- Joined
- Jan 10, 2023
- Messages
- 83
- Thread Author
- #1
மகரிஷி பைக்கை நிறுத்தாமல் சென்றது கூட பரவாயில்லை அவன் ஒரு வேளை பார்க்காமல் இருந்திருக்கலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்.. ஆனாலும் பார்த்த பிறகு அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டு வண்டியை நிறுத்தாமல் சென்ற அந்த திமிரில் மிகுந்த ஆத்திரமடைந்தாள் சந்திரமதி..
அப்போதும் கூட "டேய் குட்டி பையா" என்று கையை நீட்டி அவள் கத்திய சத்தத்தில் மோத்தி மகரிஷியின் கையிடுக்கின் வழியே எட்டிப் பார்த்து பின்பு அவனை முகத்தையும் பார்த்து கத்தியது..
மகரிஷி வாயசைப்பதை பக்கவாட்டிலிந்து பார்க்க முடிந்தது அவளால். ஆனால் மோத்தியிடம் அவன் பேசினான் தெரியவில்லை..
அந்த குட்டி பையன் கிட்ட என்னை பத்தி ஏதோ கேவலமா சொல்லி இருக்கான் லேம்ப் போஸ்ட்டு.. அம்மா சொன்ன மாதிரி சரியான திமிரு புடிச்சவன் போலிருக்கு.. அந்த வழியா தான போறான்.. ஏத்திக்கிட்டு போய் ஸ்கூல்ல இறக்கி விட்டாதான் என்னவாம்..! ஆளையும் மூஞ்சியும் பாரு.. இந்த ஆள்கிட்ட லிப்ட் கேட்டதே தப்பு.. அசிங்கமா போச்சே குமாரு.. நல்லவேளை இந்த அவமானத்த என் பிரண்ட்ஸ் யாரும் பாக்கல.. என்றபடியே சுற்றுமுற்றும் பார்த்தவள் இனி அத்தனை தூரம் நடக்க வேண்டுமே என்று சலிப்போடு கால்களை உதைத்து உதைத்து நடந்து கொண்டிருந்தபோது..
"என்ன பாப்பா.. நேரமாகிடுச்சு.. ஸ்கூலுக்கு இவ்வளவு லேட்டா போற..?" என்றபடி பைக்கில் வந்து நின்றான் ஒரு ஆசாமி..
நிச்சயமாக நாற்பதை தாண்டி இருப்பான்.. கண்களை மறைத்த குளிர் கண்ணாடி.. கையில் கோல்ட் பிளேட்டெட் வாட்ச்.. கழுத்தில் சங்கிலி என்று கொஞ்சம் மினுமினுப்பாக தெரிந்தான்..
முகத்தை பார்த்து ஆட்களை எடை போடுமளவிற்கு சந்திரமதி இன்னும் வளரவில்லை .. இப்போதைய அவள் உடனடி தேவை நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும். அவ்வளவுதான்..
"ஆமா அங்கிள்.. இன்னைக்கு தான் இப்படி..!" இரு தோள்களில் மாட்டியிருந்த புத்தகப் பையின் வார்களை பற்றி கொண்டு சலிப்பாகச் சொன்னாள்..
கைக்கடிகாரத்தை பார்த்தவன்.. "அந்த கவர்மெண்ட் கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் தானே.. நேரமாகிடுச்சே பாப்பா.. இந்நேரம் கேட்டை மூடி இருப்பாங்களே..!" என்றதும் சந்திரமதிக்குள் கலவரம் தொற்றி கொண்டது..
"சரி சீக்கிரம் வா நான் உன்னை கொண்டு போய் ஸ்கூல்ல இறக்கி விட்டுட்டு போறேன்.." அவன் சொன்ன கணம் தயக்கமோ தடுமாற்றமோ யோசனையோ எதுவுமின்றி அப்பாடா என்ற நிம்மதியோடு பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..
அடுத்த ஏழாவது நிமிடத்தில் அவள் பள்ளியின் பக்கத்தில் இறக்கி விட்டிருந்தான் அந்த நபர்..
"தேங்க்யூ அங்கிள்" என்றபடி கேட்டை திறந்து கொண்டு உள்ளே ஓடியிருந்தாள்..
தனக்குத் தெரிந்த ஏரியாக்களில் டூ லெட் போர்டு ஏதாவது தென்படுகிறதா என பார்த்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள் அருந்ததி..
அடுக்குமாடி குடியிருப்புகளில் தென்பட்ட டூலெட் போர்டை கூட விட்டு வைக்கவில்லை அவள்..!
ஆனால் அவள் தோற்றத்தை தன் கண்டு அவர்கள்தான் வாடகைக்கு வீடு தர தயாராக இல்லை..
"வீடு யாருக்குமா..?"
"எனக்கு தான் சார்.."
"ஏற்கனவே ஆள் வந்து கேட்டுட்டு போய்ட்டாங்களே..?" அவள் பதிலை கூட கேட்க தயார் இல்லாமல் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டான் ஒருவன்..
இன்னொரு வீடு அவள் வருமானத்திற்கு கட்டுபடியாகாது என்பதால் அருந்ததியே ரிஜெக்ட் செய்து விட்டாள்.
இன்னொரு இடத்தில் அவளுக்கு ஏற்ற வாடகையோடு கணிசமான முன் பணத்தோடு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சற்று பெரிய வீடு முழு திருப்தியோடு கிடைப்பதாக இருந்தது..
வீட்டு உரிமையாளரும் எந்த நிபந்தனைகளுமின்றி.. யார் என்ன என்ன குடும்பம் எதைப் பற்றியும் விசாரிக்காமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டு அடுத்த மாதமே வாடகைக்கு வந்து விடுங்கள் என்று அவசரப்பட்டது அருந்ததியை சந்தேகமாக யோசிக்க வைத்தது..
"வீட்டை ஒருமுறை சுற்றி பார்க்கலாமா..!"
"இதுதான்மா வீடு இதுக்கு மேல சுத்தி பார்க்க என்ன இருக்குது.." உள்ளே அழைத்து போய் காண்பித்தார்.. சகலமும் திருப்தி.. ஆனால் பக்கத்திலேயே இன்னொரு வீடு.. முழுக்க முழுக்க பேச்சுலர்கள்.. காலி பாட்டில்களும் மது நெடியும்.. சிகரெட் புகையும்.. வேற ஏதோ பெயர் தெரியாத போதை வாசனையும்.. கண்டவளுக்கு எல்லாம் புரிந்து போனது..
தள்ளாடிக்கொண்டே இருவர் வெளியே வந்து மதில் சுவற்றின் மீது சாய்ந்து நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர்..
வீட்டு உரிமையாளரோடு நின்று கொண்டிருந்த அருந்ததியை அந்த ஆண்கள் பார்த்த பார்வையில் அவளுக்கு மூச்சு நின்று போனது..
அதிர்ச்சியும் கேள்வியுமாக ஹவுஸ் ஓனரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
"எம்எல்ஏவோட சொந்தக்கார பசங்கமா.. வீட்டுக்கு காலி பண்ணி தர மாட்டேங்குறானுங்க.. ஆனா அவங்களால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.. நீங்க உங்க இஷ்டத்துக்கு நிம்மதியா இருக்கலாம்.."
"உங்க வீட்டிலும் பொம்பளைங்க இருப்பாங்களே சார்.. அவங்கள கொண்டு வந்து இங்க குடி வைப்பீங்களா..?"
"என்னமா..! தனி பொம்பளையா வந்து வீடு தேடுறியே ஏதோ போனா போகுதுன்னு பாவப்பட்டு வீடு தரலாம்னு நெனச்சா.."
"இந்த தனி பொம்பளை மேல யாரும் பாவப்பட வேண்டாம் சார்.. நான் ஒன்னும் உங்க கிட்ட பிச்சை எடுக்கல.." கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள் அருந்ததி..
"இப்ப எதுக்குடி இப்படி அழுவுற..!" கண்கலங்கி நின்ற தன் தோழி கிருத்திகாவிடம் கேட்டாள் சந்திரமதி.. அம்மனி கூலாகத்தான் இருந்தாள்..
"சயின்ஸ்ல மார்க் ரொம்ப குறைவுடி.."
"எவ்வளவு மார்க்..?"
"தொன்னுத்தி எட்டு.. வீட்ல அப்பா ரொம்ப திட்டுவார்.."
"ஓஹோ.." ஒரு மார்க்கமாக புருவங்களை உயர்த்தினாள் சந்திரமதி..
"ஆமா நீ எவ்வளவு மார்க் இவ்வளவு ஜாலியா இருக்க..?"
"நீ வாங்காமல் விட்ட ரெண்டு மார்க்கை தான் நான் வாங்கி இருக்கேன்.. இந்தா வச்சிக்கிறியா..!"
"எனது இரண்டு மார்க்கா..! என்னடி கவலையே இல்லாம இருக்க..?"
"வேற என்ன பண்ண சொல்ற.. எனக்கு சயின்ஸ் சுத்தமா பிடிக்கல.. பிடிக்கலைங்கறதை விட ஒன்னும் புரியல..
"தொன்னுத்தி எட்டு மார்க் வாங்கிட்டு நான் அழுதுட்டு இருக்கேன்.. ரெண்டே ரெண்டு மார்க் வாங்கிட்டு நீ சிரிக்கிற.. உங்க அம்மா திட்ட மாட்டாங்களா.."
"திட்டுவாங்கதான்.. நான் எவ்வளவோ படிக்க முயற்சி பண்ணி செஞ்சேன்.. புக்கை எடுத்தாலே கடுப்பா வருது.. தலை வலிக்குது தூக்கம் வருது.."
"அது சரி ரெண்டு மார்க் எடுத்துட்டு நீயே சிரிக்கும்போது நான் அழ வேண்டிய அவசியமே இல்லைன்னு நினைக்கிறேன்" என்று கண்ணை துடைத்துக் கொண்டாள் கிருத்திகா..
"அட போடி நானும் பெருசா கவலை படல.. இந்த பிரச்சனைய அப்புறம் பாத்துக்கலாம்..! ஏன் தெரியுமா.. இன்னைக்கு இன்டர் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் காம்படிஷன்.. நான் கொக்கோ விளையாட்டுல கலந்திருக்கேன்ல.. இன்னைக்கு நாங்க எல்லாரும் வேற ஸ்கூலுக்கு விளையாட போறோம்.. ஜாலி ஜாலி, நோ ஹோம் வொர்க் நோ கிளாஸ்.." எம்பி குதித்தாள் சந்திரமதி..
"ஓகே ஓகே என்ஜாய் பண்ணு..! ஆனா எப்படியும் வீட்டுக்கு போனா உனக்கு அடி தான் விழப்போகுது அதனால இப்பவே நல்லா சிரிச்சுக்கோ.." என்று சொல்லிவிட்டு கிருத்திகா அங்கிருந்து ஓடிவிட..
"ஏய்.. சந்திரமதி.. இவ்வளவு நேரமா கூப்பிடுறது.. நேரமாச்சு.. சீக்கிரம் வா.." உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் அனைவரையும் பேருந்தில் ஏற்றிக்கொண்டே கத்தி அவளை அழைத்துக் கொண்டிருந்தார்..
உற்சாகத்துடன் ஓடிப் போய் பேருந்தில் ஏறிக் கொண்டாள் சந்திரமதி..
சந்திரமதி உயரமாக இருப்பதால் கொக்கோ ஓரளவிற்கு விளையாடுவாள்..
இப்படி வெளிபள்ளிகளுக்கு செல்லும்போது ஜூஸ் பிஸ்கட் ஸ்னாக்ஸ் சாப்பாடு என விதவிதமாக தின்பதற்கு கிடைக்கும்.. அத்தோடு படிக்க.. எழுத வேண்டிய வேலை இல்லை.. ஜாலியாக தோழிகளோடு அரட்டை அடித்துக் கொண்டு சுற்றி வரலாம்.. பயணம் பூராவும் பாட்டு கூத்து என களை கட்டும்.. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் பெரிதாக கண்டிப்பு காட்ட மாட்டார்கள்.. கிட்டத்தட்ட ஒரு சின்ன சுற்றுலா பயணம் போல் உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்பதால் இதுபோன்ற வெளி விளையாட்டு போட்டிகளின் போது வகுப்பிற்கு டிமிக்கி கொடுத்து புறப்பட்டு விடுவாள்..
முதலிலேயே அவர்களுக்கான விளையாட்டு முடிந்துவிட்டது.. இனி இறுதி சுற்றுக்கு வேறு பள்ளிக்கு செல்ல வேண்டும்..
தோழிகளின் மீது கை போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் சந்திரா..
ஓட்டப்பந்தயம்.. நீளம் தாண்டுதல்.. உயரம் தாண்டுதல்.. இரும்பு குண்டெறிதல் என மற்ற போட்டிகள் அங்கே நடந்து கொண்டிருக்க.. அந்தப் பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் விழுந்தான் அவன்..
"மகரிஷி..!"
கழுத்தில் ஐடி கார்டு தொங்க.. ஓட்டப்பந்தயத்திற்கான மைதானத்தில் நடுவர்களாக அமர்ந்திருந்தவர்களோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்..
"ஐயோ இவர் டீச்சரா..!" சந்திரமதி வாய் பிளந்தாள்..
"சார்..சார்..!" என்று முழு ஆங்கிலத்தோடு அவனிடம் வந்து நின்று உரையாடிக் கொண்டிருந்த மாணவர்களை தோள் தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவனோடு சேர்ந்து இன்னொரு வாத்தியாரும் மாணவர்களுடன் நின்றிருந்தார்..
ஆனால் பிள்ளைகள் அந்த ஆசிரியரை காட்டிலும் மகரிஷியை தான் அதிகமாக மொய்த்துக் கொண்டிருந்தார்கள்..
"என்னடி அங்கேயே ஆன்னு பாத்துட்டு இருக்க.. அங்க உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா..!" பக்கத்தில் வந்து ஷண்மதி அவள் தோளில் இடித்தாள்..
"ஆமா ஷன்னு.. அதோ அந்த அங்கிள் எங்க வீட்ல தான் குடியிருக்கார்..!"
"அப்படியா..? நீங்களே வாடகை வீட்ல தான இருக்கீங்க..! என்னமோ உங்க சொந்த வீட்டை அவருக்கு வாடகைக்கு விட்டுருக்கிற மாதிரி பேசுற..!" என்றதும் தோழியை முறைத்த சந்திரமதி..
"எங்க வீடுன்னா எங்க வீடு இல்ல.. அது.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு வச்சுக்கயேன்.. அந்த அங்கிள எனக்கு நல்லாவே தெரியும்..?" என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்..
"நிஜமாவா சொல்ற.. விவேகானந்தா பாய்ஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் டீச்சர் உனக்கு தெரிஞ்ச அங்கிளா..!" வாய் பிளந்தாள் ஷண்மதி..
"ஆமா என்கிட்ட நல்லா சிரிச்சு பேசுவார்.. மேக்ஸ்ல சயின்ஸ்ல ஏதாவது டவுட்ன்னா நான் அவர்கிட்ட தான் கேட்பேன்.."
"சயின்ஸ்ல நீ வாங்கின மார்க்குக்கும் இப்ப சொல்ற கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே.."
"அ.. அது.. இந்த வாட்டி சயின்ஸ் எக்ஸாம் அப்போ அவர் ஊருக்கு போயிட்டார்.. அதனால இந்த வாட்டி கொஞ்சம் மார்க் கம்மியா வாங்கிட்டேன்.."
"கொஞ்சம்..?"
"இப்ப நான் சொல்றத நீ நம்பல அப்படித்தானே.."
"சுத்தமா நம்பல.. அங்கிள் அங்கிள்ன்னு சொல்றியே.. அவர் பேர் சொல்லு பார்ப்போம்.."
"பேரு.. பேர் நியாபகம் இல்லை ஷன்னு.. ஆனா சத்தியமா அவரை எனக்கு தெரியும்.."
"நம்பிட்டேன்.."
"உன் கண் முன்னாடியே அவர்கிட்ட போய் பேசிக் காட்டறேன் பாக்கறியா..?"
"ஓ.. போய் பேசு பாக்கலாம்.." என்றதும் வீரநடை போட்டுக் கொண்டு மகரிஷி பக்கத்தில் போய் நின்றாள் சந்திரமதி..
"அங்கிள்..!" சிரித்தபடி அவள் அழைத்த அழைப்பில்.
இரண்டு மாணவர்களுடன் தீவிரமாக எதையோ கலந்துரையாடிக் கொண்டிருந்தவன்
திரும்பி அவள் பக்கம் பார்த்தான்.. கண்கள் இடுங்கி பார்வை கூர்மையானது.
அவன் முகத்தில் மலர்ச்சியும் இல்லை கனிவும் இல்லை..
"ஸ்டோன் கால் மி அங்கிள்.. கால் மீ சார்.." என்றான் அழுத்தமான குரலில்.
சந்திரமதியின் முகம் மாறியது.. நல்ல வேலையாக அவள் தோழி காது கேட்காத தொலைவில் சற்று தள்ளி நின்றவரை சந்தோஷம்..
"ஓகே சாரி சார்.. நீங்க பி டி டீச்சரா..!" அவனோடு நல்ல நட்பையும் அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினாள் சின்னவள்..
முன் கை கட்டிக்கொண்டு.. தன் முன் நின்றிருந்த மாணவியை அழுத்தமாக பார்த்தவன்..
"இல்ல சயின்ஸ் டீச்சர்.. வாட் யூ வாண்ட்?" என்றான் கடுமையான குரலில்..
"ந.. நத்திங்.." சந்திரமதிக்கு முகம் வெளிறி போனது..
"அனாவசியமா என்கிட்ட என்ன பேச்சு வேண்டியிருக்கு உனக்கு.. கோ ஸ்டாண்ட் வித் யுவர் ஸ்கூல் டீம்.." என்று தன் பள்ளி மாணவர்களிடம் திரும்பிக்கொள்ள.. சந்திரமதிக்கு அந்த கடுமையில் அழுகை வந்துவிட்டது..
ஆசிரியர்களிடம் அவள் வாங்காத அடியில்லை.. திட்டு இல்லை.. ஆனாலும் சுற்றி நின்றிருந்த மாணவர்கள் வேறு நகைப்பது போல் தோன்ற இப்போது அவமானப்பட்ட உணர்வு..
"என்னடி நல்லா கொடுத்தனுப்பினார் போலிருக்கு.." தோழி வேற கேலியோடு வரவேற்க..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. வேலை நேரத்தில் இப்படி வந்து பேசக்கூடாதுன்னு சொன்னார்.. நீ நம்பலைன்னாலும் இதுதான் நிஜம். நான் தினமும் அவர்கிட்ட தான் டியூஷன் போறேன்.." அழத் துடித்து பிதுங்கிய உதடுகளோடு.. முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள முயற்சித்தாள்..
"எனக்கு எங்க வீட்ல ஏற்கனவே காது குத்திட்டாங்க..! நீ வேற தனியா குத்த வேணாம்.. இவங்க எல்லாரும் பிரைவேட் ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் அன்ட் டீச்சர்ஸ்.. நம்மள மாதிரி கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கற சாதாரண பசங்களை மதிச்சு பேச மாட்டாங்க மதி.. வா கௌரி மிஸ் எல்லாருக்கும் ஜூஸ் கொடுக்கறாங்க.. சீக்கிரம் போகலைன்னா காலியாகிடும்.." அருந்ததியை இழுத்துக் கொண்டு ஓடினாள் ஷண்மதி..
ஜூஸா மானமா.. என்ற கேள்வியில் ஜூஸ் என்ற விடையே ஜெயிக்க.. மானத்தையும் கவலையும் அங்கேயே போட்டுவிட்டு இரண்டு சிறுசுகளும் வரிசையை நோக்கி ஓடின..
சிறு பிள்ளைகளின் அழுகை சஞ்சலம்.. இவ்வளவுதான்.. ஒரு சந்தோஷத்தை கொடுத்தால் மறு கையிலிருக்கும் சோகத்தை தூக்கி தூர வீசிவிடுவார்கள்..
அதன் பிறகு அவர்கள் பள்ளி வெவ்வேறு விளையாட்டு நடக்கும் இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டே இருக்க மகரிஷியை சந்திரமதியால் பார்க்க முடியவில்லை..
நான்கு மணிக்கு போட்டிகள் முடிந்தது.. பேருந்தில் ஏறி அவர்கள் பள்ளி புறப்பட்டு விட.. இங்கே மகரிஷி மாணவர்களை பெயர் வரிசைப்படி பேருந்தில் ஏற்றிக் கொண்டிருந்தான்..
பாட்டும் கூத்துமாக மாணவர்கள் தங்கள் அமர்க்களத்தை ஆரம்பித்து விட பக்கத்தில் அமர்ந்திருந்த ஆசிரியரிடம் பொதுவான விஷயங்களை ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டே வந்தான். அவன்..
இந்த நேரத்தில் பிரதான சாலை வழியே சென்றால் டிராபிக்கில் நேரமாகிவிடும் என்பதால் குறுக்கு வழியில் புகுந்து சென்றது அந்த பேருந்து..
தெருக்களில் புகுந்ததால் வேகத்தை குறைத்து ஓட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுநர்..
பேசிக் கொண்டே தற்செயலாக ஜன்னல் பக்கம் திரும்பியவன் அப்போதுதான் அவளைப் பார்த்தான்..
அருந்ததி..
தனது ஸ்கூட்டியில் தலை கவிழ்ந்து ஹேண்ட் பேரில் சாய்ந்திருந்தாள்..
பேருந்து மிக மெதுவாக சென்று கொண்டிருந்தது..
மகரிஷி தலை சாய்த்து அவளை அழுத்தமாய் பார்த்தான்..
கண்களில் வழிந்த கண்ணீர் தெரியவில்லை.. ஆனால் அந்த அழுத முகம் நன்றாகவே தெரிந்தது.. மீண்டும் உதிர்ந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து அந்தப் பேருந்துக்கு எதிர் திசையில் சென்றவளை உருவம் மறையும் வரையில் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தான் மகரிஷி..
தொடரும்..

Last edited: