த உபசரிப்பும் தேவையில்லை.. அவள் தேவையை அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று டாக்டர் குறிப்பிட்டு சிங்காரத்திடம் உத்தரவிட்டிருந்ததில் ச்சே.. என்ன ஒரு சின்ன புத்தி.. மனிதர்களை மதிக்க தெரியவால்லையே இந்த ஆளுக்கு..!! என்று வெறுப்பாக மனம் கசந்தாள்‌ கமலினி..

தொடரும்
இரண்டு பேரின் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது இனி போக போக எப்படி முட்டிக்க போராங்களோ தெரியலையே, மாயா போன்ற ஒரு உண்னதமான தோழி கிடைக்க உண்மையில் கமலி கொடுத்த வைத்திருந்த வேண்டும்
 
Member
Joined
Sep 9, 2023
Messages
44
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊
 
Member
Joined
Jul 19, 2024
Messages
33

Super Nala ah mariyathai vanthavangaluku...
 
Joined
Jul 10, 2024
Messages
52
சூப்பர் டாக்டர் தங்கம் நீ. எம்மா கமலி இந்த முசுடுகிட்ட எப்படி குப்பை கொட்ட போறியோ தெரியல. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 🤔🤔🤔🤔🤔 😱😱😱😱😱

வேலை பார்க்கும் போதும் ஏதாவது வாங்கி கட்ட போறியோ என்னவோ. 👍👍👍👍👍👍👍அருமையான அதிரடியான ஆரம்பம் உனக்கு கமலி. 😃😃😃😃😃😃😃😃😃
 
New member
Joined
Aug 8, 2024
Messages
28
Romba strict ahhna doctor than pa
 
Member
Joined
Sep 10, 2024
Messages
20
ஜன்னலோர பேருந்து பயணம் எப்பேர்பட்ட சோகங்களையும் மறக்கடித்து விடுகிறது.. தற்காலிகமாக சஞ்சலங்களை ஓரந்தள்ளிவிட்டு இதமான மனநிலையுடன்.. வயல்வெளிகளையும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த தென்னை மரங்களையும் வேடிக்கை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் கமலி..

சோலைப் பூவில் மாலை தென்றல் ஆடும் நேரம்..
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் பாடும் காலம்..

ஹெட் போனில் மிதமான சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க..!! பாடலுக்கு ஏற்றபடி ஜன்னலோர காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன..!!

காட்சியையும் பாடலையும் கெடுக்கும் வண்ணம் அலைபேசியின் வித்தியாசமான ரிங்டோன் அழைப்பு வந்திருப்பதை உணர்த்த.. கண்கள் சுருக்கி திரையில் பார்த்தாள்..

மாயா..!!

பேரை பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன.. உள்ளுக்குள்ளே லேசான அயர்ச்சியும் கூட..

"இந்த ஒரு வாரம் நீ சிரிச்சுக்கிட்டே இருந்தா தான் உன்னை வெளியூர் அனுப்பி வைப்பேன்" என்று சொன்னவள்.. அவளோடிருந்த அந்த ஏழு நாட்களிலும் அழுது தீர்த்துவிட்டாள்..

"இனி நீ இல்லாத தனிமையை பழகிக்கணும்.."

"தனியா எப்படி சாப்பிடுவேன்.."

"நீயில்லாம எப்படி தூங்குவேன்.."

"யார் கூட சேர்ந்து படம் பார்ப்பேன்..!!"

"யார் எனக்காக பிஸிபேளாபாத் பண்ணி தருவாங்க.."

"நீ உன் முடிவை கொஞ்சம் மாத்திக்க கூடாதா..!! இங்கேயே ஏதாவது வேலை தேடிக்கோயேன்.."

"பேசாம நான் அந்த அசோக்கை கொன்னுடவா.. அவனாலதானே இவ்வளவும்.. அந்த வீணா போனவனாலதான நீ என்னை விட்டுப் போற.."

"சரி சரி அவனை பத்தின பேச்சை எடுக்கல..!!"

சந்தோஷமாக இருக்கலாம்.. மிச்சமுள்ள பொழுதுகளை ஆனந்தமாக கழிக்கலாம் என்று கூறிவிட்டு இந்த ஒரு வாரமும் பிரிவை பற்றி புலம்பித் தீர்த்து கமலியை படாதபாடு படுத்திவிட்டாள் மாயா..

அவள் கணவன் வெளிநாடு சென்ற போது கூட இந்த அளவில் துக்க பட்டிருப்பாளா துயரப்பட்டிருப்பாளா தெரியவில்லை..!!

"இனி நாலு சுவத்துக்குள்ள நான் மட்டும் தனியா பேய் மாதிரி சுத்தணும்..!! ஒரு வாரம் கஷ்டமா இருக்கும் அப்புறமா அதுவும் பழகிடும்..!!" மாயா வாடிய முகத்தோடு சொல்லும்போது கமலிக்கு நெஞ்சம் பிசையும்..

தான் இக்கட்டில் தவித்த போது தாங்கி பிடித்த தோழியை வேதனைப்படுத்திவிட்டு அப்படியாவது வெளியூர் சென்று பிழைக்க வேண்டுமா என்று கூட சில சமயங்களில் தோன்றும்..!!

அடுத்த சில மணி நேரங்களில் இந்த ஊரிலிருந்தால் தன்னால் வாழவே முடியாது.. என்பதை மனம் ஊசியாய் உணர்த்தி.. அவள் முடிவை மாற்ற செய்து விடும்..

பிரிவு என்பது மாயாவிற்கு மட்டுமல்ல கமலிக்கும்தான் வேதனையை தருகிறது.. ஆனால் எந்த உறவையும் நிலைக்க விடாத தன் தலையெழுத்தை எண்ணி வருந்தி கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்ற விரக்தியோடு மனதை திடப்படுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தாள்‌‌..

தனிமை என்பது கொடிய நோய்.. இரக்கம் பாராமல் மனிதர்களைப் பிச்சு தின்று விடுகிறது.. கணவனும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில்.. ஒரு வருட காலமாக உடன் வசித்த தோழியும் விட்டுப் பிரிகிறாள் என்றால் அது உடல் அங்கத்தின் ஒரு பகுதியை இழப்பது போல் எத்தனை வலியை தருமென கமலியால் புரிந்து கொள்ள முடிகிறது..

சில நேரங்களில் இந்த வலியை பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.. வாழாவெட்டியான இந்த தோழி எத்தனை நாட்களுக்கு சாஸ்வதம்.. அடுத்த ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ விஷ்ணு இந்தியா திரும்பி விட்டால்.. கணவனும் மனைவியுமாக அவர்கள் வாழ போகிற சந்தோஷமான வாழ்க்கைக்கு தான் குறுக்கீடாக நிற்கக்கூடாது..

என் தோழி இப்படி ஒரு நிலையில் இருக்கையில்.. நான் மட்டும் கணவனோடு கொஞ்சி குழைந்து சந்தோஷமாக வாழ்வதா..? என்ற தர்ம சங்கடமும்.. வேதனையும் மாயாவின் மனதிற்குள் வந்து விடக்கூடாது..!! இது போன்ற சின்னஞ்சிறு நெருடல்கள் விரிசல்களாக விரிந்து அவள் வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும்..

அவள் கணவன் வந்த பிறகு வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றால் மாயா நிச்சயம் சம்மதிக்க மாட்டாள்.. சரி முன்னேற்பாடாக இப்போதே வெளியேறி வேறு இடத்தில் தங்கிக் கொள்கிறேன் என்றால் அதற்கும் அவள் ஒத்து வர மாட்டாள்.. அதற்கான ஒரே வழி வெளியூரில் ஏதேனும் வேலை தேடிக்கொள்வது.. முன்பே ஒருமுறை இதைப்பற்றி யோசித்துதான் வைத்திருந்தாள்..

கமலி வெளியூர் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான்.. ஆனால் முழு காரணமும் மாயா அல்ல.. கண் காணாத இடத்தை தேடி ஓடி ஒளிவதற்கான முக்கிய காரணம் அஷோக் தான்..!!

காதலித்த காலங்களிலும்.. மணம்முடித்த பின்னும் அந்த நகரம் முழுக்க இருவரும் ஜோடியாக சுற்றி திரியாத இடம் எதுவும் பாக்கி இல்லை.. வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வேலைக்கு போனாலும்.. ஒவ்வொரு இடமும் அவனோடு செலவிட்ட ஒவ்வொரு விதமான நினைவுகளை பயாஸ்கோப் காட்சிகளை போல் மனதில் பிரதிபலிக்க வைத்து வேதனையை கூட்டும்..

