• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 43

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
49
அப்பாவான பிறகும் கூட.. அப்பா.. அப்பா என்று தன் மீது ஏறி விளையாடாத குறையாக கொஞ்சிப் பேசும் மகனை நினைத்து பெருமிதமாக இருந்தது விஷ்வமூர்த்திக்கு.. ஏதோ பிழைப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வந்த தந்தையின் மீது தாவிக் கொள்ளும் குழந்தை போல் அவன் கொஞ்சலும் தொல்லையும்..

பரத் இந்த பாச அலப்பறைகளை ஏற்கனவே பார்த்து சலித்துப் போனதால் அவனுக்கு பெரிதாக வியப்பொன்றுமில்லை.. ஆனால் மான்விக்கு இது புதிது.. ஏதோ ஐந்து வயது சிறுவன் போல் அப்பாவை சுற்றி வந்த ஜீவா முழுதாக வேறொரு பரிணாமத்தில் தெரிந்தான்.. விஷ்வ மூர்த்தி தோளில் தலையால் முட்டி முட்டி சிரித்து அவன் பேசிக் கொண்டிருந்த காட்சி அழகோ அழகு.. பக்கத்தில் படுத்து அம்மாவின் வாசனை தேடிக் கொண்டிருந்த தன் குழந்தைக்கும் அவனுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.. இவனை வளர்க்க விஷ்வ மூர்த்தி எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்று இப்போது புரிந்தது.. ஒரு முரட்டு மனிதனை அன்பினில் கட்டியாள்வது அத்தனை சுலபமான காரியம் இல்லை.. அதுவும் ஒரு ஆணாக.. தந்தையாக அது மிக மிக கடினம்.. தாயின் அன்பிற்கு கட்டுப்படும் ஆண் பிள்ளைகள் உண்டு.. இங்கே தந்தையாக ஒரு மகனின் அதீத அன்பை பெற அவர் எவ்வளவு பாசத்தை கொட்டி வளர்த்திருக்க வேண்டும்.. எவ்வளவு தியாகங்கள் புரிந்திருக்க வேண்டும்.. "அடேய் அவரை கொஞ்ச நேரம் ஃப்ரீயா விடுடா.. பிச்சு தின்னுடாத".. என்று பரத் கடிந்து கொள்ளும் அளவிற்குதான் அவன் நடவடிக்கைகள் இருந்தன..

அப்பாவின் மீது அன்பை காட்டுகிறேன் என்று மான்வியை கண்டு கொள்ளாமல் விடவில்லை அவன்.. கரினத்தோடு பேறுகாலத்தில் உதவும் இன்னொரு தாயாக நேசத்தில் திக்கு முக்காட செய்து கொண்டிருந்தான்..

"மான்வி.. உன் அப்பாவும் அம்மாவும் உன்னை பார்க்கறதுக்காக ரொம்ப நேரமா வெளியே காத்திருக்காங்க.. நாங்க போயிட்டு அவங்களை உள்ள அனுப்புறோம்.. "வாடா ஜீவா".. என்று விட்டு விஸ்வமூர்த்தி வெளியே சென்று விட.. அவன் ஆழ்ந்த பார்வையும் நீண்ட பெருமூச்சும் எதற்கு என்று புரியவில்லை மான்விக்கு.. நெற்றியில் முத்தமிட்டு அமைதியாக வெளியே சென்று விட்டான் ஜீவா..

பரிதவிக்கும் நெஞ்சத்தோடு மகளை பார்க்க வேகமாக உள்ளே ஓடி வந்தனர் நீலகண்டனும் ரமாவும்.. அவர்களை பின்தொடர்ந்து அனிதாவும் நிவினும் உள்ளே நுழைந்தனர்..

மான்வி ஆபத்தான நிலையில் இருந்தபோது ரமா அழுதிருப்பாள் போலும்.. கண்கள் சிவந்து.. இமை தடித்து வீங்கியிருந்தது..

"மான்வி செல்லம்".. என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழுவதற்கு தயாராக.. "அழாதே மா.. எனக்கு ஒன்னும் இல்ல.. நான் நல்லா இருக்கேன் குழந்தையை பாரு".. என்று மென்னகையுடன் தன் மகளை காண்பிக்க.. அழுது வடிந்த முகம் சடுதியில் பிரகாசித்து ஆதங்கத்தோடு வழிந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறியது அந்நொடி..

அழகு மலரை கையிலேந்தி கொண்டு ஆசையோடு நோக்கினாள் ரமா.. பிறந்த குழந்தைகள் எப்போதுமே தனி அழகு அல்லவா.. அனிதாவும் நிவினும் உற்சாகம் கொண்டு சிறு பிள்ளைகளாக அன்னையின் கையிலிருந்த மொட்டு மலரை தொட்டு தொட்டு கொஞ்ச ஆரம்பித்து விட்டனர்..

"அக்கா இங்க பாரேன்.. உன்ன மாதிரியே சிரிக்கிறா.. இந்த மூக்கு கூட உன்ன மாதிரியே.. கண்ணு.. என்னை மாதிரி தான் இருக்கு".. என்று நிவினும் அனிதாவும் பிள்ளையின் தோற்றத்தை கண்டு ஆளாளுக்கு பெருமைப்பட்டுக் கொள்ள.. "அட.. சும்மா இருங்க.. புள்ள ஜாடையில அப்படியே அவளோட அப்பாவை கொண்டிருக்கு".. என்றாள் ரமா சந்தோஷ சாயலோடு.. தன் மகளின் மகள் என்ற கர்வத்தோடு..

பெற்ற பிள்ளையின் மீது கொள்ளும் பாசத்தை விட.. பேரன் பேத்தியின் மீது இந்த பாட்டி தாத்தாக்களுக்கு அளவு கடந்த அன்பும் நேசமும் பல மடங்கு பெருகி போவதன் காரணம் தான் புரியவில்லை.. வீட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு கிடைக்காத ராஜயோக வாழ்க்கை பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்து விடுகிறது.. அந்த வகையில் ஜீவா மான்வியின் சீமந்த புத்திரி கொடுத்து வைத்தவள்.. எந்தவித குறையும் இல்லாமல் சொந்த பந்தங்களின் நடுவே இனி ராஜகுமாரியாக தான் வளர போகிறாள்..

மகளின் அருகே தயக்கமும் சங்கடமுமாக நின்று கொண்டிருந்தார் நீலகண்டன்.. எதையோ பேசுவதில் தயக்கம்.. அவள் நலன் விசாரித்து வாஞ்சையுடன் தலையை வருடி கொடுத்து குழந்தையை கையில் வாங்கிக் கொஞ்சியவருக்கு பேரானந்தம்.. ஆனால் அதையும் தாண்டி மகளிடம் ஏதோ சொல்ல தவிப்பு..

"என்னப்பா.. ஏதாவது சொல்லனுமா".. தந்தையின் கண்கள் கொண்ட தயக்கம் உணர்ந்து வினவினாள் மான்வி..

முன்பிருந்த ஆணாதிக்கத்தை இப்போது காண முடியவில்லை அவரிடம்.. "உன் மாமனாரை மீட்டு கொண்டு வந்துட்டேன்.. ஆனா என்ன?.. மாப்பிள்ளை தான் என்கிட்ட முகம் கொடுத்து பேசவே மாட்டேங்கிறாரு.. அதுதான் மனசுக்கு வருத்தமா இருக்கு".. என்றவருக்கு நிதர்சனம் புரிந்தாலும் அதையும் மீறி ஒரு ஆதங்கம்.. அனைத்து பிரச்சினைகளும் முடிந்த நிலையில் ஜீவா மட்டும் முகத்தை திருப்பிக்கொண்டு செல்வதில் மீண்டும் மகளுடனான உறவு தள்ளி நிறுத்தி வைக்கப்படுமோ என்ற அச்சம்..

மகள் வாழ்வுக்காக இதுவரை விலகி நின்று வேடிக்கை பார்த்தாயிற்று.. இப்போது பேத்தியும் பிறந்து விட்ட நிலையில் நீலகண்டன் ரமா தம்பதியரால் முன்பு போல் மகளோடு ஒட்டாமல் விலகியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.. ஒருவேளை விஷ்வ மூர்த்தி மீண்டு வராமல் போயிருந்தாலும் ஜீவா காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்டாவது தங்கள் மகள் மருமகனுடான உறவை புதுப்பித்துக் கொண்டிருக்க வாய்ப்புண்டு..

"நீங்க சொல்றது புரியுதுப்பா.. எதுவும் உடனே மாறிடாது.. நீங்க செஞ்ச தப்பை நீங்களே சரி செஞ்சுட்டீங்க.. அவர் நிச்சயமா உங்க கிட்ட பேசுவாரு.. மனசை போட்டு குழப்பிக்காம அமைதியா இருங்க".. என்று மனப்பூர்வமாக ஆறுதல் சொன்னவளுக்கு எல்லாம் சரிவரும்.. ஜீவா மாறுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சமீபகாலங்களில் பிறந்திருந்தது.. நீலகண்டனும் மௌனமாக தலையசைத்து அதை ஆமோதித்துக் கொண்டார்.. காத்திருக்கத்தான் வேண்டும்.. குத்திய ஆணியை பிடுங்கி விட்டாலும் வடுக்கள் உண்டே!!..

மகள் பேத்தியுடன் உறவாட எந்தவித தடையும் இல்லை என்பதால் ரமா.. நீலகண்டன் தம்பதியரால் நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது.. ரமா தினமும் மகளுக்காக பத்திய உணவு சமைத்து எடுத்து வந்தார்..

தீப்தி மற்றவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டு வந்தாள்.. "ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் மத்தவங்களை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க மான்வியை மட்டும் நல்லா கவனிச்சுக்கோங்க" என்று ரமாவிடம் சொன்னது அவள்தான்..

ஜீவா மனதில் பரத் தீப்தீக்கான நட்புணர்வு கடலளவு இருக்கிறது.. அதை நன்றியணர்வாக காட்டி அவர்களை பிரிக்க விரும்பவில்லை அவன்.. அன்போ நட்போ பகையோ.. மிச்சம் வைக்காமல் பலமடங்காக திருப்பிக் கொடுப்பான் ஜீவா..

விஷ்வ மூர்த்தி இல்லாத நேரத்தில் நடந்த விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் தந்தையிடம் சொல்லி குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்திருந்தான் ஜீவா..

நீண்ட பெருமூச்சோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் குரலை செருமியவாறு "என் மேல நீ வெச்சிருந்த அன்பு.. என் ஆசையை நிறைவேற்றுவதற்காக மான்வியை திருமணம் செஞ்சுக்கிட்டது எல்லாமே சரிதான் ஜீவா.. ஆனா நான் சொன்ன இன்னொரு விஷயத்தை நீ மறந்துட்ட".. என்றதில் நிமிர்ந்து அவரைப் பார்த்தான் ஜீவா..

"சந்தோஷமா வாழறது.. அதுக்கான அர்த்தம் என்னன்னு தெரியுமா.. உன்னை நம்பி வந்தவளை சந்தோஷமா வச்சுக்கிறது.. எந்த நிலையிலும் அவளை கலங்க விடாமல் பார்த்துக்கிறது.. அதை நீ செய்ய தவறிட்டியே.. அவ மனசை காயப்படுத்தி.. என் சாவுக்காக அவளை பழி வாங்க நினைச்சிருக்க.. தவறான புரிதல்னால மகளோட வாழ்க்கையை காப்பாற்ற நினைச்சு என்னை தப்பா பேசிய நீலகண்டனுக்கும் உனக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லையே!!"..

"உனக்கு உன்னோட தகப்பன் ஒசத்தின்னா.. நீலகண்டனுக்கு அவர் மகள் வாழ்க்கை பெருசில்லையா!!.. ஒரு மகனா நீ செஞ்சது சரின்னா ஒரு தகப்பனா அவர் செஞ்சதும் சரிதானே"..

"அப்பா".. என்றான் திகைத்த விழிகளோடு

"தெரிஞ்சே துரோகம் செஞ்சுட்டு போன உன் அம்மாவை கூட இதுவரைக்கும் நான் ஒரு வார்த்தை தப்பா பேசினதில்ல.. அவளுக்கு அவளோட நியாயங்கள் பெருசு.. தெரியாம தப்பு செஞ்ச மான்விக்கு ஏன் ஜீவா இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்த?.. ஏதாவது ஒரு கட்டத்துல அவளை புரிஞ்சுக்க நீ முயற்சி செய்யவே இல்லையா!!.. காதல் எந்த நிலையிலும் தன் துணையை தண்டிக்க நினைக்காது.. பழிவாங்க நினைக்காது.. மன்னிக்க கத்து கொடுக்கும்.. உன் வேதனைகளைப் பற்றி மட்டுமே யோசிச்சா அது சுயநலம்.. துணையோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கிறதுக்கு பேரு தான் காதல்.. அவ உன்னோட உணர்வுகளை புரிஞ்சுகிட்டா.. ஆனா நீ?.. எனக்கு சந்தேகமா இருக்கு.. நீ அந்த பொண்ணை உண்மையாதான் காதலிச்சியா ஜீவா".. தகப்பனின் கடைசி வார்த்தையில் துடித்துப் போனான் ஜீவா..

"அப்பா ப்ளீஸ் வார்த்தையால என்னை கொல்லாதீங்க.. என் காதல் உண்மை.. யூ நோ தட்" என்றான் தவிப்புடன்.. மான்வியின் மீதான நேசத்தை உணர்ந்து கொண்ட பிறகு.. அவள் மீதான முரட்டு காதல் மீண்டும் விஸ்வரூபமெடுத்த பிறகு.. அவன் செய்த தவறுகளை சுட்டி காட்டியதும் மான்வியின் வேதனைகளை உணர்த்தியதும் நெஞ்சுக்குள் நெருப்பாய் சுட்டது..

"நான் உன்னை நோகடிக்கறதுக்காக இதையெல்லாம் சொல்லல ஜீவா.. சில விஷயங்கள்ல உன் மேலேயும் தப்பு இருக்கு அதை நீ புரிஞ்சுக்கணும்.. ஆனா இவ்வளவு கெட்டதிலயும் ஒரே ஒரு நல்லது என்னன்னு தெரியுமா?.. ஒருவேளை எந்த பிரச்சினைகளும் இல்லாம இயல்பா இந்த திருமணம் நடந்திருந்தா.. நீயும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதுக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்காது.. மான்வி மேலும் மேலும் உன்னை தப்பா தான் நினைச்சிருப்பா.. நீயும் அவ உணர்வுகளை புரிஞ்சுக்காம கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தி இருப்ப.. உன் மூர்க்கத்தனமான குணமும் தப்பான புரிதலும் ரெண்டு பேரோட நிரந்தரமான பிரிவுக்கு காரணமாகிப் போயிருக்கும்.. ஆனா இப்போ?.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு அழகா புரிஞ்சுகிட்டீங்க.. இங்கே எதுவும் காரணமில்லாம நடக்கிறது இல்ல ஜீவா.. நான் தொலைஞ்சு போனதிலும் உங்களுக்கு நன்மை தான் நடந்திருக்கு.. அதுக்காக நீ நீலகண்டனுக்கு நன்றி தான் சொல்லணும்".. என்று மகனின் கைப்பற்றி அழுத்தவும்.. அப்பாவின் வார்த்தைகளில் யோசிக்க ஆரம்பித்திருந்தான் ஜீவா.. எவ்வளவு அதி புத்திசாலியாக இருந்தாலும் இந்த வாழ்க்கை யார் மூலமாகவாது எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது..

நீலகண்டன் மீது பெரிதாக கோபம் இல்லை என்றாலும்.. அனைத்தையும் மறந்து விட்டு இயல்பாக பேச முடியவில்லை.. பேசுவது போல் நடிக்கவும் முடியவில்லை.. காலத்தின் போக்கு அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையோடு அப்படியே விட்டு விட்டான்.. இப்போது தந்தை அறிவுறுத்தியதில் அவர் மீது புது மரியாதை பிறந்திருந்தது.. நான்கையும் யோசித்துப் பார்க்க வேண்டிய பெரிய மனிதராக ஏதோ ஒரு கட்டத்தில் இடறி தவறிழைத்திருந்தாலும்.. ஜீவா தன் குட்டி மகளின் தந்தையாக மனைவியின் தந்தையை மன்னித்து அனைத்தையும் மறக்க தயாராக இருந்தான்..

"ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அதிகமாவே நேசிச்சு இருக்கீங்க.. ஆனா அதை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு சூழ்நிலை சதி செஞ்சிடுச்சு.. இனி உங்களுக்கு எந்த வித தடையும் இல்லை.. போய் உன் பொண்டாட்டியை காதலி மகனே.. என் மருமகளை சந்தோஷமா வச்சுக்கோ".. என்று சிரித்துக் கொண்டே அவன் தோளை தட்டி விட்டு எழுந்து சென்றார் விஷ்வ மூர்த்தி..

அடி மனதிலிருந்து ஊற்றாக பீறிட்டு கிளம்பிய உணர்வுடன் வேகமாக எழுந்து மான்வியின் அறைக்குள் சென்றான் அவன்.. அறைக்குள்ளிருந்த தீப்தி.. பரத்.. ரமா மூவரும் வெளியே தள்ளப்பட்டனர்.. நல்ல வேளையாக நீலகண்டனும் பிள்ளைகளும் வீட்டுக்கு சென்றிருந்தனர் அந்நேரம்..

"என்னடா ஆச்சு இவனுக்கு.. மறுபடியும் பீஸ்ட்
மோடுக்கு போய்ட்டானா?".. தீப்தி விழிக்க.. அடுத்து அறைக்குள்ளிருந்து கேட்டதெல்லாம் அதிகபட்ச ஒலியோடு கூடிய முத்த சத்தங்கள்.. ரமா.. கன்னத்தில் கை வைத்து வெட்கப்பட்டு கொண்டு வேறு திசைக்கு சென்று விட்டாள்.. ஊரில் வாழ்ந்த புதுமண தம்பதிகளை கரித்துக் கொட்டினாலும் மகள் மருமகனோடு நெருக்கமாக வாழ்வதில் பரம சந்தோஷம் கொள்ளும் சுயநலதாய்தான் அவள்..

"அடப்பாவி.. அப்படியே அடுத்த பிரசவத்தையும் முடிச்சுட்டு வரலாம்னு பாக்கறான் போல.. நீ வாடி போகலாம்".. மனைவியின் இடையைப்பற்றி தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டான் பரத்.. பரத் தீப்தியை பொருத்தவரை எப்போதும் தெளிந்த நீரோடை போலான மென்மையான காதல் தான்.. சிறுவயதிலிருந்து நண்பர்கள் என்பதால் எப்போதும் ஈகோ பிரச்சனை வந்ததில்லை.. சண்டைகள் உண்டு சமாதானங்கள் இல்லை.. சண்டை போட்டதையே மறந்துவிட்டு இரண்டும் அடுத்த நிமிடமே இணைந்து கொள்ளும்.. இழைந்து கொள்ளும்.. ட்ரெக்கிங் செல்வது போல் தெரியாத பயணத்தை எதிர்கொள்ளும் சுவாரஸ்யம் குறைவுதான்.. ஆனால் தெரிந்த வழக்கமான பூஞ்சோலை பாதையின் நிம்மதியும் சந்தோஷமும் உண்டு..

மான்வி அடுத்த இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டிருந்தாள்.. பிறந்த வீட்டுக்கு சென்ற மனைவியை ஒரே வாரத்தில் மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் ஜீவா.. அவன் குணம் தெரிந்த விஷயம் என்பதால் பெரிதாக யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.. மான்விக்கும் அவன் அருகே இருக்க வேண்டும்.. அவன் கழுத்தில் புதைந்து கைவளைவில் அடங்கி உறங்க வேண்டும்.. ஆணவன் வாசம் வேண்டும்.. அவன் சுவாசத்தில் கரைய வேண்டும்.. வீடியோ கால் முத்தங்கள் போதவில்லை.. கொடுக்க கொடுக்க வாங்கி விழுங்கி கொள்ளும் அரக்கியாகிவிட்டாள் அவளும்..

வேதாச்சலம் சிறையில் இருப்பதாக விஷயம் கேள்விப்பட்டு பதறிப்போனார் விஸ்வமூர்த்தி.. "உன் வேலைதானே ஜீவா".. மகனின் குணம் அறிந்தவர் தினசரி நாளிதழில் கண் பதித்தவாறு கேட்டார்..

தந்தையை கொடுமைப்படுத்தியவனை அப்படியே விடும் ஆளில்லையே அவன்.. "வாழ்ந்துட்டு போகட்டும் விடு ஜீவா.. நமக்கு நிறைய வேலை இருக்கு.. அவங்க விஷயத்துல தலையிட வேண்டாம்" என்று எவ்வளவோ எடுத்து சொல்லிய பிறகு.. "சரிப்பா" என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டவனின் நிதானமான போக்கில் விஸ்வ மூர்த்திக்கு சந்தேகம் தான்..

"நான்தான் அவ்வளவு சொன்னேனே ஜீவா.. ஏன் இப்படி செஞ்சே?.. பாவம் மகனும் ஹாஸ்பிடல்ல இருக்கான்.. இப்ப புருஷனையும் போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க.. அவளுக்கு இது ரொம்ப பெரிய தண்டனைனு தோணுது".. இயல்பான மனிதாபிமானத்தில் வெளிப்பட்ட அவர் வார்த்தைகளில் புருவங்களை நெளித்து கூர்மையான விழிகளால் ஏறிட்டவன்.. "என்ன? முன்னாள் மனைவி மேல பாசம் பொங்குதோ!!" என்றான் ஏளனமாக..

"மெல்ல சிரித்தவர்.. "எப்ப என்னை விட்டுப் போயிட்டாளோ அப்பவே அவளை என் மனசுலருந்து தூக்கி போட்டுட்டேன்.. இது வெறும் மனிதாபிமானம் தான்.. பழிவாங்கறது எப்பவும் என்னோட குணம் கிடையாது ஜீவா".. என்றார் அமைதியான குரலில்..

"ஆனா நான் அப்படி இல்லப்பா.. என் அப்பாவை துன்புறுத்தினவன மன்னிச்சு விடுற அளவுக்கு நான் கருணை உள்ளம் படைச்சவன் இல்ல"..

"அந்த வேதாச்சலம் சிலைகள் கடத்தி வெளிநாட்டுக்கு இல்லீகலா விக்கிறதா.. என் காதுக்கு வந்த செய்தியை உங்க கிட்ட ஒருமுறை சொல்லி இருக்கேன்.. ஞாபகம் இருக்கா?.. அந்த விஷயத்துல தலையிட வேண்டாம்னு நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக அதை பெருசா கண்டுக்காம விட்டுட்டேன்"..

"ஆனா இப்போ அவனை பழி வாங்குறதுக்கு இந்த விஷயத்தை ஒரு துருப்புச் சீட்டா பயன்படுத்திக்கிட்டேன்.. மான்வி ஆபத்து கட்டத்தை தாண்டிட்டான்னு தெரிஞ்ச பிறகு உங்க ஃப்ரெண்ட் அசிஸ்டன்ட் கமிஷனர் அன்புக்கரசு ஞானமூர்த்தியை நேரடியா சந்திச்சு பேசினேன்.. நடந்த விஷயங்களை எடுத்துச் சொல்லி அவர்கிட்ட உதவி கேட்டேன்.. நிச்சயமா உதவி செய்யறதா சொன்னார்".. தகுந்த ஆதாரங்கள் கிடைச்சதும் வேதாச்சலத்தை உடனடியாக கைது செய்யறதா வாக்குறுதி கொடுத்தார்..

"அவர் சொன்னபடி ஆதாரங்களை திரட்ட இவ்வளவு நாளாகிடுச்சு.. நிறைய வேலைகள் பார்க்க வேண்டி இருந்துச்சு.. வேதாச்சலத்தை தீவிரமா கண்காணிக்க வேண்டிய கட்டாயம்.. திவாகரன் இந்த சிலை கடத்தலுக்கு உடந்தைன்னு தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல இருந்து குணமாகி வந்த பிறகு சாருக்கும் ஜெயில் வாசம் தயாரா காத்திருக்கு".. என்றான் இதழ் வளைத்து நக்கலாக..

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த விஷ்வமூர்த்தி அதன் பிறகு எதுவும் பேசவில்லை.. செய்த தவறுகளுக்கான தண்டனை தன் மகன் மூலம் கிடைத்திருக்கிறது.. இதில் பாவம் பார்க்கவோ மனமிரங்கவோ எதுவும் இல்லை என்ற முடிவோடு அமைதியாக இருந்து விட்டார்..

இரண்டு வருடங்கள் கழித்து..

"அய்யோ.. எப்பவும் இதே வேலையா போத்து.. இன்னைக்கு எனத்து ஒரு முதிவு தெரிஞ்சே ஆதணும்".. மழலை மொழியில் கத்திக் கொண்டிருந்தாள் ஜீவாவின் செல்ல மகள் நவ்யா..

"என்ன என்ன முடிவு தெரியணும் என் செல்ல குட்டிக்கு".. அவளை குளிக்க வைப்பதற்காக பூ துண்டை தோளில் போட்டுக் கொண்டவன் மகளை அன்போடு வாரி அணைத்துக் கொண்டான்..

"இந்த மம்மியை பாதுங்க தாதி.. எப்பவும் உங்கள கத்தி புடித்து உங்க மேல கால் போத்து படுப்பேன்ல.. நைத்து நான் துங்கின பிதகு என்னை தூக்கி ஓதமா படுக்க வச்சுடறாங்க.. ஒது நாள் ரெந்து நாள் பதவாயில்லை.. தினமும் இதே கத தான்" என்று தலை சாய்த்து புகார் வாசித்த மகளின் தோரணையில் மயங்கிப் போனான் ஜீவா..

நவ்யா பேசியதை கேட்டு வாயில் கை வைத்தாள் மான்வி.. சத்தம் போடாமல் உறங்கும் மகளை தூக்கி அந்த பக்கம் கிடத்திவிட்டு மனைவியுடன் சரசமாடுவதற்காக அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் செய்தது ஜீவா தானே..

"ஆமா குட்டி.. அம்மாவுக்கு அப்பா பக்கத்துல தான் படுக்கணுமாம்.. பாரு உன் கூடவே போட்டி போடுறா.. நாளைக்கு அவளை தனியா படுக்க வைச்சிடுவோம் சரியா?".. என்று தன் மகளிடம் கொஞ்சி விட்டு மனைவியை பார்த்து கண்ணடித்தான் கள்வன்..

"ஆஹான்.. ரொம்ப சந்தோஷம்.. நான் தனியாவே படுத்துகிறேன்.. உங்க தொல்லை இல்லாம நிம்மதியா இருப்பேன்".. மான்வி சத்தமாகவே சொல்லியபடி தலையை உலுக்கவும்.. "தொலைச்சிடுவேன் குழந்தையோட திருப்திக்காக சொன்னா.. ஓவரா பேசுற.. நீ இல்லாம நான் என்ன ஆவேன் தெரியுமா?.. தினமும் இந்த மூக்கு உன் வாசம் தேடி மோப்பம் பிடிச்சு வந்ததுடுதே.. நான் என்ன செய்யட்டும்".. என்று அவள் இடை வளைத்து தன் பக்கமாக இழுத்து காதோரம் கொஞ்சினான்.. நீண்ட நேரம் நீடித்து விளையாடும் இரவு விளையாட்டுகள் இருவருக்குமே பிடித்தம்.. சில நேரங்களில் மனைவியின் வேகம் கண்டு ஜீவா தான் மிரண்டு போவான்..

"இல்ல ஒரு காலத்துல.. முத்தம் கொடுத்ததுக்கே முழிச்சு முழிச்சு பார்த்த ஒரு குட்டி குழந்தையை தான் தேடிக்கிட்டு இருக்கேன்".. என்று அந்த நேரத்திலும் கேலி செய்ய.. அதற்கும் சேர்த்து வன் முத்தங்களை தண்டனையாக வழங்குவாள் அவன் காதல் கண்ணாட்டி..

"போதும் நேரமாச்சு குழந்தையை குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்க.. தீப்தி பரத் அண்ணா வர்ற நேரம் ஆச்சு".. என்று அவன் காதோரம் கிசுகிசுப்பாக உரைக்கும் சாக்கில் குட்டி குட்டியாய் முத்தங்கள் வைத்த மனைவியை விட்டு எப்படி விலகிச் செல்ல தோன்றும்.. மகள் கையில் வைத்துக் கொண்டிருந்த குட்டி கரடி பொம்மையின் கண்ணை சிரத்தையாக பிதுக்கி கொண்டிருப்பதை கவனித்து விட்டு.. குழந்தை பிறந்த பிறகு நன்றாகவே செழித்து சிவந்திருந்த ஆப்பிள் கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்து விலகிய பின்னும் கிறங்கினான் அவன்..

"யோவ்.. போய்யா".. என்று அவன் முதுகை பிடித்து தள்ளினாள் மான்வி வெட்கம் கொண்ட சராசரி இந்திய மனைவியாக..

மனைவி மீது ஒருவகையான முரட்டுத்தனமான நேசம் என்றால் மகள் மீது வேறு விதமான கண்மூடித்தனமான பாசம்.. என் பிள்ளைக்கு நானே எல்லாம் செய்வேன் என்று பாசத்திற்காக மட்டுமல்ல கடமைகளுக்காகவும் போட்டி போடுவான் ஜீவா.. எப்போதும் நவ்யா அப்பா பிள்ளைதான்.. அன்பு காட்டுவதிலும் பொறுப்புணர்விலும் கடமையை செய்வதிலும் விஸ்வமூர்த்தியை போலத்தான் ஜீவாவும்.. தந்தையின் ஜீன் மட்டுமே உடல் முழுக்க வியாபித்திருக்க அன்பில் ஆதிக்கம் செலுத்தினான் ஜீவா..

மகளை குளிப்பாட்டி சின்ட்ரல்லா ரோஸ்பட் பிராக் அணிவித்துவிட்டு.. மனைவியை தேட.. கச்சிதமான ரெட் டாப் பலாசோ பேண்ட் என பக்கா பிக்னிக் செல்லும் மெட்டீரியலாக தயாராகி வந்தாள் அவள்..

"நவி குட்டி.. கொஞ்ச நேரம் போய் தாத்தா கிட்ட இருப்பியாம்.. நான் அம்மாவை கூட்டிட்டு வருவேனாம்".. குழந்தையை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்ப முயன்றவனின் தவிப்பை புரிந்து கொள்ளாமல்.. "முதியாது எப்பவும் இதே வேலையா போத்து.. எதுத்தாத என்னை வெளியே அனுப்புதீங்க.. நான் இங்கேயே நித்திறேன் அம்மா கித்த என் முன்னாதியே பேத்துங்க.. நோ சீக்தெட்ஸ்".. கையை கட்டிக் கொண்டு பெரிய மனித தோரணையில் பேசிய மகளை பாவமாக பார்த்தான் ஜீவா..

கண்டிப்பாக அத்துமீறியே ஆக வேண்டும் என்று அவன் ஆசை மனம் துடித்துக் கொண்டிருக்க.. கணவனின் தவிப்பை ரசித்தவாறு கண்ணாடியில் தன்னழகை ரசித்து கொண்டிருந்தாள் மான்வி..

அதற்குள் பரத் தீப்தியின் ஒரு வயது மகன் சஞ்சீவ் குரல் அறைக்கு வெளியே சத்தமாக கேட்கவும் "சந்தீவ் வந்துத்தான்".. என்று துள்ளிக் குதித்து குதூகலத்துடன் வெளியே ஓடிவிட்டாள் நவ்யா.. வானிலை அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தாக்கும் புயலாக மனைவியைக் கட்டியணைத்து கட்டிலில் தள்ளி அவள் மேலே விழுந்தான் ஜீவா..

"ஜீவா என்ன இது எல்லாரும் வந்துட்டாங்க கிளம்பனும்".. சர்வாதிகாரியாக மிரட்டினாலும் எல்லை மீறும் அவன் கரங்களுக்கு வளைந்து கொடுத்தது அவள் தேகம்.. வாய் காரசாரமாக அவனை திட்டிக் கொண்டிருந்தாலும்.. மேலாடையை கழட்டும் போது அவள் தலையை தூக்கிக் கொடுத்தது தான் விந்தையிலும் விந்தை..

"அது எப்படி எனக்கு சொந்தமான அழகை நீ கண்ணாடியில் பார்த்து ரசிக்கலாம்.. இதெல்லாம் சரியில்ல.. எல்லாம் எனக்கே எனக்கு.. என்றவன் பசித்த மாடு நுனிப்புல் மேய்ந்த கதையாக அவசர அவசரமாக அவளை முத்தமிட்டு சிவக்க வைத்தான்.. நவ்யா அறையை விட்டு வெளியேறியதை தொடர்ந்து கதவு சாத்தப்பட்டதுமே தெரிந்து போனது.. "இன்னைக்கு பிக்னிக் கேன்சல் டி.. எதுக்கும் பசங்க ஏமாந்து போகாம இருக்க அவங்க மனசை தயார் செஞ்சு வைக்கணும்".. பரத் பெருமூச்சு விடவும் "அதுக்கெல்லாம் ஒன்னும் அவசியம் இல்ல.. நாங்களும் வந்துட்டோம்".. என்று ஜீவா மான்வி.. இருவரும் அட்டகாசமாக கிளம்பி வந்தனர்..

"அப்பாடியோவ்.. எங்கே ப்ரோக்ராம் கேன்சல் ஆகிடுமோ.. ரெண்டு பேரும் என்னென்ன அமர்க்களம் செய்யப் போறாங்களோ.. எப்படி சமாதானப்படுத்த போறோமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்ல வேலையா வந்து காப்பாத்திட்ட".. ஜீவாவை நோக்கி கும்பிடு போட்ட பரத்.. "வாடா குட்டி" என்று நவ்யாவை தூக்கி கொண்டான்..

"அங்கிள்".. என்று பாய்ந்து வந்த சஞ்சீவை தூக்கி இரு கன்னங்களிலும் முத்தமிட்டான் ஜீவா..

"அப்பா.. அப்பா.. எங்கே?" என்று ஜீவா தேடிக் கொண்டே.. அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.. பிக்னிக் செல்வதற்கான பீச் ட்ரெஸ்ஸில் தலையில் கௌ பாய் தொப்பியுடன் "இங்கே இருக்கேன் மகனே.. கார் ஓட்ட போறது நான்தான்.. எல்லாரும் ஏறி உட்காருங்க".. என்று விஷ்வமூர்த்தி குதுகலமாக காரை ஸ்டார்ட் செய்ய.. அவர் பக்கத்தில் இரு குழந்தைகளும் சீர் பெல்ட் போட்டு அமர்ந்து கொண்டனர் தாத்தா சொல்லும் கதைகளை கேட்க வசதியாக.. அடுத்த பின் இருக்கைகளில் அவரவர் ஜோடிகளோடு அமர்ந்து கொண்டு இணைகளோடு காதல் கதைகள் பேசி சீண்டிக் கொண்டே வரவும்.. அழகாக தொடங்கியது அந்த பயணம்..

பனித்துளி உருக வேண்டிய அவசியம் இல்லாது பனித்துளியோடு காதல் கொண்ட பகலவன் அவளுக்காக உருக ஆரம்பித்திருந்தது..

எதிரெதிர் துருவங்களே ஈர்க்கும்.. இயற்கையின் முரண்பாடுகளை இணைக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. சூரியனின் தகிப்பினால் பனித்துளி தன் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. பகலவன் தன்னை மாற்றிக் கொண்டான்.. அவன் பேராசை கொண்ட ஒற்றைப் பனித்துளிக்காக..

வாழ்க வளமுடன்..

சுபம்..
 
Last edited:
New member
Joined
Aug 29, 2023
Messages
4
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️💞💞💞💞💞💞💞
 
New member
Joined
Feb 19, 2023
Messages
3

Two days post illaiyaenu varuthama irundha ippadi pattunu mudiciteenga😔😔😔😔😔😔😔😔😔😔😔
 
Member
Joined
May 10, 2023
Messages
30

Super siss nice ending
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
73
Feel good story❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Member
Joined
Jan 11, 2023
Messages
13

Kadhaiya supera mudichitinga......
But romba fasta pona maadhiri feel agudhu ....
 
Top