• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

வதைக்காதே வசீகரா 5

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
32
குழந்தையின் வார்த்தைகளில் செத்துப் பிழைத்தாள் சித்ரா.. "அச்சு".. என குழந்தையை அணைத்துக் கொண்டு கதறி அழ.. வாழ்க்கையே வெறுத்துப் போனது அவளுக்கு.. அடுத்து என்ன செய்ய என்று தெரியாத நிலை.. அக்காவின் இறப்புக்கு பின்னர் இத்தனை நாட்கள் அமைதியாகத்தான் இருந்தான் முருகவேல்.. சித்ராவும் மனைவியின் மரணம் அவனை மாற்றிவிட்டது போல என நினைத்து நிம்மதி கொண்டாள்..

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னறைக்குள் வந்து அவன் சொன்ன வார்த்தைகளில் உயிருக்குள் அச்சம் பரவி பெருத்த வேதனை கொண்டாள்..

அன்று.. சுவற்றில் சாய்ந்து குத்துக்காலிட்டு அமர்ந்து எதிரே எதையோ வெறித்திருந்தாள் சித்ரா.. அக்ஷயா கட்டிலின் மீது குதித்து விளையாடிக் கொண்டிருக்க உள்ளே வந்தான் முருகவேல்.. அவன் காலடி ஓசை உணர்ந்து பார்வையைத் திருப்பியவள் கதவை சாத்தி தாழ்போடும் மாமனைக் கண்டு அடித்துப் பதறி எழுந்தாள்..

"ஏன் மாமா கதவைச் சாத்தி தாழ் போடறீங்க".. உடல் வெடவெடக்க கேட்டவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன் "பயப்படாதே சித்து.. உன்னைய ஒண்ணும் பண்ணமாட்டேன்.. தாலிகட்டின பிறகுதான் உன்மேல கைவைக்கனும்னு உறுதியா இருக்கேன்.. உன்கிட்டே கொஞ்சம் பேசனும்.. ரகசிமெல்லாம் யாருக்கும் தெரியக்கூடாது பாரு.. அதான் கதவவைச் சாத்தினேன்".. என கட்டிலில் வந்து அமர்ந்தான்.. அக்ஷயா அவனைக் கண்டு பயந்து கீழே இறங்கி ஓடினாள்..

"என்ன மாமா.. சொல்றீங்க. கல்யாணமா.. யாருக்கு கல்யாணம்".. என குரல் நடுங்கி கேட்டவளை "ஹான்.. உனக்கும் எனக்குந்தேன்.. அதுக்காகத்தான் உங்க அக்காவை சத்தங்காட்டாம போட்டுத் தள்ளினேன்" என்று சர்வசாதாரணமாய் உரைக்க.. இதயம் அதிர எழுந்து நின்றாள் சித்ரா

"மாமாஆஆ".. அழுகையுடன் கத்த..

"சும்மா கத்தாதே புள்ளை.. அக்காளும் தங்கச்சியும் என்னை கேனயன்னு நினைச்சீகளோ.. தப்பிச்சு போக பிளான் போடறீகளோ.. அதான் உங்க வழியிலயே வந்து உங்களை மடக்கினான்.. என்ன புரியலியா.. அன்னிக்கு நீங்க பேசினது எல்லாத்தையும் மாமன் கேட்டுட்டேன்.. என்றதும் விலுக்கென நிமிர்ந்தாள் சித்ரா..

"உன்னை பாத்த நாள்ல இருந்தே உன் மேல ஒரு கண்ணு.. ஆனா மடிஞ்சது உன் அக்காதானே.. அதான் அவளை கல்யாணம் கட்டிக்கிட்டு உன்னைக் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா. அந்த சிறுக்கி மவ எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேங்குறா.. யோசிச்சேன்.. பொறவு கொஞ்சம் கொஞ்சமா சாவற ஸ்லோ பாய்சனை சாப்பாட்டுல கலந்து கொடுக்க ஆரம்பிச்சேன்.. ஆனா உங்கக்கா ஸ்டிராங் பாடி.. போய் சேர்றமாதிரி தெரியல.. இதுல வேறதப்பிச்சு போக உனக்கு ஐடியா கொடுக்கிறா.. அப்பவே நான் கோவப்பட்டிருந்தா அக்காளும் தங்கச்சியும் உஷாராகி இருப்பீங்க.. அதான் அடக்கி வாசிச்சேன்.. அதுவுமில்லாம எத்தனை நாளைக்குதான் அழகுச்சிலை மாதிரி புள்ளையை கண்முன்னாடி வைச்சு பாத்துட்டே இருக்க முடியும்.. அதான் அன்னிக்கு ராத்திரி எல்லோருக்கும் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைச்சிட்டு உங்கக்காளை கழுத்தை நெறிச்சுக் கொன்னுட்டேன்".. என்று சிரிக்க.. வாயைப் பொத்தி அங்கேயே சரிந்து அமர்ந்தாள் சித்ரா..

"அப்பவே அசந்து தூங்கிட்டு இருந்த உன்னை முழுசா அபேஸ் பண்ண நினைச்சேன்.. ஆனா முழிச்சிருக்கையில நீயா உன்னைக் கொடுக்கற சுகமே தனி.. அதுக்காகதானே இத்தனை நாள் காத்துட்டு இருக்கேன்".. என்று கண்ணத்தபடி வேட்டியை மடித்துக் கட்ட.. சீ.. என முகத்தை திருப்பினாள் சித்ரா..

முருகவேல் முகம் மாறியது.. "என்னடி சீ.. என்ன நினைச்சிட்டு இருக்கே என்னைய.. உன்னைய எவனுக்காவது தூக்கிக் கொடுத்துட்டு எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்துவேன்னு நினைச்சியலோ.. உன்னை விடமட்டேன்டி.. மருவாதையா நாளைக்கு ஊர் பெரியவங்க வந்து கேட்கையில என்னைக் கட்டிக்க பூரண சம்மதம்னு சொல்றே.. இல்லைன்னு வை".. என்று நாக்கைக் கடித்து மிரட்ட..

வெகுண்டெழுந்தாள் சித்ரா.. "என்னடா பண்ணுவே.. சே மனுஷடா நீயெல்லாம்.. மிருகம்.. அப்பாவியான என் அக்காவைப் போய்".. வார்த்தை வராமல் தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.. ஒருநிலைக்கு வந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்.. "ஊர்ப்பெரியவங்க வரட்டும்.. நீ பண்ண அக்கிரமத்தையெல்லாம் சொல்லி அவங்க முன்னாடியே உன்னை செருப்பாலடிச்சு அவமானப்படுத்தறேன்.. எங்கக்காவை கொலை பண்ண விஷயத்தை சொல்லி போலீசை வரழைத்து உன்னை உள்ளே தள்ளறேன்".. என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள்..

"ஆஹான்".. என நக்கலாக சிரித்தவன்.. "சரி.. நான் மட்டும் வேணாம்.. என் பிள்ளை எதுக்கு".. என ஒற்றைக் கையால் அக்ஷயாவைத் தூக்கிச் சென்றவன் மாடியில் தலைகீழாக தொங்கவிட "சித்தி.. சித்தி".. என கதறியது குழந்தை..

"அக்ஷயாஆஆ".. என அலறிக் கொண்டு ஓடியவளை காலால் எட்டி உதைத்தான் முருகவேல்.. தூரப்போய் விழுந்தாள் சித்ரா.. "நான் பெத்த பிள்ளையா இருந்தாலும் என்னை காப்பாத்திக்க எந்த லெவலுக்கும் இறங்குவேன்டி.. என வெறிபிடித்தவன் போல கத்த.. "அய்யோ குழந்தையை விட்டுடு நீ என்ன சொன்னாலும் கேக்கிறேன்".. தரையில் மண்டியிட்டுக் கதறினாள் சித்ரா.. குழந்தை உச்சக்கட்ட பயத்தில் வீல் வீல் எனக்கத்த உயிரே போனது அவளுக்கு..

கடைசி வார்த்தை அவன் மனதை மாற்றியதோ என்னவோ.. அச்சுவை மெதுவாக கீழிறக்கி விட்டான்.. "சித்திஇஇ".. என ஓடியது குழந்தை.. நிமிர்ந்து பார்த்தவள் தன்னை நோக்கி ஓடிவந்த அச்சுவை தங்கம்.. என பாய்ந்து கட்டிக் கொண்டாள்..

அருகே வந்தான் முருகவேல்.. வெற்றிக் களிப்பில் சிரித்தவனை எரிப்பது போல் பார்த்தாள் சித்ரா.. "இதே மனசோடு நாளைக்கு வரைக்கும் இரு.. வர்றவங்ககிட்டே என்னைக் கட்டிக்க சம்மதம்னு சொல்றே.. இல்ல எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல.. என் பிள்ளையை போட்டுத் தள்ள ஆள் செட் பண்ணிடுவேன்" என்றவனை அறுவறுப்பாக பார்த்தவள் "சீ.. நீயெல்லாம் ஒரு அப்பனா".. என்றாள் சீற்றத்துடன்..

நக்கலாக சிரித்தான் முருகவேல்.. "யார் சொன்னா.. நான் நல்ல புருஷனும் இல்லை.. நல்ல அப்பனும் இல்ல.. ஆனா உன்னைய கட்டிக்கிட்டு நல்ல புருஷனா.. உன் வயித்துல பிள்ளையைக் கொடுத்து நல்ல அப்பனா மாறலாம்னு நினைக்கேன்.. முடிவு உங்கையில".. என்று கூறி சென்றுவிட குழந்தையை அணைத்துக் கொண்டு அழுது கரைந்தாள் சித்ரா..

அவன் மேல்கொண்ட பயத்தின் காரணமாக ஊர்ப்பெரியவர்களிடம் திருமணத்திற்கு சம்மதம் என்று கூறியிருக்க.. உள்ளுக்குள் செத்துவிடலாமா என்றிருந்தது.. அவள் மனம் உணர்ந்ததைப் போல குழந்தையும் அதையே கூற மனம் வெம்பிப் போனாள்..

குழந்தைக்கு மட்டும் உணவூட்டி பார்த்துக் கொண்டவள் உண்ண மறந்தாள்.. உறங்க மறந்தாள்.. வாழ்க்கையே நரகமான வேளையில் உணவு எப்படி இறங்கும்.. எவ்வளவு அதிர்ச்சிகளைத்தான் அவளும் தாங்குவாள்.. தமக்கையின் மரணம்.. அதை ஜீரணிக்கும்முன்னே அவளை கொலை செய்தேன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள் என மிரட்டி நிற்கிறான் அவள் கணவன்.. அவனைக் கொல்லும் அளவு வெறி வந்தாலும் வெளிக்காட்ட முடியவில்லை.. குழந்தையை கொன்றுவிடுவேன் எனக் கண்முன்னே பிள்ளையை துன்புறுத்தும் மிருகத்தை எதிர்த்து என்னதான் செய்ய முடியும்.. அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தவள் அச்சுவுடன் ஒரு ஓரத்தில் ஒதுங்கிப் படுத்திருந்தாள்..

கோவில் திருவிழா.. காலையில் திருமணம்.. வீடே விழாக்கோலம் பூண்டிருக்க அந்தவீட்டுப் பெண்ணின் இழப்பு சித்ராவைத் தவிர வேறு யாரையும் பாதிக்கவில்லை போலும்.. விழிகள் மூட கண்ணீர் வழிந்தவண்ணம் இருக்க.. "ஆரு.. உங்களுக்கு பண்ணின துரோகத்துக்குதான் இப்படி ஒரு சித்ரவைதையை அனுபவிக்கிறேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. மறுபடி உங்க காதல் வேணும் ஆரு.. கிடைக்குமா.. உங்க அன்பை உதாசீனப்படுத்தின எனக்கு இனி உங்க காதல் கானல்நீர்தான் இல்ல.. என்னால முடியல ஆரு.. சாகவும் முடியல.. வாழவும் முடியல.. உங்க நினைப்பும் அச்சுவும் மட்டும்தான் என் உயிரை புடிச்சு வைச்சிருக்கு".. வாய்விட்டே கதறினாள்..

கதவு டமாரென திறக்கப்பட்டது.. சித்ரா பதறி எழுந்து அமர.. எதிர்வீட்டு அல்லி பதட்டத்துடன் ஓடிவந்தாள்..

அக்கம்பக்கம் பார்த்தவள் "சித்ராம்மா.. எல்லோரும் கோவில் திருவிழால பரபரப்பா இருக்காங்க.. வீட்ல யாரும் இல்ல.. எப்படியாவது இங்கேருந்து பின்வாசல் வழியே தப்பிச்சு போயிருங்க".. என்று அவசரத்தன்மையுடன் உரைக்க.. புரியாமல் விழித்தாள் சித்ரா.. இதெல்லாம் நடப்பது சாத்தியமா.. அவள் விழிகள் அலைபாய.. "என்ன பாக்கறீங்க.. யோசிக்க நேரம் இல்ல.. காலையில கல்யாணம்.. கொஞ்சம் தாமதிச்சாலும் உங்க வாழ்க்கையே வீணாப் போயிரும்.. தாமதிக்காதிங்க எழுந்திருங்க".. என்று அவசரப்படுத்த.. "என்ன விளையாடறியா அல்லி.. அந்த ஆள் வந்தா".. என்று முடிப்பதற்குள்.. "அய்யோ அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. இப்போ யாரும் வரமாட்டாங்க.. அம்மாதான் என்கிட்டே சேதி சொல்லி அனுப்புச்சு.. இந்தக் காசையும் கொடுத்துவுட்டுச்சு.. நீங்க கிளம்புங்கம்மா".. என்று கையில் காசைத் திணிக்க அதன்பிறகு எதையும் யோசிக்கும் நிலையில் சித்ரா இல்லை.. குழந்தையுடன் எழுந்தவள் பின்வாசல் வழியே ஓட அவளைபின் தொடர்ந்த அல்லியோ.. "அம்மா.. ஊர்வழியே போகாதிங்க.. சுடுகாட்டு வழியே போய் மெயின் ரோட்டைப் பிடிச்சிருங்க.. அப்பதான் யார்கண்லயும் மாட்டாம தப்பிக்க முடியும்" என்று ஐடியா கொடுக்க.. விரக்தியாக சிரித்துக் கொண்டாள் சித்ரா.. எல்லோரோட வாழ்க்கையும் சுடுகாட்ல முடியுது.. ஆனா என் வாழ்க்கை தொடங்கப்போறதே அங்கிருந்துதான் என்றாள் வெறித்த பார்வையுடன்.. அல்லிக்கும் அவள் சோகம் தொற்றிக் கொள்ள ஆறுதலாகக் கைப்பிடித்தாள்.

சித்ரா கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு சட்டென முகம்மாறி சிரித்தவள் "உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல.. நீ மட்டும் இல்லாட்டி நான் என்ன ஆகியிருப்பேனோ".. என மனம் நெகிழ்ந்து நன்றியுடன் அவளைப் பார்க்க.. "அய்யோ அம்மா பேசிட்டே இருக்காதிங்க.. சீக்கிரம் போங்க.. யாராச்சும் வந்துரப்போறாங்க".. என்று படபடத்தாள் அல்லி.. குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு அல்லியை ஒருபார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து ஓடினாள் சித்ரா.. அல்லி பதட்டத்துடன் அவளைப் பார்த்திருக்க தூரம் அதிகரிக்க புள்ளியாக தெரிந்தவளை இருள் முற்றிலுமாக மறைத்திருந்தது..

தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான் ஆருரன்.. சகலவசதிகளுடன் கூடிய அவன் அலுவலக அறை.. வீட்டின் பின்புறம் அவன் அலுவலகம்.. இரண்டடுக்கு மாளிகை.. விதுரன் ஒரு ஓரமாக அமர்ந்து கையில் கிடைத்த ரப்பர் பொம்மையை பிச்சு தூக்கியெறிந்து கொண்டிருந்தான்.. தலைவலித்தது ஆருரனுக்கு..

தன்னைத் தவிர வேறுயாரும் அறைக்குள் வந்தாலே வீட்டையே இரண்டாக்கி களேபரம் செய்து தன்னையே காயப்படுத்திக் கொள்ளும் தம்பியை யாரையும் நம்பி விடமுடியவில்லை.. இதுவரை அவனை பார்த்துக் கொள்ள ஐம்பது பேருக்கும் மேல் நியமித்தாயிற்று.. யாரும் சரிவரவில்லை.. இப்போது இன்னும் மோசம்.. கைக்குழந்தை போல தம்பியை தன்னுடனே வைத்துக் கொண்டே சுற்றுகிறான்.. முரட்டுக் குழந்தை போல அவன் செய்யும் அடாவடியில் தெறித்து ஓடுகின்றனர் அனைவரும்.. ஷுட்டிங் கேன்சல்.. ஃபாரின் டிரிப் கேன்சல்.. அவார்ட் ஃபங்சன் கேன்சல்.. இத்தோடு இருபது நாட்கள் ஆகிவிட்டது.. இப்படியே போனால் நிலமை கவலைக்கிடம்.. கண்டிப்பாக ஒரு ஆளை நியமித்தே ஆகவேண்டிய கட்டாயம்.. அதற்காகத்தான் இந்த நேர்காணல்.. ஒன்றுமே தேறவில்லை..

"சார்.. அடுத்த ஆளை அனுப்பவா".. மேஜையில் கை ஊன்றி முகத்தை மூடி அமர்ந்திருந்தவன் முன் பவ்யமாக கேட்டான் கிருஷ்ணா..

ம்.. சலிப்பாக ஒற்றை பதில்..

"சரிசார்".. என்று திரும்பப் போனவனை கிருஷ்ணா".. மறுபடி அழைத்தான் ஆருரன்..

"சார்"..

"பசங்க இருந்தா திரும்ப அனுப்பிடு.. இவன்கிட்டே மாட்டி குத்துபட்டே செத்திருவானுங்க.. பொண்ணுங்க இருந்தா எங்க அம்மா மாதிரி சாந்தமான நல்ல பொண்ணா இருந்தா மட்டும் உள்ளே அனுப்பிவிடு".. என்று சோர்ந்த குரலில் கூற.. யோசித்தான் கிருஷ்ணன்..

பட்டென கண்களில் மின்னலடிக்க.. "சார் நீங்க சொன்னமாதிரி ஒரு பொண்ணு வந்திருக்கு.. கையில குழந்தையோட உக்காந்திருக்கு.. பாத்தா ரொம்ப சாந்தமா நல்ல பொண்ணாட்டம் தெரியுது" என்றான் மடமடவென..

"பேரு?".. என நெற்றியை நீவினான் ஆருரன்..

"சித்ரான்னு சொல்லுச்சு சார்".. என்றதும் சட்டென நிமிர்ந்தான் ஆருரன்.. ஆத்தி ஏன் இந்த திடீர் கோபம்.. மிரண்டு போனான் கிருஷ்ணா..

"ரிஜெக்டட்.. அந்தப் பொண்ணை திரும்பி அனுப்பிடு".. என்றான் சினம் வழியும் கண்களுடன்..

"சார்.. இன்டர்வியு பண்ணாமலயே".. எச்சில் விழுங்கினான் கிருஷ்ணா..

"அந்தப் பொண்ணோட பேர் எனக்கு பிடிக்கல.. அவளை வெளியே தள்ளு.. வேற பொண்ணு இருந்தா அனுப்பு".. என்று உத்தரவிட தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தலையாட்டிவிட்டு வெளியே சென்றான் கிருஷ்ணா..

அடுத்த பெண் உள்ளே செல்ல பத்து நிமிடங்களுக்கு பின் வெளியே வந்தான் கிருஷ்ணா.. இன்டர்வியூ ஓவர்.. மத்தவங்க எல்லாம் கிளம்புங்க.. என்று குரல் கொடுக்க.. சோர்ந்த முகத்துடன் மார்பில் சாய்ந்து உறங்கியிருந்த குழந்தையை அணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் சித்ரா..

தொடரும்..
 
Last edited:
Joined
Jul 10, 2024
Messages
11
பேரை கேட்டதுமே வேண்டாம்ன்னு துரத்தி விட்டுட்டான். அந்தளவுக்கு கொலை வெறி ஆரூவுக்கு.
 
Joined
Jul 31, 2024
Messages
10

😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
 
Top