சந்தோஷமான தருணங்களோடு வஞ்சிக்கப்பட்ட காலங்களும் அவள் மனதை அறுக்கும்.. அப்படி ஒரு சூழ்நிலையை அனுசரித்து கடந்து போக நினைப்பது நகங்களோடு சேர்த்து வலிக்க வலிக்க விரல் நகங்களையும் நறுக்கிக் கொள்வதற்கு சமம்.. வீட்டை விட்டு வெளியே வராமல் எத்தனை நாளைக்கு காலம் தள்ள முடியும்..

புது இடம் புது சூழ்நிலை.. நிச்சயம் தன் மனதை மாற்றும்.. தற்காலிக தனிமையை மாயா பழகி கொள்வாள்.. கூடிய விரைவில் அவள் கணவன் வந்து சேர்ந்தபின் தனிமை தூரம் தொலைந்து அழகான காதல் வாழ்க்கை அவளுக்கு சொந்தமாகி விடும்.. அதன்பிறகு என்னை நினைத்துப் பார்க்க நேரமெங்கே இருக்க போகிறது.. என்ற எண்ணத்தோடு தான் தோழியை தவிக்க விட்டு அவள் பளபளத்த கண்களை பார்த்தபடி.. பேருந்து ஜன்னல் வழியே விடை தந்து கிளம்பினாள்..

இப்போது மீண்டும் மாயாவின் அழைப்பு.. எடுத்துப் பேச ஆரம்பித்தால் மீண்டும் பிரிவு புலம்பல்களோடு தன்னையும் மீறி மாயா உணர்ச்சிவசப்பட்டு அழுவாள்.. அதனால் தனக்கும் மன கஷ்டம்.. குறைந்தபட்சம் இந்த பிரயாணமாவது இனிமையாக இருக்கட்டுமே..!! என்று அழைப்பை துண்டித்து.. "ஐ அம் ஸ்லீப்பிங்.. வில் கால் யு லேட்டர்.." என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு.. மீண்டும் விட்ட இடத்திலிருந்து பாடலை ஒலிக்க விட்டாள் கமலி..

"ஓகே.. ரீச் ஆன பிறகு எனக்கு கால் பண்ணு..!!" மாயா ரிப்ளை செய்திருக்க அதையும் பார்த்துவிட்டு ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினாள்..

பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி.. பேச்சுத் துணைக்கு சிறிது நேரம் கமலியை துருவி துருவி ஏதேதோ கேள்வி கேட்டார்..

கமலி புன்னகையோடு அளவாக பதில் சொல்லி.‌. உரையாடலை கத்தரித்துக் கொள்ள.. வேறு வழியில்லாமல் தூங்கி தூங்கி கமலியின் தோள்களில் விழுந்து பின் அவரே திடுக்கிட்டு எழுந்து மறுபுறம் பேருந்து கம்பியில் தலையை சாய்த்து உறங்க ஆரம்பித்திருந்தார்..

விடியற்காலை 4:30 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேர்ந்திருந்தது அந்த சொகுசு பேருந்து..‌

பெரிய பெட்டியை தூக்கிக் கொண்டு இறங்கியவுடன் ஆட்டோ காரர்களும்.. டாக்ஸி டிரைவர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்..

"மேடம் எங்க போகணும் ஆட்டோல உட்காருங்க மேடம்..‌"

"கார்ல ஏறுங்க மேடம்.. பெட்டியை எடுத்து வைக்கவா..!!" என்று இன்னும் சில பேர் சவாரிக்கு அழைக்க..

அனைவரையும் கடந்து நடந்து சென்று கொண்டே இருந்தாள் கமலி..

மொத்தமாக இருள் விலகவில்லை.. பேருந்து நிலையத்தில் விளக்குகளின் வெளிச்சம் அவளுக்கு துணையாக பின்தொடர.. மெல்லிய கீற்றாக விடியலின் ஒளி பரவியிருந்த இந்த நேரத்தில்.. தெரியாத ஊரில் யாரை நம்பி.. எப்படி செல்வது ஒன்றும் புரியவில்லை..!!

எவ்வளவு தூரம் நடக்க முடியும்.. எப்படியோ ஒரு வழியாக அத்தனை பேரில் ஒரு ஆட்டோ டிரைவரை பிடித்து முகவரி சொல்லி ஏறி அமர்ந்து விட்டாள்..

டாக்டர் சூர்யதேவ்.. என்ற சில்வர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த மரப்பலகை.. அந்த பிரம்மாண்ட சுவற்றில் எறும்பு போல் தெரிய.. இரும்பு கேட்டின் முன்பு நின்றது ஆட்டோ..

பணத்தை கொடுத்துவிட்டு.. பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி.. நுழைவாயிலின் முன்பு சென்று நின்றாள்..

"யாரம்மா பாக்கணும்..!!" நுழைவாயிலின் உட்புறமிருந்து வயதான செக்யூரிட்டி ஒருவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தார்..

"டாக்டர் சூர்யதேவ்..!!"

"சார் வீட்ல இல்லைங்களே..!!"

"ஓஹ்.. எப்ப வருவார்..?"

"டாக்டர் கான்பிரன்ஸ் விஷயமா டெல்லி போறதா பேசிக்கிட்டாங்க.. எனக்கு தெரியலமா.. வர ரெண்டு நாளாகும் போலிருக்கு.." என்றார் அவர்..

"அய்யோ.." என்று தலையில் கை வைத்துக் கொண்டாள் கமலினி..

"நீங்க யாரு.. என்ன விஷயமா சாரை பார்க்க வந்திருக்கீங்க..?" என்றவரின் பார்வை அவள் கொண்டு வந்திருந்த பயண பைகளின் மீது விழுந்தது..

"நான் கமலினி.. டாக்டரை மீட் பண்ணனும்..!! அவருக்கு என்னை தெரியும்.." அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

"நீங்க வேணும்னா போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன்.." என்றார் செக்யூரிட்டி அவள் நிலை புரியாது..

"வெளியூரிலிருந்து வரேன் போயிட்டு திரும்பி வர்றது கஷ்டம்..!! உங்க சாருக்கு போன் பண்ணி பேசி பாருங்களேன்.." என்றாள் அவள் சங்கடத்தோடு..

"அது முடியாதம்மா.. கண்ட நேரத்தில் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண கூடாதுங்கறது சாரோட கடுமையான உத்தரவு.. மீறினால் என் வேலை போயிடும்.. உங்களுக்கு தெரிஞ்சவர்னு சொல்றீங்க நீங்களே போன் பண்ணி பாருங்களேன்..!!" என்றார் செக்யூரிட்டி பொறுமையான குரலில்..

சூர்ய தேவ் நம்பர் அவளிடம் இருக்கிறது.. போன் பண்ணலாம் தான்.. ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் அவளை தடுத்தது..

ஐந்து வருடங்களாக கணவனையும் வீட்டையும் மட்டுமே சுற்றி சுற்றி வந்ததில்.. பணி புரிவதற்கான முக்கிய திறமையான கம்யூனிகேஷன் ஸ்கில்.. என்ற விஷயம் தன்னிடமிருந்து தொலைந்து விட்டதாக உணர்ந்தாள்.. அடடா மங்கின மழு மட்டையாகி போனேனா..!! அவளுக்கே அவள் மீது கோபம்..

எத்தனை தடுமாற்றம்.. எத்தனை தயக்கம்.. நோயாளிகளிடம் தெளிவான குரலில் பேசி அவர்களை வழிநடத்திய பழைய கமலி எங்கே போனாள்.. சூரிய தேவ் நம்பருக்கு அழைத்து.. நான் வந்திருக்கிறேன்.. அடுத்து என்ன செய்வது என்று கேட்பதில் ஏன் இத்தனை தயக்கம்..

அறிமுகமில்லாத ஒருவரை போனில் அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறேன் என்று எப்படி சொல்வதாம்..!!

அதற்காக பேசாமலேயே இருந்து விடப் போகிறாயா..? ஏதாவது ஒரு கட்டத்தில் அவரை சந்தித்து உன்னை அறிமுகம் செய்து கொண்டு.. உன்னை பற்றிய விவரங்களை சொல்லித்தானே ஆக வேண்டும்.. நீ அவரிடம் வேலை பார்க்கப் போகிறாய் கமலினி.. தயக்கத்தை உடைத்து போனை எடுத்து சூர்யதேவை அழை..!! உள் மனம் கட்டளையிட.. வேறு வழி இல்லாமல் அலைபேசியை எடுத்து டாக்டர் சூர்யதேவ் என்று சேமித்து வைத்திருந்த எண்ணை அழுத்தினாள்‌‌..

"ஹலோ.." எதிர்பக்கம் கரகரப்பான ஆண் குரல்.. விடியல் நேரம் என்பதால் உறக்கத்திலிருந்து விழித்ததைப் போல் சற்று சோம்பலாக தெரிந்தது அந்த குரல்..

"ஹ.. ஹலோ சார்.. குட் மார்னிங்.. நான் கமலினி.."

"எந்த கமலினி..!!" எதிர்பக்கம் சலிப்பு..

பதிலுக்கு குட் மார்னிங் சொல்லும் பழக்கம் இல்லையா..? என்று முகிழ்த்த எண்ணத்தை ஓரந்தள்ளிவிட்டு

"மாயா ஃப்ரெண்ட் கமலினி.." என்றாள் கமலி..

சில கணங்கள் எதிர்முனை மவுனமாக இருந்தது.. யோசித்துக் கொண்டிருப்பார் போலும் என்று அவளே யூகித்துக் கொண்டாள்..

"சொல்லுங்க.." மீண்டும் அந்த குரல் இயந்திரத்தனமாக..

மாயா பெரிதாக கொடுத்த பில்டப்பில்.. அவள் பெயரைச் சொன்னதும்.. அடுத்த கணம்.. ஓ.. ஒகே.. ஒகே.. மாயா ஃபிரெண்டா நீங்க.. என்று அந்த குரலில் ஒரு மலர்ச்சி தெரியும்.. மரியாதை துளிர்விடும்.. என்று எதிர்பார்த்தவளுக்கு சப்பென்று ஆனது.. ஒரு மண்ணும் இல்லை.. அதே அதிகார அலட்சிய குரல்..

"சரி நான் கோயம்புத்தூர் வந்திருக்கேன்.. உங்க வீட்டு வாசல்ல நிக்கறேன்.. அடுத்து என்ன பண்ணனும்..?" ஒரு வழியாக கோர்வையாக பேசி முடித்திருந்தாள்..

"இன்பார்ம் பண்ணிட்டு வர்றது இல்லையா..?" எதிர்முனை குரல் எரிச்சலாகியது..

"என்ன இப்படி கேக்கறார்.. மாயா சொல்லலையா இவர்கிட்ட..? ஹவ் ரூட்" என்ற குழப்பத்தோடு பதில் சொல்ல தெரியாமல் அவள் அமைதியாக காத்திருக்க..

"சரி செக்யூரிட்டி கிட்ட போன் குடுங்க..!!" என்றான் அவன்..

"டாக்டர் உங்க கிட்ட பேசணுமாம்.." போனை செக்யூரிட்டியிடம் கொடுத்தாள்..

அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ சரி சரி என்ற தலையசைத்த செக்யூரிட்டி.. அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு வாங்க மேடம் என்றவாறு வாயில் கதவை திறந்தார்..

"ஹலோ சார்.."

"ஹான்.. மிசஸ் கமலினி.."

"ஒன்லி கமலினி.." அவள் திருத்தினாள்..

"ப்ச் வாட்டவெர்.. வீட்ல சிங்காரம்ன்னு மெயிட் இருப்பார்.. அவர்கிட்ட வீட்டு சாவி வாங்கிக்கோங்க.. மாடியில தங்கிக்கோங்க..!! நாளைக்கு டியூட்டில ஜாயின் பண்ணிடுங்க..
நான் டாக்டர் காவியா கிட்ட இன்பார்ம் பண்ணிடறேன்..!! சீனியர் ஸ்டாஃப் நர்ஸ் ஷீலா உங்களை டிரெயின் பண்ணுவாங்க..!! எனிதிங் எல்ஸ்..?" வேகமாக பேசி முடித்திருக்க இவளுக்கு மூச்சு வாங்கியது..

"நோ சார்.. ஐம் க்ளியர்..!!" என்றாள் லேசான திணறலோடு

"குட்.." சூர்யதேவ் அழைப்பை துண்டித்து விட்டான்..

"அவ்வளவுதானா?" என்று அவள் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றிருந்தார் செக்யூரிட்டி..

அவரை பின்தொடர்ந்து நடந்து சென்றவள் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தில் பார்வையை மேய விட்டாள்..

செல்வந்தர்கள் பணத்தை வாரி இறைத்து நவீன டெக்னாலஜியோடு புதுப்புது கட்டமைப்போடு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கும் இந்த மாடர்ன் காலகட்டத்தில்.. 80.. 90 காலங்களை பிரதிபலிக்கும் ஒரு பழைய கால ஆன்டிக் டைப் வீடு..

பெரிய பங்களா தான்.. ஆனால் கட்டிடத்தின் வடிவமைப்பில் பழமை நிறைந்திருந்தது.. பாசி படர்ந்து பாழடைந்து போனால் நிச்சயம் இது பூத் பங்களாதான்..

அந்த ஏரியாவின் ஆடம்பர வில்லா டைப் வீடுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு பங்களாவா..? கமலிக்கு ஆச்சரியமாக இருந்தது..

ஒன்று டாக்டர் பழமை விரும்பியாக இருக்க வேண்டும்.. இல்லையேல் அவள் தாத்தா பாட்டி காலத்து உணர்வு பூர்வமான ஞாபகங்களை தன்னோடு வைத்திருக்க.. வீட்டை இடித்து கட்டாமல்.. இயல்பு மாறாமல் புதுபித்திருக்க வேண்டும்.. என்ற யூகத்தோடு செக்யூரிட்டியை பின் தொடர்ந்தாள்..

கொல்லென்று பூத்திருந்த பூக்களோடு அடர்ந்திருந்த கொடிகள்.. சரியாக சீரமைக்கப்படாத பூந்தோட்டம்..

ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் ஓடியாடும் பிள்ளைகளைப் போல்.. ஆங்காங்கே தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடிகள்..!! எனத் தோட்டம் தோட்டமாக இல்லை..

தோட்டத்தை தாண்டி மற்ற இடம்.. சுத்த சுகாதாரத்தோடு பளிச்சென்று இருந்தது..

பரந்து விரிந்த ஒரு மினி பங்களா.. !! தேக்கு மர கதவுகளும் ஜன்னல் கம்பிகளும்.. வெளியிலிருந்து பார்க்கும்போதே உட்புறத்தில் தெரிந்த பளிச்சென்ற மார்பில் தரையும்.. வீடு அந்த காலத்து தரமான கட்டுமானம் என்பதை சொல்லாமல் சொல்லியது..

பழைய கால கிளாசிக் வீடு என்றாலும்.. கமலிக்கு இந்த வீடும்.. சுற்றுப்புற சூழலும் மிகவும் பிடித்தது..!! இது போன்ற வீடுகளை இந்த காலத்தில் பார்ப்பதெல்லாம் மிகவும் அரிது..

ஆடம்பர பங்களாக்களிலும் லக்சரி அப்பார்ட்மெண்டுக்களிலும் வாழும் உயர்தர மக்களுக்கு மத்தியில்.. இப்படி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பழைய பங்களாவாசியான அந்த டாக்டர்.. கமலியின் மன கண்களுக்கு சற்று வித்தியாசமானவராய் தோன்றினார்..

வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் ஓடி வந்தான்..

"வணக்கம் மேடம்.. சாவி.." என்று அவர் கையில் கொடுத்தவன்.. "மாடியில உங்க ரூம் இருக்கு.. ஏற்கனவே சுத்தம் பண்ணி வச்சாச்சு.." என்ற கீழ் வீட்டுக்குள் நுழைய விடாமல் அப்படியே மேலே துரத்தினான்..

செக்யூரிட்டி அவளிடம் சாவி கொடுக்கப்பட்டதை கவனித்து விட்டு பெட்டிகளோடு மேலே ஏறினார்..

அவளிடமிருந்து சாவியை வாங்கி கதவை திறந்து பெட்டிகளை உள்ளே வைத்தார்..

கீழ் வீடு அளவிற்கு பெரியதாக இல்லை என்றாலும்.. ஒரு கூடம் படுக்கையறை கிச்சன்.. போர்டிகோ பால்கனி என்று விஸ்தாரமான வீடாகத்தான் இருந்தது..

சோபா.. டிவி.. கட்டில்.. சமையலறையில் கேஸ் ஸ்டவ்.. தேவையான பாத்திரங்கள் என அனைத்துமே அங்கிருந்தன..

"இதுக்கு முன்னாடி இங்க யாராவது குடியிருந்தாங்களா..? சாமானெல்லாம் அப்படியே இருக்கே.." கமலி ஆச்சரியமாக கேட்க..

"இல்லைமா.. சில சமயம் சார் இங்க வந்து தூங்குவார்.. யாரையும் தொந்தரவு பண்ணாம அவரே சமைச்சு சாப்பிட்டுக்குவார்.." என்றார் செக்யூரிட்டி

"கீழே அவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது எதுக்காக மாடியில் வந்து தங்கணும்.." கமலி புரியாமல் கேட்க..

"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா.. இரண்டுமே அவரோட வீடு தானே.. ஹாஸ்பிடல்லருந்து வந்து நேரடியா மாடியில வந்து தங்கறதை பார்த்திருக்கேன்.. அதை வச்சு சொன்னேன்.. சரி நான் வர்றேன் மா.. ஏதாவது வேணும்னா சிங்காரத்து கிட்ட கேட்டுக்கோங்க..!!" செக்யூரிட்டி சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டார்..

வீட்டை ஒரு முறை நிதானமாக சுற்றி வந்தாள் கமலி.. பிறகு சோபாவில் அமர்ந்து.. மாயாவிற்கு அழைத்து தான் வந்து சேர்ந்து விட்டதாக தகவல் தெரிவித்தாள்..

"சூர்ய தேவ் கான்ஃபரன்ஸ் போயிருக்காரா..? உன்னை அனுப்பி வைக்கிறதா சொன்னபோது அவர் இதை பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே..?" மாயா புரியாமல் கேட்க..

"எனக்கும் எதுவும் தெரியலடி.. ஆனா இன்பார்ம் பண்ணிட்டு வர்றது இல்லையான்னு ரூடா கடுகடுன்னு பேசினார்.. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.." என்று உதட்டை சுழித்தாள் கமலி..

"அவர் குணமே அப்படிதான்டி..!! மனச போட்டு குழப்பிக்காதே.. நல்லா ரெஸ்ட் எடு.. ஏதாவதுன்னா எனக்கு கால் பண்ணு.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. ஃப்ரீ ஆகிட்டு போன் பண்ணு.." இறுதியில் ஒரு சோக வாக்கியத்தோடு முடித்து அழைப்பை துண்டித்தாள் மாயா..

மாற்றுடை எடுத்துக் கொண்டு.. குளித்து முடித்து வெளியே வந்தாள் கமலி.. நன்றாக விடிந்து விட்டிருந்தது..

பால்கனியிலிருந்து பார்க்கும்போது.. சுற்று வட்டாரம் கண்ணுக்கு குளிர்ச்சியாக மிக அழகாக தெரிந்தது.. கீழ்புற தோட்டம்தான் சரியாக சிகை திருத்தப்படாத குழந்தையாக தாறுமாறாக உருத்தியது.. மற்றபடி இங்கு நின்று ஒரு காபியை அருந்தியபடி.. காலை நேர காட்சிகளை ரசித்தபடி அருமையாக வேடிக்கை பார்க்கலாம்.. ஒருவேளை டாக்டர் அதற்காகத்தான் அடிக்கடி இங்கு வந்து தங்கிக் கொள்கிறாரோ..!! அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் சிங்காரம் அவளுக்காக காபி கலந்து எடுத்து வந்திருந்தார்..

பரவாயில்லை.. டாக்டர் பேச்சுதான் சரியில்லை.. விருந்தாளியை ஓரளவு உபசரிக்க தெரிந்திருக்கிறது.. என்ற மனநிலையோடு சிங்காரத்திற்கு நன்றி சொல்லி காபியை வாங்கி பருகினாள்..

சூடான ஃபில்டர் காபி.. தேவாமிர்தமாக தொண்டையை நனைத்தது..

காலை பலகாரம்.. மதிய உணவு.. இரவு சாப்பாடு.. என அனைத்தையும் அவள் அறைக்கே கொண்டு வந்து தந்திருந்தார் சிங்காரம்.. வேளா வேளைக்கு உபசரிக்கும் சிங்காரத்தின்மேலும்.. அவரிடம் சொல்லி தன்னை கவனித்துக் கொள்ள உத்தரவிட்ட டாக்டர் மீது மதிப்பு பெருகியது..

ஆனால் கடைசியில் சிங்காரம் சொன்னாரே ஒரு வார்த்தை..!! அதள பாதாளத்தில் விழுந்தவள் போல் அவள் முகம் கருத்து போனது..

"அம்மா புது இடம் புது சூழ்நிலை.. உங்களுக்கு எதுவும் பொருந்தியிருக்காது.. அதனாலதான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தேன்.."

"டாக்டர் வர்றதுக்குள்ள.. முடிஞ்ச அளவு மளிகை சாமான்களை வாங்கி போட்டு நீங்களே சமைக்க பழகிடுங்க..!!"

"வந்தவங்களுக்கு வீட்டு சாவி மட்டும் தந்தா போதும்.. வேற எந்த சலுகைகளும் உபச்சாரமும் செய்ய செய்ய கூடாதுன்னு டாக்டர் போன்ல சொல்லியிருந்தார்.. எனக்குதான் மனசு கேட்கல..!!" சிங்காரம் சொன்னதில் டாக்டர் மீது அவள் வைத்திருந்த மதிப்பு சரிவு பாலத்தில் உருட்டிவிட்ட பந்து போல் சர்ரென்று இறங்கியது..

ஜீரணித்த உணவு மீண்டும் நெஞ்சு பகுதியின் மேலேறி தொண்டை குழியில் உறுத்தும் உணர்வு

"நாளைக்கு கடைத்தெரு மார்க்கெட் எல்லாத்தையும் காட்டிவிடுறேன்.. நீங்க இங்கேயே தங்கறதுன்னு முடிவு பண்ணியிருந்தா.. சமைக்கிறதுக்கும்.. புழங்கறதுக்கும்.. தேவையானதை வாங்கி வச்சுக்கோங்க..!! டாக்டர் சுபாவம் ஒரு மாதிரி.. அவர் வந்த பிறகு என்னால உங்க கிட்ட பேச முடியுமான்னு கூட தெரியல..!! ரொம்ப கறார்.. பார்த்து நடந்துக்கோங்க.." என்று சொல்லிவிட்டு சென்றான்..

குடி வந்திருக்கும் பெண்ணை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று டாக்டர் தெளிவாக சிங்காரத்திடம் விளக்கி சொல்லிருக்கிறார்.. அதற்கான பிரதிபலிப்புதான் இந்த அறிவுரைகள்..!!

வேலை பார்க்க வந்த நர்ஸ்தான்.. தன்னை விருந்தாளி போல் கவனிக்க வேண்டாம்.. ஆனால் வந்தவளுக்கு எந்த உபசரிப்பும் தேவையில்லை.. அவள் தேவையை அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று டாக்டர் குறிப்பிட்டு சிங்காரத்திடம் உத்தரவிட்டிருந்ததில் ச்சே.. என்ன ஒரு சின்ன புத்தி.. மனிதர்களை மதிக்க தெரியலையே இந்த ஆளுக்கு..!! என்று வெறுப்பாக மனம் கசந்தாள்‌ கமலினி..

தொடரும்
சனாம்மா இவங்க சண்டைய பார்க்க வெகு ஆவலோட இருக்கேன்... ப்ளீஸ் தயவு செய்து இரண்டு எபி கொடுக்கவும்....
 
New member
Joined
Sep 18, 2024
Messages
21

💖💖💝
 
Member
Joined
Nov 30, 2024
Messages
21
Doctor romba terrer peice ah theriyararey 😠😠😠😠Kamali epdi samalika poralo🤔🤔🤔🤔 eagerly waiting for next ud seekram podunga sanama 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
126

😇😇😇😇
 
Top