- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
கை முறிந்த நிலையில் இரண்டு நாட்களாக மருத்துவமனை வாசம்.. அவர் தள்ளிவிட்டதுல கை உடைஞ்சிடுச்சு.. என்ற உண்மையை இப்போதுதான் தாயிடம் சொல்லி இருக்கிறாள் மாதவி..
"தெரியாம கூட பட்டிருக்கலாமே கண்ணம்மா..!!" ஏதாவது ஒரு புள்ளியில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து வாழ மாட்டார்களா என்ற நப்பாசை.. மாதவி இயலாமையுடன் தாயை பார்த்தாள்..
"இப்ப கூட உனக்கு புரியலையா.. இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியாம்மா.. அம்மா நான் கர்ப்பமா இருக்கேன்.." மாதவி சொல்லி முடிக்கும் கீதாவின் விழிகள் ஆச்சரியத்தோடு பெரியதாக விரிந்தன.. மனதுக்குள் மகிழ்ச்சி பிரவாகம் பொங்கியது.. வாரிசு வரப்போகிறது.. நல்ல நேரம் பிறக்கப் போகிறது.. அடுத்தடுத்து ஆனந்த பூக்கள் அடுக்கடுக்காக மலர அதை நெருப்பிலிட்டு கொளுத்தும் வண்ணம் அடுத்த வார்த்தையை உதிர்த்தாள் மாதவி..
"என் வயித்துல வளர்ற குழந்தையோட அப்பா அவர் இல்லையாம்.. இந்த குழந்தைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.. எவன்கிட்டயோ கெட்டுப் போய் குழந்தையை வாங்கிட்டு வந்து அதுக்கு அவர் பெயரை உபயோகப்படுத்தி பார்க்கிறேனாம்.." சொல்லி முடிக்கும் முன்னே..
கண்கள் இருட்டிக் கொண்டு வர கீதா நெஞ்சு வலியில் சுருண்டாள்.. பிறகென்ன..? சிக்கிச்சைக்கு பின் அடுத்த வார்டில் அவளை அட்மிட் செய்ய வேண்டியதாகி போனது..
கையில் கட்டோடு அம்மாவின் அருகே அமர்ந்திருந்தாள் மாதவி.. இரண்டு பிள்ளைகளும் கோழி குஞ்சாய் சுவரோரம் ஒடுங்கி நின்றிருந்தன..
கண் விழித்து பார்த்தாள் கீதா.. மாதவிக்கு அயற்சியாக இருந்தது.. கணவனை இழந்த பின் இரும்பாய் தன்னையும் தன் தங்கைகளையும் வளர்த்த அன்னை.. தன் துன்பத்தை தாளாமல் நெஞ்சுவலி கண்டு துவண்டு போயிருந்ததில் நொந்து போயிருந்தாள்..
ஆறுதல் சொல்லி தன்னை தூணாக தாங்கி பிடிக்க வேண்டிய நேரத்தில் இப்படி பலவீனமாகி தன்னையும் வேதனைப்படுத்தலாமா என்று கேட்க முடியாத கேள்வி அவள் நெஞ்சோரம் தேங்கி நின்றது..
"மா.. மாப்பிள்ளை என்னமா சொன்னாரு.." வார்த்தைகள் காற்றோடு கலந்து.. கரைந்து போயின..
மாதவியின் நெஞ்சில் விரக்தி மூண்டது.. இப்படி படுக்கையில் வந்து விழுந்த பின் எந்த உண்மையைச் சொல்லி தாயிடம் ஆறுதல் தேட முடியும்..
"ஒன்னும் இல்லைமா.. ஏதோ கோபத்தில் பேசிட்டார்.. வழக்கமா நடக்கிறது தானே..!! நான் பாத்துக்கறேன்.. எல்லாம் சரியாகிவிடும்.. பிள்ளைங்க முன்னாடி எதையும் காட்டிக்க வேண்டாம்.. அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்.." திடமாக பேசியவள் ஒரு கட்டத்தில் உடையும் தருவாயில்..
"என்னம்மா நீ.. தைரியமா இருக்க வேண்டாமா..!! இப்படி சின்ன விஷயத்துக்கு உடைஞ்சு போயிட்டா நான் ரெண்டு தங்கைகளை வச்சுக்கிட்டு என்ன செய்வேன்.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா..? நீதானே என்னோட முழு பலம்.. நீ கூட இருந்தா மட்டும் போதும்மா.. ப்ளீஸ் இனி எங்களுக்காகவாது மனசுல எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம தைரியமா இரு.. கண்டிப்பா என்னோட வாழ்க்கை சரியாகிடும்.." என்று தன்னையும் மீறி பலவீனத்தை தாயிடம் வெளிப்படுத்தி அடைக்கலம் தேடினாள்..
எப்படி சரியாகும்.. கணவன் கோவலனாகி பழைய காதலியின் மயக்கத்தில் அவளோடு சுற்றிக் கொண்டிருக்கிறான்.. எல்லாம் கைக்கூடி வரும் என்ற நம்பிக்கை சுத்தமாக அற்றுப் போன நிலையில் வாழ்க்கை வெறுமையாக தெரிகிறது..
ஆன்ட்டி ஹீரோ திருந்துவான்.. என்று கதைகளில் படித்து மனதோடு அவள் கொண்ட நம்பிக்கை கருகி போனது..
இவன் ஆன்ட்டி ஹீரோ கூட இல்லை.. இவனை எந்த வகையறாவில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.. தன் உயிரணுவில் உருவான குழந்தையை கீழ்த்தரமாக பேசி வெறுக்கும் இவனை தன் கணவன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.. இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்தான் மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டும்..
இந்நேரத்தில் கீதாவின் பக்கத்து வீட்டு பெண்மணி கொஞ்சம் ஒத்தாசையாக இருந்தாள்..
இரண்டு பிள்ளைகளும் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்வதால்.. பெரிதாக எந்த கஷ்டமும் இல்லை.. அக்கம்பக்கத்து ஆட்கள் உணவு சமைத்துக் கொடுப்பது.. பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது என்று ஆபத்து நேரத்தில் உதவத்தான் செய்தார்கள்.. சிலர் மருத்துவமனைக்கு வந்து மாதவியையும் கீதாவையும் ஒரு முறை பார்த்துவிட்டு சென்றனர்..
ஆனால் மாதவியின் புகுந்த வீட்டு ஆட்கள்.. ஒருமுறை கூட மருத்துவமனை வந்து பார்க்கவில்லை.. மருமகளுக்கு என்ன ஆனது.. மாதவி என்ற பெண் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று கூட அவர்களுக்கு தெரியாது.. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லையாம்..
கீதா மனம் உடைந்து அழுது கொண்டே இருந்தாள்.. தன்னில் புதைத்து வைத்திருக்கும் ரணத்தோடு அன்னையை தேற்றுவது பெரும்பாடாகி போகிறது மாதவிக்கு..
இந்த நிலையில் தான் ரங்கநாயகி மாதவியை காண வந்திருந்தாள்..
"நீ ஹாஸ்பிடல் வந்துட்ட.. உன் புருஷன் அந்த பொம்பளையோட ஊர் சுத்திட்டு இருக்கான்.. நான் கூட மனசு கேட்காம அவனை நிறுத்தி நியாயம் கேட்டேன்.. ஏதோ பாஸ்போர்ட் விஷயமா அவளுக்கு உதவுறானாம்.. அதை தாண்டி அவங்களுக்குள்ள வேற எதுவும் இல்லையாம்.." ரங்கநாயகி சொல்லச் சொல்ல.. மாதவியின் நெஞ்சத்தில் சொல்லொண்ணா வலி பரவியது..
உண்மை எதுவென்று தெரியவில்லை.. ஆனால் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு மதிப்பு கொடுத்து இத்தனை விளக்கங்களை தருபவன்.. தாலி கட்டிய மனைவி தன்னை ஒரு மனுஷியாக கூட மதிக்கவில்லையே.." எத்தனை அழுதாள்.. கதறினாள்.. எங்கள் இருவருக்கும் இடையில் ஒன்றுமே இல்லை என்று பொய்யாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட அவள் மனம் ஆறியிருக்கும்..
ரங்கநாயகி மாதவியின் இடது கையை ஆறுதலாக பற்றிக் கொண்டு தொடர்ந்து பேசினாள்..
"எனக்கு மனசே ஆறலைம்மா.. பாஸ்போர்ட் விஷயமா உதவனும்னா அவங்க வீட்டு ஆளுங்க இல்லையா..? ஹோட்டலும் பார்க்குமா அங்கங்கே உக்காந்து சிரிச்சு சிரிச்சு பேசிக்கிறாங்க.. என் நெஞ்செல்லாம் கொதிக்குது.. அநியாயமா உன்னோட வாழ்க்கையை வீணாக்கிட்டாங்களே..!!" ரங்கநாயகியின் கண்கள் கலங்கியது..
"விடுங்க அக்கா.. என் தலையில என்ன எழுதி இருக்கோ அதன்படி தான் நடக்கும்.." என்றாள் மாதவி விரக்தியாக..
"அப்படியெல்லாம் விட்டுட முடியாதுமா.. உங்க அம்மாவை கூட்டிட்டு போய் உன் அத்தைகிட்ட நியாயம் கேளு.. அவங்க தானே இப்படி ஒரு ஆள புடிச்சு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.. நான் கூட இந்த பைய அந்த பொண்ண மறந்துடுவான்.. எல்லாம் சரியாகிடும்.. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா குடும்ப வாழ்க்கையை தொடங்குவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. எதுவும் நடக்கலையே.." ரங்கநாயகி ஆற்றாமையோடு சொல்ல மாதவி அமைதியாக இருந்தாள்..
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? உன் மாமியாருக்கு உன் புருஷன் அந்த பொண்ணோட பழகறது தெரியாதுன்னு நினைக்கறியா.. பணக்கார வீட்டு பொண்ணு மருமகளா வர்றதுல அந்த அம்மாவுக்கு அத்தனை இஷ்டம்.. என்னவோ காரியம் கை கூடல.. அவங்க அளவுக்கு இந்த குடும்பம் வசதி இல்லையே.. அதனால கவுன்சிலர் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சதுல ஜெயந்திக்கு ரொம்ப வருத்தம்.."
"சமமான இடத்துல பொண்ணு பாத்தா பிற்காலத்துல பையனோட பழைய வாழ்க்கை பற்றி ஏதாவது கேள்வி வந்துடும்னுதான்.. உன்ன மாதிரி ஏழை பெண்ணா பார்த்து அவனுக்கு கட்டி வச்சிருக்காங்க.. இவ்வளவு அழகான மகாலட்சுமி மாதிரி பொண்டாட்டி அமைஞ்சும் அந்த பையன் திருந்தலையே.. கிளி போல பொண்டாட்டி இருந்தும் குரங்கு போல ஒரு வப்பாட்டி கேக்குது போலிருக்கு.." ரங்கநாயகி பெருமூச்சு விட்டாள்.
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க அக்கா. அந்த மாதிரி தப்பா எதுவும் இருக்காது.. ஆரோக்கியமான நட்பாகூட இருக்கலாமே.."
"அட போடி பைத்தியக்காரி.. நீதான் உன் புருஷனை மெச்சிக்கணும்.. அவங்க பேச்சும் பார்வையும் பழக்கமும் அந்த மாதிரி தெரியல.. உன் புருஷன் மோகினி பிசாசு கிட்ட மயங்கி கிடக்கிற மாதிரி.. அவகிட்ட மொத்தமா விழுந்துட்டான்னு நினைக்கிறேன்.. இன்னும் காதல் மயக்கம் தீரல.. நான் ஒரு விஷயம் சொல்லுவேன் நீ வருத்தப்படக்கூடாது.." என்று குரல் தணித்தாள்.
"இதுக்கு மேல வருத்தப்பட என்ன அக்கா இருக்கு சொல்லுங்க.." என்றாள் வறண்ட சிரிப்போடு..
"ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த பொண்ணு வீட்டுக்கு வந்த மாதிரி தெரியுது.. கை நிறைய பழமும் பொருளுமா ஏதேதோ வாங்கிட்டு வந்தது.. உன் அத்தை அந்த பொண்ணு கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசினா.." ரங்கநாயகி ரகசியமாக சொல்லச் சொல்ல மாதவியின் முகம் மாறியது..
"என்ன நடக்குதுன்னு புரியல.. அந்த பொண்ணு அவ புருஷன் கூட ஒற்றுமையா மாதிரி தான் தெரியுது.. ஒரு பிரச்சனையும் இல்லையாம் நான் விசாரிச்சிட்டேன்.."
"நான் கூட விசாரிச்சேன் அக்கா.. புருஷன் கூட சந்தோஷமாத்தான் வாழ்ந்தாளாம்.. அந்த வீட்ல வேலை செய்ற ஒரு பொண்ணு என் அம்மாவோட கடைக்கு அடிக்கடி ஜாக்கெட் தைக்க வருவா.. அவகிட்டதான் கேட்டேன்.. அடிக்கடி தன் கணவனோட வீடியோ கால்ல சந்தோசமா பேசிக்கிறதா அந்த பொண்ணுதான் சொல்லுச்சு.. அவங்களுக்குள்ள எந்த கருத்து வேறுபாடும் இல்லையாம்.."
"அப்புறம் எதுக்காக அடுத்தவ புருஷனை மடக்கி கைக்குள்ள போட்டுக்க நினைக்கிறா..!! இங்கே இருக்கிற வரைக்கும் பொழுதுபோக்குக்காக அவனை பயன்படுத்திக்க நினைக்கிறாளோ.. இது தெரியாம இந்த பைய கல் குடிச்ச மந்தியா அவகிட்ட மயங்கி கிடக்கிறானே..!!" ரங்க நாயகி வருத்தப் பட்டாள்..
"விடுங்க அக்கா.. நாம ஒரு பொண்ண பத்தி தவறா பேச வேண்டாம்.. நல்லதே நடக்கும்ன்னு நம்புவோம்.." என்ற முகத்தில் சோக மேகங்கள் சூழ்ந்திருந்தன..
வேறென்ன சொல்ல முடியும்.. ஹரிச்சந்திராவை தன் பின்னால் சுற்ற வைப்பதில் ஒரு பெருமிதம்.. அவன் தன்னிடம் மயங்கி கிடப்பதில் ஒரு ஆனந்தம்.. பார் உன் கணவன் இப்போதும் என் வசம் விழுந்து கிடக்கிறான் என்ற மமதையோடு மாதவியை வதைக்க எண்ணம்.. இப்படித்தான் ரோஷினி போல் சில ஜென்மங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.. என்பதை ரங்கநாயகியிடம் விளக்கி என்ன பயன்..?
இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளும் போது ஹரிச்சந்திராவை போல் ரோஷினி ஒன்றும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லையாம்.. மணமேடையில் கூட தன் கணவன் கையால் சிரித்த முகத்துடன் தாலி வாங்கிக் கொண்டதாக.. அந்த வேலைக்கார பெண் கூறினாளே.. பணத்திற்காக இவனை விடுத்து இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள அவளாகவே தயாராகிவிட்ட போது.. ஹரிச்சந்திரா இப்போதும் கூட உண்மை உணராமல் முட்டாளாக அவள் பின்னே சுற்றிக் கொண்டிருப்பதில் தான் என்ன செய்துவிட முடியும்..
நீ ஒரு சாத்தானை காதலித்துக் கொண்டிருக்கிறாய் என.. யார் அவனுக்கு உண்மையை புரிய வைப்பது..?
தன்னை தரக் குறைவாக பேசி தன் குழந்தையின் பிறப்பை கீழ்த்தரப்படுத்திய அவனை ரோஷினியிடமிருந்து காப்பாற்றும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை.. விளைவுகளை அவனே அனுபவித்துக் கொள்ளட்டும்.. நிச்சயம் அவன் அழுவான்.. உண்மை உணர்வான்.. அதனால் எனக்கொன்றும் இலாபமில்லை.. நஷ்டமும் இல்லை.. ஆம்.. விட்டு பிரிவதாக முடிவெடுத்துவிட்டாள்..
"மாதவி உன் மாமியார் வேற ஏதோ திட்டத்துல இருக்கற மாதிரி தெரியுது.. பிறகு எதுக்காக அந்த பெண்ணை கூப்பிட்டு உபசரிக்கணும்.. நீயே இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கலாம்னு அவளை வழியனுப்பும் போது உன் மாமியார் நெட்டி முறிச்சு ஆசையா சொன்னது என் காதுல விழுந்தது.." ரங்கநாயகி கவலையோடு சொல்ல அத்தனை துயரத்தின் மத்தியிலும் மாதவிக்கு சிரிப்பு வந்தது..
பாவம் தன் மீதான அக்கறையில் இந்த ரங்கநாயகி அக்கா எத்தனை பிரயத்தனப் பட்டு ஒட்டு கேட்டிருக்கிறாள்.. சுயநலமாக வாழும் கூட்டத்தின் மத்தியில் இப்படி பிறர் நலம் பேணி நன்மையை உருவாக்க நினைக்கும் நாரதர்களும் உண்டு..
"அதெல்லாம் விடுங்க அக்கா.. நீங்க வந்து என்னை பார்த்ததே ரொம்ப சந்தோஷம்.. கடவுள் என் தலையில் என்னை எழுதியிருக்காரோ அதுபடியே நடக்கட்டும்.." அவள் கைப்பற்றி கொண்டு நன்றி பெருக்கோடு பார்த்தாள்..
"சரி மாதவி.. நான் புறப்படறேன் உடம்பை பார்த்துக்கோ.. சீக்கிரம் உன் அம்மாவை கூட்டிட்டு வந்து உன் மாமியார் கிட்ட பேசு.. நீ என் தங்கை மாதிரி.. எந்த கஷ்டமும் இல்லாம நீ சந்தோஷமா வாழனும்.. எனக்கு அது மட்டும்தான் வேணும்.. பக்கத்து ரூம்ல இருக்கிற உன் அம்மாவை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிடறேன்.." என்று அங்கிருந்து நகர போனவளை அவசரமாக இடை மறித்தாள் மாதவி..
"அக்கா.. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க.. இந்த விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.."
"என்ன மாதவி சொல்ற.. தெரியாம எப்படி..? அவங்க தானே வந்து உன் மாமியார் கிட்ட இத பத்தி பேசணும்.. பிரச்சனையை பேசி தீர்க்காம எப்படி சரியாகும்.. உனக்காக வேறு யாரும் இல்லையே..!!"
"எல்லாம் சரிதான் அக்கா.. ஆனா அவங்களை நெஞ்சு வலி வந்து.. படுக்கையில் கிடக்கறாங்க.. இந்த நேரத்துல இத பத்தி பேசறது சரி வராது.. கொஞ்ச நாள் போகட்டும்.. அவங்க உடம்பு தேறின பிறகு விஷயத்தை பக்குவமா எடுத்து சொல்லி நானே என் மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்.. நீங்க அவங்களை சந்திச்சு பொதுவா நாலு வார்த்தை பேசிட்டு கிளம்பிடுங்க.. ப்ளீஸ் அக்கா.." என்று மாதவி கெஞ்சி கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை..
யோசனையோடு பெருமூச்சுவிட்டு "சரி நீ சொல்றபடியே செய்யறேன்.. கவர்ல பழங்கள் இருக்கு.. ஜூஸ் போட்டு குடி.. ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" தலையை தடவி கொடுத்து அங்கிருந்து சென்று விட்டிருந்தாள்..
தாயும் மகனுமாக வீடு வந்து சேர்ந்திருந்தனர்.. மருத்துவமனை பில் அம்பதாயிரத்தை எட்டியிருந்ததில் சேமிப்பு மொத்தமும் கரைந்து போனது..
கீதா உடல் நலம் தேறியிருந்ததால் ஓரளவு பிரச்சனை இல்லை.. தையல் கடை செல்லாமல் சில நாட்கள் ஓய்வில் இருப்பதாக முடிவு செய்திருந்தாள் கீதா.. மாதவிக்குதான் கையை அசைக்க முடியவில்லை..
இரண்டு தங்கைகளும் பாசத்தோடும் அக்கறையோடும் மாதவியை சுற்றி வந்தனர்.. சமையல் வேலை மட்டுமே கீதாவுடையது.. மற்ற அனைத்து வேலைகளையும் இரு தங்கைகளும் இழுத்து போட்டு பொறுப்பாக செய்தனர்.. மாதவிக்கு நெகழ்ச்சியாக இருந்தது..
தங்கைகளோடு பேசி நேரத்தை கழிப்பதில் மனதுக்கு சற்று இதமாக உணர்ந்தாள்..
கீதாதான் அடிக்கடி "என்னமா நடந்தது.. என்ன பிரச்சனை.. உண்மையில் கோபத்தில்தான் அப்படி சொன்னாரா.. தெரியாமத்தான் தள்ளிவிட்டாரா.. உன் மாமியாரும் மத்தவங்களும் முகத்தை ஏன் அப்படி வச்சிருந்தாங்க" கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தாள்..
"அம்மா.. நிம்மதியா இருக்கறதுக்காக இங்க வந்துருக்கேன்.. அடிபட்ட சாக்கை வச்சு கொஞ்ச நாள் அம்மா வீட்ல ஜாலியா இருந்துட்டு போறேனே.. எதுக்காக கேள்வி மேல கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. பத்து நாள் கழிச்சு நானே என் வீட்டுக்கு போயிடுவேன்.. ப்ளீஸ் வேற எதுவும் கேட்காதீங்க.." ஒரு மாதிரியாக அம்மாவை சமாளிக்க வேண்டியதாயிற்று..
"தாலி எங்கடி.. ஆத்திரப்பட்டு கழட்டி வச்சிட்டியா..?" தாயின் கேள்விக்கு கட்டியவனே அறுத்துக் கொண்டு விட்டான் என்றா சொல்ல முடியும்..
"இல்லம்மா ட்ரீட்மென்ட் பண்ணும்போது.. கழட்டி என் கையில கொடுத்தாங்க.. பேக்ல வச்சிருக்கேன்.. அப்புறமா எடுத்து போட்டுக்கறேன்.." இப்படித்தான் சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தாள்..
"தாலியை எடுத்து போட்டுக்கோ மாதவி.. கல்யாணமான பொண்ணு இப்படி வெறுங்கழுத்தா இருக்கறது சரியல்ல.. எத்தனை முறை அம்மா நச்சரித்த போதும் ஏதேதோ காரணங்களை சொல்லி நாட்களை கடத்தினாள்.
சந்தோஷமாக கலகலத்து பேசுவதாக தோன்றினாலும் வீட்டுக்குள் இனம் புரியாத சோகம் விரவிக் கிடந்ததை அனைவராலும் உணர முடிந்தது..
மாதவியின் மாமியாரிடம் தன்மையாக பேசி அவளைப் புகுந்த வீட்டில் விட்டு வர வேண்டும் என்று எண்ணமே பெரும்பாரமாக கீதாவின் நெஞ்சை அடைத்தது.. விகாரமான முகத்துடன் முகத்தை சுழித்து நின்றிருந்த ஜெயந்தியைதான் அவள் பார்த்தாளே..!! இருதயத்தில் கிலி பிடித்துக் கொண்டது.. என்ன பேசி என்ன சமாதானம் சொல்லி.. மாதவியை அவள் புக்ககத்தில் சேர்ப்பது என்று புரியவில்லை..
எது எப்படியோ மாதவியின் வயிற்றில் வளர்ந்த குழந்தை மீது அனைவரும் ஒருமித்து அன்பு செலுத்தி வந்தனர்.. பாப்பா வரப்போகுது என்று இரண்டு பிள்ளைகளும் ஒரே கொண்டாட்டம்.. மாதவிக்கு வயிற்றுப் பிள்ளை சற்று ஆசுவாசத்தை கொடுத்திருந்தது.. தன்னை நிம்மதியாக வைத்துக் கொள்ள நல்ல படங்களும் கதை புத்தகங்களும் உதவின..
இப்போதும் ஆன்ட்டி ஹீரோ கதைகள் படிப்பதை விடுவதில்லை.. திருந்தி வரும் ஆண்ட்டி ஹீரோக்களை பார்க்கும்பொழுது சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது..
பத்து நாட்களுக்குப் பிறகு ரங்கநாயகி மீண்டும் மாதவியை ஃபோனில் அழைத்திருந்தாள்..
"மாதவி உன் புருஷன் நாலஞ்சு நாளா வீட்டுக்கே வரல.. என்னன்னே தெரியல.. அந்த பொண்ணு மட்டும்தான் வந்து பேசிட்டு போகுது.. நான் உன் மாமியார் கிட்ட மெல்ல விசாரிச்சு பார்த்தேன்.. அவன் முக்கிய வேலையா வெளியூருக்கு போயிருக்கிறதா சொல்றாங்க.. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. அவனை முன்னாடி அனுப்பி விட்டு கொஞ்ச நாள் கழிச்சு இவ பின்னாடி போக இரண்டு பேருமா அப்படியே ஓடிப் போயிடுவாங்களோ..!! நீ கொஞ்சம் சூதானமா இருந்துக்கோ மாதவி.. இங்க நடக்கிறது எதுவுமே சரி இல்ல.." சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து அழைப்பை துண்டித்திருந்தாள்..
மாதவிக்கு அயற்சியாக இருந்தது.. நிலைமை கைமீறி சென்ற பின் என்னதான் செய்ய முடியும்..!! அலைகளின் போக்கில் பயணிக்கும் படகு போல் இனி வாழ்க்கையின் போக்கில்.. விதியோடு பயணம் செய்ய வேண்டியதுதான்.. ஆனால் எக்காரணம் கொண்டும் இனி புகுந்த வீடு செல்வதாக எண்ணமில்லை.. அன்னைக்கு தனது நிலையை புரிய வைக்க வேண்டும்..
பரவாயில்லை நாட்களை இழுத்தடித்து ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிக் கொள்ளலாம்.. அதுவரை நிம்மதி தேவை.. தனக்கும் தன் வயிற்றிலிருக்கும் பிள்ளைக்கும்..
ஆனால் அவள் எண்ணங்களுக்கு முரண்பட்டு.. ஒரு மாதம் கழித்து ஹரிச்சந்திராவே தன் மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல.. அவள் வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தான்..
உலகமே தலைகீழாக மாறிவிட்டது போல் அவள் முகத்தில் ஆச்சரியம்.. அவனோடு போவதாக இல்லை என்றாலும் இந்த மாற்றம் அவளை அதிசயிக்க வைக்கிறது..
அதிலும் அவன் முகத்தில் என்றும் காணாத கனிவும்.. அவள் மீதான கருணையும்.. தீராத குற்ற உணர்ச்சியும்.. அனைத்துமிக ஒருசேர முகாமிட்டிருந்த அந்த கோலம்.. மாதவியை குழப்புகிறது.. கடலில் கரைத்த பெருங்காயம் போல் அரிச்சந்திராவின் கனிவும் மற்ற உணர்வுகளும் மாதவியின் கடும் கோபத்திலும் பெரும் சீற்றத்திலும் அமிழ்ந்து போய் விடுகின்றன..
உண்மைதான்.. மாதவியை அவன் பார்த்த பார்வையில் பிரமிப்பு காதல்.. காமம் என அத்தனை உணர்வுகளும் போட்டி போட்டு பொங்கி பெருகியதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
ஆனால் இது எப்படி சாத்தியம்..?
தொடரும்..