- Joined
- Jan 10, 2023
- Messages
- 109
- Thread Author
- #1
தோன்றும்போதெல்லாம் அவன் தலையை தன் பக்கமாக இழுத்து கன்னத்தில் மொச் மொச்சென முத்தம் வைத்துக் கொண்டே இருந்தாள் தேம்பாவணி..
"ஏய்.. போதுமடி.. என்னை வண்டியை ஓட்ட விடு.." சிரிக்க சிரிக்க முத்த தாக்குதல்களில் வருணின் கன்னங்கள் சிவந்து போயின..
"அதென்ன திடீர்னு நடுவுல மாமனாரேன்னு வார்த்தை வந்துச்சு..!"
"அப்படியா..? நான் சொன்னேன்னா..!"
"நீங்க சொல்லாமத்தான் நான் கேட்கிறேனாக்கும்.."
"தெரியல.. மாமே..! மச்சி..! இந்த மாதிரி மாமனாரேன்னு வார்த்தை வந்துருக்கலாம்.. அப்படியே வந்தாலும் அதுல தப்பு ஒன்னும் இல்லையே..?"
"தப்பு இல்லையா.. ஹலோ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தான் நீங்க என் புருஷன்.. என் அப்பா உங்களுக்கு மாமனார்.. அது ஞாபகம் இருக்கட்டும்.."
"கல்யாணம் தானே பண்ணிக்கிட்டா போச்சு..!"
அவன் கூலான பதிலில் விழி விரித்து பார்த்தாள் தேம்பாவணி..
"உங்களுக்கு என்ன ஆச்சு வருண் சார்.. உங்க பார்வை நீங்க பேசற விதம் எதுவுமே சரி இல்லையே..?"
"இப்பதான் சரியா இருக்கிற மாதிரி தோணுது.. ஏன்.. சிடுசிடுன்னு எரிஞ்சு விழுந்துகிட்டு உன்னை தள்ளி வைச்சு ரொம்ப நல்ல பையனா அட்வைஸ் பண்ணனும்னு ஆசைப்படறியா..?"
அப்படி இல்ல..! என்றவளால் வருண் கண்ணியவானாக விலகி நின்று அறிவுரை மழை பொழிவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. மனம் சலிப்பாக கசந்து வழிந்தது..
"அப்ப கெட்ட பையனா இருந்தா உனக்கு ஓகேவா..!" குறும்பு கூத்தாடியது அவன் கண்களில்..
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே..!"
"என்னடி பிரச்சனை உனக்கு.. ஆமா.. உங்கப்பனை வாய் தவறி மாமனாரேன்னு கூப்பிட்டேன்.. வேணும்னா சொல்லு உன்னையும் இரண்டாந்தரமா கட்டிக்கறேன்.." அவன் கண்சிமிட்டி சிரிக்க..
"அய்யே.. ஆள பாரு ஒன்னும் தேவை இல்ல.. இந்த தேம்பாவணி உங்களுக்கு எப்பவுமே ஸ்பெஷலானவளா இருக்கணும்.. இரண்டாம் தாரமா மூணாந் தாரமா இன்னொருத்தியோட உங்களை பங்கு போட்டுக்க நான் ஆள் இல்லை.. நீங்க எனக்கு மட்டுமே வேணும்.."
"வேணும்னா எடுத்துக்க..!"
அவன் பேச்சு வித்தியாசமாக தெரிந்தது தேம்பாவணிக்கு..
"தேம்ஸ்..?"
"ம்ம்..!"
"இப்ப நீ ஓகே தானே.. இனிமே அவங்க ரெண்டு பேரையும் கண்டு பயப்பட மாட்டியே..!"
தேம்பாவணி சிரித்தாள்..
"எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது.."
"ரொம்ப பயப்படுற சுபாவமுள்ள ஒரு சின்ன பையனை அவனோட அப்பா கொண்டு போய் காட்டுல தனியா விட்டுட்டாராம்.."
"தன்னந்தனியா காட்டுக்குள்ள விடப்பட்ட அந்த பையன் இருட்டு மிருகங்களோட சத்தம்ன்னு ரொம்ப பயந்து போய் அழுதழுது ஒரு கட்டத்துல அந்த தனிமையை ஏத்துக்கிட்டு தன்னை தைரியப்படுத்திக்கிட்டு கண்ண தொடைச்சிட்டு அமைதியா உட்கார்ந்து இருந்தானாம்.."
"அந்த காடு ஒரு நீளமான இரவுக்குள்ள அவனுக்கு பழகி போயிடுச்சு.. விடியற நேரத்துல அங்கிருந்து கிளம்பலாம்னு திரும்பினப்பதான் அவனுக்கு ஒரு உண்மை புரிஞ்சது.."
'அவன் பக்கத்திலேயே கை நீட்டுற தூரத்துல அவனோட அப்பா உட்கார்ந்து இருந்தார்.."
"அவனுக்கு அவ்வளவு ஆச்சரியம்.."
"நீங்க எப்ப வந்தீங்கன்னு கேட்டான்.."
"ராத்திரி முழுக்க நான் உன்கூட தான் உட்கார்ந்திருந்தேன்.. பக்கத்துல நான் இருந்தேன்னு தெரிஞ்சிருந்தா உன்னால இந்த தனிமை பயத்தை சமாளிச்சிருக்க முடியாது. அதனாலதான் நீ அழுதாலும் பரவாயில்லைன்னு மனசை கல்லாக்கிக்கிட்டு நான் அமைதியா இருந்தேன். இப்போ உனக்கு தன்னந்தனியா எதையும் சமாளிக்க கூடிய தைரியம் வந்துருச்சு ஆனா உன் கண்ணுக்கு தெரியாம எப்பவும் நான் உனக்கு துணையா இருப்பேன்னு அவர் சொன்னாராம்.."
"கடவுள் கூட நம்மள முன்னாடி நடக்க விட்டு.. துணையா நம்மை பின் தொடர்ந்து வருவாருன்னு அந்த கதை முடியும்.."
"நீங்களும் எனக்கு அப்படித்தான் வருண்.. தைரியமா போய் எதிர்த்து நிற்க சொன்னீங்க.. ஆனா எனக்கே தெரியாம துணையா என் கூட வந்து நின்னு ஸ்ட்ரென்த்தா என் கூடவே இருந்தீங்க..! இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்னு எனக்குள்ள ஒரு அசாத்திய துணிச்சல் வந்திருக்க காரணம் நீங்கதான் வருண்.. தேங்க்ஸ் டாக்டரே..!" அவன் தோளில் தன் இதழ்களை பதித்தாள்..
வருண் சிரித்தான்..
"அதான் போதும் போதும்ங்கற அளவு நன்றியை கொட்டி தீர்த்துட்டியே..! தேம்ஸ்.. ஒரு விஷயத்தை நல்ல ஞாபகம் வச்சுக்கோ.. நாமளா பிரச்சனையை தேடி போக கூடாது.. அதே நேரத்துல தேடி வர்ற பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடக்கூடாது.. பயந்து ஓடற வரைக்கும் பிரச்சினைகள் நம்மள துரத்திக்கிட்டே இருக்கும்.. ஒதுங்கி போறதுனால பிரச்சனை ஓயாது.. நிம்மதியும் கிடைக்காது.. எதையும் நின்னு ஃபேஸ் பண்ண கத்துக்க.. ஆண்களை விட பெண்கள் அதிக துணிச்சலோட இருக்கணும்.. அடங்காப்பிடாரின்னு பேரெடுத்தா பரவாயில்ல.. ஆனா பயந்தாங்கொள்ளியா இருக்கக்கூடாது.. புரிஞ்சுதா..?"
"நல்லா புரிஞ்சுது அப்புறம் இன்னொரு விண்ணப்பம்.."
"சொல்லுடி செல்லம்.."
"நீ.. நீங்க நேத்து பார்த்ததை.. மறந்துடுங்களேன்.."
"என்ன பார்த்தேன்.. எதை மறக்கணும்..!"தெரிந்து கொண்டே கேட்டான்..
ஓய்ந்து போய் பரிதாபமாய் அவனை பார்த்தாள் தேம்பாவணி..
"நேத்து என்னை குளிக்க வைக்கும் போது.. அந்த மாதிரி பார்த்தது..?"
கண்கள் சுருக்கியிருந்தவனின் முகம் அவள் பேச்சில் மலர்ந்து இதழ்கள் புன்னகைத்தன..
"கண்கொள்ளாக் காட்சி.. மறக்க சொல்றியே.. மனசாட்சியே இல்லையா உனக்கு..!"
"நீங்க அனாடமி கிளாஸ்ல பார்த்த ஒரு மாடல் பீஸ்னு நினைச்சு அதையெல்லாம் தூக்கி தூர போட்டுடுங்களேன்.."
"அதுவும் இதுவும் ஒண்ணா..! அனாடமி கிளாஸ்ல பிளாஸ்டிக் மாடல் வச்சு எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க.. இங்க ஒரிஜினல் பீஸ்.. வெள்ளையா கும்முனு.." என்றவன் தேம்பாவணியை ஏற இறங்க பார்த்து எச்சில் விழுங்கி பெருமூச்சு விட்டான்..
"என்ன மூச்சு பலமா அடிக்குது.."
"பெர்முடாஸ் முக்கோணம் தன்னை சுத்தி வரும் எல்லாத்தையும் உள்ள இழுத்துக்கும்ன்னு கேள்வி பட்டுருக்கேன்.. முதல் முறையா பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.. ப்பாஆஆ ரொம்ப ஆபத்தான பகுதி.. மனசு அங்கேயே புதைஞ்சு போச்சு போ" புதையலை கண்ட பிரமிப்பு இன்னும் அவன் கண்களில் இருந்து நீங்காததை போல் தெரிந்தது..
தேம்பாவணிக்கு ஒன்றும் புரியவில்லை..
"பெர்முடாஸ் முக்கோணமா..? என்ன பாத்தீங்க..!"
"இப்போதைக்கு பார்க்க மட்டும்தான் கொடுத்து வச்சிருக்கு..!" அனுபவித்து அறிய முடியாத ஏக்கம் அவன் குரலில்..
"போதும் போதும் பாத்ததே தப்புன்னு சொல்றேன்.. நீங்க அதுக்கு மேலயும் ஓவரா போறீங்க.."
"யாரு நானா..! மடி மேல உக்காந்து கழுத்த கட்டிக்கிட்டு மூக்கோட மூக்கு உரசி.. புல்.. புஷ்.. வித்தையெல்லாம் கத்து தந்தது நீயா நானா.. உன்னால தான் ரிமோட்டுக்கு பேய் பிடிச்சு போச்சு.. இப்ப அது தன் தாபத்தை.. ச்சீ.. தாகத்தை தீர்த்துக்க கன்னி பொண்ணை காணிக்கையாகணுமாம்.."
ஆங்..! பேய் என்றதும் தேம்பாவணி திருதிருவென விழிக்க..
"ஆமா..! எல்லாத்தையும் ஆரம்பிச்சு வச்சது நீதான்.. ஒழுங்கா முடிச்சு விட்ரு.." என்றான் கண் சிமிட்டி..
"இப்படி எல்லாம் நீங்க பேசக்கூடாது.."
"அப்ப நீ பேசலாமா..?"
"நான் பேசலாம்.. நீங்க பேசக்கூடாது.."
"இதென்னடி வம்பா போச்சு.. நான் ஏன் பேசக்கூடாது.. ரத்தம் சதை நரம்பு ஹார்மோன்ஸ் பீலிங்ஸ்.. எனக்கும் இருக்கு.."
"ஆனா நீங்க கல்யாணம் ஆனவர்.."
"இருந்துட்டு போகட்டும்.. கல்யாணம் ஆனவன்னா கண்டபடி பேச கூடாதா என்ன..?"
"பொண்டாட்டிக்கு துரோகம் பண்றீங்க..!"
"வேணும்னா பொண்டாட்டி கிட்ட அனுமதி வாங்கிட்டு வந்து உன்னோடு ரொமான்ஸ் பண்ணட்டுமா..!"
"பாத்தீங்களா?கல்யாணமானவருக்கு காதல் வராது.. ரொமான்ஸ் மட்டும் தான் வரும்.."
"ஏய்.. லூசு பாப்பா.. உன்னை பிடிச்சிருந்தாத்தான் கிஸ் பண்ண முடியும்.. ஹக் பண்ண முடியும்.. இதோ இப்படி கடிக்க முடியும்.." என அவளை தன் பக்கமாக இழுத்து அணைத்து ஒவ்வொன்றையும் செய்து காட்ட..
சிவந்த கன்னத்தை தேய்த்துக்கொண்டு "ரோட்ட பார்த்து வண்டியை ஓட்டுங்க டாக்டர் சார்.." என்றாள் தேம்பாவணி..
"ஆனா காதல்..?" என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிட்டவில்லை..
"நான் செய்ய வேண்டியதையெல்லாம் இவர் செய்யறாரு..! என்னென்னமோ நினைச்சிருந்தேனே.. என்னோட பிளான் டோட்டலா ஃப்ளாப்.." தேம்பாவணி பரிதாபமாய் முழிக்க..
"என்னடி பிரேக் விட்டுட்டியா..! உன் நன்றி முத்தங்களுக்காக என் கன்னம் காத்து கிடக்கு..!" என்ற தலை சாய்த்து கன்னத்தை அவளிடம் காட்டினான் வருண்..
"போதும் போதுங்கற அளவு நன்றி சொல்லியாச்சு.. என்னை வீட்ல கொண்டு போய் விடுங்க.. எனக்கு ஆன்ட்டி கிட்ட போகணும்.. வெண்மதி அக்கா முகத்தை பார்க்கணும்.."
"என்னடி அம்மா கிட்ட போகணுங்கற குழந்தை மாதிரி அடம் பிடிக்கிற..!"
"அப்படித்தான் வச்சுக்கோங்க.."
"அப்ப நான் வேண்டாம்மா உனக்கு..?" உரிமை கோபத்தில் முகம் சிறுத்து அவளைப் பார்த்தான்..
அந்த கோபம் அவளுக்கு பிடித்திருந்தது..
கண்கள் பக்கவாட்டில் சுருங்க மூக்கை சுருக்கி சிரித்தவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள இதுதான் வேண்டும் என்பதாய் மெல்ல சிரித்து அமைதியாக காரை செலுத்தினான் வருண்..
அதற்கு நேர் மாறாக சிக்னலில் கூட நிற்காமல் உச்சகட்ட கோபத்தோடு காற்றை கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்தது அந்த கார்..
கேஷவ் முகம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் தகதகவென சிவந்து போயிருக்க.. தாங்க முடியாத வலியோடு இருக்கையில் நெளிந்த படி அமர்ந்திருந்தான் சத்யா..
"அங்கிள் ஏதாவது ஹாஸ்பிடல்ல வண்டிய நிறுத்துங்க..!" என்றவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவன்..
"பண்றதைல்லாம் பண்ணிட்டு இப்போ உனக்கு ட்ரீட்மென்ட் ஒன்னு தான் குறைச்சல்.. உன்ன மாதிரிதானே நானும் வலியோடு உட்கார்ந்திருக்கேன்.. ஒழுங்கு மரியாதையா அமைதியா வா இல்லன்னா நடக்கறதே வேற..!" சீற்றத்தோடு பற்களை கடித்தான்..
"இப்படியே விட்டா உடம்பு சீழ் பிடிச்சு செத்துப் போயிடுவேன்..!"
"செத்துப் போ.. ஹாஸ்பிடல்ல எப்படி அடிபட்டதுன்னு கேட்பாங்க.. வெட்கங்கெட்டு நடந்ததை சொல்லி அவமானப்பட சொல்றியா..!
"ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்.. ஆனா என்னால வலி தாங்க முடியல.. நீங்க வரலைன்னா பரவாயில்ல நான் ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கத்தான் போறேன்.."
"நீயெல்லாம் எந்த ஜென்மத்துல சேர்த்திக்கை.. எல்லாத்துக்கும் காரணமே நீதான்.. அன்னைக்கு நீ அவளை கிளப்புக்கு கூட்டிட்டு போகாம இருந்திருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது.. இந்நேரம் சங்கிலி கட்டி வைக்காத நாயா நமக்கு அடங்கி இருந்துருப்பா.. கஷ்டமில்லாம நாளைக்கு ஊட்டிக்கு கூட்டிட்டு போய் அக்ரீமெண்ட் வேலைய முடிச்சிருக்கலாம்.. முட்டாள்தனமா எல்லாத்தையும் சொதப்பிட்டு பிரச்சனையை இந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டது நீதான்.. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் எப்படி பேச முடியுது உன்னால.."
சத்யாவிற்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது.. ஏற்கனவே வருண் தந்த வலி.. இதில் கேஷவ் பேசுவதை வேறு கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.. தன்மானம் சுட்டது..
"ஹலோ அங்கிள் என்ன..? ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போறீங்க.. சரி நான்தான் கோழை.. நீங்க வீரமானவராச்சே.. அந்த வருணை நாலு சாத்து சாத்திட்டு போய் உங்க பொண்ண கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதானே.. என்னை மாதிரி நீங்களும் அடி வாங்கி ஒன்னும் பண்ண முடியாமதான ஒக்காந்து இருக்கீங்க.. அசிங்கமா..!" அவன் குரலில் அலட்சியம்..
கடைசியில் அவன் உதிர்த்த அசிங்கமா என்ற வார்த்தை கேஷவ்வின் சுயமரியாதையை தூண்டிவிட..
"வாய மூடுடா.. என்னையும் உன்னையும் ஒப்பிடாதே.. நீ கேவலமான பிறவி.. பொண்டாட்டிய அடக்கி வச்சு அவளோட வாழ துப்பில்லை.. உனக்கு போய் அவளை கட்டி வச்சேன் பாரு என்ன சொல்லணும்.. ஒரு பொம்பளைய திருப்தி படுத்த முடியுமாடா உன்னால.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..?"
"அங்கிள் வேண்டாம்..! அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை.."
"என்னடா பண்ணுவ..! உன் கதையை எடுத்து விட்டேன்னு வை அப்புறம் பொழப்பு நாறிடும்.. மரியாதையா அடங்கி அமைதியா உட்காரு.."
"டேய் என்னடா..! ஆமா நான் அப்படித்தான் அதுல என்னடா பிரச்சனை உனக்கு.. உன்ன மாதிரி கீழ்த்தரமான ஆளுங்களால தான் எங்களால வெளிப்படையா எந்த ஆசைகளையும் வெளிப்படுத்த முடியல.." என்று கண்கள் சிவக்க கத்தினான்..
இவ்வளவு நாள் பவ்யமாக கூஜா தூக்கிய சத்யா இன்று அதிகமாக குரல் உயர்த்தி பேசியதில் ஏகத்துக்கும் கொதிப்பானான் கேஷவ்..
"ஏய்.. என்ன மரியாதை குறையுது..! நீயும் அந்த அரவிந்தனும் ஒண்ணா இருக்கற அந்த ஒரு வீடியோ போதும்.. ஏற்கனவே உன் வீட்ல உன்னை ஒதுக்கி வச்சுட்டாங்க.. உன் பிசினஸ்.. இமேஜ்.. பேக்ரவுண்ட் நீ சம்பாதிச்சு வைச்சிருக்கிற நல்ல பேரு எல்லாத்தையும் ஒன்னு விடாம இந்த ஒரு வீடியோவால அடிச்சு நொறுக்க முடியும் பாக்கறியா..?" என்று மொபைலில் இருவரும் ஒன்றாக இருந்த ரகசிய வீடியோவை ஓட விட.. சத்யாவிற்கு கோபம் கபாலத்திற்கு ஏறியது.. தன் அந்தரங்கத்தை படம் பிடித்ததே தவறு.. இதில் அதை வைத்து மிரட்டுகிறான் என்று ஆக்ரோஷம்..
"டேய் ஃபோனை குடுடா.." என்று அவன் கையிலிருந்த போனை பறிக்க போக.. அவன் மறுக்க.. ஸ்டியரிங்கை திருப்பி இருவருமாக சண்டையிட்டுக் கொண்டு.. எதிரே சிவனே என்று நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியோடு மோதி பெரும் விபத்துக்குள்ளாகி இவர்களின் கார் வெடித்து சிதறியது..
காரின் உதிரி பாகங்களோடு சேர்த்து இவர்களின் உடல்பாகங்கள் கூட கிடைக்காத அளவிற்கு நெருப்பின் நாக்குகளுக்கு இரையாகி சாம்பலாக கரைந்து போயினர் கேஷவ்வும் சத்யாவும்..!
தொடரும்..

Last edited: