- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
தீனா ரோஜாவின் அருகே வந்து நின்றான்.. "ரேயன் சார்தான் பிரணவ் அப்பாவா ரோஜா".. முகத்தில் ஒருவித தீவிரத்துடன் கேட்க அழுவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் மூடி ஆமாம் என தலையாட்டினாள்..
"இதை ஏன் ரோஜா முன்னாடியே என்கிட்டே சொல்லல.. ஓஹ் காட் அவரோட ஆஃபீஸ்லயே உனக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கேன்.. அவரை தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்கவே இல்லையே.. எப்போ கல்யாணம் ஆச்சு.. ஒவ்வொரு முறை பிரணவ் அப்பா பத்தி நான் கேட்கும்போதெல்லாம் அவரு இந்த ஊர்லயே இல்ல.. தேடி கண்டுபிடிக்கணும்.. அப்படி இப்படினு ஏதேதோ காரணம் சொல்லுவியே.. தாலி கட்டி கல்யாணமாவது நடந்துச்சா இல்லையா.. எதையாவது சொல்லித்தொலை ரோஜா.. இந்த ஊருக்கு வந்து ஆரம்பத்துல இருந்து உனக்கு ஹெல்ப் பண்ணவன் நான்.. எந்த விஷயம் கேட்டாலும் இப்படி வாயை மூடிக்கிட்டு இருந்தா நான் என்னதான் பண்ண முடியும்.. உன்கூட இருக்காளே அமுக்குன்னி அபி.. அவளும் எது கேட்டாலும் முட்டை திருடினவ மாதிரி முழிக்கிறா.. இப்போவாவது வாயை திறந்து உண்மையை சொல்ல போறியா இல்லையா".. தீனா பொறுமை காற்றில் பறக்க கத்த ஆரம்பித்து விட்டான்..
"ஐயோ தீனா என்னை எதுவும் கேக்காதீங்க.. நானே என் குழந்தையை பறிகொடுத்த வேதனைல இருக்கேன்.. ரேயன் சார் இப்படி ஏதாவது விபரீதமா பண்ணுவாருன்னுதான் அவர்கிட்ட குழந்தை இருக்குன்னு சொல்லாம இருந்தேன்.. நான் நினைச்ச மாதிரியே ஆயிடுச்சு.. இப்போ நான் என்ன பண்ணுவேன்".. என தலையில் கைவைத்து அழ ஆரம்பித்து விட்டாள்..
தீனாவுக்கும் அவள் நிலைமை கண்டு பாவமாய் போய்விட்டது.. ஏதாவது உதவி செய்யத்தான் நினைக்கிறான்.. ஆனாலும் முழுதாக அவளை பற்றி தெரியாமல் என்ன உதவி செய்ய முடியும்.. இந்த ஊருக்கு வந்த புதிதில் ரயில்வே ஸ்டேஷனில் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை யாரோ ஒருவன் நான் அழைச்சிட்டு போறேன் என கூறி தவற இடத்திற்கு அழைத்து செல்ல முனைய அவன் மூக்கில் ஒரு குத்து விட்டு ரோஜாவை காத்தவன் தீனா..
"யாருமா நீ.. யாரைத்தேடி வந்திருக்கே".. என விசாரிக்க திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல விழித்தாள்.. அப்படியே விட்டுச்செல்ல மனமில்லை.. அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்து கொஞ்சம் அழுத்தி கேட்க கணவனை தேடி வந்திருப்பதாகவும் தான் கருவுற்றிருப்பதாகவும் கூறினாள்.. அதிர்ந்துதான் போனான் தீனா.. சின்னஞ்சிறிய பெண் அதற்குள் திருமணம் குழந்தையா.. மலர்வதற்குள் வாடிவிட்டாளே என பரிதாபப்படத்தான் முடித்தது அவனால்.. அழைத்து சென்று தன் கல்லூரி தோழி அபரஞ்சிதா பிளாட்டில் தங்கவைத்து பார்த்து கொண்டான்..
அபி வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.. மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறாள்.. கைநிறைய சம்பளம்.. வசதிக்கு குறைவில்லை.. அவள் தாய் அப்போதுதான் உடல்நலக்குறைவால் இறந்திருக்க ரோஜாவின் வரவு அவள் தனிமையை போக்கி வாழ்வில் ஒரு பிடிப்பை கொடுத்திருந்தது.. ரோஜாவை மனதார ஏற்றுக்கொண்டு நன்றாக கவனித்து கொண்டாள்.. ரோஜாவும் அபியும் நெருக்கமான தோழிகளாகி போயினர்.. அபியிடம் மட்டும் பட்டும் படாமலும் உண்மையை கூறி வைத்திருந்தாள் ரோஜா.. ஆனாலும் ரேயன் பெயர் சொல்லியிருக்க வில்லை..
அவ்வப்போது வீட்டுக்கு வந்து அவள் கணவன் பற்றி தீனா கேட்கும் கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லி நழுவி விடுவாள்.. "அவர் ஊரை விட்டு போய்ட்டாராம்.. இங்க இல்லையா"ம்.. என ஏதாவது வாய்க்கு வந்த பதிலை அவிழ்த்து விடுவாள்.. முறைப்படி நடந்த திருமணம் என்றால் அவனை பற்றிய தகவல்களை சொல்லி நியாயம் கேட்டிருக்கலாம்.. ரேயனுக்கு தான் சரியான சூழ்நிலையில் அறிமுகமாக வில்லை.. அவன் கருத்தின்படி தான் நல்லவளும் இல்லை .. அதோடு இது அவள் திருப்திக்காக கட்டிக்கொண்ட தாலி.. அவனை பொறுத்தவரையில் வெறும் கயிறு அவ்வளவே.. அவனிடம் சென்று என்னவென்று நியாயம் கேட்பாள்.. உன் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என்று கூறினால் "நானா வளர்க்க சொன்னேன்.. அழித்துவிடு" என செல்வந்தர்களுக்கே உரிய திமிருடன் பேசினால் என்ன செய்வது.. எக்காரணம் கொண்டும் எதற்காகவும் குழந்தையை இழக்க துணிய மாட்டாள்.. எப்போது வயிற்றில் அவன் உதிரம் உருவானது தெரிந்ததோ அப்போதிலிருந்து அந்த குட்டி மலரை உயிராக பேணிப் பாதுகாக்க ஆரம்பித்து விட்டாள்.. எந்தவித இலக்கும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த அவள் வாழ்வில் ஜீவாதாரமாக வந்து உதித்தது இந்த சிசு..
ஆனால் அதையும் தாண்டி ஏக்கத்தோடு பலநாட்கள் கால்கடுக்க அவன் அலுவலக வாசலில் பெரிய வயிற்றை தள்ளிக் கொண்டு வந்து நின்றிருக்கிறாள்.. "யாருமா நீ.. சார் வெளிநாடு போயிருக்காரு.. இங்கெல்லாம் நிக்க கூடாது.. எனக்குதான் பிரச்சினை ஆகும்" என கடுமையாக சொன்னாலும் அந்த செக்யூரிட்டிக்கும் அவளை பார்க்கையில் பச்சாதாபம் தோன்றாமல் இல்லை..
எப்படியோ குழந்தை பெற்று மூன்று மாதங்கள் கழித்து தீனா அபி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் "நானும் வேலைக்கு போறேன்" என்று பிடிவாதம் பிடித்தவளை மாற்ற முடியாமல் அவர்களும் அவள் வழியில் விட்டுவிட்டனர்.. யாருக்கும் பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை.. எங்கோ வெளியில் சென்று வேலை செய்து கஷ்டப்படுவதற்கு தன்னோடு இருந்தால் பாதுகாப்பாக இருப்பாள்.. அவளுக்கும் சௌகர்யமாக இருக்கும் என்று நினைத்துதான் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் பேசி வேலை வாங்கி கொடுத்து தனக்கு அசிஸ்டன்ட்டாக வைத்து கொண்டான் தீனா..
வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது.. குழந்தையை கிரீச்சில் விட்டு வேலைக்கு செல்கிறாள்.. அலுவலக கோப்புகளில் ரேயனின் பெயரை பார்த்தவள் அவன்தான் அந்த ஸ்தாபனத்தின் முதலாளி என்று உறுதியாக கண்டுகொண்டாள்.. அன்றிலிருந்து அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.. அவனையும் கண்டு கொண்டாள்.. அவன் மனதையும் தெரிந்து கொண்டாள்.. தனக்கே அவன் மனதில் இடம் இல்லாத போது தன் மகனை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வான்.. அதோடு அவனால் தன பிள்ளைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது அல்லது தன்னிடமிருந்து தன பிள்ளையை பிரித்து விடக் கூடாது என்ற காரணத்தினால்தான் உண்மையை மறைத்து வைத்தாள்.. ரேயனின் உயரம் அவளை பயமுறுத்தியது.. அவள் எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே அச்சு பிசகாமல் நடந்துவிட்டது..
தீனா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.. அழுது கொண்டிருக்கும் ரோஜா நிலையை பார்க்க பரிதாபமாய் இருந்தது.. ஆறுதல் சொல்லிக் களைத்துப் போனான்..
ரேயன் தன் அறைக்குள் குழந்தையை அமர்த்தி பூமுகம் பார்த்து சற்று நிதானத்திற்கு வந்திருந்தான்.. எப்படி யோசித்தாலும் எங்கு தவறினோம் என்று புலப்படவில்லை..
"பாதுகாப்பாதானே இருந்தேன்.. எங்கே மிஸ் பண்ணேன்" என்று யோசித்தவனுக்கு மூளையில் உரைத்த விஷயம் மோக மயக்கத்தில் அவளுடன் அவசரமாக கலந்த கூடல் நிமிடங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்திருக்கவில்லை என்பதே.. இப்போது நொந்து என்ன பயன்.. எல்லாம் முடிச்சு போச்சு.. என கேலியாக சிரித்தான் அவன் அன்பு மகன்..
கள்ளங்கபடமில்லாத குழந்தை சிரிப்பில் கவலை மறந்து கோபம் துறந்து மென்னகை புரிந்தான் ரேயன்.. இனி வாழ்நாள் முழுவதும் இவன் மட்டும் போதும் என்ற எண்ணம் மனதில் எழாமல் இல்லை.. மகனை விட்டுக் கொடுக்க மனமே இல்லை.. கொடுக்கவும் மாட்டான்.. ஆனால் ரோஜா?..
"அவள் தேவையில்லை.. அவள் ஊருக்கு போகட்டும்".. மனசாட்சிக்கு பதில் கொடுத்தான்..
"என்னது அவ தேவையில்லையா.. உன் மனம் அவளை தேடவில்லையா"..
"நான் எப்போ அவ வேணும்னு சொன்னேன்.. என் உடம்புக்குதான் அவ தேவைப்பட்டா".. என்று வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏற.. "அப்போ நிஜம்மா அவளைத் தேட மாட்டியா".. சும்மா இருக்காமல் மனசாட்சி சுரண்டிக் கொண்டே இருக்க "தேடவே மாட்டேன்.. எனக்கு என் பையன் மட்டும் போதும்.. கிளம்பிப் போ".. என விரட்டிவிட்டான்..
ஆனா எனக்கு என் அம்மாவும் வேணும் என சிடுசிடுத்து அழ ஆரம்பித்து விட்டான் பிரனவ்.. ரேயனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அழும் மகனை தேற்றத் தெரியவில்லை அந்த இரும்பு மனிதனுக்கு..
இங்கோ வாசலில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் ரோஜா.. மகனின் அழுகை அவள் மனதை தொட்டதுவோ என்னவோ அமுது அதிவேகமாக சுரந்து வடிய ஆரம்பித்து விட்டது..
"அம்மாஆஆ".. வலி தாங்க முடியவில்லை.. பிரணவ்.. என கத்தி அழுதாள்.. கதவு திறக்கப்பட்டது.. ரோஜா தீனா இருவரும் நிமிர்ந்து பார்க்க "உள்ளே வா".. ரேயன் இறுகிய குரலில் அழைக்க கைகால் ஓடவில்லை அவளுக்கு... சிலையாக அமர்ந்தவளை பார்த்து எரிச்சலானவன் "உள்ளே வர்றியா இல்லை கதவை சாத்தவா".. எனப் பற்களைக் கடிக்க எழுந்து அவனைத் தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள்..
என்ன நடக்கிறது எனப் புரியாமல் மலங்க மலங்க விழித்த தீனாவை பார்த்து முறைத்தவன் "உனக்கு வீடு வாசல் எதுவும் இருக்கா.. இல்லை விடிய விடிய இங்கேயே காவல் காக்க போறியா" என எகத்தாளமாக பேச "சார்.. ரோஜா".. என இழுத்தான்.. என்ன பிரச்சினை எனத் தெரியாமல் ரோஜாவை விட்டுச்செல்ல அவன் தயாராக இல்லை..
ரோஜாவின் மேல் அவனுக்குள்ள அக்கறை பொறாமைத் தீயை கொழுந்துவிட்டு எரியச்செய்து கோபத்தை கிளறியது.. "அவளை ஒண்ணும் கடிச்சு தின்னுட மாட்டேன்.. நீ கிளம்பலாம்".. என முடித்துவிட்டு கதவை டம்மென சாத்திவிட்டுப் போக பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் தீனா.. ரேயனைப் பற்றி தெரியும் அதனால் தன்னிடம் நடந்தவிதம் பற்றி கண்டு கொள்ளவில்லை.. ரோஜாவை நினைத்துதான் கவலையாக இருந்தது.. ஆனாலும் உரிய இடத்தில் சேர்ந்துவிட்டாள் என்ற நிம்மதியுடன் வீடு திரும்பினான்..
ரோஜா பதட்டத்தில் எங்கு செல்வது எனத் தெரியாமல் குழந்தை அழுத திசையை நோக்கி ஓட அதற்குள் ரேயனும் வந்திருந்தான்.. கட்டிலில் இருந்து தவழும் நிலையில் கீழே விழப்போன மகனை நெஞ்சம் பதற "பிரணவ்.. குட்டிஇஇ".. இருவரும் கத்தி ஒரே நேரத்தில் ஓடிச் சென்று பிடிக்க அந்நேரம் கால்தவறி விழப்போன ரோஜாவையும் மறுகையால் பிடித்துக் கொண்டான் அவன்.. இரும்புக்கை வளைவில் அவள் நிற்க சிலநொடிகள் கோபதாபங்கள் மறந்து இருவர் விழிகளும் கவ்விப் பிணைந்து கலவிக் கொண்டது..
இதழ் துடிக்க ஈர்ப்புவிசையில் ஏதோ இழுக்க "இப்போதான் சொன்னே அவ தேவையில்லைன்னு.. மானங்கெட்டவனே" என மனசாட்சி கேட் போட உணர்வுக்குள் வந்தவன் அவளை உதறித் தள்ளிவிட கட்டிலில் தொப்பென விழுந்தாள்..
அழும் குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு விலகி நிற்க ஆனந்த பரவசத்தில் பிள்ளைக்கு முகமெங்கும் முத்தமிட்டு அழும் பிள்ளைக்கு அமுது படைத்தாள் அன்னை..
"வேலையை முடிச்சிட்டு குழந்தையை தூங்க வைச்சிட்டு வா.. உன்கிட்டே கொஞ்சம் பேசணும்".. என்று உரைத்து விட்டு வெளியேறி விட்டான் ரேயன்..
தொடரும்..