- Joined
- Jan 10, 2023
- Messages
- 32
- Thread Author
- #1
"ஏய் அம்மு.. சாப்பிட்டு விளையாடுடா.. என் பாப்பால ஒரே ஒரு வாய்.. வாடி தங்கம்" .. குட்டி செல்லம் அக்ஷயாவின் பின்னால் நெய் ஊற்றிய பருப்பு சாதத்தை வைத்தபடி ஓடிக் கொண்டிருந்தாள் சித்ரா.. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைக்கு சோறூட்டதான் இந்த பாடு.. அவள் கண்முன்னே எழும்பி நிற்கும் மாளிகை பெரிதுதான்.. ஆனால் அவள் கைதி இங்கே.. மண்குடிசையில் மகாராணியாக வாழும் வாய்ப்பை இழந்துவிட்டாள்.. அதற்காக அவள் வருந்தாத நாட்களே கிடையாது.. அவன் காதலுக்கு மதிப்பு கொடுத்திருந்தால் ஆரூரன் அவளுக்காக மாளிகை எழுப்பியிருப்பான்.. அவனை கெஞ்சி தவிக்க விட்டதன் பலன் இது.. என கண்ணீருக்கிடையில் நினைத்து மனதை தேற்றிக் கொள்வாள்..
"வாலு.. வாலு.. ஒருவாய் சோறு சாப்பிட என்ன ஆட்டம் காட்டறே".. என கல்மேடையில் அமர்ந்து பாப்பாவை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு சோற்றை உருண்டைப் பிடித்து ஊட்டினாள்.. "என்ன சித்துக்குட்டி.. பாப்பா சாப்பிட்டாளா".. என்றபடி அருகே வந்து அமர்ந்தான் முருகவேல்.. இதயம் பக்கென அதிர்ந்தாலும் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..
"ஏன் சித்துக்குட்டி என்கிட்டே பேசவே மாட்டேங்குது" என்று ஒரு மார்க்கமாக உரைத்தவன் பார்வை அவள் கழுத்தைத் தாண்டி வக்கிரமாக கீழிறங்க உடல் கூசி அருவறுப்பாக உணர்ந்தாள் பெண்ணவள்.. "என் அச்சு பாப்பா சாப்பிட்டு முடிச்சிட்டாளா".. என்று அவளை நெருங்கி அமர்ந்தவன் குழந்தையை வாங்கும் சாக்கில் அவள் மார்பை உரசினான்..
தீப்பட்டதுபோல் விலகி அமர்ந்தவள் புடவை முந்தானையை இழுத்துவிட்டுக்கொண்டு அவனை முறைத்தாள்.. அந்த முறைப்பெல்லாம் அவனிடம் வேலைக்காகுமா என்ன.. அவள் மீது வெறிபிடித்து காமவேட்கையுடன் திரியும் அவனுக்கு பெண்ணவளின் முறைப்பு கூட சில்லென்ற உணர்வைக் கொடுத்தது போலும்..
"அட என்ன புள்ள.. நீ பாட்டுக்கு விலகிப் போறே.. மாமன் உன்மேல எம்புட்டு ஆசையா இருக்கேன்.. புரிஞ்சிக்க மாட்டேங்குறியே.. நீ மட்டும் ஒரு வார்த்தை ம்ம்னு சொல்லு.. உன்னை கல்யாணம் கட்டி இந்த மாளிகைக்கு மகாராணியாக்குறேன்".. என்று இளித்தான்..
"அசிங்கமா பேசாதீங்க மாமா.. உங்களுக்கு மனைவி இருக்கா.. உங்களையே நம்பி வந்த என் அக்காவுக்கு துரோகம் பண்றீங்களே.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. மறுபடி என்கிட்டே இப்படி நடந்துக்கிட்டிங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன்.. என்னால இதுக்கு மேல பொறுக்க முடியாது".. என காளி அவதாரம் எடுத்தாள் சித்ரா..
"என்னடி பண்ணுவே.. கொஞ்சம் விட்டா ஓவரா பேசறே.. உன் பவுசு தெரிஞ்சிதான் வந்த மாப்பிள்ளை எல்லாம் வாசலோட போய்ட்டானுங்க.. ஊர்பூரா உன்மானம் சந்தி சிரிச்சி காறித் துப்புற அளவுக்கு போயிருச்சே.. அந்த பயலோட அப்படி இப்படி இருந்தவதானே நீ.. அவன்கூட மட்டும்தான் இருந்தியா.. இல்ல லிஸ்ட் பெருசா போகுமா.. இது தெரிஞ்சிதானே உன் அப்பன் நாண்டுக்கிட்டு செத்தான்.. உன் ஆத்தாகாரியும் கூடவே போய்ட்டா.. மொத்த சொத்தையும் கட்டி காப்பாத்தற பொறுப்பு என் தலையில வந்து விடிஞ்சிருச்சு.. இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்.. இதுக்குமேல உன்னை எவன்டி கட்டுவான்.. ஏதோ போனாப்போகுதுன்னு நான் வாழ்க்கை கொடுக்கிறேன்னு சொல்றேன்.. காலைத்தொட்டு கும்பிட்டு தாலி வாங்கிப்பியா.. பேசறா பேச்சு".. என திமிராக பிடரியை வருடினான்..
"சீ இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்லை.. இதேமாதிரி என் அக்காவும் நினைச்சா"..
"ஏய் வாயை மூடுறீ".. என சீறி எழுந்தான் முருகவேல்.. அவன் காட்டுக்கத்தலில் குழந்தை பயந்து அழ.. மார்போடு அணைத்துக் கொண்டவள் விழிகள் கலங்கி அவனைப் பார்த்தாள்..
"உங்க அக்கா ஒரு சீக்கு கோழி.. மாசத்துல முப்பது நாளும் உடம்புக்கு முடியலைன்னு படுத்துக்கிட்டா ஒரு மனுஷன் என்னடி பண்ணுவான்.. தினமும் கண்ட பொம்பளை கிட்டே போகவே ஐயறவா இருக்கு.. அப்புறம் ஏதாவது சீக்கு வந்து விழுந்தா இந்த சொத்தையெல்லாம் எவன் கட்டி காப்பாத்தறது.. வீட்டோட ஒண்ணு நிரந்தரமா வச்சுக்கிட்டா பிரச்சினை இல்ல பாரு.. எவளோ ஒருத்தி அந்த இடத்துக்கு வர்றதுக்கு நீ வந்துட்டா சக்களத்தி சண்டை மிச்சம்.. உன் அக்காளையும் நல்லா பாத்துக்கலாம்.. இதோ ஒத்த பொட்டப்புள்ளையை பெத்துப்போட்டுட்டு ஆசை முடங்கி படுத்துட்டா.. இந்த ஆஸ்திக்கு ஒரு ஆண்வாரிசு வேண்டாமா.. அது ஏன் நம்ம புள்ளையா இருக்க கூடாது".. என சிரிக்க.. சீ என அருவருத்து திரும்பினாள் சித்ரா.. இதுபோன்ற வார்த்தைகளை காதால் கேட்கவே பிடிக்கவில்லை..
"சரி புள்ள.. நல்லா யோசிச்சு சொல்லு.. உனக்கும் என்னைவிட்டா வேற யாரும் இல்ல.. நானும் உன்னைய விடப்போறது இல்ல.. அழகு சிலை மாதிரி இருந்துகிட்டு ஏன் தங்கம் உன் இளமையை வீணாக்குற.. அதை எனக்கு தாரவாக்கிறதுல என்னடி பிரச்சினை உனக்கு.. எத்தனை நாள்தான் கனவுல உன்கூட குடும்பம் நடத்தறது.. உன்னைப்போல ஒரு எச்சி இலையை எவனும் கட்டவே மாட்டான்.. என்னைய மாதிரி ஒருத்தன் வாழ்க்கை கொடுத்தான் உண்டு.. அதனால என்ன பண்றே.. கல்யாணத்துக்கு தயாராகிடுறே.. எப்பவும் இதுபோல தன்மையா எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கமாட்டேன்.. சுத்தியிருக்கிற சொந்தபந்தத்துக்காக கொஞ்சம் நல்லவனா நடிக்க வேண்டியதிருக்கு.. இல்லாட்டி போன எப்பவோ கட்டாயத்தாலிகட்டி என் பொஞ்சாதியாக்கி இருப்பேன்.. சரி சீக்கிரம் மாமனுக்கு வந்து சோறு எடுத்துவை.. நான் கைகால் கழுவிட்டு வாரேன்" என்று கூறிவிட்டு செல்ல.. அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு கிளம்பியது.. தன் நிலையை எண்ணி குலுங்கி குலுங்கி அழுதாள் சித்ரா..
அவனுக்கு சாப்பாடு எடுத்து வைப்பது சட்டை எடுத்து கொடுப்பது என எல்லா வேலைகளும் அவள் தலையில்தான் விடியும்.. செய்ய மாட்டேன் என அடம்பிடித்தால் படுத்த படுக்கையாய் இருக்கும் அவள் அக்காவிற்கு அடிகளும் உதைகளும் பரிசாக கிடைக்கும்.. தப்பித்துப் போக வழியில்லை.. வீட்டை சுற்றி ஏகப்பட்ட அடியாட்களை நிறுத்தி வைத்திருக்கிறான்.. மவுனமாக அழுதவளின் கண்ணீரைத் துடைத்தது அக்ஷயா குட்டி.. "சித்தி.. ஏன் அழுவுற".. மழலையாக கேட்க.. சட்டென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.. "ஒன்னும் இல்ல அம்மு.. சித்திக்கு கண்ல தூசி பட்ருச்சு".. என அழுகையை மறைத்துக் கொண்டு பொய்யாக சிரிக்க.. "எனக்கு தெரியும்.. அப்பா உன்னை திட்டிருச்சு.. அதானே.. அப்பா ரொம்ப மோசம்.. நீ அழுவாதே.. நான் அப்பாவை அடிச்சிடறேன்".. என அவள் கண்ணீரை துடைத்துவிட்டது குட்டி தேவதை..
மழலைப் பேச்சில் மெல்லிய புன்னகையை இதழில் அரும்பவிட்டாள்.. அதுவும் அச்சுக் குட்டிக்காக மட்டும்.. அவள் உயிர் வாழ்வதற்கான ஒரே பிடிப்பு இந்த ரோஜாமொட்டு மட்டும்தான்.. காயப்பட்ட மனதிற்கு மருந்து ஆரூரனுடன் வாழ்ந்த நினைவுகள்.. அதுமட்டும் போதும்.. அவள் தனிமையின் துணை அவன் மட்டுமே.. இப்போதெல்லாம் முருகவேல் சித்ரவதை அதிகமாகி போனது.. பார்வையால் துகிலுரித்தான்.. பட்டும் படாமலும் மேலே கைவைத்தான்.. அக்காவை காட்டி பயமுறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ள பார்க்கிறான்.. நெருப்பில் இட்ட புழுவாய் துடிக்கிறாள்.. சாகவும் வழியில்லை.. "என் குழந்தையை கைவிட்டுடாதே சித்து.. இந்த ராட்சசன் என் குழந்தையை கொன்னுடுவான்".. அடிக்கடி உயிர்துடிக்க அவள் அக்கா தேவி கூறும் வார்த்தைகள்.. திக்கற்றவருக்கு தெய்வம் துணை என்பார்கள்.. தெய்வமும் கைவிட்ட நிலையில் தன் நிலையை எண்ணி மருகி கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை இந்த பேதைக்கு..
குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் சித்ரா .. சாவி கொடுத்த பொம்மை போல தெறித்த பார்வையுடன் இலக்கின்றி நடந்தவள் நேரே அக்காவின் அறைக்குள் சென்று நின்றாள்.. களைந்த ஓவியமாய் படுத்திருந்தாள் தேவி.. தங்கையின் காலடி சத்தம் கேட்டு மெதுவாக திரும்பியவள் அழுது வடிந்த தங்கையைப் பார்த்து பதறிப் போனாள்.. காரணம் தெரியும்தான்.. ஆனாலும் உயிர் வலித்தது..
"என்ன சித்துமா.. அந்த ராட்சசன் ஏதாவது சொன்னானா".. நலிந்த குரலில் சோர்வாக கேட்க.. அக்காவை ஏறிட்டு பார்த்தாள் சித்ரா.. பதில் வரவில்லை.. கண்ணீர்தான் வந்தது..
அவளுக்கு புரிந்துவிட்டது.. பேசி உன் தங்கைக்கு புரியவை.. "உன் தங்கச்சி ரெண்டாம்தாரமா வந்தா உனக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது.. உன் பிள்ளைக்கு சித்திக் கொடுமை இருக்காது".. என பக்கம் பக்கமாக பேசிவிட்டு சென்றானே.. முடிந்த அளவு மிரட்டிவைத்திருந்தான் மனைவியை.. அவள் முடியாது.. நடக்காது என்று சொன்னால் நோயுற்றவள் என்றும் பாராது பெல்ட்டால் அடிகள் விழும்.. தடுக்க வரும் சித்ராவுக்கு அடிகள் வஞ்சனை இல்லாமல் கிடைக்கும்.. எதற்கு பேசி வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்.. சொன்னால் மட்டும் புரியவா போகிறது.. என நினைத்து அமைதியாகவே இருந்துவிடுவாள் தேவி..
"பேசாம நீ ஆரூரனையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.. அவனுக்கு நாம பண்ண பாவம்தான் இப்படியெல்லாம் நடக்குது".. எங்கோ வெறித்தபடி கூறினாள் தேவி..
சித்ராவின் மனதையும் ரணமாக குத்திக்கிழித்துக் கொண்டிருக்கும் விஷயம் அது.. அவளால்தானே அவன் குடும்பமே சிதைந்து போனது..
அனைத்திற்கும் காரணம் நான்தானே.. என மனம் வெம்பி துடிக்காத நாளே இல்லை.. இரவெல்லாம் அழுகையில் கரையும்.. நரகத்தைவிட கொடுமையான நிலைமை.. அவ்வளவு அவமானத்தையும் துயரத்தையும் தாண்டி தன்னை தேடி வந்து அழைத்தவனை செருப்பால் அடித்து அல்லவா விரட்டினாள்.. அவன் முகத்தில் தெரிந்த வலி.. பாக்ஸிங் பழகியவனுக்கு அவளை தூக்கிப்போட்டு மிதிப்பது ஒன்றும் கடினமில்லை.. ஆனாலும் அவள் அடிகளை வாங்கிக்கொண்டு சிலையாக நின்றானே.. இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்கும்.. நாக்கூசாமல் எவ்வளவு பேசினாள்.. பதிலுக்கு ஒருவார்த்தை பேசவில்லை அவன் .. அங்கேயே செத்துவிட்டான்.. வெறும் ஜடம் மட்டும்தான் அங்கிருந்து சென்றது.. காதல் இவ்வளவு வலிமையானதா.. எதையும் தாங்கிக்கொள்ளுமா என்ன.. "ஏண்டா என்னைப்போய் காதலிச்சே".. என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவாள்.. ஒரே ஒரு ஆறுதல்.. இன்று எட்டமுடியா உயரத்தில் இருக்கிறான் ஆரூரன்.. அவனுக்கான ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டுவிட்டான்.. அது போதும் அவளுக்கு.. அவள் நெஞ்சில் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரே விஷயம் அது மட்டும்தானே..
அக்காவை எழுப்பி உணவூட்டி படுக்க வைக்க கண்ணீர் நிற்காமல் வழிந்தது தேவிக்கு.. "இப்படி ஆகிப்போச்சே நம்ம வாழ்க்கை. காப்பாத்த ஆளில்லாத அனாதைகளாகிப் போனோமே.. என் வாழ்க்கை இத்தோட முடிஞ்சுப் போச்சு.. ஆனா உன் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னவே கருகிப் போனுமா.. நான் சொல்றதை கேளு சித்து.. இங்கேருந்து குழந்தையைத் தூக்கிட்டு ஓடிப்போயிரு.. இந்த அரக்கன்கிட்டே இருந்து தப்பிச்சு போயிரு.. உன் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்.. சொல்றதை கேளு சித்து".. எனக் கெஞ்சி அழுத அக்காளை பார்த்து தூக்கிவாரிப் போட்டது மனம்..
"என்னக்கா உளறிக்கிட்டு இருக்கே.. வீட்டை சுத்தி ஆளுங்க இருக்கு.. இப்படி நினைக்கிறது தெரிஞ்சா கூட அவன் நம்மளைக் கொன்னுடுவான்".. அவள் பதைபதைக்க.. "இப்படியே பாத்தா என்னதான்டி பண்றது.. இப்படியே பொறுத்துக்கிட்டு வாழலாம்னு சொல்றியா.. என் கண்முன்னாடியே உன் வாழ்க்கை பாழாகிறதை பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது சித்து.. நான் சொல்றதைக் கேளு.. குழந்தையை தூக்கிட்டு இங்கே இருந்து போய்டு.. நீயாவது நல்லா இருக்கனும் சித்து".. பலவீனமான குரலில் கூறிக் கொண்டிருந்தவள் எதையோ பார்த்து விக்கித்து போனாள்..
எதிரே முருகவேல்... உக்கிரமாக நின்று கொண்டிருந்தான்..
தொடரும்..