- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
"சார் ஷாட் ரெடி.. நீங்க வந்தா ஷுட்டிங் ஆரம்பிச்சிடலாம்".. ராகவன் வந்து அழைக்க ஏதோ யோசனையில் இருந்தவன் "ம்.. கம்மான் லெட்ஸ் கோ".. என முன்னே சென்றான்..
கிளாசிக் லுக்கில் வீடு போல் ஒருசெட்.. நாயகனிடம் சண்டை போட்டு செல்லும் நாயகி அவன் ஃபர்யூம் வாசத்தில் அவன் வசம் கைதாகிறாள்.. கொஞ்சம் ரொமான்டிக்காக நெருக்கமான காட்சி..
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து செட் பிராப்பர்டிஸ் நடிக நடிகையர் உடைகள் அனைத்தையும் தன் பார்வையால் அளந்தான் ரேயன்.. தன்னிச்சையாக விழிகள் தன் ரோஜாமலரைத் தேட அவளோ ஸ்கிரிப்ட் பேப்பருடன் தீனாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்..
காய்ச்சல் கண்ட தெர்மாமீட்டர் போல் கோபம் உச்சத்திற்கு செல்ல கனல் விழிகளுடன் இருவரையும் பார்த்திருந்தான் ரேயன்.. அவ்வளவு பெரிய தொழிலதிபனுக்கு ஒரு பெண் வேலை செய்யும் இடத்தில் ஆண்களுடன் பேசாமல் எப்படி வேலை செய்ய முடியும் என்ற பக்குவம் இல்லாது போனதா?.. இல்லை இது ஒருவிதமான பாதுகாப்பின்மை உணர்வா?.. கட்டுப்பாடின்றி அவன் விழிகள் அவள் கழுத்தை ஆராய தாலியை மறைத்துப் போட்டிருந்தாள்.. ஏன் என்றே தெரியாமல் கோபம் வந்தது அவனுக்கு.. வெளிப்படையாக அனைவருக்கும் அதைக் காட்ட சொல்கிறானோ..
"ஹலோ சார்".. அவனே பற்றியெறியும் நெருப்பாய் தகித்துக் கொண்டிருக்க அருகில் வந்து அமர்ந்தாள் லிதாஷா..
கவர்ச்சியான புடவை அணிந்து சீரோ சைஸ் ப்யூட்டியாக உயர்ரக வாசனை திரவியம் மணக்க அருகில் வந்து அமர்ந்தவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை ரேயன்.. பார்வை முழுக்க ரோஜாவிடம்..
"சார்".. மறுபடி குரல் கொடுத்தாள்..
தெனாவட்டான பார்வையுடன் திரும்பினான்..
"யார் நீ".. என்ற கேள்வி அவன் பார்வையில் பொதிந்திருக்க பன்மொழித் திரைபடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒருமல்ட்டி லாங்வேஜ் ஆர்டிஸ்ட்டுக்கு அது அவமானமாய் போய்விட்டது.. இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்.. "நைஸ் டூ மீட் யூ சார்".. என கை நீட்ட பதிலே கூறாமல் அவளை புறகணித்து விழிகளை ரோஜாப்பக்கம் திருப்பிக் கொண்டான் அலட்சியமாக..
"திமிர் புடிச்சவன்".. பல்லைக் கடித்தாள் அவள்.. உச்சக்கட்ட அவமரியாதை அல்லவா.. இருந்தாலும் இது போன்ற பெரிய மனிதர்களின் பழக்கம் கிடைத்தால் அது அவள் முன்னேற்றத்திற்கு இன்னும் உறுதுணையாக இருக்கும்.. அழகாக வேறு இருக்கிறானே.. கொஞ்சம் மயக்கம் வேறு இருக்கத்தான் செய்கிறது அவன்மேல்..
விளம்பரப்பட நாயகனை விட பலமடங்கு வசீகரித்தான் ரேயன்.. ஆண்களுக்கே உரிய முரட்டுத் தோற்றம்.. கூரிய பார்வை.. இறுகிய தாடை.. உடற்பயிற்சியில் விளைந்த உடற்கட்டு.. அழகான அதரம்.. அளவான மீசை.. தடித்த இமைகள்.. அடர்த்தியான புருவம்.. பரந்த நெற்றி. கட்டுக்கோப்பான கேசம்.. என கம்பீரமாய் அமர்ந்து தன் பார்வையால் அனைவரையும் விரல்நுனியில் நிற்கவைத்து சேவகம் செய்யவைத்த அவன் ஆளுமையில் மொத்தமாக விழுந்து விட்டாள் லிதாஷா.. பார்வையால் அவனை விழுங்கிக் கொண்டிருக்க அவனோ தன் மஞ்சக் காட்டு மைனாவை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..
பாவம் அவள் வேலைவிஷயமாகதான் பேசிக் கொண்டிருந்தாள்.. எதேச்சையாக அவள் பார்வை அவன் மேல் பதிய "இங்கே வா".. பற்களை கடித்து அழைத்தான்.. அவன் வாயசைப்பில் மொழி உணர்ந்து கொண்டவள் எச்சில் விழுங்கி தீனாவைப் பார்க்க அவனோ வேலையில் மும்முரமாய் இருந்தான்.. தீனாவைப் பார்த்து அனுமதி கேட்பது போல் நின்றது இன்னும் அவன் ஈகோவைத் தூண்டி விட்டிருக்க "வாடி".. கண்களை உருட்டி அழைக்க அடுத்த நிமிடம் அவனருகில் வந்து நின்றாள்..
"ஜுஸ் வேணும்".. என்றான்.. பக்கத்தில் வேலையாள் ஒருவர் ஜுஸ் காபி டீ எது கேட்டாலும் கொடுக்கும் நோக்கில் நிற்க அவரையும் ரேயனையும் மாறிப் மாறிப் பார்த்தாள் ரோஜா..
"என்ன பாக்கறே.. ஃபிரெஷ்ஷா போட்டுக் கொண்டு வா.. போ".. கட்டளை பிறப்பித்தான்.. ஐந்தே நிமிடத்தில் ஃபிரேஷ் ஜுசுடன் வந்தாள்.. அவனிடம் கொடுத்துவிட்டு திரும்பச்செல்ல சொடக்கிட்டு அழைத்தான்..
"சார்".. பாவமாய் பார்த்தாள்.. "ஜுஸ் கேட்டா எனக்கு மட்டும்தான் கொடுப்பியா.. மேடம் உக்காந்து இருக்காங்களே கண்ணுக்கு தெரியலியா".. அதட்டினான் அடிக்குரலில்.. இந்தியில்தான் பேசினான்.. ரோஜாவுக்கும் புரிந்தது.. லிதாஷாவுக்கோ தனக்காக பேசுகிறான் என்பதில் உள்ளுக்குள் ஜில்லென இருந்தது..
ரோஜா அவளுக்கும் ஜுஸ் வந்து கொடுக்க "என் ஃபோன் மறந்து வைச்சிட்டேன்.. பேனா கொண்டு வா.. கார் கீ கொண்டு வா.. இதைப் படிச்சு சரியா இருக்கா செக் பண்ணு" என சிறூபிள்ளைத்தனமாக வேலை வாங்க தீனாவோ "சார் கிளம்பற வரை நீ அவருக்கே ஹெல்ப் பண்ணு.. தேவையில்லாம அவரை டென்ஷன் பண்ண வேணாம்".. என அவளை ரேயனிடமே "இந்தா வைச்சிக்கோ" ஒப்படைத்துவிட்டான்..
தன்பக்கம் அவள் வந்து நின்றபிறகுதான் மூச்சுவிடக் கூட அனுமதி கொடுத்தான் ரேயன்..
"ஷாட் ரெடி".. நாயகன் நாயகியும் நடித்துக் கொண்டிருக்க ரேயன் அதிருப்தியாக முகம் சுளித்தான்.. தீனாவிற்கு அவன் முகத்தை பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது..
"சார்".. என இழுக்க.. "ஃபீல் வரல.. கெமிஸ்ட்ரி இல்ல.. ஆர்ட்டிஃபிசியலா இருக்கு".. என்றவன் அத்தோடு சேர்த்து மிக நுண்ணியமாக தவறுகளையும் சுட்டிக்காட்ட கூட்டம் மொத்தமும் அவனை வாய் பிளந்து மெச்சிக் கொண்டது..
அடுத்தடுத்த ஷாட்கள் திருப்தி கொடுக்கவில்லை.. காமம் வழிந்தது.. காதல் சுத்தமாக இல்லை.. "காதலா.. அப்படினா என்ன.. தெரிஞ்சா பண்ணமாட்டோமா".. என்ற ரீதியில் விழித்தனர் நாயகன் நாயகி.. சாதாரண கண் கொண்டு பார்த்தால் இருவரின் நடிப்பிற்கும் 100மதிப்பெண்கள் தாராளமாக வழங்கலாம்.. ஆனால் ரேயன் என்ன எதிர்பார்க்கிறான் எனத் தெரியவில்லையே.. தீனா விழி பிதுங்கினான்..
"சார் நீங்க என்ன எதிர்பாக்கறீங்க புரியலியே".. தலையை சொறிந்தான்.. "ஏன் புரிஞ்சிக்கிற அளவுக்கு உங்களுக்கு மூளை இல்லையா".. நக்கல் பேச்சில் கூட கோபம்..
"அதில்ல சார். நீங்க ஒரு வாட்டி பர்ஃபார்ம்..பண்ணி காமிச்சீங்கனா".. பாதுகாப்பாக இரண்டடி தள்ளி நின்று கேட்க எதிர்பார்த்தபடி அனல்விழிகளில் பொசுக்கினான் ரேயன்.. "இதுதான் என் வேலையா.. அப்போ நீங்க என்ன *** இருக்கீரு".. நல்லவேளை பக்கத்தில் இருந்த பாலிவுட் சலிபிரிட்டீஸ்க்கு தமிழ் தெரியவில்லை..
"சரி.. சரி.. சார் நான் பாத்துக்கிறேன்".. ஓடிவிட்டான் தீனா.. "ஏய் லிசன் அடுத்த ஷாட் ஓகே ஆகனும்.. இல்லை நான் என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது".. இரும்புக்குரலில் கர்ஜிக்க அனைவருக்கும் கைகால் உதறியது.. காட்சி நன்றாக வரவேண்டுமே..
"இதுக்குமேல என்னடா காதலிக்க முடியும்".. என சலித்துக் கொண்டே நாயகன் நாயகி இருவரும் 200% தங்கள் பெஸ்ட்டைக் கொடுக்க யூனிட்டே ரேயன் முகம் பார்த்தது..
அடுத்த நொடியே சேரை தள்ளிவிட்டு எழுந்தவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் சென்சாரில் கத்தரிக்க படவேண்டியவை.. யூனிட்டே நடுநடுங்கி நின்றிருக்க ரோஜா தீனா முதுகின் பின்னால் பதுங்கி விட்டாள்.. சார்வாள் கண்ணில் இன்னும் அது படவில்லை.. பட்டால் அவளுக்கு தவசம் நடக்கும்..
வேறுவழியே இல்லை.. அவன்தான் நடித்துக் காட்ட வேண்டும்.. ஹீரோயினை அழைத்தான்.. இறுக்கிப் பிடித்தான்.. கண்கள் மூடினான்.. தலையை உலுக்கினான்.. அவன் அணைப்பில் குழைந்து நின்றாள் நாயகி.. அவளை விடுவித்தவன் "சாரி".. என விலக்கிவிட்டு "எங்கே அந்த பொண்ணு".. அடிக்குரலில் கத்த "எந்த பொண்ணு சார்".. என மொத்தக் கூட்டமும் காணாமல் போன பெண்ணைத் தேடி விழித்தது..
"ஐ ஃபார்காட் ஹர் நேம்"..(பேர் தெரியாதாம்.. ஆத்தி)டைரக்டரோட அசிஸ்டன்ட்.". என விழிகளால் தேட "உன்னைதான் கூப்பிடறாரு".. போ.. என தன் முதுகின் பின்னால் மறைந்திருந்தவளை இழுத்து முன்னால் தள்ளினான் தீனா.. அதற்கும் ஒரு முறைப்பு பரிசாகக் கிடைத்தது.. "இங்கே வா".. கைநீட்டி அழைக்க அவன் பக்கத்தில் தயக்கத்துடன் வந்து நின்றாள் ரோஜா..
இடையைப் பற்றி தன்னுடன் ஒட்ட வைத்தவன் "உன்னை என் பக்கத்தில தானே நிக்க சொன்னேன்.. ஓடறே?.. இருக்குடி உனக்கு".. என ரகசியமாக காதுக்குள் பேசினான்..
"லிசன்" என அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவன்.. "ஏய் என் கண்ணைப் பாருடி".. என அவள் தாடைப் பற்றி தன் கண்ணைப் பார்க்க வைத்தான்..
கண்களில் கிலோகணக்கில் வசியமருந்து ஊற்றி வந்தானோ என்னவோ.. விழிகளை திருப்ப முடியவில்லை அவளால்.. இருவர் விழிகளும் கவ்விக் கொள்ள அவன் விரல்கள் வித்தை பயின்று விரசமில்லாமல் வருடியது அவளை.. உலகின் அதிசிறந்த போதை வஸ்து இரத்தத்தில் கலந்தது போல கிறங்கி தவித்தாள் அவன் தீண்டலில்.. இதற்கு முன் தீண்டியிருக்கிறான்.. ஆனால் இந்தத் தீண்டல் வேறு கதை சொல்கிறதே.. கூர்ந்து கேட்டால் நான் உனக்கானவன்.. உன்னவன்.. நீ எனக்கு மட்டுமே உரிமையானவள் என்னவள்.. என்ற சேதியை அவளால் உணர முடிந்தது..
அவன் கைச்சிறைக்குள் வடிவமில்லாத ஈரமண்ணாய் குழைந்தாள்.. சிற்பமாய் செதுக்கினான் பெண்ணவளை.. இருவர் விழிகளும் வேறெங்கும் அகலவில்லை.. காவியக் காதலை தோற்கடித்து அங்கு ஒரு புதுக்காதல் கதை அரங்கேறி இருக்க ஊசி விழுந்தால் கூட தெளிவாகக் கேட்கும் அளவிற்கு கூட்டம் மொத்தமும் அமைதியாக அவர்கள் நடிப்பை ரசித்திருந்தனர்.. அதை நடிப்பு என்று சொன்னால் அது மிகப்பெரிய தவறு.. வாழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்..
அவன் விழிப்பார்வையில் கரைந்துருகினாள் பாவை.. அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு அவனிடம் அடைக்கலமாகி இருக்க ஆணவனோ அழகாக கையாண்டான் பெண்ணவளை.. பார்ப்பவருக்கு ஜென்ம ஜென்மமாய் தீராத காதல் ஏக்கம் அவன் கண்களில் வழிவது தெளிவாகத் தெரிய இதுமாதிரி எப்படி தத்ரூபமாக நடிக்க முடியும் குழம்பிப் போயினர் நாயகன் நாயகி..
ஷாட் முடிந்து இருவரும் விலக அதே மௌனநிலையிலேயே இருந்தனர் அனைவரும்.. காட்சியில் லயித்து விட்டனர் போலும்.. ரேயன் ரோஜா விலகி நின்றனரே தவிர்த்து பார்வையால் ஒருவரை ஒருவர் வருடிக் கொண்டுதான் இருந்தனர்..
யூனிட் மொத்தமும் பலத்த கரகோஷம் எழுப்பி அவர்களை பாராட்ட ரேயன் ரோஜாவை பார்த்து கண்சிமிட்டினான்.. "சார் எனக்கும் டீச் பண்ணுங்க".. ஒட்டி வந்து நின்றாள் லிதாஷா.. "ஹான்".. என அவளை ஏற இறங்க பார்த்தவன் "இவன் சொல்லிக் கொடுப்பான்" என ராகவனை இழுத்து நடுவில் விட "அது என் பாக்கியம் மேடம்" என முப்பத்திரண்டு பற்களையும் காட்டினான் அவன்.. "இடியட்" என திரும்பிக் கொண்டாள் லிதாஷா..
"செம ஐடியா.. நீ அவன்கிட்டே கத்துக்கோ.. நான் இந்தப் பொண்ணுகிட்டே பிராக்டிஸ் பண்றேன்".. என நாயகன் விதேஷ் ரோஜாவை நெருங்க பரந்த மார்பை கொண்டு வந்து குறுக்கே நிறுத்தினான் ரேயன்..
அவன் பார்வையில் தானாக கால்கள் பின்னால் நகர்ந்து தன் இருக்கையில் போய் அமர்ந்து "ஜுஸ் கொண்டு வாங்கப்பா" என்றான் ஹீரோ..
ரேயன் ரோஜாவை ஒருபார்வை பார்த்துவிட்டு நடக்க..
"சார்.. இதுமாதிரி ஆக்டிங்ல கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம்.. உண்மையான லவ்வர்சை கூட்டிட்டு வந்துதான் நடிக்க வைக்கனும்".. தீனா இடைமறித்து சங்கடத்துடன் விளக்கம் கொடுக்க..
"ஏன் அப்போ நான் மட்டும் என்ன உண்மையாவா லவ் பண்ணேன்.. நடிக்கதான் செஞ்சேன்.. வேலைன்னு வந்துட்டா எந்த லெவல்க்கு போகவும் தயாரா இருக்கனும்".. ரோஜாவை ஒரக்கண்ணால் பார்த்தபடி அவன் கூறி வெளியேறி இருக்க நடித்தேன் என்ற வார்த்தையில் மொத்தமாக உடைந்து போனாள் ரோஜா..
அப்போ அத்தனையும் நடிப்பா கோபால்..
தொடரும்..