- Joined
- Jan 10, 2023
- Messages
- 83
- Thread Author
- #1
"அம்மா.. சாரி.. நான் வேணும்னு பேசல.. ஏதோ கோபம்.. அந்த அம்மா என் பிறப்பை கேவலமா பேசும் போது ரொம்ப அவமானமா இருந்துச்சு.. அந்த கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன்.. அந்த ஆள் செஞ்ச தப்புக்கு நீ என்ன செய்ய முடியும்.. உலகத்திலேயே பெஸ்ட் அம்மா நீ தான்.. ப்ளீஸ்மா என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு.. இப்படி பேசாம இருக்காதே.. உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா..!!" முதுகு காட்டி படுத்துக் கொண்டிருந்த ஜெயாவிடம் வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தாள் மைதிலி..
"ம்மா.. ம்மா.. அதுக்குள்ள தூங்கிட்டியா இல்ல.. தூங்குற மாதிரி நடிக்கிறியா.. என்கிட்ட பேசாம உனக்கு தூக்கம் வராதே..!!.. ஓய் ஜெயா.. நடிக்கிறா.. நடிக்கிறா.. இந்த ஜெயா பொண்ணு நடிக்கிறா.. இப்ப எழுப்பறேன் பாரு.." என்று இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டியபடி அருகே வந்து முகம் பார்க்க விழிகள் மூடியிருந்தவரிடம் அசைவு இல்லை.. மைதிலியின் முகம் மாறியது..
"ம்மா.. ம்மா.." மெல்ல தாயின் தோள் தொட்டு உலுக்கினாள்..
"ம்மாஆஆ..?" குரல் நடுங்கியது..
"பயமுறுத்தாதே மா.. எழுந்திடு.." கன்னம் தட்டிப் பார்க்க அப்போதும் அசைவில்லாமல் போகவே.. ஓட்டப்பந்தய வீராங்கனை போல் முந்திக்கொண்டு ஓடிய இதயத்துடிப்பின் வேகத்தோடு அவசரமாக எழுந்து.. மேஜை மீதிருந்த வாட்டர் பாட்டிலை திறந்து ஜெயாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.. அசைவில்லாமல் சிலையாக படுத்திருந்தவளை கண்டு இதய கூட்டுக்குள் பரவிய அச்சத்தோடு எச்சில் கூட்டி விழுங்கியவளுக்கு மூளை வேலை செய்யாமல் மரத்து போனது ஒரு சில நொடிகளே..
அடுத்த கணமே சுதாரித்து பக்கத்து வீட்டு கதவைத் தட்டி.. நிலைமையை எடுத்துச் சொல்லி.. உதவிக்கு அழைக்க.. சட்டையை போட்டுக் கொண்டு வேகமாக ஓடி வந்தார் அந்த குடும்பத்தின் ஆண் செந்தில் என்பவர்.. அவர் மனைவி துர்காவும் குழந்தையை இடுப்பில் சுருக்கி கொண்டு அவசரமாக வெளியே ஓடி வந்தார்..
ஜெயாவின் நிலைமையை கண்டு "ஹாஸ்பிடல் தூக்கிட்டு போயிடலாம்.." என்றவர் அடுத்த கணமே ஜெயாவை கையிலேந்திக் கொண்டு வெளியே வந்து தன் ஆட்டோவில் படுக்க வைத்து மைதிலியோடு புறப்பட்டிருந்தார்..
ஹாஸ்பிடல் வராண்டாவில் அழுது கொண்டே அமர்ந்திருந்தாள் மைதிலி.. எல்லாம் தன்னால்தான்.. அப்படிப்பட்ட கொடும் வார்த்தைகளை பேசியிராவிட்டால் அம்மாவிற்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்னும் குற்ற உணர்ச்சியே அவளைப் கொன்று தின்றது..
"அம்..மா.. அம்..மா.. வேணும்.." என சிறு பிள்ளையாய் முரண்டு பிடித்து கதறி அழுதது அவள் மனம்.. ஓரத்தில் சுவற்றில் சாய்ந்து அவளுக்கு துணையாக நின்று கொண்டிருந்தார் செந்தில்...
சில மணி நேரங்கள் தவிக்க வைத்த பின் மருத்துவர் இருவரையும் அழைப்பதாக நர்ஸ் வந்து கூறினார்..
கண்ணீரும் தவிப்புமாக.. உள்ளே நுழைந்த மைதிலியை அமர சொன்னவர்.. உங்க அம்மாவுக்கு மைல்டு அட்டாக் வந்திருக்கு.. என்றது பெரும் அதிர்வோடு நின்று துடித்தது அவள் இதயம்..
"இனி பயப்பட ஒன்றும் இல்லை.. ஷி எஸ் அவுட் ஆப் டேஞ்சர்.. ஆனா ரொம்ப கவனமா பாத்துக்கோங்க.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்.. கத்தி பேச வேண்டாம்.. நல்லா ஓய்வெடுக்கட்டும்.. உணவு கட்டுப்பாடுகளோட நடை பயிற்சியும்.. தவறாமல் மாத்திரைகளும் எடுத்துக்க சொல்லுங்க.. அவங்க மயக்கத்துல இருக்காங்க.. நீங்க போய் பார்க்கலாம்.." எந்திர குரலில் அவர் முடித்து விட.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து அன்னையின் அறைக்குள் நுழைந்தாள் மைதிலி..
துன்ப துயரங்களின் நடுவே.. கொத்தி தின்னும் கழுகுகள் வாழும் இந்த சமுதாயத்தில்.. போராடி நான் வாழ ஒரே காரணம் நீ மட்டுமே என்று ஜெயா அடிக்கடி கூறியது நினைவில் வந்து போக.. கதறி விட்டாள் மைதிலி... அம்மாவின் பேரன்பு புரியாமல் இல்லை.. தாய் வாழ்வதே தனக்காக தான் என்று ஒவ்வொரு கணமும் உணர்ந்தவள் அவள்.. பெற்றவன் மீது உள்ள கோபம் ஆதங்கம் அப்படி பேச வைத்து விட்டது..
"அம்மா.. சாரிமா.. இனிமே அப்படி பேசவே மாட்டேன்.. என்னை மன்னிச்சிடு.." ஜெயாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு கதறி தீர்த்தார் அவள்.. இதைவிட பெரும் துயரமொன்று அவள் வாழ்வை சூறையாடப் போவதை உணராமல்..
ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த நீலாங்கரை பங்களா..
பௌர்ணமி நிலவில் தகதகத்த கடல் அலைகளும் அடித்து வீசிய குளிர் காற்றும்.. இன்னும் சற்று நேரம் இங்கேயே நில்லேன் என்று ஏகாந்த நிலையோடு ஆளை மயக்கிய போதும்.. ரசிக்க மனமோ நேரமோ எதுவுமின்றி எறும்பு புத்துக்குள் காலை வைத்தவன் போல் அவசரமாக பங்களாவினுள் நுழைந்தான் டேவிட்..
மோஹித்திற்கு வாக்கப்பட்ட காலத்திலிருந்து அவன் வாழ்க்கை இப்படித்தான் அவசரகதியாக சென்று கொண்டிருக்கிறது..
இந்நேரத்தில் எங்கிருப்பான் என்று தெரியுமாதலால் தடுமாற்றமின்றி நடக்க முடிந்தது.. பின்புறம் சிட்டவுட் தாண்டி நீச்சல் குளம் பக்கத்தில் தண்ணீருக்குள் காலை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தான் மோஹித்..
ஒரு பக்கம் புகைத்து போட்ட சிகரெட் துண்டுகள்.. மறுபக்கம் மதுபானக் கோப்பை.. சற்று தூரத்தில் உடைந்து சிதறிய லேப்டாப்... ஏதோ சரி இல்லை என்று உணர்த்த.. "மோஹித்.." என்று அழைத்தான்..
வாய் வழியே சுருளாக புகை விட்டபடி பக்கவாட்டில் திரும்பியவனின் முகபாவனை "என்ன விஷயம் சொல்.." என்பதாக உணர்ந்த டேவிட்..
"நாலு நாள் ஆபீஸ் பக்கம் வரல.. போன் எடுக்கல மெசேஜ் ரிப்ளை பண்ணல..!! முக்கியமா உன் கிட்ட சைன் வாங்க வேண்டிய டாக்குமெண்ட்ஸ் அப்படியே இருக்கு.. அடுத்த ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணனும், நீ வரணும்டா.. எவ்வளவு தலை போற வேலையா இருந்தாலும்.. ஒர்க் விஷயத்துல உன் கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆனது இல்லையே..!! என்ன ஆச்சு உனக்கு.." கண்கள் சிவந்து.. தன்னையே வெறித்துக் கொண்டிருந்த மோஹித்திடம் கலவரத்துடன் வினவினான் டேவிட்..
சிகரெட்டை தரையில் அழுத்தி அணைத்துவிட்டு வெற்றுடலும் ட்ராக் பேண்ட்டுமாக.. தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக நடந்து வந்து சிட்டவுட்டில் அவன் அமர்ந்த தோரணை.. வெறியோடு இரை தேடும் சிங்கத்தை ஒத்திருப்பதை உணர்ந்து கொண்டிருந்தான் டேவிட்.. இதென்ன புது அவதாரம்!!
"என்ன ஆச்சு மோஹித்..?"
வேகமாக சொடுக்குப் போட்டபடி தலையை இடம் வலமாக அசைத்தான் அவன்.. "எங்கேயோ மிஸ் பண்றேன்.. என்னால அந்த எழுத்துக்களோட பொருந்தி போக முடியல.. ஒரு ஆணோட காதல் உணர்வுகளை வார்த்தைகளை கொண்டு வர முடியல.. நாலு நாளா எழுத முயற்சி செய்கிறேன் ஆனால் ஒரு வரி கூட உருப்படியா என்னால எழுத முடியல.. எதுவோ என்னை பிளாக் பண்ணுது.. ஒவ்வொரு கதையிலும் வார்த்தைகள் சரளமாக என் மனசுலருந்து விஸ்வரூபமெடுக்கும்.. இந்த மாதிரி எந்த கதைக்கும் நான் தடுமாறினது இல்ல.. பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் சட்டென
"என்ன நடக்குது.. என்னால ஏன் எழுத முடியல.." அடிக்குரலில் உறுமி வெறி கொண்டு ஓங்கி மேஜையை தட்டினான்.. கண்ணாடி உடைந்து சிதறியது..
அவன் மூர்க்கத்தனத்தில் அதிர்ந்து பின் வாங்கினான் டேவிட்.. மயக்கும் மந்தகாச புன்னகையோடு வலம் வருபவனிடம்.. அச்சத்தை கொடுக்கும் இப்படி ஒரு அடங்காத கோபமும் உண்டு என்பதை இன்றுதான் பார்க்கிறான்..
"மோஹித் ரிலாக்ஸ்.. டென்ஷன் ஆகாதே..!! நான் தான் சொன்னேனே காதலை உணர்ந்தா மட்டும் தான் காதல் கதைகளை எழுத முடியும்.. மத்தவங்களோட அனுபவங்களை வச்சு எழுத இது ஒன்னும் டாக்குமென்டரி இல்ல.." என்றவனை கோபத்தோடு முறைத்த மோகித் அவன் உயரத்திற்கு எழுந்து நின்றான்..
"ஷட்டப்.. ஷட்டப்.. நான் ஏற்கனவே கொலைவெறியில் இருக்கேன்.. மேலும் மேலும் தேவையில்லாததை பேசி என்னை கோபப்படுத்தாதே.. இங்கிருந்து போ டேவிட்.." மோஹித் கர்ஜித்தான்..
"நீ கோபப்பட்டாலும் இதான் உண்மை.. அடி மனசுல காதலை அனுபவிக்காம கதைகள் எழுத முடியாது.." என்று விடாப்பிடியாக நின்றான் டேவிட்..
"அப்படின்னா காதல் கதைகள் எழுத நானும் காதலிக்கனும்னு சொல்ல வர்றியா.." மோஹித் இதழ்கள் நக்கலாக வளைந்தன..
"அப்படி சொல்ல வரல.. மழையை ரசிக்க மழையில நனைச்சு தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல.. அந்த மாதிரி தான் காதலும்.. ஆழமா உனக்குள்ள உள்வாங்கி காதல்னா என்னனு உணர்ந்து பாரு.. உனக்கே புரியும்..!!"
விழிகள் மூடித் திறந்தான் மோஹித்.. "எரிச்சல் படுத்தாதே டேவிட் இந்த கதையை முடிக்காமல் நான் ஓயப் போறதில்லை.. எத்தனை வருஷம் ஆனாலும்.. என் மனசுக்குள்ள அந்த வரிகளின் வார்த்தைகளின் தாக்கம் வரும் வரை காத்திருப்பேன்.. எனக்கு எப்பவும் தோத்து பழக்கம் இல்லை.. நிச்சயமா இந்த கதையை முடிப்பேன்.. முதல்ல நீ இங்கருந்து கிளம்பு. ஐ நீட் சம் பிரைவசி.. இப்போ ராகினி வருவா.. நாளை காலையில நான் ஆபீஸ்ல இருப்பேன்" என்றான் தலையை கோதியபடி..
அவன் பேச்சில் சலித்தவனாக "எக்கேடும் கெட்டுப் போ" என்று அங்கிருந்து டேவிட் நகர்ந்த வேளையில்.. கண்களில் சட்டென மின்னல் வெட்ட.. "டேவிட் ஒரு நிமிஷம்!!" என்று அவசரமாக அவனை நிறுத்தினான் மோஹித்..
"என்ன புது லேப்டாப் இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க இருக்கணும். அதானே..!!"
"இல்ல.. இது வேற..!! ஆக்சுவலி இது ஒரு லவ் ஸ்டோரி இல்லையா..!!"
"கன்டென்ட் இன்னும் ரெடி பண்ணலையா..?" டேவிட் இடைமறிக்க..
"இன்னொரு வார்த்தை பேசினா தொலைச்சிடுவேன்.. குறுக்க பேசாம சொல்றதை கேளு.." என்றான் அவன்..
டேவிட் எச்சில் கூட்டி விழுங்கி அமைதியாக நிற்கவும்.. "ஒரு ஆணுடைய காதல் உணர்வுகளை என்னால் இப்போதைக்கு வார்த்தைகளை வடிக்க முடியல.. ஆனா ஒரு பெண்ணோட காதலை பற்றி எழுதலாமே..!!" என்றான் புருவங்கள் உயர..
"என்னடா பேசற.. ரெண்டு பேரும் சேர்ந்து நேசிக்கிறதுக்கு பேரு தான் காதல்.."
"அது கூட தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்ல.. ரெண்டு மனசும் ஒன்னு சேருவதுதானே உங்களைப் பொறுத்தவரை காதல்.."
"ஒரு ஆண் சம்பந்தப்பட்ட காதல் உணர்வுகளை என்னால் வார்த்தையில் கொண்டுவர முடியலன்னா.. ஒரு பெண் மூலமா அவ ஆத்மார்த்தமான காதல் மூலமா அந்த ஆணோட உணர்வுகளையும் கண்ணாடி மாதிரி பிரதிபலிக்க வச்சு எழுத்துக்களில் கொண்டுவர முயற்சி பண்ணலாமே.." மோஹித் நீளமாக பேசியதில் நீண்ட குழப்பத்தோடு
"அதுக்கு நீ ஒரு பெண்ணோடு நெருங்கி பழகி அவளை காதலிக்கணும்.. அப்பதான் இது சாத்தியமாகும்.." என்றான் டேவிட்..
"மீண்டும் அவன் கண்களில் பளிச் மின்னல்.. யா.. அஃப்கோர்ஸ்.. காதலிக்கணும்" என்று விழிகள் மேலேறியவாறு உதட்டுக்குள் புன்னகைத்தவன்..
சட்டென உதித்த யோசனையோடு "ஏன் காதலிக்கணும்.. காதலிக்கிற மாதிரி நடிக்கலாமே..!!" மோஹித் சொன்னதில் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து நின்றான் டேவிட்..
"என்னடா சொல்ற..?"
"ஒரு பெண்ணோட நெருங்கி பழகி அவள் காதல் உணர்வுகளை எனக்குள்ள உள்வாங்கி எடுக்க போறேன்.."
"நீ என்ன சொன்ன..? காதலிக்கிற மாதிரி நடிக்க போறியா..!!" சரியாகத்தான் காதில் விழுந்ததா..? மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்
"ஹ்ம்ம்.. அப்படியும் வச்சுக்கலாம்.. நான்தான் நடிக்கப் போறேன்.. ஆனா அவளோட உண்மையான காதல் எனக்கு வேணும்.."
"வாட்.."
"எஸ்.. என் கதைக்காக.. என் கண்டன்டுக்காக ஒரு பெண்ணோட காதல் வேணும்.."
"மோஹித் நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா.. அவ உயிருள்ள பெண்.. உணர்வுகளோடு விளையாடாதே..!!"
மீண்டும் ஒரு சிகரத்தை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு.. உள்ளிழுத்து புகையை வெளிவிட்டவன் "வீதியில நிறைய பிராங்க் ஷோ பண்ணிட்டு அதை பொய்ன்னு சொல்றது இல்லையா.. அந்த மாதிரி இது ஒரு பெரிய பிராங்க் ஷோ.. அவ்வளவுதான்..!!
"நீ ஒரு பொண்ண ஏமாத்த போற..!! அது தப்பு மோஹித்..!!"
"எல்லாம் முடிஞ்சதும் பணம் கொடுத்துடலாம்.. மனசு பழைய நிலைக்கு திரும்பிடும்.. இந்த மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்.." அலட்சியமாக தோளை குலுக்கினான் அவன்..
"பணத்தை கொடுத்து எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடியாது மோஹித்.."
"இந்த காலத்தில் சுத்தமான தாய்ப்பாலை கூட விலைக்கு வாங்கலாம்.. நீ இப்படி சொல்றதை பொய்யாக்கவே பணம் கொடுத்து ஒரு பெண்ணோட உணர்வுகளை விலைக்கு வாங்கி காட்டறேன்.." அவன் ஆணவமாக சிரித்தான்..
"இது தப்பு டா.."
"டேய் நான் என்னமோ அந்த பொண்ணு கூட பிசிகல் ரிலேஷன்ஷிப்ல இருந்து அவளை ஏமாத்த போற மாதிரி பேசுற..!!"
"ஜஸ்ட் ஒரு பொண்ணோட நெருங்கி பழக போறேன்.. வெட்கப்படும்போது சிணுங்கும் போது.. உருகும் போது.. அணு அணுவா அவள் காதல் உணர்வுகளை என் மனசுக்குள்ள படம் பிடிச்சு அதுக்கு எழுத்து வடிவம் போறேன்.. அதுக்கு பேமென்ட் பண்ண போறேன்.. இதுல என்னடா தப்பு இருக்கு.." செவ்வாய் கிரகத்தில் இருந்து நேரடியாக பூமியில் குதித்த ஏலியன் போல் இருந்தது அவன் பேச்சு..
"இதுதாண்டா பெரிய தப்பு.. அந்த பொண்ணோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் யோசிச்சு பாத்தியா.."
"டேய் டேய் திரும்பத் திரும்ப அதையே சொல்லாத.. நான் தான் அந்த பொண்ணுக்கு பணம் கொடுத்துடுவேன்னு சொல்றேன்ல.. எவ்வளவு உன்னதமான காதலா இருந்தாலும் பணத்தை பார்த்ததும் பல்லு இளிச்சுகிட்டு போயிடுவா.." என்றான் மோஹித் அலட்சியமாக..
டேவிட்டால் இதை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை.. பெண் என்பவள் என்ன பொம்மையா!! இவன் இஷ்டப்படி வளைக்க.. "வேண்டாம் மோஹித்.. ப்ளீஸ் நீ.. நீ.. நீ.. வேற ஏதாவது ட்ரை பண்ணு.. நிறைய புக்ஸ் படி நிறைய லவ் மூவி பாரு.. இப்பதான் நிறைய வெப் சீரிஸ் வருதே.. அதுலருந்து உனக்கு ஏதாவது ஹின்ட் கிடைக்கலாம் இது மட்டும் வேண்டாம்டா.." நண்பன் ஒரு விஷயத்தை தொட்டால் அதை முடிக்காமல் விடமாட்டான் என்பதை அறிந்திருந்தவன் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்..
"நீ இங்கிருந்து கிளம்பு.. என்னை டென்ஷன் பண்ணாதே.. இப்பதான் நான் தெளிவா இருக்கேன்.. நீ இங்க வந்ததுனால தான் எனக்கு புது ஐடியா கிடைச்சது.. அதனால உனக்குதான் நன்றி சொல்லனும்.. என்று இதழ்கடையோரம் புன்னகைத்துக் கொண்டே தலையை கோதியவன் அவன் வீட்டை நோக்கி நடக்க..
"ஒரு நிமிஷம் மோஹித் பொண்ணு யாரு?.." என்றான் அவனை நிறுத்தி..
"ஹ்ம்ம்.." என்று ஒரு கரத்தை இடுப்பில் வைத்து கீழுதட்டை கடித்து யோசித்த மோஹித்.. "பொண்ணு யாருன்னு இன்னும் நான் முடிவு செய்யல.. இந்த கதைக்கு ஏத்த மாதிரி ஒருத்தியை என் மனசுக்குள்ள உருவாக்கணும்.. அந்த பொண்ணை நிஜத்தில் தேடணும்.. அவளை என்னை விழுந்து விழுந்து காதலிக்க வைக்கணும்.. அவ காதலிலிருந்து என் கதையை எடுக்கணும் இதுதான் என்னோட பிளான்.." என்று கண் சிமிட்டினான்..
"ஓஹோ.. உன்னை பொறுத்த வரைக்கும் அவ பொண்ணு இல்ல.. ப்ராஜெக்ட் அவ்வளவு தானே.." டேவிட் கேட்க அவசரமாக மறுத்து..
"ப்ராஜெக்ட் இல்ல..
கான்செப்ட்.."
என்றவன் "ஹாய் ஹான்சம்.." என்று இரு கைகளை விரித்துக் கொண்டு வந்த ராகினியை இடையோடு அணைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றிருந்தான்..
தொடரும்..

Last edited: