- Joined
- Jan 10, 2023
- Messages
- 93
- Thread Author
- #1
பத்து நிமிடங்களுக்கு மேலாக வீட்டு வாசலில் தான் நின்று கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அவனால் கமலியின் கடந்த கால துயர சுழலை விட்டு வெளியே வர முடியவில்லை..
தனக்கே இந்த வலி என்றால் மரியாதை இழந்து.. துரோகத்தை சந்தித்தவள் காயம் பட்ட சிறு பறவையாக எத்தனை துடித்து போயிருப்பாள்..
இப்போது அவளுக்கு தேவை நான்தானே..!
சூ.. சூர்யா..சூ.. சூர்யா..! இரு கைகளை நீட்டி குழந்தை போல் தன்னிடம் சரணடைய துடித்தவளின் கண்ணீர் மனக்கண் முன் வந்து போனது..
அவசரமாக விழிகளை துடைத்துக் கொண்டு ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. ஒரு கணம் அங்கேயே நின்று தன்னை திடப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றான்..
தரையை வெறித்தபடி சிலையாக அமர்ந்திருந்தாள் கமலி..
அவள் முன்பு வந்து நின்றான் சூர்யா..
"கமலி..!"
அவள் நிமிரவில்லை..
"கமலி..!" என்றவன் அவள் தன்னை பார்க்காமல் போனதில் எதிரே இருக்கையில் அமர்ந்தான்.
"போனது போகட்டும்.. இனி பழசை பத்தி யோசிச்சு நம்ம நிம்மதியை கெடுத்துக்க வேண்டாம். இந்த நொடியிலிருந்து நமக்காக மட்டும் வாழ்வோம்.."
அவளிடம் பதில் இல்லை..
"கமலி நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.." என்றவன் தன் வலிமையான தோளை தொட்டு காண்பித்து.. "கமான் திஸ் இஸ் யுவர்ஸ்.. வந்து சாஞ்சிக்கோ.. மொத்தமாக அழுது தீர்த்துடு..!" இரு கைகளை நீட்டி அவளை அழைத்தான்..
"இதுக்கப்புறம் உன்னோட பாஸ்ட் லைஃப் பத்தி நினைக்க கூடாது.. வா!"
கமலி மெல்ல தன் கண்மலரை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்..
வேண்டாம் என்பதைப் போல் தலையசைத்து எழுந்தவள் அங்கிருந்து நகர்ந்த வேளையில்..
"கமலி நில்லு..!" என்று அவனும் அவளை பின்தொடர்ந்து சென்றிருந்தான்..
"என்னாச்சு..? ஏன் வேண்டாம்..?"
"எனக்கு பயமா இருக்கு.. மறுபடி ஒரு பொய்யை.. ஒரு துரோகத்தை என்னால் தாங்க முடியாது."
வேகமாக அவளருகே வந்து நின்றான் சூர்யதேவ்..
தலை தாழ்ந்திருந்த அவள் முகத்தை முரட்டுத்தனமாக பற்றி நிமிர்த்தியவன்..
"நான் துரோகியா..? உனக்கு துரோகம் செய்வேன்னு நினைக்கறியா.." அடிக்குரலில் சீற்றத்தோடு கேட்டான்..
"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு என்னால எதையுமே யோசிக்க முடியல..!" அவள் கலங்கினாள்..
"அப்போ நீ என்னை நம்பல அப்படித்தானே..?"
"நான் ஏன் உங்களை நம்பணும்..! நீங்களும் என்னை விட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்.. என் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.." கமலியின் நிதானமில்லாத பேச்சில் அவன் கோபம் சற்று குறைந்திருந்தது..
"நான் எதுக்காக உன்னை விட்டு போக போறேன்.."
கமலி வெறுமையாக சிரித்தாள்.. "இங்கே எல்லோருக்கும் ஒரு தேவை இருக்கு.. அந்த தேவை முடிஞ்ச பிறகு.. மனுஷங்களை குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சிட்டு போயிடறாங்க.."
"எனக்கு இந்த உலகத்துல உன்னை தவிர வேற எந்த தேவையும் இல்லையே கமலி.."
அவள் சிரித்தாள்..
"எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும் சூர்யா.. அப்புறம் திகட்டி போயிடும்.. நானும் உங்களுக்கு சலிச்சு போயிடுவேன்.."
"ஸ்டாப் இட்..!" அவள் வார்த்தைகளை அடித்து வீழ்த்திய அந்த குரலில் அத்தனை ஆத்திரம்..
"சோ நீ என்னை புரிஞ்சு வச்சிருக்கறது அவ்வளவுதான் இல்ல..!" அவன் கண்கள் சிறுத்து கோபத்தில் பளபளத்தன..
"என்ன புரிஞ்சுக்கணும்..! இன்னைக்கு என்கிட்ட வந்த அட்ராக்ஷன் நாளைக்கு இன்னொரு பொண்ணு கிட்ட வந்துட்டா..?"
"லிசன் கமலி.. நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல.. நான் உன்னை பார்க்கிற பார்வையே வேற..!" அவன் அழுத்தமாகச் சொன்னான்..
அந்நேரத்தில் சூர்ய தேவ் அலைபேசி மேஜையிலிருந்து அலறியது..
அழைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்தான்..
"ஏன்.. அப்படி என்ன இருக்கு என்கிட்ட..? அப்படி என்ன நான் ஸ்பெஷல் உங்களுக்கு..! ஏன் என்னை மட்டும் உங்களுக்கு பிடிக்குது..?" அவள் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் அலைபேசி இருவரையும் தொந்தரவு செய்ய.. அழைப்பை துண்டிப்பதற்கு பதில் தவறுதலாக அழைப்பை ஏற்றிருந்தான்..
"சொல்லுங்க.. ஸ்டிராங் ரிலேஷன்ஷிப் கூட இங்க தோத்துதான் போகுது.. அதுலயும் உப்பு பெறாத காரணங்களுக்காக கல்யாணம் செஞ்சுக்கிட்ட நாம மட்டும் எத்தனை வருடங்களுக்கு சேர்ந்து வாழ போறோம்..?"
"டேய் சூர்யா..! எதுக்குடா கால் கட் பண்ற..?" வருண் அலைபேசியில் அந்தப் பக்கம் கத்திக் கொண்டிருந்தான்..
"உப்பு பெறாத காரணங்களை சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. ஆனா உண்மை அது இல்ல.. என்ன ஆனாலும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.. என்னை விட்டு பிரிய அனுமதிக்க மாட்டேன்.."
அவன் உறுதியில் சிரித்து வைத்தாள் கமலி..
"ஹாஹா.. வெய்(why?)"
"பிகாஸ் ஐ லவ் யூ டி இடியட்.." சீற்றத்தோடு நாலா பக்கங்களிலும் எதிரொலிக்கும்படி அவன் சொன்ன வார்த்தை அலைபேசி வழியாக வருண் காதுகளிலும் விழுந்திருந்தது..
"ஐ வில் லவ் யூ பார் த ரெஸ்ட் ஆஃப் மை லைஃப்..! "
அழைப்பிலிருந்த வருண்.. "ம்ஹும்.. இது என் நண்பன் சூர்யா இல்லை.. யாரோ ரெண்டு லவ்வர்ஸ் கிராஸ்டாக்ல சண்டை போட்டுக்கறாங்க..!" என்று அழைப்பை துண்டித்திருந்தான் ..
இங்கே..
"வெறும் அட்ராக்சன்.. செக்ஸ்னால வந்த லவ்..!! " என்றாள் கமலி..
சூர்யதேவ் விரக்தியாக சிரித்தான்.. "உன் மரமண்டைக்கு புரிஞ்சது அவ்வளவுதான்.."
"உன்னை பார்த்த நாள்லருந்து.. உன் செயல்கள் எல்லாத்தையும் எனக்குள்ள உள்வாங்கி ஆழமா மனசுக்குள்ள சேமிச்சு எனக்கே தெரியாம உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஒரு கட்டத்துல நீ எனக்கு அப்சஷன் மாதிரி ஆகிப்போய்ட்ட.."
"அளவு கடந்த நேசமும் ஆசையும் காமத்தை எனக்கு அறிமுகப்படுத்துச்சு.. உன்னாலதான்டி நான் ஆம்பளையானேன்.."
"இந்த உலகத்தில் ஆம்பளைங்களே இல்லாம போய் பெண்கள் மட்டுமே இருந்தாலும் என்னால கமலியை மட்டும் தான் காதலிக்க முடியும்.. கமலியோடு மட்டும் தான் லவ்மேக் பண்ண முடியும்.."
"என்ன சொன்ன..? செக்ஸ்காக உன்ன லவ் பண்றேன்னா..?"
"ஆமா.. அப்படியே வச்சுக்கோ.. இருந்துட்டு போகட்டுமே.. ஐ வாண்ட் டு மேக் லவ் டூ யூ ஆல் த டைம்.. இப்ப மட்டுமில்ல.. 20 வருஷம் கழிச்சு.. 50 வருஷம் கழிச்சு.. இதே மாதிரி உன்கிட்ட வருவேன்.. ஐ வில் மேக் லவ் டு யூ.. என்னடி பண்ணுவ..?"
"எனக்கு இப்ப முப்பத்தி ஒன்பது வயசாகுது..! இத்தனை வருஷத்துல முதலும் கடைசியுமா நான் காதலிச்ச ஒரே பொண்ணு நீதான்.. நூறு வருஷம் கழிச்சு கேட்டாலும் என்கிட்ட இருந்து இந்த பதில்தான் வரும்.."
"ஆனா இப்ப என்னை தவிர உங்களுக்கு வேற ஆப்ஷன் இல்ல.. ஒருவேளை அந்த ஆப்ஷன் கிடைச்சிட்டா..!" கமலியின் மனதில் தேவையில்லாத சந்தேகங்கள் குடைந்து கொண்டே இருந்தன..!
சூர்யதேவ் கண்களில் தெரிந்த வலி அவளை குத்தி கிழித்தது..
"சுவாசிக்கிற ஆக்ஸிஜனை யாரும் ஆப்ஷனா கன்சிடர் பண்றது இல்ல கமலி.. அந்த மாதிரிதான் நீ எனக்கு.. இதுக்கு மேல எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல..!" அவன் தளர்ந்து நின்றான்.
இந்நேரத்தில் அவளுக்கு நான் தேவை.. தன் வலிகளை ஓரந்தள்ளினான்..
"என்னால புரிஞ்சுக்க முடியுது கமலி.. நீ ரொம்ப குழம்பி போயிருக்க..! வா.. என் தோள்ல சாய்ச்சுக்க..! உனக்காக இல்ல.. எனக்காக..!" தன் இடப்பக்க நெஞ்சை அழுத்தி காட்டி அழைத்தான்.. முடியாது என்று விட்டு அங்கிருந்து சென்றிருந்தாள் அவன் மனைவி..
ஆழ்ந்த மூச்சோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அதன்பிறகு கமலியை தொந்தரவு செய்யவில்லை..
மருத்துவமனையில் கூட சிசிடிவியில் அவளை பார்த்துக்கொண்டே இருந்தானேயன்றி.. தனியாக அழைத்து பேசியிருக்கவில்லை..
ஆனால் காலையில் சூர்யா சொன்ன வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தன் எண்ணங்களில் உருப் போட்டுக் கொண்டிருந்த கமலிக்கு மனம் உருகிப் போயிற்று.. அவன் வார்த்தைகள் காதல் அம்புகளாய் நெஞ்சை ஊடுருவியது..
தன் பரந்த மார்பில் சாய்ந்து கொள்ளச் சொல்லி இரு கைகளை நீட்டி அவன் அழைத்து நின்ற தோரணையும்.. அவள் மறுத்து உதாசீனப்படுத்தி சென்ற காட்சியும் கண் முன் தோன்றி நிற்க.. விழிகளை மூடி நின்றவள் அந்நேரத்தில் தன்னையே வெறுத்தாள்..
"ஐ லவ் யூ டி இடியட்.."
"ஐ வாண்ட் டு மேக் லவ் டூ யூ ஆல் தி டைம்.."
"என் வாழ்க்கையில் வந்த முதலும் கடைசியுமான பெண் நீதான்."
"ஆக்சிஜனை ஆப்ஷனா யாரும் கன்சிடர் பண்றது இல்ல.."
சுழல் நாற்காலியில் எதிர் திசையை வெறித்தபடி.. கனவுலகில் சஞ்சரித்து.. சிரித்துக் கொண்டிருந்தாள் கமலி..
தேவையில்லாத பழைய எண்ணங்கள் எங்கோ மறைந்து தொலைந்து போயிருந்தன..
சூர்ய தேவ் தன் காதலை சொன்ன அழகான தருணத்தை விதவிதமான கோணங்களில் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..
கணவனை கட்டியணைத்து முகம் முழுக்க முத்தமிட்டு சாரி கேட்க வேண்டும் போல் தோன்றியது..
கிள்ளை போல அவன் தோளில் தொங்கியபடி.. வந்துட்டேன் டா.. என்று காதுக்குள் கிசுகிசுத்து செவிமடலை உதடுகளால் கவ்வி இழுத்துக்கொள்ள ஆசை..
கார் பார்க்கிங்கில் அவன் காத்திருக்க.. துள்ளலோடு ஓடி வந்தாள் கமலி..
இந்த முறை சூர்ய தேவ் கண்டு கொள்ளவில்லை.. முகத்தை திருப்பிக் கொண்டான்..!
கமலியின் முகம் கசங்கி போயிற்று.. இருந்தாலும் அன்போடு உன்கிட்ட வந்த மனுஷனை நீ அப்படி காயப்படுத்தி இருக்கக் கூடாது..
சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு அவரை கொன்னுட்டியே..!
நான் என்ன செய்யறது.. அந்த நேரத்துல ரொம்ப குழம்பி போயிருந்தேன்.. ஒரு மாதிரியான இன்செக்யூரிட்டி பீலிங்ஸ்.. சூர்யாவும் என்னை விட்டுப் போயிட்டா..? நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..
அதுக்காக.. பொழுதுபோக்குக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. செக்ஸ்காக மட்டும்தான் என்னை நெருங்கி வர்ற.. இப்படியெல்லாம் உன் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி பேசுறதா..! அந்த நேரத்தில கூட உன் மேல கோபப்படாம நிதானமா உனக்கு சொல்லி புரிய வச்சார்.. எவ்ளோ அழகா உன்னை ஹேண்டில் பண்றாரு.. அவரை போய் காயப்படுத்திட்டியே..
நீ வேற சும்மா குத்தி குத்தி காண்பிக்காதே.. அவரை சமாதானம் பண்ற வழி எனக்கு தெரியும்.. நீ போய் உன் வேலையை பாரு.. கேள்வியும் பதிலும் அவளாகி.. குடைந்து கொண்டிருந்த குற்ற உணர்ச்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டு.. கணவனோடு சமரசமாகும் வழியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்..
ஆனால் அந்த வழி அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை..!
காரில் ஏறியதிலிருந்து அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை.. அவள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை..
வீட்டிலும் கூட கடுகடுவென்று முகத்தோடு.. கமலியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் வலம் வந்தான்..
சூர்யாவின் மனதை குளிர்விப்பதற்காகவே அவனுக்கு பிடித்த அடர் சிகப்பு நிறத்தில் ஜார்ஜெட் புடவை ஒன்றை உடுத்தியிருந்தாள் கமலி..
இது தன்னவனை சமாதானப்படுத்த அவளுக்கு தெரிந்த தந்திர வழிகளில் ஒன்று.. புடவை உடுத்தி அவன் முன்பு வந்து நின்றால் போதும்.. எப்பேர்ப்பட்ட இமாலய கோபமும் உடைந்து உருகி காணாமல் போய்விடும்.. பிறகென்ன.. இருவரையும் சேர்த்து வைத்து உதவி செய்த அந்த புடவை கருவேப்பிலை கொத்து போல் தேவை முடிந்தவுடன் உருவி எறியப்பட்டு எங்கோ ஒரு மூலையில் கிடைக்கும்..
ஆனால் இன்றைக்கு அந்த ராஜதந்திரம் கூட பொய்த்துப் போனதே..
சேலைக்குள் பூக்குவியலாய் நின்றவளை அவன் திரும்பி கூட பார்க்கவில்லையே..
தடிமனான புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு வாசல் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து விட்டான் சூர்யா..
பள்ளி மாணவி போல் அவன் முன்பு வந்த நின்றாள் கமலி..
"சாரி.."
"தெரியாம அப்படி பேசிட்டேன்.."
"கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேனா.. என்ன பேசுறேன்னு எனக்கே தெரியல.."
"தெரியாம ஒன்னும் பேசல.. தெரிஞ்சு தான் பேசின..! உன் மனசுல என் மேல அவ்வளவு சந்தேகம்..!" என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான்..
கமலியின் மனம் அடிவாங்கியது.. பரிதாபமாக அங்கேயே நின்றிருந்தாள்..
சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் கண்களை பதித்திருந்தான்.. உருப்படி இல்லாத ஏதோ ஒரு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.. அதைப்பற்றி அவனுக்கென்ன கவலை.. தொலைக்காட்சி பார்ப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்..
இரு கைகளை இருக்கையின் மேல் பகுதியில் ஊன்றி.. எப்போதும் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான்..
அவன் பக்கத்தில் வந்தமர்ந்தாள் கமலி..
"என்கிட்ட பேசவே மாட்டீங்களா..?"
"பேசமாட்டேன்.."
"நான் தான் மன்னிப்பு கேட்டேனே..!"
"மன்னிக்க மாட்டேன்.."
"ஏன் இப்படி..? நீங்களும் இப்படி கோவிச்சுக்கிட்டு உட்கார்ந்துகிட்டா நான் என்ன செய்வேன்.."
"சமாதானப்படுத்து.. எத்தனை முறை நான் உன் பின்னாடி சுத்தினேன்.. கூட நாலு முறை என் பின்னாடி சுத்தி கொஞ்சி கெஞ்சி சமாதானம் செஞ்சா குறைஞ்சா போயிடுவ.." என்றவன் எழுந்து படுக்கையறைக்குள் சென்றிருந்தான்..
ஆங்.. என்று விழித்தபடி அங்கேயே அமர்ந்திருந்தாள் கமலி..
"இவரை எப்படி சமாதானம் பண்றதாம்..?" என்று யோசித்து யோசித்து இல்லாத மூளைக்கு வேலை கொடுத்தவள்.. கண்கள் மிளிர.. அவனருகே வந்தாள்.. மயக்கும் விழிகளோடு அவன் கைகளைத் தொட்டு உதடுகளால் கழுத்தில் முத்தமிட்டு.. சூர்யாவின் முகத்தை தன் பக்கம் திருப்பினாள்..
"டோன்ட் டச் மீ..! என் கோபம் போற வரைக்கும் நீ என்னை தொடக்கூடாது.." என்றவன் அங்கிருந்தும் எழுந்து சென்று விட.. கமலியின் முகம் வாடிப்போனது..
இதென்ன இவர் ஓடிப் பிடிச்சு விளையாடறார் என்ற சிரிப்பு மறுபக்கம்..
அதற்கு மேல் தன் கணவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் சமையலை கவனிக்க சென்றுவிட்டாள் கமலி..
அவனும் கிச்சனுக்குள் வந்து நின்று சமையலுக்கு உதவினான்.. மறந்தும் கூட அவள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..
அவள் பேச முயன்றாலும் அதற்கான வாய்ப்பை தராமல் காய்கறி நறுக்குகிறேன் பேர்வழி என கத்தியையும் பாத்திரங்களையும் டம் டம்மென்று உடைக்க..
"அப்பப்பா.. என்ன கோபம்.. இதுக்கு மேல பேச ட்ரை பண்ணா அடிச்சிடுவாரு போலிருக்கே.." கமலி கலவரத்தோடு அவன் முகம் பார்த்தாள்..
இருவருமாக சேர்ந்து இரவு உணவை முடித்தனர்..
"டின்னர் ரொம்ப நல்லா இருந்துச்சு.. ரசிச்சு சாப்பிட்டேன்.." என்று தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் கமலி..
மூக்கு பிடிக்க தின்றாலும் ஒருநாளும் சமையல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியதில்லை அவன்.. இன்றைக்கு கிடைத்த இந்த திடீர் பாராட்டு இதயத்திற்குள் பனிக்கட்டி ஒன்று வழுக்கி சென்றதைப் போல் சில்லென்ற உணர்வை தந்தது..
கமலி வேலைகளை முடித்துவிட்டு வரும்போது.. சூர்யதேவ் படுக்கையை தட்டி சரி செய்து கொண்டிருந்தான்..
ராசாத்தி ஒன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது..
தனக்காக தான் அந்த பாடலை ப்ளே செய்திருக்கிறான் என்று தெரிந்து உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாக வந்து கட்டிலில் அமர்ந்தாள்..
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும்
தங்கச் சிமிழே..ஏ
பொங்கிப் பெருகும்
சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே
நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும்
வாவா கண்ணே..
பாடலோடு சேர்த்து அவனும் சத்தமாக பாடியபடி அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே கட்டிலை சுற்றி வந்து அலமாரியில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான்..
இந்த வரிகள் உனக்கானது என்பதை சொல்லாமல் சொல்வதைப் போல் அவன் பார்வை..
அவன் பட பாட.. வரிகளோடு கரைந்து நெகிழ்ந்து போயிருந்தாள் கமலி.. ஏதோ அவனே அந்த பாடலை உருவாக்கி தனக்காக பாடுவதைப் போல் அத்தனை பரவசம்..
"என்ன இவர் பாட்டெல்லாம் பாடுறாரு..?" அதிசயங்கள் எட்டு ஒன்பது என்று நீண்டு கொண்டே செல்ல.. கண்களை விரித்து விழித்தபடி அமர்ந்திருந்தாள்..
அலமாரியிலிருந்து அவள் புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து இரு கைகளால் அணைத்தபடி கட்டிலின் மறுபக்கம் திரும்பி படுத்து கண்கள் மூடிக்கொண்டான்..
"என்ன பண்றாரு இவரு.." ஒன்றும் புரியாமல் விழித்தவள் அவனைப் பார்த்தபடியே படுத்துக் கொண்டாள்..
துவைத்த துணிமணி அவள் வாசனையை தருவதில்லையே..!
ஃபேப்ரி கண்டிஷனர் வாசனை அவனுக்கு பிடிக்கவில்லை.. அந்த உடையை தூக்கி எறிந்தவன் இரு கைகளை மார்பின் குறுக்கே மடித்து கட்டியபடி கண்களை மூடியிருந்தான்
கமலியும் அவன் உறங்கி விட்டான் என்றெண்ணி மெல்ல கண்களை மூடி உறக்கத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்த வேளையில்.. தோள்பட்டையிலிருந்து ஏதோ இழுப்பதை போன்ற உணர்வு..
திடுக்கிட்டு கண்விழித்து பார்த்தாள்.. கமலி உடுத்தியிருந்த புடவையை உருவி கொண்டிருந்தான் புகழ்பெற்ற மருத்துவக் கள்ளன்..
இடுப்பு மடிப்பு வரை சேலையை மிச்சம் விட்டு மார்பு சீலையை மொத்தமாக உருவியிருந்தவன் கட்டில் அதிராமல் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டு சேலையை தன் முகத்தில் மூடி அணைத்தபடி கமலின் வாசனையை உள்ளிழுத்தபடி கண்கள் மூடினான்..
"ம்ம்.." ஆழ்ந்த வாசனை உள்ளெடுக்கும் போது அவனையும் அறியாமல் சீறலான மூச்சு..
கமலுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
ஒருக்களித்து அவன் பக்கம் திரும்பியவள்..
"இந்த குட்டி பாப்பாவை என்னதான் செய்யறதோ.. பேபிஇஇ.." அவனை அள்ளி அணைத்து தன்னோடு சேர்த்துக் கொள்ள துடித்த கரங்களை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு தன்னவனை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..
ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..
உண்மை அருகிலிருக்கும் போது உடையை அணைத்துக் கொண்டு உறங்குவானேன்.. அவள் பக்கம் திரும்பினான்..
தன் கரத்தால் தலையை தாங்கியபடி ஈர இதழ் புன்னகையோடு ஒயிலாக படுத்திருந்தாள் கமலி..
அவள் மாராப்பு சேலை அவன் வசமிருக்க மனைவியின் கோலம் கண்டு.. எச்சில் விழுங்கியபடி திருதிருவென விழித்தான்..
போருக்கு தயாராகி நின்ற தாப உணர்ச்சிகளை அடக்க வழி தெரியாமல்..
கோபமாவது மண்ணாவது.. அடுத்த கணம் அவள் மீது பாய்ந்திருந்தான்..
ஊடல் இல்லாத காதல் வாழ்க்கை உப்புசப்பில்லாத உணவை போன்றதாம்..
ஊடலுக்கு பின் வந்த இந்த கூடலில்.. தலைவனுக்கு தலைவாழை விருந்தாகிப் போனாள் அவன் தலைவி..
தொடரும்..

Last edited: