- Joined
- Jan 10, 2023
- Messages
- 32
- Thread Author
- #1
"வந்து ஒருமாசம் ஆச்சுது.. அட்வான்ஸ் கொடுக்கலை சரி.. வாடகையும் கொடுக்கலைன்னா என்ன அர்த்தம்.. ஏதோ ரொம்பக் கெஞ்சினியே.. பாக்க நல்ல பொண்ணா தெரியறியேன்னு வாடகைக்கு விட்டேன்.. ஆனா அப்படி ஏமாத்துவேன்னு தெரியாம போச்சே".. என்று வீட்டு உரிமையாளர் வாசலில் நின்று கத்த.. "இன்னும் வேலை கிடைக்கலயா அய்யா.. கண்டிப்பா இந்தமாசம் வேலைக்குப் போய்டுவேன்.. உங்க வாடகை மொத்தமும் சேர்த்து செட்டில் பண்ணிடறேன்.. பிளீஸ் இப்படி வாசல்ல நின்னு கத்தாதிங்க".. என்று கெஞ்சினாள் சித்ரா..
"மூணாங்கிளாஸ் படிச்ச புள்ளைக்கே பத்தாயிரம் சம்பளத்தோட வேலை கிடைக்குது.. நீ டிகிரி படிச்சிருக்கேன்னு சொல்றே.. உனக்கு வேலை கிடைக்கலியா.. யார்கிட்டே கதை விடறே.. இந்தப்பாரும்மா.. இன்னும் ஒருவாரம் டைம் கொடுக்கிறேன்.. வாடகையும் பத்தாயிரம் அட்வான்சும் செட்டில் பண்ணு.. இல்லாட்டி நானே கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளுவேன்.. காசோட அடுத்த ஆள் ரெடியா இருக்கு.. யாரை ஏமாத்தப் பாக்கறீங்க".. என்று அவர் முனகிக் கொண்டே சென்றுவிட.. தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள் சித்ரா.. அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லை.. அல்லி கொடுத்த காசு முழுவதும் சாப்பாட்டுக்கே கரைந்து போனது.. இதில் வாடகைக்கு என்ன மிச்சம் இருக்கும்..
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன் என்று சொல்லிய வீட்டு உரிமையாளரை நினைத்து கதிகலங்கியது.. அவரை சொல்லியும் குற்றமில்லை.. நிர்கதியாக சென்னை வந்து நடுவீதியில் நின்றபோது எந்தவித விதிமுறைகளும் நிர்பந்தங்களும் இல்லாமல் வீடு கொடுத்தவர்.. பாவப்பட்ட பெண்.. சரியாக வாடகை கொடுத்துவிடுவாள் என்று நம்பிதான் அவரும் வீடு கொடுத்தார்..
அவளும் என்னதான் செய்வாள்.. சான்றிதழ் மொத்தமும் முருகவேலிடம் மாட்டிக் கொண்டிருக்க நம்பி வேலை கொடுப்பாரில்லை.. கிடைத்த வேலையை செய்யலாம் என்றால் மூன்று வயது அக்ஷயாவை எங்கே விட்டுச் செல்வது.. கீரிச்சில் முன்பணம் செலுத்த வழியில்லை.. பெண்குழந்தை.. புது ஊரில் யாரை நம்பி விட்டுச்செல்வது.. ஏகப்பட்ட குழப்பங்களுக்கிடையில் நாளிதழில் அந்த செய்தி பார்த்தாள்.. 27 வயது மனநிலை பாதிக்கப்பட்ட நபரையும்.. ஒரு நோயுற்ற கைகால் செயலிழந்த வயதான அம்மையாரையும் பார்த்துக் கொள்ள கேர்டேக்கர் தேவை.. சம்பளம் தங்கும் வசதி உணவு அனைத்தும் உண்டு.. என்பதுதான் அந்த செய்தி.. வேலை பற்றிய தயக்கம் இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழியும் இல்லை.. அதில் ஆருரன் பற்றியோ விதுரன் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை.. ஃபோனையும் ஊரிலேயே விட்டு வந்திருக்க பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் ஃபோன் வாங்கி இடம் விலாசம் விசாரித்து செல்ல.. இங்கும் ஆரம்பிக்கும் முன் தோல்வியே.. ஆள் எடுத்தாகிவிட்டது.. வெளியே போங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டனர்..
இன்றுடன் ஹவுஸ் ஓனர் கொடுத்த டைம் முடிகிறது.. தலையே சுற்றியது சித்ராவிற்கு.. இப்படியே எங்காவது சென்று ஆற்றில் குளத்தில் குதித்து செத்துவிடலாமா.. என்று யோசித்துக் கொண்டிருக்க.. அக்ஷயா தோளில் சிணுங்கினாள்.. அப்போதுதான் என்ன யோசிக்கிறோம் என்பதே புரிய.. உள்ளுக்குள் பதறிப் போனாள்.. "குழந்தையை வைச்சிக்கிட்டு என்ன யோசிக்கிறே சித்ரா".. என்று தன்னையே திட்டித் தீர்த்தாள்.. தோளில் தாங்கிய பூந்தளிர் அவளை நம்பிதானே இருக்கிறது.. அதற்காகவாவது உயிர் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.. உழைக்கத்தான் வேண்டும்.. ஆனால் எப்படி?.. நடுரோட்டில் அடுத்து என்ன செய்வதென்று அறியாத அபலைப் பெண்ணாக குழந்தையுடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்..
அவள் வெளியே போவதற்காக அந்தப் பெரிய வாயில்கதவை திறந்து விட்டான் செக்யூரிட்டி.. வெளியேறும் வேளையிலே.. உள்ளே ஒரே சத்தம்.. களேபரம்.. அலறல்.. என்னாச்சு.. செக்யூரிட்டியும் பதற தன்னையறியாமல் உள்ளே ஓடினாள் சித்ரா.. மேலிருந்து பெண்கள் அலறியபடி இறங்கி ஓடிச்செல்ல.. மாடியிலிருந்துதான் சத்தம் வருகிறது என்று உணர்ந்தவள் படிகளில் குழந்தையுடன் விறுவிறுவென்று ஏறினாள்..
மாடியை அடைந்து விழிகளை அலையவிட்டு தேடியவளுக்கு எதிரே அகப்பட்டான் விதுரன்.. மின்சாரம் பட்டதுபோல அதிர்ந்து போனாள் சித்ரா.. கண்ணீர் திரையிட்டு விழிகளை மறைக்க.. விதுஊஊ.. அவளையறியாமல் அழைத்தாள்.. அவனோ மாடியின் உச்சியில் நின்று கத்தியுடன் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தான்.. ஐந்து நிமிடங்கள் அவனை விட்டுவிட்டு முக்கியமான ஃபோன் கால் பேசப்போனான் ஆருரன்.. அதற்குள் அந்த கலவரம்..
ஓடிவந்த ஆருரன்.. தன் தம்பி மாடியின் உச்சியில் நின்றுகொண்டு யாரும் என்கிட்டே வரக்கூடாது என்று பயமுறுத்திக் கொண்டிருக்க.. வெலவெலத்துப் போனான்.. இரும்பின் உறுதி மனதில் இருந்தாலும் தம்பியின் முன் அவனும் ஆசாபாசங்கள் கொண்ட சராசரி மனிதன்தான்.. "சார்.. உங்கதம்பி கையிலிருந்த பொம்மையை வாங்கப் போனேன்.. அதுக்குள்ளே ஒரே கலாட்டா பண்ணிட்டாரு.. என்னையும் அடிச்சிட்டாரு".. என்றாள் புதிதாக நியமிக்கப் பட்டிருந்த ரஞ்சனி மிரட்சியுடன்..
கையில் இரத்தம் சொட்ட காயத்துடன் ஒரு வேலையாள் நின்றிருந்தான்.. விதுரன்தான் கத்தியால் வெட்டியிருந்தான் போலும்.. ஆத்திரத்தில் ஆவேசத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பின்னால் நகர்ந்து மாடியின் நுனியில் நின்று கொண்டிருந்தான் விதுரன்.. உயிரே போனது ஆருரனுக்கு.. விதுரனின் நிலை கண்டு துடித்துப்போனாள் சித்ரா.. தன்னால்தானே அவனுக்கு இப்படி ஒரு நிலை.. இருதயம் ரணமாய் வலித்தது.. கண்ணீர் வடித்தபடி நின்றிருந்தாள்..
"விது.. இங்கே பாரு.. ஏன் இவ்ளோ கோபம்.. அண்ணன்கிட்டே வா".. ஆருரன் நிதானமாக அவன் எடுத்து வைக்கும் அடிகளைப் பார்த்தபடியே பயத்துடன் அழைக்க.. "போ.. நீ ஏன் என்னை விட்டுட்டு போனே.. இந்த பொம்பளை என்னை தொடறா".. என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தபடி பின்னால் நகர்ந்தான் விதுரன்..
"எதேய்.. பொம்பளையா".. ரஞ்சனி பற்களை கடித்தாள்.. நல்லவேளை ஆருரன் கவனிக்கவில்லை..
அடுத்த அடி எடுத்துவைத்தால் கீழே விழுந்து மண்டை உடைவது உறுதி.. விதுரன் கத்தியை பார்த்தபடியே அடுத்த அடியை பின்னால் எடுத்துவைக்க.. "விதுஊஊஊஊ".. ஆருரன் சத்தத்துடன் இன்னுமொரு பெண்குரல்.. அதே தவிப்புடன்.. உயிர் உருகும் அக்கறையுடன்..
திரும்பினான் ஆருரன்.. சித்ரா.. சித்ரவர்ஷினி.. நின்றிருந்தாள் அவன்கண்முன்னே.. யாரை இந்த ஜென்மத்தில் பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்தானோ அவள்.. உடல் முழுக்க பற்றியெறிந்தது.. கண்கள் சிவந்தான்.. இரத்தம் கொதித்தான்.. வதம் செய்யும் நரசிம்மன் ஆனான்.. தாடை இறுகி பற்கள் உடைபட பக்கத்தில் நின்றிருந்த ரஞ்சனி அவன் அவதாரம் கண்டு பயந்து பின்வாங்கினாள்.. ஆருரனை உணரும் நிலையில் சித்ரா இல்லை.. அவள் விழிகளின் முன் நிற்கும் விதுரன் மட்டுமே இப்போது அவள் இலக்கு..
"விது.. விது".. என்று கண்ணீருடன் அழைக்க.. விதுரன் அவள் குரலில் மெதுவாக நிமிர்ந்து பார்த்தான்.. அவன் விழிகள் விரிய "வரு".. என்றான் புன்னகைத்து..
சித்ரா விழிநீருடன் இதழ்விரித்தாள்.. ஆருரன் இருவரின் சம்பாஷைனையில் வாயடைத்து நின்றிருந்தான்.. கோபம் மலையளவு முட்டி நின்றாலும் ஏனோ அவனால் அதே வேகத்தில் முன்னேற முடியவில்லை..
"விது.. என்னகிட்டே வாங்க".. கைகள் நீட்டி அழைத்தாள்.. தாயிடம் ஓடும் பிள்ளை போல "எங்கே போன வரு.. ஏன் என்னையும் அண்ணனையும் விட்டுட்டு போனே.. அம்மா பாவம் தெரியுமா.. அண்ணா கூட அழுதான்".. என்றபடியே அவளை நோக்கி எட்டுக்கள் எடுத்து வைத்தான் விதுரன்.. நடப்பதை விழியகலாமல் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆருரன்.. என்ன நடக்கிறது இங்கே.. அவனுக்கு மட்டுமல்ல.. யாருக்குமே புரியாத நிலைதான்.. விதுரன் என்னும் மதம் கொண்ட யானை ஒரு பெண்மயிலுக்கு அடங்கிடுமா.. வியப்பில் விரிந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்..
"இனி எங்கேயும் போகமாட்டேன் விதும்மா".. என்று அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவள் குலுங்கி ஆரம்பித்துவிட.. "அச்சோ.. அழாதே பாப்பா".. என்று அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கண்ணீரைத் துடைத்துவிட்டான் விதுரன்.. "நான் உன்னை எதுவும் சொல்லல.. அழாதே".. என்று தலையை ஆட்டி குழந்தை போல பேசியவனின் கையிலிருந்து கத்தியைப் பறித்து தூக்கியெறிந்தாள் சித்ரா.. "அடேங்கப்பா.. யாருக்குமே அடங்காத இந்த முரட்டுப் பையனை இந்தப் பொண்ணு அடக்கிருச்சே".. என்று கூட்டத்தில் ஒரு குரல்..
"வரு பாப்பா.. இனி எங்களை விட்டு போக மாட்டேதானே".. என்று கேட்க.. "போகமாட்டேன்.. இனி உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்".. என்று கண்ணீருடன் தலையாட்டினாள் சித்ரா.. அவள் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டான் விதுரன்.. பார்த்துக் கொண்டிருந்த ஆருரனால் எதையும் பொறுக்க முடியவில்லை.. துரோகி.. பிட்ச்.. உதடுகள் முணுமுணுக்க..
சட்டென யாரோ முடியைப் பிடித்து தூக்க திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சித்ரா.. ஆருரன் உக்கிர விழிகளுடன் நின்றிருந்தான்.. இப்போதுதான் ஆருரனைப் பார்க்கிறாள்.. எத்தனை நாள் தவம்.. ஏக்கம்.. கண்முன்னே அவள் காதல்.. அவள் உயிரானவன்.. தினம் தினம் அவளை கொள்ளை கொண்டவன்.. இன்பமான அவள் கனவுகளின் சொந்தக்காரன்.. பார்த்த மாத்திரத்தில் உடலின் ஒவ்வொரு செல்லிலும் பூபூத்தது.. காயங்கள் மறைந்து இதயம் இதமாக.. முகம் மலர்ந்தது அவன் அழகு முகம் கண்டு..
"ஆரு".. தன்னை மறந்து கத்தினாள் மகிழ்ச்சியில்.. அவளுக்கோ அவள் காதல் கண்ணனின் உருவம் மட்டுமே தெரிய.. அவனுக்கு தெரிந்ததோ சித்ரா உருவத்தில் துரோகமும் காயங்களும்.. அவள் தந்த வலியும்..
அவள் தலைமுடியைப் பிடித்து கொத்தாக தூக்கியவன் தரதரவென இழுத்துச் சென்றான்.. குழந்தையை தோளில் சுமந்து கொண்டு அவனுடன் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினாள் சித்ரா.. "ஆரு.. வலிக்குது".. என்றவள் விழிகள் கண்ணீரை சிந்த அவள் குரல் ஆணவன் காதுகளை சென்றடையாதபடிக்கு கோபம் ஆக்ரமித்திருந்தது அவனை..
முரட்டுத்தனமாக இழுத்துவந்து ரோட்டில் தள்ள குழந்தையுடன் சென்று எக்குதப்பாக விழுந்தாள் சித்ரா.. நல்லவேளை குழந்தைக்கு அடிபடாதவாறு பிடித்துக் கொண்டாள்.. ஆனால் விழுந்த வேகத்தில் குழந்தை வீறிட்டுக் கதறியது..
அனைவரும் அவளை பரிதாபமாக பார்க்க ரஞ்சனியோ அப்பாடா நிம்மதி என பெருமூச்சு விட்டாள்..
"இனி இவ மூஞ்சியை இந்த வீட்டுப்பக்கம் பாக்கக்கூடாது.. செக்யூரிட்டி இவளை இழுத்து வெளியே தள்ளிட்டு நாயை அவுத்துவிடுங்க".. என்று கர்ஜித்தவன் அவளை ஜென்மவிரோதியை எரித்து பஸ்பமாக்குவது போல் பார்க்க.. "ஆரு".. உதடுகள் துடிக்க.. அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் சித்ரா..
"சீ.. வெளியே போடி".. என அறுவறுப்பான ஒரு பார்வையை அவளை நோக்கி வீசிவிட்டு உள்ளே சென்றான் ஆருரன்..
தொடரும்..