- Joined
- Jan 10, 2023
- Messages
- 47
- Thread Author
- #1
நிகழ் தருணம்..
நடுநிசி நேரத்தில் வாசலில் வந்து பதிபத்தினியாய் கணவனுக்காய் தவம் கிடக்க முடியாது.. "இந்த நேரத்தில் எவன பாக்க இங்க உட்கார்ந்து இருக்கியாம்.." என்று அதற்கும் சேர்த்து அடி விழும்..
கண்ணபிரானின் பார்வையில் எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம்.. என்று இந்த ஆறு வருட காலத்தில் எதுவும் புரிவதில்லை கண்ணகிக்கு..
பல நாட்களாக அவள் செய்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் சரி என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று அது மன்னிக்கவே முடியாத அளவிற்கு பெருந்தவறாகி போகும்..! அப்படி நான் என்ன தப்பா செஞ்சுட்டேன் என்று யோசிக்க கூட முடியாத அளவில் அவன் வார்த்தைகள் கசையடிகளாய் காலாகாலத்திற்கும் அவளை துன்புறுத்திக் கொண்டே இருக்கும்..
அவசரமாக தங்கைக்காக வெளியே சென்று விட்டவன் வரும்வரை விழித்திருக்கதான் வேண்டும்.. தப்பித்தவறி உறங்கிப் போய்விட்டால்..?
அப்படித்தானே ஒரு முறை நடந்தது.. ஒருமுறை நடு ஜாமத்தில் ஏதோ ஒரு வேலை என்று அவன் எழுந்து சென்றுவிட.. விவரம் அறியாத பேதை பெண்ணாய்.. உறக்கம் கலைந்திடாதவள் வெற்றுத் தரையில் தன் கையை தலையணையாக வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்..
வேலை முடித்து வந்தவன் கண்டது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கண்ணகியைத்தான்..
அடுத்த கணம் ஒரு பக்கெட் குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து அவள் மேலே ஊற்றி இருந்தான்..
அடித்து பதறி அவள் எழுந்து அமர.. "புருஷன் வீட்டை விட்டு வெளியே போனது கூட தெரியாம அப்படி ஒரு நிம்மதியான தூக்கம்.. அடிமை பொஞ்சாதியா.. நான் வீட்டை விட்டு போனா திரும்பி வர்ற வரைக்கும் எனக்காக காத்திருக்கணும்னு உனக்கு தெரியாதா..! இல்ல தெரிஞ்சும் அவன் கிடக்கறா மயிறுன்னு எகத்தாளமா படுத்து உறங்கிட்டு இருந்தியா.."
"அ.. ஐயோ நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்ல.. ஏதோ அசதியில உறங்கி புட்டேன் மன்னிச்சிகிடுங்க.." கண்ணகிக்கு குளிரில் உதடு நடுங்கியது..
"அசதியில உறங்கல.. அலட்சியமா உறங்கி இருக்க..! இந்த அலட்சியமும் திமிரு இனி சாவுற வரைக்கும் இருக்க கூடாது.. ஈர உடுப்போட வெறுந்தரையில படுத்து உருளு.. அப்பதான் உனக்கெல்லாம் புத்தி வரும்.."
"கு.. குளிருதுங்க.. மு.. முடியல.."
"அப்படியாவது குளிருல வெரைச்சு சாவுடி.. விட்டு தொலைஞ்சது சனியன்னு நானாச்சும் நிம்மதியா இருப்பேன்..!" அவளை வெறுப்பாக பார்த்து சொன்னவன் கட்டிலில் ஏறி சொகுசாகப் படுத்துவிட.. ஈர உடையோடு அந்த வெறுந்தரையில் உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் மார்கழி மாதக் குளிரில் நடுங்கியபடி சித்திரவதையை அனுபவித்தாள் கண்ணகி.. அப்போது வடிவேலன் இரண்டு வயது குழந்தை..
அடுத்த நாள் கண்ணகி காய்ச்சல் கண்டு படுத்துவிட.. அவளை ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளவில்லை கண்ணபிரான்..
முனகலோடு கண்களை கூட திறக்க முடியாமல் அறையின் ஒரு மூலையில் படுத்திருந்தவளை.. அன்பாக அக்கறையாக அவள் நிலையை பற்றி கூட விசாரிக்க வேண்டாம்..
"காலங்காத்தால முக்கியமான சோலிக்கு கிளம்பறவன்.. இப்படி படுத்து கிடக்கிற இந்த விடியா மூஞ்சிய பாத்துட்டு போனா போற காரியம் உருப்படுமா.. பொணத்தோட முகத்தில முழிச்சிட்டு போனா கூட நல்லது நடக்கும்.. இது அதுக்கு கூட லாயக்கில்ல.." வார்த்தைகளில் நெருப்பை வீசிவிட்டு அங்கிருந்து சென்றான்..
உடம்போடு சேர்ந்து மனமும் சக்கையாகி போனதில்.. அழக்கூட பலமின்றி தட்டு தடுமாறி எழுந்து வந்து வீட்டில் ஆள் நடமாட்டமில்லாத ஒரு மூலையில் படுத்துக் கொண்டாள் கண்ணகி..
பாக்கியம்தான் பதறி.. மருமகளுக்காக துடித்து அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று.. ஊசி போட்டு.. வேளா வேளைக்கு உணவும் கஞ்சியுமாக தந்து கண்ணகியை தேற்றி குணப்படுத்தினாள்..
காரலும் கசப்புமான அந்த சம்பவத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் கண்ணகியின் கண்களில் நீர் சுருண்டு கொள்ளும்..
அன்றிலிருந்து அவன் உறக்கத்தில் அசைந்தாலும் கூட.. அலாரம் போல அவள் விழிகள் சட்டென விழித்துக் கொள்ளும்.. விழித்துக் கொள்ள வேண்டும்.. ஜெயில் கைதி போல் ஒரு வாழ்க்கை.. ஏன் இந்த சித்திரவதைகளை சகித்துக் கொண்டு போகிறாள் என்பது அவளுக்கே வெளிச்சம்..
கூடத்தின் சோபாவில் அமர்ந்திருந்தவள் ஜீப் சத்தம் கேட்டவுடன் சட்டென எழுந்து தூணுக்கு பக்கத்தில் போய் நின்றாள்..
தங்கையோடு உள்ளே நுழைந்தான் கண்ணபிரான்..
தூணுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த கண்ணகியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வஞ்சி அவசரமாக தன்னறைக்கு செல்ல எத்தனித்த போது..
"கண்ணு.." என்றழைத்து அவள் நடையின் வேகத்தை தடுத்திருந்தான் கண்ணபிரான்..
"அண்ணே.. !"
"இனி எந்த நேரம் ஆனாலும் சரி எங்க போகனும்னாலும் சரி.. என்னைய கூப்பிடு.. தனியா போகாதே..!" உத்தரவா அன்பான கட்டளையா தெரியவில்லை.. சரி என்று தலையசைத்தாள் வஞ்சி..
"உனக்கு ஏதாவது பிரச்சனைனா தைரியமா அண்ணன் கிட்ட சொல்லு.. நான் பாத்துக்குறேன்.." கோவில் பாதையில் கிருஷ்ணதேவராயன் வழிமறித்து நின்று பேசியதை மனதில் வைத்துக்கொண்டு அவன் சொல்ல..
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்லண்ணே.." என்று அவசரமாக மறுத்துச் சொன்னாள் வஞ்சி..
"சரி நீ போ..!" அவள் தலையை தடவி கொடுத்து சிரித்தான்..
கண்ணகி அவன் சிரிப்பதையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கண்கள் பிரதிபலிப்பது ஏக்கமோ அல்லது கோபமோ..! அவள் மட்டுமே அறிவாள்..
கண்ணபிரான் உள்ளே சென்றுவிட.. அவனை பின்தொடர்ந்தாள் கண்ணகி..
அறைக்குள் கட்டில் வரை சென்றவன்.. சட்டென திரும்பி தீவிழிகளால் அவளை முறைக்க.. மிரண்டு பின்வாங்கி நின்றாள் கண்ணகி..
ரௌத்திரத்தால் சிவந்து போயிருந்தவன்.. எதிர்பாராத நேரத்தில் அவள் கழுத்தைப் பற்றி சுவற்றோடு சாய்த்தான்..
மூச்சுக்கு திணறி விழி பிதுங்கி.. அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள் கண்ணகி.. அப்போதும் அவனை எதிர்க்கவோ திமிறி விடுபடவோ முயலவில்லை..
"எனக்கு தெரியாம என் தங்கச்சியை வச்சு ஏதாவது திட்டம் போட்டேன்னு வச்சுக்கோ.. உயிரோடு எரிச்சு கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. அப்புறம் சாம்பல் கூட மிஞ்சாது..!" அடி குரலில் பற்களை கடித்தபடி சீற்றத்தோடு கர்ஜித்தான் கண்ணபிரான்.. பிதுங்கிய விழிகளிலிருந்து கண்ணீர் வடிய.. வெறுப்பாக அவளை உதறி தள்ளிவிட்டு சட்டையை கழட்டி ஆனியில் மாட்டியவன்.. வேட்டியும் கையில்லாத பனியனுமாய் மெத்தையில் படுத்து தன் மகனை அணைத்துக் கொண்டு உறங்கிப் போயிருந்தான்..
அதே அறையில் குத்து காலிட்டு அமர்ந்து.. கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்த கண்ணகியை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை..
மறுநாள் காலையில் பின்பக்கத்தில் தேவையில்லாமல் வளர்ந்திருந்த களைகளை வேலையாட்கள் பிடுங்கிக் கொண்டிருக்க.. குப்பைகளை சேர்த்து கூட்டி பெருக்கி கொண்டிருந்தாள் கண்ணகி..
"அண்ணி.." என்று அழைத்துக் கொண்டு அங்கு வந்து நின்றாள் வஞ்சிக்கொடி..
"வா வஞ்சி..! என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட..?" வந்தவளை பாராமல் வேலையில் கவனமாய் இருந்தாள்..
"நான் தான் உறங்கவே இல்லையே ராத்திரியிலருந்து கண்ணு முழிச்சிதான கிடக்கேன்.. இனி தான் குளிச்சு சாமி கும்பிட்டுட்டு போய் தூங்கற வழிய பாக்கணும்.."
"காபி தண்ணி ஏதாவது வேணுமா..?"
"ஒன்னும் வேண்டாம்..
என்ன அண்ணி இந்த வேலையெல்லாம் நீங்க தான் பார்க்கணுமா..! இத்தனை பேர் இருக்காங்களே அவங்க பாத்துக்க மாட்டாங்களா..! இதை கூட அண்ணன் தான் உங்களை செய்ய சொன்னாராக்கும்..?" கோபத்தில் படபடத்தாள் வஞ்சி..
"ஆமா.. பின் பக்கம் ஆளுங்க சுத்தம் செய்வாங்க.. போய் கூட மாட ஒத்தாசையா நில்லுன்னு சொன்னாக.."
"அவர் சொன்னா நீங்க கேட்கணுமா.. இதெல்லாம் என்னால செய்ய முடியாதுன்னு சொல்லக்கூடாதா..?"
"நம்ம வீட்டு வேலையை நாமதானே செஞ்சாணும்..!" அவள் முகத்தை பார்த்து பேசுவதையே தவிர்த்தாள் கண்ணகி..
"என்ன ஆச்சு அண்ணி.. உங்க குரலே சரியில்லையே.. நிமிர்ந்து என்னை பாருங்க.." என்று சந்தேகமாக கண்கள் குறுக்கி அவள் முகத்தை ஆராய முயன்றாள் வஞ்சி..
"வேலை இருக்கும்மா.. இந்த நேரத்துல வந்து தொந்தரவு பண்றீயே.. உன் அண்ணன் பார்த்தா அதுக்கும் என்னையத்தான் கத்துவாக.."
"அண்ணி முதல்ல நிமிர்ந்து என்னை பாருங்க.." என்று கண்ணகியை தன் பக்கம் திருப்பினாள்..
"விடு வஞ்சி.. நேரமாச்சு நான் போய் சமையல் வேலைய பார்க்கணும்.. அவுக புறப்பட்டு வரும்போது உங்க(உண்ண) தயாரா இல்லைனா நேரத்துக்கு சோறு ஆக்கலைன்னு அதுக்கும் ஒரு பஞ்சாயத்து விழும்.."
"உதட்டுல என்ன காயம்..!" வஞ்சியின் முகம் மாறி இருந்தது..
"கீழ விழுந்து புட்டேன்.. உதடு பல்லுல குத்திகிடுச்சு..!"
"அண்ணன் அடிச்சுதா..!"
"அதான் சொன்னேனே.. நில படிக்கட்டு தடுக்கி கீழ விழுந்து புட்டேன்னு.. இந்த சங்கதியில தேவையில்லாம எதுக்கு உன் அண்ணனை இழுக்குற நீயி.." வஞ்சியின் முகம் பார்க்காமல் தவிர்த்தாள் கண்ணகி..
"அஞ்சு விரலும் அச்சா பதிஞ்சிருக்கு.. கீழ விழுந்தேன்னு பொய் சொல்றீகளா.." கொதித்துப்போனவள் அங்கிருந்து நகர போக..
"இந்தாரு வஞ்சி.. புருஷன் பொண்டாட்டிகுள்ள ஆயிரம் சங்கதி இருக்கும்.. நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு அடிச்சிக்குவோம் நாளைக்கு சேர்ந்துக்குவோம்.. நீ இந்த விஷயத்துல தலையிடாதே சரியா.. உன் வேலைய பாரு.." முகத்திலடித்தாற் போல் கண்ணகியின் பேச்சு..
வஞ்சிக்கு கோபத்தில் மூக்கு விடைத்தது.. "சரிதான்..! நீங்க ஒன்னும் என் அண்ணனுக்கு பொஞ்சாதியா வாழல.. அடிமையா வாழறீங்க..!"
"எப்படி வாழ்ந்தா என்ன.. விருப்பப்பட்டு தான் வாழறேன்..! யாரும் என் வாழ்க்கையில தலையிட வேண்டாம்னு சொல்லுதேன்.. உனக்கு புரியுதா இல்லையா.." தென்னந் துடப்பமும் கையுமாய் வஞ்சியை பார்த்து அழுத்தமாக சொன்னவள்.. மீண்டும் கூட்டி பெருக்கத் தொடங்கிட.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி இயலாமையோடு அங்கிருந்து நகர்ந்தாள்..
வஞ்சியால் தன் சகோதரனை தட்டிக் கேட்க முடியும்.. ஆனால் கண்ணகி ஒத்துழைக்காத பட்சத்தில் வஞ்சியால் அவளை மீறி எதுவும் செய்ய முடியவில்லை..
அழுது மிரட்டி திட்டி.. ஏன் சில சமயங்களில் காலில் விழாத குறையாக கூட.. தன் விஷயமாக வஞ்சிக்கொடி கண்ணபிரானிடம் பேச விடாதபடி தடுத்திருந்தாள் கண்ணகி..
"இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு வேண்டாம் போடான்னு உறவ அறுத்துக்கிட்டு.. கூழோ கஞ்சியோ.. வெளிய போய் கவுரவமா குடிச்சு பொழச்சுக்கலாம்.." பாக்கியம் கூட ஒரு முறை ஆற்றாமையில் புலம்பி தள்ளினாள்..
கண்ணகியின் இதழ்கள் விரத்தி புன்னகையோடு வளைந்து நிற்க நெஞ்சமோ விம்மித் தவித்து.. கண்ணபிரான் சொன்னதை நினைத்து பார்க்கும்..
"இந்த வீட்டுக்குள்ள என் பொஞ்சாதிய வந்தது வேணா உன் விருப்பப்படி மத்தவங்க விருப்பப்படி நடந்திருக்கலாம்.. ஆனா இந்த வீட்டை விட்டு நீ வெளியே போகணும்னா.. அதுக்கு நான் மனசு வைக்கனும்.. என்னை மீறி என் உறவை முறிச்சிகிட்டு நீ வெளியே போனாலும்.. உன்னை நிம்மதியா வாழ விட மாட்டேன்.. நீ ஒரு அவுசாரி.. உனக்கு ஒருத்தங் காணாதுன்னு கதை கட்டிவிட்டு.. உன் மானத்தை வாங்கிடுவேன்.. அப்புறம் இந்த ஊர்ல இருக்கற ஒவ்வொருத்தனும் உன் வீட்டு கதவை தட்டுவான்.. ஒரு பொம்பள எப்பேர்பட்ட பத்தினியா இருந்தாலும்.. அவ மேல பழி சுமத்தி ஊர் உலகத்துக்கு முன்னாடி கெட்டவளா காட்டறது ஒன்னும் அம்புட்டு கஷ்டமில்ல.. உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.. வாழ்வோ சாவோ உன் உசிரு இந்த வீட்லதான் போகணும்.. அதையும் மீறி வெளியே போகணும்னு நினைச்சா.. ஏன்டா வாழனும்னு ஒவ்வொரு நிமிஷமும் வேதனப்படற அளவுக்கு உன்னை துடிக்க வைப்பேன்.. அப்புறம் நீயா நினைச்சாலும் கெஞ்சிக் கதறுனாலும்.. இந்த வீட்டுக்குள்ள வர முடியாது.. தனியாவும் வாழ முடியாது.. செத்துதான் போகணும்..!" அன்று அவன் தன்னை கடுமையாக ஆட்கொண்டதை விட அந்த வார்த்தைகள் தான் அதிகமாக வலித்தன..!
கண்ணகி ஒன்றும் ஆசைப்பட்டு அடம் பிடித்து அவனை திருமணம் செய்து கொள்ளவில்லையே..!
சந்தர்ப்ப சூழ்நிலை..
அந்த சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்கியது அவன் தானே..!
கண்ணகிக்கு அப்போது 23 வயது.. மாப்பிள்ளை எதுவும் குதிராமல்.. வரதட்சணை தர வழியில்லாமல்.. தன் எதிர்காலத்துக்காக காத்துக் கொண்டு ஏழை தகப்பனோடு ஓலைக் குடிசையில் வசித்து வந்தாள்..
அவள் தந்தை நீல மேகம் சேர்மன் வீட்டில் தான் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்..
அப்போது வஞ்சி கொடிக்கும் கிருஷ்ணதேவராயனுக்கும் திருமணமாகி இருக்கவில்லை.. கிருஷ்ணதேவராயன் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலகட்டம் அது..
கண்ணபிரான் முக்கிய வேலையாக தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊருக்கு சென்ற வேளையில்.. குறுக்கே வந்த ஒருவன் மீது தவறுதலாக மோதி விட்டான்..!
யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை.. இரண்டு பேர் மீதும் தவறு இருந்தது.. கண்ணபிரான் எப்போதும் தனது வாகனத்தை அலட்சியமாகவே ஒட்டக்கூடியவன்.. எதிரே வருபவர்களை புழுவாக கூட மதிக்க மாட்டான். அவர்கள் தான் ஒதுங்கி செல்ல வேண்டும்.. வாகனத்தில் மோதி உயிரை விட்டவன் வண்டி வருவதை பார்க்காமல் குறுக்கே விழுந்து விட்டான்.. எது எப்படியோ ஒரு உயிர் போய்விட்டதே..!!
சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவ்விடத்திலிருந்து ஜீப்போடு திரும்பி வந்துவிட்டான்..!
ஆனால் அவன் வண்டியின் சக்கரத்தின் தடத்தை வைத்து காவல்துறை இந்த வண்டிதான் குறிப்பிட்ட நபரை மோதி கொன்றிருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட்டது.. அத்தோடு அந்த இடத்தில் கண்ணபிரானை பார்த்ததாக ஒருவன் சாட்சி வேறு கூற..
கஜேந்திரன் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்..
"உதவாக்கர பயலே.. என் பேர கெடுக்கறதுக்காகவே.. வந்து பொறந்திருக்கியா நீ.. கொல கேஸ்ல நீ பாட்டுக்கு ஜெயிலுக்கு போய் தொலைஞ்சா.. நம்ம அந்தஸ்தும் கௌரவமும் என்னாகறது.. அப்புறம் எவன்டா என்னை மதிப்பான்..!" இரத்த அழுத்தம் எகிறுமளவுக்கு கத்தினார்..
"யப்பா.. நீங்க கவலைப்படாம இருங்க..! அப்படியெல்லாம் எதுவும் ஆகாது எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.." என்றவன் வேறு மாதிரியாக விபரீதமாக யோசித்திருந்தான்..
கண்ணபிரான் பார்த்துக் கொள்வான் என்று அவன் பொறுப்பில் பிரச்சனையை விட்டுவிட்டு நிம்மதியாக இருந்தார் கஜேந்திரன்.. ஆனால் அவர் எண்ணத்திற்கு நேர்மாறாக ஒரு பிரச்சனை இன்னொரு பிரச்சினையாக திரிந்து வந்திருந்தது..
என்ன செய்யலாம்.. என்ன செய்யலாம்.. என்று வீட்டின் பின்புறத்தில் நின்று யோசித்துக் கொண்டிருந்த கண்ணபிரானின் கண்களில்.. அந்த நேரத்திலா தந்தைக்காக சாப்பாடு கொண்டு வந்த கண்ணகி பட்டு தொலைய வேண்டும்..
அவளை கண்டவுடன் அவன் மூளையில் புதிய திட்டம் ஒன்று உதயமாகியது..!
அவனை கைது செய்ய வந்த காவல்துறையிடம்..
"இங்க பாருங்க.. அந்த விபத்து நடந்த நேரத்துல நா அங்கன இல்லவே இல்ல.." மிதப்பாகவே பதில் சொன்னான் கண்ணபிரான்..
"அப்ப நீங்க எங்க இருந்தீங்க..?" என்றார் காவலர்..
"இதோ.. இந்த புள்ளையோட அவ குடிசைல தான் இருந்தேன்.."
கூட்டம் ஸ்தம்பித்தது..
"குடிசையில அந்த பொண்ணோட என்ன பண்ணிட்டு இருந்தீங்களாம்.."
"ஹான்.. ஒரு ஆம்பளையும் பொம்பளையும் என்ன செய்வாகளோ அத தான் செஞ்சுட்டு இருந்தோம்..!" எகத்தாளமாக பதில் சொன்னான்..
"என்னமா இவர் சொல்றது உண்மையா..!" இரு கைகளை கோர்த்து தலை தாழ்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த கண்ணகியிடம் காவல்துறை அதிகாரி மிரட்டலாக கேட்க..
"ஆமாம்.." என்று உதடு கடித்து அழுதபடி தலையசைத்தாள் கண்ணகி..! கண்ணபிரானின் உதட்டில் குரூர சிரிப்பு..
அங்கிருந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு.. கண்ணகியின் தந்தை நீலமேகம் தலையிலடித்துக் கொண்டு அழுதார்...
"பேருதான் கண்ணகி.. ஆனா பண்றது எல்லாம்.***த்தனம்.." பாதிக்கப்பட்டவள் பெண் அதிலும் அவள் ஏழை என்பதால்.. அங்கிருந்தவர்களின் நாக்கு இஷ்டத்திற்கு வளைந்தாடியது..
"அதான் சொல்லிட்டா இல்ல.. நீங்க விபத்து நடந்ததா சொன்ன அன்னிக்கு.. காலையில இருந்து சாயங்காலம் வரை.. இந்த புள்ளையோட அவங்க வீட்டு குடிசையில தான் இருந்தேன்.."
"அப்போ விபத்து நடந்த இடத்துக்கு உங்க வண்டி மட்டும் தனியா வந்துச்சா.."
"இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. ரெண்டு நாளா என்னோட வண்டிய காணோம்.. எங்க ஊரு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்துருக்கேன்.. இந்தா அதோட காப்பி.. எவனோ என் வண்டிய களவாண்டுட்டு போய் ஒரு அப்பாவி ஜீவன் மேல ஏத்தி கொன்னுபுட்டான்.. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அதைத்தான் ரொம்ப நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன் புரிஞ்சுக்கிடுங்க..!" என்று முடித்துவிட.. சாட்சிகள் இல்லாமையால் அவன் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போனது..
கண்ணகியையும் நீலமேகத்தையும் உங்கள் குடும்பத்தையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டி கண்ணபிரான் தன் காரியத்தை சாதித்துக் கொண்ட விஷயம் யாருக்கும் தெரியவில்லை..
ஆனால் அதன் பிறகு தான் கண்ணகியின் வாழ்க்கையில் சோதனை காலம் ஆரம்பமாகியது..
கண்ணகி அந்த மாதிரியான பெண் என்று முத்திரை குத்தப்பட்டு.. தினம் ஒருவன் வந்து அவர்கள் வீட்டு கதவை தட்டினான்..!
கையில் அருவாள் கொண்டு ருத்ரகாளியாய் நின்று விரட்டினாலும் எத்தனை பேரை எதிர்த்து நிற்க முடியும்.. சோர்ந்து போனாள் கண்ணகி.. மகளின் வாழ்க்கை நாசமாகி போன துக்கத்தில் அவளை தன்னந்தனியே தவிக்க விட்டு நீலமேகமும் மாரடைப்பால் இறந்து போய்விட.. கண்ணகியின் நிலை இன்னும் கவலைக்கிடமானது..
வாழ வழி இல்லாமல்.. உத்திரத்தில் கயிறை சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில்.. பைக் ஓட்டிக்கொண்டு அந்த வழியாக வந்த கிருஷ்ண தேவராயன்.. நாக்கு வரளவே.. பக்கத்திலிருந்த குடிசையை கண்டு.. கண்ணகியிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடிப்பதற்காக அங்கு வந்து நின்றிருந்தான்..
கண்ணகி இப்படி ஒரு விபரீதமான முடிவு எடுத்திருந்த நேரத்தில்.. கிருஷ்ணதேவராயன் விடுமுறைக்காக ஊருக்குள் வந்திருந்தது அவள் செய்த புண்ணியமோ அல்லது பாவப் பலனோ தெரியவில்லை.. ஒரே ஊர் ஆட்கள் என்பதால் ரராயனுக்கு கண்ணகியோடு அறிமுகம் உண்டு. ஆனால் பெரிதாக பழக்கமில்லை..
கை வைத்து தள்ளிய நேரத்தில் பலவீனமாக கதவு திறந்து கொள்ள.. உள்ளே கண்ணகி புடவை முடிச்சில் கழுத்தை நுழைத்திருந்தாள்..
ஒரு கணம் அதிர்ந்து போய் நின்றிருந்த கிருஷ்ணதேவராயன் அடுத்த நிமிடமே அவளை காப்பாற்றி கீழே இறக்கி பளாரென்று அறைந்திருந்தான்..
கண்கள் மூடி அந்த அடியை வாங்கிக் கொண்டாள் கண்ணகி..
"எதுக்காக இப்படி ஒரு முடிவெடுத்த..?" கோபக்கனலோடு அவன் காரணம் கேட்க.. உண்மைகள் அத்தனையையும் அழுகையோடு சொல்லி முடித்திருந்தாள் கண்ணகி..
கிருஷ்ணதேவராயனுக்கு இந்த விஷயம் அரசல் புரசலாக தெரியும் என்றாலும் கண்ணகியும் விருப்பப்பட்டு இதில் உடந்தையாக இருக்கிறாள் என்றுதான் நினைத்திருந்தான்.. இப்போதுதான் கண்ணபிரானால் மிரட்டப்பட்டு இந்த பிரச்சனைக்குள் உடன்படுத்தப்பட்டு இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவனுக்கு அவள் மீது இரக்கம் சுரந்தது..
"இப்போ உனக்கு என்ன வேணும்..! உனக்கு உதவி செய்ய நான் தயாராயிருக்கேன்.. மறுபடி தற்கொலை பண்ணிக்க நினைக்காதே..! கோழை மாதிரி நீ செத்துட்டா யாருக்கும் எந்த இழப்பும் இல்ல.. எல்லாரும் சந்தோஷமா தான் இருப்பாங்க..! வாழ்ந்து காட்டு.. உனக்கு இந்த ஊர்ல இருக்க இஷ்டம் இல்லைனா வேற ஏதாவது ஊர்ல உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தரேன்.."
வேண்டாம் என்ற தலையசைத்தாள் கண்ணகி..
"பொறவு என்னதான் வேணும் உனக்கு.."
"அந்த கண்ணபிரானை கல்யாணம் பண்ணிக்கணும்.."
"என்ன சொல்றன்னு புரிஞ்சுதான் சொல்லுறியா..!"
"ஆமாம்.. என்னை கேவலமா பாத்த இந்த ஊர்.. அவன் பொண்டாட்டியா மரியாதையா கௌரவமா பாக்கணும்.."
"ஆனா தேவைக்கு பயன்படுத்திக்கிட்ட கண்ணபிரான் உன்னை மரியாதையா நடத்த மாட்டான்.."
"அத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை.. என் களங்கம் துடைக்க படனும்.. அதுக்கு ஒரே வழி நான் கண்ணபிரானுக்கு வாழ்க்கை படனும்.. இது நடக்குமா..!" கண்ணகி கண்ணீரோடு கேட்க.. அவள் விழிகளை துடைத்து விட்டு நடக்கும் என்று தலையசைத்தான் கிருஷ்ணதேவராயன்..
அத்தோடு நில்லாமல் கண்ணகியை அழைத்துக்கொண்டு கண்ணபிரானின் வீட்டுக்கு சென்றான்.. நடுவீதியில் நின்று நியாயம் கேட்டான்..
"விபத்து நடந்த அன்னைக்கு இந்த பொண்ணோட இருந்ததா நீயே ஒத்துக்கிட்டு இருக்க..! நீங்க ரெண்டு பேரும் அன்னைய தேதியில கணவன் மனைவியா வாழ்ந்தது உண்மைனா.. இந்த பொண்ணோட வாழ்க்கைக்கு நீ தான் பதில் சொல்லணும்.."
"என்ன பதில் சொல்லணும்..!" திமிராக கேட்டான் கண்ணபிரான்..
"உன்ன இவள கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டிய ஆக்கிக்க.. இல்லன்னா நடந்த விபத்துக்கு நீதான் காரணம்னு போலீஸ்ல போய் ஒத்துக்க.."
"இரண்டுமே பண்ண முடியாது என்னடா செய்வ..?" படியிலிருந்து கீழே இறங்கி வந்தான் கண்ணபிரான்.
நேருக்கு நேராக நின்று அவனை எதிர் கொண்டான் கிருஷ்ணதேவராயன்..
"போலீஸ்ல போய் நானே உன்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணுவேன்.. க்ளோஸ் பண்ண கேஸை திரும்ப எடுக்க சொல்லுவேன்...! உனக்கு எதிரா ஆதாரங்களை திரட்டறது அப்படி ஒன்னும் சிரமம் இல்ல.." அவன் நிதானமாக அதேநேரம் அழுத்தமாகச் சொல்ல கண்ணபிரான் அனல் பார்வையால் கண்ணகியை எரித்தான்..
"இங்க பாரு.. என்னமோ நான் மட்டும்தான் இவ வீட்டு பக்கம் ஒதுங்குன மாதிரி பேசுற.. அதுக்கு முன்னாடி எத்தனை ஆம்பளைங்களோ.. ஊருக்கு ***யாளா இருக்கிறவளை எல்லாம் வீட்டுக்குள்ள கூட்டியாந்து குடும்பம் நடத்த முடியாது.."
சொல்லி முடிப்பதற்குள் கிருஷ்ணதேவராயன் கண்ணபிரானின் சட்டையை பிடித்திருக்க.. இருவரும் அந்த இடத்திலேயே மோதிக் கொண்டனர்.. ஊரை வேடிக்கை பார்த்தது..
வஞ்சிக்கொடி நெஞ்சம் கலங்கி வீட்டை விட்டு படியிறங்கி தன் காதலனுக்காக ஓடி வர.. அதற்குள் கஜேந்திரன் இருவரையும் தடுத்து தனித்தனியே தள்ளிவிட்டார்..
"ஏய்.. நிறுத்துங்கலே..! என் முன்னாடியே ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறியே.. அப்புறம் எனக்கு என்னங்கலே மரியாதை..!"
"ஒரு பொண்ண மிரட்டி பொய் சாட்சி சொல்ல வச்சு அவ வாழ்க்கையே கெடுத்துட்டான் உங்க மவன்.. வாழ வழியில்லாம கண்ணகி தற்கொலை பண்ணிக்க போயிட்டா.. இப்ப இவளுக்கு என்ன பதில் சொல்லப் போறீய.. அதான் இவளோட இருந்தாதா உங்க புள்ள ஒத்துக்கிட்டானே.. சேர்ந்து இருந்தவகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே முறை.." கிருஷ்ணதேவராயன் பேசிக்கொண்டே செல்ல கஜேந்திரன் யோசனையாக அவனை பார்த்தார்..
"ஏன் ஏழ.. பணக்காரன் ஜாதி வித்தியாசம் பாக்கறீயளோ.. அந்த பொண்ணோட உங்க பையன் ஒன்னா சேர்ந்து இருந்தேன்னு சொல்லும்போது அந்த வித்தியாசம் தெரியலையா..! இந்த விஷயத்தை நான் இப்படியே விட போறதில்ல.."
"சும்மா சலம்பாத.. நீ என்னல சொல்றது.. என்னய பொருத்தவரை என் வீட்டுல வேலை செய்யறவன் எல்லாத்தையும் என் குடும்பத்துல ஒருத்தனதான் பாக்கறேன்.. என் புள்ள இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டான்னு தெரிஞ்ச உடனே.. இந்த புள்ளையை மவனுக்கு கட்டி வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..! வர்ற முகூர்த்தத்தில இந்த பொண்ணுக்கும் என் மவனுக்கும் கல்யாணம்.. அம்புட்டுதான்.." கஜேந்திரன் சொல்ல கிருஷ்ணதேவராயன் பேச்சற்று நின்றான்..
"அப்பா என்ன சொல்லுறீய.. இந்த வக்கத்த சிறுக்கிய நான் கண்ணாலங் கட்டிக்கனுமா..!"
"பேசாத..! தொலைச்சிடுவேன்.. நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு உன்னை கொன்னு போடாம விட்டு வைச்சேன்னு சந்தோஷப்படு.. நான் கொஞ்சம் சூதானமா சுதாரிக்கலைனா குடும்பமானமே போயிருக்கும்.. எனக்கு ஊருக்குள்ள ஜனங்க தர்ற மருவாதியும் கௌரவமும்தான் முக்கியம்.. என் பேச்ச கேட்டு இந்த வீட்ல இருக்குறதுனா இரு.. இல்லனா உன் வழியை பார்த்து போயிட்டே இரு.." யாருக்கும் கேட்காமல் பற்களை கடித்த படி கஜேந்திரன் சொன்ன வார்த்தையில் உறைந்து போய் நின்றான் கண்ணபிரான்..
வேறு வழியில்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் இப்படித்தான் கண்ணபிரானுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடந்து முடிந்தது..
தொடரும்..

Last edited: