• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 39

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
49
"இங்கிருந்து போற வரைக்கும் ரொம்ப நல்லா பேசினான் அக்கா.. ஒரு ரூம் எடுத்து குளிச்சு பிரஷ் ஆகிட்டு எங்க வீட்டுக்கு போகலாம்னு சொல்லி.. திண்டுக்கல்ல ரூம் போட்டு அங்கே.. அங்கே.. என்கிட்ட.. மிஸ் பிஹேவ் பண்ண பார்த்தான்.. நான் இதெல்லாம் வேண்டாம்னு.. அவனை தள்ளி விட்டதும் என் முடியை பிடிச்சு மிரட்ட ஆரம்பிச்சுட்டான்.. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு ஆனா வெளிகாட்டல.. முடிஞ்ச அளவுக்கு அவனை எதிர்க்க முயற்சி செஞ்சேன்.. நல்ல வேலையா அந்த நேரத்துல கதவை உடைச்சுக்கிட்டு மாமாவும்.. இதோ இந்த அண்ணாவும் உள்ளே வந்தாங்க.. அவனை அடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சுட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க".. என்று நடந்ததை கண்ணீரோடும் நடுக்கத்தோடும் மான்வியிடம் ஒப்பித்திருந்தாள் அனிதா..

முதல் பாதியில் ரத்தம் சுண்டி முகம் வெளிறி அமர்ந்திருந்தவள் .. ஜீவா மாமா விபரீதம் நடக்கிறதுக்கு முன்னாடி வந்து அவனைப் பிடிச்சு அடி வெளுத்துட்டாரு என்று முடிக்கும் தருவாயில் நீண்ட நிம்மதி பெருமூச்சை வெளியிட்டு.. ஜீவா மீதான நன்றி உணர்வுடன் விழி தாழ்த்தி சில நிமிடங்கள் அவன் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்..

"இதனால தான் வெளியே அலைய வேண்டாம்னு சொன்னாரோ.. என்னை ஆபீஸ்லயே இருக்க சொல்லிட்டு அவர் தேடி அலைஞ்சு என் தங்கச்சியை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திருக்காரு.. சோ ஸ்வீட்".. கணவனை கழுத்தோடு கட்டிக் கொண்டு மூச்சுமுட்ட முத்தமிட்டு கொண்டாட தோன்றியது..

அனிதாவிற்கு உணவூட்டி முடித்து.. அன்னை தந்தையுடன் தம்பியுடன் அமர்ந்து உண்டு முடித்து தன் கணவனுக்காக காத்திருந்தாள் மான்வி.. அனிதாவிடம் ரமா முதலில் கடுகடுவென பேசினாலும்.. மான்வி வலியுறுத்தியதன் பேரில் சற்று நிதானமாக மகளிடம் கரிசனத்தோடு விசாரித்து பொதுவான அறிவுரைகளை வழங்கலானாள்..

"அப்பா என்னை மன்னிச்சிடுங்க" என்று காலில் விழுந்து கதறிய மகளிடம் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியவில்லை நீலகண்டனால்.. மகளை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டு.. தன் பரிதவிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தினார்..

மேலும் மேலும் அறிவுரைகள் என்ற பெயரில் நடந்ததை குத்தி கிளற விரும்பாதவர்களாக அவளோடு இயல்பாக பேச ஆரம்பித்து விட்டனர் அனைவரும்.. என்னதான் வயது கோளாறு காரணமாக.. அவனோடு வீட்டை விட்டு சென்றிருந்தாலும் வளர்ப்பு முறையும் அவள் சுய ஒழுக்கமும் தான் எல்லை மீற விடாமல் தடுத்திருக்கிறது.. காதலன் எது சொன்னாலும் சம்மதம் என்று அவனுக்கு வளைந்து கொடுக்காமல் அந்த வயதிற்கே உரிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி.. அவனை எதிர்த்து நின்ற அனிதாவின் தைரியத்தை வெளிப்படையாகவே பாராட்டினாள் மான்வி..

"இதையே தான் அக்கா மாமாவும் சொன்னாரு".. என்றதும் மான்வியின் விழிகள் மலர்ந்தன..
அனிதா மேலும் தொடர்ந்து.. "காதலிக்கிறதுக்கும் கல்யாணம் செய்வதற்கும் ஒரு நேரம் வரும்.. அப்போ உனக்கான துணையை நீயே தேர்ந்தெடுக்கலாம்.. நீ தேர்ந்தெடுக்குற துணை உனக்கு சரியானவனா இருக்கும் பட்சத்துல யார் எதிர்த்தாலும் இந்த மாமா உனக்கு துணையா இருப்பேன்னு சொன்னாரு அக்கா".. என்று சொல்லி முடித்ததும் மான்வியின் பூவிதழ்கள் மெல்ல விரிந்தன..

மகள் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட பதைபதைப்பில் மான்வியின் வயிற்றை அதுவரை கவனித்திருக்கவில்லை ரமா.. அதற்காக முழு முற்றாக விஷயமே தெரியாது என்று கூறி விட முடியாது.. அவள் அலுவலகம் செல்லும் வழியில் தெரிந்தவர் யாரோ மான்வியின் மேடிட்ட வயிற்றைப் கண்டுவிட்டு அவர்கள் வீட்டில் தெரியப்படுத்தியதில்.. "நல்ல விஷயத்தை கூட தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு பாவி ஆகிட்டேனே" என்று நெஞ்சில் கை வைத்து அழுத ரமா மான்வியிடம் இது பற்றி கேட்கும் பொருட்டு அன்று முழுவதும் அழைத்துக் கொண்டே இருந்தாள்.. கணவனுக்கு கொடுத்த வாக்கின் காரணமாக மான்விதான் அழைப்பை ஏற்கவில்லை..

இன்று தாய்மையின் பூரிப்போடு தன் எதிரே அமர்ந்திருக்கும் மகளை வாஞ்சையோடு தலைவருடி கொடுத்தாள் ரமா..

நீலகண்டனின் பார்வையும் சூல் கொண்டு அமர்ந்திருக்கும் தன் மகளின் மீது பதிந்தது.. கருவுற்ற மகளை வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை தீர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் அவர் விழிகளில் பளிச்சிட்டதை மான்வி உணர்ந்து கொண்டாள்..

"எத்தனை மாசம் மான்வி" என்று ஆசையோடு கேட்டாள் ரமா..

பெருமூச்சோடு "ஆறாவது மாசம் தொடங்கி இருக்கு".. என்றாள் அவள்.. கணவன் அனுமதி அளித்து விட்டான் என்பதற்காக சகஜமாக பேச முடியவில்லை.. தாங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் வேளையில்.. அவன் தந்தையை இழந்து தனிமையில் தவித்துக் கொண்டிருப்பதை போன்ற எண்ணங்கள் மனதை குறுகுறுக்க வைத்தன.. ஒருவித விலகலோடு பேசிய மகளை வலியோடு பார்த்தாள் ரமா..

அடி மனதின் ஆற்றாமையின் சாயலாக "எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே!!" என்று கண்ணீர் பெருக்கோடு தலை சாய்த்து பரிதாபமாக கேட்ட அன்னையை எதிர்கொள்ள இயலாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பியவளாய்.. "சொல்ல முடியாத சூழ்நிலை.. அது உங்களுக்கும் தெரியும்" என்றாள் பட்டும் படாமலும்..

சிறிது நேரம் அனைவரும் பேசிவிட்டு குடும்பத்தினர் மூவரையும் அழைத்துக் கொண்டு நீலகண்ட தங்கள் வீட்டிற்கு சென்ற பிறகுதான்.. ஜீவா அங்கே வந்தான்..

"என்ன? இப்ப சந்தோஷம் தானே?.. கண்களில் ஒருவித குறுகுறுப்போடு மான்வியின் முகத்திற்கு நேராக அவன் குனிந்து கேட்டதில்.. மலர்ந்து புன்னகைத்தாள் அவள்.. "வந்து சாப்பிடு ஜீவா".. தீப்தி குரல் கொடுக்கவும்.. மான்வி கணவனை அழைத்துச் சென்று அமர வைத்து அவளே பரிமாறினாள்.. மான்வியின் முகத்தில் தெரிந்த சந்தோஷ ரேகைகளைப் படித்துக் கொண்டே திருப்தியாக உணவு உண்டான் ஜீவா..

"உன் பொண்டாட்டி எங்கேயும் போக போறதில்ல.. அவளை அப்புறமா பார்க்கலாம்.. முதல்ல தட்டை பார்த்து சாப்பிடுடா".. தீப்தி தலையில் குட்டவும்.. "என் பொண்டாட்டிய பாத்துக்கிட்டே சாப்பிட்டாதான் வயிறு நெறஞ்ச ஃபீல் வரும்".. என்று கண்களை சிமிட்டி அவளைப் பார்த்தவாறு கூறி சிவக்க சிவக்க வெட்கப்பட வைத்தான் அவள் ஜீவன்..

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரும் தங்கள் வீட்டுக்கு கிளம்பினர்.. இங்கே வரும்போது குப்பையாக குவிந்திருந்த சஞ்சலங்கள் நீங்கி.. மனம் லேசாக உணர்ந்தாள் மான்வி.. சந்தோஷமும் நிம்மதியும்.. ஜீவாவின் அருகாமையும் இனம் புரியாத இனிமையை தருவித்தது..

"ரொம்ப நன்றி".. என்று அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்..

"எதுக்கு?".. அவள் பக்கம் திரும்பி கேட்டுவிட்டு மீண்டும் சாலையில் கண் பதித்தான் ஜீவா..

"என் தங்கச்சியை காப்பாத்தி கொடுத்ததற்காக.. என் குடும்பத்தின் மேலிருக்கிற ஆத்திரத்துல.. என் தங்கச்சியை" என்றவள் அத்தோடு நிறுத்திவிட்டு தயக்கத்தோடு அவன் முகத்தை பார்க்கவும்..

சிறிய புன்னகையை இதழில் தேங்கவிட்டவன்.. "என்ன.. உன் குடும்பத்து மேலிருக்கிற கோபத்துல உன் தங்கச்சி எப்படியோ போகட்டும்னு நினைக்கிற கொடூர மனம் படைத்தவன்னு நினைச்சியா".. என்று கேட்டதில் என்ன பதில் சொல்வதென தெரியாமல் திருதிருவென விழித்தாள் அவள் ..

"என்னை பற்றி நீ புரிஞ்சு வச்சிருக்கறது அவ்வளவு தானா மான்வி".. அவன் முகம் வலியில் கசங்கியதில் தடுமாறியவள்.. "இல்ல.. நான்.. அப்படி சொல்ல வரல".. என்று பேசுவதற்கு திணறியதை தொடர்ந்து.. "இப்பவும் சொல்றேன் எனக்கு உன்னோட அம்மாவையும் அப்பாவையும் சுத்தமா பிடிக்கல.. ஆனா உன்னோட தங்கச்சி தம்பி.. ரெண்டு பேரையும் என் குடும்பத்துல ஒருத்தரா தான் பார்க்கிறேன்.. அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் தான் முன்னாடி நிப்பேன்.. என்றவனின் உறுதியில் மான்வியின் விழிகள் கனிந்து கலங்கியது..

"நீ என்கிட்ட சொன்ன உடனே.. அவ படிக்கிற ஸ்கூல்ல விசாரிச்சு அவ பிரண்டுக்கு போன் பண்ணி கேட்டு.. நேர்ல மீட் பண்ணி.. பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி டிராக் செஞ்சு.. எப்படியோ ஒரு வழியா அவளை கண்டுபிடிச்சு போயிட்டோம்.. இதையெல்லாம் உன்கிட்ட சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.. ஆனா தேவையில்லாம உன்னை டென்ஷன் படுத்த வேண்டாம்.. அவ கிடைச்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு உன்கிட்ட சொல்லலாம்னு அப்படியே விட்டுட்டேன்.. மைனர் பொண்ணை கடத்திட்டு போன கேஸ்ல புக் பண்ணி அந்த பையனை போலீஸ்ல ஒப்படைச்சாச்சு"..

"உன் தங்கச்சியும் விருப்பப்பட்டு போயிருக்கா.. நியாயப்படி இப்படி செஞ்சிருக்க வேண்டாம்தான்.. ஆனா அவன் எல்லை மீறியது.. ரொம்ப பெரிய தப்பு.. அவனோட நோக்கமே வேற.. இப்படியே விட்டா இன்னும் நிறைய பொண்ணுங்க கிட்ட இந்த மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு.. அதனாலதான் அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தேன்".. என்று அவன் பேசிக் கொண்டே செல்லவும்.. மெல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மான்வி..

"தூக்கம் வருதா மான்வி சீக்கிரம் போயிடலாம்".. என்றவனின் பரிவு பிடித்திருக்கிறது.. ஆனால் இதெல்லாம் குழந்தைக்காக தானே என்று ஏக்கம் உள்ளுர வாட்டி வதைக்கிறதே!!.. குழந்தையை மட்டும் நேசிப்பவன் தன் தங்கையை ஏன் ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.. என்று சிந்திக்க மறந்து போனாள் மான்வி.. அப்படியே சிந்தித்தாலும்.. என் மனசு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக.. ஒரு கர்ப்பிணி இதை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது என்பதற்காக.. அவர் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக என்று பலவிதங்களில் அவளுக்கா காரணம் கற்பிக்க தெரியாது?..

எனக்கே எனக்காக இந்த அன்பு வேண்டும் என்ற ஏக்கமும் சோகமும் ஒரு புறம் முட்டி தள்ளினாலும்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தற்போதைக்கு கிடைக்கும் அவன் அதீத காதலில் மூழ்கி சந்தோஷத்தை அனுபவிக்க முடிவு செய்தாள் மான்வி..

எட்டாம் மாதங்களில் கூட வேலைக்கு சென்று வந்த மனைவியை கண்டு.. அழாத குறை தான் அவன்.. "எப்படி மான்வி மேனேஜ் பண்ற.. பாரு காலெல்லாம் வீங்கி போய் கிடக்கு.. ஒரே இடத்துல சேர்ல காலை தொங்க போட்டு உட்கார்றது ரொம்ப தப்புமா.. உன்னை வேலைக்கு அனுப்பி கஷ்டப்பட விட்டு என்னால ஆபீஸ்ல நிம்மதியாக இருக்க முடியல தெரியுமா.. நானெல்லாம் என்ன புருஷன்?.. எனக்கே என்னை நெனச்சு கேவலமா இருக்குடி.. ப்ளீஸ் நான் சொல்றதை கேளுமா.. வேலைக்கு போக வேண்டாம்" என்று அவள் பாதம் பிடித்து மடியில் வைத்துக் கொண்டு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தவாறு அவன் வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்ததை தலை சாய்த்து கேட்டுக் கொண்டிருந்தவள்.. "அப்பப்ப எழுந்து நடக்கத்தான் செய்கிறேன்.. வீட்ல இருக்கிறதை விட ஆபீஸ் போறது ஒரு நல்ல எக்ஸ்சசைஸ் தான்.. வீட்ல இருந்தா தூங்கிக்கிட்டே இருக்க சொல்லும்.. இந்த மாதிரி நேரத்துல சோம்பலா இருக்கிறது நல்லதில்லையே.. கொஞ்சம் நடைப்பயிற்சியும் சுறுசுறுப்பும் இருந்தா பிரசவம் சுலபமாய் இருக்கும்னு டாக்டர் தான் சொன்னாங்க" என்று பொறுமையாக சொல்லவும் அவள் பதிலில் திருப்தி இல்லாதவனாக "ப்ச் போடி எனக்கென்னவோ நீ ஆபீஸ் போறதே பிடிக்கல".. என்றான் சலிப்பாக..

"இந்த அன்பு பாசம் எல்லாம் குழந்தைக்காக தானே".. அடி மனதிலிருந்து பீறிட்டு கிளம்பிய ஏக்கத்தோடு அவள் கேட்க.. இப்படி வேலைக்கு சென்று தன்னை வருத்திக் கொள்கிறாளே.. என்ற கவலையில் மூழ்கியிருந்தவன் அவள் வார்த்தைகளின் ஆழத்தை கவனிக்கவில்லை..

"ஆமா குழந்தைக்காகவும் பாக்க வேண்டியிருக்கே.. நீ குழந்தை மேல அக்கறையா இருந்தா நான் ஏன் இப்படி கவலைப்பட போறேன்".. என்று விட்டு எழுந்து சென்றவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

கண்மூடி திறப்பதற்குள் நாட்கள் நகர்ந்து சென்று விட்டிருந்தது.. அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ஒன்பதாவது மாதத்தின் முதல் வாரத்தில் வேலையிலிருந்து கட்டாயம் விடுப்பு எடுத்துக் கொண்ட பிறகு தான் ஜீவா நிம்மதி அடைந்தான்.. அவளைக் கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்.. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று குழந்தையின் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டான்..

அடுத்த வாரத்தில் மான்வியின் வளைகாப்பை தன் வீட்டிலேயே விமரிசையாக நடத்தி இருந்தான்..

பட்டுப் புடவையோடு நகைகளும்.. சடை பின்னி பூ வைத்து.. கூடுதலான தாய்மையின் பூரிப்போடு.. ஒட்டுமொத்த கண்களையும் தன் பக்கம் குத்தகைக்கு எடுத்து அழகு தேவதையாக அமர்ந்திருந்தாள் மான்வி.. மனைவியின் அழகில் பெருமிதம் கொண்டு.. இப்படி ஒரு தருணம் அவன் வாழ்க்கையில் எப்போதுமே நிகழாது என்று கேலி செய்தவர்கள் முன்னே கர்வத்தோடு வளைய வந்தான் ஜீவா..

பிறந்த வீட்டு சொந்தம் இல்லாது.. ஏக்கமும் வருத்தமுமாக கண்களில் ஒளியே இல்லாமல் தனித்து அமர்ந்திருந்த மான்வியின் தலையில் யாரோ கை வைப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் அவள்.. ரமா பக்கத்தில்.. நீலகண்டன் நின்று கொண்டிருக்க.. அனிதாவும் நிவினும் ஓடி வந்து அவள் கையை பற்றி கொண்டனர்.. தன் கண்களையே நம்ப முடியாத நிலை.. சந்தோஷத்தில் கூத்தாடியது மனது..

"அம்மாஆஆஆஆ".. என்றவளுக்கும் கண்ணீர் பெருகியது..

மகளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு "இந்த மாதிரி நேரத்துல அழக்கூடாது" என்றவள் மான்விக்கு பூரிப்போடு நலுங்கு வைத்தாள்.. தன் சந்தோஷ உற்சவத்திற்கு காரணமான.. அருகே அமர்ந்திருந்த கணவனை கொக்கிப் போட்டு இழுத்தன மான்வியின் விழிகள்.. "உனக்காக எதையும் செய்வேன் கண்மணி எனும் விதமாக காதலோடு கண்சிமிட்டியவன் மையல் விழிகளோடு அவள் கரம் கோர்த்துக் கொண்டான்.. மான்வியின் தாய் தந்தையோடு பேசி பழகவில்லை என்றாலும் அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளவில்லை ஜீவா.. மதிப்போடு வரவேற்று.. விழா முடிந்த பிறகு தான் காரிலேயே அவர்களை வீட்டுக்கும் அனுப்பி வைத்தான்.. நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்து மான்வியும் ஜீவாவும் அறையில் தனித்திருந்த வேளையில்.. மனைவியின் உடை களைந்து நகைகளை கழட்டி வைத்து.. டவல் மட்டும் சுற்றி.. குளியலறைக்கு அழைத்துச் சென்று.. மிதமான வெந்நீரில் குளிக்க வைத்து வெளியே அழைத்து வந்தான்.. பூந்துவாளையால் அவள் ஈர மேனியை ஒற்றியெடுத்தவனின் கண்களில் காமம் மருந்துக்கும் இல்லையே!!.. தளர்வான இலகுவான நைட் கவுனை அணிவித்த அழகு கணவனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி.. இப்படி ஒரு புனித உறவினை அசிங்கம் என்று சொல்லிவிட்டாளே அம்மா என்று மனம் வெம்பியது.. இப்படி ஒரு கணவனுக்காக காலம் முழுக்க புருஷன் பைத்தியமாகவே இருக்க நான் தயார்.. ஆமாம், இப்ப நான் ஜீவா பைத்தியம் தான்.. இப்ப என்ன அதுக்கு.. என்று நிமிர்வோடு நின்றது அவள் காதல் மனம்..

"படுத்துக்கிறியா மானு".. பரிவோடு கேட்டவனை இடுப்போடு இறுக அணைத்துக் கொண்டு அவன் வயிற்றில் புதைந்து.. "ஐ லவ் யூ ஜீவா" என்றாள் உருகும் குரலில்.. ஏன் இந்த அழுகை.. அவளுக்கே புரியவில்லை..

தன் வயிற்றை அவள் கண்ணீர் நனைத்ததில்.. பதறிப் போனவனுக்கு பதிலுக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்பதே மறந்து போனது.. ஒருவேளை தான் இன்னும் அவளை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் தான் அழுகிறாளோ.. என்ற பதட்டத்துடன் அவள் அழுகையை நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு.. "அச்சோ.. என் கண்ணம்மா எதுக்குடி அழுவுற.. பிரசவத்தை நினைச்சு பயந்துட்டியா என்ன".. என்று விம்மியவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன் "மனசை அமைதியா வச்சுக்கோடா.. உனக்காக நான் இருக்கேன்.. நீ வேணும்னா பாரு.. சிங்க குட்டி மாதிரி ஒரு குழந்தையை பெத்து என்கிட்டே தரப் போறே".. குழந்தையை பற்றி பேசினால் அவள் இலகுவாக வாய்ப்புண்டு என்ற கண்ணோட்டத்துடன் அவன் உற்சாக குரலில் பேசிக் கொண்டிருக்க.. "இப்போதும் கூட குழந்தை தானா?.. பதிலுக்கு ஒரு ஐ லவ் யூ சொல்லணும்னு தோணவே இல்லையா.. உங்க மனசுல நான் இல்லையா ஜீவா".. என்று குமுறிய மனதை அடக்கிக் கொண்டு.. அவன் தன்னை குதூகல படுத்த முயன்றதற்கான வெற்றியாக.. மென்மையாக புன்னகைத்து வைத்தாள் மானு..

அவள் இதழ் பிரித்து சிரித்தபின்.. "தட்ஸ் மை கேர்ள்" என்று அவள் கன்னம் தட்டி நெற்றியில் முத்தமிட்டவன் கட்டிலில் படுக்க வைத்து.. அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான்.. வெளியே புன்னகைத்திருந்தாலும் அவள் உள்ளம் அவன் அன்புக்காக ஏங்கி குமுறி அழுதுக் கொண்டிருப்பதை அறியாமல்..

இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவமனைக்கு சென்று பிரசவத்திற்காக அட்மிட் ஆக வேண்டும்.. பெரும்பாலான நேரங்களில் ஜீவா வீட்டில் தான் இருந்தான்.. தீப்தியும் பரத்தும் அவ்வப்போதும் வந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர் அவளை.. மிக முக்கிய வேலை.. ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் அதுவரை படுக்கையை விட்டு எழுந்து எங்கேயும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி விட்டு தான் சென்றான் ஜீவா.. ஆனால் விதி யாரை விட்டது..

பொழுது போகவில்லை என்று பழைய புத்தகங்களை தேடுவதற்காக மாடி அறைக்கு சென்றவள்.. கீழே இறங்கும் வேளையில்.. கால் வழுக்கி.. மேலிருந்து உருண்டு வந்து கீழே விழுந்திருந்தாள்.. உருளும்போதும் அவள் கரம் தன்னிச்சையாக வயிற்றில் பதிந்து போனது.. ஜீவாவின் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதை தவிர வேறெதுவும் யோசனை இல்லை.. சத்தம் கேட்டு ஓடி வந்த காதம்பரி.. மான்வியின் கோலம் கண்டு "அய்யோ.. அம்மாஆஆ".. என்று அலறிவிட்டாள்..

அவள் உடை குருதியில் குளித்திருக்க.. மூச்சுப்பேச்சில்லாமல் கிடந்தாள் மான்வி..

காதல் வாழவைக்கும்.. காதலிக்கப்படுவது வாழ வேண்டும் என்று ஆசையை விதைக்கும்.. ஜீவாவின் மனதில் தான் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் மான்வியின் உயிர் என்ன முடிவெடுக்கப் போகிறதோ!!..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Sep 14, 2023
Messages
110
Enna sisy ippadi panniteenga....... manvikku enna Achu...... nalla irukanum..... jeeva ♥️ manvi kadhal koodi kondae pohanum..... end ippadi shock kuduthuteengalae.........😞😞😌😌 aduthu ud vara varaikum thookamae varathae....😥😥
 
Last edited:
Active member
Joined
Jan 10, 2023
Messages
25
Sissy ma 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Maanu
Jeeva ah yenga irukka 🥺🥺🥺🥺
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
127
Super sagi. Night varai wait panni one ud thana. Sagi next ud pls 🙏🙏🙏
 
Member
Joined
Apr 7, 2023
Messages
27
Jeeva va hurt pandraru than manvi ku Vela👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Jan 13, 2023
Messages
6
Ippadi ala vaikirathe unga velaiya pochi ka
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
73
Athu thana.... Pathennnnn. 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
99

Baby 👶👶👶nalla padiya poranthudum... Aana manvi condition serious🤔🤔 aagidumo....
 
Top