- Joined
- Jan 10, 2023
- Messages
- 102
- Thread Author
- #1
வகுப்பாசிரியர் நடத்திக் கொண்டிருந்த பாடத்தில் ஒரு வார்த்தையோ ஒரு வரியோ எதுவும் தேம்பாவணியின் கருத்தினில் பதியவில்லை..
உடம்பு உதறலெடுக்க.. உதடுகள் குளிர் பிரதேசத்தை கண்ட சிறு பறவையாய் நடுங்கிக் கொண்டிருந்தன.. அதற்கு நேர் மாறாக உள்ளங்கை சொத சொத வென வியர்த்துப் போன நிலையில் காது மடல் நரம்புகள் சூடேறின.. இன்னும் சிறிது நேரத்தில் அந்த கேசவ் சத்யாவுடன் வந்து விடுவான்.. நினைக்கும் போதே அடி வயிற்றிலிருந்து குபுக்கென்று ஏதோ ஒன்று பீறிட்டு எழுந்தது..
மதியம் கூட இது பற்றி யோசித்து சரியாக உணவருந்தாமல் மிச்சத்தை தன் தோழிகளுக்கு பகிர்ந்து தந்திருந்தாள்..
"பி ஸ்ட்ராங்.. கோ வித் த ஃப்ளோ..!" நெஞ்சை தட்டி தன்னை திடப்படுத்திக் கொண்டாள்..
"தேம்பாவணி உன்னை பார்க்க உன் அப்பா வந்திருக்கார்.." வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாணவி ஒருத்தி வந்து குறுக்கிட்டு செல்ல.. தேம்பாவணியின் தொண்டைக் குழியில் முள்ளாய் கீறி சறுக்கென்று ஏதோ ஏறியது..
"போ..! கிளாஸ் நேரத்துல இது வேற டிஸ்டர்பன்ஸ்" என்று முனுமுனுத்துக் கொண்டே மீண்டும் பாடத்தை தொடர்ந்தார் அந்த பேராசிரியர்..
எனக்கு போக விருப்பமில்லை என்று அமர்ந்து விடத்தான் ஆசை.. முடியாத சூழ்நிலையில் அடம் பிடித்து பிடிவாதமாக வரமாட்டேன் என்று மறுத்த தன் தேகத்தை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே நடந்தாள் தேம்பா..
முந்தைய நாள் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் கேஷவ் சத்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெற்றி களிப்போடு காத்திருக்க.. உள்ளங்கையை இறுக மூடிக் கொண்டு அடி மேல் அடி வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..
"போகலாமா..?"
கேட்ட பிறகும் அமைதியாக நின்றிருந்தாள்..
"என்னமா நேத்து கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி படிச்சு படிச்சு சொன்ன பிறகும் அசையாம நின்னுட்டே இருந்தா எப்படி..? வா போகலாம் நேரமாச்சு.. உடனடியா உன்னை கூட்டிகிட்டு ஊட்டி வரை போகணும்.. எஸ்டேட் விக்கறது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்ஸ்ல நீ சைன் பண்ணனும்.. நிறைய வேலை இருக்கு.. அப்புறம் பத்தொன்பது வயசுக்கு பிறகு நீ தான் கம்பெனி நிர்வாகத்தை கையில எடுத்துக்கணுமாம்.. உன் தாத்தா எழுதி வெச்சிட்டு போயிருக்கான்.. அப்பப்ப ஆபீஸ் வந்து நாங்க கேக்கற டாக்குமெண்ட்ல சைன் போட்டுட்டு வீட்டுக்கு வந்துடலாம்.. பெருசா உனக்கு எந்த வேலையும் இருக்காது.. படிக்க வேணாம் உழைக்க வேண்டாம் நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்கலாம் இதைவிட சொகுசான லக்சூரியஸ் லைஃப் வேற எங்க கிடைக்கும்னு சொல்லு..? கொடுத்து வச்சவ நீ!"
"இல்ல அங்கிள் ஒருவேளை காலேஜ்ல பர்மிஷன் வாங்கணும்னு யோசிக்கறாளோ என்னவோ..?" சத்யா இடை புகுந்தான்
"அவதான் இனிமே காலேஜ் வரவே போறதில்லையே.. அப்புறம் யார்கிட்ட பர்மிஷன் வாங்கணும் கிளம்பு கிளம்பு சீக்கிரம் வா..!" கேஷவ் அவசரப்படுத்த..
முடியாது..! தைரியமாக முகத்தில் ஒரு துளி அச்சம் இல்லாது.. நிமிர்வாக நேருக்கு நேர் அவர்களை எதிர்கொண்டு மார்பின் குறுக்கே கைகட்டி நின்றாள் தேம்பாவணி..
"ஏய்.. என்ன.. என்ன சொன்ன..?" கேஷவ் உதடுகள் தந்தியடித்தன..
தேம்பாவணியிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை இருவரும்..
"வர முடியாதுன்னு சொன்னேன் உங்க காதுல விழலையா.. சரி தெளிவா உங்களுக்கு கேட்கற மாதிரி சொல்றேன்.. உங்க கூட வர எனக்கு இஷ்டம் இல்லை.. என்னை கட்டாயப்படுத்தி நீங்க எங்கேயும் கூட்டிட்டு போக முடியாது..!"
"என்ன தேம்பாவணி குளிர் விட்டு போச்சா..! நேத்து சொன்னது எதையும் மறந்துடலையே நீ..?"
"நல்லாவே ஞாபகம் இருக்கு.. இப்படி பிளாக்மெயில் பண்ணி என்னை பயமுறுத்தி பார்க்க நான் பழைய தேம்பாவணி இல்ல.. உங்க ஆட்டம் இனி செல்லுபடியாகாது.."
"பாருடா அந்த டாக்டர் சொல்லிக்கொடுத்து அனுப்பினானா..! உனக்கெல்லாம் சொன்னா புரியாது செஞ்சு காட்டுறேன்.." அலறியடிச்சுகிட்டு ஓடி வந்து என் கால்ல விழுந்து அந்த குடும்பத்துக்காக உயிர் பிச்சை கேட்ப இல்ல.. அப்ப வச்சுக்கறேன்.." கேஷவ் கர்ஜித்தான்...
"என் குடும்பத்தை நான் பாத்துக்கறேன் மிஸ்டர் கேஷவ் சற்று தொலைவிலிருந்து கேட்ட வருண் குரலில் திக்கென விழித்து இருவரும் குரல் வந்த திசையில் திரும்பினர்..
"ஏய்.. இ.. இவன் எங்கருந்து இங்க வந்தான்.. என்னடி விஷயத்த சொல்லி இவனை கையோட கூட்டிட்டு வந்துட்டியா..! இவன் வந்துட்டா மட்டும் நாங்க பயந்து உன்னை விட்டுட்டு போயிடுவோம்ன்னு நினைச்சியா.. பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லார்கிட்டருந்தும் உன்னை பிரிச்சு வைக்க தெரிஞ்ச எனக்கு இவங்கிட்ட இருந்து உன்னை பிரிக்கறது அவ்வளவு கஷ்டம் இல்ல கண்ணு.."
"சரி.. எல்லாத்தையும் பேசி முடிவெடுப்போம் முதல்ல இங்கிருந்து போகலாம் அப்படி தள்ளி நின்னு தனியா பேசலாம்.. வாங்க" இருவரின் தோள் மீதும் கை போட்டு குண்டு கட்டாக தனியாக அழைத்துச் சென்றான் வருண்..
"ஏ.. என்னடா எங்கள எங்க கூட்டிட்டு போற.. எனக்கு டிஐஜி வரைக்கும் பழக்கம் இருக்கு.. உன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா போதும்.. ஜெயில்ல போய் களி திங்க வேண்டி இருக்கும்.. காலத்துக்கு தொழில் பார்க்க முடியாது ஞாபகம் வச்சுக்க.." கேஷவ் குரல் பயத்தில் உளறியது..
கேஷவ்வால் தேம்பாவணியிடம் நிதானமாக ஆணவத்தோடு பேசியதை போல் வருணிடம் தைரியமாக பேச முடியவில்லை..
அவன் குரலில் படபடப்பும் பயமும் தெரிந்ததை தேம்பாவணி குறித்துக் கொண்டாள்..
"அதே டிஐஜி கிட்ட போய் நீங்க உங்க மகளை இத்தன நாளா அடிச்சு கொடுமைப்படுத்தி வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சு வளர்த்திருக்கீங்க ன்னு சொன்னா உங்க நிலைமை என்ன ஆகும் கேசவா.. தேம்பாவணி வந்து சாட்சி சொல்லுவா.. உங்க மேலயும் இந்த தண்ட தத்தி மேலயும் கம்ப்ளைன்ட் கொடுப்பா.. அப்புறம் உங்களுக்கு மட்டும் ஐஜி ஏசி ரூம்ல உட்கார வைச்சு ராஜா மரியாதை கொடுப்பாரா அங்கிள்..?
"இ.. இல்ல இல்ல தேம்பாவணி எங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல மாட்டா..!"
"அப்படியா தேம்பா.. இவனுங்க மேல உனக்கு அவ்வளவு பாசமா..? நீ இவங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல மாட்டேன்னு சொல்றாங்க..?"
"சொல்லுவேன்..! இன்னொரு வாட்டி என்னை தொந்தரவு செஞ்சா நிச்சயமா போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்ன ஆனாலும் சரி.. இனி பின்வாங்க போறதில்ல.." தேம்பாவணி கடினமாய் தீர்க்கமாய் உரைத்தாள்..
"அய்யய்யோ என்ன தேம்பா இப்படி சொல்லிட்ட.. நீ போகலேன்னா என் குடும்பத்தையே கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்களே.. எனக்கு பயமா இருக்கு.. எங்களுக்காக பாவம் பார்த்து நீ இவங்களை விட்டுடக்கூடாதா.. பேசாம இவங்களோட போயிட்டு தேம்ஸ்.." போலியாக பயந்தான் வருண்..
"அது உங்க குடும்பம் இல்ல.. என் குடும்பம்.. என் குடும்பத்து ஆட்களோட விரல் நகத்துக்கு ஏதாவது பாதிப்பு வந்தா கூட இவனுங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்..! என்னடா பாக்கறீங்க.. செய்ய மாட்டேன்னு நினைக்கறீங்களா..?" கர்ஜித்து நின்ற தேம்பாவணியின் புது அவதாரத்தில் மிரண்டு போனான் கேஷவ்..!
"டா வா..? நான் உன்னோட அப்பா.. என்னடி மரியாதை குறையுது.." கேஷவ் சீறினான்..
"ச்சீ.. வாய மூடு.. விவரம் தெரிஞ்ச நாள்லருந்து அப்பான்னு சொல்லிக்கற மாதிரி ஒரு நாளாவது நடந்திருக்கியா.. கேவலமான வார்த்தைகளால திட்டி அடிச்சு கொடுமைப்படுத்தி பட்டினி போட்டதை தவிர வேற என்னடா எனக்காக செஞ்சுருக்க.. மகளுடைய எதிர்காலத்துக்காக இரவு பகல் பாக்காம உழைக்கிற அப்பாக்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.. ஆனா நீ என் கனவையெல்லாம் கருக்கி என் வாழ்க்கைய நாசமாக்கின பாவி.. என்னை பொறுத்த வரைக்கும் நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. வயசுல பெரியவனாச்சேன்னு பாக்கறேன்.. இல்லன்னா எனக்கிருக்குற கோவத்துக்கு பளார்னு அறைஞ்சுருவேன் மரியாதையா போயிடு.."
"ஏய் வனி.. என்னடி அங்கிளையே எதிர்த்து பேசற.." முன்னேறி வந்த சத்யா கன்னத்தில் அறை வாங்கி ரோலிங்கில் போய் சுருண்டு விழுந்தான்..
"அவங்க தான் பேசிகிட்டு இருக்காங்கல மாப்பு.. நீ ஏன் குறுக்கால வந்த கவுஷிக் மாதிரி ஓவரா எகிர்ற.. அமைதியா இரு தம்பி.. உனக்கு தனியா கொடுப்போம்.. அவசரப்படாதே.." வருண் நெருங்க சத்யா ஓடிப் போய் மரத்தின் பின்னால் நின்று கொண்டான் ..
இது தேம்பாவணிதானா? என்ற ரீதியில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்துக் கொண்டிருந்தான் கேஷவ்..!
"என்ன தேம்பாவணி.. இவன் கூட இருக்கற தைரியத்துல ஓவரா கொழுப்பெடுத்து ஆடிட்டு இருக்கியா.. இவனுக்கொரு முடிவு கட்டிட்டு உன்னை வீட்டிற்கு இழுத்துட்டு போறேன்.. "
"ஐயோ..! ரொம்ப பேசறான் தேம்பா.. எனக்கு கடுப்பாகுது..! வித் யுவர் பர்மிஷன் உன் அப்பன ஓங்கி ரெண்டு வச்சிக்கட்டுமா..?"
"பர்மிஷன் கேட்க தேவையே இல்லை.. உடம்புல உயிரை மட்டும் விட்டுட்டு இவனை புரட்டி எடுத்தா கூட எனக்கு சந்தோஷம்தான்.. நான் யாராவது வராங்களானு பாக்கறேன். நீங்க ஆரம்பிங்க.." உத்தரவு தந்துவிட்டு தேம்பாவணி சற்று தொலைவில் போய் நின்றுக்கொள்ள.. சட்டையை முழங்கை வரை இழுத்து விட்டுக்கொண்டு முஷ்டியை மடக்கினான் வருண்..
"ஐயோ..ஓஓஓ.."
"ஆஆஆஆஆ"
"கத்தக்கூடாது.. கத்தக்கூடாது.. யாராவது வந்துட்டா பிரச்சனையாகிடும்.. சைலண்டா அழனும்.." வருண் வாய் மேல் விரலை வைத்து கண்களை உருட்டி மிரட்டியதும்..
"சரி சரி.. கத்தல அடிக்காதே.." பம்மினான் கேஷவ்..
தடுக்க வந்த சத்யாவிற்கும் சராமாரியாக அடி விழுந்தது.. அனைத்துமே ஊமை குத்து.. உள்காயங்கள்..
"போதும் போதும் விட்டுடு.. இனிமே உன் திசை பக்கம் கூட தலை வச்சு படுக்க மாட்டோம்.."
"என் தேம்பாவை இனிமே தொந்தரவு பண்ணுவீங்களாடா..?"
"இங்க பாரு அவ எங்களுக்கு தேவையில்லை. ஆனா சொத்து எனக்கு வேணும்.. இவளும் இவ ஆத்தாளும் உழைச்சி சம்பாதிச்சு ஒன்னும் சொத்து சேர்க்கல.. எல்லாம் என் அப்பாவுக்கு சொந்தமானது.. அந்த ஆளு சொத்தையெல்லாம் இவ பேருக்கு எழுதி வச்சிட்டு டிரஸ்ட் ஆக்கிட்டு போய் சேர்ந்துட்டான்.. ஒரு பைசா கூட நான் அதிலிருந்து எடுக்க முடியாது.. இவளும் கூட அதை வேற யாருக்கும் எழுதி தரவும் முடியாது.."
"அப்புறம் என்னடா..? நியாயப்படி அந்த சொத்து தேம்பாவுக்கு தான் சேரனும்..!"
"முடியாது..! எனக்கு சொந்தமான சொத்துக்களை வசதியா இவ அனுபவிக்கனுமா..?
அதிகாரத்தையும் செல்வாக்கையும் சொத்தையும் ஒருபோதும் நான் யாருக்காகவும் விட்டு தர மாட்டேன்.. அது ஒரு போதை.. அது எனக்கு வேணும்.." ஒரு வேகத்தில் துள்ளியவன் பிறகு வலியில் அடங்கினான்..
"நீயெல்லாம் ஒரு மனுஷனா..! தேம்பாவணி நீ பெத்த பொண்ணுதானே..! அவளை கஷ்டப்படுத்தி இந்த சொத்தை எடுத்துக்கணும்னு மனசாட்சியே இல்லாம உன்னால எப்படி டா யோசிக்க முடியுது.."
கேஷவ் குமார் இளக்காரமாய் சிரித்தான்..
'இவ என்னோட பொண்ணா.. ச்சீ.. ஓடிப்போன அந்த ஒழுக்கங்கெட்ட நாயோட பொண்ணு.. யாருக்கு தெரியும் இவளோட ஆத்தா வேற எவங்கூட படுத்து இவள பெத்தாளோ..? பாரு பாரு கொஞ்சங்கூட இதுக்கு என் ஜாடையே இல்லை.. இந்த அசிங்கமெல்லாம் எங்கப்பனுக்கு புரியல.. பேத்தி மேல உள்ள பாசத்துல மொத்தமா எனக்கு ஆப்படிச்சுட்டான்.. தெருவுல போக வேண்டிய கழிசடைக்கெல்லாம் நான் எதுக்காக சொத்தை விட்டு கொடுக்கணும்.."
கேஷவ் குமார் ஆங்காரமாய் கேட்க..
அதற்கு மேல் பேச வாய்ப்பின்றி பளாரென்று விழுந்தது ஒரு அறை..
"இப்படி ஒரு கேவலமான சைக்கோ பயலுக்கு பொண்டாட்டியா வாழ எந்த பொண்ணும் விரும்ப மாட்டா.. உன் கொடுமை தாங்க முடியாமத்தான்டா அந்தம்மா ஓடி போயிருப்பாங்க.. அவங்க உன்னை விட்டுட்டு போன கோபத்தை தீர்த்துக்க வழியில்லாம உன் பொண்ண பலியாடா யூஸ் பண்ணிட்டு இருக்க.. இனிமே அது நடக்காது..! தேம்பாவணி முழிச்சுக்கிட்டா.. அவள சீண்டுனா ரெண்டு மடங்கா திருப்பி கொடுப்பா.."
"இங்க பாரு எங்களை விட்டுடு இதுக்கு மேல அடி வாங்க உடம்பில தெம்பு இல்ல.."
"அப்படியெல்லாம் விட்டுட முடியாது மாமனாரே..! இத்தனை வருஷமா அவள துன்புறுத்தினதுக்கும் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சதுக்கும் நீங்க அனுபவிக்க வேண்டாம்..?"
"ஏய்.. என்னை இதுல இழுக்காத.. எல்லாம் இவரோட பிளான் தான்.. நான் வேணும்னா இவளுக்கு விவாகரத்து கொடுத்துடறேன்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.." திடீரென்று பின்வாங்கிய சத்யாவை பற்களை கடித்துக் கொண்டு பார்த்தான் கேஷவ்..
"விடுங்க வருண்.. அவங்க போகட்டும்.. இனி சட்டப்படி பாத்துக்கலாம்.." வருண் கைப்பற்றிய படி சொன்ன தேம்பாவை முறைத்துவிட்டு இருவரும் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து நகர்ந்தனர்..
அவர்கள் உருவம் மறைந்ததும் வருணை கட்டியணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் விட்டாள் தேம்பாவணி..
"ஏய்..! என்னடி அழற.. இவ்வளவு நேரம் அவனுங்க முன்னாடி தைரியமா இருந்த தேம்பா உண்மையா..? இல்ல இப்போ பயந்து போய் அழற தேம்பா உண்மையா..?" வாய் அதட்டினாலும் கைகள் அவளை அணைத்துக் கொண்டது..
"நான் ஒன்னும் பயந்து போய் அழல..! என்னன்னு தெரியல.. அழுகை வந்துருச்சு.. மத்தபடி நான் தைரியமாத்தான் இருக்கேன்.." கண்களை துடைத்துக்கொண்டாள் தேம்பாவணி..
"வெரி குட் இப்படித்தான் இருக்கணும்.. எப்பவும் உன் பின்னால நான் இருப்பேன்.. அதை மட்டும் நம்பு.. விட்ற மாட்டேண்டி.. தைரியமா இரு.." அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்தான்..
"சரி இப்ப காலேஜ் போறியா.. இல்ல.. வீட்டுக்கு போகலாமா."
"ஒரே படபடப்பா இருக்கு.. மைண்ட் டைவர்ட் பண்ண ஐஸ்கிரீம் சாப்பிடணும்.." என்றதும் சிரித்தான் வருண்..
"பயங்கரமான டைவர்ஷன் தான்.." அவள் தோளோடு கைபோட்டு அணைத்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்..
தேம்பாவணியின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன..
முந்தைய நாள் இரவு கண்கள் நிலை குத்தி மூச்சு திணறலோடு அமர்ந்திருந்தவளை அமைதிபடுத்தி தைரியம் தந்து முதுகை தடவி கொடுத்து.. தன் அணைப்புக்குள் வைத்திருந்து சீரான மூச்சுக்கு கொண்டு வந்தான் வருண்..
ஓரளவு உணர்வு தெளிந்ததும் அவனை தள்ளிவிட்டு விலக முயன்றாள் தேம்பாவணி..
"தள்ளிப் போங்க ப்ளீஸ்..!"
"என்னடி ஆச்சு..?"
"படுக்கையை ஈரமாக்கிட்டேன் ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்க..!" முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை மெல்ல அரவணைத்து எழுப்பி நிற்க வைத்து குளியலறை நோக்கி அழைத்துச் சென்றான்..
அவனிடமிருந்து திமிறினாள் தேம்பா..
"கொஞ்ச நேரம் அமைதியா இரு.. அமைதியா இருக்க போறியா இல்லையா..?" கொஞ்சலாக ஆரம்பித்து அழுத்தமாக மிரட்டிய அவன் குரலில் திடுக்கிட்டு செயலற்று போனவள் நிற்க கூட முடியாமல் கால்கள் துவண்டு அவன் மீது சாய்ந்தாள்.
பிறகு பதறி விலக முற்பட்ட கீழே விழ தடுமாறினாள்..
"உன்னால நிக்கவே முடியல தேம்ஸ்.. நான் சொல்றதை கேளு.." என்றவன்
அவள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல்.. உடைகளைக் களைந்து வெற்று மேனியோடு வெதுவெதுப்பான நீரால் நிரப்பப்பட்டிருந்த குளியலறை தொட்டியில் அமர வைத்தான்..
"தேம்ஸ்..!"
நிலை குத்திய விழிகளோடு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
தொட்டிக்கு மறுபுறம் முழங்காலிட்டு அமர்ந்து கையளவு நீரை எடுத்து அவள் மேனியில் ஊற்றி முதுகை மென்மையாக வருடினான்..
அந்த நிலையிலும் தேம்பாவணியின் கண்கள் மேல் நோக்கி சொருகியது..
"இந்த அளவு நீ பாதிக்கப்பட்டு இருக்கேனா உன் பயத்துக்கு காரணம் என்னன்னு என்னால உணர முடியுது.." என்றதும் அவள் கருவிழிகள் அவன் பக்கமாக நகர்ந்தன..
"உன் அப்பனா..? அந்த சத்யாவா..? உன்னை பார்க்க வந்தாங்களா..?" என்ற கேள்வியில் முழுவதுமாக அவன் பக்கமாக திரும்பினாள் தேம்பாவணி..
மீண்டும் வேகமான மூச்சிழுப்பு..
"ஏய் ரிலாக்ஸ் டி.. ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன்." அவளை இழுத்து அணைத்துக் கொள்ள குளியல் தொட்டியின் சுவர் இருவரையும் தடுத்தது..
"அவங்க என்ன சொல்லி உன்னை பயமுறுத்தி இருக்காங்கன்னு எனக்கு தெரியல.. நீ வாய திறக்காம என்னால அவங்க மேல எந்த ஆக்ஷ்னும் எடுக்க முடியாது.. ஆனா உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம்.. அதை மறந்துடாத தேம்பா..!"
"இ.. இல்ல.. அவங்க உங்களை ஏதாவது பண்ணிடுவாங்க.. உங்க குடும்பத்தை.. ஆன்ட்டிய.. ஆக்சிடென்ட்.. உங்க எல்லாரையும் கொன்னுடுவாங்க.. என்னால.." துண்டு துண்டாக பித்து பிடித்தவள் போல் வார்த்தைகளை உதிர்க்க..
"தேம்ஸ் என்ன பாரு.. என்ன பாருடி" என்று அவள் தோள் பற்றி பலமாக குலுக்கி இயல்பு நிலைக்கு வரச் செய்தான்..
"ஏன்டா நீ இன்னும் குழந்தையாவே இருக்க.. பூச்சாண்டி வருவான்னு அம்மா சொல்ற பொய்யை சின்ன வயசுல நம்பலாம்.. வளர்ந்த பிறகும் அதை உண்மைன்னு நம்பி பயந்தா நமக்கு அறிவில்லைனு அர்த்தம்.. யோசிக்க மாட்டியா டி.. உன் அப்பனுக்கும் அந்த சத்யாவுக்கும் அந்த அளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது.. நான் இருக்கற வரைக்கும் என் குடும்பத்திலருந்து ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.. எல்லாம் உன்னை பயமுறுத்துறதுக்காக சொன்னது.. அவனுங்க நினைச்ச மாதிரி நீயும் அதை நம்பிட்ட.."
தேம்பாவணி எச்சில் விழுங்கியபடி அவனை பார்த்தாள்..
"இங்க பாரு தேம்ஸ்.. காலம் முழுக்க உன் கூட நான் இருப்பேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.. ஆனா உனக்கு நீதான் துணை.. உன்னை நீ தான் பாதுகாத்துக்கணும்.. பயப்படாம தைரியமா எல்லா நிலையிலும் போராட கத்துக்கணும்.. அவங்க ரெண்டு பேரையும் நின்னு ஃபேஸ் பண்ணு.."
"எ.. என்னால முடியாது.. என்னால அவங்களை எதிர்க்க முடியாது..!"
"வீரனுக்கு ஒரு முறை தான் மரணம் கோழைக்கு தினம் தினம் சாவு.. ஒரே ஒருமுறை அவங்கள தைரியமா ஃபேஸ் பண்ணிட்டு வந்துரு.. அப்புறம் என்ன நடந்தாலும் நான் பாத்துக்கறேன்.."
"அவங்க ரொம்ப மோசமானவங்க வருண்.."
"நான் அவங்கள விட மோசமானவன்.. நீ என்ன பத்தி என்னை நினைச்சுட்டு இருக்க தேம்ஸ்.. உன்ன பத்தியும் உன் குடும்பத்தை பத்தியும் எந்த தகவலும் தெரிஞ்சுக்காம உன்னை கூட்டிட்டு வந்து என் வீட்டுல தங்க வச்சிருக்கேன்னு நினைச்சியா..! உன் பிரச்சனை என்னன்னு நீ வாயை திறந்து சொல்றதுக்கு முன்னாடியே அத்தனை தகவல்களும் என் விரல் நுனியில் அத்துபடி.. அந்த சத்யா உன் அப்பா இரண்டு பேரும் யாரு.. என்ன.. எப்படிப்பட்டவங்க.. எந்த லெவலுக்கு இறங்குவாங்க.. அவங்க கெபாசிட்டி என்ன.. எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு இங்க வச்சிருக்கேன்.." என்று நெற்றியில் கைவைத்து காட்டியவன்..
"நீ பயந்து சாகற அளவுக்கு அந்த ரெண்டு பேரும் அவ்வளவு வொர்த் இல்லை.. அவனுங்க மிரட்டல் உருட்டல் எல்லாம் உன் வரைக்கும்தான்.. குடும்பத்தையெல்லாம் கொக்கி போட்டு தூக்குற அளவுக்கு அவனுங்க ரெண்டு பேருக்குமே தைரியம் இல்லை.. உன் அப்பனும் அந்த சத்யாவும் வெறும் டம்மி பீசு.. அவனுங்களால உன்னை மட்டும் தான் பயமுறுத்தி பார்க்க முடியும்.. அதுவும் நீ பயப்படற வரைக்கும்.. துணிஞ்சு தைரியமா எதிர்த்து நிக்க ஆரம்பிச்சிட்டா தெறிச்சு ஓடிடுவானுங்க..!" என்று சாதாரணமாகச் சொல்ல..
தேம்பாவணி கண்களை விரித்து அவனைப் பார்த்தாள்..
"என்ன பாக்கற..? நான் வேணும்னா உனக்கொரு டெமோ காட்டவா..? நாளைக்கு அவனுங்க வந்தா நீ போய் தைரியமா பேசு.. மத்தத நான் பாத்துக்கறேன்.."
"பயமா இருக்கு..!" உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள் தேம்பாவணி..
'என்ன பயம்..! ஓடிக்கிட்டே இருக்க போறியா தேம்பா.. டயர்ட் ஆயிடுவ.. திரும்பி நின்னு அந்த மிருகங்களை ஒரு நிமிஷம் தைரியமா பாரு.. அது போதும்.."
"என்ன பத்தி எனக்கு கவலை இல்ல.. அவங்க உங்க குடும்பத்தை ஏதாவது பண்ணிட்டா..?"
"நான்தான் சொன்னேனே.. என்னை தாண்டி அவனுங்களால் யாரையும் தொட முடியாது பயப்படாம இருடி.. ஆமா டிரஸ் எங்க வச்சிருக்க.." என்றபடியே எழுந்து போய் அவளுக்கான உடைகளை எடுத்து வந்து தந்தான்...
"இந்தா சேஞ்ச் பண்ணிக்கோ.." ஹேங்கரில் உடைகளை போட்டுவிட்டு வெளியே சென்று கட்டில் விரிப்பை எடுத்துவிட்டு புதுசு மாற்றினான்..
வேறு உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள் தேம்பாவணி..
"நான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கறேன்.. இதையெல்லாம் செய்யணும்னு உங்களுக்கென்ன தலையெழுத்து..?"
"ஏன் இப்படி சொல்ற.. நாளைக்கு நமக்கொரு குழந்தை பிறந்தா இதெல்லாம் செய்யத்தானே வேணும்.. அதுக்கு ப்ராக்டிஸ் எடுத்துக்கறதா நினைச்சுக்கறேன்.."
ஆங்.. என தேம்பாவணி விழிக்க.. சும்மா என்றான் கண்கள் சிமிட்டி சிரித்தபடி..
"உங்களுக்கும் எனக்கும் எப்படி குழந்தை பிறக்கும்..?"
"ஏன்.. நீ ஒரு பொண்ணு நான் ஒரு பையன்.. பயாலஜிக்கலா எல்லாம் சரியாத்தானே இருக்கு.. குழந்தை பிறக்க இது போதுமே..!"
வருணின் கலகலத்த பேச்சில் அவள் மனம் இருளாய் மிரட்டும் அச்சத்திலிருந்து விடுபட்டு லேசாகி இருந்தது..
"விளையாடாதீங்க சார்..!"
"தெரியுதுல வந்து படு.." படுக்கை விரிப்பை சரி செய்து தலையணையை எடுத்து வைத்து தள்ளி நிற்க.. மெதுவாக நடந்து வந்து படுக்கையில் அமர்ந்தாள் தேம்பாவணி..
"இந்த ராத்திரி நான் உன்கூடத்தான் இருக்க போறேன்.. அந்த சோபாவில் படுத்துக்கறேன் நீ கட்டில்ல படுத்துக்க.."
"உங்களுக்கு ஏன் தேவையில்லாத சிரமம்.. நீங்க போங்களேன்.."
"அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு போக முடியாது.. மறுபடி எதையாவது நினைச்சு பயந்து ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது.." என்றபடியே அவள் பக்கத்திலிருந்து தலையணையை எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு சோபாவிற்கு சென்றான்..
அவனை பார்த்தபடியே கட்டிலில் படுத்தாள் தேம்பாவணி..
"அய்யய்யோ" என்று அவள் மறுபடி எழுந்து அமர்ந்து கொள்ள..
"இப்ப என்னடி?" என்றான் அவன் படுத்திருந்த நிலையிலிருந்து தலையை மட்டும் அவள் பக்கமாக திருப்பிக் கொண்டு..
"இல்ல.. நீங்க என்னை முழுசா பாத்துட்டீங்க.."
"ஆமா பப்பி ஷேம் கோலத்துல பாத்துட்டேன்.." என்றவனின் இதழோரம் சிரிப்பு.. இதழ் குவித்து உஷ்ணமான மூச்சை பாம்பு போல் வெளியேற்றினான்..
"அதையெல்லாம் மனசுல இருந்து அழிச்சிடுங்க.."
"hd பிரிண்ட் போட்டு திரும்பத் திரும்ப ஓட விட்டுட்டு இருக்கேன்.. ஈஸியா அழிக்க சொல்ற.. வாய்ப்பில்ல ராசா.."
"அய்யோ..! அப்புறம் நீங்க பாட்டுக்கு உங்க பயாலஜிக்கல் எக்ஸ்பிரிமெண்ட்டை என்கிட்ட ட்ரை பண்ணிட்டா என்ன பண்றது.. முதல்ல நீங்க எழுந்து வெளியே போங்க..!"
"நீ பேசிக்கிட்டே இருந்தா கண்டிப்பா அது நடக்கும்.. ஆமா உன் மார்போட வலதுபுறம் அடிப்பக்கத்தில மச்சமா.. மருவா..?"
"அடப்பாவி.. ரொம்ப கேரிங்கா குளிக்க வச்சு.. அட்வைஸ் பண்றீங்கன்னு பாத்தா இதையெல்லாமா நோட் பண்ணுவீங்க.. நீங்க ரொம்ப பேட் பாய்.. இதை உங்ககிட்டருந்து எதிர்பார்க்கல.."
"ஆம்பளைங்க எல்லாரும் பேட் பாய்ஸ்தான்.. பேச்சு பேச்சா இருந்தாலும் காரியத்துல கண்ணா இருப்போம்.. அதுலயும் நான் ரொம்ப பேட் பாய்.. சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணவே மாட்டேன்.. இப்ப நீ படுத்து தூங்கறியா இல்ல பக்கத்துல வந்து படுக்கணுமா..?"
அடுத்த நொடி படுக்கையில் விழுந்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டிருந்தாள் அவள்..
ஸ்பீட் பிரேக்கர் ஏறி இறங்கியதில் நிகழ்கணத்திற்கு வந்தாள் தேம்பாவணி..
"என்னடி அந்த சொங்கி பயலுகளை இன்னுமா நெனச்சிட்டு இருக்க.. இப்பவும் பயம் உன்னை விட்டு போகலையா!" அவள் முகத்தை தன் பக்கமாக திருப்பினான் வருண்..
அந்த இருவரிடமும் நேருக்கு நேராக பேசி அவர்களை விரட்டியடித்த அந்தத் துணிச்சல்.. இனி தன்னால் எதையும் சமாளிக்க முடியும் என்ற புது கர்வத்தை தந்திருந்தது அவளிடம்..
விவரம் தெரிந்த வயதிலிருந்து தன்னைத் தொற்றிக் கொண்டிருந்த பயமும் பாரமும் முற்றிலுமாக நீங்கிய மகிழ்ச்சியில்.. அவன் தோளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தங்களாய் முத்துக்களை கோர்த்து மாலையாக்கினாள்..
அவசரமாக வண்டியை ஓரங் கட்டினான் வருண்..
"என்ன ஆச்சு..?"
"ம்ம்.. இப்ப குடு.. எந்த டைவர்ஷனும் இல்லாம நிதானமா வாங்கிக்கறேன்.." அவளை இடையோடு பற்றி இழுத்துக் கொள்ள..
"ம்ம்.. உங்க பொண்டாட்டி கிட்ட போய் வாங்கிக்கோங்க." தேம்பாவணி உதட்டை சுழித்து திரும்பினாள்..
"அவ இங்க இல்லையே..! நீதான் என் பக்கத்துல இருக்க.. அப்ப நீதான் முத்தா கொடுக்கணும். தேவையில்லாத நேரத்துல தேவை இல்லாதவங்களை பத்தி பேசக்கூடாது தெரியுமா..?"
"அப்ப அவங்க தேவையில்.." தேம்பாவணி சொல்ல வந்த வார்த்தைகள் அனைத்தும் அவன் உதடுகளுக்குள் முனகல்களாக விழுந்தன..
தொடரும்..

Last edited: