• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 40

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
49
தீவிர சிகிச்சைப் பிரிவு அறையின் வாசலில் உயிரற்ற சிலையாக தலைக்கவிழ்ந்து அமர்ந்திருந்தான் ஜீவா.. பதட்டமில்லை.. படபடப்பு இல்லை.. மூளை முக்கியமான உணர்வுகளை கடத்த மறந்து போனது போல்.. கண்கள் தீவிரமாக நிலத்தை வெறித்துக் கொண்டிருந்தன..

"டேய் மச்சான் அவளுக்கு ஒன்னும் ஆகாது.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. இப்படி இருக்காதடா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு".. என்று அவன் தோள் பற்றி அழுத்தினான் பரத்..

பதில் பேசாமல் அமர்ந்திருந்தவனை கண்டு மனதுக்குள் கிலி பிடித்தது.. தந்தை இறந்த விஷயம் கேள்விப்பட்ட போதும் இப்படித்தானே.. உணர்வுகள் மரத்துப்போன இரும்பு தகடாக அவன் குண நலன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மான்வியை எந்த அளவுக்கு சித்ரவதைக்கு உள்ளாக்கியது..

மீண்டும் அதே போல் ஒரு சூழ்நிலை.. நெருக்கமானவர்களின் இந்த நிலை ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.. அது நிச்சயம் விரும்பத்தக்கதும் அல்ல.. அவன் நேசித்த தாய் உதாசீனப்படுத்தி விட்டு சென்ற போது.. முற்றிலும் உருமாறிய சிறுத்தையாக அன்பு கோபம் எதிலும் அளவுக்கதிகமான மூர்கத்தனத்தை வெளிப்படுத்தினான்.. தந்தையின் இழப்பில் அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மாறிப் போனான்..

இப்போது மான்வி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் வந்து படுத்திருக்கிறாள்.. ஒவ்வொரு முறையும் தீராத துயரத்திற்கு ஆளாகும் நண்பனின் வாழ்வில் எப்போதுதான் விடியல் மலருமோ.. என்று மிகுந்த வேதனை கொண்டான் பரத்..

நிச்சயம் மான்வி.. பூரண குணம் பெற்று அவனிடம் திரும்பி வந்து விட வேண்டும்.. அவள் இல்லையெனில்.. கருந்துளைக்குள் இழுத்துக் கொண்ட செல்லும் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தயங்க மாட்டான் ஜீவா.. வெறுப்பு என்ற முகமூடியை அணிந்து கொண்டாலும் அவன் ஆழ் மனதிற்குள் மான்விக்கான அளவு கடந்த நேசம் நிறம் மாறாமல் அப்படியே இருந்திருக்கிறது என்பதை நன்றாகவே அறிவான்.. அவன் தேகத்தின் நரம்பு முடிச்சுகளோடு பின்னிப்பிணைந்திருக்கும் மான்வி.. அவனை விட்டு நீங்கினால் அதற்குப் பிறகு நடக்கப் போகும் விபரீதங்களை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவனால்..

இப்போது பரத்தின் கவலை எல்லாம் கல்லாக சமைத்திருப்பவனை எப்படி நிதர்சனத்தை உணர்த்தி இயல்பாக்குவது என்பதே.. இவன் திடம் மட்டுமே அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மான்வியை மீட்டுக் கொண்டு வரும்.. தீப்தி ஜீவாவின் கரம் பற்றி கொண்டு அவனைப் பேச வைக்க எவ்வளவோ முயற்சித்துக் கொண்டிருந்தாள்.. பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்..

அவன் கவலைகளை தீர்க்கும் வண்ணம் மருத்துவர் வெளியே வந்து நின்றதும்.. பரத் எழுந்து நின்றான்.. ஜீவாவிடம் அப்போதும் எந்த அசைவும் இல்லாததை கண்டு விட்டு தீப்தியும் பரத்தும்
ஒருவரை ஒருவர் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டனர்..

மருத்துவர் கவலையோடு பேச ஆரம்பித்தார்.. "வயித்துல அடிபட்டிருக்கு.. கர்ப்பப்பை உட் சுவர் சேதாரமாகி இன்டெர்னல் ப்ளீடிங் ஜாஸ்தியா இருக்கு.. .. பேஷன் ரொம்ப பலவீனமா இருக்காங்க.. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பே இல்லை.. சிசேரியன் செஞ்சுதான் குழந்தையை வெளியே எடுக்கணும்.. ஆனாலும்" என்று இழுக்கவும்..

"என்ன.. என்ன.. டாக்டர்" என்று படபடப்போடு கேட்டவனின் குரல் மருத்துவரின் முகத்தில் தெரிந்த கவலையை கண்டு நடுங்கி ஒலித்தது..

நீண்ட பெருமூச்சோடு.. "பல்ஸ் ரேட் குறைஞ்சிக்கிட்டே போகுது.. இந்த நிலை நீடிச்சா.. தாய் குழந்தை ரெண்டு பேர்ல ஒருத்தரை தான் காப்பாத்த முடியும்".. என்றதும் பகீரென்று தூக்கி வாரி போட அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தான் பரத்.. தீப்தி அழவே ஆரம்பித்து விட்டாள்..

தலை தாழ்ந்தவனுக்கோ விழிகள் கண்ணீரை சிந்திய வண்ணம் இருக்க.. "இப்போ.. இப்போ.. மான்வி கண் திறந்துட்டாளா டாக்டர்?" என்றவனுக்கு பேச்சு வராமல் நா குழறியது.. தனக்கே இது பேரிடி என்றால் உற்றவனின் நிலையை எண்ணி பெருங்கவலை கொண்டவனாக.. அவன் பக்கம் திரும்பிப் பார்க்க.. ஜீவா அதே தோரணையில் கற்சிலையாக அமர்ந்திருந்தான்..

"நினைவு திரும்பறதும்.. மயக்கமடையறதுமா இருக்காங்க.. யாராவது ஒருத்தர் போய் பாத்துட்டு வாங்க.. ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சதும் ப்ரொசீஜர் ஸ்டார்ட் பண்ணிடலாம்".. நின்று விட்டு மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட்டார்..

தரையில் மண்டியிட்டு அவன் முன் அமர்ந்து அவன் தொடையில் கை வைத்து விழிகளை நிமிர்த்தி ஜீவாவை வலியோடு நோக்கினான் பரத்.. "டேய் ஜீவா தயவு செஞ்சு அவளை போய் பாத்துட்டு வாடா.. உன்னோட குரல் நிச்சயமா அவளுக்கு உயிர் கொடுக்கும்.. இதே மாதிரி ஒரு மோசமான நிலைமையில அப்பா இருந்தபோது.. அவர் உயிரை காப்பாத்த முடியாத சூழ்நிலையில் நீ இருந்த.. ஆனா இப்போ மான்வியை நிச்சயமா உன்னால காப்பாத்த முடியும்.. உன் காதல் மட்டும் தாண்டா அவளை திரும்பி கொண்டு வரும்.. போய் பேசு டா மச்சான்".. என்று கண்ணீரோடு கெஞ்சிக் கொண்டிருந்ததன் பலனாக சிலைக்கு உயிர் வந்தவனாய் மெல்ல அசைந்தான் ஜீவா..

இதுவரை இமைகளை தொலைத்தவனாய் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவனின் கருவிழிகள் அசைந்து அவனிடம் மாற்றம் கண்டதில் பெரும் நிம்மதி கொண்டவனாய் பரத் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்..

விசைக்கு கட்டுப்படும் இயந்திர மனிதனாக ஒளியிழந்த முகத்துடன் எழுந்து நின்ற ஜீவா.. யாரோ கயிறு கட்டி இழுப்பது போன்று நடந்து சென்று அறைக்குள் நுழைந்தான்..

மருத்துவக் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து.. புயலில் அலைகழிக்கப்பட்ட சிறு மலராக துவண்டு கிடந்தாள் மான்வி.. அம்மாவை தேடும் சிறு குழந்தையாக தலை சாய்த்து பார்த்தவனுக்கு அவள் நிலையை கண்டு இதயம் இரண்டாக பிளந்து உதிர மழை கொட்டியது போல் வலி..

"மான்வி.. மான்வி.. மானு.. மானுமா".. இடைவிடாது அவள் பெயரை உச்சரித்துக் கொண்ட இதழ்களும்.. இலக்கின்றி பயணித்துக் கொண்டிருந்த கண்களும்.. நடக்க முடியாத தடுமாறிய கால்களும்.. என கம்பீரமான ஆண்மகன் இன்று பார்க்கவே மிகவும் பரிதாபகரமான நிலையில்..

மனபலம் யானை பலத்தை கொடுக்கும்.. அவன் பலம்.. இன்று பலவீனமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நிற்க கூட திராணியின்றி கட்டிலின் மீது இருக்கைகளை ஊன்றியவன் அப்படியே அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.. வலது கையில் சலைன் ஏற்றப்பட்டிருக்க அவள் இடது கையை மென்மையாக பற்றியவன் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு.. இதழ்கள் அழுவதற்காக நடுங்கி துடிக்க.. இதயம் கனத்து.. தொண்டை அடைக்க.. "மானு.. நீயும் என்னை விட்டுப் போக போறியா.. நான் என்னடி பாவம் செஞ்சுட்டேன்.. நிரந்தரமான எல்லாருக்கும் கிடைக்க கூடிய ஒரு உறவை எதிர்பார்த்தது தப்பா.. முதல்ல அம்மா என்னை விட்டு போயிட்டா அப்புறம் அப்பா.. இப்போ நீ?.. உங்க யாருக்குமே நான் வேண்டாம்.. ஆனா எனக்கு நீங்க எல்லாருமே வேணும்.. அது ஏன்டி உங்களுக்கெல்லாம் புரிய மாட்டேங்குது".. என்றவனின் தழுதழுத்த குரலில் ஆதங்கமும் கோபமும்..

அவன் பற்றிக் கொண்டிருந்த அவள் மென்கரத்தால் தன் முன் நெற்றி கன்னம் கழுத்து என வருடி கொண்டவனுக்கு அவள் ஸ்பரிசம் மட்டுமே அவன் இதயத்துடிப்பை சீராக்கும் கருவியாக!!..

விழிகள் வலியோடு அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பார்வையின் தாக்கமோ கடவுளின் கருணையோ என்னவோ.. அவள் கருவிழிகளில் தெரிந்த அசைவு மூடியிருந்த இமைகளில் பிரதிபலித்தது..

மின்னல் வெட்டியதாக "மான்வி.. மானு.. மானு".. என்றவனுக்கு எதுவுமே ஓடவில்லை.. அவளை கண்விழிக்க செய்து.. அப்படியே தன்னுடன் எங்காவது தூக்கிச் சென்று விட வேண்டும் என்ற துடிப்போடு.. "மானு மானுமா எழுந்திரு.. என்னை தவிக்க விடாதடி ப்ளீஸ்".. என்று கத்திக் கொண்டிருந்தான் அழுகையோடு..

அவன் வேதனை புரியாது சிரமப்பட்டு நிதானமாக விழிகளை திறந்தாள் மான்வி..

"ஜீ..வா".. என்ற அவளின் குரல் தேய்ந்து ஒலித்தது.. கண்களில் பரிதவிப்போடு.. அவளை நோக்கி குனிந்து நான் இருக்கிறேன் கண்ணம்மா எனும் விதமாக "சொல்லு.. சொல்லுடா".. என்றான் கம்மிய குரலில்..

ஆக்சிஜன் மாஸ்கை எடுப்பதற்காக கைகளை நாசியை நோக்கிக் கொண்டு செல்லவும்.. அங்கிருந்த டியூட்டி டாக்டர் கேள்வியாக பார்த்தான் ஜீவா..

அவர் ஓகே என்று கண்ணை காட்டிய பிறகு.. மெல்ல ஆக்ஸிஜன் மாஸ்கை எடுத்து விட்டான்..

"இர..ண்டு.. இர..ண்டு".. என்றவளால் தொடர்ந்து பேச முடியவில்லை.. தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல் இருந்தது.. உடல் முழுக்க வலி.. உயிர் தன்னை விட்டு விலகி நின்று சிரிப்பதை போல் உணர்வு..

" நீ பேச வேண்டாம் கண்ணம்மா.. குணமாகி வா.. அப்புறம் பொறுமையா பேசிக்கலாம்".. என்றான் அவள் கன்னத்தை வருடியபடி..

"பேச..ணும்.. பேச..ணும்".. தன் வாயை பொத்தியிருந்த அவன் வலது கரத்தை மெல்ல விளக்கியவளாக..

"குழ..ந்தை இல்ல நான்.. ரெண்டு பேர்ல யாரா..வது ஒரு..த்தரை தான் காப்பாத்த முடியும் அப்படிங்கற சூழ்நிலை வந்தா.. தயவு செஞ்சு குழந்தையை காப்பா..த்துங்க".. என்று தளர்ந்த குரலில் கூறவும் "மான்விம்மா" என்றவனுக்கு கண்ணீர் பெருகியது..

"என..க்கு நீங்க ஜெயி..க்கணும்.. என் புருஷனை யாரும் தப்பா பேச..க்கூடாது.. மாமாவோட ஆசையும் நிறை..வேறனும்.. அவர் இழப்புக்கு காரண..மாகி நான் செஞ்ச.. பாவத்துக்கு எல்லாம் ஒரு சின்ன பரி..காரம்".. என்று அவள் பேசிக் கொண்டே போக.. மனம் தாங்காமல் "இப்படியெல்லாம் பேசாதடி.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அந்த மாதிரியான சூழ்நிலையில எனக்கு நீ மட்டும் தான் முக்கியம்.. குழந்தை வேண்டாம்ன்னு தான் முடிவெடுப்பேன் உனக்கு தெரியாதா".. என்றவனின் வார்த்தைகளை தாங்க முடியாதவளாக பதறி அவன் இதழ்களை தன் கரம் கொண்டு மூடியவள்.. "அப்படி.. அப்படி சொல்லாதீங்க.. நமக்கு பாப்பா வேண்டும்.. குழந்தை மட்டும் தான் உங்க வலி தீர்க்கும் மருந்து"..

"நான் இருந்து என்ன செய்யப் போறேன்.. உங்க அன்பு கிடைக்காத பட்சத்துல துர்பாக்கியசாலியா இந்த உலகத்தில் வாழ்ந்து மட்டும் என்ன பலன்".. என்றாள் ஈனஸ்வரத்தில் மூச்சிரைக்க..

"என்னடி பேசுற.. நான் நான்".. என்று நெஞ்சில் மரணவலி கண்டு அவன் தடுமாறவும்.. ஒய்ந்த குரலில் "இருங்க நான் பேசி முடிச்சிடறேன்".. என்றவள் மேலும் தொடர்ந்து.. "இந்த குழந்தைக்காக எவ்வளவு ஆசைப்பட்டீங்க.. உங்க அப்பாவே திரும்ப வந்த பிறக்க போறதா கனவு கண்டீங்க.. உங்களோட அன்பு அக்கறை எல்லாமே இந்த குழந்தைக்காக தானே.. இந்த குழந்தை இல்லனா நீங்க எவ்வளவு துடிச்சு போவீங்கன்னு எனக்கு தான் தெரியும்.. மனிதாபிமான அடிப்படையில பெரிய உயிரை காப்பாற்றுவதற்காக சின்ன உயிரை வேண்டாம்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்.. நானே சொல்றேன்ல.. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல.. தயவு செஞ்சு என்னோட குழந்தையை காப்பாத்துங்க".. என்றவளுக்கு அடிவயிற்றில் சுரீர் வலி..

"மானு".. என்றவனோ அவள் முகபாவனை கண்டு துடித்தான்.. "தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க.. எப்படியாவது நம்ம குழந்தையை காப்பாத்துங்க ப்ளீஸ்.. என்னோட ஆசையை நிறைவேத்துங்க நீங்க சந்தோஷமா இருக்கிறதை நான் பாக்கணும்".. கண்ணீரோடு கெஞ்சியவளுக்கு.. தன் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை.. ஜீவாவின் காதல் இல்லாமல் பிழைக்க வேண்டும் என்ற ஆசையுமில்லை..

அவள் பேசியதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் வறண்டு புன்னகைத்தான்.. "பேசி முடிச்சிட்டியா.. இப்ப நான் பேசலாமா.. கேட்க உனக்கு பொறுமை இருக்கா?".. அவன் மென்மையான கேள்வி தனில் வலியில் இதழ் கடித்து கண்ணீருடன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

"தப்பு செஞ்சது நான் தான்டி.. நீ எதுக்காக சாகணும்?".. என்றதில் அவள் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியதை பார்த்துக்கொண்டே..
"அம்மா அப்பாவை விட்டு போனதுக்கு காரணம்.. அவங்களுக்கான அட்டென்ஷன் சரியா கிடைக்காதுதான்னு நினைச்சேன்.. 24 மணி நேரமும் கணவனோட கவனமும் காதலும் மனைவி மேல மட்டும் இருக்கணும்னு பெண்கள் விரும்புவாங்களாம்.. என் கல்லூரி தோழி ஒருத்தி சொன்னா.. பெண்களை இப்படித்தான் பார்த்துக்கணும்.. பெண்கள் இதைதான் எதிர்பார்ப்பாங்கன்னு டிசைன் செஞ்சு வச்ச ப்ரோக்ராம் மாதிரி என் உள்ளத்தில அது பதிஞ்சு போச்சு.. அதையெல்லாம் தாண்டி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி.. உனக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு நினைச்சேன்.. உன்னுடைய எண்ணங்களும் பார்வையும் என்னை மட்டுமே சுத்தி சுத்தி வரணும்னு ஆசைப்பட்டேன்.. ஒரு பொண்ணோட அன்பு முழுசா எனக்கு எனக்கு கிடைக்கனும்னா நான் எந்த அளவுக்கு அவளுக்கு அர்பணிப்போடு இருக்கணும்.. அப்படி நினைச்சு தான் கண்ணம்மா.. உன்கிட்ட காதலுடன் நடந்துகிட்டேன்.. காதல்லயும் சரி காமத்துலையும் சரி உன்னை 100% திருப்தியா வச்சுக்கணும்னு நினைச்சேன்.. உனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் அலர்ஜி என்று சத்தியமா எனக்கு தெரியலடி.. உன்னோட உணர்வுகள் வேற மாதிரி இருக்கும்னு நான் புரிஞ்சுக்கல.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணும் போது என்னென்னவோ நடந்து போச்சு.. அப்பாவோட மரணம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு.. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் நான் உன்கிட்ட நடந்துகிட்ட விதம்".. மான்வியின் பார்வை நிறம் மாறுவதை கவனித்து கொண்டே மேலும் தொடர்ந்தான்...

"நான் நினைச்சிருந்தா உன்னை காப்பாற்றி அங்கேயே விட்டுட்டு வந்து இருக்க முடியும்.. உன் வீட்டை சுத்தி காவலுக்கு ஆளுங்களை நிக்க வச்ச எனக்கு.. உன் தங்கச்சி தம்பி ரெண்டு பேரையும் ஆளுங்களை பின்தொடர வச்சு கவனமா பாத்துக்க தெரிஞ்ச எனக்கு.. உன்னை உங்க வீட்டிலேயே தங்க வச்சு பாத்துக்க தெரியாதா?.. உன் மேல கடுகளவு குறையாத காதல் மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க வச்சது.. ஆனா அந்த காதலை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு கோபம்.. நீ என்னை புரிஞ்சுக்கலயேன்னு கோபம்.. தேன் துளி மாதிரி.. உறவின் போது நீ சொன்ன விஷயங்களை காதுல வாங்குன பிறகு தான் தெரிஞ்சது.. நான்தான் உன்னை புரிஞ்சுக்கல.. வலுக்கட்டாயமா திணிக்கப்படும் காதல் கூட ஒரு பெண்ணுக்கு தொல்லை தான்னு அப்ப புரிஞ்சுகிட்டேன்"..

"ஜீவா".. அவள் உணர்ச்சி நிறைந்த குரலில் அழைக்க "இருடி நான் பேசி முடிச்சுடறேன்" என்றவன் என்று அவள் கரம் பற்றி அமைதிப்படுத்தி தொடர்ந்தான்..

"உனக்காக என் மனசு இறங்கி வந்தப்போ நீ என் குழந்தையை வயித்துல சுமந்துட்டு இருந்தே.. என் கோபம் தணிஞ்சதுக்கான காரணம் ஒரு வகையில என் குழந்தை தான்.. ஆனா.. என்னோட காதல் திரும்ப உயிரோட்டமா வெளியே வந்ததுக்கான காரணம் நீ மட்டும் தானடி.. அது ஏன்டி உனக்கு புரியல".. என்றவனின் குரலில் கோபமும் அழுகையும் சீற்றத்தோடு வெளிப்பட்டதிலும்.. தனக்கே தெரியாத இனிய விஷயங்களை.. கேட்டுக் கொண்டிருப்பதிலும்.. திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி.. உலகமே தன் வசப்பட்ட உணர்வு அவளுக்கு.. உடலோடு பின்னி பிணைந்திருக்கும் வலி இப்போது தெரியவில்லை.. காதல் மீண்டும் கை கூடிய நேரத்தில் இப்போது மரணம் வந்தாலும் சம்மதமே.. என்ற உணர்ச்சி பெருக்கோடு

"ஜீவா.. ஜீவா.. அப்போ என்னை உங்களுக்கு பிடிக்குமா.. நீங்க இன்னும் என்னை காதலிக்கிறீர்களா ஜீவா?.. என்னை மன்னிச்சிட்டீங்களா".. பரிதவிப்போடு அவள் கேட்ட விதம் கண்டு.. தீர்க்கமான பார்வையுடன்.. தன் பாக்கெட்டிலிருந்து எடுத்தான் அந்த தங்க சங்கிலியை..

தன் வலக்கையில் பிடித்திருந்த சங்கிலியை ஒரு முறை பார்த்துவிட்டு.. அவளை நோக்கி "நான் கட்டின இந்த தாலியை விட இந்த சங்கிலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. என் ஒட்டுமொத்த காதலோட அடையாளம் இது.. நான் உன்னை காதலிக்கிறேன்னு இதைவிட அழகா எப்படி உணர்த்தறதுன்னு எனக்கு தெரியல".. என்றவன் அவள் பின் தலையை மெல்லத் தூக்கி அந்த சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்திருந்தான்..

மான்வியின் கன்னத்தில் கண்ணீரின் கோடுகள்.. அவன் உயிரோட்டமான மனதை உருக்கும் வார்த்தைகளும்.. மெல்ல அணைத்துக் கொண்டு சங்கிலியை அணிவித்த விதமும்.. காதலோடு நம்பிக்கையையும் மீண்டும் மீட்டுக் கொடுத்ததாக உணர்ந்தவளின் மனதினில்.. தோண்ட தோண்ட சுரக்கும் நீரூற்றாக மகிழ்ச்சி பொங்கி பெருகியது..

"ஜீ.. ஜீவா".. அவள் காதலோடும் கண்ணீரோடு அழைக்க.. "ஐ லவ் யூ மான்வி.. ஐ லவ் யூ சோ மச்.. திரும்பி வந்துடுடி.. எனக்கு உன்னை விட்டா யாருமே இல்ல.. நீ எனக்கு வேணும் மான்வி.. தனியா தவிக்க விட்டுட்டு போயிடலாம்னு மட்டும் நினைக்காதே.. உன் கூடவே நான் வந்துடுவேன்".. அழுகையில் ஆரம்பித்து கோபத்தில் முடித்திருந்தவனை கண்டு மெல்ல சிரித்தாள் அவள்..

"சிரிக்காதடி" என்றவனுக்கு இன்னும் கோபம்..

அதீத மகிழ்ச்சி வலியின் சுரப்பிகளை தூண்டி விட்டதோ என்னவோ.. "அம்மாஆஆஆஆ".. என்று அலறினாள் முகம் சுணங்கி..

"என்ன.. என்னம்மா.. ஆச்சு".. அவள் துடிப்பதைக் கண்டு அவனும் நெஞ்சம் பதறினான்..

"வலிக்குது.. ரொம்ப வலிக்குது.. தாங்க முடியல ஜீவா என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க.. எனக்கு உங்க கூட வாழனும்.. நான் சாக விரும்பல.. நீங்க எனக்கு வேணும் ஜீவா.. எனக்கு பயமா இருக்கு.. ஹெல்ப் மீ ப்ளீஸ்".. அவன் கரத்தை அழுத்தமாக பற்றி கொண்டு கதறியவளை கண்டு என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு..

"உனக்கு.. ஒன்னும் ஆகாதுடி நான் உன் பக்கத்துலயே தான் இருக்கேன்.. பயப்படாதே" என்று ஆறுதல் சொன்னவன் அவளைவிட அதிகமான பயத்தோடும் படபடப்போடும் இருந்தான்..

அங்கிருந்த மருத்துவரோடு இன்னும் சில மருத்துவர்களும் சேர்ந்து கொள்ள அவர்கள் முகத்திலும் தீர்வு கிடைக்காத பதட்டம்.. "சீக்கிரமா ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போங்க" என்று முதன்மை மருத்துவரின் உத்தரவின் பேரில் அவளை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசரமாக அழைத்துச் சென்றனர்..

"ரொம்ப வலிக்குது ஜீவா என்னால முடியல" என்று கதறியவளின் கரம் அவன் இரும்பு கரத்தை கூட கன்னி சிவக்க செய்தது.. ஸ்ட்ரெச்சரில் அவளோடு ஓடி வந்தவனுக்கு தன்னுயிரை தன்னோடு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பரிதவிப்பு.. துடிப்பு.. ஆற்றாமை.. ஆதங்கம் என மாறி மாறி அத்தனை கலவையான உணர்வுகளும் வந்து போனது.. ஆப்ரேஷன் தியேட்டர் நெருங்கியதும் வேறு வழியில்லாமல் அவள் கையை விடுவித்துக் கொண்ட வேண்டிய நிலை..

"ஜீவா ஜீவா ப்ளீஸ் என்னை விட்டுடாதீங்க.. ஜீவா.. ஜீவா.. ஜீவா.. ஆஆஆ".. என்றவளின் குரலோடு அவள் நீட்டியிருந்த தளிர்க்கரமும்.. தூரத்தில் சென்று விட அறைக் கதவு சாத்தப்பட்டது..

எத்தனை மணி நேரங்கள் கடந்ததோ தெரியவில்லை.. மெல்ல கண்களை திறந்தாள் மான்வி..

ஒளிவட்டமாக தலைக்கு மேல் வெளிச்சம்.. வெள்ளை வெளேரென்ற அறை.. விழிகளை சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு அது எந்த இடம் என்று நினைவு கூர முடியவில்லை..

வலியின் சுவடுகள் இருப்பதாக தெரியவில்லை.. தேகம் காற்றில் மிதப்பது போன்று உணர்வு..

கண்களின் மூடி திறந்தவளின் எதிரே நின்று கொண்டிருந்தவர் விஷ்வமூர்த்தி..

நம்ப முடியாத பாவனையுடன் விழிகளை விரித்தவள் "மாமா.. மாமா".. என்றாள் அதிர்ச்சி குறையாமல்..

"நானேதான்.. இப்ப நீ ஓகே தானே" என்று அவள் தலையை வாஞ்சையோடு வருடினார் அவர்..

என்ன நடக்கிறது சுற்றுமுற்றும் விழிகளை உருட்டி திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

"சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாச்சு இனி பயப்படவே வேண்டாம்".. கண்களை மூடி திறந்து புன்னகைத்தார் அவர்..

"என்ன சொல்றாரு இவரு"..

இவர் என் கண்ணுக்கு தெரிகிறார் என்றால்?".. என்றவள் திடுக்கிட்டாள்..

"அப்படியானால் நான்.. நான்?".. அவர் அவள் சந்தேகத்திற்கு உறுதியான பதிலை உரைக்கும் விதமாக.. ஆம் என்ற தலையசைத்தார் விஷ்வ மூர்த்தி

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Mar 8, 2023
Messages
127
Sagi ethai ethuku madtom.manvi eppa than jeeva vai purinthu iruka
 
New member
Joined
Jun 6, 2023
Messages
2
Ayyo maanvi death scene ah..... Nooooooooo 😥😥😥😥😥
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
😱😱😱😱😱😱😱.ithu kanavunu sollirunga sisy.... pl. Sisy 2 ud podunga sisy..... yesterday waitpanni panni romba kastama itunthuchi.... pl. Sisy enoru ud kudunga sisy
 
Member
Joined
Jan 13, 2023
Messages
6
Super super engala tension pandrathe velaiya pochi ungaluku
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
99

Ennaya idhu.. Last aa perya twist vechitinga...
 
Member
Joined
May 10, 2023
Messages
30

Ayyoyo enna accu theriyaleye
 
Joined
Jul 25, 2023
Messages
24
அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரம் உன் ஜீவா உன்ன விட்டுட மாட்டான் மான்வி இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்குமா
 
Member
Joined
Sep 1, 2023
Messages
7

கடைசில ஏன் இப்படி????!!!!!😡😡😡😡
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
73
NOOOOOO ETHAI NANGA OTHUKA MUDIYATHI SOLLITEN...ROMBA ROMBA ROMBA TENSION AGUTHU....SEEKARAM SERTHU VAINGA
 
Top