- Joined
- Jan 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
இதயம் கனத்து.. மூளை செயலற்றுப் போன நிலையில் உறைந்து நின்றிருந்தான் வேந்தன்.. பைரவிக்கு பதில் அங்கே சிறுவயது வேந்தன் நிற்பது போல் உணர்வு.. சட்டென கண்கள் கலங்கி குளமாகி போனது.. கடினமான பாறை.. சில்லென குளிர் நீர் பட்டு சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது போன்ற மாறுதல்.. முஷ்டிகள் இறுக தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தான்.. பசியோடு அவள் பாத்திரத்தை வழித்துக் கொண்டிருக்கும் நிலையை கண்டு இறுக்கத்தோடு நிற்க முடியவில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக சுயம் தொலைத்துக் கொண்டிருந்தான்.. விம்மலுடன்.. ஒன்றுமே இல்லாத பாத்திரத்தில் இருந்து ஒரு பருக்கையை எடுத்து அவசரமாக வாயில் வைத்த பைரவியைக் கண்டு.. தலையை உலுக்கி.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் அதற்கு மேலும் தாளாது..
"என்ன செஞ்சிட்டு இருக்கே இங்கே".. என்றான் தன் வழக்கமான குரல்தொனியில்.. அடித்து பதறி எழுந்து நின்றாள் பைரவி.. அங்கிருந்த பாத்திரத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் "என்ன செய்யறேன்னு கேட்டேன்" என்றான் அழுத்தமாக..
என்ன சொல்வதென்றே புரியவில்லை.. சாப்பிட செல்கிறேன் என்று வெளியே வந்து விட்டு பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருப்பதை கண்டால் மேலும் திட்டுவானோ என்ற அச்சம்.. சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்ல முடியாதே.. அந்த பாத்திரத்தில் ஒன்றுமே இல்லையே.. பசியினால் செய்யும் கிறுக்குத்தனம் தனக்கு ஏற்புடையதாக இருக்கலாம்.. முதலாளி ஒப்புக்கொள்வாரா.. இடது கரத்தால்.. கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு.. சைகையில் என்ன சொல்லி விளக்குவது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவளை கண்டு..
"வெறும் பாத்திரத்துல என்ன இருக்குன்னு இங்கே வந்து உருட்டிக்கிட்டு இருக்கே.. கிச்சன்ல போய் எதையாவது எடுத்து சாப்பிட வேண்டியது தானே".. அது கூட அதிகாரமாகவே வெளிப்பட்டது..
அங்கு கிச்சனில் என்ன இருக்கிறது சாப்பிடுவதற்கு.. தட்டைக் கூட கழுவி கவிழ்த்தி வைத்தாயிற்றே.. மனதுக்குள் பதிலளித்துக் கொண்டாள்..
ஓரிரு நொடிகள் நீடித்த அழுத்தமான பார்வைக்கு பின்.. "என் கூட வா" என்று அழைத்தவன் முன்னே செல்ல.. வேறு வழி இல்லாமல் அவனை பின் தொடர்ந்தாள் பைரவி.. பின் வாசல் வழியாக சமையல் அறையினுள் நுழைந்தான் வேந்தன்.. கைகட்டி ஒரு ஓரமாக நின்று கொண்டு.. "ஃப்ரிட்ஜில் பால் இருக்கும் எடு" என்றான்..
அவள் தயக்கத்தோடு பால் பாக்கெட் எடுக்கவும்.. "ஒரு பாத்திரத்துல ஊத்தி காய்ச்சிடு".. உத்தரவிட்டதை தொடர்ந்து அவன் சொன்னதை செய்தாள்.. "அந்த செல்ப்ல பிரெட் இருக்கான்னு பாரு".. அவன் சொன்ன அடுத்த கணம்.. சமையல் கட்டின் மேற்புற அலமாரியிலிருந்து பிரிக்காத புத்தம் புது பிரட் பாக்கெட்டை எடுத்திருந்தாள்.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு வேந்தனை மிரட்சியோடு பார்த்து நிற்க.. "பிரிட்ஜ்ல ஜாம் பாட்டில் இருக்கும்.. எடுத்த நாலஞ்சு பிரட் ஸ்லைஸ்ல ஜாம் தடவி வை".. அதையும் செய்தாள்.. காய்ச்சின பால்ல சுகர் போட்டு கிளாஸ்ல ஊத்தி எல்லாத்தையும் கொண்டு போய் டேபிள்ல வை.. எல்லாத்தையும் சொல்லனுமா உனக்கு" எரிந்து விழுந்தான்.. சோர்வுடன் அவன் சொன்னதை செய்து முடித்திருந்தவள்.. முன்பக்கம் இரு கைகளை கோர்த்தவாறு நான் போகட்டுமா.. என்று பார்வையால் அனுமதி கேட்டிருக்க.. "உட்கார்ந்து சாப்பிடு".. என்றிருந்தான் கட்டளையிடும் குரலில்..
என்ன சொல்கிறான்.. செவிகளில் ஒலித்த வார்த்தையை நம்ப மறுத்தது மூளை.. அவனுக்காக தயார் செய்ய சொல்கிறான் என்று தான் நினைத்திருந்தாள்.. அவளாவது அந்த டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதாவது.. எவ்வளவு பெரிய குற்றம் அது.. காய் நறுக்குவதற்கும் கீரை கிள்ளுவதற்கும் கூட வேலையாட்கள் அங்கே அமரக்கூடாது.. கீழே அமர்ந்துதான் அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும்.. ஒருமுறை காலில் அடிபட்டு விட்டதால் நிற்க இயலாமல் அந்த நாற்காலியில் அமர்ந்தததை.. யாரோ ராணி கலாவிடம் போட்டுக் கொடுத்திருக்க.. திட்டுக்களோடு அபராத தொகையாக 500 ரூபாய் அந்த மாத சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டிருந்தது.. இதுவரை ஒரு மாத சம்பளம் கூட கையால் வாங்கியதில்லை.. அந்த செலவு இந்த செலவு.. உனக்கு சோறு போடும் தண்ட செலவு என்று கணக்கு காட்டப்பட்டு கான்டிராக்டர் கனகரத்தினம் ஒரு புதிர் கணக்கு சொல்லுவதெல்லாம் பெரிய கதை..
இப்போது வேந்தன் அந்த நாற்காலியில் அமரச் சொல்லியதில் உள்ளூர நடுக்கம் பிறந்திருக்க.. தயக்கத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தவளை "உன்னை சாப்பிட சொன்னேன் காதுல விடலையா உட்காரு" என்றான்.. ஓங்கிய குரலில்..
உடலில் சட்டென தோன்றிய அதிர்வுடன்.. வேகமாக அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவள்.. தயக்கத்தோடு முதல் ரொட்டி துண்டை வாயில் வைத்ததும்.. பசியின் வீரியத்தில் எங்கே எப்படி சென்று கரைந்து போனதோ.. அடுத்தடுத்த ரொட்டி துண்டுகளை வாயில் திணித்துக் கொண்டதை.. பார்த்தும் பார்க்காதவன் போல் தனது ட்ராக்பேண்டில் வைத்திருந்த மொபைலை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தான் வேந்தன்..
"உனக்கு பத்தலைன்னு நினைக்கிறேன்.. எவ்வளவு வேணுமோ எடுத்து ஜாம் தடவி சாப்பிடு".. மொபைலை பார்த்துக் கொண்டே அவன் உரைத்திருந்த விதத்தில்.. அவசரமாக நாலைந்து ரொட்டித் துண்டுகளை எடுத்து.. அப்படியே வாயில் திணித்துக் கொண்டு.. அடுத்து பால் கிளாஸையும் எடுக்க வந்த வேளையில்.. இதுவும் தனக்குத்தானா என்ற சந்தேகத்துடன் உப்பிய கன்னங்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பைரவி.. "பாலை வீணாக்காம குடிச்சிடு" என்றான் அவள் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு.. அப்போதும் அவள் முகத்தை பார்த்திருக்கவில்லை.. வேந்தன் சொன்ன ஒரு வார்த்தையே வரம் என்பது போல் பாலை எடுத்து மளமளவென குடித்திருந்தாள் பைரவி..
அம்மாடியோவ் இப்போதுதான் உயிரே திரும்பி வந்தது போல் உணர்ந்தாள் பைரவி.. வயிறு நிறைந்த பின் அழுகை மறைந்து போனது.. சிறிய புத்துணர்ச்சியோடு சிறுபிள்ளைத்தனமான அவள் மலர்ச்சியில் வேந்தனின் விழிகள் விரிந்தன..
சாப்பிட்டு முடித்த தட்டையும்.. கிளாசையும் கழுவி வரும் வரையில் காத்திருந்தவன்.. தன் முன்னே வந்து பவ்யமாக நின்றவளிடம்.. "நீ சாப்பிடலைன்னு சொன்னா சாப்பாடு எடுத்துட்டு வந்து ஊட்டி விடறது.. உடம்பு சரியில்லைன்னு சொன்னா உன்னை டேக் கேர் பண்றது.. இதெல்லாம் என்கிட்ட இருந்து எப்பவுமே எதிர்பாத்துராதே.. அப்படியே நீ எதிர்பார்த்தாலும் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.. ஏன்னா ஏமாற்றம் உனக்குதான்.. அன்பு பாசம் காதல் நேசம் கனிவு.. இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான்.. என்னை பொறுத்த வரைக்கும் என் முன்னாடி நிக்கிறவங்க ஆதாயமா நஷ்டமா.. இதை மட்டும் தான் என் மனசு கணக்கு போடும்..
இப்ப சொல்றது தான்.. உனக்கு தேவையானதை நீ தான் கேட்டு வாங்கிக்கணும்.. இங்கே யாருக்கும் யாரைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை.. அதுக்கான அவசியமும் இல்ல..
எனக்கும் கூட உன் மேல எந்தவிதமான அக்கறையும் இல்லை.. என் வேலை சரியா நடக்கணுங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் உன்னை சாப்பிட வச்சேன்.. இதுக்கு பேரு கரிசனம் கிடையாது.. எனக்கு தேவையான பொருளுக்கு சார்ஜ் போட்டுகிறது.. புரிஞ்சிதா.". அவன் நிறைய பேசியிருந்ததில் பைரவியின் இதயம் அடி வாங்கினாலும் இப்போதைய தேவைக்கு உணவு கிடைத்து விட்டதே என்ற திருப்தி சற்று இதம் கொடுத்தது..
"போகலாம் வா" என்று எப்போதும் போல் வேந்தன் முன்னே நடக்க அவனை பின் தொடர்ந்தாள் பைரவி..
கட்டிலில் சென்று படுத்துக் கொண்டவன்.. பின்னால் வந்து நின்ற பைரவியிடம் கதவை சாத்திட்டு வந்து படு.. இன்னிக்கு போதும்.. நாளைக்கு பாத்துக்கலாம் என்றதும் எங்கிருந்துதான் அவ்வளவு நிம்மதி பிறந்ததோ.. சீராக இழுத்து விட்ட மூச்சுடன் கதவை சாத்திவிட்டு வேந்தனுக்கு மறுபக்கத்தில் படுத்துக்கொண்டாள் பைரவி.. உணவருந்திய களைப்பிலும் ஓய்வில்லாது தொடர்ந்து நடந்த கூடலிலும் படுத்தவுடன் உறங்கிப் போயிருந்தாள் பைரவி..
முதுகு காட்டி படுத்துக் கொண்டிருந்த பைரவியை விட்டு தள்ளி.. நன்றாகவே இடைவெளி விட்டு படுத்து விழி மூடிக் கொண்டிருந்த வேந்தனின் எண்ணங்கள் முழுவதும்.. விளக்கை வட்டமிடும் மெட்டில் பூச்சியாக பைரவியையே சுற்றி வந்தன.. கண் கலங்க வைத்த காட்சி.. அதே திசையில் சென்று கொண்டிருந்த மனதை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி கொண்டிருந்தான்.. பரிதாபத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் அவளை நம்பாதே என்று ஒரு பக்கம் வாதம் செய்து கொண்டிருந்தது பகுத்தறிவு.. கண்ட காட்சியில் ஒரு மாதிரியாக பிசைந்து கொண்டிருந்தது மனம்..
தன் தவறுதான்.. குழந்தை பெற்றுக் கொடுக்கும் வரை இவள் தன் பொறுப்பு தானே.. அவள் தேவைகளை நான்தான் கவனித்திருக்க வேண்டும்.. உடைகளை வாங்கி கொடுத்தவன் உணவு விஷயத்தில் பிழை செய்து விட்டேனா.. இனி என்னை நானே குற்றம் சாட்டிக் கொள்ள வாய்ப்பு வழங்கவே கூடாது.. என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.. மனதை பிசைந்து கொண்டிருந்த அந்த காட்சி மீண்டும் மீண்டும் அலை அலையாக தன் எண்ணங்களில் தோன்றியதில் சோர்வுற்று உறங்கிப் போயிருந்தான் வேந்தன்..
மறுநாள் காலையில் அவனுக்கு முன்பாகவே எழுந்து குளித்து விட்டிருந்தாள் பைரவி.. முந்தைய நாள் கட்டிலில் குவிந்திருந்த துணிமணிகளை கடையிலிருந்து வந்த வேலையாள் ஒருவர்.. சீராக அலமாரியில் அடுக்கி விட்டு.. உணவுக்கு அலைந்து கொண்டிருந்தவளிடம் "முதலாளி உங்க கிட்ட இந்த சாவியை கொடுக்க சொன்னாரு".. என்று சொல்லி கொடுத்து விட்டு சென்றதில்.. தனக்கான உடைகள் தானே என்ற சலுகையில்.. அடுக்கி வைத்திருந்த உடைகளில் மிக எளிமையான சுடிதார் ஒன்றை தேடிக் கொண்டிருந்ததில் அப்படி எதுவும்.. கண்களுக்கு அகப் படவில்லை.. வீட்டு உபயோகத்திற்காக.. கொஞ்சம் விலை அதிகமுள்ள அதே நேரத்தில் உடலை உருத்தாத ஜார்ஜெட் புடவைகள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில்.. அடர் சிகப்பு நிறத்தில் இளம் மஞ்சள் வண்ண பூக்கள் வரைந்த புடவை.. அவள் கவனத்தை ஈரக்கவும்.. வெள்ளை பற்கள் தெரிய புன்னகைத்துக் கொண்டே அந்த புடவையை எடுத்ததில்.. மடித்து வைக்கப்பட்டிருந்த புடவையிலிருந்து.. தைத்து வைக்கப்பட்டிருந்த ஜாக்கெட்டும் புத்தம் புது உள் பாவாடையும் கீழே விழுந்தன..
கண்கள் மின்ன இன்னும் உற்சாகம் கூடி போனதில்.. உள்ளாடைகளை அணிந்து கொண்டு புடவை கட்டும் நேரத்தில்.. பின்னிருந்து அணைத்து.. படுக்கைக்கு இழுத்துச் சென்றான் வேந்தன்..
"விடிய காலையில் ட்ரை செஞ்சா.. குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு அதிகமாம்.. சீக்கிரம் வேலை முடிஞ்சா சீக்கிரம் பிரெக்னன்ட் ஆகி குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு நீ போயிட்டே இருக்கலாம்.. உனக்கும் தேவையான பணம் சீக்கிரம் கிடைக்கும்".. என்று கண்கள் மூடி அவள் கழுத்தில் உரசியபடியே வேகமாக இணைந்திருந்த ஜாக்கெட் கொக்கிகளை கழட்டியிருந்தான்.. கூடலின் போது அவள் குரல்வளையை மென்மையாக வருடின அவன் கரங்கள்.. அவள் தலையை கலைத்து முத்தமிட்டதன் அர்த்தங்களை இருவருமே உணரவில்லை.. தீராத போதை.. எந்த நேரமும் அவள் ஒரு புதைந்து கிடக்க சொன்னது இளமை..
தனக்கென எந்த ஆசாபாசங்களும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்தவனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து கிடைக்கும் தாம்பத்திய சுகம்.. விடுபட முடியாத அளவிற்கு கட்டி இழுத்து தன்னை அடிமைப்படுத்துவதாக தோன்றியது..
"அப்புறம் இன்னொரு விஷயம் இப்பவே சொல்லிடுறேன்.. எனக்கு சாஃப்டா ஹேண்டில் பண்ண தெரியாது.. இப்படித்தான் கொஞ்சம் வேகமா".. என்றவன்.. பேச்சை நிறுத்திவிட்டு பற்களை கடித்து ஒரு மாதிரியான சத்தத்துடன் கூடலின் உச்சத்தில் மிக வேகமாக இயங்கவும் உடலை ஒரு மாதிரியாக முருக்கினாள் பைரவி.. "உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியலைன்னா சொல்லு.. டாக்டர் கிட்ட என்ன சொல்யூஷன்னு கேட்டுக்கலாம்.. அப்புறம் உனக்குள்ள நான் ஏற்படுத்த போகும் சேதாரங்களுக்கும் சேர்த்து பேமென்ட் வாங்கிக்கோ".. மீண்டும் காயப் படுத்தினான் மனதளவில்.. அவன் பேசியதில் பாதிதான் புரிந்தது.. ஒரு விஷயம் மட்டும் உண்மை.. இந்த தாம்பத்திய உறவு அவளை பொருத்தவரை ஒரு வேலை.. சீக்கிரம் முடிய வேண்டும்.. என்ற அலுப்பு மட்டுமே மிச்சமிருந்ததே தவிர்த்து.. மின்னல் வெட்டியதைப் போல் அவ்வப்போது அவளுக்குள் தோன்றும் சுக உணர்ச்சிகளைத் தவிர வேறெந்த இன்பமும் இல்லை.. அவன்தான் மதுக்குடத்தினுள் தவறி விழுந்து வெளியே வர விரும்பாத வண்டாக ராஜபோதையில் நீராடிக் கொண்டிருந்தான்..
பந்த பாசங்களில் உழல விரும்பாதவன் காமம் என்கிற ஊன்றுக்கோலை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.. நிறைய நிறைய ஆராய்ச்சிகள் அவனுக்குள்.. ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஏன் இத்தனை கிளர்ச்சி தன்னுள்.. அதிலும் இவள் வித்தியாசமாக தெரிகிறாள்.. புதுமழையில் கிளம்பிய மண்வாசனையாக அடி மனதில் ஏதோ உணர்வு.. ஆழ்ந்து அனுபவிக்கத் தோன்றியது..
"தனியா குளிக்கப் போகாதே.. நான் வந்துடுவேன்".. என்று நழுவிய போர்வையை இடுப்பில் இழுத்துப் பிடித்துக் கொண்டு.. ஜன்னல் பக்கம் நின்று வெகுநேரம் ஃபோனில் உரையாடிக் கொண்டிருந்தவனை கட்டிலில் அமர்ந்து தலைசாய்த்து பெரிய விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தாள் பைரவி.. பின்புறம் தெரிந்த அகல விரிந்து இடையில் குறுகிய அந்த உடற்கட்டும்.. இறுகிப் புடைத்த தசைக் கோளங்களும்.. பாகுபலியில் வந்த வில்லன் ராணாவை நினைவூட்டி பயமுறுத்தியது..
அன்று ஒருமுறை அகிலா அக்கா வீட்டிற்கு அவர்கள் குழந்தைக்கு முதல் வயது பிறந்த நாள் கொண்டாடிய போது அழைத்ததில்.. வேணி பாட்டியோடு இவளும் சென்றிருந்தாள்..
அங்கேயும் எடுபிடி வேலை அம்மணிதான்.. இடைவெளிகளில் அங்கிருந்த பிள்ளைகளுடன் படம் பார்க்க அமர்ந்து விட்டாள்.. ராணாவின் முரட்டுத்தனமான தேக அமைப்பும்.. அவன் அக்கிரமங்களும் கண்டு மிகவும் பயந்து நடுங்கி பார்த்த படம் அது..
இப்போது வேந்தனை பார்க்கும்போதும்.. அதே பல்வாழ்த்தேவன் வில்லன் நினைவினில் வந்து போனான்.. ஏதோ நியாபகத்தில் தன்னை மறந்து அணிந்திருந்த உடைகளைத் தேடி அது கிடைக்காமல் போகவே.. டவலை சுற்றிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்..
ஃபோன் பேசி முடித்தவன்.. வெற்றுக் கட்டிலில் விழிகளை பதித்து சுருங்கிய புருவங்களுடன் அவளைத் தேடவும் குளியலறையிலிருந்து நீர் விழும் சத்தம்..
காதுகளை கூர்மையாக்கியவன்.. தன் பேச்சை மதிக்கவில்லையே என்ற இயல்பான கோபத்துடன் வேகமாக கதவைத் தட்டினான்.. மெல்ல திறந்து மரப்பொந்திலிருந்து எட்டிப்பார்க்கும் கிளியாக கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட.. கதவின் வெளியே தலையை நீட்டியவளின் பெரிய விழிகள் இன்னும் பளபளத்தன.. வந்த ஒருநாளில் ஏகப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்த விழிகள்..
ரேடியோ அலைவரிசை போல் சரியான அதிர்வெண் பிடித்து அர்த்தங்களை டியூன் செய்ய முடியவில்லை அவனால்.. அழகாக புருவங்கள் ஏறி இறங்கிட.. இதழ்களை மெல்ல கடித்துக் கொண்டதில்.. கோபத்தில் சிவந்திருந்த அவன் முகம் பச்சோந்தியாய் நிறம் மாறியது..
"நான்தான் வரேன்னு சொன்னேனே அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?" என்று.. லேசான அதட்டலுடன் கதவை சாத்திக் கொண்டு உள்ளே நுழைந்ததன் பின் கேட்டவை அனைத்தும் அவன் முனகல்களே.. இழுத்து வைத்த ரப்பர் பேண்டை.. சட்டென விடுவித்தால் எவ்வளவு வேகமாக எதிரே சென்று மோதுமோ அதுபோல.. கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே வந்தாள் பைரவி..
வித்தியாசமான முயற்சியில் தொடைகளில் ஒரே வலி.. அயற்சியாக இருந்த போதிலும்.. மீண்டும் இன்னொரு உடையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டும் சலிப்பு தட்டவே இல்லை.. மாறாக பொங்கிய உற்சாகத்துடன் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அலமாரியிலிருந்து இன்னொரு உடையை தேர்ந்தெடுத்து நல்ல வேளையாக வேந்தன் வருவதற்கு முன்னே அவசர அவசரமாக அந்த புடவையை கட்டி முடித்திருந்தாள்.. கிளிப்பச்சை நிற புடவையில் ரோஜா நிற வேலைப்பாடுகள்.. பிரிண்டட் ஒர்க்..
வேந்தன் வெளியே வரும்போது ஜன்னல் பக்கம் நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்தாள் பைரவி..
முதன்முறையாக புடவையில் பார்க்கிறான்.. ஜாக்கெட் அணிந்த முதுகு பகுதியில் சரியாக துடைக்கப்படாத முத்து திரலான நீர்த் துளிகள்.. பளீர் நிறத்தில் சேலை விலகிய இடை.. பக்கவாட்டில் கொஞ்சமாக தெரிந்த அவள் முனைழகு.. வழுக்கும் தேகம்.. இதுக்கெல்லாம் ஒரு என்டே இல்லையா.. என அவனை அலைகழித்தது..
மீண்டும் மீண்டும் அவளோடு இழையத் துடிக்கும் தன்மீதே ஏதோ வெறுப்பு.. ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. பார்வையைத் திருப்பிக் கொண்டு தலையைக் கோதியபடி..
"சாப்பாடு மூணு வேளையும் ரூமுக்கே வந்துடும்.. நான் வர்ற வரைக்கும் ரூமை விட்டு வெளியே போக வேண்டாம்.. இங்கேயே இரு".. என்றவன்.. எங்கே தன் இளமை கட்டவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக உடைகளை மாற்றிக்கொண்டு.. புது மனைவிக்கான முத்தங்களை வழங்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான்..
உணவு மேஜையில் தனக்கான உணவை உண்டுவிட்டு.. காரில் ஏறப்போன நேரம்.. தனது வாலட்டை அறையிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வர.. அடிபட்டு மரத்துப் போன கடந்த கால கசப்புகளின் விளைவால்.. ஒரு கணம்.. பைரவி அதிலிருந்து பணம் எடுத்து.. தன் ஜாக்கெட்டில் சொருகி கொள்வது போன்ற கற்பனை காட்சி.. அவன் சந்தேகப்பட்டு நம்பாத தன்மையின் விளைவால் மூளையில் வந்து போனது..
"அப்படி.. மட்டும் இருக்கட்டும்.. அவளை கொன்னுடுவேன்".. என்று.. தேவையில்லாத கோபத்துடன் பற்களை கடித்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்தவன்.. சிலையாக நின்று விட்டான்..
தொடரும்..

Last edited: