- Joined
- Jan 10, 2023
- Messages
- 88
- Thread Author
- #1
அவள் கடந்த காலம் தெரிந்தபின் இடிந்து போய் அமர்ந்திருந்தான் துருவன்.. மரணத்தை விட கொடுமையான வலிகளை அனுபவித்திருக்கிறாள்.. பெற்ற அன்னையின் இழப்பு பாதி பலத்தை குறைத்து விட்டிருக்க.. நட்பாய் வந்த நானும் பரிதவிக்க விட்டு சென்று மீதி உயிரை கொன்று விட்டேன்.. இதற்கிடையே நிகழ்ந்த அந்த கொடூரம்.. நினைக்கும் போதே அவன் உள்ளம் தகித்து விழிகள் நெருப்பை மூட்டி அணைந்து போயிருந்த தீக்கங்குகளை போன்று சிவந்து நின்றன.. அவளிடமிருந்து எதிர்ப்புகள் இல்லை என்றாலும் அத்துமீறி.. விருப்பம் இல்லாத ஒரு பெண்ணிடம் எவ்வாறு அப்படி நடக்க தோன்றும்.. மிருகங்களின் புணர்ச்சி கூட இணைகளின் ஒத்துழைப்புடன் தானே நடைபெறும்.. இங்கே ஆறறிவு படைத்த மனிதர்கள் அதைவிட கேவலம்.. அவளின் கண்ணீருக்கு காரணமானவன் மட்டும் கைகளுக்குள் கிடைத்தால் இரணியகசிபூவை கொன்ற நரசிம்மன் போல் குடலை உருவி மாலையாக போட்டுக் கொள்ளும் அளவிற்கு.. ரத்த வெறி உடல் முழுக்க பரவியது துருவனுக்கு..
கொடுமைகளும் காயங்களும் அத்தோடு நின்று போயிருந்தால் கூட பரவாயில்லை.. தன்னை தானே தேற்றிக்கொண்டு வெளியே வந்திருக்க வாய்ப்புள்ளது.. ஆனால் சுற்றங்களும் அவளை நம்பாமல்.. குழந்தை மனது படைத்த பெண்ணொருத்தியை.. கேவலமானவளாக உருவகம் செய்து.. இழிநிலைக்கு ஆளாக்கிய.. அந்த சித்தி.. மாரிமுத்து.. இருவருக்கான எதிர்கால திட்டத்தை சிறப்பாக தீட்டிக்கொண்டான் துருவன்..
மாரிமுத்துவிடமிருந்து பெல்டால் அடி வாங்கிய.. அந்த விரும்பத்தகாத நிகழ்வை காட்சியாக எண்ணங்களுக்குள் விரிவு படுத்திக் கொண்டவன்.. வேதனை தாளாது வேதாவை மேலும் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான்.. பெண் தேகத்தில் எங்கெங்கே அடிபட்டதாய் காயம் பட்டதாய்.. அவன் மனதிற்கு தோன்றியதோ அந்த இடங்களை எல்லாம் மென்மையாக வருடி கொடுத்தன அவன் விரல்கள்.. "ரொம்ப வலிச்சுதா பேபி".. விழிகள் கலங்கிட துருவனின் கேள்வி அவளுக்கு சரியாக புரியவில்லை..
ஓட ஓட விரட்டிய இந்த வெறி நாய்கள்.. சுற்றம்.. சமூகத்திடமிருந்து தப்பித்து.. தன்னை தேடி வந்து அடைக்கலம் புக நினைத்தவளை.. அவனும் அடையாளம் கண்டு கொள்ளாது விரட்டி அடித்திருக்கிறான்.. நினைக்க நினைக்க இதயத்திற்குள் தாள முடியாத வலி..
"ஐம் சாரி பேபி.. ஐ எக்ஸ்ட்ரீம்லி சாரி.. நான் தெரிஞ்சு பண்ணல கண்ணம்மா.. அப்பவே உன்னை அடையாளம் கண்டுபிடிச்சு இருந்தேன்னா.. நிச்சயம் உன் எல்லா பிரச்சினைகளும் அன்னைக்கே முடிஞ்சு போயிருக்கும்.. நீ எங்கேயோ வயித்துல குழந்தையோட கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது.. உன்னை பத்திரமா பாத்துக்குவேன் பாதுகாப்பாக வைச்சிருப்பேன்னு வாக்குறுதி கொடுத்த நான் எந்த கவலையும் இல்லாம சொகுசா.. சந்தோஷமா சகல வசதிகளோட வாழ்ந்து இருக்கேன்.. என்னை நினைச்சு நானே ரொம்ப வெட்கப்படுகிறேன்டி.. ரொம்ப கில்டியா பீல் ஆகுது.. இந்த குற்ற உணர்ச்சியை என்னால தாங்கிக்கவே முடியல வேதா".. என்று அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு புலம்பினான்.. தனக்காக துருவன்.. ஒருவன்.. இந்த அளவு துடிப்பதும் வருத்தப்படுவதுமே.. அவள் காயங்களுக்கு மருந்தாக.. அவள் வேதனைகளுக்கு வடிகாலாக உணர்ந்தவள்..
"நீங்க தெரிஞ்சு பண்ணலையே துருவ்.. நான் யாருன்னு அடையாளம் தெரியாம தானே அப்படி செஞ்சீங்க.. இந்த கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கனும்னு என் விதியில எழுதி இருக்கு.. அதை யாரால மாத்த முடியும்.. யாரோ செஞ்ச தப்புக்கு.. நீங்க ஏன் குற்ற உணர்ச்சியில தவிக்கிறீங்க.. நீங்க வளர்ந்த விதமும் சூழ்நிலையும் என்னை மாதிரி சாதாரண பொண்ணு உங்ககிட்ட நெருங்கிட கூடாதுன்னு அப்படியெல்லாம் பேச வச்சுருக்கு.. ஒரு தோழனா.. என் அப்பாவை விட ஒரு படி மேலே வச்சு.. உங்க கிட்ட உதவி கேட்டு வந்தேன்.. மத்தபடி உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு.. இல்லை உங்களை மயக்கி.. எந்த காரியத்தையும் சாதிக்க நினைத்ததில்லை துருவ்.. ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுடாதீங்க".. என்று குரல் கமறி உடலில் ஒரு நடுக்கத்துடன் விழிகளைத் தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்தவன்.. அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு
"என்னடி பேசறே வேதா.. உன்கிட்டே விழுந்தது நான்தான்.. நீ சொல்ற மாதிரி.. நான் திமிர் பிடிச்சவன் தான்.. என்னோட ஆணவமும் அகம்பாவமும் உன் கிட்ட பேசவிடாமல் முதலில் தடுத்தாலும்.. ஏதோ ஒன்னு என்னை உன் பக்கம் ஈர்ப்பதை என்னால தவிர்க்கவே முடியல.. உன் அழகா.. குணமா.. இல்லை கள்ளங்கபடம் இல்லாத இந்த முகமா.. இல்ல நேருக்கு நேர் என் கண்ணைப் பார்த்து நியாயம் கேட்ட உன் தைரியமா.. எனக்கு தெரியலடி.. ஆனா வேதா என் கமர்கட்டுன்னு தெரியறதுக்கு முன்னாடியே.. என் மனசுல அழுத்தமா பதிஞ்சுட்டா.. அப்புறம் நீதான் என்னோட பால்யத்தோழின்னு தெரிஞ்ச பிறகு.. விரும்பியே உன் மேல அழகான நேசத்தை வளர்த்துக்கிட்டேன்.. என்று அவள் கன்னத்தில் முத்தமிட.. இறுக்கமான சூழ்நிலை மாறி இதமாய் உணர்ந்தவள்..
"பொய் சொல்லாதீங்க.. அப்புறம் ஏன் சின்ன வயசுல என்னை விட்டுட்டு போனீங்க".. என்றாள் பழைய உரிமை கொண்ட குழந்தையாக.. விழிகள் மின்ன அவளின் அந்த முகபாவத்தை ரசித்துக் கொண்டு..
"அந்த வயசுல நான் என்ன பண்ண முடியும் சொல்லு.. அப்பாவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிலைமை.. அதோட ஏழைங்கன்னாலே இப்படித்தான் இருப்பாங்கன்னு அவர் செஞ்ச போதனைகள் என் ஆழ் மனசுல அழுத்தமா பதிஞ்சு போச்சு.. எங்க அப்பா மட்டும் இல்ல.. என்னை சுத்தி இருந்தவங்க எல்லாருமே முதலாளிகளா.. பண முதலைகளா.. தனக்கு கீழே வேலை செஞ்சவங்களை அடிமைகளா.. அலட்சியத்தோட மதிக்காமல் நடத்தின விதத்தை பார்த்து.. அப்படி நடந்துக்கிறது தான் ஆளுமைன்னு தவறான புரிதலுடன் வாழ்ந்த எனக்கு.. என் கமர்கட்டு மேல மட்டும் எப்பவும் இனம் புரியாத ஒரு மென்மையான உணர்வு மேலோங்கிதான் இருந்துச்சு"..
"ஸ்கூல் காலேஜ் ஹாஸ்டல் வாழ்க்கையோட தனிமை.. எந்த பெண்கள் மீதும் ஏற்படாத ஆர்வம்.. அளவுக்கு அதிகமா உன்னை தேட வெச்சது.. நான் கூட யோசித்து இருக்கேன்.. விவரம் தெரியாத வயசுல.. கண்ணாமூச்சி விளையாடின அந்த சின்ன பொண்ணு மேல ஏன் அவ்வளவு இஷ்டம்னு.. ஆனா அப்ப எனக்கு புரியல.. ஏதோ ஒரு அட்ராக்சன்.. முதலும் கடைசியுமா நம்ம கூட விளையாடின ஒரு குழந்தையோட அழிக்க முடியாத நினைவுகளின் தாக்கம்னு நினைச்சுக்கிட்டேன்.. அந்த நினைவுகள் தான் இப்போ காதலா காமமா உருமாறி.. விஸ்வரூபம் எடுத்து என்னை பாடா படுத்துது.. அடக்கி வச்ச உணர்வுகள் எல்லாம் இந்த கமர்கட்டை பார்க்கும் போது.. கடிச்சுத் திங்கனும்னு.. என்னை இம்சை பண்ணுதே".. என்று அவன் பேச்சு உணர்வுபூர்வமாக ஆரம்பித்து உணர்ச்சியில் முடிந்து கோபத்தில் சிவந்த விழிகள் இப்போது தாபத்தில் நிறம் மாற..
மெல்லிய புன்னகையும் வெட்கமும் ஒரு சேர.. "அதுசரி.. ஒருவேளை வேதாவும் கமர் கட்டும்.. வேற வேற ஆளுங்களா இருந்திருந்தா?".. என்று புருவங்களை வளைத்து கேள்வி கேட்டவளின் அழகில் சொக்கிப் போனவன்.. நெற்றியோடு நெற்றி முட்டி..
"ஹைபோதெட்டிக்கல் கொஸ்டின்.. பதில் சொல்ல முடியல.. கமர்கட்டு என் உயிருக்குள்ள நிறைஞ்சி இருக்கா.. ஆனா வேதாவை.. அவளோட குணங்களுக்காக தன்மானத்துக்காக.. தைரியம் நிமிர்வு காரணமா ரொம்ப பிடிக்கும்.. சின்ன வயசு கமர்கட்டோட ஆட்டிட்யூட்.. இல்ல ஏதோ ஒரு சாயல் வளர்ந்து குமரியா நிக்கிற இந்த க்யூட் வேதாகிட்டேயும் பிரதிபலிச்சு இருக்கணும்.. காரணம் இல்லாம உன்னை இவ்வளவு பிடிக்க வாய்ப்பே இல்லை பேபி.. சில உள்ளுணர்வுகளுக்கு விளக்கம் சொல்ல முடியாது.. இதெல்லாம் இயற்கை நமக்குள்ள நடத்தும் அதிசயம்.. இதுக்கு மேல கேள்வி கேட்டு என்னை மேலும் மேலும் குழப்பாதே.. சில கேள்விகளுக்கு எனக்கே விடை தெரியாது.. நடக்கிறதே அப்படியே ஏத்துக்குவோம்.. எது எப்படியோ.. என் காதல் மட்டும் உண்மை.. நான் உன் மேல வச்சிருக்கிற அளவு கடந்த நேசம் உண்மை".. என்று அவள் தாடையை நிமிர்த்தி இதழில் மென்மையாக முத்தமிட்டு இருந்தான்.. அவள் விழிகள் பெரிதாக விரிய.. குவிந்திருந்த இதழை வெறித்தனமாக மென்று தின்ன.. எச்சில் ஊறினாலும்.. பயத்தை களைந்து நம்பிக்கையுடன் நெஞ்சில் சாய்ந்திருக்கும்.. அவள் நிம்மதிக்கு பங்கம் வந்துவிடாமல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டவன்.. சிறுவயதில் அனுபவிக்க கூடாத கொடுமைகளை அனுபவித்து.. கண்ணீரை மட்டுமே கண்டவளுக்கு.. இனி வாழ்க்கையில் திகட்ட திகட்ட மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டவனாக.. கொஞ்ச நேரம் தூங்கு டா.. என்று தன் நெஞ்சில் சாய்த்து அவள் விழிகளுக்குள் நோக்கியவாறு தலையை கோதி.. தூங்க வைத்து.. மெல்ல இருக்கையில் நகர்த்தி சீட் பெல்ட் போட்டு விட்டு.. நகராமல் அவளை ஒட்டியே அமர்ந்திருந்தான்..
எவ்வளவு நேரம் அந்த அழகு வதனத்தை கண் சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தானோ தெரிய வில்லை.. அவள் மென்மையான தேகம்.. மூடியிருந்த அரைவட்ட இமைகள்.. மயில்தோகையாய் இமை முடிகள்.. அந்த கன்னங்கள்.. சதைப்பற்றான கீழ் உதடு.. எலும்புகள் துருத்தி நின்ற கழுத்து.. அதற்கு கீழ் கண்களை மேயவிட்டால் தன்னை கட்டுபடுத்துவது கடினம் என பார்வையை தழைக்காமல் விட்டவன்.. முகம் முழுக்க.. எத்தனை முறை ஈரப் பசையுடன் முத்தமிட்டானோ.. அத்தனை முறையும் சிணுங்கினாள் உறக்கத்தில்.. ஜஸ்ட் ஒன் கிஸ்.. என்று இதழ்களில் தன் அதரங்களை ஒற்றியவன்.. காந்தம் போல் ஒட்டிக்கொண்ட உதடுகளை பிரிக்க முடியாமல் தவித்தான்.. ஒட்ட வைத்த சக்கரை மிட்டாயாக தித்தித்த உதடுகளை கவ்வி பிடிக்க ஆசை துடிக்க.. மென்மையாக அவள் உறக்கம் கலையாமல் பல்படாமல் மென்று சுவைத்தான்.. "கமர்கட் இனிக்குதே.. கடிக்கணுமே.. பேபி".. என்றவன் மெல்ல விலகி.. அவளை தாபத்துடன் பார்த்துக் கொண்டே தலையைக் கோதியவன்.. வேகமாக பொழியும் அடை மழையில் நனைந்தவன் போல்.. கண்கள் சிவந்து அவளை பார்வையால் விழுங்கி.. பிறகு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு..
காரை கிளம்பியிருந்தான்..
வேதா பிரசவம் எங்கே எந்த மருத்துவமனையில் ஆனது என்ற தகவலை கேட்டுக் கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை துருவன்.. முடிந்து போன விஷயம் அது.. மீண்டும் குத்தி கிளறி அவள் காயத்தை அதிகப்படுத்த அவன் விரும்பவில்லை.. ஆனால்.. அவள் பிரசவத்தின் கசப்புகளுக்கு மத்தியில் தான் அவனுக்கு தேவைப்படும் பல உண்மைகள் புதைந்திருக்கின்றன என்று அறியாது போனான் அந்நேரத்தில்..
இந்த ஏழை குடிலுக்கு வந்து ஒரு வாரம் ஆகிப்போனது.. சமைத்து வைத்த உணவை எடுத்து கபிலனுக்கு பரிமாறினாள் சிவன்யா.. உப்பும் இல்லை உரைப்பும் இல்லை.. காய்கறி சரியாக வேகவும் இல்லை..
எந்த குறையும் சொல்லாமல் அமைதியாக உண்டான்.. அவன் அருகே அமர்ந்து சிந்தாமல் சமத்தாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளை.. இத்தனை நாட்கள் ஆன பிறகும் கூட இன்னும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா.. ஒரு பருக்கை வீணாக்கவில்லை.. சுவையில்லாத உணவை தேவாமிர்தமாக ருசித்து சாப்பிட்டன குழந்தைகள்.. அவர்கள் சாப்பிடுவதை பார்க்கும் பொழுதே இன்னும் நன்றாக சமைத்து போட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தாலும்.. அவளுக்கு தெரிந்த வகை சமையல் அவ்வளவுதான்.. சில கணங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள்.. சற்று நேரத்தில் சுயம் தெளிந்து.. "இந்தப் பிள்ளைங்க மேல எனக்கு என்ன ஆசை.. சீக்கிரம் இங்கிருந்து போகிற வழிய பாக்கணும்.. ப்பா.. நரகம்".. என்று கண்களை உருட்டி சலித்துக் கொண்டாள்.. ஆனால் ஒரு வார காலத்திற்குள் ஓரளவு இந்த நரகம் பழகித்தான் போய்விட்டது..
காலையில் எழுந்ததும்.. அவள் தினசரி பணிகள் ஆரம்பித்து விடுகின்றன.. வாசல் தெளித்து கோலம் போடுவது.. மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வது.. தண்ணீர் பிடித்து வைப்பது.. காலை உணவு சமைப்பது.. வீட்டை கூட்டி சுத்தம் செய்வது.. துணிகளை துவைப்பது.. மதிய உணவு சமைப்பது.. மாலையில் தேனீர்.. இரவு உணவு.. ஓய்வில்லாத வேலைகள் அவள் முழுநாளை ஆக்கிரமித்துக் கொண்டாலும்.. ரியா தியா.. அவ்வளவு உதவி செய்தனர்.. பிஞ்சு கரங்களால் துணிகளை அலசி கொடுப்பது.. பாத்திரம் விளக்கி வைத்தால் கழுவி கொடுப்பது.. குட்டி குட்டி குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து கொடுப்பது.. என சிவன்யாவை சுற்றி சுற்றி வந்தனர்..
"குழந்தைகளை குளிக்க வச்சி அவங்களுக்கு தலைவாரி விடறதும்.. அழகு படுத்துறதும் கூட உன் வேலை தான்.. ஷெட்யூல்ல இருக்கே பாக்கலையா".. என்று கபிலன் முகத்தை காட்ட.. "நீங்க கஷ்டப்பட வேண்டாம் ஆன்ட்டி நாங்களே குளிச்சுக்குறோம்.. தலை மட்டும் எப்படி பின்னிக்கறதுன்னு சொல்லி தரீங்களா".. என்று மழலையாக கேட்ட குழந்தைகளின் மீது அடி நெஞ்சில் ஈரம் சுரந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை சிவன்யா..
ஆறு மாதத்தில் எப்படியாவது இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று வெறித்தனமாக.. சொன்ன வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.. கபிலன் அவளுடைய வேலைகளை கண்டு வியப்பதும் இல்லை.. பாராட்டியதும் இல்லை..
இரவானால் களைத்து.. அயற்சியாக பாயின் மேல் விழுபவளின் மேல் அவன் விழுவான்.. அவனை வேறு தாங்க வேண்டும்.. இரண்டு மூன்று முறையாக நள்ளிரவு தாண்டி அவளை ஆட்கொண்டு இன்னும் சோர்வுற செய்து விட்டு.. விலகி சென்று குழந்தைகளோடு.. அவர்களை அணைத்துக் கொண்டு படுத்து விடுவான்..
முதன் முறை.. முரண்டு பிடித்தாள்.. எதிர்த்தாள்.. "என்னை திருப்தி படுத்தினால் தான்.. எல்லாம் சொத்துக்களும் உனக்கு கிடைக்கும்.. லிஸ்ட்ல கடைசியா இருக்கிற வேலை இதுதான்.. படிக்கலையா".. என்றவன் அதற்கு மேலும் காத்திருக்காது.. அவள் மாராப்பை விலக்கி ஜாக்கெட்டை ஈரமாக்க.. சொத்து என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போனாள் சிவன்யா..
"முடியவே முடியாது.. பணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்.. உன்னை எனக்கு பிடிக்கல.. ஒத்துக்க மாட்டேன்".. என்று மறுத்திருந்தால் கூட அவன் மனம் மாறி இருக்கும்.. விலகி சென்றிருப்பான்.. வரப்போகும் பணத்திற்காக கண்களை மூடிக்கொண்டு பற்களை கடித்தபடி.. அவள் பொறுத்துக் கொண்ட விதம் அவனுக்குள் இன்னும் வெறியை கூட்டி இருக்க.. முரட்டுத் தனமாக ஆட்கொண்டு அவளை அலற வைத்தான்.. "அம்மாஆஆஆஆ".. அவள் அலற.. "கத்தாதடி குழந்தைகள் எழுந்திட போறாங்க.. பணம் வரப்போகுதுல.. பொறுத்துக்கோ".. என்று வேகத்தை கூட்ட துடித்துப் போனாள் சிவன்யா.. அன்றிலிருந்து தினமும் இதே கதை தான்.. கபிலன் அருகே வந்தால்.. அவன் முகத்தை காண இயலாமல் அவள் கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொள்ளும்.. பொம்மையாக.. வெறும் ஜடமாக..
இன்றும் உறவு முடிந்து.. எழுந்து நின்று புடவையை அவள் மீது தூக்கி வீசியவன்.. "உதட்டுல ரத்தம் வருது துடைச்சிக்கோ".. என்றுவிட்டு குழந்தைகளுடன் சென்று படுத்துக் கொள்ள.. மூடியிருந்த விழிகள் மெல்ல திறந்து.. அவனை நோக்கின.. தனிமையில் அவள்.. முரட்டு பிடியினுள் வதைபட்டு களைத்துப் போன அந்த தேகம்.. ஆணின் அரவணைப்புக்குள்.. இளைப்பாற இடம் தேடியது.. விழிகள் ஏக்கமாக குழந்தைகளை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கும் கபிலனை வருடியது..
தொடரும்..

Last edited: