• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 37

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
49
தன்னை விடவும் அதிகமாகவே வளர்ந்து வாட்டசாட்டமாக இருந்தவனை கைபிடித்து அழைத்துச் செல்வது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் அல்லவே.. ஆனால் அவன் நெகிழ்ந்து நின்ற நேரம் அவள் கைச்சிறைக்குள் அகப்பட்டு அவள் இழுத்துச் சென்ற விசையில் நடந்தான் ஜீவா..

ஒரு சில நொடிகளில் தன் கௌரவத்தை தூக்கி நிறுத்திய மனைவியின் கம்பீரத்தில் சுயம் தெளிந்தவனாக "ஒரு நிமிஷம் மான்வி" என்று இரும்பு குரலில் உரைத்து அவள் நடையை நிறுத்தியவன் அவள் கைப்பிடியிலிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டு வேகமாக சோமுவை நோக்கி சென்றான்.. இறங்கிய சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டு கொண்டே அவன் வரும் தோரணை கண்டு அங்கிருந்து அனைவருக்கும் இவன் எதற்காக திரும்பி வருகிறான் என்று அடிவயிற்றில் கிலி பரவியது..

எச்சில் விழுங்கி நின்ற சோமுவின் முன் இடுப்பில் கைவைத்து நின்றவன் "இங்க பாரு ஜீவா.. பிரச்சனை வேண்டாம் மரியாதையா திரும்பி போயிடு" என்று கணவர் பேசும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது வாய் திறந்து ஜீவாவை அடக்க முயன்ற சோமுவின் மனைவி அலமேலுவை துச்சமாக பார்த்துவிட்டு தன் உதவாக்கரை சித்தப்பனின் பக்கம் திரும்பினான்.. "நியாயமா பெரியவங்களை அடிக்க கூடாது.. அதிலும் என் அப்பா மாதிரி நீங்க.. உங்ககிட்ட நிச்சயமா மரியாதையாத்தான் நடந்துக்கணும்".. என்று எங்கோ பார்த்து பிடரியை வருடியவன்.. "ஆனா எப்படி பார்த்தாலும் உங்களை பெரியவரா என்னால நினைக்கவே முடியல.. ஐ அம் சாரி.. உங்ககிட்ட நல்ல பேர் வாங்கி நான் என்ன செய்யப் போறேன் சொல்லுங்க.. என்றுதோள்களை ஏற்றி இறக்கி அலட்சியமாக கூறியவன் முகம் வெளிறி நின்றிருந்த சோமுவை பளாரென விட்டான் ஒரு அறை..

அத்தனை பேரின் முன்னிலையிலும் அறை வாங்கி அவமானத்தில் முகம் கன்றி நின்றிருந்த சோமுவைக் கண்டு "ஐயோ என் புருஷனை அடிச்சுட்டானே" என்று ஒப்பாரி வைத்த அலமேலுவை ஒற்றைப் பார்வையால் அடக்கியிருந்தவன் மீண்டும் தன் தீவிழிகளை சோமுவின் மீது பதித்து "என் அப்பாவோட சாவுக்கு நீயும் ஒரு காரணம்.. அதுக்காக தான் இந்த அடி".. அழுத்தமாக உரைத்து திரும்பி நடந்தான் அதே கம்பீரத்தோடு..

"அதானே.. பதிலடி கொடுக்கலைன்னா அது ஜீவா இல்லையே".. என்று மார்பின் குறுக்கே கைகட்டி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

தந்தையின் மரணத்திற்கு தன் மூர்க்கத்தனம் தான் காரணம் என்று குற்ற குறுகுறுப்போடு இத்தனை நாட்கள் மனதுக்குள் புழுங்கி செத்துக் கொண்டிருந்தவனுக்கு.. "நீ நீயாக இருக்கிறாய்.. இதில் தவறு ஒன்றும் இல்லையே" என்று புரிய வைத்திருந்த மான்வியை தேவ மகளாக கொண்டாட தோன்றியது.. கார் வரை ஓடிவந்து நடந்த சம்பவத்திற்காக கையைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்ட காசிலிங்கத்திற்கு ஒரு புன்சிரிப்பை பதிலாக கொடுத்து.. "பரவாயில்லை சார் நாங்க தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்.. அழகான விழா தருணத்தை பாழ்படுத்திட்டேன் என்னை மன்னிச்சிடுங்க".. என்று முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர் இருவரும்..

மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் மான்வி..

அவள் தளிர்க்கரத்தின் மீது தன் கரத்தை அழுத்தமாக பதித்திருந்தான் ஜீவா.. "தேங்க்யூ மான்வி".. என்றவனை விழிகள் சுருங்க ஏறிட்டாள்..

"உனக்கு என் மேல தவறான அபிப்பிராயங்கள் இருந்தாலும்.. மத்தவங்க கிட்ட என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினதுக்காக".. எங்கிருந்தான் உணர்ச்சி நிறைந்த குரலில்..

"நான் ஒன்னும் பொய் சொல்லல.. என் மனசுல என்ன இருக்கோ அதைத்தான் அப்படியே பேசினேன்".. தீர்க்கமான குரலில் உரைத்துவிட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க திருப்பிக் கொண்டாள் அவள்.. கோடி மலர்களை தன் மீது வாரியிறைத்த உணர்வு.. மான்வி தன்னை காதலிக்கிறாள் என்று தெரியும்.. திருமணத்திற்கு பின் வந்த காதல் என்று தவறாக நினைத்திருந்தவன் அன்று அவள் மனம் விட்டு பேசிய பிறகு அவள் உண்மைக்காதலை உணர்ந்து கொண்டிருந்தான்.. வாதங்கள் செய்து அதை பொய்யாக்கி அவள் மனதை நோகடித்து என்ன கிடைத்து விடப் போகிறது..

எதையும் முரட்டுத்தனமாகவே வெளிப்படுத்தி பழகிய தன் குணத்தினில் அவளுக்கு திருப்தி இல்லை என்றாலும் தன்னைக் குறையோடு அப்படியே ஏற்றுக் கொண்டதாக எண்ணியிருந்தான்..

இப்போது.. எல்லா விதத்திலும் நீ சரியானவன் என்று மறைமுகமாக உணர்த்திப் பேசியதில் காரை வானிற்கு பறக்க விடும் அளவிற்கு இதயத்தின் வேகம் கூடியது.. அவ்வளவு மகிழ்ச்சி.. அவள் கரம் பற்றி மெல்ல தன் இதழில் ஒற்றிக் கொண்டான்.. அவளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை..

"என் மான்விக்கு என்மேல ரொம்ப கோபம் இல்லையா?".. என்றான் உறுத்தலோடு.. அவள் மனப் புழுக்கத்திற்கான காரணம் தான் அவன் அறிவானே!!..

மீண்டும் அவன் பக்கம் திரும்பியவள் வெற்றுப் புன்னகையோடு.. "கல்யாணத்துக்கு பிறகு உங்க மேல எப்பவுமே கோபம் இருந்தது இல்லை.. என்னை புரிஞ்சுக்கலையேங்கிற வருத்தம் மட்டும்தான்.. ஆனா பொறுமையா யோசிச்சு பார்க்கும் போது தான் ஒரு விஷயம் புரிஞ்சது.. உங்க நிலையில நான் இருந்திருந்தா இதைவிட மோசமாக நடந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்ல.. தினம் தினம் குற்ற உணர்ச்சியில் செத்துட்டு இருக்கேன்.. உங்க இழப்பை எப்படி ஈடு செய்யப் போறேன்னு தெரியல".. என்று குனிந்து தன் மணிவயிற்றை வருடியவள்.. "நான் கொடுத்த காயத்துக்கு இந்த குழந்தை ஒரு மருந்தாக இருக்கும்னு நம்புறேன்".. என்று கண் கலங்கி கூறியதில்.. அவசரமாக வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியவன்.. அவளை இழுத்து முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி நெற்றியோடு நெற்றி முட்டி கண்கள் மூடினான்..

"பழசை மறந்திடுவோம் மான்வி.. அப்பாவை இழந்த கோபத்துல.. நீயும் என்னை வெறுத்துட்டு போயிட்டேங்கற ஆற்றாமையில.. ஆதங்கத்துல உன் மேல கோபத்தை காட்டி நானும் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. இறந்தவங்களை திரும்பிக் கொண்டு வர முடியாது.. அவர் ஆசைப்படி சந்தோஷமாக வாழ முயற்சி பண்ணுவோம்.. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல மான்வி".. என்றான் கண்ணீர் வடிந்த விழிகளுடன்.. மான்வி எதுவும் பேசவில்லை அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு மீண்டும் வெளிப்புறம் பார்வையை செலுத்தினாள்..

அவன் சொன்னவுடன் சட்டென மனதை உற்சாகமாக மாற்றிக்கொண்டு அவன் தோளில் சாய முடியவில்லை.. இன்று நடந்த சம்பவத்தின் காரணமாக அவன் மென்மையான பக்கங்கள் தன்னை நோக்கி திறக்கப்பட்டிருக்கிறது.. பற்றாக்குறைக்கு இந்த குழந்தை.. சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது அப்பாவின் விருப்பத்திற்காக.. தான் அதிக அளவு மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இப்படியே போனால் பிரசவம் சிக்கலாகும் என்று டாக்டர் சொன்னதால் இந்த சமாதானம்.. மற்ற படி ஜீவாவின் ஆத்மார்த்தமான காதலை பெற நான் தகுதியில்லாதவள்.. நினைக்கும் போது இருதயத்தில் முள் குத்திய வலி.. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தனது நிலை எப்படி மாறுமோ என்று அச்சம் கொண்டது அவள் மனது..

தன்னை அப்படியே ஏற்றுக்கொண்டு முரட்டுத்தனமாக காதல் செய்த ஜீவாவை தேடி அலைந்து.. அவன் உயிர்ப்போடு தன்னோடுதான் இருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப் போனாள் மான்வி..

மனைவியிடம் உருகி உருகி ஆயிரம் கதைகள் பேச அவனுக்கு இஷ்டம் தான்.. ஆனால் ஒரு கணவனாக தன்னை விட்டுக் கொடுக்காமல் உச்சத்தில் தூக்கி நிறுத்திய அந்த சம்பவத்திற்கு பிறகு அவளோடு இழைந்தால் என்ன நினைப்பாள்.. தான் ஒரு சுயநலவாதி என்று நினைத்து விட மாட்டாளா.. என்ற எண்ணமே ஜீவாவை மனம் திறந்து பேச விடாமல் ஓர் எல்லையில் தள்ளி நிறுத்தி வைத்ததிருந்தது.. காமம் அவர்களுக்குள் சகஜமான விஷயம் என்பதால் அவள் வித்தியாசத்தை உணரவில்லை.. கரம் பற்றி இதழ் ஒற்றிய போதே ஐ லவ் யூ என்று அவன் வழக்கமான பாணியில் உருகலான குரலில் மொழிந்திருந்தால் அவன் மனம் புரிந்திருக்குமோ என்னவோ!!.. சொல்லப்படாத காதல் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று தெரிந்திருந்தால் உயிர் வரை பதறி தன் மனதிலிருக்கும் கடலளவு காதலை.. விதவிதமாக வெளிப்படுத்தி இருந்திருப்பான் ஜீவா..

இப்போது ஜன்னல் வழி உலகத்தை.. எதிர் வீட்டை பார்ப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டாள் மான்வி.. ஜீவாவின் அன்பு தற்காலிகமானது என்று தன் கையிலிருக்கும் சொர்க்கத்தை நரகமாகவே பாவித்தவளுக்கு.. எதிர் வீட்டை கண்டு ஏக்கம் கூடி மேலும் நிம்மதி குலைந்து போனதில்.. முற்றிலுமாக அந்த வீட்டை வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து விட்டாள்..

த கேர்ள் ஆன் த ட்ரெயின் என்று ஒரு ஆங்கிலப் படம் உண்டு.. ரயில் செல்லும்போது ஒரு வீட்டின் மாடியில் கண் முன் தெரியும் அழகான குடும்பத்தை பார்த்து ஏங்கும் நாயகி.. அப்படித்தானே அவள் வாழ்க்கையும் இதுவரை சென்று கொண்டிருக்கிறது.. ஆனால் முன்பு போல் குத்தி பேசும் சுடு சொற்கள் இப்போது பிரயோகிக்கப்படுவதில்லை.. அதுவரை நிம்மதி..

அவள் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்ததில் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தவித்து போனவன் ஜீவா தான்.. "என்னை ரொம்ப தவிக்க விடுற மான்வி".. வெளிப்படையாகவே கூறினான்.. "கர்ப்ப காலத்தில் வேலைக்கு போகக் கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன.. வீட்டுக்குள்ளேயே இருந்தா பைத்தியம் புடிச்சு செத்துடுவேன்.. வேலைக்கு போறதும்.. நாலு பேரோட பழகுறதும் தான் என் மனதை டைவர்ட் பண்றதுக்கான ஒரே வழி".. என்ற பிறகு அவனால் பேச முடியவில்லை..

"அப்போதும் கூட வேணும்னா என்னோட ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்துடேன்.. என் கண் முன்னாடியே இருந்தா எனக்கும் நிம்மதியா இருக்குமே!!" என்றும் கூறிப் பார்த்தான்..

"உங்க ஆபீஸ்ல நான் என்ன வேலை பார்க்க முடியும் ஜீவா.. நான் படிச்ச துறையில் வேலை பார்க்கணும்னு நினைக்கிறேன்.. சும்மா கிடைக்கிற வேலைய பாக்குற நிலைமைக்கு இன்னும் நான் வரல.. என்னோட அப்பா கஷ்டப்பட்டு படிக்க வச்ச படிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கணும் இல்லையா.. இன்னும் கொஞ்ச நாள் தானே அப்புறம் ஆறு மாசம் மெட்டர்னிட்டி லீவ்.. அதுக்குப் பிறகு வேலைக்கு போறதா.. வேணாமான்னு முடிவு பண்ணிக்கலாம்.. அதுவரைக்கும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க".. என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.. "நான் சொல்றது தான் செய்யணும்" என்று நெருப்பு விழிகளோடு தன் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கவில்லை ஜீவா.. அவள் போக்கிலேயே விட்டு பிடித்தான்..

அன்றொரு நாள் ரமா மான்விக்கு அழைத்திருந்தாள்.. பலமுறை அழைப்புகளை தவிர்த்து இருந்தவள் ஒரு கட்டத்தில் என்ன அவசரமோ என்ற படபடப்போடும் தயக்கத்தோடும் அழைப்பை ஏற்று காதில் வைத்து "சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லி முடிங்க" என்றாள் ஒரே வார்த்தையாக..

"அனி.. தாவை காணும் டி".. என்று ரமா ஓவென்று அழவும்.. ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.. "ஸ்கூலுக்கு போய் இருப்பா இல்ல.. பிரண்ட்ஸ் வீட்ல தேடி பாருங்க.. அவ பிரண்ட்ஸோட நம்பர் என்கிட்ட இருக்கு.. நான் வேணா போன் பண்ணி பாக்கறேன்".. படபடப்போடு நடுங்கிய குரலில் அவள் கூறவும்.. "இல்ல மான்வி.. விஷயம் வேற மாதிரி போகுது.. அவ ஏதோ ஒரு பையன் கூட ஊரை விட்டு ஓடிப் போயிட்டதா அவளோட தோழி சத்யா சொல்றா".. என்றதும் திடுக்கிட்டு போனாள் மான்வி.. அனிதா கொஞ்சம் சுட்டி தான்.. ஆனால் காதல் கத்திரிக்காய் என்று இந்த வயதில் விவரம் தெரியாது வாழ்க்கை அழித்துக் கொள்வாளா!!.. 16 வயது.. ஆபத்தாயிற்றே..

"அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது மா.. நம்ம அனிதா ரொம்ப நல்ல பொண்ணு.. அந்தப் பொண்ணு எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு சொல்லுது".. அம்மாவை தேற்றுவதற்காக அப்படி கூறினாலும் அப்படி எதுவும் இருக்க கூடாது என்று அவள் மனமும் கடவுளிடம் பதட்டத்தோடு வேண்டிக் கொண்டது..

"இல்ல மான்வி.. அவ கைப்பட லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கா.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடி.. சின்ன பொண்ணு.. இப்ப எங்க இருக்கா.. என்ன செய்றான்னு தெரியலையே.. காலம் வேற கெட்டு கிடக்கு.. எனக்கு உயிரே போகுதுடி.. என்னென்னவோ யோசிச்சு அடி வயிறு கலங்குது..
அப்பா இடிஞ்சு போய் உக்காந்து இருக்காரு.. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க முடியல.. என்ன செய்றதுன்னு தெரியல.. ஒரு மாதிரி படபடன்னு வருது.. நீ கொஞ்சம் வீட்டுக்கு வர்றியா".. புலம்பலும் கண்ணீருமாக கேட்ட அன்னையின் கோரிக்கையை எப்படி நிராகரிக்க முடியும்.. அதிலும் அனிதாவை வேறு காணவில்லை.. "குழந்தை எங்க போனாங்கன்னு தெரியலையே!!".. என்று தலையில் கை வைத்து செய்வதறியாது செயலற்று அமர்ந்திருந்தாள்..

"நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்மா".. என்று போனை வைத்து விட்டாலும் இந்நேரத்தில் வீட்டிற்கு சென்று அப்பா அம்மாவிற்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று மனம் பரிதவித்தது.. காணாமல் போன தங்கையை எப்படியாவது கண்டுபிடித்து கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற துடிப்பு.. ஆனால் என்ன செய்வது.. யாரை அணுகுவது என்று புரியவில்லை.. "முதல்ல கிளம்பி வீட்டுக்கு போவோம்" என்ற எண்ணத்துடன் அனுமதி கேட்பதற்காக தன் கணவனை அழைத்திருந்தாள்..

"ஹலோ"..

'சொல்லு மான்வி ஆல் ஒகே தானே"..

உள்ளுக்குள் பதட்டத்தை மறைத்துக் கொண்டு திடமான குரலில் "அது.. அனிதாவை காணும்.. எங்க போனா ன்னு தெரியல.. வீட்ல அம்மாவும் அப்பாவும் அழுதுட்டு இருக்காங்க.. நான் கிளம்பி வீட்டுக்கு போகட்டுமா".. என்று விட்டு தவிப்போடு அவன் பதிலுக்காக காத்திருக்க எதிர் முனையில் மௌனம்..

"ஹ.. ஹலோ"..

"எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை.. ஆனா உன்னோட அம்மா அப்பாவை நான் இன்னும் மன்னிக்கல.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. அங்க போகணும்னு நினைச்சா அப்படியே என்னை மறந்துடலாம்.. என் கூட வாழனும்னு நினைச்சா.. ஆபீஸ்ல இரு.. ஈவினிங் வந்து உன்னை பிக்கப் செஞ்சுக்கிறேன்".. என்று வைத்து விட்டான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Sep 14, 2023
Messages
110
Manvi enna seiya pora....... Jeeva oru kastam na udathava vendama........😞😞😞
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
127
Jeeva un manthil Enna irukirathu. Manvi veetil prasanai irukum pothu aval angu sella than ninaipal. Nee enna mudivu eduka pora anithavai kandupidipaya Or uthavi pannamal iruka poriya waitin next ud
 
Member
Joined
Sep 9, 2023
Messages
22
Enna.....anitha va yaru kapatuva.....
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
24
Sutham anitha yenna aanalo
Maanvi ya poga vidama neeyae thedalamae jeeva ah 😔😔😔😔
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
99

Illa...situation solli thana kekkura.. Idhanala Anitha ku EdHana aachina Enna panna... She was kidnaped...
 
New member
Joined
Oct 13, 2023
Messages
5
  semma semma

ஜீவா ஏன் இப்படி சொல்றான்..

மான்வியோட தங்கச்சியும் தம்பியும் ஜீவா மேல உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் தானே..

மான்வி அம்மா அப்பா எப்படியோ ..
அனிதா ஜீவா மேல ரொம்ப பாசமா தான் இருப்பா..
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
73
Dei pavam da.... 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
 
Top