- Joined
- Jan 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
பேங்க் லோன் கட்ட வேண்டும் தங்கைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்.. இந்த வேலை இல்லாது போனால் அடுத்த நாள் தன் குடும்பமே.. நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்று பலவித கமிட்மெண்ட்ஸ் இருப்பவன் மட்டும்தான்.. முதலாளி கொழுத்துப் போய் எவ்வளவு அநியாயம் செய்தாலும் பொறுத்துக் கொள்வான்.. செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொள்வான்.. வில்லாக வளைந்து வேலை செய்வான்.. ஏதோ ஒரு தருணத்தில் மன அழுத்தம் முத்தி போய்.. இறுதி நிலையில் "அட சீ போங்கடா" என்று தன்னிலை இழக்க செய்யும் கோபம் தான்.. மிக ஆபத்தானது.. "எதுவுமே வேண்டாம்டா.. ரோட்ல பிச்சை எடுக்கிறேன்.. செத்துப் போறேன்.. ஆனா இங்கே என்னால வேலை செய்ய முடியாது" என்று.. மனதில் தோன்றும் வெறி தற்காலிகமாக ஒரு வைராக்கியத்தை உருவாக்கும்..
அப்படித்தான் பைரவி.. தனியாக வாழ்ந்து பழக்கமில்லை.. வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்ட காலங்களில் இருந்து.. முதலில் அம்மா.. அடுத்து தன்னந்தனியாக வாழ வேண்டிய கட்டாயத்தில் வயதில் முதிர்ந்த பெண்களோடு ஒட்டிக்கொண்டு.. அவர்களை சார்ந்து வாழ்ந்திருந்தாள்.. இது தன் பிள்ளையின் பாதுகாப்பிற்காக அம்மா சொல்லிக் கொடுத்த பாடம்.. இதைச் சொல்லிக் கொடுத்த பைரவியின் அம்மா.. அதற்கு பதிலாக.. தனியாக தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் வாழ்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம்.. தேவியின் வாழ்க்கையே பரிதாபத்திற்குரியது.. இதில் பைரவியின் வாழ்க்கையை பற்றி எங்கனம் யோசித்திருப்பாள் அவள்.. மகளை பற்றி யோசிக்கும் முன்னே இறந்து போய் விட்டாளே!!
விஷயம் அதுவல்ல.. உணவிற்காகவும் இருப்பிடத்திற்காகவும் யாரோ ஒருவரை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.. அவளைப் பொறுத்தவரையில் காண்ட்ராக்டர் கனகரத்தினம் தான் தெய்வம்.. அவர் காட்டும் இடம் தான் கோயில்.. பயணக் கப்பல் போல் ஒரு வாழ்க்கை.. வேலையின் பொருட்டு நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறாள்.. அப்போது வராத கோபம் இப்போது வந்தது ஏன்?..
இதுவரை.. தான் அனுபவித்த ஒட்டுமொத்த அவமானங்களின் வெளிப்பாடுதான் இந்த கோபம்.. பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்.. நானும் எவ்வளவுதான் தாங்கறது என்று ஒரு வார்த்தை.. பொங்கி எழுந்தவரிடமிருந்து வருமே.. அப்படியான ஒரு வார்த்தைக்கான விளைவுதான் இது!!..
வேலையின் பொருட்டு திட்டு வாங்குவதற்கும்.. தேவையில்லாமல் அவமானப் படுத்தப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு.. கூண்டுக்கிளியாய் ஒரு வாழ்க்கை.. கேவலமாக நடத்தும் வீட்டு உரிமையாளர்கள்.. தான் இந்த வீட்டு முதலாளியை திருமணம் செய்து கொண்ட காரணத்தால்.. பொறாமையோடு தங்களிடமிருந்து விலக்கி வைத்த வேலையாட்கள்.. அவர்களும் தானே.. இதழ் துடிக்க நகைத்துக் கொண்டிருந்தனர்.. அவள் பார்த்தாளே!!.. வாழ்க்கையே வெறுத்துப் போனது.. அந்த விரக்தியின் உச்சம்தான்.. பைத்தியக்காரத்தனமான இந்த கோபம்..
கொதிக்கும் தார் சாலையில் கால் சுடும் வரை நடந்து கொண்டே இருந்தவள்.. ஒரு நிலையில் வலி உணர்ந்த பிறகே.. காலை உதறிக் கொண்டு மரத்தின் நிழலை தேடினாள்.. ஒரு சிறிய கொய்யா மரத்தின்.. மெல்லிய கிளைகளின் நிழலில் காலை பதிந்து கொண்டு.. கண்ணீருடன் மூச்சு வாங்கி கொண்டிருந்தாள் பைரவி..
அவசரப்பட்டு விட்டாயோ என்று ஒரு மனம்.. அவளை குற்றம் சாட்ட.. இல்ல.. எதுவும் வேண்டாம் சாப்பாடு வேண்டாம் நல்ல துணிமணி வேண்டாம்.. அந்த வேலையும் வேண்டாம்.. எனக்கு எதுவுமே பிடிக்கல.. என்று சின்ன பிள்ளையாக அடம் பிடித்தது இன்னொரு மனம்.. அப்படியானால் நடந்த திருமணம்.. வேந்தனோடு வாழ்ந்த வாழ்க்கை.. இப்படி எல்லாம் ஒரு கேள்வி மனதில் வரவே இல்லை.. அவளைப் பொறுத்த வரைக்கும் அந்த திருமணத்திற்கு மதிப்பே இல்லை.. அரிமா வேந்தனை எந்த பட்டியலில் சேர்ப்பது என்றே அவளுக்கு புரியவில்லை.. அவன் கணவன் அல்ல முதலாளி.. சாப்பாடு போடும் முதலாளி மீது ஒரு சின்ன ஈர்ப்பு உண்டு.. வயது கோளாறு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.. புனித பந்தம்.. தாலிக்கயிறு மேஜிக்.. தாம்பத்தியம்.. பதிவிரதை பக்தி.. லைன் கட்டி நிற்கும் இந்த விஷயங்களுக்கு முன் வாழ்வாதாரம்.. என்ற மிகப்பெரிய விஷயம் அவளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.. எப்படி வாழ போகிறோம்.. காண்ட்ராக்டர் கனகரத்தினம்.. அவரை எங்கே போய் சந்திப்பது.. மீண்டும் திரும்பி இந்த வீட்டிற்கு மட்டும் வரவே கூடாது.. வேறு எங்காவது வேலைக்கு சென்று விட வேண்டும்.. அந்த மரத்தை பிடித்துக் கொண்டு.. சிறிது நேரம் யோசித்து இருந்தவள்.. மீண்டும் சலிப்புடன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்..
நெடுஞ்சாலையைத் தாண்டி பிராயணிகள் நடக்கக்கூடிய பிளாட்பார்ம் ஓரத்தில்.. உருளையான சிமெண்ட் தொட்டியில் நடப்பட்டு இருந்த மரங்களின் நிழலில்.. நடப்பது ஓரளவு எளிதாக தான் இருந்தது..
என்ன செய்வது எங்கே போவது ஒன்றுமே புரியவில்லை.. செக்கு மாடு போல் வீட்டுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்தவர்களுக்கு.. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த உலகம் பூதக் கண்ணாடியில் பார்ப்பது போல் கோணல் மாணலாக பரந்து விரிந்து பயமுறுத்தியது.. வெளி உலகம் பார்க்காதவள் இல்லை.. ஆனால் இன்றைய கோணம் வேறல்லவா!!.. அவள் முழியே.. விவரம் அறியா பேதை என்பதை தெளிவாக காட்டி இருந்ததோ என்னவோ.. நிறைய ஆண்கள் அருகே வந்து "என்னம்மா ஏதாவது பிரச்சனையா.. வழி மறந்துட்டியா" என்று கேட்டதில்.. அச்சத்தோடு சற்று தள்ளி விலகி நடந்தாள்..
"எதுக்கு பயப்படுற பைரவி.. உன்னை மாதிரி தானே இந்த பொண்ணுங்களும்.. எவ்வளவு தைரியமா பேக் மாட்டிக்கிட்டு ரோட்ல நடக்குறாங்க.. பயப்படாம இரு".. அவளுக்கு அவளே தைரியம் சொல்லிக்கொண்டு நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்..
ஆனா அவங்களுக்கு வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்கு.. வீடு இருக்கு.. குடும்பம் இருக்கு.. நல்ல வேலை இருக்கு.. எல்லாத்துக்கும் மேல அறிவும் தெளிவும் இருக்கு.. எனக்கு தான் எதுவுமே இல்லையே.. நான் எங்க எப்படி பொழைக்க போறேன்.. பெற்ற தந்தை என்று ஒருவன் உண்டு.. அவன் எதற்கு தான் பிரயோஜனம்.. சீக்காளியாகி ஊரில் படுத்த படுக்கையாய் கிடக்கிறான்.. அதற்காகவும் பட்டியல் போட்டு கனகரத்தினம் ஒரு சொற்பத்தொகையை பிடித்து விடுவான்.. ஊருக்கு செல்வதற்கோ அவளைப் பெற்றவனை காண்பதற்கோ கொஞ்சம் கூட விருப்பமில்லை.. பணத்திற்காக எங்கேயாவது விலை பேசி விற்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..
வலது பக்கம்.. இடது பக்கம்.. சுரங்கப்பாதை வழியே.. பிரிட்ஜ் மேலே என்று கால் போன போக்கில் நடந்து கொண்டே இருந்தாள்.. எங்கே செல்கிறாள் எதற்காக வாழ்கிறாள் என்றே புரியவில்லை.. பேசாமல் அணைக்கு கீழே ஓடும் இந்த ஏரியில் குதித்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது.. வழக்கம்போல பசி வேறு படாத பாடு படுத்தியது..
அடி பாதங்கள் வலி உயிர் போனது.. நடக்கவே முடியவில்லை.. எங்கிருக்கிறோம் என்று கூட தெரியவில்லை.. இருளத் தொடங்கி விட்டதில் இன்னும் கூடுதல் பயம்..
வாழ்வில் அடிபட்டு போனவன்.. நல்லதே நடந்தாலும் நம்பிக்கையானவர்களாக இருந்தாலும் அவர்களை சந்தேக கண்ணோடு தான் பார்ப்பான்.. அப்படித்தான் அரிமா வேந்தனும்.. ராணிகலா சொல்லிவிட்டாள் என்பதற்காக அல்ல.. எப்பேர்பட்ட பிரச்சனையை சந்தித்திருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வீட்டை விட்டு சென்றது தவறுதான்.. என்னை கேவலப்படுத்தி சென்ற கீர்த்தனாவிற்கும் என்னை துச்சப்படுத்திய பைரவிக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை.. என்ற கொதிப்பு..
தன்னை பிடிக்காமல் திட்டத்தோடு அவள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக அரிமா வேந்தன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.. ஆனால் அவளிடம் எந்த எதிர்கால திட்டங்களும் இல்லை.. தற்போதைக்கு சோற்றுக்கே வழி இல்லை.. இப்படி கூட ஒரு பெண் வளர்ந்திருப்பாளா என்பது கேள்விக்குறிதான்.. என்ன தான் தெரியும் அவளுக்கு.. ரத்த ஓட்டம் சுண்டி போகும் அளவிற்கு வேலை செய்ய தெரியும்.. அந்த வேலைக்கான சம்பளத்தை கேட்டு வாங்க தெரியாது..
என்னை விட்டுப் போனவளை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்.. ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.. தாலி கட்டி அழைத்து வந்த எனக்கு என்ன மரியாதை.. உள்ளுக்குள் கிளர்ந்து எழுந்த ஈகோவும் கோபமும் அவளுக்கான இயல்பான குணங்களை ஆராய விடாமல் தடுத்தது.. அப்படி என்ன அவள் பெரிய திட்டம் போட்டு இருக்க போகிறாள்.. இந்த விஷயத்தை யோசிக்க விடாமல் பிளாக் செய்தது அவன் மூளை..
மீண்டும் கடையில் வந்து அமர்ந்திருந்தான்.. வழக்கத்திற்கு மாறாக போன் செய்திருந்த ராணி கலாவின் அழைப்பினை வேண்டா வெறுப்பாக ஏற்றிருந்தவன்.. "சொல்லுங்க" என்றான் கனத்த குரலில்..
"என்னப்பா அவளை தேடுறதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தியா.. நான் வேணும்னா ஆனந்த்.. இல்லைனா மூர்த்தி கிட்ட சொல்லி தேட சொல்லட்டுமா".. அறியா புள்ள எங்க போனான்னு தெரியலையே இரக்கப்படுவது போல் ஒரு நடிப்பு.. அவன் அடுத்த நகர்வு என்ன என்று தெரிந்து கொள்ள இந்த போன் கால்.. அவள் மனதை அறியாதவன் இல்லை அரிமா வேந்தன்..
"வேற ஏதாவது சொல்றதுக்கு இருக்கா"..
இல்லை என்று நீ சொன்னாலும் சொல்லா விடினும் அடுத்த ஒரு நொடியில் அழைப்பை துண்டித்து விடுவேன் என்பது போன்ற பேச்சு..
இல்.. அவள் முடிப்பதற்குள் அழைப்பை துண்டித்திருந்தான்..
நடைபாதை உணவு கடையின் பக்கத்தில் நின்றிருந்தாள் பைரவி.. உணவை விட வேறு என்ன பெரிதாக தேவை இருக்கப் போகின்றது அவளிடம்..
கணவனை மனைவியுமாக கடை போட்டிருந்தனர்..
"அக்கா ஏதாவது வேலை கொடுங்க" என்று சைகையில் அவள் கேட்ட விதம் அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை..
"என்னம்மா.. காசு வேணுமா"..என்று கல்லாவிலிருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து அவளிடம் கொடுக்க.. தன்னைப் பிச்சைக்காரி என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.. என்று புரிந்து கொண்டவளுக்கு.. கருவேல மரத்தின் முள் குச்சியை இதயத்திலிருந்து சரசரவென உருவி எடுத்தது போல் வலி..
"காசு வேண்டாம்" என்று.. இதழை அசைக்காமல்.. கையிலிருந்த பணத்தை அவரிடமே திரும்பி கொடுத்து விட்டு.. முகம் வாடி ஒரு மாதிரியாக நின்று கொண்டிருந்தவளை காண அந்த பெண்மணிக்கு பரிதாபமாகி போனது..
"உன்னால பேச முடியாதா!".. அவள் தயங்கி தயங்கி கேட்ட கேள்விக்கு தலையசைத்து "ஆமாம்" என்று பதில் அளித்து இருந்தாள் பைரவி..
"கீழ கிடக்கிற இந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்கிறேன்.. எனக்கு சாப்பிட சாப்பாடு தர்றீங்களா".. சைகை பாஷையால் அவள் கேட்டதை இந்த முறை சரியாகப் புரிந்து கொண்டு.. "சரி நல்லா சுத்தமா கழுவி வை".. என்றாள் அவள்..
தேய்த்து கழுவ கழுவ பாத்திரங்கள் விழுந்து கொண்டே இருந்தன.. "கஷ்டமா இருந்தா சொல்லுமா நானே கழுவிக்கிறேன்". என்று.. ஆதரவாக அவள் தோள் பற்றிய பெண்மணி நிறைமாத கர்ப்பிணி..
அவள் மேடிட்ட வயிற்றை பார்த்துவிட்டு.. "வேண்டாம் அக்கா நானே கழுவி வச்சுடுறேன்" என்று.. மறுப்பாக தலையசைத்து பெரிய பெரிய பாத்திரங்களை.. அதனுள் விழுந்து விடும் சைஸில் இருந்தவள்.. சிரமப்பட்டு கழுவிக் கொண்டிருந்தாள்.. கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பெண்ணின் கணவன்.. வாடிக்கையாளர்களை கவனித்து அவர்கள் கேட்டதை கொடுப்பதில் பிஸியாக இருந்தான்..
ஒரு கல்லின் மீது அமர்ந்து அந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைப்பதற்குள்.. ஒரு வழியாகிவிட்டாள் பைரவி.. உணவு கடைக்காக பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவி வைப்பது அப்படி ஒன்றும் எளிதில்லை..
பசி பசி பசி..
வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து முடிக்கும் வரை காத்திருக்க தான் வேண்டும்.. பைரவி கடையின் பின்புறம் அமர்ந்து கொண்டிருக்க.. அவர்கள் இருவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்..
ஒரு வழியாக கூட்டம் தீர்ந்த பிறகு இரண்டு தோசைகள் மட்டுமே மிச்சம் இருந்தன..
வேலை செய்து அன்று ஈட்டிய பணத்தையும் கந்துவட்டிக்காரன் கல்லாவோடு தூக்கி சென்றதில்.. அவர்களுக்கான அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளில் விழித்துக் கொண்டிருந்தவர்கள் பைரவி என்ற ஒரு பெண் பசியோடு அங்கு காத்திருப்பதே மறந்து போய்விட்டார்கள்..
"நாளைக்கு மளிகை வாங்க முதல் வைக்கனுமே.. பாவி பையன் அதுக்கு கூட வழி இல்லாம எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டானே".. அந்த கர்ப்பிணி பெண் சபித்துக் கொட்டினாள்..
"இந்த பொண்ணு யாரு".. அவள் கணவன் விழிகள் சுருக்கி கேட்ட பிறகுதான் அங்கு நின்ற பைரவியின் நினைவே வந்தது அவளுக்கு.. "ஐயோ இந்த பொண்ண மறந்து போய்ட்டேனே.. இங்கே கிடந்த பாத்திரங்கள் எல்லாத்தையும் இவதான் விளக்கிப் போட்டா.. பதிலுக்கு சாப்பாடு தர்றதா சொல்லி இருந்தேன்.. இப்போ ரெண்டு தோசை தான் இருக்கு பத்துமா தெரியலயே".. கணவனுக்கு விளக்கும் சாக்கில் புலம்பிக் கொண்டே அந்த ரெண்டு தோசைகளை தட்டில் போட்டு பாத்திரத்தின் அடியோடு கிடந்த ஒரு கரண்டி சாம்பாரை வடித்து அந்த தோசை மேல் ஊற்றி அவளிடம் கொடுத்திருந்தாள்..
தட்டை வாங்காமல் அந்த பெண்ணையும் அவள் கணவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த பைரவி "நீங்க சாப்பிட்டீங்களா".. என்று அவளிடம் தன் மொழியில் கேட்க.. "இல்லம்மா நான் வீட்ல போய் சாப்பிட்டுகிறேன்.. நீ சாப்பிடு உன்ன பாத்தா தான் ரொம்ப பசியில் இருக்கிற மாதிரி தெரியுது".. என்றாள் தங்கள் கஷ்டங்களை மறைத்துக் கொண்டு..
"ஆமா.. வீட்ல என்ன இருக்கும்? ஒன்னும் இருக்காது!!" என்றான் அவள் கணவன் சலித்துக் கொண்டு.. வாயும் வயிறுமாய் இருக்கும் தன் மனைவி சாப்பிடவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு
"நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.. இந்தா பொண்ணு சாப்பிடு".. வற்புறுத்தலோடு தட்டை அவள் பக்கம் நீட்டி இருக்கவும் வேண்டாம் என்று மீண்டும் மறுப்பாக தலையசைத்து.. கண்கள் மூடித் திறந்தவள்.. "எனக்கு சுத்தமா பசிக்கல.. எனக்கு சாப்பாடு வேண்டாம்.. நீங்களே சாப்பிடுங்க".. என்று முற்றிலுமாக மறுத்துவிட்டு.. அதற்கு மேலும் அவர்களுக்கு பாரமாக அங்கே இருக்க விரும்பாது.. வேகமாக நடந்து சென்றிருந்தாள்.. பசியின் உச்சத்தில் அவளுக்கு தான் அழுகை வந்து விடுமே.. கண்ணீரோடு மீண்டும் வந்த வழியே திரும்பி நடந்து கொண்டிருந்த வேளையில்.. அவளை வழிமறித்து நின்றது அந்த கார்..
காரிலிருந்து இறங்கியவன்.. சாட்சாத் வேந்தன்.. திடுக்கிடும் விழிகளோடு அவனைக் கண்டவள்.. அங்கிருந்து ஓடியதில்.. அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது..
தொடரும்..

Last edited: