- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
அன்று இரவு முழுவதும் தன் கணவன் ரோஷி ரோஷி என்று இன்னொருத்தியின் பெயர் சொல்லி தன்னை கட்டியணைத்து புலம்பியதில் முற்றிலுமாக சிதிலமடைந்து போயிருந்தாள் மாதவி.. அவன் தொட்ட தேகம் நெருப்பாக கொதித்தது.. அவன் அணைப்பிலிருந்து விடுபட்டு.. கட்டிலை விட்டு இறங்கி கீழே அமர்ந்தாள்..
இன்னொரு பெண்ணை நினைத்து தன்னோடு கூடியிருக்கிறான்.. இதுதான் உண்மை.. தவறை உணர்ந்துவிட்டான்.. தனக்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு.. தன்னை அணைத்து காதல் செய்தான் என்று கடைசி வரை நீடித்திருந்த நம்பிக்கை அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் இதயத்தை கள்ளிக்காடாய் வறண்டு போக செய்தது.. அப்படியானால் அவன் கண்களுக்கு நான் ரோஷினியாக தெரிந்திருக்கிறேன்.. மாதவி என்ற ஒருத்தியை அவன் உணரவே இல்லை.. தொண்டை வறண்டு போனது.. நீர்ச்சத்து அனைத்தும் கண்ணீராய் வெளிவந்தது..
ஜீரணிக்க முடியவில்லை.. கணவன் கொடுத்த தாம்பத்திய சுகம் என்னவென்று உணரும் முன்னே.. அவள் தலையில் இடியாய் வந்து விழுந்தது அவன் சொன்ன வார்த்தைகள்.. அன்று விலகிப்போ என்று காயப்படுத்தியதை விட இன்று நெருங்கி வந்து அவன் கொடுத்த முத்தங்களில் ரணங்கள் அதிகம்..
"அம்மாஆஆஆஆஆஆ.. ஆஆஆ.." என்று பெருங்குரலெடுத்து அவள் அழுததைக் கூட பொருட்படுத்தாமல்.. குடிபோதையில் கட்டிலில் உருண்டு கிடந்தான் ஹரி..
இடைவிடாமல் உறக்கத்தில் ரோஷி ரோஷி.. என்று அவள் பெயரைச் சொல்லித்தான் கொஞ்சிக் கொண்டிருக்கிறான்.. தன் படுக்கை அறையில் இன்னொரு பெண்ணின் பெயர் கணவனின் வாயிலிருந்து தொடர்ந்து உச்சரிக்கப்பட நிம்மதியிழந்து வலியுடன் இரவு முழுவதும் அழுது தீர்த்தாள் மாதவி..
மறுநாள் காலையில் அப்படி ஒரு சம்பவமே நிகழாதது போல்தான் நடந்து கொண்டான் ஹரிச்சந்திரா..
உண்மையில் அந்த சம்பவம் அவனுக்கு நினைவில்லை என்பதே உண்மை..!!
"என்னங்க நேத்து ராத்திரி நடந்தது பத்தி.." என்று ஊடகமாக அவள் கேட்டுப் பார்க்க..
"என்ன நடந்தது..? முக்கியமான வேலையா வெளியே போகும்போது மூதேவி மாதிரி நடுவுல வந்து..!! ச்சீ.. தள்ளு.." நாயை போல் விரட்டியடித்து இதயத்தை கிழித்தான்.. சுயமரியாதை பலமாக அடி வாங்கியது.. கற்பனைகளும் ஆசை கனவுகளும் மென்மேலும் நொறுங்கின.. கேள்வி கேட்டு பயனில்லை.. இருக்க இஷ்டம் இல்லைனா உன் அம்மா வீட்டுக்கு போ என்பான் ஒரே வார்த்தையாக.. இன்னும் எதற்காக இங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை.. வாழும் பற்று வற்றி போய்விட்டது.. கைதியாக புகுந்த வீட்டு சிறைக்குள் அடைப்பட்டு கிடப்பதாக தோன்றியது.. பொறுப்புகள் கொண்ட குடும்பச் சிறை சுகமானது.. வெறுப்புகளை மட்டுமே சுமக்கும் இந்த சிறை நரகத்தை விட கொடியது..
தாமரை இலை நீர்த்துளி போல் இருவரின் உறவு ஒட்டாமல் சென்று கொண்டிருந்த இந்நிலையில்தான் மாதவிக்கு இன்னொரு பலத்த அடியாக மற்றொரு இன்னல்.. ரோஷினி மீண்டும் தன் பிறந்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.. விசா முடிந்துவிட்டதாம்.. அமெரிக்காவில் உள்ள அவள் கணவன் அடுத்த இரண்டு வருடங்களில் இங்கே வந்து செட்டிலாக போவதாக பேச்சு.. இவை அனைத்தும் அக்கம் பக்கத்து வீடுகளால் கேள்விப்பட்ட விஷயங்கள்..
ரங்கநாயகியோடு மார்க்கெட்டுக்கு ரோஷிணி வீட்டு தெருவழியாக செல்லும் போது.. "அங்க மாடியில் தலைமுடி உலர்த்திட்டு நிக்குதே.. அதுதான் உன் கணவனோட பழைய காதலி ரோஷினி.." என்று காண்பித்தாள் அவள்.. மாதவி நிமிர்ந்து பார்த்தாள்..
மிகப்பெரிய அரண்மனையின் இளவரசி போல் ஒயிலாக நின்று தலை முடியை நீவி விட்டுக் கொண்டிருந்தாள் ரோஷினி.. அழகாகத்தான் இருக்கிறாள்.. அந்த அழகோடு சேர்த்து ஆடம்பர கர்வமும்.. சக மனிதர்களை அல்பமாக பாவிக்கும் திமிரும் அவள் முகத்தில் பிரதிபலிப்பதாக தோன்றியது.. தனக்கு சொந்தமான பொருளை தொடாமல் அனுபவிக்காமல் வசியத்தால் இன்னொருத்தி தன் வசம் வைத்திருப்பதாக இதயத்தில் வலி.. உண்மைதானே அவள் கணவனை மனதளவில் மறைமுகமாக இந்த ரோஷினிதானே ஆளுகிறாள்.. நீண்ட பெருமூச்சோடு தலை தாழ்த்திக் கொண்டாள் மாதவி.
சமீப காலமாக ஹரிச்சந்திராவின் நடவடிக்கை முற்றிலுமாக மாறிப்போனதாக உணர்கிறாள் மாதவி.. ஒருவேளை ரோஷினியை பார்த்ததனால் வந்த பிரமையா..?
இழந்துவிட்ட ஒன்றை திரும்ப பெற்றுக் கொண்டதாக நினைத்து அத்தனை சந்தோஷமாக பூரிப்போடு தெரிகிறானே.. திரும்பி வந்திருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்ற விஷயம் அவனுக்கு புரியவில்லையா.. அல்லது ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?
"ரோஷினியின் தெருவில் உன் கணவனை பைக்கில் அடிக்கடி பார்க்க முடியுது.." என்று ரங்கநாயகி அக்கா சொன்னதில் மென்மேலும் உடைந்தாள்.. துக்கம் பீறிடுகிறது..
தாமாக ஒன்றை நினைத்து குழம்புவதை விட வெளிப்படையாகவே கணவனிடம் இது பற்றி கேட்டு உண்மையை தெரிந்து கொண்டால் என்ன..? ஆனால் கிடைத்த பதில்..
"அத பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..!!" என்றான் அவன்..
"ஏன் அவசியம் இல்லை.. நான் உங்க பொண்டாட்டிங்கறது ஞாபகம் இருக்கா இல்லையா..?"
"ஏய்.. நான் உன்னை என் பொண்டாட்டியாகவே ஏத்துக்கல.. இப்பவும் என் மனசுல அவ மட்டும் தான் இருக்கா.." எடுத்தெறியும் பேச்சு.
"ச்சீ.. இப்படி பேச கொஞ்சம் கூட உங்களுக்கு உறுத்தலையா.. என்கிட்டயே இன்னொருத்தன் பொண்டாட்டியை மனசுல வச்சிருக்கறதா சொல்றீங்க.." கண்ணீரும் ஆவேசமுமாக பொங்கினாள்.
"அவ இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியா ஆகறதுக்கு முன்னாடியிலிருந்து.. என் மனசுல காதலியா இருக்கா.. அஞ்சு வருஷ காதல்.. எந்த காலத்திலயும் அவளை என்னால் மறக்கவே முடியாது.. இப்ப கூட வாய்ப்பு கிடைச்சா அவளை தட்டி தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்.." சொடக்கு போட்டு சொன்னவனின் வார்த்தைகளில் உறைந்து நின்றாள் மாதவி..
"தப்புங்க.. அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இன்னொருத்தர் மனைவியான பின்ன அவங்க வாழ்க்கையில் விளையாடறது ரொம்ப தப்பு.. நீங்க என் கூடதான் வாழனும்னு சொல்லல.. தயவுசெஞ்சு அவங்களை மறந்துடுங்க.. இனி அவங்க வாழ்க்கையில் தலையிடாதீங்க..!!" தன்மையாக சொல்லிப் பார்த்தாள்.
"ஏய் அத சொல்றதுக்கு நீ யாரு.. அவ யார் பொண்டாட்டியாக வேணா இருந்துட்டு போகட்டும்.. என் மனசுல இருந்து அவளை யாராலும் பிரிக்க முடியாது.." இரும்பாக நின்றான்.
"உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களுக்காகவே காத்திருக்கிறேன். என்னை பற்றி கொஞ்சம் யோசிச்சு பாருங்க..!!" அழுகையில் கன்னங்கள் விடைத்தன.
அவன் உதடுகளோ ஏளனத்தில் வளைந்தன. "உன்னை பத்தி நான் எதுக்காக யோசிக்கணும்.. உன்னை என் மனைவியா இல்ல ஒரு மனுஷியா கூட நான் ஏத்துக்கல.. நீ வந்ததுக்கு பிறகு தான் என் வாழ்க்கையில் நிம்மதியே போச்சு.. கஷ்டப்பட்டு ஆரம்பிச்ச பிசினஸ்.. உன்னாலதான்டி மொத்தமா ஊத்திகிச்சு.. உன் துரதிஷ்டம்தான் என்னை வாழ விட மாட்டேங்குது.. ஆனா என் ரோஷினி அதிஷ்ட தேவதை.. அவ என் கூட இருந்த வரைக்கும் நான் சந்தோஷமாதான் இருந்தேன்..!!" கணவனின் வார்த்தைகளில் துக்கம் பீறிட்டு நெஞ்சை அடைத்தது.. நிற்க முடியாத அளவிற்கு கால்கள் துவண்டு போனது..
"இனிமே என் விஷயத்துல தலையிடற வேலை வேண்டாம்.. ஓபன்னா சொல்லப்போனா உன்னை பார்த்தா எனக்கு எந்த ஃபீலிங்க்ஸும் வரல.. என் கூட இருந்து உன் வாழ்க்கையை வீணாக்கிக்காதே..!! தயவுசெஞ்சு என்னை விட்டுப் போயிடு.." வார்த்தைகளால் அவளை உயிரோடு கொன்று புதைத்து அங்கிருந்து நகர்ந்தான்..
அதன் பின் நடைபிணமாகத்தான் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மாதவி.. ஹரிச்சந்திரா ரோஷினியுடனான காதலை புதுப்பித்து கொண்டதைப் போல் தோன்றியது.. இவன்தான் பழைய காதலை புதுப்பிக்க கிறுக்கு பிடித்து அலைகிறான் என்றால் ரோஷனியும்.. அதற்கு மேல் ஒரு படி சென்று தினமும் மொட்டை மாடியில் பழைய காதலியாக நின்று அவனுக்காக காத்திருக்கிறாளாம்.. ரங்கநாயகி உபரியாக தகவல் சொன்னாள்..
அப்படியானால் அவளும் தன் கணவனுடன் விருப்பப்பட்டு வாழ வில்லையா..? இருவரும் தத்தம் துணைகளை பிரிந்து புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறார்களா.. அல்லது முறையில்லாத உறவாக தொடர போகிறார்களா..!! மாதவிக்கு ஒன்றுமே புரியவில்லை.. தட்டிக் கேட்கவும் வழி இல்லை.. மனம் நிதமும் இதையே யோசித்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறது.. யாரிடம் கேட்டு விடை காண முடியும்.. சிலப்பதிகாரம் தலைகீழாக மாறியது.. கண்ணகியின் இடத்தில் மாதவி.. மாதவியின் இடத்தில் ரோஷினி..
ஆதாரங்கள் இல்லாமல் எதையும் முடிவு செய்ய இயலாது.. ரங்கநாயகியின் வார்த்தையை நம்பி சந்தேகப்படக்கூடாது..
ஊர் ஆயிரம் சொல்லலாம்.. துள்ள துடிக்க சொல்லாமல் விட்டுச் சென்ற ரோஷினியிடம் கடைசியாக பேச வேண்டிய வார்த்தைகள் ஏதேனும் பாக்கி இருக்கலாம்.. அதைப் பேசி முடித்துவிட்டு குட்பை சொல்லி என்னிடம் வந்து விட வாய்ப்பு உண்டு..
நீ செத்தாலும் என் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வராது என்று சொன்னவனை இன்னமுமா நம்பிக் கொண்டிருக்கிறாய் என்று மனசாட்சி கேள்வி எழுப்பத்தான் செய்கிறது..
வாழ்க்கை இப்படியே சென்று விடாது.. மாற்றம் ஒன்றே மாறாதது..!! ஆன்ட்டி ஹீரோ திருந்தி வருவான்.. இன்னும் கூட வறண்ட நிலத்தின் தூறும் மழைத்துளிகளாக நம்பிக்கை மிச்சம் இருக்கிறது..
ஆனால் கிரிஷை பள்ளியிலிருந்து அழைத்து வந்த ஒரு நாளில்.. நேரில் கண்ட அந்த காட்சியில் இதயம் சுக்கு நூறாக வெடித்து போனது..
அரிச்சந்திரா தனது பைக்கில் ரோஷினியை பின்னால் அமர வைத்துக்கொண்டு.. சந்தோஷமாக பேசி சிரித்தபடி மாதவியை கடந்து சென்றான்.. அவன் அவளை பார்த்தானா தெரியவில்லை.. ஆனால் ரோஷினி நமட்டு சிரிப்போடு அவளை திரும்பி பார்த்தாள்..
ஆக ரோஷினிக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.. தன்னோடு அரிச்சந்திரா சந்தோஷமாக வாழவில்லை என்று தெரியாமலா இப்படி ஏளன சிரிப்பு சிரித்து விட்டுப் போகிறாள்.. ஏதோ தப்பு நடக்கிறது என்று மனம் அடித்து சொன்னது..
இரவில் அனைவரும் உறங்கிய பின் தாமதமாக வருவதும்.. அடிக்கடி ஃபோனை பார்த்து சிரிப்பதும்.. தனியாக நின்று அலைபேசியில் கிசுகிசுவென பேசுவதும்.. அவள் சந்தேகத்தை அதிகமாக்கியது..
இனி நீ எனக்கில்லை என்றான பிறகு.. எக்கேடோ கெட்டுப்போ என்று விட்டுவிடத்தான் நினைத்தாள்.. ஆனால் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.. அத்தனை இளக்காரமா நான்..? வேண்டாத உறவை இழுத்துபிடித்து கொண்டு தொங்க நினைக்கவில்லை.. ஆனால் தன் எதிர்காலத்தின் நிலை தெரிந்து கொள்ளாமல் நிம்மதி இல்லை..
கணவனிடம் இது பற்றி பேச வழி இல்லை.. பேசியும் பலன் இல்லை.. ஆனால் ரோஷினியிடம் பேசி விவரங்களை தெரிந்து கொள்ளலாமே..!! பெண் மனம் இன்னொரு பெண் புரிந்து கொள்ள மாட்டாளா..? மனதுக்குள் ஏதோ துடிப்பு.. தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள அல்ல.. சிக்கல்களை கலைந்து ஒரு தெளிவு பெற..!!
கடை தெருவில் நின்றிருந்த ரோஷினியை எப்படியோ தனியாக பிடித்து விட்டாள்..
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..!!" என்ற மாதவியை ஏற இறங்கப் பார்த்தாள் ரோஷினி..
"என்கிட்ட பேச என்ன இருக்கு..? ஆணவமான பேச்சு.."
"இருக்கே..!! என் கணவர் கூட நீங்க இப்ப நீங்க பழகறதை பத்திதான் பேச வேண்டியிருக்கு.." மாதவி சொல்ல ரோஷினி கண்களை சுருக்கினாள்..
"இங்க பாருங்க.. ஒரு காலத்துல நீங்க ரெண்டு பேரும் காதலிச்சுருக்கலாம்.. இப்ப நீங்க இன்னொருத்தரோட மனைவி.. ஹரி என்னோட கணவர்.. கல்யாணத்துக்கு பிறகும் இப்படி நீங்க நெருக்கமா பழகறதும் ஒண்ணா சேர்ந்து சுத்தறதும் சரியில்ல.. நிறைய கேள்விப்படறேன்.. எதுவும் மனசுக்கு இனிமையா இல்ல.." மாதவி சொல்லச் சொல்ல ரோஷினியின் முகம் மாறியது..
"இவ்வளவு பேசற நீங்க உங்க கணவரை அடக்கி வைக்கலாமே.. நான் ஒன்னும் அவரை வலிய மயக்கி என் பக்கம் இழுத்து போட்டுக்கல.. எதுவாயிருந்தாலும் உங்க புருஷன் கிட்ட பேசுங்க.. என்கிட்ட தேவையில்லாம பேசற வேலை வேண்டாம்..!!" சுள்ளென விழுந்தாள்.
"அவர்கிட்ட என்னால பேச முடியலையே..!!" என்றவளின் கண்களில் அதீத வருத்தமும்.. அவமானப்பட்ட உணர்வும்..
"இங்க பாருங்க.. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன உறவு ஓடிக்கிட்டு இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாகணும்.. அதன் பிறகு தான் நான் தெளிவா ஒரு முடிவு எடுக்க முடியும்..!!" என்றாள் தீர்க்கமாக.
"நான் எதுக்காக உங்களுக்கு விளக்கிச் சொல்லணும்.. உங்க கிட்ட நான் எதுக்காக பேசணும்..!! நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எதுவா இருந்தாலும் உங்க புருஷன் கிட்ட பேசிக்கோங்க.. தேவையில்லாம என்னை நிக்க வச்சு கேள்வி கேட்கிற வேலை எல்லாம் வேண்டாம்.."
"ஐயோ அவர் பதில் சொல்ல மாட்டேங்கிறாருங்க..!! அட்லீஸ்ட் நீங்களாவது என்னை புரிஞ்சிப்பீங்கன்னு..!!"
"ஓஹோ.. சோ உங்க கணவர் உங்களை மதிக்கல.. ஐ மீன் உங்களை மனைவியாவே அவர் ஏத்துக்கல அப்படித்தானே..!!" ரோஷினி இகழ்ச்சி புன்னகையோடு கேட்க.. மாதவி பதிலின்றி கோப விழிகளோடு அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.. அதுதான் உண்மை என்னும் போது என்ன பேசி விட முடியும்..!!
"பிடிக்காத மனைவி.. உரிமை இல்லாத பொண்டாட்டி.. சரிதான்..!! ஆனா ஹரி இப்பவும் என்னை தேவதையா பூஜிக்கிறார் தெரியுமா.. ஹரி என்னை மறக்கவே இல்லை.. இப்பவும் அவர் மனசுல நான் தான் இருக்கேன்.." ரோஷினி பெருமையாக சொல்ல மாதவிக்கு தேகமெங்கும் தீப்பற்றி எரிந்தது..
"எங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்ன உறவுன்னு அவர்தான் உங்களுக்கு விளக்கணும்.. அப்படி ஹரி எங்க உறவைப் பற்றி உங்ககிட்ட சொல்ல விரும்பலைனா.. நான் மட்டும் எதுக்காக உங்களை மதிச்சு.. விளக்கம் சொல்லணும்.." தோள்களைக் குலுக்கி அலட்சியமாகச் சொன்னாள்..
"அடுத்தவ புருஷனை வளைச்சு போட்டுக்க வெக்கமாவே இல்லையா..!! நீ உன் கணவருக்கு இப்படி துரோகம் செய்யலாமா ரோஷினி.. இப்படி வாழறவங்களுக்கு சமுதாயத்தில் இன்னொரு பெயர் இருக்கு தெரியுமா..?" மாதவி அடங்காத சினத்துடன் கேட்க ரோஷினிக்கு முகம் மாறியது..
"ஏய் வார்த்தையை அளந்து பேசு.. போனா போகுதுன்னு மரியாதை கொடுத்து பேசினா ரொம்ப ஓவரா போற.. உன்னை உன் புருஷனே மதிக்கல.. கல்யாணமாகி இத்தனை நாளான பிறகும் கட்டுன புருஷன் மனசை மாத்த முடியல.. நீ எவ்வளவு கேவலமான பிறவியா இருந்திருந்தா அவன் உன் கூட வாழ முடியாமல் இன்னும் என்னையே மனசுல நினைச்சுட்டு இருப்பான்.." ரோஷிணியின் சவுக்கடி பேச்சில் மாதவியின் மனதெங்கும் ரணங்கள் நிறைந்தன.. தன் கணவன் சரியாக இருந்திருந்தால் இவளிடம் பேச்சு வாங்க வேண்டிய அவசியம் வந்திருக்காதே..!!
"முடிஞ்சா உன் புருஷனை அடக்கி வை.. என்கிட்ட குரலை உயர்த்தி பேசுற வேலை எல்லாம் வேண்டாம்.. அப்புறம் வேற மாதிரி போயிடும் ஜாக்கிரதை.." தவறை தன் மீது வைத்துக் கொண்டு பகிரங்கமாக மிரட்டி விட்டு சென்றாள்.
ரோஷினி.. தங்களுக்குள் தப்பான உறவு இருக்கிறது என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் மறுக்கவில்லை..!! ஆனால் அவள் வார்த்தைகளில் ஹரி தனக்குத்தான் சொந்தம் என்ற அளவில்லாத மமதை நிறைந்திருந்தது.. அதற்கு மேல் ஒரு கணமும் அங்கே நிற்காமல் ரோஷினி அவளை கடந்து சென்று விட்டாள்..
இன்னும் இவனால் எத்தனை பேரிடம் அவமானங்களை சந்திக்க வேண்டும்.. இந்த உறவை இழுத்து பிடித்து வைக்க நான் தான் போராடிக் கொண்டிருக்கிறேனா..!! இன்றோடு இந்த தொல்லை ஒழியட்டும்.. எனக்கு மன நிம்மதி தேவை.. இல்லை உண்டு என இரண்டில் ஒன்றை உடைத்துச் சொல்லி விட்டால் காத்திருப்பு விரயமாகாதே!!.. அத்தோடு இந்த பந்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து ஹரிச்சந்திராவை விட்டு விலகி விடலாம் என்று நினைத்து மனதை தயார் செய்து கொண்டிருந்த காலங்களில்..
தலை சுற்றலும் வாந்தியும் அவளை புரட்டிப் போட்டது.. ஏன் இந்த திடீர் உடல் உபாதைகள் என்று யோசித்த போதுதான் மாதவிடாய் 45 நாட்கள் தள்ளிப் போயிருப்பதை உணர்ந்தாள்.. மகிழ்வதற்கு பதிலாக திக்கென்று மனம் அதிர்ச்சியோடு துடித்தது..
இந்த நேரத்தில் இந்த குழந்தை அவசியம் தானா..!! கணவன் என்னை மனைவியென உணர்ந்து கூடியதன் பலன் இல்லையே இது.. ரோஷினியின் கற்பனையாய் என்னை வடித்து.. தன் தாகத்தை தீர்த்துக் கொண்டதன் விளைவு..!! குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதாய் சர்வ நிச்சயமாய் முடிவெடுத்துவிட்டாள்.. அவனுக்கு எப்படியோ.. ஆனால் இது தன் உயிர்.. என் குழந்தை எனும் பிரியம் அளவில்லாமல் பெருக்கெடுக்கிறது.. ஆயினும் நெஞ்சுக்குள் பெரும் போராட்டங்கள்..
தன்னோடு கூடிக் கழித்த தருணங்களே நினைவில்லாத போது மகரந்த சேர்க்கையின் விளைவாக வயிற்றில் உருவான மகவை எப்படி ஏற்றுக் கொள்வான் அவன்..!!
ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.. குழந்தையின் வரவு எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சையும் கரைக்கும்.. குடிபோதையில் தவறிழைத்திருந்தாலும் உன் ஞாபகம் நிச்சயம் அவன் நெஞ்சினில் தேங்கி நிற்கும்.. யார் கண்டது.. இந்த குழந்தை கூட உங்கள் இருவரிடையே பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்..
அம்மா கூட குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாக விடும் என்றாளே..!! இனி என் மாமியார் கூட குழந்தையை காரணம் காட்டி என்னிடம் கடுஞ் சொற்களை வீச மாட்டாள்.. தன் சொந்த உதிரம் எனும் போது நிச்சயம் நெஞ்சில் ஈரம் சுரக்காமல் போகுமா..? நிச்சயம் இந்நேரத்தில் மனைவி மீது ஈடுபாடு வரும்.. புரிதலுக்கு இதுதான் சரியான வழி.. பெண்ணுக்குள் புதைந்திருந்த ஆசைகள் மீண்டும் மனக்கணக்கு போட வைத்தது..
"என்ன மாதவி இப்போதும் அவனை நம்புகிறாயா..?" மனம் எள்ளி நகையாடி சிரித்தது..
வேறென்ன செய்ய? எல்லாம் இழந்தது போக மிச்சமிருப்பது எதிர்காலம் மட்டும்தானே..!! நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.. தன் கரத்தால் குழந்தையை வயிற்றோடு அணைத்தபடி மற்றொரு கரத்தில் பிரக்னன்சி கிட்டை வைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்..
ஆனால் அந்த காத்திருப்பு அவளுக்கு இனிமையை தந்ததா..?
தொடரும்..