- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
வஞ்சி வாசலை தாண்டி செல்லும்போது..
"இந்தாடி ஒரு நிமிஷம்.." என்று அவளை வழிமறித்தாள் அழகி..
"இங்க பாரு.. நீயும் உன் புருஷனும் சந்தோசமா ஒத்துமையா இருக்கணும்னுதான் அப்படி பொய் சொன்னேன்.. மத்தபடி உங்களை பிரிக்கனும்னு எனக்கு எந்த ஆசையுமில்லை.. அப்படியே ஆசைப்பட்டாலும் அதுக்கு உன் புருஷன் ஒத்துக்கணுமே..!" உதடு சுழித்தாள் அழகி
"ஓஹோ..! சங்கதி எப்படி போகுதா என்னையும் என் புருஷனையும் பிரிக்கணும் வேற ஆசைப்படுவியோ நீ.." வஞ்சி இடுப்பில் கைவைத்து சண்டைக்கு நின்றாள்..
"அடியேய் ஒரு பேச்சுக்கு தான் அப்படி சொன்னேன்..! நான் மட்டும் அப்படி ஒரு பொய்ய சொல்லலைன்னா இந்நேரம் உன் புருஷன் கூட வந்து சேர்ந்து இருப்பியா நீயி.."
புடவை முந்தானையை விரலில் சுருட்டி இழுத்தபடி பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு..
"என் புருஷன் கூட வந்து வாழறதுன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.. நீ சொன்னதுனால கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன்.. அம்புட்டுதான்.. மத்தபடி நான் அவரை மனசார நேசிக்கிறேன் அவர் மேல என் உசுரையே வச்சிருக்கேன் தெரியுமா..?" சிணுங்கினாள் வஞ்சி..
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்த பொறவு காப்பி தண்ணியில சர்க்கரை போடாம.. கேசரி செய்யும்போது எனக்கு எடுத்து வைக்காம பழி வாங்கி புடாதே..! அதைச் சொல்ல தான் ஓடி வந்தேன்.."
"அதானே பார்த்தேன்.. தேவையில்லாம எலி எதுக்கு ஏரோபிளேன் ஒட்டுதுன்னு இப்பதானே தெரியுது.. உன்னைய வீட்டுக்கு வந்த பிறகு வச்சுக்கிறேன் இருடி அழகி..!" என்று மிரட்டியபடி அங்கிருந்து சென்றிருந்தாள் வஞ்சிக் கொடி..
மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்து பத்து நாட்களாகி இருந்தன..!
என்னதான் வளர்ந்து வரும் மருத்துவமனை கட்டமைப்பில் கண்ணகியின் பங்களிப்பு பெருமளவில் இருந்த போதிலும் பதவியும் அதிகாரமும் கண்ணபிரானிடம்
தானே இருக்கிறது..!
சில முக்கிய ஊர் பணிகளின் பொருட்டு.. கூடத்தில் அமர்ந்து ஊர் பெரியவர்களோடு பேசிக் கொண்டிருந்தான் அவன்..
"கண்ணகி..!"
வழக்கம்போல அதிகார குரலில் அழைத்தான்..
"அய்யய்யோ உடம்பு சரியானதும் மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டா..!" பாக்கியம் திகிலுடன் எட்டிப் பார்த்தாள்..
கண்ணகி பழையபடி புடவை சரசரக்க ஓடி வராமல் நிதானமாக நடந்து வந்து அவன் பக்கத்தில் நின்றாள்..
"இப்படி உட்காரு.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.." நாற்காலியை இழுத்து போட்டு அவளை பக்கத்தில் அமர வைத்தான் கண்ணபிரான்..
"ஆத்தாடி சரிதான்..! எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கணும்.." மனமகிழ்ச்சியும் நிம்மதியுமாக இரு கைகளால் அவர்களை ஆசிர்வதித்து விட்டு வேலையை கவனிக்க உள்ளே சென்று விட்டாள் பாக்கியம்..
"நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டு மைதானம் ஏதோ ஸ்டேடியம் மாதிரி போடணும்னு சொல்லுறாங்க..! நீ என்ன நினைக்கற..!" மனைவியிடம் கேட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்..
"தாராளமா செய்யலாம்.. பக்கத்து ஊரு பள்ளிக்கூடத்து பிள்ளைகளும் விளையாட்டு போட்டிக்காக அடிக்கடி இங்கு வர்றதால.. இடம் பத்தாம போயிடுது.. பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல அனாமத்தா இருக்கிற மைதானத்துல.. ஊர் பொறுக்கி பசங்க குடிச்சுப்புட்டு பாட்டில் ஒடச்சு போடுறதும் ராவுல தப்புதண்டா நடக்கிறதுமா இருக்குன்னு சொல்லுறாவுக.. அந்த இடத்தையும் பள்ளிக்கூடத்துக்காக வளைச்சு போட்டு பெருசா விளையாட்டு அரங்கம் மாதிரி கட்டிட்டு மதில் சுவர் எழுப்பி.. ஒரு வாட்ச்மேனை காவலுக்கு போட்டா நல்லாத்தான் இருக்கும்.."
"சரியா சொன்ன கண்ணகி.." கீற்றான புன்னகையோடு தலையசைத்தான் கண்ணபிரான்..
"சின்னவரு இப்ப எதுனாலும் பொண்டாட்டியை கேட்டு தான் செய்யறாப்ல தெரியுது..!" வந்திருந்தவர்களுள் ஒருவர் விளையாட்டாக கேட்டார்..
"அதுல என்ன தப்பு இருக்குங்குறேன்.. அடுத்த எலக்சன்ல எனக்கு பதிலா சேர்மன் பதவிக்கு நிக்க போறது என் பொண்டாட்டிதான..! இப்பவே அவ சொல்றத கேட்டு அது படி செஞ்சுட்டா அவளுக்கும் அனுபவம் வந்த மாதிரி இருக்கும்.. எனக்கும் நல்ல ஆலோசனை கிடைச்ச மாதிரி இருக்கும்ல.."
"ஓஹோ அப்போ உங்க பொஞ்சாதி ஒரு நல்ல ஆலோசனை மந்திரின்னு சொல்லுங்க.."
அப்படித்தான் வச்சுக்கங்களேன்.. என்று கண்ணபிரான் மனைவியை பார்த்தபடி பெருமையாக சொல்ல அங்கே சிரிப்பலை கொல்லென பரவியது..
லேசான புன்னகையோடு அங்கிருந்து எழுந்து சென்று அனைவருக்கும் காபி எடுத்து வந்து பரிமாறினாள் கண்ணகி..
சமையலறைக்குள் காலி டம்ளர்களை வைக்க வந்தவளை பிடித்துக் கொண்டாள் பாக்கியம்..
"ஏன் கண்ணகி இப்போ உங்க ரெண்டு பேருக்குள்ள எல்லாம் சமூகமாக போகுதா..! எதுவும் பிரச்சனை இல்லையே.." தயக்கத்தோடு கேட்டவரிடம் உருத்து விழித்தாள் கண்ணகி..
"நீங்க எதை பத்தி சொல்லுறீங்க அத்தை.. எனக்கு ஒன்னும் புரியலையே..?"
"இல்ல நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா ராசியாகிட்டீங்களா.. ஒத்துமையா சந்தோஷமா இருக்கீங்களா..?"
கண்ணகி ஆழ்ந்து மூச்செடுத்தாள்..
"அப்படியெல்லாம் சொல்லிட முடியாது..! இப்ப வரைக்கும் அவரை என்னால மன்னிக்க முடியலங்கிறதுதான் உண்மை.. ஆனாலும் என் பிள்ளைக்கு அப்பா வேணும்.. அவர விட்டு பிரிஞ்சு போய் என் புள்ளையை தண்டிக்க நான் தயாராக இல்லை.. புருஷன் பொண்டாட்டி பிரியலாம்.. ஆனா அம்மா அப்பா பிரியவே கூடாது..! என் புள்ளையோட எதிர்காலத்துக்காக நாங்க இரண்டு பேரும் சேர்ந்துதான் இருக்கனும்.."
"அப்படின்னா ஒரே ரூமுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா பிரிஞ்சு தான் இருக்கீங்களா..?"
"எனக்கு சொல்ல தெரியல அத்தை.. மேலோட்டமான ஒரு வாழ்க்கை.. நான் சொல்லுற பேச்சை அவர் தட்டுறதில்லை.. அவர் கேட்கிற எதையும் நான் மறுக்கிறதில்ல.. ஒரு பொண்டாட்டியா நான் என் கடமையில சரியாதான் இருக்கேன்.. ஒரு புருஷனா அவரும் எனக்கு மறுவாதி குடுக்கிறாரு.. ஆனாலும்..?" என்று யோசனையாக இழுத்தவள் அதற்கு மேல் பேசவில்லை அங்கிருந்து சென்றிருந்தாள்..
ஊர் மக்கள் சென்ற பின்பு கண்ணபிரானின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..
"என்ன கண்ணு வேணும்..?" தங்கையை கனிவாக பார்த்தான் கண்ணபிரான்..
"அண்ணா நான் என் புருஷன் வீட்டுக்கு போறேன்..!" தயங்கி பேச்சை ஆரம்பித்தாள்..
கண்ணபிரான் முதலில் யோசனையாக விழித்து பிறகு சிரித்தான்..
"நீ இத்தனை நாள் அங்க தான இருந்த..?"
"ஆமா..! ஆ.. ஆனா.. இப்ப நான் ஒரு முடிவோட திரும்பி வந்துருக்கேன்.."
"என்ன முடிவு..?"
"நீ நம்ம குடும்பத்தோட என்னை கூட்டிட்டு போய் அவர் வீட்டில் விடனும்.. அத்தோட.." என்று நிறுத்தியவள் எச்சில் விழுங்கியபடி அண்ணன் முகத்தை பார்த்தாள்..
"உன் தங்கச்சி அந்த வீட்டில எந்த மனக்குறையும் இல்லாம சந்தோஷமா வாழனும்னா.. எ.. என் புருஷன் கிட்ட நீ மன்னிப்பு கேட்கணும்.."
"எதுக்காக..?" தீவிர முக பாவனையோடு கண்களை சுருக்கினான் கண்ணபிரான்..
"எனக்கு கரு கலைஞ்சபோது ஆஸ்பத்திரி வாசல்ல அவரை அடிச்சு அவமானப்படுத்தினதுக்காக..! இதுவரை நீ அவருக்கு எதிரா செஞ்ச அத்தனை செயல்களுக்கும் சேர்த்து மனசார மன்னிப்பு கேட்கணும்..! சுமூகமா முறையில பிரச்சினைய தீர்த்து நல்லபடியா உன் தங்கச்சியை அவ புருஷன் வூட்டுல கொண்டுபோய் வாழ வைக்கணும். எனக்காக செய்வியா அண்ணா..!"
யோசனையாக விழிகளை கீழே இறக்கினான் கண்ணபிரான்..
கலக்கத்தோடு அவன் பதிலை எதிர்பார்த்து வஞ்சியும்.. தூணில் சாய்ந்த படி கண்ணபிரான் என்ன சொல்லப் போகிறான் என்று கண்ணகியும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
தீர்க்கமான பார்வையோடு நிமிர்த்தான் கண்ணபிரான்..
"முடியாது.. நீ சொன்னதை என்னால செய்ய முடியாது..!" உறுதியான குரலில் சொல்லி முடித்திருந்தான்..
"ஏம்பா தேவரா..! வீட்ல ரெஸ்ட் எடுக்கலாமில்ல.. வெயில் இப்படி கொளுத்துதே.. பைக்ல போய் திரும்பவும் ஏதாவது உடம்புக்கு வந்துச்சுன்னா என்ன செய்யறது.. உன் பொண்டாட்டி வேற மறுபடி எதுக்கு பொறந்த வீட்டுக்கு போனான்னே எங்களுக்கு தெரியல.. நீயா.. கார்ல போன்னு சொன்னாலும் கேக்குறது இல்ல.. ஒரு ரெண்டு நாள் ஓய்வெடுத்துட்டு அப்புறம் போடா.. அப்பன் பேச்சை மதிடா.." பெரியசாமி வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்த மகனின் பின்னால் ஓடி வந்தார்..
"அட சும்மா இருங்கப்பா..! வீட்லயே இருந்தா உடம்புக்கு வேலை குடுக்காம நோயும் நொடியும் பிச்சு திங்கும்.. உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்.. விர்வை சிந்தி பாடுபடனும்.. இல்லைன்னா எனக்கெல்லாம் சோறு இறங்காது.." சொல்லியபடி வெளியே வந்து பைக்கில் ஏறியவன்.. வீட்டு வாசலில் கண்ணபிரான் வீட்டு கார் வந்து நின்றதை கண்டு யோசனையாக புருவம் சுருக்கினான்..
காரின் முன் இருக்கையிலிருந்து கண்ணபிரான் மறுபக்கம் கண்ணகி இறங்க பின்பக்கமிருந்து பாக்கியம் வஞ்சி.. இருவரும் இறங்கினார்கள்..
"அட.. வாங்க தம்பி.. வாங்க சம்பந்தியம்மா..! வள்ளி கொஞ்சம் வெளியே வா.. யார் வந்திருக்காங்கன்னு பாரு.." பெரியசாமி சிரித்த முகமாய் மனைவியை அழைக்க கனகல்லியும் வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்..
"எங்க.. சின்னவனை கூட்டிட்டு வரலையா..?" வள்ளி பாக்கியத்தின் கைப்பற்றிக் கொண்டு சிரிக்க..
"அவன் பள்ளிக்கூடத்துக்கு போய் இருக்கான்.. பரீட்சையாம்.. வர சாயங்காலம் ஆயிடுமே..! அதான் நாங்க மட்டும் வந்து ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு.." பதிலோடு புன்னகைத்தாள் பாக்கியம்..
பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்த படி கண்ணபிரானை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் தேவரா..
அந்த நால்வரிலிருந்து பிரிந்து வந்த வஞ்சி தேவராவின் கைகோர்த்து அவனை பார்த்து கண்சிமிட்டினாள்..
கண்ணபிரான் முடியாது முடியவே முடியாது.. என்றதும் வஞ்சி திகைத்து கிட்டத்தட்ட அழும் நிலைக்கே சென்று விட்டாள்..
"வந்து உன்னை விட்டுட்டு போறது மட்டுமல்ல.. குடும்பத்தோட வந்து இருந்து விருந்து சாப்பாடு சாப்பிட்டு உறவை புதுப்பிச்சுகிட்டு தான் அங்கிருந்து வருவேன் சம்மதம்னா சொல்லு உன்னை கொண்டு போய் உன் வீட்ல விடுறேன் என்ன சொல்லுத..?" புருவம் உயர்த்தி புன்னகையோடு கேட்டு அண்ணனின் காலில் விழுந்து விட்டாள் வஞ்சி..! தங்கையை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..
அந்த சம்பவம் இசிஜி கருவியில் காட்டும் சீரற்ற கோடுகளாக மனக்கண் முன் வந்து போக.. தேவராவின் தோளோடு தோள் சேர்ந்து இடித்து நினைத்த காரியம் நிகழ்ந்து விட்ட சந்தோஷத்துடன் அவள் தோள் இடித்தாள் வஞ்சி..
எதிர்பாராத விதமாக மனைவியின் இரு கன்னங்களை பற்றி அழுத்தி அவள் உதட்டில் முத்தமிட்டான் தேவரா.. சட்டென விழுந்த முத்தத்தில் திகைத்து போனவள் அவனிடமிருந்து பிரிந்து உள்ளே ஓடிவிட்டாள்..
அவளை பின்தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக வாசலை தாண்டி அவனும் உள்ளே சென்றான்..
கண்ணபிரான் கண்ணகி ஜோடியாக இருக்கையில் அமர்ந்திருக்க.. பாக்கியம் தனியாக அமர்ந்திருந்தார்..
மற்றொரு பக்கம் பெரியசாமி அமர்ந்திருக்க.. அவர் நாற்காலியில் கையை ஊன்றும் இடத்தில் அமர்ந்தபடி மகனின் தோள் மீது கை வைத்து கண்ணபிரானை முறைத்துக் கொண்டிருந்தார் அப்பத்தா..
தேவராயன் உள்ளே வந்து ஒரு இருக்கையை ஆக்கிரமித்துக் கொள்ள அவன் பக்கத்தில் நின்று கொண்டாள் வஞ்சி..
சில நொடிகளே நீடித்திருந்த மௌனத்தை கண்ணபிரானை உடைத்தான்..
"என் தங்கச்சியை இங்க விட்டுட்டு போகலாம்னு வந்தேன்.. பழசையெல்லாம் மனசுல வச்சுக்காம எங்க புள்ளையை நீங்கதான் உங்க வீட்டு பொண்ணா நினைச்சு பத்திரமா பாத்துக்கணும்.." நிமிர்ந்து பார்க்காமல் தடுமாற்றத்துடனே பேசினான். அவன்..
"இதெல்லாம் நீங்க சொல்லனுமா..! வஞ்சி எங்க வீட்டு பொண்ணு.. எங்க தேவராயன் எம் மருமவள சந்தோஷமா பாத்துக்குவான்.. நீங்க கவலைபடாம இருக்கலாம்" மனநிறையோடு சொன்னார் பெரியசாமி..
கண்ணபிரான் பின் கை கட்டியபடி எழுந்து தேவராவின் அருகே வந்தான்..
தேவரா எழுந்து சட்டையை இழுத்து விட்டுக் கொள்ள.. தலை தாழ்ந்திருந்தவன் அவன் முகம் பார்த்தான்..
"உங்களுக்கு நான் நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன்.. என்னதான் தப்பு நடந்திருந்தாலும் ஆஸ்பத்திரியில் அத்தனை பேர் முன்னாடி உங்களை நான் அடிச்சிருக்க கூடாது..! நான் செஞ்ச தப்பை நீங்க மன்னிக்கணும்.. பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு மறுபடி ஒருத்தரை ஒருத்தர் விரோதமா பாத்துக்கறது இனி வேண்டாம்.. பகையெல்லாம் நம்மளோட முடிஞ்சு போகட்டும்.. அடுத்து வரும் சந்ததி சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டுமே..!" கண்ணபிரான் இவ்வளவு பேசுவான் என்று அங்கிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை..
தேவராயன் தாராளமாய் புன்னகைத்தான்..
"மன்னிக்க என்ன இருக்கு.. அதான் சொல்லிட்டீங்களே.. பகை வேண்டாம் நாமெல்லாம் ஒரே சொந்தம்னு.. சொந்தத்துக்குள்ள இது மாதிரி பிரச்சினைகள் வர்றது சகஜம்தான..! மறந்துட்டு சந்தோஷமா வாழற வழிய பார்ப்போம்.." அவன் தோள் மீது தன் இரு கைகளை வைத்து அழுத்தினான் தேவராயன்..
கண்ணபிரானின் உதட்டினில் சங்கடமாய் முளைத்த புன்னகை.. சந்தோஷமாய் விரிந்து தேங்கி நின்றது..
அதே புன்னகையோடு அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..
"அப்பத்தா நான்.." என்று சொல்லும்போதே அழகி அவ்விடம் விட்டு நகர்ந்து வீட்டின் பின்பக்கம் சென்றுவிட.. முகம் மாறி போனவன் அழகியை பின் தொடர்ந்தான்..
முன் கட்டியபடி முதுகை காட்டி நின்றிருந்தார் அழகி..
குரலை செருமிக் கொண்டு தொடர்ந்தான்..
"இங்க பாரு அப்பத்தா.. எனக்கு கோர்வையா மன்னிப்பெல்லாம் கேட்க தெரியாது.. அன்னைக்கு நான் செஞ்சது பெரிய தப்பு.. பெரியவங்கள மரியாதை இல்லாம பேச கூடாதுன்னு அப்பா சொல்லுவாரு.. ஆனா நான் உன்னை அடிச்சிருக்கேன்.. என்ன சொல்லி உன்னை சமாதானப்படுத்துறதுன்னு எனக்கு தெரியல.. வேணும்னா பதிலுக்கு நீயும் என்னை அடிச்சுரு..!" அப்பத்தாவின் முன்பு வந்து நின்றான்..
அழகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்..
"அப்போ என்னை நீ மன்னிக்கவே மாட்டியா..! குடும்பமெல்லாம் ஒண்ணா சேர்ற நேரம்.. நாம ரெண்டு பேர் மட்டும் மனக் குறையோடு தனித்தனியா முறுக்கிகிட்டு நின்னா நல்லாவா இருக்கும்.. நீயே முடிவு பண்ணு.."
"பண்றதையும் பண்ணிப்புட்டு பேசுற பேச்ச பாரு.. உன் உயரத்துக்கு என்னால எகிறி குதிச்சு உன்னை அடிக்க முடியாது.. நீ வேணும்னா குனிஞ்சு என் காலில் விழு.. மன்னிக்க முயற்சி பண்ணுறேன்.." அப்பத்தா தெனாவட்டாக சொல்ல
"என்னது கால்ல விழனுமா..?" கனத்த குரலோடு கண்ணபிரான் முறைத்தான்..
முன் கை கட்டியபடி விரைப்பாக நின்றார் அழகி..
சுற்றும் முற்றும் பார்த்தபடி மீசைய முறுக்கியவன்..
"வெள்ள உடுப்பு அழுக்காயிடும் அப்பத்தா.. சீக்கிரமா மன்னிச்சு யாரும் பாக்கும் முன்னாடி தூக்கி விட்டுரு.." என்ற படியே சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து இரு கைகளை மேல் நோக்கி கும்பிடு போட்டிருந்தான்..
"மனசார மன்னிப்பு கேட்கிறேன்
உன் பேரனா நினைச்சு என்னை மன்னிச்சிடு.."
"அட எழுந்திருடா போதும்.." அவனை தூக்கிவிட்டு சட்டையிலிருந்த மண்ணை தட்டி விட்டார் அப்பத்தா..
"இங்க பாரு.. என்ன இருந்தாலும் உனக்கு தண்டனை உண்டு.. உனக்கு மருமகன் பொறந்து நீ ஆசையா கையில தூக்கும் போது உன் மூஞ்சில ஒன்னுக்கு அடிக்கணும்.. அத பாத்து இந்த அழகி சிரிக்கணும் இதுதாண்டா என்னோட ரிவரு.."
"அது ரிவெஞ்ச்..!"
"ஏதோ ஒன்னு.. நான் இன்னும் உன்னைய மன்னிக்கல..!"
"இன்னும் மன்னிக்கலையா அப்ப நான் என்னதான் செய்யணும்.." அயர்ந்தான் கண்ணபிரான்..
"அந்தா தெரியுது பார் பொட்டிக் கட..! அங்கன கூட்டிட்டு போய் தேன் மிட்டாயும் பாக்கெட் அதிரசமும் வாங்கி குடு.."
"அம்புட்டுதான வா போகலாம்..!"
"என் பேரங்கிட்ட சொல்லிட மாட்டியே.."
"உன் பேரன்கிட்ட நீ சொல்லாம இரு..! மறுபடி எங்க ரெண்டு பேருக்கும் இடையில விரோதத்தை வளர்த்து விட்டுராத..!"
"தேன்மிட்டாய்க்கும் அதிரசத்துக்கும் மன்னிப்பு தருவேன்னு தெரிஞ்சிருந்தா வரும்போதே ஒரு லாரி அள்ளி போட்டுக்கிட்டு வந்திருப்பேனே..!"
கண்ணபிரான் அழகியின் தோள் மீது கை போட்டுக்கொள்ள.. அப்பத்தாவோ அவன் இடுப்பை அணைத்துக் கொண்டு இருவருமாக ஜோடி போட்டு பெட்டிக்கடையை நோக்கி நடந்தனர்..
தொடரும்..

Last edited: