- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
அம்மாவிடம் புகார் சொன்னாலும் சரி.. அல்லது நெருங்கிய் தோழிகளிடம் ஆற்றாமையோடு புலம்பினாலும் சரி.. கேட்கப்படும் கேள்விகள் மாற்றி மாற்றி இந்த நான்காகத்தான் இருக்கும்..
"உன்னை அடிச்சு கொடுமை படுத்துறாரா.. சந்தேகப்பட்டாரா.. வேற ஏதாவது ஒரு பொண்ணு கூட தொடர்பு வைச்சிருக்காரா.. குடிச்சு சூதாடி காசை வீணாக்கறாரா..?"
இல்லை.. என்று நான்கு முறையும் தலையாட்டி வைக்க வேண்டியிருக்கிறது..
அப்புறம் என்ன.. "எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. உன் மேல இப்ப ஆர்வம் இல்லைன்னாலும் என்னைக்காவது ஒருநாள் உன்னை கண்டிப்பா பிடிக்கும்.. பொறுமையா காத்திருக்கணும்.. இப்படி ஒரு புருஷன் அமையறது கஷ்டம்.. எல்லாத்துக்கும் அவசரப்பட்டா முடியுமா..?"
"ஆனால் அவளுக்குள் விழுங்கப்பட்ட அவன் பேசிய கடும் வார்த்தைகள்..?"
"யார்தான் பேசல.. என் புருஷன் கூட தான் நேத்து கெட்ட கெட்ட வார்த்தையா பேசினான்.. குடிச்சிட்டு வந்து என் முடிய பிடிச்சு இழுத்து தெருவுல போட்டு அடிச்சான்.. அடுத்த நாளே வந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.. புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்டை வர்றதும் சமாதானம் ஆகறதும் சகஜம்.. எல்லாத்துக்கும் மூஞ்சியை தூக்கிட்டு பொறந்த வீட்டுக்கு வந்துட்டா.. அப்புறம் உன் வாழ்க்கைதான் நாசமா போகும்.. பொண்ணுக்கு பொறுமை அவசியம்.. உன் தங்கச்சி இப்பவே வயசுக்கு வர்ற மாதிரி இருக்கா.. இந்த நிலையில உன் புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டு வீட்ல வந்து உக்காந்துட்டா.. குடும்ப நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா..? உனக்கடுத்து இருக்கிற பிள்ளைகளுக்கு நல்லது நடக்க வேண்டாமா.."
டெய்லர் கடையில் அம்மா தைத்துக் கொண்டிருக்க.. ஜாக்கெட்டுக்கு காஜா எடுத்துக் கொண்டிருந்த ஜூனியர் பெண்மணி நீலா.. மாதவிக்கு நீளமாக அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்..
"நான் சொல்ல வேண்டியதை அவ சொல்லிட்டா.. கேட்டு நடக்கற வழியை பாரு" என்பதைப்போல் கீதாவின் பார்வை..
மகள் சஞ்சலத்தோடு சதா புலம்பிக்கொண்டே இருப்பதில் நம்பிக்கை இழந்து சோர்ந்து போயிருந்தாள் கீதா.. மகளின் வாழ்வு சிறக்கவில்லையே என்ற கவலை.. இத்தனைக்கும் வீரியம்மிக்க பாதி விஷயங்களை மறைத்து தான் மாதவி தன் ஆற்றாமையை கொட்டியிருந்தாள்..
கண்ணே மணியே முத்தே.. அமுதே.. உன்னால் நான்.. உனக்காக நான்.. என்று கொஞ்சிய தாய்.. திருமணத்திற்கு பின் "உனக்கடுத்து ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களே மாது.. அவங்க வாழ்க்கையையும் பாக்கணுமா இல்லையா?.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போடா.. எல்லாத்தையும் பெரிசு படுத்தாதேடா." என்று பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்காமல் தன் புலம்பல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணுவதுதான் வினோதமாக தெரிகிறது.. ஒருவேளை அம்மா சொல்வது போல் எல்லா பெண்களின் திருமண வாழ்க்கையும் இப்படித்தானா..? கி.மு.. கி.பி என்பதை போல்.. திருமணத்திற்கு முன்.. திருமணத்திற்கு பின்.. என்று பெண்களின் வாழ்க்கை பெரும் மாற்றங்களோடு பிரிக்கப் படுகிறதா..? காடும் கரடு முரடான கற்களும் என அந்த பாதையில்தான் நடந்து செல்வதுதான் தி.பி பயணமா?
அனுசரிச்சு போ.. பொறுத்துப்போ.. என்பது திருமணமாகும் பெண்களுக்கு சொல்லப்படும் யூனிவர்சல் கோட் வேர்ட்டா தெரியவில்லை..
"சரி நீ கிளம்பு.. இதுக்கு வேற உன் மாமியார் ஏதாவது சொல்ல போறாங்க.." கீதா அவசரப்படுத்தவும்
"என்னை இங்கிருந்து விரட்டி அடிக்கிறதில்லையே குறியா இருங்க.." பாவப்பட்ட அன்னையிடம் தனது ஆற்றாமையை காட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மாதவி..
கடைசியில் அம்மா சொன்னது போல்தான் ஆனது.. "எப்பவும் போய் ஆத்தா வீட்ல உக்காந்துக்கிட்டா வீட்டு வேலையை யார் செய்யறது.. எச்ச பாத்திரமும் அழுக்குத் துணியுமா குமிஞ்சு கிடக்கு.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம உன் பொண்டாட்டி ஆத்தா வீட்ல போய் உக்காந்துகிட்டு நம்ம வீட்ட பத்தி குறை சொல்றதையே பொழப்பா வச்சிருக்கா.." சின்ன மகனிடம் தன்னை பற்றி புகார் சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டாள் மாதவி..
அவன் எந்த மனநிலையில் இருந்தானோ.. "ப்ச்.. அவள பத்தி என்கிட்ட பேசாதீங்க" ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டு தன் அறைக்கு சென்றிருந்தான்..
மாமியாரின் முறைப்பும் ஓரகத்தியின் ஏளன பார்வையும் சுட்டெரிக்கிறது.. கணவனின் துணை இருந்திருந்தால் இந்த இருவரையும் எதிர்கொள்ளும் சூட்சுமமும் பக்குவமும் தெரிந்திருக்கும்..
ஆழ்ந்து யோசிக்கிறாள் மாதவி.. காரண காரியமில்லாமல் ஒருவரை வெறுக்க முடியுமா.. நிச்சயம் அவரிடம் காரணம் இருக்கிறது..
காதல் தோல்வி..?
அப்படித்தான் இருக்க வேண்டும்..
பக்கத்து வீட்டில் மெதுவாக பேச்சை வளர்த்தி அது பற்றி விசாரித்தாள்..
"ஆமா மாதவி.. நான் சொன்னேன்னு உன் புருஷன் கிட்ட கேட்காதே..!! அப்புறம் பெரிய பிரச்சனையாகி உன் மாமியார் என்கிட்ட வந்து சண்டை போடும்.."
"இரண்டு தெரு தள்ளி மாடி வீட்டு கவுன்சிலர் பொண்ணு.. ரோஷினி.. அந்தப் பொண்ணும் உன் புருஷனும் உயிருக்கு உயிரா காதலிச்சாங்க.. கடைசில விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு போய் ஜாதியை காரணம் காட்டி.. அந்தப் பெண்ணை ரகசியமா இன்னொரு பையனுக்கு கட்டிக் கொடுத்துட்டாங்க.."
"இந்த புள்ள அவங்க வீட்டுக்கு முன்னாடி போய் நின்னு ஒரே கலாட்டா பண்ணிடுச்சு.."
"ஆள வச்சு அடிச்சு கந்த துணியா கொண்டு வந்து வீட்டில் போட்டாங்க.. அந்தப் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச கையோட வெளிநாட்டுக்கு போயிடுச்சு.. இந்த பையன்தான் அந்த பொண்ண நெனச்சு பைத்தியமா திரிஞ்சான்.. கடைசில இப்படியே இருந்தா எங்க புள்ளைய பறி கொடுத்துடுவோமோன்னு ஜெயந்தி மிரட்டி உருட்டி அழுது எப்படியோ அந்த பிள்ளைக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சுடுச்சு.."
மாதவி எங்கோ வெறித்தபடி நின்றிருந்தாள்..
"பாவம் ரொம்ப நல்ல பையன்.. தான் உண்டு.. தன் வேலை உண்டுன்னு இருப்பான்.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு ரொம்ப ஒடஞ்சு போயிட்டான்.. முன்னாடியெல்லாம் குடியும் போதையுமா தெருவுல விழுந்து கிடப்பான்.. பாக்கவே பரிதாபமா இருக்கும்.."
"கல்யாணத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்து.. இப்பதான் ஏதோ தொழில் தொடங்கற விஷயமா சுத்திட்டு இருக்கான்.. நீதான் இனி அவனை பார்த்துக்கனும்.. கொஞ்சம் கூட இருந்து அனுசரனையா கவனிச்சுக்கோ மாதவி.. நீயும் அவனை கை விட்டுட்டா மறுபடி மனசு உடைஞ்சு குடிச்சிட்டு தெருவுல கிடைப்பான்.. பாத்துக்கோம்மா.." என்று பக்கத்து வீட்டு ரங்கநாயகி சொன்ன பிறகு.. மனதில் இனம் புரியாத வேதனை வலி..
ஆரம்பத்தில் தன் கணவன் இன்னொருத்தியை உயிருக்கு உயிராக நேசித்திருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பரிதவித்தாள்.. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் காதல் தோல்வியின் வலியை அவளும் உணர்ந்து அவனுக்காக பரிதாபப்பட்டாள்.. நடந்து முடிந்ததை மறந்துவிட்டு இன்னொரு அழகான வாழ்க்கை தனக்காக காத்திருக்கிறது என்பதை நம்பகத்தன்மையோடு உணர்ந்து கொண்டு ஹரிச்சந்திராவின் மனம் மாறிவிட்டால் போதும்.. எல்லாம் சரியாகிவிடும்.. என்று நம்பினாள்..
அந்த ரணம்தானே என்னையும் சேர்த்து காயப்படுத்தி இருக்கிறது.. ஹரிச்சந்திராவின் நிலை உணர்ந்து அவனை மன்னிக்க தயாராக இருந்தாள் மாதவி.. ஆனால் அவன் மனம் மாறும் வரை அவகாசம் கொடுக்க நினைக்கிறாள்.. இல்லற வாழ்க்கைக்கு அவர் தயாராகும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.. அவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தள்ளி நிற்க வேண்டும்.. என்று முடிவு செய்திருந்தாள்.. ஆனால் அதற்கான அவசியம் ஏற்படாமல் வெகு விரைவிலேயே உடலளவில் அவர்கள் இணைந்து விடும் நாள் வரப்போகிறது என்பதை மாதவி அறியவில்லை..
சரிதாவின் தங்கைக்கு திருமணமாம்.. சரிதாவின் தங்கையை ஹரிச்சந்திராவிற்கு கொடுப்பதாக பேசி வைக்கப்பட்டது.. அதற்குள் ஹரிச்சந்திரா பணக்கார வீட்டுப் பெண் ரோஷினியை காதலித்ததில் அத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.. காதல் தோல்வியில் குடித்து சீரழிந்து நிற்கும் கொழுந்தனாருக்கு தன் தங்கையை திருமணம் செய்து கொடுக்க சரிதா தயாராக இல்லை..
குடும்பமே ஒன்றாகத்தான் திருமணத்திற்கு சென்றார்கள்.. இரவிலேயே பயணம்.. மண்டபத்திலேயே தங்கி காலையில் திருமணத்தை பார்த்துவிட்டு.. வரவேற்பு முடிந்து இரண்டு நாட்கள் தங்கி வீடு வருவதாக திட்டம்..
அங்கே இருக்க பிடிக்காமல் அவர்களோடு ஒன்ற முடியாமல் மாலை மங்கிய பின் வீட்டிற்கு திரும்பி இருந்தாள் மாதவி..
எல்லோரும் பட்டை பட்டையாக.. அடுக்கடுக்கான நகைகளை அணிந்து வர.. ஒற்றைச் செயினும் குட்டி ஜிமிக்கியும்.. சில்க் திரெட் வளையலுமாய் வந்து நின்ற மாதவியை.. அவர்கள் துளி கூட மதிக்காததே.. மாதவி அங்கிருந்து புறப்பட காரணம்..
ஜெயந்திக்கு மாதவியை மருமகள் என்று அறிமுகப்படுத்தி வைக்கவே முகம் அஷ்ட கோணலாகி போகிறது.. வந்திருந்த சொந்தமோ தலை முதல் கால் வரை அவளை அளவிட்டு மதிப்பெண் போட்டு கொண்டிருந்தது.. மனிதருக்கு மரியாதை இல்லை.. அணியும் தங்க நகைகளுக்க தான் இங்கே ஏக மரியாதை.. கழுத்தில் தொங்கும் தங்கத்தின் மதிப்பைக் கொண்டு மனிதர்களை எடைபோடும் கூட்டம்..
சரிதாவே சிறியதாக ஆரம்பித்து வயிற்றில் வந்து முடியும் அளவிற்கு அடுக்கடுக்காக எத்தனை கழுத்தணிகளை அணிந்திருந்தாள்.. தண்டு தண்டாய் வளையல்கள்.. முத்து முத்தாய் தொங்கிக் கொண்டிருந்த தங்க ஜிமிக்கி மிகப்பெரியது.. முப்பதாயிரத்தை தாண்டிய பட்டுடுத்தி அட்டகாசமாய் டாலடித்தார்கள் பெண்கள்..
மாதவி அணிந்திருந்ததும் பட்டுப்புடவைதான் ஆனால் கல்யாண பட்டு.. வேறு பட்டுப் புடவைகள் வாங்க வாய்ப்பு கிட்டவில்லை.. அடர்ந்த சரிகை வைத்த கல்யாண பட்டு.. அவளை ஆடம்பரமாய் காட்டினாலும்.. நகைகள் இல்லாத நிலை.. அவள் ஏழ்மையின் எளிமையை பறைசாற்றியது..
"தங்கத்துக்கு வக்கில்லை சரி.. கவரிங் நகைகள்தான் ஆயிரத்திலும் ரெண்டாயிரத்திலும் ஏராளமா விக்குதே..!! கழுத்து நிறைய வாங்கி போட்டுக்க வேண்டியது தானே..!!" அக்ஷயா காதோரம் நசநசத்தாள்.. மாதவிக்கு முகம் இருண்டு போனது..
மனமிருந்தால் மார்க்கமுண்டு.. நாத்தனார் மாமியார்.. அன்பு உள்ளத்தோடு நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டது போக மிச்சத்தில் ஆளுக்கு இரண்டு தங்கச்சங்கிலியும் கை வளையலும் கொடுத்து மாதவியை தங்கத்தில் மின்ன வைத்திருக்கலாம்.. யாரோ ஒருத்திக்கு எங்கள் நகையை கொடுத்து அவள் மரியாதையை தூக்கி நிறுத்த வேண்டுமா என்ற ஆணவம்.. அவளும் அந்த குடும்பத்தில் ஒருத்தி என்பதை மறந்து போனது..
ஒரு படத்தில் சாட்சி கை எழுத்து போட வந்த சந்தானத்தை வேண்டாம் என்று.. பாதிக்கப்பட்ட ஒருவன் தூரத்திலிருந்து சத்தம் போட்டு தடுப்பான்.. அதுபோல் இனி யாராவது ஒரு குண்டுமணி தங்கமும் வேண்டாம்.. கட்டிய புடவையோடு பெண்ணை அனுப்புங்கள் என்று பெண் கேட்டு வந்தால் தயவு செய்து நம்பாதீர்கள்.. வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம் என்று கத்த வேண்டும் போல் தோன்றியது..
அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.. அதென்ன வீட்டுக்கு வந்த புது மருமகளை தலை முதல் கால் வரை ஸ்கேனர் போல் அத்தனை பேரும் ஆராய்வது..?
"எந்த ஊரு மா..!! சொந்த வீடா..? கல்யாணத்துக்கு எத்தனை சவரன் நகை போட்டாங்க.. காதுல கழுத்துல ஒண்ணுமில்லையே.. உன் மாமியார் அவ்வளவு நகை போட்டுருக்காளே.. ரெண்டு மூணு உருவி நீ போட்டுக்க வேண்டியது தானே..ஹாஹாஆ.." பதமாக ஊசியால் குத்தி விட்டு அதை நகைச்சுவையாக மாற்றி சிரிக்கும் திறமை இந்த கூட்டத்துக்கு உண்டு..
இறுதியில் கல்யாணம் முடிந்து பந்தியில் அமர்ந்து இரண்டு இட்லிகளை உண்டு முடித்த கையோடு..
"அத்தை தலை வலிக்குது.." என்னால இங்க இருக்கவே முடியல.. என்ற தலையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து செல்வதற்கான.. மூலதன வார்த்தைகளை உதிர்த்தாள்..
"அதென்ன..? ஓரகத்தி தங்கச்சியோட கல்யாணத்துக்கு வந்துட்டு உடனே புறப்படுறேன்னு சொன்னா எப்படி..!! புருஷனும் பொண்டாட்டியும் பெருசா மொய்யும் வைக்கல.. பரிசும் கொடுக்கல.. கூடமாட இருந்து கல்யாணத்தை நடத்தி தரணும்னு ஒரு அக்கறையும் இல்லைன்னா எப்படி..!! சாயந்திரம் ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு போகலாம் இரு.." மாமியார் போக வேண்டாம் என்று உத்தரவு போட்ட பிறகு உஷ்ண பூமியில் ஒன்ற இயலாமல் திரிந்தாள்.. மற்றவர்கள் ஜோடியாக நிற்க இவள் மட்டும் தனித்து.. தவித்து..!!
பட்டு வேட்டி சட்டையில் கட்டுமஸ்தான உடலோடு.. அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தவனை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள்..
காலையில் திருமணத்திற்கு வந்த ஹரி மாதவியின் திசைப்பக்கம் கூட திரும்பாமல் தனியாகவே சுற்றிக் கொண்டிருக்கிறான்.. இப்படியே கூட்டத்தின் நடுவில் எளக்காரப்படுத்தப்பட்டு தனித்துவிடப்பட்டு மனநோயாளி ஆகி விடுவோமோ என்ற பயம் அவளுக்கு..!!
மாலை 7 மணி வரைக்கும்.. காலத்தை நெட்டி தள்ளி பொழுதை போக்கினாள்..
வேலை செய்ய அங்கு ஆட்களா இல்லை.. இருந்தாலும் சம்பளமில்லாத பணியாள் கிடைத்த ஜோரில் மாதவியை வேலை ஏவியே கசக்கிப் பிழிந்தாள் சரிதா.. சரிதா வீட்டில் ஒரு சின்ன வாண்டு கூட மாதவியை மதிக்கவில்லை.. இல்லாதபட்டவர் என்றாலே எல்லோருக்கும் இங்கே எகத்தாளமும் எளக்காரமும்தான் போலிருக்கிறது..
இப்படிப்பட்ட இடத்தில் வாக்கப்பட்டு வந்ததற்கு.. தினச் சம்பளம் வாங்கும் ஒரு கூலி தொழிலாளியை மணமுடித்திருக்கலாம்.. வாழ்க்கை எத்தனையோ சொர்க்கமாய் இருந்திருக்கும் என்று தோன்றியது..
முழு குடும்பமும் அன்று இரவு தங்கி அடுத்த நாள் புறப்படுவதாக பேசிக் கொண்டிருக்க.. அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மூச்சு முட்டியது மாதவிக்கு.. வரவேற்பு முடிவதற்கு முன்பே அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்..
"ரொம்ப தலை வலிக்குது.. உடம்பு சரியில்ல.." என்று ஏதேதோ காரணங்கள் சொல்ல.. புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தார் மாமியார்..
பரிகாச பேச்சுகளை கேட்கும் நிலைமையில் இல்லை அவள்.. ஒவ்வொரு கணமும் அங்கிருப்பது நெருப்பாய் உரசியது.. புறப்பட்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள்..
திருமண வீட்டில் சாப்பிடவில்லை.. பசி வயிற்றை கிள்ளியது.. சாப்பிட தோன்றவில்லை.. தக்காளி வெங்காயம் அரிசி பருப்பு என அத்தனையும் அளந்து வைத்துவிட்டு அல்லவா போயிருக்கிறாள் மாமியார்.. எதையும் எடுக்க முடியாது..
அம்மாவிடமிருந்து வாங்கிய பணத்தில்.. ஒரு பாக்கெட் பால் வாங்கி காபி போட்டு பிஸ்கட் தோய்த்து தின்று முடித்திருந்தாள்..
ஜெயந்தி வீட்டில் இருந்திருந்தால் இதுபோல் இஷ்டப்பட்டதை வாங்கி சாப்பிட முடியாது.. தன் சொந்த பணத்தில் ஒரு முறுக்கு பாக்கெட் வாங்கினாலும் அது ஜெயந்தி கைகளுக்கு போய் அதன் பின்பு தான்.. ஒன்று இரண்டோ கணிசமான எண்ணிக்கையில் மாதவிக்கு வந்து சேரும்..
மிச்சமனைத்தும் சில்வர் சம்படத்தில் அடைக்கப்பட்டு அலமாரியில் குடிபெயரும்.. மாதவியை தவிர மற்ற அனைவருக்கும் காபி டிபன் நேரத்தில் தாராளமாய் பகிர்ந்தளிக்கப்படும்.. இளைய மகனின் தலையை தடவி கொடுத்து கரிசனம் காட்டும் இந்த ஜெயந்திதான் அவன் மனைவி.. மருமகள் எனும் ஸ்தானத்தில் இருக்கும் மாதவியை புழு பூச்சி அளவிற்கு கூட மதிப்பதில்லை.. காரணம் அவள் வயிற்றில் இன்னும் புழு பூச்சி உண்டாகவில்லையாம்..
ஜெயந்தியும் அக்ஷயாவும் சாடை மடையாக பேசும் குத்தல் பேச்சுக்களை யோசித்து கொண்டிருந்தால் ரத்த அழுத்தம் எகிறி போகும்.. தேகம் ஓய்வுக்கு மன்றாட பெருமூச்சு விட்டு கட்டிலில் சாய்ந்தாள் மாதவி..
அரை மணி நேரத்தில் ஹரிச்சந்திரா வந்து சேர்ந்திருந்தான்.. தள்ளாடியபடிதான் வீட்டிற்குள் நுழைந்தான்..
"ஐயோ குடித்திருக்கிறாரா.. இவர்? மாதவியின் இதயத்தின் ஒரு கலவரம் மூண்டது..
இந்த கண்றாவி பழக்கத்தையெல்லாம் நிறுத்தி விட்டதாக பேசிக் கொண்டார்களே..!! திருமணமான நாள் முதல் இன்று வரை குடித்து விட்டு வந்ததாக தெரியவில்லையே..? இன்று மீண்டும் ஏன் இந்த பழக்கம்.. மீண்டும் காதலியின் நினைவு வந்து விட்டதா..?
படுக்கையறைக்குள் நுழைந்தான் அரிச்சந்திரா..!! மாதவி எழுந்து நின்றாள்..
"வாங்க.. சாப்பிடறீங்களா.. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா..?" மாதவி கேட்க கட்டிலை பிடித்த படி தள்ளாடி நின்று கொண்டிருந்தான் அவன்..
அவன் மௌனத்தில் பெருமூச்சு விட்டு.. சாப்பாடு எடுத்து வர அவனை கடந்து சென்ற நேரத்தில் அவள் கரத்தை பற்றியிருந்தான். ஹரிச்சந்திரா..
சட்டென அவள் தேகம் சிலிர்த்தது.. இப்படி ஒரு ஸ்பரிசத்தை அவனிடமிருந்து இதுவரை உணர்ந்ததில்லையே.. கைவிரல் நகம் கூட அவள் மீது ஆசையாக பட்டதில்லை.. வெட்கம் விட்டு சொல்லப் போனால் கணவனின் ஆசை அணைப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை..
பற்றியிருந்த கரத்தை இழுத்து.. அவளை தன்னோடு மோதச்செய்தவன்.. "என்.. என்னங்க.." அவள் திணறிக் கொண்டு அழைக்கும் முன்னே இறுக அணைத்திருந்தான்..
"என்னங்க என்ன பண்றீங்க.. என்னை விடுங்க ப்ளீஸ்.." திடீரென.. இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டதில் அவளுக்குள் இனம் புரியாத உணர்ச்சி மின்னல்கள் தெறித்தன.. ஒரு பக்கம் இன்பம் மறுபக்கம்.. மூச்சடைப்பதாக உணர்ந்தாள்.. அவனிடமிருந்து திமிறி விடுபட நினைத்தாள்..
திடீரென அவள் தோள் வளைவில் அழுது கொண்டிருந்தான் ஹரிச்சந்திரா..
"சாரி.. சாரி.. சாரிம்மா.. என்னை மன்னிச்சிரு.. ப்ளீஸ் ப்ளீஸ்.. நீயும் என்னை விட்டு போயிடாதே.." என்று இதுவரை அவள் அறிந்திராத உருக்கமான குரலில்.. கழுத்து வளைவில் முத்தமிட்டு குலுங்கி அழுதான்..
அவள் கன்னங்களை கையிலேந்தி முகம் முழுக்க முத்தமிட்டான்.. புத்தம் புது மோக அனுபவத்தில் திணறி போனாள் மாதவி.. விலகி விடத்தான் முயன்றாள்.. முடியவில்லை..
நீங்க குடிச்சிருக்கீங்க..!! வார்த்தைகள் யாவும் அவன் இதழ்களுக்குள் அடங்கிப் போயின.. அத்தோடு மெத்தையில் சரிந்த பின்.. அவள் சுதாரிப்பதற்குள் அனைத்தும் முடிந்து விட்டிருந்தது..
இறுதியில் உச்சம் எய்துகையில் அவன் சொன்ன வார்த்தைகளில் உயிர்வரை சிதைந்து மரித்து போனாள் மாதவி..
"ஐ லவ் யூ ரோஷி.. ஐ லவ் யூ.. நீயும் என்னை விட்டு போய்டாதே ரோஷி.. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நான் வந்து உன்னை பார்த்திருக்கணும்.. கல்யாணத்தை தடுத்திருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சிடு ரோஷி.." என்று அவள் இதழில் முத்தமிட்டு கொண்டே உயிர் நீரை அவளுள் செலுத்தினான்.. எதிர்பாராத வேதனையில் மாதவியின் தேக கூட்டுக்குள் உயிர் துடித்து பரிதவித்துக் கொண்டிருந்தது..
தொடரும்..