- Joined
- Jan 10, 2023
- Messages
- 125
- Thread Author
- #1
அன்றிலிருந்து இருவருக்கிடையேயான உறவு கட்டிலோடு முடிந்து போனது..
மறுநாள் காலையில்.. "சாரி உன்கிட்டே கொஞ்சம் ஹார்ஷா நடந்துக்கிட்டேன்னு நினைக்கிறேன்.. இனி அப்படி நடக்காம இருக்க முயற்சி பண்றேன்".. என்றவனுக்கு வறண்ட புன்னகையை பதிலாக கொடுத்தாள்..
"அண்ட் தேங்க்ஸ்.. உன்னால தான் நேத்து நிம்மதியா தூங்கினேன்.. இந்த மாதிரி தூங்கி ரொம்ப நாளாச்சு.. நீ கொடுத்த ஹெவேன்லி பீலுக்கு ரொம்ப நன்றி.. உன் உடம்புல ஏதோ மேஜிக் இருக்கு.. யூ ஆர் ரியலி அமேசிங்".. என்ற சொல்லிவிட்டு செல்ல.. அந்த வார்த்தைகளோ அத்தனை உவப்பாய் இல்லை..
உடலை தானே பிடித்து இருக்கிறது என்று சொன்னான்.. அவளிடம் இருந்து பெற்ற சுகத்தை வருணித்து சொன்ன விதம் காதில் ஈட்டியை பாய்ச்சுவதாய்.. உன்னை பிடித்திருக்கிறது.. உன் அக்கறை பிடித்திருக்கிறது.. ஐ லவ் யூ மதி.. என்ற ஒரு வார்த்தை மட்டுமே ஜடமாய் வாழ்ந்து கொண்டிருப்பவளை மீண்டும் உயிர்பிக்கச் செய்யும்..
உண்மையில் உடலுறவு மட்டும்தான் அவனை உறங்க செய்ததா.. இல்லவே இல்லை.. அதையும் தாண்டி அவளிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஏதோ ஒன்று வித்தியாசமாய்.. உணர முடிந்தவனுக்கு உருவம் கொடுக்க முடியவில்லை.. அள்ளியணைத்து அவள் கொண்டாடிய விதம்.. இதுவரை சாருவிடமிருந்து கூட உணர்வதில்லை இத்தகைய அரவணைப்பை.. அதற்காக அவளை விட்டுக் கொடுக்க முடியுமா.. அவன் உயிர் சாரு.. அவனைப் பொருத்தவரை தன் தேவைக்காக.. தன் அழகை பணத்தை விரும்பும் பல பெண்களில் அவன் தேர்ந்தெடுத்த பெஸ்ட் வெர்ஷன் விண்மதி..
அவனை அன்போடு அக்கறையோடு பார்த்துக் கொள்ள முயன்றாள்.. தாயாக.. தாதியாக.. சில நேரங்களில் ஏற்றுக் கொண்டான்.. சில நேரங்களில் உதாசீனப்படுத்தினான்.. கொஞ்சினாள்.. அலட்சியப்படுத்தினான்.. நினைக்கும்போதெல்லாம் நாடினான்.. களைத்து நன்றாக உறங்கினான்.. ஒருவாரத்தில் நிகழ்ந்த வியத்தகு முன்னேற்றத்தில் பாஸ்கர் வியந்து போனார்..
தினமும் அவள் தான் சமைக்கிறாள்..
"குக் வச்சுக்கலாமே.. எதுக்கு ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற".. என்று மணக்க மணக்க அவள் சமைத்துக் கொண்டிருக்கும் வேளையில் பிடரியை வருடிக் கொண்டே அலட்சிய தொனியுடன் அவன் கேட்ட கேள்வி..
"நாம ரெண்டு பேரோட பிரைவசியை கெடுக்கிற மாதிரி எதுக்கு குக்.. நானே சமைச்சிடறேன்.. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா".. அவள் கேட்க.. "நீ இதை அட்வான்டேஜா எடுத்துக்காத வரை எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை".. தோளைக் குலுக்கி சென்று விட்டான் அவன்..
காலை.. இரவு உணவு அவனோடு தான்.. கட்டாயப்படுத்தி தன் அருகே அமர வைத்து சாப்பிட வைப்பாள்.. ஊட்டிவிடவா.. குறும்பாக உணவை அவன் வாயருகே எடுத்து சென்று கண்சிமிட்ட சில நேரங்களில் முறைப்பான்.. சில நேரங்களில் தட்டி விடுவான்.. சில நேரங்களில் தட்டை தூக்கி அடிப்பான்..
