• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

வதைக்காதே வசீகரா 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
32
ரிஜிஸ்டர் ஆபிஸ்.. ஆட்கள் அங்குமிங்குமாக பரபரப்பாக அலைந்து கொண்டிருக்க.. "ஏம்பா.. தாலி ரெடியா.. மாலை எங்கே.. ஹீரோ ஹீரோயின் ரெடியா என்னது.. இன்னும் மேக்கப் முடியலையா.. சார் வந்தா கத்துவாரு.. அவ குணம் தெரிஞ்சும் இப்படி லேட் பண்றீங்களேப்பா".. என கிருஷ்ணா டென்ஷனாக கத்திக்கொண்டிருந்தான்..
அந்த படக்குழுவினர் ரெஜிஸ்டர் ஆபீஸ் அருகே அனுமதி வாங்கி குழுமியிருக்க வெட்டி சட்டையில் நாயகனும் சாதாரண புடவையில் நாயகியும் அரைமணி நேரத்திற்க்கு முன்னரே ஸ்பாட்டில் ஆஜர்.. கெட்ட கெட்ட வார்த்தைகளை கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் சொன்ன நேரத்திற்கு பிந்தி வரலாம்.. பாகுபாடு பார்த்தெல்லாம் இங்கே திட்டுக்கள் விழாது.. எல்லோரும் இங்கே சரிசமம்தான்.. இதோ நிற்கிறானே முன்னணி நாயகன் அரவிந்த்.. நேற்றுதான் காது கூசும் அளவு பேச்சுக்களை வாங்கி காட்டிக்கொண்டான்.. நாயகி கொஞ்சம் திறமை சாலி என்பதால் இப்போதுவரை தப்பித்துக் கொண்டிருக்கிறாள்.. இயக்குனரை முழுதாக புரிந்து வைத்திருப்பதால் இங்கே காலத்தை ஓட்ட முடிகிறது..
எல்லாம் பக்காவா ரெடி.. என்பதை உறுதி செய்துகொண்டு கிருஷ்ணா கேரவன் கதவைத் தட்டப் போனவன் கொஞ்சம் தயங்கி நின்று தலையை சொறிந்து பின் கதவைத் தட்டினான்..
"உள்ளே வா".. இரும்பின் வலிமையை கொண்ட உறுதியான குரல்.. ஆளுமையின் அடையாளமாக கணீரென்று ஒலிக்க உடலில் ஒரு அதிர்வு கிருஷ்ணாவுக்கு..
அனுமதி வழங்கப்பட்ட பின் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணா.. இருக்கையில் தோரணையாக அமர்ந்து வளைந்த புருவம் நிமிர்த்தி விழிகளால் அவனை ஆராய்ந்தான் ஆரூரன்..

இந்த விழிகள்தான் பலதரப்பட்ட மனிதர்களை இஷ்டம் போல ஆட்டுவித்து தன் கட்டுக்குள் கொண்டுவருகிறது.. கூரிய பார்வை கொண்டு இவர் சரியாக வருவாரா மாட்டாரா என ஓரிரு நொடிக்குள் எடைபோட்டு கணித்துவிடும் அவன் திறமையினால்தான் இந்த அளவு முன்னேறியிருக்கிறான்.. சிரிப்பா அது கிலோ என்ன விலை என்று கேட்குமளவு இறுகிப்போன இதழ்கள் "ஷாட் ரெடியா" என்று கேட்க.. "ஹான்.. ரெடி சார்".. என்று இருபக்கமும் பலமாக ஆடியது தலை..
அவன் எழுந்து நடக்க கேரவன் அதிர்ந்தது.. எப்படித்தான் வளர்ந்தானோ என்று ஆண்களும் பொறாமை கொள்ளும் ஆறடியில் வஞ்சனை இல்லாமல் வளர்ந்திருந்தான்.. உடம்பை இப்படி மெயின்டெய்ன் பண்ணி என்ன பண்ணப்போறான் என்று பெண்களும் பெருமூச்சுவிடும் அளவு கட்டுக்கோப்பான உடலுடன் எயிட் பேக் வைத்திருந்தான்.. ஆளை சுருட்டி அள்ளிக்கொள்ளும் அழகை முகத்தில் கொண்டு பார்க்கும் பூவையரையெல்லாம் ரொம்பவே சோதித்தான் ஆரூரன்.. இயக்குனர் ஆரூரன்..

இந்த நான்கு வருடத்தில் பத்து படங்கள்தான் பண்ணியிருக்கிறான் .. அத்தனையும் சூப்பர்டூப்பர் ஹிட்.. வசூலை வாரிக்குவித்த கமர்ஷியல் படங்கள்.. இப்போது இவனுக்கு சம்பளம் கொடுக்கவே தயாரிப்பாளர் ஒரு படம் எடுத்து லாபம் பார்க்க வேண்டும்.. அதையும் தாண்டி இவனை புக் செய்வதே குதிரை கொம்புதான்.. வேலை நேர்த்தியாக இருக்கும்.. அனாவசியமாக செலவு இழுத்துவிட மாட்டான்.. சொன்ன நேரத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிடுவான்.. மொத்த யூனிட்டையும் விரலசைவில் ஆட்டுவிப்பான்.. யாரும் இவனிடம் வந்து ஏன் எதற்கு என ஒருவார்த்தை கேட்க முடியாது.. அரக்கன்.. முரடன்.. ஆனால் பெண்கள் விஷயத்தில் கண்ணியமானவன்.. மேலே வந்து விழும் பெண்களைக்கூட சுட்டுவிரல் கொண்டு தள்ளி நிறுத்திவிட்டு அந்த விரலையும் பினாயில் ஊத்தி கழுவி விடுவான்.. பார்வையில் பஸ்பமாக தயாராக இருப்பவர்கள் அவனை தாராளமாக நெருங்கலாம்..
நிச்சயதார்த்தம் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மகள் கனிகாவுடன் முடிந்திருக்க திருமணத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாளிதழ்கள் கொஞ்ச நாளைக்கு முன்புதான் பிரசுரித்தன..

அலைபாய்ந்த கேசத்தை கோதியபடியே கேரவனை விட்டு இறங்கியவனின் கம்பீரமும் ஆளுமையும் கண்டு யூனிட்டே ஒருநொடி சிலையாக நின்று அவனை ரசிக்க.. "பேசாம இவரே ஹீரோவா நடிக்கலாம்".. சில குரல்கள் தங்களுக்குள் முணுமுணுத்தது.. "ரெடியா".. அவன் கணீர்குரலில் அனைவரும் ரெடியாக அட்டென்சன் பொசிஷனில் நின்றனர்..
"சிச்சுவேஷன் எக்ஸ்பிளைன் பண்ணிட்டியா".. மீசையை நீவியபடி மறுகையால் மைக்கை வாங்கிக் கொண்டு சுற்றியிருந்த அனைத்தையும் சரியாக உள்ளதா என பார்வையால் அளந்தபடி அவன் கேட்க "ஐயோ.. கொல்றானே" என மயங்கி விழுவது போல பாவனை காட்டினாள் நாயகி சௌபர்ணிகா..
"ரெடி ஆக்க்ஷன்.. கேமரா ரோலிங்".. என ஷூட்டிங் ஆரம்பிக்க.. நாயகன் நாயகி அந்த பதிவாளர் அலுவலகத்தின் முன்னே நடித்துக் கொண்டிருந்ததை தாண்டி அவன் எண்ணங்களோ எங்கோ சென்றது..

"என்ன ஆரு இதெல்லாம்.. இதுக்கு நான் சம்மதிப்பேனு நீ எப்படி நினைச்சே.. எனக்கு குடும்பம் இருக்கு.. அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா.. என்னை கேட்காம நீயே முடிவெடுத்தா எப்படி".. சித்ரா அவன் செயலில் கோபமாக கத்திக்கொண்டிருக்க..
"சிட்டு எனக்கும் குடும்பம் இருக்கு புரிஞ்சிக்கோ.. இன்னும் எவ்ளோ நாள் காத்துட்டு இருக்க சொல்றே.. என்னிக்கு இருந்தாலும் இது நடக்க வேண்டியதுதானே.. அதை இன்னிக்கு பண்ணிக்கலாம்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல உனகென்னடி பிரச்சினை".. அவனும் அவளுக்கு ஈடு கொடுத்து கோபமாகதான் பேசினான் டக்கின் செய்த வெளிர் மஞ்சள் நிற சட்டையை முட்டிவரை மடித்துவிட்டு கருப்பு பேன்ட்டில் ஆணழகனாக நின்று கொண்டிருந்தவனை அந்த நிலையிலும் பார்வையால் பருகினாள் பாவை..

"அழகா இருக்கீங்க ஆரு".. என்று ரசித்துக் கூற.. "ப்ச்.. இப்போ அதான் ரொம்ப முக்கியம் பாரு".. என்று எரிச்சலாக தலை கோதியவன் பார்வை திசைமாறி புடவையின் வழியே தெரிந்த சிற்றிடையை நோட்டம் விட அவன் கொடுத்த காயங்களை அப்பட்டமாக காட்டி சிவந்து நின்ற இடை மோக உணர்வுகளை திரிதூண்டிவிட்டு இளமையை இம்சிக்கவே விழிகளை உருட்டி தலையை உலுக்கினான்.. "மூடி வைடி.. நேரங்கெட்ட நேரத்துல இவ வேற இம்சை பண்றா".. என சேலையை இழுத்துவிட்டான்..
"இப்போ எதுக்கு அவசர அவசரமா இந்த ஏற்பாடு".. கையைக்கட்டி கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன் "புரிஞ்சிக்கோடி".. என்றான் அவஸ்தையாக..
"என்ன புரிஞ்சிக்கணும்.. நான் கேட்டகேள்விக்கு பதில் இது இல்ல.. எதுக்காக இவ்ளோ அவசரமா வீட்டுக்கு தெரியாம இந்த திருட்டு கல்யாணம்".. விடாமல் அங்கேயே நின்றாள்..

"சிட்டு.. என் அவஸ்தையை புரிஞ்சிக்கோடி".. என்றவன் முகத்தில் தவிப்பு தெரிய.. அவளோ.. "என்ன அவஸ்தை" என கேள்விகேட்டே அவனை சாகடித்தாள்..

"இதுக்கு மேல நீ இல்லாம என்னால இருக்க முடியாது.. நீ வேணும்டி எனக்கு".. என்றான் அவள் கையைப் பிடித்து.. அவன் கையையும் முகத்தையும் இளக்காரமாக பார்த்தாள் சித்ரா.. உண்மைதான்.. திருமணத்திற்கு முன்பான கூடலுக்கு பிறகு அளவுக்கதிகமாக அவளை தேடுகிறது மனம்.. தினம் இரவு அவள் அருகாமை தேடி பரிதவித்துப் போகிறான்.. தனக்கே தனக்கென்று அவளை சொந்தமாக்கிக்கொள்ள காதல் பேய் பிடித்து அவளை ஆட்டுவிக்கிறது..

"ஆரு.. எனக்கு இப்போதான் இருபது வயசாகுது.. இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமா".. சலித்துக் கொண்டாள் சித்ரா..

"ஏய்.. எனக்கு இருபத்தொனபது ஆகப் போகுது.. வயசு வித்தியாசம் பாக்காம உன்கிட்டே கெஞ்சிக்கிட்டு இருக்கேன்.. எதுக்கு தெரியுமா.. உன்மேல அவ்ளோ காதல்.. ஃபிரெண்ட்ஸ் முன்னாடி என்னை அசிங்கப் படுத்தாதே சிட்டு.. உங்க வீட்ல எப்படியும் ஒத்துக்க மாட்டாங்க.. இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டதா உண்டு.. வா".. எனக் கையைப் பிடித்து இழுத்தான்..

"சாரி ஆரு.. எனக்கு இந்த திருட்டுக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல".. என்றதும் கோபத்தில் தலையை அழுந்தக் கோதி எங்கோ வெறித்தான்..

"அப்புறம் என்ன ***த்துக்குடி என்னை லவ் பண்ணே.. எதுக்காக என்கூட **த்தே".. என்று கோபம் கொப்பளிக்க வார்த்தைகளை விட..

"அசிங்கமா பேசாதிங்க ஆரு".. கோபத்துடன் முகம் சுளித்தாள் சித்ரா.. இறுகிய முகத்துடன் அவளை முறைத்தான் ஆருரன்..

"அன்னிக்கு நடந்தது அது ஒரு அழகான தருணம்.. அதுக்காக கல்யாணம் பண்ணிக்கனும்னு என்ன அவசியம்.. சரி அப்படியே கல்யாணம் பண்ணிக்கிறோம்னு வைச்சிக்கோங்க.. என்னை எப்படி காப்பாத்துவீங்க.. என்ன இருக்கு உங்ககிட்டே.. நீங்க வாங்கற அந்த இருபதாயிரம் ரூபா சம்பளத்தை வைச்சிக்கிட்டு அந்த ஓட்டுவீட்ல என்னால குடும்பம் நடத்த முடியும்னு நினைக்கிறீங்களா.. எங்கவீட்டு பாத்ரூம் கூட அதைவிட பெருசா இருக்கும்".. என்றாள் நக்கலாக..

"சிட்டு"..

"சும்மா கத்தாதிங்கே ஆரு.. காதலிச்சவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிதான் ஆகனுமா என்ன.. காதல் ஒரு அழகான உணர்வு.. நீங்க அழகா இருக்கீங்க.. அதான் காதலிச்சேன்.. கல்யாணம் பண்ண அந்த தகுதி மட்டும் போதாதே"..
'வேறென்னடி வேணும்.. என் காதலை தவிர வேறென்ன தகுதி எதிர்பாக்கறே".. கத்தினான்..
"பணம் வேணும் ஆரு.. பணம் இல்லாதவன் வெறும் பொணம்.. இப்பவும் உங்களை ரொம்ப புடிக்குது.. நாம ஜாலியா இருக்கலாம்.. ஆனா கல்யாணம் மட்டும் வேணாம்".. என்றவளை பளாரென அறைந்திருந்தான்..
அவள் கழுத்தைப் பற்றி தன்னகத்தே இழுத்தவன் "சிட்டு நீயா பேசறே.. நீ என்னோட சிட்டு இல்ல.. என்று விழிகள் சிவந்து வினவ.. அவன் நண்பர்கள் பதறியடித்து ஓடிவந்து தடுத்தனர்..

"டேய் ஆரா.. விடறா அவளை.. பிரச்சினையாகிடப் போகுது".. என அவனை இழுக்க. விழிகள் நிலைகுத்தி அவளையே பார்த்திருந்தான்.. அத்தனை வலி அவன் கண்களில்.. திமிர் ஏளனம் அவள் விழிகளில்.. இத்தனை நாட்கள் நிரம்பி வழிந்த காதல் எங்கே போனது.. தேடித் தோற்றுப் போனான்..

தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்.. "நீங்க போங்கடா நான் பேசிக்கிறேன்.. எதுவும் பண்ணமாட்டேன்.. போங்க" என அவளைப் பார்த்தபடியே நண்பர்களை விலக்கினான்.. ஆறடி ஆண்மகனின் கண்கள் கலங்கிப் போயிருக்க சற்றும் அசராமல் நின்றிருந்தாள் அவள்..

"பொறுமையா பேசு ஆரா.. அவசரப்படாதே".. அறிவுரைகளுடன் விட்டுச் சென்றனர் நண்பர்கள்..
"சிட்டு.. என்னை கெஞ்ச வைக்காதே.. அசிங்கமா இருக்குடி. ரொம்ப லவ் பண்ணிட்டேன் உன்னை.. மறக்க முடியாதுடி.. செத்துருவேன்".. ஆண்மகனின் கண்ணீர் துளிகள் கன்னம் தாண்டி வழிய.. "மார்பின் குறுக்கே கைகட்டி அவன் அழுவதை அலட்சியமாக பார்த்தவள் "சாரி ஆரு.. உன்னை வெறும் சுகம் கொடுக்கிற மெஷினாதான் பாக்கறேன்.. அதுக்காக மட்டும்தான் உன்கூட பழகினேன்.. என்னை பொறுத்தவரை நீ ஒரு அனுபவம்.. அவ்ளோதான்".. என்று இயல்பாகக் கூற.. அந்த நொடியே சில்லுசில்லாய் உடைந்து போனான் ஆருரன்.. அவள் இதயத்தை இரக்கமின்றி குத்திக் கிழித்த வார்த்தைகளில் தன்னை ஒரு ஆண் விபச்சரியாக உணர்ந்தவன் இறந்து உயிர்த்தான்.. கால்கள் காதலின் தாக்கத்தில் தள்ளாட ஆறடி ஆண்மகன் சுக்குநூறாக நொறுங்கிப் போயிருந்தான்..

"கட்".. கிருஷ்ணா கத்த அனைவரும் காட்சி முடிந்து ஆருரன் முகத்தையே பார்த்தனர்.. அவனோ அசையாமல் நின்றிருந்தான்.. "சார்.. சார்".. அவனை மெதுவாக அழைத்தான் கிருஷ்ணா.. ஆருரன் இந்த உலகத்தில் இல்லை.. இதே காட்சியுடன் பொருந்தி தன் வாழ்க்கையின் கடந்த காலத்திற்கு அல்லவா சென்றிருந்தான்..

"சார்ர்ர்".. என சற்று குரலுயர்த்திக் கத்தினான் கிருஷ்ணா.. எந்தவித உணர்வுகளுமில்லாது ஆருரன் அவனை ஏறிட்டுப் பார்க்க.. "ஷாட் ஒகேவா.. இல்லை திரும்ப ஒருவாட்டி டேக் போகலாமா".. பவ்யமாய் கேட்டான்..

"ம்ம்.. ஒகே".. என்றவன் எழுந்து சென்றுவிட அப்போதுதான் அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது..
கேரவனுக்குள் வந்து அமர்ந்தவன் முகமோ முன்பைவிட அதிகமாக இறுகி போயிருக்க.. இரை தேடும் சிறுத்தையாய் விழிகள் எதையோ எதிர்நோக்கி காத்திருந்ததோ என்னவோ..

"ஏய் சிட்டு.. உன் வாழ்க்கையில சந்தோஷம்னு ஒண்ணு மிச்சம் இருக்கனும்னு நினைச்சா தப்பித்தவறிக்கூட என் கண்ணுல பட்ராதே".. என்றவன் கோபத்துடன் பழம் வெட்டும் கத்தியால் அருகிலிருந்த பிளாஸ்டிக் மேஜையை ஓங்கிக் குத்திக் கிழித்திருந்தான்..

ஆருரனின் காதலுக்கும் கசப்பான நினைவுகளுக்கும் சொந்தக்காரியான சித்ரா எங்கிருக்கிறாளோ..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jan 26, 2024
Messages
7
அருமையான பதிவு
 
Joined
Jul 31, 2024
Messages
10

👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌

Top