• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
47
அன்று குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி கூடத்தில் நடந்து கொண்டிருந்தாள் அகலிகா..

"வீட்ல யாரும் இல்லையா..?" என்று வந்து நின்றவனை பார்த்த கணம்.. இதயத்திற்குள் சிலீர் சாரல்..

வாட்டசாட்டமாக வசீகரிக்கும் அழகோடு ஒரு ஆண்மகன்.. டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.. நிச்சயம் பிராண்டட் ஆடை.. பணக்கார களை..

அடடா என்ன அழகு..!! என்ன ஆண்மையான தோற்றம்.. அவள் எதிர்பார்த்த சிக்ஸ் பேக் தேகம்.. கட்டுக்கோப்பான கேசமும் அந்த கண்களும் அப்பப்பா.. ஒரு கணம் இமைக்க மறந்தாள்.. இதயத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த சலன பாம்பு தலை தூக்கி பார்த்தது..

அவனும் கூட அகலிகாவை கண்டு இமை தட்டி விழித்தான்..

"வாவ் கார்ஜியஸ் வுமன்.." இதழ்கள் தன்னையும் அவனையும் அறியாமல் முணுமுணுத்துக் கொண்டதாய் உணர்ந்தாள் அகலி.. இது போன்ற ஒரு அழகான பாராட்டை நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் பெறுகிறாள்..

கல்லூரியில் படித்த காலங்களில்.. அழகான ஆண்கள் அவளை சுற்றி வட்டம் போடுவதிலும் அவள் தோற்றத்தை புகழ்ந்து பாராட்டுவதிலும் அகலிகாவிற்கு எப்போதும் ஒரு கர்வமுண்டு..

அவர்களின் ப்ரொபோசல்களையும் பாராட்டுகளையும் உள்ளுக்குள் ரசித்தாலும் அலட்சியமாகக் கடந்ததுண்டு..

திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற தன்னை புகழ்ந்து தள்ளும் பாராட்டுக்கள் குறைந்து போனது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட மறைந்தே போனது..

24 மணி நேரமும் தன் கணவன் அட்டை போல் ஒட்டிக்கொண்டு தன்னை ஆராதித்துக் கொண்டாட வேண்டும் என்று கற்பனையில் வடித்த காதல் வாழ்க்கை கானல் நீராகிப்போனதில் நிதர்சனம் நெருப்பாய் கொல்லுகிறது..

இதோ வெகு நாட்களுக்கு பிறகு தன் அழகை வியந்து பாராட்டும் ஒரு ஆணழகனை காண்கிறாள்..

"யாருப்பா யாரு வேணும்.." கார்த்திகா தேவி அங்கு வந்து நின்றாள்..

"அது.. நரேன் பர்னிச்சர் கடையோட ஓனரை பாக்கணும்.. இந்த ஊர்ல புதுசா ஆபீஸ் தொடங்க போறேன்.. அதுக்காக சில பர்னிச்சர் சேர் டேபிள் எல்லாம் வாங்க வேண்டியதிருக்கு.. அது சம்பந்தமா ஓனரை சந்திச்சு பேசணும்.." அகலிகாவை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்..

"அச்சோ வீட்ல யாரும் இல்லையேப்பா.. நாம் வேணும்னா என் மகனோட போன் நம்பர் தரேன்.. போன்ல பேசிக்கோங்களேன்.. எம்மா அகலி.. உன் புருஷனோட போன் நம்பர் கொடுத்துடு.." என்று மருமகளிடம் சொல்லிவிட்டு

"தம்பி நீங்க ஏதாவது காபி தண்ணி குடிக்கிறீங்களா..?" மரியாதை உபசாரத்தோடு அவன் பக்கம் திரும்பினாள் கார்த்திகா..

"இல்லம்மா வேண்டாம்.. போன் நம்பர் கொடுத்துட்டா நான் கிளம்பிடுவேன்.." பாக்கெட்டிலிருந்து iphone எடுத்துக்கொண்டவனது பார்வை அகலியின் மீது விழுந்தது..

குழந்தையை தோளில் தட்டிக் கொடுத்தபடி அருகே வந்து கணவனின் போன் நம்பரை தந்தாள் அகலி..

நம்பரை குறித்துக் கொண்டே "கல்யாணம் ஆயிடுச்சா..?" என்றான் விழிகளை நிமிர்த்தி..அவன் குரலில் ஒரு சோகம்..

"இல்ல.. ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறீங்க.. கல்யாணம் ஆனதையும் நம்ப முடியல.. கையில குழந்தை..? உங்க குழந்தை தானா..!!" என்று கேட்க அவள் பார்வை சந்திரன் மீது அழுத்தமாக படிந்தது..

"சாரிங்க.. தப்பா கேட்டுருந்தா மன்னிச்சுக்கோங்க..!! போன் பண்ணி பேசிட்டு திரும்ப வரேன்.." அர்த்த பார்வையுடன் மீண்டும் தொலைபேசியை எடுத்து காதில் வைத்து சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியபடி காரில் சாய்ந்து நின்ற தோரணையை கண்டும் காணாமலும் ரசித்தாள் அகலி..

அவன் சென்ற பிறகும் நெஞ்சில் குறுகுறுப்பு நீங்கவில்லை..

கௌதமன் வந்தான்.. ஏதேதோ பேசினான்.. இதுவும் காதில் விழவில்லை..

அடுத்த இரண்டு நாட்களில் கௌதமன் நரேந்திரனோடு பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் மட்டும் கூர்மையாக அவள் செவிகளை தீண்டியது..

"சந்திரன் மும்பைல இருந்து வந்திருக்காராம்.. புதுசா ஐடி கம்பெனி தொடங்க போறாராம்.. அதுக்கான பர்னிச்சர்ஸ் வேணும்னு ஆர்டர் கொடுத்துருக்கார்.. பல்க் ஆர்டர்.. என்ன செய்யலாம்.. கமிட் ஆன பிறகு.. சரியான டைமுக்கு செஞ்சு கொடுக்கலைன்னா நம்ம கடைக்கு தான் கெட்ட பேரு.. இந்த ஆர்டரை ஒத்துக்கலாமா வேண்டாமா.. நீங்க தான் சொல்லணும் பா.." நரேந்திரனிடம் கௌதமன் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளில்..

தொழிலதிபன்.. ஐடி கம்பெனி வைத்திருக்கிறான்.. பெரிய பணக்காரன் பல்க் ஆர்டர்.. போன்ற வார்த்தைகள மட்டும் அவள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது..

அவன் புறப்படும்போது ஆடி காரில் ஏறி சென்றதைப் பார்த்தாளே..!! தன் கனவு காதலன் இவன்தானோ..? ஆனால் காலம் கடந்து விட்டதே..!! என் தலையெழுத்து ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது..

அரைக்கை பனியன் அணிந்து அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த கௌதமனை பார்த்தாள்.. இவன்தான் என் கணவன்.. இவனோடுதான் வாழ வேண்டும்.. சலிப்பும் வெறுப்புமாக ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள்..

"இனி வியாபாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நீயே எடு கௌதமா.. உன்னால முடியும்னா ஒத்துக்கோ.. இல்லைனா வேண்டாம்னு சொல்லிடு.." நரேந்திரன் ஆலோசனை சொல்லியீருக்க.. தன் மீதான நம்பிக்கையில் அந்த ஆர்டரை ஒப்புக்கொண்டான் கௌதமன்.. அவன் வாழ்க்கையை சிதைத்துக் கொள்ள அவனே தோன்றிய படுகுழி அது என்பதை அறியாமல்..

வியாபார விஷயமாக பேசுவதாக அடிக்கடி வீட்டுக்கு வந்தான் சந்திரன்..

அவன் காலடி வீட்டுக்குள் பட்டாலே அகலிகாவிடம் குதுகலம் தொற்றிக் கொள்ளும்.. பருவக்காதலி போல் பரவசப் பட்டாள்..

பார்வைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.. அலைபேசி எண்கள் இடமாறி கொண்டன.. தன்னையும் அறியாமல் சபல புத்தியால் தன் மனதை சந்திரனிடம் இழந்து கொண்டிருந்தாள் அகலிகா.. கௌதமனிடமிருந்து வெகுதூரம் தள்ளிப் போயிருந்தாள்..

தன் குழந்தையின் நிலை.. அடிக்கடி மனைவியின் குத்தல் பேச்சுகள் எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரியாக கௌதமனை சோர்வுக்கு தள்ளி இருந்தது..

மனதை உற்சாகப்படுத்தி கொள்ளவும் தன்னை திசை திருப்பிக் கொள்ளவும் கவனத்தை முற்றாக குவித்தான்..

அதே நேரத்தில் இந்தபக்கம் சந்திரன் அகலிகாவுடன் தனது காதலை வளர்த்துக் கொண்டிருந்தான்.. அலைபேசி உரையாடல்கள் ரகசிய சந்திப்புகள் கௌதமனுக்கு தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருந்தன.. துரோகம் செய்கிறோம் என்ற குற்ற குறுகுறுப்போடு அகலிகா தவித்துக் கொண்டிருந்தாலும்.. சந்திரன் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த காதல் திரில்.. மீண்டு வர முடியாத ஏதோ ஒரு போதையில் அவளை ஆழ்த்தி கொண்டிருந்தது..

தவறு துரோகம் என்று புரிந்து கொண்டு.. இனி சந்திரன் பக்கம் தலை வைத்து படுக்கவே கூடாது என்று அவள் முடிவெடுக்கும் நேரத்தில் தான் ரகசிய காதலனின் கசிந்திருகும் காதல் வார்த்தைகள் அவளை மென்மேலும் சலனப்படுத்துகிறது.. கருந்துளைக்குள் இழுத்துச் செல்கிறது..

குழந்தையை தூக்கிக் கொண்டு பிறந்த வீட்டிற்கு செல்வதாக அடிக்கடி வெளியே புறப்பட்டதில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை..

காருக்குள்.. ஹோட்டலின் குடும்ப அறைக்குள் சந்திப்புகள் தொடர்ந்தன..

"விரல்கள் பூ மாதிரி இருக்கு அகலி.."

"நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா.. உன்னோட அருமை உன் புருஷனுக்கு தெரியல.. எனக்கு இப்படி ஒரு கோவில் சிலை கிடைச்சிருந்தா.. கருவறையில வச்சு பூஜை பண்ணி கொண்டாடி இருப்பேன்.."

"நிறைய பெண்களை கடந்து வந்திருக்கேன் ஆனா இப்படி ஒரு பேரழகை நான் பார்த்ததே இல்லை.."

"உன் மேல உயிரையே வச்சிருக்கேன் அகலி.. நீ இல்லாம என்னால வாழ முடியும்னு தோணல.. உன்னை முழுசா எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு ஆசைப்படறேன்.."

"ராத்திரி முழுக்க உன் நினைப்பாவே இருக்கு அகலிம்மா.. தூங்க முடியல அகலி.. இந்த தவிப்பு தீரணும்னா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்.." இந்த வார்த்தைகளில் அவள் திகைத்துப் போனாள்..

"என்ன.. என்ன.. சொல்றீங்க..?"

"உனக்குன்னு சில கனவுகள் இருக்கும்.. வாழ்க்கையில எதையும் அனுபவிக்காத உன்னை கோபுரத்தில் வச்சு பாக்கணும்னு ஆசைப்படுறேன்.. என் காதல் தேவதையை கண் கலங்காம சந்தோஷமா வச்சுக்கணும்.. இந்த குழந்தையை.. உன் புருஷனை விட்டுட்டு என்கூட வந்துடு அகலிம்மா.."

"ஐயோ அப்படியெல்லாம் வர முடியாது.. என்னை விட்டுடுங்க.. இதுதான் என் வாழ்க்கை.. இப்படித்தான் என் தலைவிதின்னு ஆகிப்போச்சு.. இனி எதையும் மாற்ற முடியாது.."

"நீ நெனச்சா எல்லாத்தையும் மாத்தலாம் அகலிமா.. உனக்கு எந்த பிரச்சினையும் வராமல் நான் பாத்துக்கறேன்.. ஆனா உன் விருப்பம் ரொம்ப முக்கியம்.‌. நீ அவனை விவாகரத்து பண்ணிட்டு என்கூட வந்தாலும் சரிதான்.. இல்லை யாருக்கும் தெரியாம இருட்டோட இருட்டா என்கிட்ட வந்தாலும் சம்மதம்தான்.. ஆனா நீ எனக்கு வேணும்.. நீ இல்லாம என்னால வாழ முடியாது.. இது சத்தியமான உண்மை.. எந்த பொண்ணு கிட்டயும் நான் இப்படி தடுமாறினது இல்லை.. வந்துடு அகலி.. என் கூட வந்துடு.. உன் மூலமா எனக்கு குழந்தைகள் வேணும்.. ப்ளீஸ்..!!" என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவன் பார்த்த பார்வையில் உருகிப் போனாள் அகலி..

"பிடிக்காத உறவை இழுத்து பிடிச்சு லையெழுத்தேன்னு வாழனும்னு என்ன அவசியம்.. ஏன் பெண்கள் இப்படி இருக்கீங்க.. வாழ்க்கை ரொம்ப சின்னது.. உனக்காக வாழு.. உன் சந்தோஷத்துக்காக வாழு.." என பேசி பேசி அவள் மூளையின் சிந்திக்கும் பாகத்தை கரைத்தான்..

மனைவியின் மீது கண்காணிப்பு இல்லாமல் பெரும் நம்பிக்கை கொண்டு தொழிலையும் குடும்பத்தையும் தாங்கியதுதான் கௌதமன் செய்த தவறா தெரியவில்லை..

பல நாட்கள் தவித்து மனதோடு போராடி.. ஓர் இரவில் தன் குழந்தையை தன் கணவனை.. விட்டுப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி சந்திரனோடு சென்றிருந்தாள் அகலிகா..

அதிலும் அகலி எழுதி வைத்துவிட்டு போன கடிதம் அவள் மனதை கண்ணாடியாக படம் பிடித்து காட்டியிருந்தது..

வணக்கம்..

என்னை மன்னித்து விடுங்கள்.. இனி என்னால் உங்களை சகித்துக் கொண்டு வாழ இயலாது.. என் எதிர்பார்ப்புகள் வேறு..

ஆண்மைக்கு இலக்கணமாக கட்டுக்கோப்பான உடல்வாகோடு ஒரு நாயகனை எதிர்பார்த்த எனக்கு.. என் கற்பனைக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத அழகில் மிக சுமாரான நீங்கள் கணவனாய் வந்து வாய்த்தீர்கள்..

வேற வழியே இல்லாமல் உங்களோடு வாழ்ந்தேன்..

என் தோழிகளிடம் ஒரு தச்சர் ஆசாரியை என் கணவன் என்று சொல்லிக் கொள்வதற்கு கூனி குறுகிப் போனேன்..

உங்களுடனான வாழ்க்கை கசக்கிறது..

சுவாரசியமே இல்லாத தாம்பத்தியம் பிடிக்கவில்லை..

மனைவியின் அழகை ரசிக்காத உங்கள் மனப்போக்கு பிடிக்கவில்லை..

இதுதான் என் விதி என்று என்னை தேற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்த பிறகு ஒரு கட்டத்தில் முற்றிலுமாக என்னை விட்டு விலகி விட்டீர்கள்..

குறைந்தபட்சம் உங்களிடமிருந்து எனக்கு கிடைக்க வேண்டிய சராசரி சுகமும் பறிபோயிற்று..

தாம்பத்தியத்தில் பெரிதாக நீங்கள் எந்த சாகசமும் செய்யவில்லை.. ஆனால் இப்போது அதுவும் இல்லை எனும் போது.. இந்த வாழ்க்கை எனக்கு வெறுத்து போகிறது.‌

எந்தவித பற்றுதலும் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை என்னால் வாழ முடியாது..

என் விதியோ என்னவோ எல்லா விதத்திலும்.. என் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்ட ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்.. என்னையும் அறியாமல் அவரிடம் என் மனதை பறிகொடுத்து விட்டேன்..

பொய்யாக ஒரு வாழ்க்கையை வாழ விரும்பாமல் என் சந்தோஷமான வாழ்க்கையை தேடி அவரோடு போகிறேன்.. தயவுசெய்து என்னை தேட வேண்டாம்.. உங்களால் பிறந்த இந்த குழந்தையை உங்களிடமே விட்டு செல்கிறேன்.. என்னை தொந்தரவு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..

தெரிந்தோ தெரியாமலோ உங்கள் வேதனைக்கு காரணமாகி விட்ட என்னை மன்னித்து என் முடிவை ஏற்றுக் கொள்ளவும்..


அகலிகா..!!

கடிதத்தை படித்துவிட்டு எதிர்பாராத மிகப்பெரும் துரோகத்தை தாங்க இயலாதவனாக சிணுங்கிய குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு திக்பிரமை பிடித்தவனாக நின்றிருந்தான். கௌதமன்..

நான் இவளை நேசிக்கவில்லையா.. என் காதலில் சுவாரசியம் இல்லையா.. இத்தனை நாள் பொய்யான வாழ்க்கை வாழ்ந்தாளா.. விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடியாமல் தடுமாறியவன்.. நிதர்சனத்தை உணர்ந்த கணம் நெஞ்சம் நெருப்பாக கனன்று கொண்டிருந்தது..

ஓலமிட்ட இதயத்தின் வெளிப்பாடாக விழிகள் சிந்திய கண்ணீர் துளிகளும்.. வெண்ணீர் ஊற்றாக அவன் கருகிய நெஞ்சை போலவே சொட்டுச் சொட்டாக சுட்டுச் சிதறின..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Sep 10, 2024
Messages
18
Kalyanathykku munnadi odirukkalam akalika pinnadi osurathulam mapathagam😡
 
Joined
Jul 10, 2024
Messages
28
அவன் கூப்பிட்டான்னா உனக்கு அறிவு எங்க போச்சு. போனவ பேசாம போகாம இப்படி கௌதம் மனம் நோகற அளவுக்கு எழுதி வச்சிட்டு போயிருக்கியே அகலி.

யானை தன் தலையில தானே மண்ண வாரி போட்ட மாதிரி இருக்கு உன் செயல். சந்திரன்கிட்ட என்ன அசிங்கப்பட போறியோ.
 
New member
Joined
Mar 17, 2024
Messages
5
இந்த மாதிரி அசிங்கமான வேலையப் பாத்துட்டு எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இப்ப வந்து நிக்குறா😡 கௌதமன பாத்தா கிறுக்கன் மாதிரி இருக்கு போல. இந்த மாதிரி மனைவிய மன்னிச்சு வாழ்றதவிட அவன் அத்தமகளையே கல்யாணம் பண்ணிக்கிறது நல்லது.
 
Member
Joined
Dec 23, 2023
Messages
25
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top