"உன்னோட பர்சனல் நீடுக்கு ஏதாவது பணம் தேவைப்பட்டா.. இல்ல இல்ல.. கண்டிப்பா நீ பணம் வாங்கிக்கணும்.. எவ்வளவு வேணும் கேளு".. இந்த வார்த்தைகள் அவள் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்று உணர்ந்தும் கூர்வழிகளால் அவளை உற்று நோக்கியவாறு கேட்டான் ஹரிஷ்..
பேச்சை வரவில்லை.. வாயை திறந்தால் எங்கே அழுது விடுவோமோ என்ற பயத்துடன்.. தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு தன்னை நிலைப்படுத்தியவளின் உணர்வுகளை நிதானமாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் அவன்.. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து..
"எ.. எனக்கு பணம் எதுவும் வேண்டாம்.. நான் ஒன்னும் பிராஸ்டிடியூட் இல்லை.. பணத்துக்காக சுகம் கொடுக்க.. உங்க கூட ஸ்டே பண்ண விரும்பிதான் வந்திருக்கேன்.. உங்களை பிடிச்சு தான் பழகுறேன்.. தயவு செஞ்சு என்னை அசிங்கப்படுத்தாதீங்க".. என்று உடைபட்ட வார்த்தைகளுடன்.. வேதனை சாயல் முகத்தில் படிய அவள் சொல்லவும்.. புருவ சுழிப்புடன் அவள் உணர்வுகளை அலட்சியப்படுத்தியவனோ.. "ஐ நோ.. நீ என்னை விரும்பிதான் வந்திருக்கே.. அதுக்காக உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் ப்ரீயாவே வாங்கிக்கிட்டா அது வேற விதமான ரிலேஷன்ஷிப்க்கு அர்த்தமாகி போகாதா.. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்னையே நீ தூக்கி கொடுக்க நாம ஒன்னும் கணவன் மனைவியோ காதலன் காதலியோ இல்லையே".. என்றவனின் குரலில் தான் அத்தனை எகத்தாளம்.. ஒன் நைட் ஸ்டாண்ட்க்காக அவனிடம் கொஞ்சி நிற்கும் பெண்களுடன் அவளை சேர்த்து விட்டான் போலும்.. உயிரை உருக்கி பிழியும் காதல்.. அவனுக்கு புரியவே இல்லை.. அவள் மீது அத்தனை நல்ல அபிப்ராயம் இல்லை.. உயிரை உருக்கி பிழியும் காதல்.. அவனுக்கு புரியவே இல்லை..
விரக்தியான புன்னகையை இதழில் வழிய விட்டவள்.. "பிசிகல் ரிலேஷன்ஷிப் கிவன் டேக் பாலிசி தானே.. ரெண்டு பேருக்கும் தானே சந்தோஷம்.. இதுல எக்ஸ்ட்ராவா எனக்கு பே பண்ணி நீங்க என்னை அசிங்கப்படுத்த வேண்டாம்.. எனக்காக நீங்க ஒரு பைசா கூட செலவு பண்ண வேண்டாம்.. வீட்டு செலவுகளை கூட சரி பாதியாக பகிர்ந்துக்கலாம்.. சத்தியமா உங்க பணத்துக்காக மட்டும்நான் இங்க வரல.. அதை புரிஞ்சுகிட்டா போதும்".. என்று எழுந்து சென்று விட்டாள்..
அவள் சொன்னதை யோசித்துப் பார்த்தவனுக்கு.. வித்தியாசமான பெண் என்று உள் மனம் அவளை தூக்கி வைத்தாலும்.. "ம்ம்.. தன்னை வித்தியாசமா காட்டிக்க இதுவும் ஒரு டெக்னிக்".. என்று வம்படியாக உதட்டைப் பிதுக்கி எதிர்ப்பதமாக நினைத்தான் அவன்..
நடந்த விஷயங்களை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தவள்.. பால்கனியில் காபி கோப்பையுடன் புல்வெளியை வெறித்து நிற்க.. அவளை அணைத்தபடி அவன்..
கூந்தலை விலக்கி பின் கழுத்தில் குட்டி குட்டியாய் முத்தங்கள் வைத்துக் கொண்டிருந்தான்.. காமத்திற்கு நேரம் காலம் இல்லை.. அவனுக்கு எப்போது தேவையோ அப்போது அவள் வேண்டும்.. முடியாது பிடிக்காது என்றால் பெட்டியை கட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.. இதுதான் ஒப்பந்தம்..
"உனக்கு அம்மா அப்பா எங்கே இருக்காங்க".. ஒரு வாரம் கழித்து தான் அவளை பற்றி விசாரிக்கிறான்.. அவளைப் பற்றி அவனுக்கென்ன அக்கறை..
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவள்.. "எனக்கு ஒரு அண்ணன் மட்டும் தான்.. அவன் கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டான்.. அவனைப் பொறுத்தவரை நான் இருந்தாலும் ஒன்னுதான் இல்லைனாலும் ஒன்னு தான்".. என்றாள் விரக்தியுடன் எதிர்பக்கத்தை வெறித்து.. அத்தோடு நின்று போனது பேச்சு.. அவள் சுக துக்கங்களில் அவனுக்கு எந்த வித பங்கும் இல்லை.. அக்கறையும் இல்லை.. ஸ்லீவ்லஸ் நைட் டிரஸ்ஸில் அவளை கண்டவுடன் கண்டமேனிக்கு உணர்வுகள் ஆர்ப்பரிக்க.. காபி கோப்பை கீழே விழுந்து நொறுங்க பெண்ணவளை கையிலேந்தி கொண்டு அறைக்கு சென்றான் அவன்..
"ஆ.. ஆ.. ஆபீஸ் போகணும்".. அவள் உதடுகள் திக்கி திணற.. "பரவாயில்லை.. இன்னும் நிறைய டைம் இருக்கு".. என்று இதழில் முத்தமிட்டுக்கொண்டே அவளை உள்ளே தூக்கி சென்றான்.. ஒரு மணி நேரம் அவளை விடாது நாடியவன் மென் தேகத்தில் பற்களால் கொடுத்திருந்த அழுத்தமான தடங்களுடன் விலகிப் படுத்தான்.. என்னவோ மீண்டும் மீண்டும் நாடத் தவிப்பு.. அகல பாதாளத்தில் விழப்போனவனை திடீரென ஒரு கயிறு கொண்டு காப்பாற்றியது போல் சமீபகாலமாக அவன் மனதில் நிலவும் நிம்மதிக்கு அவள்தானே காரணம்..
இந்தப் பெண் மட்டும் உள்ளுக்குள் ஏதோ குறுகுறுக்க செய்கிறாள்.. உணர்வுகளில் உஷ்ண தகிப்பை ஏற்படுத்துகிறாள்.. அத்தனை பெண்களின் மத்தியில் இவளிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு கேள்வியை தைரியமாக கேட்டான்.. கேன் வி ஹேவ் செக்ஸ்.. இன்று வரை அவனுக்கே புரியவில்லை.. கேட்க வேண்டிய கட்டாயம்.. இவள் இல்லை வேறு ஏதேனும் ஒரு பெண்ணிடம் எப்படித்தான் கேட்டிருப்பேன்.. என் சாருவின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக.. உயிர் வாழ்வதற்காக.. என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் அவள் பால் தோன்றிய இனம்புரியா ஈர்ப்பை மறைக்க..
அலுவலகம் கிளம்ப நேரமான போதும் அவள் முகம் பார்த்துக் கொண்டே இருந்தான் அவன்.. இன்ஸ்டன்ட் எனர்ஜி ட்ரிங்க் குடித்தது போல அப்படி ஒரு சுறுசுறுப்பு.. அவன் வேகத்தில் சோர்ந்து போனவளோ கண்ணயர்ந்து கிடக்க.. அழகோவியமாய் கிடந்தவளை கண்டு இறுகிய இதழ்களில் மெல்லிய புன்னகை.. கலைந்த கூந்தலை மெல்ல வருட ஆசையாக நீண்ட கைகள் அப்படியே நின்று விட்டன..
இதுபோல இவளிடம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது.. எப்போதும் என் சாருவுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.. எனக்காக தன்னுயிரை தியாகம் செய்த அந்த புனித ஆத்மாவுக்கு மட்டுமே என் காதல் சொந்தம்.. இனி தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தவன் அவள் பக்கம் நீட்டிய கரத்தினை முஷ்டி இறுக மடக்கினான்.. முகம் மீண்டும் பாறையாக இறுகிப் போக.. வேகமாக அவள் கன்னம் பற்றி முரட்டுத்தனமாக உலுக்கினான்..
"மதி.. மதி".. அவன் குரலின் கடுமையில் மெல்ல கண்விழித்தவளோ.. "இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேனே ப்ளீஸ்.. உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது".. ஆங்காங்கே சிவந்து போயிருந்த காயங்களை வெண்ணிற போர்வையால் மூடியபடி.. ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முயல..
"ஏய்ய்.. ஆபீஸ்க்கு டைம் ஆச்சு.. இதையே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு.. ஆபீஸ்ல என்கிட்ட சலுகைகள் வாங்க நினைக்காதே.. அப்புறம் என்னை வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்.. சீக்கிரம் கிளம்பி ஆபீஸ்க்கு வா".. என்று கடுமையான குரலில் கட்டளையிட்டு விட்டு.. வேகமாக சென்று குளியலறை கதவை டமாரென சாத்திக் கொண்டான் அவன்..
மனமும் உடலும் சோர்ந்து போன நிலையில்.. போர்வையை போர்த்திக் கொண்டு எழுந்தாள் அவள்.. இப்படிப்பட்ட வதை சொற்களை வாங்கிக்கொண்டு அவமானப்பட்டு இன்னும் நீ எங்கே இருக்க வேண்டுமா என்று மனசாட்சி கேள்வியெழுப்ப.. இருந்தே ஆக வேண்டும்.. என்னவனுக்காக.. என்று தனக்குள் உறுதியாக உரைத்துக் கொண்டவளோ நடக்க முடியாமல் எழுந்து உடைகளை அணிந்து கொண்டு அடுத்த அறையின் குளியலறைக்குள் சென்றாள்..
இரவும் சரியான தூக்கம் இல்லை.. மனம் வேறு சோர்ந்து போன நிலையில் அலுவலகத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டாலும் வேலையே ஓடவில்லை..
சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தாள் ஜோதி.. இன்னும் அவளுக்கு ஹரிஷுடன் மதி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது தெரியாது.. தெரிந்தால் கடித்தே குதிரை விடுவாள்..
ஹரிஷ் அப்படி கேட்டான் என்று அங்கலாய்த்து கொண்டதற்கே கொதித்துப் போனாள்.. "இங்க பாரு இப்ப சொல்றதுதான்.. உன் சுயமரியாதையை விட்டுட்டு கேவலமா அவர் சொன்னதுக்கு எல்லாம் தலையை ஆட்டிக்கிட்டு.. இந்த லஸ்ட் ரிலேஷன்ஷிப்காக அவர் கூட போய் தங்குனேன்னு வச்சுக்கோ.. அத்தோடு என் பிரண்ட்ஷிப்பை மறந்துடு.. என் மூஞ்சில கூட முழிச்சிடாதே சொல்லிட்டேன்".. என்று கண்டித்துக் கூறியிருந்தாள் ஆங்காரமாக ..
இன்று ஜோதியை பார்த்தவுடன்.. அம்மாவை கண்டதும் ஓடி சென்று கட்டிக் கொள்ளும் பிள்ளை போல்.. பாரத்தை அவளிடம் இறக்கி வைத்து ஆறுதல் தேட மனம் தவித்தாலும்.. உண்மையை சொல்லி அவள் வெறுப்பையும் பாராமுகத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் அவளுக்கு இல்லை.. ஜோதி சிரித்து பேசும் போதெல்லாம்.. ஆருயிர் தோழியிடம் உண்மையை மறைக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியுடன் தவித்தாள் மதி..
இது போதாது என்று.. ஹரிஷ் அக்மார்க் முதலாளியாய் முடித்து ஒப்படைத்த வேளையில் எல்லாம் ஏதாவது குறை சொல்லி அவளை திட்டிக் கொண்டே இருந்தான்.. காமம் தாண்டி அவள் மீது தோன்றும் ஏதோ மிருதுவான உணர்வை அவனால் தாள முடியவில்லை.. வேரோடு கலைந்தாக வேண்டும்.. வெறுப்பை உமிழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை வாட்டியெடுத்தான்.. இனி அவள் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்தான்.. ஆனால் அது சாத்தியமில்லையே..
அலுவலகத்தில் அனைத்து பெண்களுக்கும் அன்று கொண்டாட்டமாய் போனது.. "என்னடி இன்னைக்கு மதி இவ்வளவு திட்டு வாங்குறா".. என்று.. குத்தாட்டம் போடாத குறையாக குதுகலிக்க.. கண்கள் கலங்க வேலை பார்த்துக் கொண்டிருந்தவளை இன்டர் காமில் அழைத்திருந்தான் ஹரிஷ்..
தொடரும்..