- Joined
- Jan 10, 2023
- Messages
- 127
- Thread Author
- #1
தர்மன் பைக்கிலிருந்து இறங்கி முழங்கை வரை சட்டையை மேலே ஏற்றிக்கொண்டு அந்தக் கயவனை நோக்கி நெருங்கி வர..! அவன் உடற்கட்டையும் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தையும் கண்டு சுப்ரியாவிடமிருந்து இரண்டடி பின் வாங்கினான் அவன்..
"என்னடா வேணும் உனக்கு..! என்கிட்ட கேளு, நான் தரேன்..!" அவன் சட்டையை பிடிக்க முடியல அதற்குள் தர்மனின் கையை தட்டி விட்டு ஒரே ஓட்டமாக ஓடியிருந்தான் அவன்..
பயத்தில் வெளிறி வேர்த்து போயிருந்த தன் முகத்தை புடவை தலைப்பால் துடைத்துக்கொண்டாள் சுப்ரியா.. ஏற்கனவே பலவீனமாய் இருந்த உடம்பு இப்போது தடதடவென நடுங்கிக்கொண்டிருந்தது..
அந்த மனிதன் இருளில் ஓடி மறைந்ததும் சுப்ரியாவை அதே சினத்தோடு திரும்பிப் பார்த்தான் தர்மன்..
பவ்யமாய் மரியாதையாய்.. தயங்கி தயங்கி தன்னிடம் வந்து பேசியவன் இப்படி கோபத்தோடு பார்ப்பதில் விதிர்த்து போனாள் சுப்ரியா..
வேகமாக அவளிடம் வந்து நின்றவன்.. "என்னங்க நீங்க ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க.. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..? பிரச்சனை எங்கேன்னு தேடிப் போய் விழுவீங்களா..!" அவன் கேள்விக்கு பதிலாக தன் நிலையை சொல்ல முடியாத தவிப்போடு அவள் நிற்க..
மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு இதழ் குவித்து ஊதியவன்.. "இங்கெல்லாம் ரொம்ப நேரம் நிக்க கூடாதுங்க..! நீங்க எங்க போகணும் சொல்லுங்க உங்களை கொண்டு போய் விட்டுடறேன்.." என்றான் எரிச்சல் குறையாமல்..
"ஒருவேளை என் மேல நம்பிக்கை இல்லைன்னா கூட ஏதாவது ஆட்டோ பிடிச்சு போங்க.. நீங்க சேஃபா போய் சேரும் வரைக்கும் நான் பின்னாடியே உங்கள ஃபாலோ பண்ணி வரேன்.."
"எங்க போறது..! யார்கிட்ட போறது ஒண்ணுமே தெரியலையே..!" உதட்டை கடித்து நின்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது..
அவன் எதிர்பார்த்த பதில்தான் ஆனாலும் அந்த கண்ணீர் எப்போதும் போல் அவன் நெஞ்சை இறுக்கி பிழிவதாய்..!
"சரி அழாதீங்க.. உங்க ஹஸ்பண்ட் வீட்ல ஏதோ பிரச்சனை.. இப்ப போக முடியாது.. புரியுது.. உங்க அம்மா வீடு..?"
கண்ணீரை துடைத்துக் கொண்டு மூச்சை இழுத்தாள்.. மூன்றாம் மனிதனிடம் தன் அந்தரங்கத்தை பற்றி சொல்ல விருப்பமில்லைதான்.. ஆனால் அதையும் மீறிய ரகசியங்கள் மருத்துவமனை முழுக்க பரவி நடுத்தெருவில் மதிப்பிழந்து நிற்கும் நிலையில் தன்னை பற்றி சொல்ல வேண்டிய நிலை..
"அம்மா வீட்டுக்கு போக முடியாது.. வீட்டை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செஞ்சுக்கிட்டதனால என் குடும்பம் என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க..! செத்தா கூட என் முகத்தில் முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..! நானும் அவங்க துணையில்லாம வாழ்ந்து காட்டுவேன்னு தாலி கட்டினவன நம்பி வீராப்பா சவடால் விட்டுட்டு வந்துட்டேன்.. இப்ப எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு என் பிறந்த வீட்டுக்கு போறது..!" உதடுகள் துடித்தன..
"பொண்ணு நம்மள மீறி செஞ்சிட்டாளேங்கற கோவத்துல அப்படியெல்லாம் பேசுறதுதான்.. அதுக்காக உங்களை அப்படியே விட்டுடுவாங்களா என்ன..! இந்த நிலைமையில் உங்கள பார்த்தா நிச்சயமா அவங்க மனசு உருகிப் போயிடும்.. கண்டிப்பா உங்கள வீட்ல சேத்துக்குவாங்க..! வாங்க உங்களை கொண்டு போய் வீட்டுல விட்டுடறேன்..! அப்படியே அவங்க கோவப்பட்டாலும்.. நான் அவங்ககிட்ட பேசறேன்.. தயவு செஞ்சு வாங்க..!" என்று அவன் சொல்ல அதற்கு மேல் வேறு வழியில்லாமல் வந்து வண்டியில் ஏறினாள்..
"அவளை திரும்பி போகச் சொல்லு..! நல்லவேளை ராவோட ராவா வந்திருக்கா.. பகல்ல வந்து நின்னு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கல.. இவளை உயிரோடு விட்டதே பெரிய விஷயந்தான்.. இதுல புருஷனை விட்டுட்டு வந்துட்டேன் திரும்ப சேர்த்துக்கோங்கன்னு நீலிக் கண்ணீர் வடிக்கிறளாக்கும்.. எப்போ நம்மள மோசம் பண்ணிட்டு குடும்ப கவுரவத்தை பத்தி கவலைப்படாம வீட்டை விட்டு ஓடிப் போனாளோ அப்பவே என் பொண்ணு செத்துப்போயிட்டா..! இந்த மாதிரி கண்ட கழிசடைகளுக்கும் என் வீட்ல இடமில்ல.. போக சொல்லு அவள..!"
சுப்ரியாவின் பிறந்தகத்தில் அவளும் தர்மனும் வாசலில் நின்று கொண்டிருக்க.. அவள் அப்பா ராமநாதன் காட்டுகத்தாக கத்தினார்.. அம்மா தேவிரதி கணவனை அடக்க முடியாமல் மகளையும் சேர்த்துக் கொள்ள முடியாமல் அழுது கொண்டிருந்தார்..
"கண்ட நாய்ங்க கிட்ட நமக்கென்ன பேச்சு.. நீங்க உள்ள வாங்கப்பா..! இவளுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து பேசிட்டு நிக்கறீங்க பாருங்க உங்கள சொல்லணும்.." அண்ணன் கதிர் சீறினான்..
"ஐயா ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்களேன் ப்ளீஸ்.. உங்க பொண்ணு ஏற்கனவே மனசு உடைஞ்சு போயிருக்காங்க.. விஷயம் என்னன்னு தெரியாம ஏன் இன்னும் குத்தி காயப்படுத்தறீங்க..!"
"ஏய் அவளே வேண்டாங்கறேன்.. நீ யாருடா புதுசா..? உன்னை எங்கிருந்து பிடிச்சிட்டு வந்தா..! இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள ரெண்டு பேரும் இங்கிருந்து போகல நின்ன தடம் கூட தெரியாம பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன் ஆமா.." அப்பாவின் வன் சொற்களில் திடுக்கிட்டு கண்ணீரோடு விழித்தாள் சுப்ரியா..
மடியில் போட்டு வளர்த்து.. நெஞ்சில் சாய்த்துக்கொண்டு சின்ன சின்ன உருண்டையாய் உருட்டி வாயில் தந்த என் தந்தைக்கு இப்படி கூட பேச தெரியுமா..?
"நீயெல்லாம் ஒரு மனுஷனா..! பெட்ரோல் ஊத்தி கொளுத்துவியா.. எங்க..? வந்து பாரு.." சிலிர்த்துக்கொண்டு நின்றவனை அடக்கினாள் சுப்ரியா..
"வேண்டாங்க போகலாம்.. தேவையில்லாத பிரச்சினை வேண்டாம்.."
"எப்படிங்க இப்படி இருக்காங்க உங்க மேல கொஞ்சங் கூட பாசம் இல்லையா.. நீங்க எந்த நிலைமையில் இங்க வந்திருக்கீங்க.. ஏன் வந்திருக்கீங்க எதையும் யோசிக்க மாட்டாங்களா..!"
அவனும் சரிக்கு சமமாக கத்த ஆரம்பித்தான்..
"வாங்க போயிடலாம்.. என்னால இதுக்கு மேல இங்க நிக்க முடியல..!" கண்ணீரைத் துடைத்துக் கொண்டு முன்னால் நடக்க அந்த வீட்டை வெறுப்புணர்ச்சியோடு பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து வேகமாக முன்னேறி வண்டியை எடுத்தான் தர்மன்..
"என்னங்க இவரு.. பெத்த அப்பா மாதிரியா பேசறார்.. உங்க அம்மாவும் பார்த்துட்டு பொம்மை மாதிரி நிக்கறாங்க.. உங்க அண்ணன்..ச்சே..! சத்தியமா இப்படி இருப்பாங்கன்னு என நினைச்சு கூட பாக்கல..!" தலையை உலுக்கியபடி பைக்கை ஓட்டினான்..
"நான் செஞ்ச காரியம் அப்படி..! என்னால அவங்களுக்கு ஏற்பட்ட தலை குனிவு அப்படி பேச வைக்குது.."
"இருந்தாலும் இப்படியா..! மனசுல கொஞ்சமாச்சும் பாசம் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வராது.. பகையாளியை கூட இப்படி நிக்க வச்சு கழுத்தறுக்க மாட்டாங்க.."
"கழுத்தறுத்தது நான்தான்.. அந்த ஆத்திரத்தில என்னை தலை முழுகிட்டாங்க.. வெறுத்துட்டாங்க..!" முகத்தில் வந்து மோதிய காற்றில் அவள் கண்ணீர் கூட சில்லிட்டு போயிருந்தது..
மேல் உதட்டை கீழ் பற்களால் கடித்துக் கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்..
முகத்தை பாக்கவாட்டில் திருப்பி.. இப்ப என்னங்க செய்யறது..! என்றான் இறுகிய குரலில்..
"தெரியலைங்க..!" வார்த்தையில் பாதி தான் வந்தது.. மீதி அழுகையில் கரைந்தது..
"கொஞ்சம் அழறதை நிறுத்தறீங்களா..! ஏதாவது யோசிப்போம் இருங்க.." என்றவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தனது நண்பனுக்கு அழைத்தான்..
"மச்சான் நீ சொல்றதெல்லாம் புரியுதுடா.. ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்ல பேசி அம்மாவோட ஆப்ரேஷனுக்கான செலவை பாதியாக குறைச்சு நீ எனக்காக எவ்வளவோ உதவி பண்ணியிருக்க.. அதுக்காக நான் என்ன வேணாலும் செய்யலாம்.. ஆனா ஒரு பிரச்சனை இருக்குடா..! என் தங்கச்சியும் அவ புருஷனும் வந்துருக்காங்க.. அந்த ஆளு கொஞ்சம் கோளாறு புடிச்சவன்.. நடு ராத்திரியில் ஒரு வயசு பொண்ண கொண்டு வந்து வீட்ல தங்க வச்சா ஏகப்பட்ட கேள்வி கேட்டு இருக்கிறவங்களை ஒரு வழி பண்ணிடுவான்..! உனக்கே தெரியும்.. ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் எனக்கு கல்யாணம் முடிவாயிருக்கு.. இந்த நேரத்துல அந்த பொண்ணு இங்க வந்தா என் மச்சாங்காரனே இல்லாத கதையை இட்டு கட்டி ஊர் முழுக்க பரப்பி விட்டுருவான்.. என் நிலைமையை புரிஞ்சுக்கடா.. தப்பா எடுத்துக்காத மச்சான்.."
"சரிடா பிரச்சனை இல்ல.. நான் பாத்துக்கறேன்.." என்பதோடு முடித்துக் கொண்டு அழைப்பை துண்டித்தான்..
"லேடிஸ் ஹாஸ்டல் எதுவும் இந்த நேரத்தில் திறந்திருக்க மாட்டாங்க.. ஒரே ஒரு வழிதான் இருக்கு.. பேசாம என் வீட்ல இன்னைக்கு ராத்திரி தங்கிடறீங்களா..!"
சட்டென வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டாள் சுப்ரியா..
வேகமாக இறங்கியதில் அவள் பக்கம் திரும்பினான் தர்மன்.. அந்த கண்களில் பயத்தைக் கண்டு நொந்து போனவனாய்..
"என்னங்க இப்படி பயப்படறீங்க..! நான் அந்த மாதிரி ஆளெல்லாம் இல்லை.. பத்து வருஷமா அந்த ஹாஸ்பிடல்லதான் வேலை செய்யறேன்.. உங்கள வீட்ல கூட்டிட்டு போய் தங்க வைக்கனும்னு எனக்கும் எண்ணம் இல்ல.. ஆனா இப்போ அதைவிட்டா வேற வழியும் இல்லை.. நடுரோட்ல எவ்வளவு நேரம் நிக்க முடியும்..! ஹாஸ்பிடலுக்குள்ள இந்நேரம் சேர்க்க மாட்டாங்க.. நான் வேற நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. ப்ளீஸ் சீக்கிரமா ஏதாவது ஒரு முடிவெடுங்க.. போலீஸ் ரோந்து வரும் நேரம் இது.. அப்புறம் இரண்டு பேருக்குமே பிரச்சனையாகிடும்..!"
அவன் சொல்வதைப் போல் வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் என்னதான் செய்ய முடியும்..! "சரி போகலாம்..!" கடவுள் மேல் பாரத்தை போட்டு அவன் வண்டியில் ஏறினாள்..
வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு கதவை திறந்து வாங்க என்று அழைத்தபடி மாடிக்கு ஏறினான் தர்மன்..
கீழிருந்த வீடு பெரியதாய் இருந்தது.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிய ஒரு வசதியான குடும்பம் வசிக்குமளவிற்கு நிச்சயம் மூன்று படுக்கையறைகளோடு விசாலமான வீடாகத்தான் இருக்கக்கூடும்..
ஆனால் அது யாருடையது என்று தெரியவில்லை.. மேலே எதற்காக அழைத்து வருகிறான்.. ஒரு கையால் கீழே வழிந்த புடவையை மேல்நோக்கி பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் மாடி படியின் கைப்பிடியை பற்றி பிடித்தபடி மேலே ஏறினாள்..
விசாலமான பெரிய மாடி..! வாட்டர் டேங்க்கை ஒட்டி ஓரமாக ஒரு சின்ன வீடு.. இரண்டு பக்கங்களிலும் வரிசையாக பூந் தொட்டிகள்.. இருளில் என்னென்ன செடிகள் எத்தனை வண்ண மலர்கள் என்று பார்க்க முடியவில்லை.. வாசல் விளக்கை உயிர்பித்து விட்டு
பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்து முதலில் அவன் தான் உள்ளே நுழைந்தான்.. உள்பக்க விளக்கையும் உயிர்பித்தவன் "வாங்க.." என்றான் சற்று தள்ளி நின்று கொண்டு..
தயக்கத்தோடு உள்ளே நுழைந்து வீட்டை சுற்றி பார்த்தாள்.
கொஞ்சம் பெரிய அறை அதனை தொடர்ந்து ஒரு சமையலறை.. 370 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சின்னதான ஒரு வீடு..
அந்த அறையில் வயர் கட்டில் ஓரமாக இருந்தது.. சின்ன எல் இ டி தொலைக்காட்சி பெட்டி சுவற்றில் மாட்ட பட்டிருந்தது.. ஓரத்தில் ஒரு மர பீரோ.. சுவற்றில் மாட்ட பட்டிருந்த சதுர கண்ணாடி.. ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டை பேண்ட் உள்ளாடை இத்யாதிகள்.. ஓரமாய் வைக்கப்பட்டிருந்த இரண்டு பிளாஸ்டிக் இருக்கைகள்.. ஜன்னல் மேடையில் சீப்பு பவுடர்.. ஷேவிங் லோஷன் கிரீம் என வரிசையாக அடக்கப்பட்டிருக்க மிச்ச இடம் வெற்றிடமாகவே இருந்தது..
"உட்காருங்க..!" என்று கட்டிலை காட்டியவன் நேரடியாக சமையலறைக்குள் சென்றான்..
சுப்ரியா அமரவில்லை..! அந்த பத்துக்கு பத்தடி அறையை ஐந்தாவது முறையாக கண்களை சுழலை விட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்..
உள்ள போனவன் பத்தாவது நிமிடம் தட்டோடு வெளியே வந்தான்..
"அட ஏன் நிக்கறீங்க உட்காருங்க..!" என்றதும் மெல்ல கட்டிலில் அமர்ந்தாள்..
"பசியோட இருப்பீங்க முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறமா தூங்குங்க.." என்ற தட்டை அவள் புறம் நீட்டினான்..
அறையும் குறையுமாக ஜாம் தடவப்பட்ட நான்கு பிரெட் துண்டுகள் அதிலிருக்க தயக்கத்தோடு அதை வாங்காமல் அவனைப் பார்த்தாள் சுப்ரியா..
"என்ன அப்படி பாக்கறீங்க.. இதுல மயக்க மருந்து எதுவும் கலக்கல..! பயப்படாம சாப்பிடுங்க.." அவன் சொன்னதில் திடுக்கிட்டு போனவளாய் தட்டை வாங்கிக் கொண்டாள்..
"சாரிங்க வீட்ல எதுவும் இல்ல..! பிரட் மட்டும்தான் இருந்தது ஜாம் கூட காலி.. ஏதோ இருக்கிறதை வழிச்சு போட்டுக் கொண்டு வந்தேன்.. பால் இருக்கு.. காய்ச்சிக் கொண்டு வரேன் இருங்க.." என்று எழுந்தான்..
"பரவாயில்லை இருக்கட்டும் இதுவே போதும்..!" அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் சென்றிருந்தான்..
மீண்டும் 10 நிமிடங்கள் கழித்து ஒரு சின்ன டம்ளரில் பாலோடு வந்தவன் ரொம்ப கொதிக்குது.. சூடு ஆறுன உடனே குடிச்சுருங்க.. ! கீழே வைத்துவிட்டு தனது மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.. குளியலறை இருக்கிறதா..? எங்கே போய் உடைமாற்றுவானாம்.. அவளுக்கு எதுவும் புரியவில்லை..
சின்ன சின்ன துகள்களாக பிரெட்டை உடைத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள் சுப்ரியா..
பத்து நிமிடங்கள் கழித்து அறைக்குள் வந்தவன்.. பேண்ட் சட்டையை மாற்றிவிட்டு கைலியும் பனியனும் அணிந்திருந்தான்..
"இங்கேயே கட்டில்ல படுத்துக்கோங்க நான் வெளியே தூங்கறேன்..!" என்று ஒரு தலகாணி ஒரு போர்வையை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன் தலையை மட்டும் நீட்டி உள்ளே பார்த்தான்..
"கதவை சாத்திக்கோங்க.." என்று விட்டு அவன் சென்று விட.. அவசரமாக சென்று கதவை தாழிட்டாள் சுப்ரியா..
ஒரு வழியாக நான்கு ரொட்டி துண்டுகளையும் காலி செய்து அவன் வைத்து விட்டு போன பாலை பருகி.. பாத்திரங்களை சமையல் அறைக்கு எடுத்துச் சென்றாள்.. மொத்தமாக சேர்த்து பத்து பாத்திரங்கள் கூட சமையலறையில் இல்லை.. ஒரு கேஸ் அடுப்பு ஒரு மின் அடுப்பு.. அலமாரியில் காலியான டப்பாக்கள்.. மூன்று நான்கு தட்டு ஐந்தாறு டம்ளர்கள்.. பால் காய்ச்சும் பாத்திரம்.. மூன்று அலுமினிய பாத்திரங்கள்.. மூன்று கரண்டிகள்.. இவ்வளவுதான் அந்த சமையலறையில் இருந்தன..
"சிங்க்ல தண்ணி வருமா..!" குழாயை திருப்பி பார்க்க தண்ணீர் தடிமனாக கொட்டியது.. பாத்திரங்களை கழுவி அந்த மேடையிலேயே வைத்துவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்..
இதயம் சோர்ந்து போயிருந்தது.. காலையிலிருந்து சிறுநீர் கழிக்காமல் அடிவயிற்றில் கடுப்பு..! ஒரு ஆடவனிடம் பாத்ரூம் எங்கிருக்கிறது என்று கேட்கக்கூட சங்கோஜமாய் இருக்கவே அவசர தேவையை அடக்கிக் கொண்டு கட்டிலில் படுத்தாள்..
உறக்கம் வருவேனா என்றது..
உறங்க கூடாது..! இது போன்ற அந்நிய இடத்தில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். யோசனையோடு தன் சூன்ய நிலையை எண்ணி மனம் வெதும்பியவளாக.. வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க.. கதவைத் தட்டும் ஓசை..
"கதவை திறங்க.. கதவை திறக்கறீங்களா இல்லையா..!" அவன் குரல் வித்தியாசமான தோரணையில் கனமாய் ஒலிக்க.. இருதயத்தை பீடித்த நடுக்கத்துடன் முதுகுத்தண்டு சில்லிட்டு போனாள் சுப்ரியா..
தொடரும்..

Last edited: