• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
85
சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தவளுக்கு சற்று நேரம் ஓய்வெடுக்க தேகம் அனுமதி கேட்டது..

ஆனால் வேலை செய்த அலுப்பு புடவையின் கசகசப்பும் சேர்ந்து அசவுகரியமாக உணர்ந்தவள்.. வேறு ஏதேனும் எளிமையாக உடுத்திக் கொள்ள நினைத்தாள்.. ஆனால் அவள் உடையும் பொருட்களும் அடங்கியிருந்த பை எங்கிருக்கிறது..?

கேசவன் அவள் துணிப் பையை காரின் டிக்கியில் வைத்தது இப்போதுதான் ஞாபகம் வருகிறது..

சோபாவில் விழிகள் முடி சாய்ந்திருந்த ரமணி அம்மாவின் பக்கத்தில் போய் அமர்ந்தாள்..

"அம்மா..!!"

நல்ல உறக்கம்.. பத்மினியின் குரல் அவர் செவிகளை சென்றடையவில்லை..

தயக்கத்துடன் மீண்டும் "ரமணியம்மா" என்றழைத்தாள்..

"ம்ஹும்.. உண்ட மயக்கம்.. முரட்டு தூக்கம்.." அதற்கு மேல் அவரை எழுப்ப மனம் வரவில்லை.. சங்கடத்தோடு யோசித்தவள் வேறு வழியில்லாமல் அவன் அறைக்கு முன்னே சென்று நின்றாள்..

மெதுவாக கதவை தட்டினாள்..

"யாரு..?" கதவின் துவாரங்களின் வழியே முகத்தில் அறைந்தது அவன் குரல்..

"இங்க என்ன பத்து பேரா இருக்காங்க.. இது என்ன கேள்வி..?" மனதுக்குள் எரிச்சல் வந்தாலும்.. "நான் பத்மினி" என்றாள் அமைதியாக..

கதவை திறந்தான்.. "என்ன வேணும் உனக்கு..?" என்ற கேள்வியை அவன் பார்வை உணர்த்தியது..

"டிரஸ் சேஞ்ச் பண்ணனும்..!!"

புருவங்களை உயர்த்தி அவளை கூர்மையாக பார்த்தான்..

வார்த்தைகளை முடிக்காமல் விட்டதில் குதர்க்கமாக ஏதேனும் கேட்டு விடுவானோ என்ற பதட்டத்தோடு அவசரமாக..

"உங்க கார் டிக்கியில என்னோட பேக் இருக்கு..‌ அதை எடுக்கணும்.." என்று முடித்திருந்தாள் பத்மினி..

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றவன் சாவியோடு வெளியே வந்தான்.. அதுவரை பத்மினி அறை வாசலில்தான் நின்று கொண்டிருந்தாள்..

கார்ல இருந்து இறங்கும்போதே அதையெல்லாம் எடுத்து வச்சுக்கனும் தெரியாதா..? எதுக்காக சும்மா தொந்தரவு பண்ற..!!" சிடுசிடுப்போடு அவன் முன்னே நடக்க பின் தொடர்ந்து ஓடினாள் பத்மினி..

கார் டிக்கியை திறந்து பையை எடுத்தவன்.. பத்மினி பையை வாங்குவதற்காக கையை நீட்டியதை பொருட்படுத்தாமல் அதை கீழே வைத்திருந்தான்.. எரிச்சலை வெளிக்காட்டாது பொறுமையை இழுத்து பிடித்து பையை எடுத்துக் கொண்டாள் பத்மினி..

"கார்ல வேற ஏதாவது வச்சிருக்கியா..? இப்பவே சொல்லிடு.." திரும்பத் திரும்ப என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. இந்த கடைசி வார்த்தையை அவளை யூகித்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தோடு கண்கள் சுருக்கி சிடுசிடுப்பாக பார்த்தான் அவன்..

"வேற எதுவும் இல்ல.. தேங்க்ஸ்..‌" அவள் சொன்னதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றிருந்தான்..‌

ஏதோ கேட்க மறந்துவிட்ட பாவனையோடு துணிப் பையோடு அவன் பின்னே ஓடினாள் பத்மினி..‌

"நான் எங்கே தங்கறது..!!" இடைமறித்து அவள் கேட்கவும் திரும்பி பார்த்தவன் அத்தனை பெரிய வீட்டை ஒரு சுற்று பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தான்.. இவ்வளவு பெரிய வீட்டில் தங்கவா இடம் இல்லை என்பதுதான் அதன் அர்த்தமாம்..

இங்க ரெண்டு ரூம்தான் இருக்கு.. ஒரு ரூம்ல அம்மா இருக்காங்க.. இன்னொன்னுல நான் இருக்கேன்..‌"

"நீ..?" என்று நிறுத்தியவன் "இப்போதைக்கு அம்மா கூட தங்கிக்கோ.. ராத்திரி என் ரூமுக்கு வந்துடு.." என்று சொல்லிவிட்டு செல்ல.. ஆங்.. என்ன விழித்தாள் பத்மினி..

மனுஷன் எந்த அர்த்தத்தில் சொல்லிட்டு போறார்.. நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.. !!

உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்னு சொன்னாரே இப்ப எதுக்காக ராத்திரி ரூமுக்கு வர சொல்றார்.. ஒரு பக்கம் பயமும் பதட்டமும்.. மறுபக்கம் அடிப்பாதத்திலிருந்து ஜிவ்வென காதுக்குள் ஏறிய குறுகுறுப்பு..‌

அவளிடம் பேசிவிட்டு சென்றவன் பத்மினியை போல் சங்கடப்படாமல் தாயை எழுப்பினான்..

"அம்மா எழுந்திரிங்க.. இப்படி சோபாவில் உட்கார்ந்த மேனிக்கு தூங்க வேண்டியது..‌ அப்புறம் முதுகு வலிக்குது.. கழுத்து வலிக்குதுன்னு புலம்ப வேண்டியது.." அதிலும் ஒரு குறையை வைத்து அவரை எழுப்பி படுக்கையறைக்கு அனுப்பினான்..

பையை வைத்துக்கொண்டு நடு கூடத்தில் நின்றவளை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை அவன்.. அம்மாவை அனுப்பிவிட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்றிருந்தான்..

தலையை உலுக்கிக் கொண்டு மாமியாரின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"வா பத்மினி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.." உறக்க கலக்கத்தில் அரைகுறை வார்த்தைகளோடு கட்டிலில் மறுபக்கத்தை காண்பித்தார் ரமணியம்மா..

"இதோ குளிச்சிட்டு வரேன்மா.." என்றவள் பையை திறந்து உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்..

அலுப்பு தீர நன்றாக குளித்து ஒரு ஜார்ஜெட் புடவையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.. அதிகாலையில் எழுந்ததில் கண் எரிச்சல்.. உறக்கம் வராது என்றாலும் சற்று விழிகளை மூடிக் கொண்டால் தேவலாம் போல் தோன்றியது..

ரமணியின் மறுபக்கம் படுத்துக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள்.. "ராத்திரி என்னோட ரூமுக்கு வந்துடு.." இந்த வார்த்தைகள் மட்டும் காதினில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.. எதுக்காக வர சொன்னார் என்ற தவிப்பு அவள் மனதை அலை கழிக்கிறது..

"எதுக்காக உங்க ரூமுக்கு வரணும்" என்று அப்போதே கேட்டிருக்க வேண்டும்.. பதில் தெரிந்திருந்தால் இப்படி மனதோடு போராட வேண்டிய தேவையில்லை.. இடமும் வலமுமாக புரண்டு படுத்தவள்.. அரை மணி நேரத்திற்கு மேல் ஒரே நிலையாக படுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்..

அலைபேசியில் தனக்கு வந்த குறுஞ்செய்திகளை ஆராய்ந்தாள்.. ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டாள்..

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை சில நிமிடங்கள் கழித்து யாரோ பலமாக உலுக்கியதில்.. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்..

எதிரில் நெடிய உருவமாக அவன்தான் நின்று கொண்டிருந்தான்..

"எத்தனை முறை கூப்பிடறது.. காது கேட்கலையா உனக்கு..?! நெற்றி சுருக்கி அதற்கும் ஒரு கடுகடுப்பு..

காதிலிருந்து இயர்போனை எடுத்தாள்..

அதைக் கண்டவுடன்..‌ப்ச்.. என்று கண்களில் அலட்சிய பாவனை காட்டியவன்.. "நான் வெளியே போறேன்.. வீடு திரும்ப நைட் ஆகிடும்.. அம்மா கிட்ட சொல்லிடு.." என்றான்.. சொன்ன பிறகுதான் அவனை முழுதாக பார்த்தாள்.. அகண்ட மார்பு.. தட்டையான வயிறு.. இறுக்கிப் பிடித்த புஜங்கள் கண்களில் பதிந்து போனது..

பேண்ட் சட்டையில் ஃபார்மலாக தயாராகி இருந்தான்.. ஏதோ அலுவலக வேலையாக வெளியே போகிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது..

"சரி..‌!!" என்றாள் பார்வையை தாழ்த்திக் கொண்டு..

"அப்புறம் நைட்டு அம்மாவுக்கு டிஃபன் வகையறாதான் கொடுக்கணும்.. மாமியாரை கரெக்ட் பண்றதுக்காக உன் இஷ்டத்துக்கு எதையாவது சமைச்சு கொடுத்து அவர்களை ஹாஸ்பிடலில் படுக்க வைச்சுடாதே..!!"

"நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்..!!" எவ்வளவுதான் இவன் பேச்சை பொறுப்பது.. அவளும் கோபத்தோடு பதில் சொன்னாள்..

"ம்ம்.." உதய் வெளியேறி விட்டான்..

மாமியாரை கரெக்ட் செய்யும் அளவிற்கு என்ன தேவை இருக்கிறது.. எதற்காக இப்படி சொல்லிவிட்டு செல்கிறான்..? பத்மினிக்கு புரியவில்லை.. என்ன அர்த்தமோ.. ஆனால் நிச்சயம் நல்ல அர்த்தம் மட்டும் இல்லை.. ஏற்கனவே அவன் சொல்லிவிட்டு சென்ற ஒரு வார்த்தையில் ஏகப்பட்ட குழப்பம்.. இதை வேறு ஏன் மனதுக்குள் போட்டு குழப்பிக் கொள்வானேன்.. பெருமூச்சோடு தலையை படுக்கையில் சாய்த்தாள் பத்மினி..‌

மாலையில் எழுந்து தேநீர் தயாரித்து ரமணி அம்மாவிற்கு கொடுத்து தானும் அருந்தினாள்..

"காபி இல்லையாமா..?"

"காபி அதிகமா குடிக்க கூடாது அத்தை.. உடம்புக்கு நல்லது இல்லையே..!! அப்புறம் உங்க பையன் வந்து என்னைத்தான் கத்துவார்.."

"அதுவும் சரிதான்.. தாக பைத்தியத்துக்கு ஏதோ ஒன்னு.." தேநீரை உறிஞ்சினாள்..

"நாளையிலிருந்து நாட்டு சக்கரை வாங்கி வச்சுடறேன்.. சக்கரைக்கு பதில் அதை கலந்து குடிச்சுக்கலாம்.. சுகர் ஏறாது.."

"ராத்திரிக்கு சப்பாத்தியும்.. தக்காளி குருமாவும் பண்ணவா"

"பண்ணுமா.. இவன் சப்பாத்தி பண்ண சோம்பேறித்தனப் பட்டு.. கோதுமை தோசையா சுட்டு போடறான்..‌ அதுவும் எண்ணெயே உத்தாம.. இல்லைனா கோந்து மாதிரி களி கிண்டி வைக்கிறான்.. எனக்கு எதுவும் பிடிக்கறதில்ல.. மருந்து மாதிரி அள்ளி முழுங்க வேண்டியதாயிருக்கு..‌ நீயாவது கொஞ்சம் வாய்க்கு ருசியா சமைச்சு போடு பத்மினி.." என்று சோம்பலான விழிகளுடன் பெருமூச்சு விட்டார்..‌

மிருதுவான சப்பாத்திகளும் சுவையான தக்காளி குருமாவும் ரமணி அம்மாவின் வயிற்றையும் மனதையும் நிறைத்தன.. என்னவோ காதல் கணவனுக்காக காத்திருப்பதைப் போல் அவனுக்காக பிரத்தியேகமாக சுட சுட சப்பாத்தி தயாரித்து ஹாட் பாக்சில் போட்டு வைத்தாள் பத்மினி..‌

வந்தான்.. உண்டான்.. சென்றான்..

அடுப்படியை துடைத்து சுத்தம் செய்துவிட்டு ரமணி அம்மாவுடன் கூடத்தில் அமர்ந்து அவர் சொன்ன பழைய கதைகளை கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மினி..

"நேரமாச்சே..!! ரூமுக்கு போக வேண்டியது தானே.. அவனா வந்து கூப்பிடனும்னு எதிர் பாக்கறியா.. அதெல்லாம் நடக்காது.." என்று ரமணியம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

"பத்மினி.." என்று கதவின் பின்னிருந்து குரல் கொடுத்தான் உதய்..

இருவரும் திரும்பிப் பபார்க்க வா என்ற தலையசைத்து அழைத்தான் அவளை.. ஆங்.. என்று பார்த்தார் ரமணி.. பத்மினிக்கும் அவளையறியாமல் கொஞ்சம் கூச்சம்..

"ஹான்.. வரேன்.." பத்மினி அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட..‌

"ஏய் பொண்ணே கொஞ்சம் இரு.. இப்படி வெறுங்கையோடு போகக்கூடாது.. ஒரு டம்ளர் நிறைய பால் காய்ச்சி எடுத்துட்டு போ..‌!!" சந்தோஷமும் கிசுகிசுப்பாக சொன்னவர்.. ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா நல்லபடியா சந்தோஷமா வாழனும் என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்..

"அந்த மனுஷன் எதுக்காக கூப்பிடறாருன்னு தெரிய மாட்டேங்குது.. அதுக்குள்ள இவங்க வேற.." பெருமூச்சோடு மாமியாரின் பேச்சை தட்ட மனமில்லாமல் பாலை சுண்டக்காய்ச்சி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு விரைந்தாள்..

கதவைத் தட்டாமல் சென்றால் அதற்கு வேறு அரை மணி நேரம் எரிச்சல் பாடம் எடுப்பானே..‌!!

"உள்ளே வரலாமா?" என்று அனுமதி கேட்டு நிற்க.. "வா.." ஒற்றை வார்த்தையோடு அவன் பதில் முடிந்து போனது..

மடிக்கணினியை ஒரு புறம் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்..

"இப்படி உட்காரு" என்று எதிர் இருக்கையை காட்டிவிட்டு.. கணினியை தட்டி அதை அணைத்து வைத்துவிட்டு அவளை பார்த்தான்..

கையிலிருந்த பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள் பத்மினி..

"என்னது..?" கண்கள் இடுங்கினான் உதய்..

"பால்..!!"

"சாரி நான் இதெல்லாம் குடிக்கிறது‌ இல்ல.. வேஸ்ட் பண்ணாம நீயே குடிச்சிடு.."

"சம்பிரதாயம்..?" விழிகளை அகட்டினாள்.. எப்பேர்ப்பட்டவனும் அந்த பார்வையில் விழுந்து கிறங்கி போவான்.. ஆனால் இவனிடம் எந்த மாற்றங்களும் இல்லை..

அவளை ஒரு கணம் கூர்ந்த பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தவன்.. "நமக்கு இடையில என்ன சம்பிரதாயம்..!!" என்றபடி ஒரு மடித்த காகிதத்தை அவளிடம் நீட்டினான்..

இது என்ன புது அணுகுண்டு என்ற ரீதியில் காகிதத்தை வாங்கி பிரித்தாள் பத்மினி..

வீட்டு வாடகை
தண்ணீர்
மெயின்டனன்ஸ்
கரண்ட் பில்.. அனைத்தும் சேர்த்து ஏழாயிரத்துக்கு பில் போட்டிருந்தான்..

ஆங்..‌ என்று வாயை பிளந்து நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

"நீ ஹாஸ்டல்ல இருக்கும் போது எவ்வளவு பீஸ் கட்டின.."

"எ.. எட்டாயிரம்..‌!!" வார்த்தைகள் தந்தி அடித்தன..

"அப்ப இது ஓகே தான்.." என்று தலையசைத்தான்..

புரிந்தும் புரியாத நிலை.. "எதுக்கு எதுக்காக இது..?" என்றவளை ஊன்றிப் பார்த்தான்..‌

"ஏன் உனக்கு தெரியாதா..? வி ஆர் ஜஸ்ட் ஹவுஸ் மேட்ஸ்.. ஹவுஸ் மேட் ரெண்ட் ஷேர் பண்ணிக்கிறதுதானே வழக்கம்..?"

"ஆனா இது உங்க சொந்த வீடுதானே..!!"

"சொந்த வீடுதான்.. உழைச்சு வாங்குன வீடு.. யாரையும் ஓசியில தங்க வைக்க முடியாதே..!! ஏற்கனவே சொன்னதுதான் உன் தேவைகளை நீதான் பாத்துக்கணும்.. என் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமா அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.."

நிபந்தனைகளை மறக்கவில்லை அவள்.. ஆனாலும் வாடகை கொடுப்பது அதிகப்படியாக தோன்றியது.. நம்ம ரூம் என்று சொல்லாமல் என் ரூமுக்கு வந்திடு என்று அவன் சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்கியது..

"நான் யாரோ இல்ல.. உங்க பொண்டாட்டி!!" என்றாள் ரோஷத்துடன்..

"ஆமா.. அக்ரீமெண்ட் பொண்டாட்டி.. !! சாப்பாட்டு செலவை இதுல சேர்க்கல.. நீயே சமைக்கிறதுனால அது மட்டும் தள்ளுபடி..!!"

"ஆஹா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.." பற்களை கடித்தாள் பத்மினி..

"உன் சர்க்காஸ்டிக் பாராட்டை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு..‌ நமக்குள்ள ஓனர் டெனன்ட் ரிலேஷன்ஷிப் இருக்கிறது நல்லது.. அப்பதான் மனைவிங்கிற பெயரில் எந்த உரிமைக்காகவும் என்கிட்ட வந்து நிக்க மாட்டே.."

"நல்ல வேளை உங்க அம்மாவை நிக்க வச்சு சாப்பாடு போடற செலவை கட்டணமா வசூலிக்கல.." மனதுக்குள் பேசியது அவனுக்கு தெளிவாக கேட்டு விட்டதோ என்னவோ..!!

"அம்மா என்னை பெத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வச்சிருக்காங்க.. அவங்களுக்காக செய்ய வேண்டியது என் கடமை.. உனக்காக நான் எதுக்கு செய்யணும்..‌ நீ யார் எனக்கு..? உன் தேவையை நீயே பாத்துக்கோ..!! இங்கே எதுவும் இலவசம் கிடையாது.. எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு.. புரிஞ்சுதா.." நிலை குத்திய பார்வையுடன் அவனை முறைத்தாள் பத்மினி..

"உன்கிட்ட இதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன்.. பேசி முடிச்சாச்சு.. நீ போய் அம்மாகூட ரூம் ஷேர் பண்ணிக்கலாம்.. நான் கூப்பிட்டால் ஒழிய இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை.. குட் நைட்.. என்று வாசலை காண்பித்தான்..‌" அதற்கு மேல் அங்கே நிற்க அவள் ஒன்றும் மானங்கெட்டவள் இல்லையே.. "மாதா மாதம் இந்த வாடகை பணத்தை சரியா கொடுத்துடுவேன் சார்.." என்றவள் திரும்பியும் பாராமல் பால் டம்ளரோடு வேகமாக வெளியேறி நடந்தாள்..

மாமியாரின் அறைக்குள் நுழைய கட்டிலில் படுத்திருந்த ரமணியம்மாள் கேள்வியும் திகைப்புமாய் எழுந்து அமர்ந்தார்..

"என்ன..? வெளியே போக சொல்லிட்டானா.. ப்ச் எதிர்பார்த்தேன்!!" என்று உதட்டை சுழித்தார்

பத்மினி பதில் பேசவில்லை.. அவள் முகம் கருத்து போயிருந்தது.. அதிர்ச்சி அடைவார் புலம்புவார்.. மகனிடம் சென்று கேள்வி கேட்பார் என்று பத்மினி எதிர்பார்த்திருக்க சலனமே இல்லாத அவரின் இந்த பேச்சு பத்மினியை திகைக்க வைத்தது..

"சரி அந்த பாலை இப்படி கொடு.." என்று வாங்கிக் கொண்டவர்.. "சூடு ஆறிப்போச்சு இருந்தாலும் பரவாயில்லை.." என்று டம்ளரை முழுதாக காலி செய்திருந்தார்.. அம்மாவும் பிள்ளையும் என்ன டிசைனோ.. என்ற பார்வையுடன் புருவங்கள் உயர அமைதியாக நின்றிருந்தாள் பத்மினி..

காலி டம்ளரை பக்கத்திலிருந்த டீப்பாயின் மீது வைத்துவிட்டு.. "என்ன பாக்கற.. வந்து படு.. இன்னும் நிறைய காலம் இருக்கு பாத்துக்கலாம்.." என்று சரிந்து படுத்தார் ரமணியம்மாள்.. கன்னத்தில் கை வைத்து சோம்பலான விழிகளுடன் கவலை இல்லாமல் உறங்கியிருந்தவரை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jan 26, 2024
Messages
65
அருமையான பதிவு
 
Member
Joined
May 10, 2023
Messages
48

கார் டிக்கியை திறந்து பையை எடுத்தவன்.. பத்மினி பையை வாங்குவதற்காக கையை நீட்டியதை பொருட்படுத்தாமல் அதை கீழே வைத்திருந்தான்.. எரிச்சலை வெளிக்காட்டாது பொறுமையை இழுத்து பிடித்து பையை கொண்டாள் பத்மினி..

"கார்ல வேற ஏதாவது வச்சிருக்கியா..? இப்பவே சொல்லிடு.." திரும்பத் திரும்ப என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. இந்த கடைசி வார்த்தையை அவளை யூகித்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தோடு கண்கள் சுருக்கி சிடுசிடுப்பாக பார்த்தான் அவன்..

"வேற எதுவும் இல்ல.. தேங்க்ஸ்..‌" அவள் சொன்னதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றிருந்தான்..‌

ஏதோ கேட்க மறந்துவிட்ட பாவனையோடு துணி பையோடு அவன் பின்னே ஓடினாள் பத்மினி..‌

"நான் எங்கே தங்கறது..!!" இடைமறித்து அவள் கேட்கவும் திரும்பி பார்த்தவன் அத்தனை பெரிய வீட்டை ஒரு சுற்று பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தான்.. இவ்வளவு பெரிய வீட்டில் தங்கவா இடம் இல்லை என்பதுதான் அதன் அர்த்தமாம்..

இங்க ரெண்டு ரூம்தான் இருக்கு.. ஒரு ரூம்ல அம்மா இருக்காங்க.. இன்னொன்னுல நான் இருக்கேன்..‌"

"நீ..?" என்று நிறுத்தியவன் "இப்போதைக்கு அம்மா கூட தங்கிக்கோ.. ராத்திரி என் ரூமுக்கு வந்துடு.." என்று சொல்லிவிட்டு செல்ல.. ஆங்.. என்ன விழித்தாள் பத்மினி..

மனுஷன் எந்த அர்த்தத்தில் சொல்லிட்டு போறார்.. நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.. !!

உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்னு சொன்னாரே இப்ப எதுக்காக ராத்திரி ரூமுக்கு வர சொல்றார்.. ஒரு பக்கம் பயமும் பதட்டமும்.. மறுபக்கம் அடிப்பாதத்திலிருந்து ஜிவ்வென காதுக்குள் ஏறிய குறுகுறுப்பு..‌

அவளிடம் பேசிவிட்டு சென்றவன் பத்மினியை போல் சங்கடப்படாமல் தாயை எழுப்பினான்..

"அம்மா எழுந்திரிங்க.. இப்படி சோபாவில் உட்கார்ந்த மேனிக்கு தூங்க வேண்டியது..‌ அப்புறம் முதுகு வலிக்குது.. கழுத்து வலிக்குதுன்னு புலம்ப வேண்டியது.." அதிலும் ஒரு குறையை வைத்து அவரை எழுப்பி படுக்கையறைக்கு அனுப்பினான்..

பையை வைத்துக்கொண்டு நடு கூடத்தில் நின்றவளை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை அவன்.. அம்மாவை அனுப்பிவிட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்றிருந்தான்..

தலையை உலுக்கிக் கொண்டு மாமியாரின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"வா பத்மினி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.." உறக்க கலக்கத்தில் அரைகுறை வார்த்தைகளோடு கட்டிலில் மறுபக்கத்தை காண்பித்தார் ரமணியம்மா..

"இதோ குளிச்சிட்டு வரேன்மா.." என்றவள் பையை திறந்து உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்..

அலுப்பு தீர நன்றாக குளித்து ஒரு ஜார்ஜெட் புடவையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.. அதிகாலையில் எழுந்ததில் கண் எரிச்சல்.. உறக்கம் வராது என்றாலும் சற்று விழிகளை மூடிக் கொண்டால் தேவலாம் போல் தோன்றியது..

ரமணியின் மறுபக்கம் படுத்துக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள்.. "ராத்திரி என்னோட ரூமுக்கு வந்துடு.." இந்த வார்த்தைகள் மட்டும் காதினில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.. எதுக்காக வர சொன்னார் என்ற தவிப்பு அவள் மனதை அலை கழித்தது

"எதுக்காக உங்க ரூமுக்கு வரணும்" என்று அப்போதே கேட்டிருக்க வேண்டும்.. பதில் தெரிந்திருந்தால் இப்படி மனதோடு போராட வேண்டிய தேவையில்லை.. இடமும் வலமுமாக புரண்டு படுத்தவள்.. அரை மணி நேரத்திற்கு மேல் ஒரே நிலையாக படுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்..

அலைபேசியில் தனக்கு வந்த குறுஞ்செய்திகளை ஆராய்ந்தாள்.. ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டாள்..

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை சில நிமிடங்கள் கழித்து யாரோ பலமாக உலுக்கியதில்.. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்..

எதிரில் நெடிய உருவமாக அவன்தான் நின்று கொண்டிருந்தான்..

"எத்தனை முறை கூப்பிடறது.. காது கேட்கலையா உனக்கு..?! நெற்றி சுருக்கி அதற்கும் ஒரு கடுகடுப்பு..

காதிலிருந்து இயர்போனை எடுத்தாள்..

அதைக் கண்டவுடன்..‌ப்ச்.. என்று கண்களில் அலட்சிய பாவனை காட்டியவன்.. "நான் வெளியே போறேன்.. வீடு திரும்ப நைட் ஆகிடும்.. அம்மா கிட்ட சொல்லிடு.." என்றான்.. சொன்ன பிறகுதான் அவனை முழுதாக பார்த்தாள்.. அகண்ட மார்பு.. தட்டையான வயிறு.. இறுக்கிப் பிடித்த புஜங்கள் கண்களில் பதிந்து போனது..

பேண்ட் சட்டையில் ஃபார்மலாக தயாராகி இருந்தான்.. ஏதோ அலுவலக வேலையாக வெளியே போகிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது..

"சரி..‌!!" என்றாள் பார்வையை தாழ்த்திக் கொண்டு..

"அப்புறம் நைட்டு அம்மாவுக்கு டிஃபன் வகையறாதான் கொடுக்கணும்.. மாமியாரை கரெக்ட் பண்றதுக்காக உன் இஷ்டத்துக்கு எதையாவது சமைச்சு கொடுத்து அவர்களை ஹாஸ்பிடலில் படுக்க வைச்சுடாதே..!!"

"நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்..!!" எவ்வளவுதான் இவன் பேச்சை பொறுப்பது.. அவளும் கோபத்தோடு பதில் சொன்னாள்..

"ம்ம்.." உதய் வெளியேறி விட்டான்..

மாமியாரை கரெக்ட் செய்யும் அளவிற்கு என்ன தேவை இருக்கிறது.. எதற்காக இப்படி சொல்லிவிட்டு செல்கிறான்..? பத்மினிக்கு புரியவில்லை.. என்ன அர்த்தமோ.. ஆனால் நிச்சயம் நல்ல அர்த்தம் மட்டும் இல்லை.. ஏற்கனவே அவன் சொல்லிவிட்டு சென்ற ஒரு வார்த்தையில் ஏகப்பட்ட குழப்பம்.. இதை வேறு ஏன் மனதுக்குள் போட்டு குழப்பிக் கொள்வானேன்.. பெருமூச்சோடு தலையை படுக்கையில் சாய்த்தாள் பத்மினி..‌

மாலையில் எழுந்து தேநீர் தயாரித்து ரமணி அம்மாவிற்கு கொடுத்து தானும் அருந்தினாள்..

"காபி இல்லையாமா..?"

"காபி அதிகமா குடிக்க கூடாது அத்தை.. உடம்புக்கு நல்லது இல்லையே..!! அப்புறம் உங்க பையன் வந்து என்னைத்தான் கத்துவார்.."

"அதுவும் சரிதான்.. தாக பைத்தியத்துக்கு ஏதோ ஒன்னு.." தேநீரை உறிஞ்சினாள்..

"நாளையிலிருந்து நாட்டு சக்கரை வாங்கி வச்சுடறேன்.. சக்கரைக்கு பதில் அதை கலந்து குடிச்சுக்கலாம்.. சுகர் ஏறாது.."

"ராத்திரிக்கு சப்பாத்தியும்.. தக்காளி குருமாவும் பண்ணவா"

"பண்ணுமா.. இவன் சப்பாத்தி பண்ண சோம்பேறித்தனப் பட்டு.. கோதுமை தோசையா சுட்டு போடறான்..‌ அதுவும் எண்ணெயே உத்தாம.. இல்லைனா கோந்து மாதிரி களி கிண்டி வைக்கிறான்.. எனக்கு எதுவும் பிடிக்கறதில்ல.. மருந்து மாதிரி அள்ளி முழுங்க வேண்டியதாயிருக்கு..‌ நீயாவது கொஞ்சம் வாய்க்கு ருசியா சமைச்சு போடு பத்மினி.." என்று சோம்பலான விழிகளுடன் பெருமூச்சு விட்டார்..‌

மிருதுவான சப்பாத்திகளும் சுவையான தக்காளி குருமாவும் ரமணி அம்மாவின் வயிற்றையும் மனதையும் நிறைத்தன.. என்னவோ காதல் கணவனுக்காக காத்திருப்பதைப் போல் அவனுக்காக பிரத்தியேகமாக சுட சுட சப்பாத்தி தயாரித்து ஹாட் பாக்சில் போட்டு வைத்தாள் பத்மினி..‌

வந்தான்.. உண்டான்.. சென்றான்..

அடுப்படியை துடைத்து சுத்தம் செய்துவிட்டு ரமணி அம்மாவுடன் கூடத்தில் அமர்ந்து அவர் சொன்ன பழைய கதைகளை கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மினி..

"நேரமாச்சே..!! ரூமுக்கு போக வேண்டியது தானே.. அவனா வந்து கூப்பிடனும்னு எதிர் பாக்கறியா.. அதெல்லாம் நடக்காது.." என்று ரமணியம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

"பத்மினி.." என்று கதவின் பின்னிருந்து குரல் கொடுத்தான் உதய்..

இருவரும் திரும்பிப் பபார்க்க வா என்ற தலையசைத்து அழைத்தான் அவளை.. ஆங்.. என்று பார்த்தார் ரமணி.. பத்மினிக்கும் அவளையறியாமல் கொஞ்சம் கூச்சம்..

"ஹான்.. வரேன்.." பத்மினி அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட..‌

"ஏய் பொண்ணே கொஞ்சம் இரு.. இப்படி வெறுங்கையோடு போகக்கூடாது.. ஒரு டம்ளர் நிறைய பால் காய்ச்சி எடுத்துட்டு போ..‌!!" சந்தோஷமும் கிசுகிசுப்பாக சொன்னவர்.. ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா நல்லபடியா சந்தோஷமா வாழனும் என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்..

"அந்த மனுஷன் எதுக்காக கூப்பிடறாருன்னு தெரிய மாட்டேங்குது.. அதுக்குள்ள இவங்க வேற.." பெருமூச்சோடு மாமியாரின் பேச்சை தட்ட மனமில்லாமல் பாலை சுண்டக்காய்ச்சி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு விரைந்தாள்..

கதவைத் தட்டாமல் சென்றால் அதற்கு வேறு அரை மணி நேரம் எரிச்சல் பாடம் எடுப்பானே..‌!!

"உள்ளே வரலாமா?" என்று அனுமதி கேட்டு நிற்க.. "வா.." ஒற்றை வார்த்தையோடு அவன் பதில் முடிந்து போனது..

மடிக்கணினியை ஒரு புறம் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்..

"இப்படி உட்காரு" என்று எதிர் இருக்கையை காட்டிவிட்டு.. கணினியை தட்டி அதை அணைத்து வைத்துவிட்டு அவளை பார்த்தான்..

கையிலிருந்த பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள் பத்மினி..

"என்னது..?" கண்கள் இடுங்கினான் உதய்..

"பால்..!!"

"சாரி நான் இதெல்லாம் குடிக்கிறது‌ இல்ல.. வேஸ்ட் பண்ணாம நீயே குடிச்சிடு.."

"சம்பிரதாயம்..?" விழிகளை அகட்டினாள்.. எப்பேர்ப்பட்டவனும் அந்த பார்வையில் விழுந்து கிறங்கி போவான்.. ஆனால் இவனிடம் எந்த மாற்றங்களும் இல்லை..

அவளை ஒரு கணம் கூர்ந்த பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தவன்.. "நமக்கு இடையில என்ன சம்பிரதாயம்..!!" என்றபடி ஒரு மடித்த காகிதத்தை அவளிடம் நீட்டினான்..

இது என்ன புது அணுகுண்டு என்ற ரீதியில் காகிதத்தை வாங்கி பிரித்தாள் பத்மினி..

வீட்டு வாடகை
தண்ணீர்
மெயின்டனன்ஸ்
கரண்ட் பில்.. அனைத்தும் சேர்த்து ஏழாயிரம் என்று எழுதப்பட்டிருந்தது..

ஆங்..‌ என்று வாயை பிளந்து நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

"நீ ஹாஸ்டல்ல இருக்கும் போது எவ்வளவு பீஸ் கட்டின.."

"எ.. எட்டாயிரம்..‌!!" வார்த்தைகள் தந்தி அடித்தன..

"அப்ப இது ஓகே தான்.." என்று தலையசைத்தான்..

புரிந்தும் புரியாத நிலை.. "எதுக்கு எதுக்காக இது..?" என்றவளை ஊன்றிப் பார்த்தான்..‌

"ஏன் உனக்கு தெரியாதா..? வி ஆர் ஜஸ்ட் ஹவுஸ் மேட்ஸ்.. ஹவுஸ் மேட் ரெண்ட் ஷேர் பண்ணிக்கிறது தானே வழக்கம்..?"

"ஆனா இது உங்க சொந்த வீடுதானே..!!"

"சொந்த வீடுதான்.. உழைச்சு வாங்குன வீடு.. யாரையும் ஓசியில தங்க வைக்க முடியாதே..!! ஏற்கனவே சொன்னதுதான் உன் தேவைகளை நீதான் பாத்துக்கணும்.. என் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமா அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.."

நிபந்தனைகளை மறக்கவில்லை அவள்.. ஆனாலும் வாடகை கொடுப்பது அதிகப்படியாக தோன்றியது.. நம்ம ரூம் என்று சொல்லாமல் என் ரூமுக்கு வந்திடு என்று அவன் சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்கியது..

"நான் யாரோ இல்ல.. உங்க பொண்டாட்டி!!" என்றாள் ரோஷத்துடன்..

"ஆமா.. அக்ரீமெண்ட் பொண்டாட்டி.. !! சாப்பாட்டு செலவை இதுல சேர்க்கல.. நீயே சமைக்கிறதுனால அது மட்டும் தள்ளுபடி..!!"

"ஆஹா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.." பற்களை கடித்தாள் பத்மினி..

"உன் சர்க்காஸ்டிக் பாராட்டை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு..‌ நமக்குள்ள ஓனர் டெனன்ட் ரிலேஷன்ஷிப் இருக்கிறது நல்லது.. அப்பதான் மனைவிங்கிற பெயரில் எந்த உரிமைக்காகவும் என்கிட்ட வந்து நிக்க மாட்டே.."

"நல்ல வேளை உங்க அம்மாவை நிக்க வச்சு சாப்பாடு போடற செலவை கட்டணமா வசூலிக்கல.." மனதுக்குள் பேசியது அவனுக்கு தெளிவாக கேட்டு விட்டதோ என்னவோ..!!

"அம்மா என்னை பெத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வச்சிருக்காங்க.. அவங்களுக்காக செய்ய வேண்டியது என் கடமை.. உனக்காக நான் எதுக்கு செய்யணும்..‌ நீ யார் எனக்கு..? உன் தேவையை நீயே பாத்துக்கோ..!! இங்கே எதுவும் இலவசம் கிடையாது.. எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு.. புரிஞ்சுதா.." நிலை குத்திய பார்வையுடன் அவனை முறைத்தாள் பத்மினி..

"உன்கிட்ட இதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன்.. பேசி முடிச்சாச்சு.. நீ போய் அம்மாகூட ரூம் ஷேர் பண்ணிக்கலாம்.. நான் கூப்பிட்டால் ஒழிய இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை.. குட் நைட்.. என்று வாசலை காண்பித்தான்..‌" அதற்கு மேல் அங்கே நிற்க அவள் ஒன்றும் மானங்கெட்டவள் இல்லையே.. "மாதா மாதம் இந்த வாடகை பணத்தை சரியா கொடுத்துடுவேன் சார்.." என்றவள் திரும்பியும் பாராமல் பால் டம்ளரோடு வேகமாக வெளியேறி நடந்தாள்..

மாமியாரின் அறைக்குள் நுழைய கட்டிலில் படுத்திருந்த ரமணியம்மாள் கேள்வியும் திகைப்புமாய் எழுந்து அமர்ந்தார்..

"என்ன..? வெளியே போக சொல்லிட்டானா.. ப்ச் எதிர்பார்த்தேன்!!" என்று உதட்டை சுழித்தார்

பத்மினி பதில் பேசவில்லை.. அவள் முகம் கருத்து போயிருந்தது.. அதிர்ச்சி அடைவார் புலம்புவார்.. மகனிடம் சென்று கேள்வி கேட்பார் என்று பத்மினி எதிர்பார்த்திருக்க சலனமே இல்லாத அவரின் இந்த கேள்வி பத்மினியை திகைக்க வைத்தது..

"சரி அந்த பாலை இப்படி கொடு.." என்று வாங்கிக் கொண்டவர்.. "சூடு ஆறிப்போச்சு இருந்தாலும் பரவாயில்லை.." என்று டம்ளரை முழுதாக காலி செய்திருந்தார்.. அம்மாவும் பிள்ளையும் என்ன டிசைனோ என்ற பார்வையுடன் புருவங்கள் உயர அமைதியாக நின்றிருந்தாள் பத்மினி..

கால் டம்ளரை பக்கத்திலிருந்த டீப்பாயின் மீது வைத்துவிட்டு.. "என்ன பாக்கற.. வந்து படு.. இன்னும் நிறைய காலம் இருக்கு பாத்துக்கலாம்.." என்று சரிந்து படுத்தார் ரமணியம்மாள்.. கன்னத்தில் கை வைத்து சோம்பலான விழிகளுடன் கவலை இல்லாமல் உறங்கியிருந்தவரை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி..

தொடரும்..
Ennangada nadakudhu inga
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Sisteruku Georgette sareeyil ishtamaano.. Ningalude pala kadhakalilum njan ee saari kaanunnu, pinne chiffon sariyum..

Hmm.. Veetille food okay but wheat food ishtamilla..

Ha ha.. Super sister.. You have a very good sense of humor.. Highly enjoyable.. Irundhalum andha "sarcastic" word light ah disturbing ah iruku.. Hmm..

Nice episode and it is really a stress reliever.. I had a good time.. Thank you so much...
 
Member
Joined
Jan 29, 2023
Messages
58
💖💝💖💝💖💝💝💖
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
140
சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தவளுக்கு சற்று நேரம் ஓய்வெடுக்க தேகம் அனுமதி கேட்டது..

ஆனால் வேலை செய்த அலுப்பு புடவையின் கசகசப்பும் சேர்ந்து அசவுகரியமாக உணர்ந்தவள்.. வேறு ஏதேனும் எளிமையாக உடுத்திக் கொள்ள நினைத்தாள்.. ஆனால் அவள் உடையும் பொருட்களும் அடங்கியிருந்த பை எங்கிருக்கிறது..?

கேசவன் அவள் துணிப் பையை காரின் டிக்கியில் வைத்தது இப்போதுதான் ஞாபகம் வருகிறது..

சோபாவில் விழிகள் முடி சாய்ந்திருந்த ரமணி அம்மாவின் பக்கத்தில் போய் அமர்ந்தாள்..

"அம்மா..!!"

நல்ல உறக்கம்.. பத்மினியின் குரல் அவர் செவிகளை சென்றடையவில்லை..

தயக்கத்துடன் மீண்டும் "ரமணியம்மா" என்றழைத்தாள்..

"ம்ஹும்.. உண்ட மயக்கம்.. முரட்டு தூக்கம்.." அதற்கு மேல் அவரை எழுப்ப மனம் வரவில்லை.. சங்கடத்தோடு யோசித்தவள் வேறு வழியில்லாமல் அவன் அறைக்கு முன்னே சென்று நின்றாள்..

மெதுவாக கதவை தட்டினாள்..

"யாரு..?" கதவின் துவாரங்களின் வழியே முகத்தில் அறைந்தது அவன் குரல்..

"இங்க என்ன பத்து பேரா இருக்காங்க.. இது என்ன கேள்வி..?" மனதுக்குள் எரிச்சல் வந்தாலும்.. "நான் பத்மினி" என்றாள் அமைதியாக..

கதவை திறந்தான்.. "என்ன வேணும் உனக்கு..?" என்ற கேள்வியை அவன் பார்வை உணர்த்தியது..

"டிரஸ் சேஞ்ச் பண்ணனும்..!!"

புருவங்களை உயர்த்தி அவளை கூர்மையாக பார்த்தான்..

வார்த்தைகளை முடிக்காமல் விட்டதில் குதர்க்கமாக ஏதேனும் கேட்டு விடுவானோ என்ற பதட்டத்தோடு அவசரமாக..

"உங்க கார் டிக்கியில என்னோட பேக் இருக்கு..‌ அதை எடுக்கணும்.." என்று முடித்திருந்தாள் பத்மினி..

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றவன் சாவியோடு வெளியே வந்தான்.. அதுவரை பத்மினி அறை வாசலில்தான் நின்று கொண்டிருந்தாள்..

கார்ல இருந்து இறங்கும்போதே அதையெல்லாம் எடுத்து வச்சுக்கனும் தெரியாதா..? எதுக்காக சும்மா தொந்தரவு பண்ற..!!" சிடுசிடுப்போடு அவன் முன்னே நடக்க பின் தொடர்ந்து ஓடினாள் பத்மினி..

கார் டிக்கியை திறந்து பையை எடுத்தவன்.. பத்மினி பையை வாங்குவதற்காக கையை நீட்டியதை பொருட்படுத்தாமல் அதை கீழே வைத்திருந்தான்.. எரிச்சலை வெளிக்காட்டாது பொறுமையை இழுத்து பிடித்து பையை எடுத்துக் கொண்டாள் பத்மினி..

"கார்ல வேற ஏதாவது வச்சிருக்கியா..? இப்பவே சொல்லிடு.." திரும்பத் திரும்ப என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. இந்த கடைசி வார்த்தையை அவளை யூகித்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தோடு கண்கள் சுருக்கி சிடுசிடுப்பாக பார்த்தான் அவன்..

"வேற எதுவும் இல்ல.. தேங்க்ஸ்..‌" அவள் சொன்னதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றிருந்தான்..‌

ஏதோ கேட்க மறந்துவிட்ட பாவனையோடு துணிப் பையோடு அவன் பின்னே ஓடினாள் பத்மினி..‌

"நான் எங்கே தங்கறது..!!" இடைமறித்து அவள் கேட்கவும் திரும்பி பார்த்தவன் அத்தனை பெரிய வீட்டை ஒரு சுற்று பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தான்.. இவ்வளவு பெரிய வீட்டில் தங்கவா இடம் இல்லை என்பதுதான் அதன் அர்த்தமாம்..

இங்க ரெண்டு ரூம்தான் இருக்கு.. ஒரு ரூம்ல அம்மா இருக்காங்க.. இன்னொன்னுல நான் இருக்கேன்..‌"

"நீ..?" என்று நிறுத்தியவன் "இப்போதைக்கு அம்மா கூட தங்கிக்கோ.. ராத்திரி என் ரூமுக்கு வந்துடு.." என்று சொல்லிவிட்டு செல்ல.. ஆங்.. என்ன விழித்தாள் பத்மினி..

மனுஷன் எந்த அர்த்தத்தில் சொல்லிட்டு போறார்.. நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.. !!

உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்னு சொன்னாரே இப்ப எதுக்காக ராத்திரி ரூமுக்கு வர சொல்றார்.. ஒரு பக்கம் பயமும் பதட்டமும்.. மறுபக்கம் அடிப்பாதத்திலிருந்து ஜிவ்வென காதுக்குள் ஏறிய குறுகுறுப்பு..‌

அவளிடம் பேசிவிட்டு சென்றவன் பத்மினியை போல் சங்கடப்படாமல் தாயை எழுப்பினான்..

"அம்மா எழுந்திரிங்க.. இப்படி சோபாவில் உட்கார்ந்த மேனிக்கு தூங்க வேண்டியது..‌ அப்புறம் முதுகு வலிக்குது.. கழுத்து வலிக்குதுன்னு புலம்ப வேண்டியது.." அதிலும் ஒரு குறையை வைத்து அவரை எழுப்பி படுக்கையறைக்கு அனுப்பினான்..

பையை வைத்துக்கொண்டு நடு கூடத்தில் நின்றவளை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை அவன்.. அம்மாவை அனுப்பிவிட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்றிருந்தான்..

தலையை உலுக்கிக் கொண்டு மாமியாரின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"வா பத்மினி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.." உறக்க கலக்கத்தில் அரைகுறை வார்த்தைகளோடு கட்டிலில் மறுபக்கத்தை காண்பித்தார் ரமணியம்மா..

"இதோ குளிச்சிட்டு வரேன்மா.." என்றவள் பையை திறந்து உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்..

அலுப்பு தீர நன்றாக குளித்து ஒரு ஜார்ஜெட் புடவையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.. அதிகாலையில் எழுந்ததில் கண் எரிச்சல்.. உறக்கம் வராது என்றாலும் சற்று விழிகளை மூடிக் கொண்டால் தேவலாம் போல் தோன்றியது..

ரமணியின் மறுபக்கம் படுத்துக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள்.. "ராத்திரி என்னோட ரூமுக்கு வந்துடு.." இந்த வார்த்தைகள் மட்டும் காதினில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.. எதுக்காக வர சொன்னார் என்ற தவிப்பு அவள் மனதை அலை கழிக்கிறது..

"எதுக்காக உங்க ரூமுக்கு வரணும்" என்று அப்போதே கேட்டிருக்க வேண்டும்.. பதில் தெரிந்திருந்தால் இப்படி மனதோடு போராட வேண்டிய தேவையில்லை.. இடமும் வலமுமாக புரண்டு படுத்தவள்.. அரை மணி நேரத்திற்கு மேல் ஒரே நிலையாக படுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்..

அலைபேசியில் தனக்கு வந்த குறுஞ்செய்திகளை ஆராய்ந்தாள்.. ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டாள்..

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை சில நிமிடங்கள் கழித்து யாரோ பலமாக உலுக்கியதில்.. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்..

எதிரில் நெடிய உருவமாக அவன்தான் நின்று கொண்டிருந்தான்..

"எத்தனை முறை கூப்பிடறது.. காது கேட்கலையா உனக்கு..?! நெற்றி சுருக்கி அதற்கும் ஒரு கடுகடுப்பு..

காதிலிருந்து இயர்போனை எடுத்தாள்..

அதைக் கண்டவுடன்..‌ப்ச்.. என்று கண்களில் அலட்சிய பாவனை காட்டியவன்.. "நான் வெளியே போறேன்.. வீடு திரும்ப நைட் ஆகிடும்.. அம்மா கிட்ட சொல்லிடு.." என்றான்.. சொன்ன பிறகுதான் அவனை முழுதாக பார்த்தாள்.. அகண்ட மார்பு.. தட்டையான வயிறு.. இறுக்கிப் பிடித்த புஜங்கள் கண்களில் பதிந்து போனது..

பேண்ட் சட்டையில் ஃபார்மலாக தயாராகி இருந்தான்.. ஏதோ அலுவலக வேலையாக வெளியே போகிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது..

"சரி..‌!!" என்றாள் பார்வையை தாழ்த்திக் கொண்டு..

"அப்புறம் நைட்டு அம்மாவுக்கு டிஃபன் வகையறாதான் கொடுக்கணும்.. மாமியாரை கரெக்ட் பண்றதுக்காக உன் இஷ்டத்துக்கு எதையாவது சமைச்சு கொடுத்து அவர்களை ஹாஸ்பிடலில் படுக்க வைச்சுடாதே..!!"

"நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்..!!" எவ்வளவுதான் இவன் பேச்சை பொறுப்பது.. அவளும் கோபத்தோடு பதில் சொன்னாள்..

"ம்ம்.." உதய் வெளியேறி விட்டான்..

மாமியாரை கரெக்ட் செய்யும் அளவிற்கு என்ன தேவை இருக்கிறது.. எதற்காக இப்படி சொல்லிவிட்டு செல்கிறான்..? பத்மினிக்கு புரியவில்லை.. என்ன அர்த்தமோ.. ஆனால் நிச்சயம் நல்ல அர்த்தம் மட்டும் இல்லை.. ஏற்கனவே அவன் சொல்லிவிட்டு சென்ற ஒரு வார்த்தையில் ஏகப்பட்ட குழப்பம்.. இதை வேறு ஏன் மனதுக்குள் போட்டு குழப்பிக் கொள்வானேன்.. பெருமூச்சோடு தலையை படுக்கையில் சாய்த்தாள் பத்மினி..‌

மாலையில் எழுந்து தேநீர் தயாரித்து ரமணி அம்மாவிற்கு கொடுத்து தானும் அருந்தினாள்..

"காபி இல்லையாமா..?"

"காபி அதிகமா குடிக்க கூடாது அத்தை.. உடம்புக்கு நல்லது இல்லையே..!! அப்புறம் உங்க பையன் வந்து என்னைத்தான் கத்துவார்.."

"அதுவும் சரிதான்.. தாக பைத்தியத்துக்கு ஏதோ ஒன்னு.." தேநீரை உறிஞ்சினாள்..

"நாளையிலிருந்து நாட்டு சக்கரை வாங்கி வச்சுடறேன்.. சக்கரைக்கு பதில் அதை கலந்து குடிச்சுக்கலாம்.. சுகர் ஏறாது.."

"ராத்திரிக்கு சப்பாத்தியும்.. தக்காளி குருமாவும் பண்ணவா"

"பண்ணுமா.. இவன் சப்பாத்தி பண்ண சோம்பேறித்தனப் பட்டு.. கோதுமை தோசையா சுட்டு போடறான்..‌ அதுவும் எண்ணெயே உத்தாம.. இல்லைனா கோந்து மாதிரி களி கிண்டி வைக்கிறான்.. எனக்கு எதுவும் பிடிக்கறதில்ல.. மருந்து மாதிரி அள்ளி முழுங்க வேண்டியதாயிருக்கு..‌ நீயாவது கொஞ்சம் வாய்க்கு ருசியா சமைச்சு போடு பத்மினி.." என்று சோம்பலான விழிகளுடன் பெருமூச்சு விட்டார்..‌

மிருதுவான சப்பாத்திகளும் சுவையான தக்காளி குருமாவும் ரமணி அம்மாவின் வயிற்றையும் மனதையும் நிறைத்தன.. என்னவோ காதல் கணவனுக்காக காத்திருப்பதைப் போல் அவனுக்காக பிரத்தியேகமாக சுட சுட சப்பாத்தி தயாரித்து ஹாட் பாக்சில் போட்டு வைத்தாள் பத்மினி..‌

வந்தான்.. உண்டான்.. சென்றான்..

அடுப்படியை துடைத்து சுத்தம் செய்துவிட்டு ரமணி அம்மாவுடன் கூடத்தில் அமர்ந்து அவர் சொன்ன பழைய கதைகளை கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மினி..

"நேரமாச்சே..!! ரூமுக்கு போக வேண்டியது தானே.. அவனா வந்து கூப்பிடனும்னு எதிர் பாக்கறியா.. அதெல்லாம் நடக்காது.." என்று ரமணியம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

"பத்மினி.." என்று கதவின் பின்னிருந்து குரல் கொடுத்தான் உதய்..

இருவரும் திரும்பிப் பபார்க்க வா என்ற தலையசைத்து அழைத்தான் அவளை.. ஆங்.. என்று பார்த்தார் ரமணி.. பத்மினிக்கும் அவளையறியாமல் கொஞ்சம் கூச்சம்..

"ஹான்.. வரேன்.." பத்மினி அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட..‌

"ஏய் பொண்ணே கொஞ்சம் இரு.. இப்படி வெறுங்கையோடு போகக்கூடாது.. ஒரு டம்ளர் நிறைய பால் காய்ச்சி எடுத்துட்டு போ..‌!!" சந்தோஷமும் கிசுகிசுப்பாக சொன்னவர்.. ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா நல்லபடியா சந்தோஷமா வாழனும் என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்..

"அந்த மனுஷன் எதுக்காக கூப்பிடறாருன்னு தெரிய மாட்டேங்குது.. அதுக்குள்ள இவங்க வேற.." பெருமூச்சோடு மாமியாரின் பேச்சை தட்ட மனமில்லாமல் பாலை சுண்டக்காய்ச்சி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு விரைந்தாள்..

கதவைத் தட்டாமல் சென்றால் அதற்கு வேறு அரை மணி நேரம் எரிச்சல் பாடம் எடுப்பானே..‌!!

"உள்ளே வரலாமா?" என்று அனுமதி கேட்டு நிற்க.. "வா.." ஒற்றை வார்த்தையோடு அவன் பதில் முடிந்து போனது..

மடிக்கணினியை ஒரு புறம் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்..

"இப்படி உட்காரு" என்று எதிர் இருக்கையை காட்டிவிட்டு.. கணினியை தட்டி அதை அணைத்து வைத்துவிட்டு அவளை பார்த்தான்..

கையிலிருந்த பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள் பத்மினி..

"என்னது..?" கண்கள் இடுங்கினான் உதய்..

"பால்..!!"

"சாரி நான் இதெல்லாம் குடிக்கிறது‌ இல்ல.. வேஸ்ட் பண்ணாம நீயே குடிச்சிடு.."

"சம்பிரதாயம்..?" விழிகளை அகட்டினாள்.. எப்பேர்ப்பட்டவனும் அந்த பார்வையில் விழுந்து கிறங்கி போவான்.. ஆனால் இவனிடம் எந்த மாற்றங்களும் இல்லை..

அவளை ஒரு கணம் கூர்ந்த பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தவன்.. "நமக்கு இடையில என்ன சம்பிரதாயம்..!!" என்றபடி ஒரு மடித்த காகிதத்தை அவளிடம் நீட்டினான்..

இது என்ன புது அணுகுண்டு என்ற ரீதியில் காகிதத்தை வாங்கி பிரித்தாள் பத்மினி..

வீட்டு வாடகை
தண்ணீர்
மெயின்டனன்ஸ்
கரண்ட் பில்.. அனைத்தும் சேர்த்து ஏழாயிரத்துக்கு பில் போட்டிருந்தான்..

ஆங்..‌ என்று வாயை பிளந்து நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

"நீ ஹாஸ்டல்ல இருக்கும் போது எவ்வளவு பீஸ் கட்டின.."

"எ.. எட்டாயிரம்..‌!!" வார்த்தைகள் தந்தி அடித்தன..

"அப்ப இது ஓகே தான்.." என்று தலையசைத்தான்..

புரிந்தும் புரியாத நிலை.. "எதுக்கு எதுக்காக இது..?" என்றவளை ஊன்றிப் பார்த்தான்..‌

"ஏன் உனக்கு தெரியாதா..? வி ஆர் ஜஸ்ட் ஹவுஸ் மேட்ஸ்.. ஹவுஸ் மேட் ரெண்ட் ஷேர் பண்ணிக்கிறதுதானே வழக்கம்..?"

"ஆனா இது உங்க சொந்த வீடுதானே..!!"

"சொந்த வீடுதான்.. உழைச்சு வாங்குன வீடு.. யாரையும் ஓசியில தங்க வைக்க முடியாதே..!! ஏற்கனவே சொன்னதுதான் உன் தேவைகளை நீதான் பாத்துக்கணும்.. என் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமா அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.."

நிபந்தனைகளை மறக்கவில்லை அவள்.. ஆனாலும் வாடகை கொடுப்பது அதிகப்படியாக தோன்றியது.. நம்ம ரூம் என்று சொல்லாமல் என் ரூமுக்கு வந்திடு என்று அவன் சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்கியது..

"நான் யாரோ இல்ல.. உங்க பொண்டாட்டி!!" என்றாள் ரோஷத்துடன்..

"ஆமா.. அக்ரீமெண்ட் பொண்டாட்டி.. !! சாப்பாட்டு செலவை இதுல சேர்க்கல.. நீயே சமைக்கிறதுனால அது மட்டும் தள்ளுபடி..!!"

"ஆஹா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.." பற்களை கடித்தாள் பத்மினி..

"உன் சர்க்காஸ்டிக் பாராட்டை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு..‌ நமக்குள்ள ஓனர் டெனன்ட் ரிலேஷன்ஷிப் இருக்கிறது நல்லது.. அப்பதான் மனைவிங்கிற பெயரில் எந்த உரிமைக்காகவும் என்கிட்ட வந்து நிக்க மாட்டே.."

"நல்ல வேளை உங்க அம்மாவை நிக்க வச்சு சாப்பாடு போடற செலவை கட்டணமா வசூலிக்கல.." மனதுக்குள் பேசியது அவனுக்கு தெளிவாக கேட்டு விட்டதோ என்னவோ..!!

"அம்மா என்னை பெத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வச்சிருக்காங்க.. அவங்களுக்காக செய்ய வேண்டியது என் கடமை.. உனக்காக நான் எதுக்கு செய்யணும்..‌ நீ யார் எனக்கு..? உன் தேவையை நீயே பாத்துக்கோ..!! இங்கே எதுவும் இலவசம் கிடையாது.. எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு.. புரிஞ்சுதா.." நிலை குத்திய பார்வையுடன் அவனை முறைத்தாள் பத்மினி..

"உன்கிட்ட இதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன்.. பேசி முடிச்சாச்சு.. நீ போய் அம்மாகூட ரூம் ஷேர் பண்ணிக்கலாம்.. நான் கூப்பிட்டால் ஒழிய இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை.. குட் நைட்.. என்று வாசலை காண்பித்தான்..‌" அதற்கு மேல் அங்கே நிற்க அவள் ஒன்றும் மானங்கெட்டவள் இல்லையே.. "மாதா மாதம் இந்த வாடகை பணத்தை சரியா கொடுத்துடுவேன் சார்.." என்றவள் திரும்பியும் பாராமல் பால் டம்ளரோடு வேகமாக வெளியேறி நடந்தாள்..

மாமியாரின் அறைக்குள் நுழைய கட்டிலில் படுத்திருந்த ரமணியம்மாள் கேள்வியும் திகைப்புமாய் எழுந்து அமர்ந்தார்..

"என்ன..? வெளியே போக சொல்லிட்டானா.. ப்ச் எதிர்பார்த்தேன்!!" என்று உதட்டை சுழித்தார்

பத்மினி பதில் பேசவில்லை.. அவள் முகம் கருத்து போயிருந்தது.. அதிர்ச்சி அடைவார் புலம்புவார்.. மகனிடம் சென்று கேள்வி கேட்பார் என்று பத்மினி எதிர்பார்த்திருக்க சலனமே இல்லாத அவரின் இந்த பேச்சு பத்மினியை திகைக்க வைத்தது..

"சரி அந்த பாலை இப்படி கொடு.." என்று வாங்கிக் கொண்டவர்.. "சூடு ஆறிப்போச்சு இருந்தாலும் பரவாயில்லை.." என்று டம்ளரை முழுதாக காலி செய்திருந்தார்.. அம்மாவும் பிள்ளையும் என்ன டிசைனோ.. என்ற பார்வையுடன் புருவங்கள் உயர அமைதியாக நின்றிருந்தாள் பத்மினி..

காலி டம்ளரை பக்கத்திலிருந்த டீப்பாயின் மீது வைத்துவிட்டு.. "என்ன பாக்கற.. வந்து படு.. இன்னும் நிறைய காலம் இருக்கு பாத்துக்கலாம்.." என்று சரிந்து படுத்தார் ரமணியம்மாள்.. கன்னத்தில் கை வைத்து சோம்பலான விழிகளுடன் கவலை இல்லாமல் உறங்கியிருந்தவரை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி..

தொடரும்..
🤣🤣🤣🤣🤣
 
Joined
Jul 31, 2024

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த ட்விஸ்ட் செம 👌👌👌👌நான் கூட யோசிச்சேன் என்னடா சோத்துக்கு பில் போடலயேன்னு 🤣🤣🤣🤣 ஆனா நம்ப ரோபோ ரொம்ப நல்லவரா அதான் 😖😖😖😖😖😖😖
ஆனா பால வாங்கி குடிச்சாங்க பாரு என்னால சிரிப்பை அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த மாதிரிலாம் உங்களுக்கு எப்படி டார்லு யோசன வருது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
129
Ada pavi.....Inga enakku ramani ma tha hero Mari theriyaranga..... 🤣 😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛
 
Member
Joined
Sep 14, 2023
Messages
153
எப்போ போட்ட பில்லுக்கு இனி வரும் நாளில் பதில் சொல்ல வேண்டி வரும் உதய்க்கு......
பொறுத்திருந்து பார்ப்போம்.....😔😔😔
 
Top